செவ்வந்தி துரை

 



#எழுத்தாளர்அறிமுகப்படலம்
#இதுநம்மஏரியா

ஹாய் பிரண்ட்ஸ்,

இன்று நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகும் நபர் எழுத்தாளர் செவ்வந்தி துரை...

அவர்களைப் பற்றிய விபரங்கள் :

பெயர் : செவ்வந்தி துரை (பேப்பர் பேக் புத்தகங்களில் செவ்வந்தி.)

சொந்த ஊர் : தருமபுரி

பணி : எழுத்தாளர்

தளம் : wattpat, பிரதிலிபி, சகாப்தம், நிகரில்லா வானவில், எழிலன்பு நாவல்ஸ். வாய்ப்பு கிடைக்கும் அனைத்து தளத்திலும் என் எழுத்தை பதிவு செய்ய ஆசை. sevanthidurai.blogspot.com இது என் ப்ளாக்

அமேசான் பெயர்: செவ்வந்தி துரை sevanthi durai

******

உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:

புத்தக விரும்பி. இசை விரும்பி. இயற்கை விரும்பி.  "கடையில் உட்கார்ந்து ஆம்பளைங்கள மாதிரி பேப்பர் படிச்சிட்டு இருந்தவதானே நீ.?"ன்னு சிலர் திட்டுவாங்க. அது திட்டு இல்ல பாராட்டுன்னு அவங்களுக்கு தெரியாது.

*****

உங்களது விருப்பமான எழுத்தாளர்:

நிறைய பேரை பிடிக்கும். எல்லாத்தையும் சொல்ல முடியாதுங்கறதால என் மனசுக்கு பிடிச்சவங்க பேரை மட்டும் மென்சன் பண்றேன். முந்தைய தலைமுறையில் சுஜாதா சார், அநுத்தமா மேம், சமகால நாவல்களில் முத்துலட்சுமி ராகவன் மேம், கலைவாணி சொக்கலிங்கம் மேம், இன்பா அலோசியஸ் சிஸ்.. இன்னும் சிலர்.


******

உங்களது நாவல் எழுதும் பழக்கம் எப்படி ஆரம்பமானது. அதன் தூண்டுகோல் யாரென்று சொல்ல முடியுமா:

எங்க அப்பாவோட கதைகள்தான் நான் முதல்ல படிச்ச கதை. அவர் சினிமாக்களுக்காக திரைக்கதை வசனமா எழுதி வச்சிருந்த மூணு கதைகள்தான் நான் படிச்ச முதல் கதைகள். (அவர் தன் கதைகளை கரையானுக்கு உணவா தந்துட்டாரு. எதிலேயும் அவரது எழுத்துகளோ அவரது எண்ணங்களோ பதிப்பிக்கப்படல.. கவிதை பாடல் நோட்டுகளை மட்டும் பத்திரப்படுத்தி வச்சிருக்காரு. நான் எனக்கு வாய்ப்பு கிடைச்சதால வாசகர்கள்கிட்ட என் கதையை தந்துட்டேன்.)

தினத்தந்தியில் 'சேர்ந்தே சொர்க்கம் வரை' படிச்சிட்டு இருந்த டைம். நான் அப்பதான் எழுத்தாளர்கள் பத்தி வகை பிரிக்க ஆரம்பிச்ச டைம். சுபா சார்ஸ்.. அவங்களோட எல்லா கதையிலும் லவ் இருக்கும். ஆனா அதே சமயம் அவங்க இரண்டு பேரும் சஸ்பென்ஸ் அன்ட் த்ரில்லிங்கா கதை எழுதறவங்கன்னு அவங்களோட மத்த கதைகளை படிச்சி பார்த்து தெரிஞ்சிக்கிட்டேன். இந்த கதையும் ரொம்ப பிடிச்சது. அதுல இருந்த அண்ணன் தம்பி ஹீரோஸ் மற்றும் அக்கா தங்கை ஹீரோயின்ஸ் மனசுல இடம் பிடிச்சிட்டாங்க. ஆனா அந்த கதையோட க்ளைமேக்ஸ் நான் எதிர் பார்த்த மாதிரி அமையல. குடும்ப நாவல் குடும்ப கதையாவே முடிஞ்சிடுச்சி. நான் க்ளைமேக்ஸ்ல த்ரில் எதிர்பார்த்தேன் அவங்களோட மத்த கதைகளை போல. ஆனா இது கொஞ்சம் த்ரில் கம்மியா சூப்பரான குடும்ப நாவலா முடிஞ்சிடுச்சி. அதனால அதுக்கு நானே ஒரு க்ளைமேக்ஸ் கற்பனை பண்ணேன். நல்லா இருந்தது. அதனால அந்த ஹீரோஸ் மற்றும் ஹீரோயின்ஸ் கேரக்டர்ஸை மட்டும் எடுத்துக்கிட்டு நானா ஒரு கதை எழுதினேன். எழுதிட்டு படிச்சி பார்த்தேன். நல்லா இருந்தது. அதனால எனக்கு பிடிச்ச கேரக்டர்ஸ்.. நேர்ல சந்திச்ச கேரக்டர்ஸை வச்சி இன்னும் நாலு கதைகள் எழுதினேன். அதெல்லாமே படிக்க ரொம்ப சூப்பரா இருந்திச்சி. (காக்கைக்கும் தன் குஞ்சி பொன் குஞ்சி மக்களே). சுபா சார்ஸ் இரண்டு பேருக்கும்தான் நன்றி சொல்லணும். அவங்க கதைதான் என் முதல் கதையின் இன்ஸ்பிரேசன். ஆனா அதுக்கப்புறம் எந்த கதையில இருந்தும் கேரக்டர்ஸை சுடல நான். ப்ராமிஸ்..

********

உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:

கதைகளை முதல்ல நோட்டுலதான் எழுதினேன். எழுதிட்டே இருக்கோமேன்னு யோசிச்சி இரண்டு கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்துக்கிட்டு வீட்டுல இருந்த வார இதழ் புத்தகங்களை பார்த்து அட்ரஸ்ம் எடுத்துக்கிட்டு எங்க ஊர் போஸ்ட் ஆபிஸ் போனேன். அன்னைக்கேதான் போஸ்ட் ஆபிஸ் எங்கே இருக்குன்னே தேடி கண்டுப்பிடிச்சேன். இரண்டு இடங்களுக்கு அந்த நோட்டை போஸ்ட் பண்ணேண். ஒரு இடத்துல இருந்து ரெஸ்பான்ஸ் (போன் கால்) வந்தது. கண்மணி. அவங்கதான் எனக்கு முதல்முறையா வாய்ப்பு தந்தாங்க. அவங்களுக்கு எத்தனை கோடி நன்றி சொன்னாலும் தீராது. "கதையை ஏ போர் சீட்ல எழுதி அனுப்புங்க"ன்னு சொன்னாங்க. உடனே கதை எழுத ஆரம்பிச்சேன். ஆறு நாள்ல ஒரு குறுநாவல் எழுதி அனுப்பி வச்சேன். ஆனா அதுக்கப்புறம் அவங்க எதுவுமே சொல்லல. சரின்னு மறுபடியும் வேற கதை எழுதி சசி நிலையத்துக்கு அனுப்பினேன்.

சசி நிலையத்துல இருந்து போன் வந்தது. உங்க கதையை புக்கா போட போறோம்ன்னு. சந்தோசம். இங்கேயாவது செலக்ட் ஆச்சேன்னு. அதுக்கப்புறம் அவங்கதான் என் மத்த நாவல்களையும் பதிப்பிச்சாங்க. ஆனாலும் கண்மணியில் இருந்து எந்த தகவலும் வரலையேன்னு ரொம்ப மன கஷ்டம். சாமிக்கிட்ட நிறைய சண்டை போட்டுக்கிட்டு இருந்தேன். கதை அனுப்பி மூணு மாசம் கழிச்சி ஒரு போன். "உங்க கதை இந்த வார கண்மணியில் வெளி வர போகுது"ன்னு. செம ஹேப்பி. எழுத்து பயணம் ஆரம்பிச்சது அப்படிதான்.

அதுக்கப்புறம் நிறைய கதைகள் எழுதி போஸ்ட் பண்ண ஆரம்பிச்சேன். என் கைல கிடைச்ச அத்தனை பத்திரிகைக்களுக்கும் கதைகளை அனுப்பினேன். அந்த மூன்றரை வருட கால கட்டத்துல மட்டும் முப்பது கதைகளாவது எழுதி இருப்பேன். ஆனா எட்டுதான் புத்தகமாச்சி. மீதி எல்லாமே ரிஜக்ட்தான். அப்ப என்கிட்ட ஸ்மார்ட் போன் இல்லை. தளங்கள் எதை பத்தியும் தெரியாது. அது எங்க வீடு கட்டி கைல இருந்த காசு முழுக்க செலவு பண்ணிட்ட டைம். என் கதைகளுக்காக செலவு பண்ண எனக்கே மனசு வராது. அதனால என்னோட கதைகளை ஜெராக்ஸ் எடுக்காம அனுப்பி வச்சிடுவேன். ஒரே எண்ணம்தான். நல்ல கதையா இருந்தா பப்ளிஷ் ஆகட்டும். அப்படி இல்லன்னா என் கதை தரம் இல்ல. அவ்வளவே.)


கண்டிப்பா செலக்ட் ஆகும்ன்னு ஆசைப்பட்டு எழுதிய கதைகள் ரிஜெக்ட் ஆகும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். ஆனா என்ன செய்ய.? அடுத்த கதைகளை பார்த்தாகணுமே. ரிஜெக்ட் ஆன கதையிலேயே ஸ்டக் ஆக முடியுமா.? (ஏற்கனவே எழுதிய கதைகளை மறுபடி எழுத சோம்பேறிதனம் எனக்கு. ஏற்கனவே எழுதி ரிஜக்ட் ஆன கதைகளை மறுபடி எழுதினேன்னா அந்த கதைகள் எனக்கு ஸ்பெஷல்ன்னு அர்த்தம்). இங்கே சில எழுத்தாளர்கள் ஒரு கதைக்கு ரெஸ்பான்ஸ் வரலன்னு கதை எழுதுவதையே விட்டுடுறாங்க. நோட்டுல எழுதுன கதை போக மீதி பதினைஞ்சி இருபது பேப்பர் போஸ்ட் கதையாவது என்னுது ரிஜெக்ட் ஆகி இருக்கும். ஒவ்வொரு ரிஜெக்சனும் எவ்வளவு வலி தெரியுமா மக்களே.? அழுகையா வரும். ரிஜெக்ட் ஆகின கதைகளில் சிலதை மட்டுமாவது ஜெராக்ஸ் எடுத்து வச்சிருந்தேன் அதை அனுப்பும்போது. ஆனா ஒருநாள் விரக்தியில நெருப்புல போட்டு எரிச்சிட்டேன். செஞ்சது தப்பாவே இருந்தாலும் பீல் பண்ணிக்கிட்டேவா இருக்க முடியும்.? புது கதைகள் எழுதி வாசகர்களுக்கு அன்பளிப்பா தர வேண்டியதுதானே இப்ப என் வேலை.

அப்ப எட்டு புத்தகங்கள் பதிப்பிச்ச பிறகு ஒரு காரணமா சில நாட்களுக்கு கதை எழுத முடியாத சூழல். (பிரகனென்ட், பேபி இந்த காரணம் இல்ல). ஒரு வருசத்துக்கு பிறகு என் வீட்டுக்காரர் ஸ்மார்ட் போன் வாங்கி தந்துட்டாரு. முதல்ல புத்தகம்தான் தேடினேன். சரியா கண்டுபிடிக்க முடியல. அப்புறம் ஏழெட்டு மாசம் போன பிறகு மாங்கா டூன் ஆப்ல காமிக்ஸ் படிக்க போனேன். அங்கே ஒரு கதைக்கு லாக். விளம்பரம் பார்த்து சேர்த்து வச்ச காயினை செலவு பண்ற அளவுக்கு மனசு வரல. அந்த கதையை வேற இடத்துல தேடினேன். அப்பதான் வாட்பேட் தெரிஞ்சது. ஒன்னிரண்டு மாதங்களுக்கு பிறகு சில பல தடங்கலுக்கு பிறகு வாட்டுக்குள்ள ரீடரா போய் சேர்ந்தேன். வேர் வூல்ப் மேல பைத்தியம். காஞ்ச மாடு கம்புல புகுந்த மாதிரி அந்த டைம். அவ்வளவு கதைகள். நல்லா பூந்து விளையாண்டு கதையிலேயே வாழ்ந்து வெளி வந்த பிறகுதான் அங்கே தமிழ் கதைகள் இருக்கறதே தெரிஞ்சது. ஒரு கதை படிக்க ட்ரை பண்ணேன். அவ்வளவா இல்ல. படிக்க பிடிக்கல அந்த கதையை. ஆனா வாசகர்கள் சூப்பர் சூப்பர்ன்னு கமெண்ட் பண்ணி இருந்தாங்க. நான் எங்கெங்கயோ வாசகர்களை தேடிக்கிட்டு இருக்கேன். இங்கேதான் இருந்திருக்காங்க. அப்புறம் ஆரம்பிச்சாச்சி.

எந்தன் நேசம். 40+ லவ். முதல்ல பத்து ரீட்ஸ்தான் வந்தது. இப்படிதான் நினைப்பிங்க நீங்க. ஆனா பத்து ரீட்ஸ் வந்திருக்கேன்னு நினைச்சேன் நான். பத்து வாசகர்கள் இல்ல அந்த இடத்துல ஒரு வாசகர் இருந்தாலும் எழுதியிருப்பேன் நான். ஒரு பத்து எபி போன பிறகு சூப்பர்ன்னு ஒரு கமெண்ட். அச்சீவ் பண்ணியாச்சி. பக்கத்து வீட்டு பிரெண்டை என் கதையை படிக்க சொல்லி வாட்பேட்ல சேர்த்து விட்டேன். அவ வேற கதையை படிச்சிட்டு மை பேவரிட் ஆத்தர்ன்னு அவங்களை கொஞ்சினா. எந்த சின்ன புள்ளை 40+ லவ் ஸ்டோரி படிக்கும்ன்னு அப்பதான் கேள்வி எழுந்தது. உடனே கை பிடித்த கண்ணாலா ஆரம்பிச்சேன். இது ஒரு நாள் அது ஒருநாள்ன்னு எபி தந்தேன். எந்தன் நேசத்தை விட இந்த இண்டாவது கதை ஐஞ்சாறு மடங்கு அதிக ரீச். ஐம்பதாவது எபி போடும்போதெல்லாம் ரெகுலர் ரீடர்ஸ் 500ஐ தொட்டாச்சி. ரெகுலர்ல இப்ப வரை எந்த கதையும் வாட்ல அவ்வளவு தொடல.

ஒருநாள் பேஸ்புக்ல பிரதிலிபி பத்தி பார்த்தேன். வாட் ரைட்டர்ஸ் சிலர் அங்கேயும் எழுதுவதை பார்த்தேன். என்னோட பேஸ்புக் பிரெண்ட்ஸ் சிலரும் பிரதிலிபியில் கதை அப்டேட் பண்ணுங்கன்னு சொன்னாங்க. உடனே அங்கேயும் எழுத ஆரம்பிச்சேன். அங்கேயும் பர்ஸ்ட் ரெஸ்பான்ஸ் இல்ல. இப்ப ஓகே. வேறு தளங்கள் இருக்கான்னு தேடினேன். இரண்டு வெப்சைட்தான் கிடைச்சது. அவங்களுக்கு மெயில் பண்ணேன். சகாப்தத்துல வாய்ப்பு கிடைச்சது. சில நாட்களுக்கு பிறகு நிகரில்லா வானவில். இரண்டு இடத்திலேயும் எழுதிட்டு இருக்கும்போது ஒரு ப்ளாக் இருந்தா நல்லா இருக்குமேன்னு தோணி அதையும் ஓபன் பண்ணேன். சமீபத்துல இருந்து எழிலன்பு நாவல்ஸ்லயும் ரைட்டர் ஆகியாச்சி. இவங்க எல்லாருக்குமே நன்றி சொல்லணும் நான். கதைகளை வாசகர்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்கறது சாதாரண உலகத்துல எவ்வளவு கஷ்டம்ன்னு எனக்குதான் தெரியும். கதை போய் சேர்ந்தாலும் ரிவ்யூ வராது. நம்ம கதை நல்லாருக்குன்னு ஒவ்வொரு வாசகர் சொல்லும் போதும் அது நமக்கான தங்க பதக்கம்தான். இவங்க எல்லாரும் எனக்கு கதை எழுத ஒரு அடித்தளம் அமைச்சி தந்தாங்க. சகாப்தம் ரைட்டர்ன்னு லேபிள் பார்க்கும்போது எவ்வளவு சந்தோசம்.. நிகரில்லா வானவில்.. நானும் நிகரில்லாதவளே.. டீம் மெம்பர்.. முன்னணி எழுத்தாளர்.. இதெல்லாம் என் சான்றிதழ்கள். என்ன இவ்வளவு ஓவரா போறன்னு கூட யாராவது நினைக்கலாம். ரொம்ப வருச பூட்டி வச்ச அறையை திறந்து பட்டாம்பூச்சியை வெளியே விட்டா என்னை விட அதிகமா சந்தோசப்படும். என் கதைகளுக்கும் இப்ப சிறகு இருக்கு மக்களே..

.....

மிகவும் அருமையான அனுபவம் சிஸ்டர் .நிச்சயம் துவண்டு போகிற ஒரு சில எழுத்தாளர்களுக்கு உங்களது அனுபவம் தைரியத்தை கொடுக்கட்டும்

******

நீங்கள் எழுதிய முதல் நாவல்: காதலிக்க கற்றுக்கொள்.

********

உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க:

எல்லா நாவல்களுமே சொல்லலாம். அப்படி இல்லன்னா இதுக்கு மேல எழுத போற நாவலா இருக்கலாம்.

*******,

நீங்கள் எழுதிய மொத்த நாவல் :

8 பேப்பர் பேக். அதுல இரண்டு கண்மணி இதழ்ல வெளிவந்தது. 5 நாவல்கள் அமேசான்ல இருக்கு. 4 பினிஸாகி வாட்லயும் பிரதிலிபியிலும் மற்ற தளங்களிலும் இருக்கு. அதுல மூணு ஒரே சீரிஸின் பாகங்கள்.


********

எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது:

2015 நவம்பர் முதல் பயணம். அஞ்சரை வருடங்கள் ஆச்சி இப்ப.


********

நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து தொடர்கதை or நாவல்:

இது கொஞ்சம் நீளம். யாரும் கண்ணு வைக்க வேணாம் ப்ளீஸ். ஆறு நாவல்கள் போய்ட்டு இருக்கு. அதுல இரண்டு போட்டிக்கதை.(பிரதிலிபி- நட்சத்திரமடி நீ, சகாப்தம்- கார்கால களவு - இதை பிரதிலிபி கதை முடிஞ்சதும் அடுத்த வாரத்துல இருந்து ஆரம்பிக்க போறேன்.). இரண்டுதான் என் ரெகுலர் ஆவரேஜ். (ஓர் ஆன்மாவின் குறிப்பேடு, மௌனமாய் சில மரணங்கள்.) ஆனா சமீபத்திய காய்ச்சலால் மைன்ட் ரிப்ரஸ் பண்ணிக்க எக்ஸ்ட்ராவா ஒரு நாவல். (காதல் கடன்காரா. அமேசான்ல பதிப்பிக்கப்படும் மழைநிழா மின்னிதழ்ல மாசம் ஒரு அத்தியாயம் வெளியாகுது. கதை பெயர் - என் வாழ்வின் பாதி நீ உன் மரணத்தின் மீதி நான்.


....

உழைப்பாளி👌👌👌👌

************

உங்கள் நாவல்கள் சிலவற்றின் பெயர் :

காதலிக்க கற்றுக்கொள், பண்ணை பூக்கள், என்னுயிர்த் தோழி, நெஞ்சமெல்லாம் உன் நினைவு, உயிரே உனக்காக, பூச்சூட வந்தேன், மார்கழிப் பனிப்பூக்கள். ஜன்னல் நிலவு, எந்தன் நேசம், காதல் சர்வாதிகாரி, கை பிடித்த கண்ணாலா, காதலிழையில், செங்காந்தள், சிக்கிமுக்கி, வெதின்ஸா நகரத்து இராஜகுமாரி, வெதின்ஸா, கழீழியத்தின் பேரரசி, மீதி ஆன்கோயிங்.


**********

நிஜக்கதை எழுதிய அனுபவம் இருக்கிறதா :

ம். பண்ணை பூக்கள், மார்கழிப் பனிப் பூக்கள் (பாதி மட்டும்), வருங்காலத்துல நிறைய நாவல்கள் வெளி வரலாம். என் பல கதைகளுக்கு நான் நேர்ல பார்த்த யாரோ ஒருத்தர்தான் இன்ஸ்பிரேசன்.

**********

போட்டி கதைகளில் பங்கேற்ற அனுபவம் இருந்தால் சொல்ல முடியுமா;

முதல் போட்டின்னா அது காவிய தலைவன்தான். பிரதிலிபிக்கு நான் வந்த சில நாட்களுக்கு பிறகு அறிவிக்கப்பட்ட போட்டி. பரிசும் வாங்கினேன். அப்புறம் சில சிறுகதை போட்டிகள் ஒரு கவிதை போட்டியிலும் கலந்துக்கிட்டேன். காதலாகினேன் இந்த கதை பரிசு வாங்கியது. இப்ப பிரதிலிபி மற்றும் சகாப்தத்துல கலந்துகிட்டு இருக்கேன். கதைகள் என்னை ஜெயிக்க வைக்குமான்னு பொறுத்திருந்து பார்க்கணும்.


**********

எழுத்தாளர் மற்றும் வாசகருடனான தொடர்பு எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீங்க :

என் வாசகர்கள் தர கமெண்ட்தான் என் கதைகளுக்கான நுகர்வு பொருளே. ஒவ்வொரு கமெண்டும்தான் என் கதையை கட்டி எழுப்புது. இது என் வாசகர்களுக்காக - நன்றிகள். உங்களோட ஒவ்வொரு ஊக்குவிப்புக்கும் கமெண்டுக்கும். உங்க நெகடிவ் கமெண்ட்ஸ்தான் என் எழுத்தை திருத்துது. நிச்சயம் நான் உங்களுக்கு கடமை பட்டிருக்கேன். நான் இறந்து போன பிறகு எனக்கு எவ்வளவு பெரிய விருது கிடைச்சாலும் அது என்னை சேராது. ஆனா நீங்க தர கமெண்ட் உடனே என்னை சேரும். அதனால உங்க மனசுல தோணுற கமெண்டை மறக்காம எனக்கு கொடுங்க. என் கதைகள் உங்களுக்காக. உங்க கமெண்ட்ஸ் எனக்காக)

.....

அருமை சிஸ்டர்

***********

நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள் ;

அனைத்தும். இருந்தாலும் பண்ணைப்பூக்கள் சீதா. ஏனா அவ உண்மை கிடையாதுன்னு கண்மணி வாசகர் ஒருத்தங்க சொல்லி இருந்தாங்க. அவ உண்மைதான். இன்னைக்கும் எங்க ஏரியாவுல சீதாக்கள் இருக்காங்க. அந்த கதை குழந்தை திருமணம் பற்றியது. அப்படி ஒரு திருமணத்தால் பாதிக்கப்பட்ட இரு நாயகிகளை பற்றியது. (அந்த ஒரு கமெண்ட்க்கு உட்கார்ந்து ரொம்ப நேரம் அழுதேன்.)

********

உங்கள் நாவல் or தொடர்கதை எது  வாசகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது :

கை பிடித்த கண்ணாலா.( வாட்ல). அத்தனை கமெண்ட்ஸ். 50 பாலோவர்ஸ் மட்டும் இருந்தபோது 100 கமெண்ட்ஸ் வந்ததெல்லாம் அந்த கதைக்கு மட்டும்தான் சாத்தியம்.


******

உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள்:

என் பிரெண்ட் லிஸ்ட்ல இருக்கற எல்லோரையுமே சொல்லலாம். வாட்ல எனக்கு பிரெண்ட்ஸ் கிடைக்க காரணம் தர்ஷினி சிஸ். பேஸ்புக்ல இத்தனை ரைட்டர்ஸ் இருக்காங்கன்னு நான் அறிய காரணம் ஆயிஷா சிஸ்.

******

நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள்:

இதுவும் பெரிசு. மாசத்துக்கு ஒரு முறை விருப்பம் மாறும். பா. விஜய், வைரமுத்து அவர்களின் கவிதைகள்ன்னா திரும்ப திரும்ப படிப்பேன். நைந்த உள்ளம் இதையும் ஒரு ஐம்பது முறைக்கும் மேல படிச்சிருக்கேன். இப்ப ஒன்னரை வருமா வெளிநாட்டு ஓநாய் மனிதர்களை லவ் பண்ணிட்டு இருக்கேன்.

*******

உங்கள் கதைகளை தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா;

மிக்க நன்றிகள். இதை தவிர என்ன சொல்றதுன்னு தெரியல. இவங்களோட முக்கியத்துவம் பத்தி முன்னாடியே குறிப்பிட்டுட்டேன்.

********

விருது, பரிசுகள் வாங்கிய அனுபவம் உண்டா.? பரிசுகளின் பெயர்களை சொல்லுங்கள்:

இல்லோர் ஒக்கல் தலைவன்(அதியமான் அஞ்சி) -காவிய தலைவன்  போட்டியில் பரிசு. காதலாகினேன் - கதைப்போமா போட்டியில் பரிசு. (இரண்டும் பிரதிலிபி.)

*********

ஒரு நாவல் அல்லது தொடர்கதை எழுதும் போது இத்தனை அத்தியாயத்திற்குள், வார்த்தைகளுக்குள் முடிக்க வேண்டும் என்று எழுதுவீர்களா;

இரண்டு வருசம் கேப் விட்டு எழுதிய எந்தன் நேசம் கதை முப்பது எபிசோட்ல முடிஞ்சிடும்ன்னு நினைச்சிதான் ஆரம்பிச்சேன். அது 66 எபில 72624 வார்த்தைகள் வந்துடுச்சி. அதுவும் பத்தலன்னு காதல் சர்வாதிகாரி இரண்டாம் பாகமா எழுதினேன். இரண்டு வருச கேப்ல இத்தனை மாற்றமான்னு எனக்கே என் மேல பயம் வந்துடுச்சி பர்ஸ்ட்ல. இப்பவும் அப்படிதான் போகுது. ஆன்லைன்ல எழுதிய என்னோட சாதாரண காதல் கதைகள் எல்லாமே அஞ்சி டூ ஆறே முக்கால் மணி நேர ஆவரேஜ். இதை மூணு மணி நேரங்களா குறைச்சிக்க பார்க்கறேன். ஆனா மனசு வரல. கேரக்டர்கள்தான் கதையை கொண்டு போகுது. நான் இல்ல மக்களே..

*****

கிராம கதைக்கும், நகர கதைக்கும் உள்ள வித்தியாசம்;

வித்தியாசம்ன்னா.. கிராம கதை நம்மை அங்கே வாழ வைக்கும். நகர கதை அங்கே நம்மை கற்பனை செய்ய வைக்கும்.

*******,,

வாசகர்கள் பற்றிய உங்களது கருத்து :

என் வாசகர்கள் எல்லாமே தங்கங்கள்.

**********

குடும்ப நாவல்கள் பற்றி சொல்லுங்கள்:

படிக்க நல்லாருக்கும். எழுதவும் நல்லாருக்கும்.

*********

போட்டி கதை பற்றி என்ன சொல்ல நினைக்கிறீங்க :

போட்டிகள்ன்னா பரிசுக்காகன்னு நானும் முதல்ல நினைச்சேன். ஆனா அது நிறைய இடங்கள்ல ஊக்குவிப்புக்காகன்னு கடைசியில்தான் புரிஞ்சது (ஊக்குவிப்பு ஆரம்ப கட்ட எழுத்தாளர்களுக்கான ஹார்லிக்ஸ், பூஸ்ட்). உண்மையை சொல்லணும்ன்னா எனக்கு பரிசுகள் ரீதியா வரும் ஊக்குவிப்பு தேவை கிடையாது. நிறைய முறை விழுந்து எழுந்து விட்டதால் ஊக்குவிப்பு மனசுக்குள்ளயே தானா ஊறிடுச்சி. அதுவும் இல்லாம என் வாசகர்களின் சூப்பர் எனும் வார்த்தையை போல எந்த பரிசும் என்னை அந்த அளவு மனம் மகிழ செய்யாது. இது என் நேர்மையான பதில். பிறகு ஏன் போட்டியில் கலந்துக்கறேன்னா அதுல ஒன்னு இரண்டு பரிசாவது ஊக்குவிப்பை தாண்டி திறமைக்காக தராங்க. அந்த பரிசை நான் தட்டி செல்லவே போட்டிகளில் கலந்துக்கறேன்.


*********

உங்கள் படைப்பு காதல் கலந்த குடும்ப படைப்பாக இருக்குமா அல்லது சமூக அக்கறை நிறைந்த நாவலாக இருக்குமா :

இரண்டுமே. சில இனிப்பு மட்டும், சில இனிப்பு கலந்த இஞ்சி முரப்பா.

*********

பிரதிலிபி செயலி பற்றி சொல்லுங்க :.

பிரதிலிபி ஆரம்பிச்சவங்களுக்கு முதல் நன்றி. மற்ற தளங்களை விட அங்கே எனக்கான வாசகர்கள் அதிகம். அவங்க தர ரெஸ்பான்ஸ்ம் அதிகம். என் கதைகளை எந்த பதிப்பகமாவது, எந்த இதழாவது பதிப்பிச்சி அதை வாசகர்கள் யாராவது ஒருத்தங்க படிச்சி கருத்து சொல்ல மாட்டாங்களான்னு ஏங்கிய காலம் போய் இப்ப எபிக்கு 40 கமெண்ட்தானா 50 கமெண்ட்தானான்னு நோட்டிபிகேஷன் பார்க்கறேன். அதுக்கு பிரதிலிபிக்கும் வாட்டுக்கும் நிச்சயம் நன்றி சொல்லியாகணும். அவங்க அமைச்சி தந்த தளம் அனைத்து எழுத்தாளர்களுக்கும் நிறைவானது. இத்தனை எழுத்தாளர்களை வாசகர்கள் கண்டுபிடிக்க காரணம் இந்த தளங்கள். மத்த வெப்சைட்ஸ்ம்தான். நிறைய பேருக்கு ஆப்ஸ் யூஸ் பண்ண பிடிக்கறது இல்ல. அவங்க எல்லாருக்குமான தளமா வெப்சைட்ஸ் இருக்கு.

.....

நிஜமான கருத்து. அங்கு எழுதுபவர் யார் என்று தெரியாவிட்டாலும் திறமையான எழுத்திற்கு எப்போதுமே தனி அங்கீகாரம் உண்டு. நானும் அதை பலமுறை உணர்ந்திருக்கிறேன்.

*********

பிரதிலிபியில் எழுதுவதற்கும் தளத்தில் எழுதுவதற்கும் உள்ள வித்தியாசம்:

வித்தியாசம் வாசகர்கள் எண்ணிக்கைதான். இங்கே அதிகம். அங்கே கொஞ்சம் கம்மி. இங்கே நானே என் கதையை முழுசா கையாளுறேன். பதிப்பித்தல்.. வேணுங்கற போது டெலிட் பண்றது. தளங்கள்ல டெலிட் பண்றது சில மணி நேர தாமதமாகுது.


*******

வரலாற்று நாவல், சமூக நாவல்கள் எழுதிய அனுபவம் இருக்கிறதா :

பிரதிலியில் காவிய தலைவன் போட்டிக்கு வரலாற்று சிறுகதை கேட்டாங்க. வரலாறு எழுத ஆசை. ஆனா தகவல் திரட்ட கஷ்டம். ஏனா நம்ம கதை வரலாற்றை ஒரு பர்சண்ட் கூட சிதைக்க கூடாது இல்லையா.? ஒரு வாரம் மண்டையை குழப்பிட்டு இருந்தேன். காவிய தலைவன்னாவே அது அதியமான்தான்னு டைட்டிலை பார்த்த உடனே மைன்ட் பிக்ஸ் ஆயிடுச்சி. (நான் தகடூர் மண் மக்களே). அதியமானை பத்தி கூகுள்ள நிறைய தேடி கடைசியில ஒன்னு கூட மனசுக்கு சரிப்பட்டு வரல. அதியமான் வீரத்தையோ பெருமையையோ எந்த இடத்திலாவது நான் கம்மி பண்ணிட்டா என்ன பண்றது.? அவர் என் ஹீரோ. அப்புறம்தான் ஒரு யோசனை. அதியமான் பத்தி பாடப்பட்ட இலக்கியங்களில் இருந்து ஏன் ஒன்லைன் பிடிக்க கூடாதுன்னு. அவ்வை பாட்டியோட புறநானூறு பாட்டுல இருந்து ஒரு ஒன்லைன்னை பிடிச்சி கதை எழுதிட்டேன். கதை மனசுக்கு திருப்தி. கிடைச்ச பரிசும் திருப்தியே.


சமூக நாவல்கள்ன்னா.. என்னோடது தனி மனித பிரச்சனைகள் சம்பந்தப்பட்டதுதான். பண்ணை பூக்கள் (சிறார் திருமணம்), எந்தன் நேசம் (சாதிய வேறுபாடு), மௌனமாய் சில மரணங்கள் (பசியும், அதனால் மாறிய மனிதர்களும்).

****
எதிர்கால கனவு;

வாசகர்கள் மனசுல எனக்குன்னு தனி இடத்தை பிடிக்கணும். பிரதிலிபி மற்றும் மற்ற இணையதள வாசகர்கள் அனைவர்கிட்டயும் என் கதைகள் போய் சேரணும். என் மனசுல உள்ள எல்லா கதைகளையும் எழுதிடணும். தமிழ் வார இதழ்கள் அத்தனையிலும் என் கதைகள் பப்ளிஷ் ஆகணும். அதுக்குள்ளவாவது ரிஜெக்ட் ஆகாத கதைகளை எழுத கத்துக்கணும். கண்மணியில் நானும் ரெகுலர் ரைட்டரா இருக்கணும். இன்னும் நிறைய ஆசையுண்டு. அதை அப்புறம் ஒருநாள் சொல்றேன். நன்றிகள் நட்புக்களே..

Sent from Mail for Windows 10

...

உங்களது பதில்கள் அனைத்தும் மிகவும் அருமை சிஸ்டர்.

மிக்க நன்றி,

மேலும் பல படைப்புகளை வழங்கிடவும், விருதுகள் பல வாங்கிடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..

ஹாய் பிரண்ட்ஸ்,

இன்றைய எழுத்தாளர்  கதைகளை வாசித்தவர்கள் அது பற்றிய உங்களது கருத்துக்களை முன் வைக்கலாம். ஏதாவது  கேள்விகளை கேட்க நினைப்பவர்கள் தராளமாக  கேட்கலாம்..... மற்றவர்கள் அவரது திறமையை வாழ்த்தலாம்

மிக்க நன்றி
🙏

Comments

Post a Comment