#எழுத்தாளர் அறிமுகப்படலம் சீசன் இரண்டு
இன்றைய அறிமுக எழுத்தாளர் எழிலன்பு அவர்களைப் பற்றிய விபரங்கள்...
பெயர் : எழிலன்பு (புனைப்பெயர்)
சொந்த ஊர் : விருதுநகர் மாவட்டம் (தற்போது வசிப்பது பெங்களூரில்)
படிப்பு : +2
பணி : இல்லத்தரசி
தளம் : https://ezhilanbunovels.com/nandhavanam/index.php
அமேசான் பெயர்: Ezhil Anbu
*****
உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:
கணவர், ஒரு பெண் குழந்தையுடன் பெங்களூரில் வசிக்கிறேன். இல்லத்தரசி. கதைகள் படிப்பது பொழுதுபோக்கு. அது தவிர தளத்தின் வேலைகள் பார்ப்பது, தையல் தைப்பது உண்டு. முக்கியமாக இப்போது எழுதுவது முக்கியப்பங்கு வகிக்கிறது.
******
உங்களது விருப்பமான எழுத்தாளர்:
ரமணிசந்திரன், ஜெய்சக்தி, உமா பாலகுமார், காஞ்சனா ஜெயதிலகர், ராஜேஷ்குமார் இவர்கள் கதைகள் தான் முதலில் படிக்க ஆரம்பித்தேன். தற்போது எழுதும் சில எழுத்தாளர்கள் கதைகளும் படிப்பது உண்டு.
******
உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:
அனுபவம் ஒவ்வொரு கதைக்குத் தகுந்தாற்போல் வருவது உண்டு. என்னால் இப்படியும் எழுத முடியுமா? நானா இதை எழுதினேன்? என வியக்க வைத்த அனுபவமும் உண்டு.
******
நீங்கள் எழுதிய முதல் நாவல்:
மனதோடு உறவாட வந்தவளே!
*****
உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க:
பனியில் உறைந்த சூரியனே கதை என்னை முதல் முதலில் நிறைய பேருக்கு அறிமுகப்படுத்தியது. அது தவிர ஒவ்வொரு கதை முடிக்கும் போதும் சில புதுப்புது வாசகர்களுக்கும் அறிமுகமாகிக் கொண்டு தான் இருக்கிறேன் என்று நினைக்கின்றேன்.
*****
நீங்கள் எழுதிய மொத்த நாவல் :
16
******
எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது:
நான்கு வருடங்கள்
****
தொடர்கதை எழுதுவது ஈஸியா நாவல் எழுதுவது ஈஸியா :
தொடர்கதை.
*****
நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து தொடர்கதை or நாவல்:
தற்சமயம் ஆன்லைனில் வந்து கொண்டிருக்கும் நாவல் ஈடில்லா எனதுயிரே
ஆனால் ஆப்லைனில் வேறு ஒரு கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். தலைப்பு பின்னால் அறிவிக்கப்படும் என்பதால் இப்போது தெரிவிக்க இயலவில்லை.
*****
உங்கள் நாவல்கள் சிலவற்றின் பெயர்கள் :
1.மனதோடு உறவாட வந்தவளே! 2.கண்கள் தேடுது தஞ்சம்!
3.ஞாபகம் முழுவதும் நீயே!
4.பனியில் உறைந்த சூரியனே!
5.நெஞ்சம் வீழ்ந்தது உன்னில்!
6.வஞ்சிக்கொடியின் வசீகரனே!
7.பூவோ? புயலோ? காதல்!
8.என்னுள் யாவும் நீயாக!
9.பிழையில்லா கவிதை நீ!
10.மனம் கொய்த மாயவனே!
11.மின்னல் பூவே!
12.வல்லினமாய் நீ! மெல்லினமாய் நான்!
13.சிந்தையில் பதிந்த சித்திரமே!
14.உனதன்பில் உயிர்த்தேன்!
15.இன்னுயிராய் ஜனித்தாய்!
16.ஈடில்லா எனதுயிரே!
...
அழகான பெயர்கள் தேர்ந்தெடுப்பு
*****
போட்டி கதைகளில் பங்கேற்ற அனுபவம் இருக்கிறதா :
அன்னா ஸ்வீட்டி அவர்கள் நடத்திய புதினம் 2020 போட்டியில் கலந்து கொண்டேன். ஆனால் அப்போதிருந்த சொந்த சூழ்நிலையால் போட்டியிலிருந்து விலகிவிட்டேன்.
*****
நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்?
ஒரு கதாபாத்திரத்தை மட்டும் தனித்து சொல்ல முடியாது. ஏனெனில் ஒவ்வொரு கதாபாத்திரமும் என்னால் உருவாக்கப்பட்டவர்கள். ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள் தான். ஒருவரை மட்டும் தனித்து கூறுவது மற்ற எனது பிள்ளைகளை எனக்கே பிடிக்கவில்லை என்பது போலாகிவிடும்.🙂
*****
உங்கள் நாவல் or தொடர்கதை எது வாசகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது :
இதற்கு வாசகர்கள் பதில் தான் சரியாக இருக்கும்.
*****
உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள்:
நிறைய பேர் உண்டு. என்னிடம் பேசும் அனைவரும் எனது நட்பு தான்.🙂
*****
நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள்:
காதல், குடும்பம், சஸ்பென்ஸ் கதைகள்.
*****
உங்கள் கதைகளை தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா?
எனது எழுத்தைப் படிக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்.
******
விருது, பரிசுகள் வாங்கிய அனுபவம் உண்டுமா. நாவலின் பெயர்களை சொல்லுங்கள்:
அப்படி ஒரு சம்பவம் இதுவரை நடக்கவில்லை.
*****
தொடர் கதையின் ஆரம்ப அத்தியாயங்கள் எப்படி இருக்க வேண்டும்:
தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் வகையில் இருக்க வேண்டும்.
*****
ஒரு நாவல் or தொடர் கதையை கையில் எடுத்து வாசித்தவுடன் எதனால் தொடர்ந்து வாசிக்க ஆசைப்படுகின்றனர்.?, ஏன் சலிப்பாக இருப்பதாக நினைத்து மாற்றி விடுகிறார்கள் :
எழுத்துநடை, கதையின் அம்சம் படிக்கும் ஆர்வத்தை தூண்டும்.
ஒரே காட்சிக்குள் சுற்றி சுற்றி காட்சி அமைப்புகள் இருந்தால் சலிப்பு ஏற்படும்.
******
நாவல் எழுதும் போது கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள் ஏதாவது உண்டுமா:
கதையில் என்ன சொல்ல வருகிறோமோ அதைச் சரியான விதத்தில் சொல்ல வேண்டும் என்பது நான் கடைபிடிக்கும் விடுமுறை.
*****
உங்கள் தளம் ஆரம்பித்த வருடம் :
2019
*****
உங்கள் தளத்தில் கதை எழுத ஏதாவது விதிமுறைகள் இருக்கிறதா :
அந்தரங்கமான அதீத காட்சிகள் இருக்கக் கூடாது. அதைத் தவிர எங்கள் தளத்தில் எந்த விதிமுறைகளும் இல்லை.
*****
உங்கள் தளத்தில் கதை எழுதும் எழுத்தாளர்களுக்கு புத்தகம் போட்டுக் கொடுப்பீர்களா :
தற்சமயம் பதிப்பகம் நாங்கள் நடத்தவில்லை.
*****
புரூப் ரீடரின் பணி என்னனு தெரிஞ்சுக்கலாமா:
கதையில் பிழையில்லாமல் பார்த்துக் கொள்வது.
அதை முதலில் செய்ய வேண்டியது எழுத்தாளர் தான். நம் எழுத்துக்கு நாம் தான் ப்ரூப் ரீடர்.
*****
ஒரு போட்டியில் கஷ்டப்பட்டு பிழைகளை பத்து முறை எழுதி திறமையை நிரூபிக்கப் போராடும் எழுத்தாளனின் படைப்பு ஏற்றுக் கொள்ளக்கூடியதா அல்லது கதையை எழுதி முடித்து அத்தியாயம் வீதம் புரூப் ரீடிங் பார்த்து அனுப்பும் கதை தேர்ந்து செய்வதற்கு உகந்ததா :
செய்வதை திருந்த செய்! என்பது தான்.
கதை எவ்வளவு நன்றாக இருந்தாலும் எழுத்துப்பிழைகளுடன் படிக்கும் போது பானகத்துரும்பாக உறுத்திக் கொண்டே இருக்கும்.
போட்டிக்கு மட்டும் அல்ல. எப்போதும் எழுதி முடித்து விட்டு அப்படியே போடாமல் பிழைகளைத் திருத்திப் போடுவதே நம் எழுத்திற்கு நாம் செய்யும் மரியாதை.
******
நாவல் எழுதுவதற்கு ஒரு எழுத்தாளனுக்கு என்ன தெரிந்திருக்க வேண்டும் :
சுவாரஸ்யமான கதை அமைப்பை முடிவு செய்து கொண்டு, வாசகர்களைப் படிக்க தூண்டும் வகையில் எழுத வேண்டும்.
******
கதையின் சலிப்பின்றிய நகர்வுக்கு செய்ய வேண்டியது என்ன :
சின்ன சின்ன சஸ்பென்ஸ் இருக்கலாம்.
சஸ்பென்ஸ் இல்லாமல் அடுத்து என்ன என்று தெரிந்தாலும் அதையும் சுவாரஸ்யமாக எழுதினால் சலிப்பு ஏற்படாது.
*****
நீங்கள் கதை எழுதும் முறை பற்றி சொல்ல முடியுமா :
ஒரு கதைக்கருவை முடிவு செய்து விட்டால், என்ன மாதிரியான காட்சி அமைப்புகள் வைக்கலாம், அதை எப்படிச் சுவைபட சொல்லலாம் என்று யோசித்து ஒவ்வொரு அத்தியாயமும் எழுதுவேன்.
*****
கதை எழுதும் முன்பு டைரியில் எழுதி வைத்து எழுதும் பழக்கம் உடையவரா அல்லது மனதின் வார்த்தைகளை கோர்வையாக வடிவமைப்பீர்களா :
மனதில் கோர்வையாக தோன்றும் காட்சிகளை உடனுக்குடன் கைபேசி அல்லது கணினியில் தட்டச்சு செய்து விடுவேன்.
*****
தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல நினைத்தால் தயங்காமல் சொல்லலாம் :
எழுத்தை ஆராதிக்கும் ஒவ்வொருவருக்கும் எனது வணக்கங்கள். 🙏
...
மிக்க நன்றி
🙏🙏
உங்களது கேள்விக்கான பதில் வந்து வெகுநாட்கள் ஆகிவிட்டன என்றாலும் அப்போது பிரேக் ஆக இருந்ததால் போஸ்ட் செய்ய முடியவில்லை. மன்னிக்கவும்
மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கவும், விருதுகள் பல வாங்கவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய எழுத்தாளரின் நாவலை வாசித்தவர்கள் அது பற்றிய கருத்துகளை தெரிவிக்கலாம் மற்றவர்கள் அவரது திறமையை வாழ்த்தலாம்.
நன்றி
*****
Congratulations dear 💖💖💖💖
ReplyDeleteவிருதுகள் வாங்கி திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயமில்லை, மனதிருப்திக்காக எழுதும் உங்களைப்போன்றவர்களால் தான் இறுதிவரை நிலைத்திருக்க முடியும். குடும்ச்சுமைக்கிடையே எழுதுவது என்பதே பெரிய சவால் தான். படிப்பவர்களுக்கே இருக்கும் போது எழுதுபவர்களை நினைக்கும் போது உண்மையில் அதிர்ஷ்டசாலிகள். என்றென்றும் புகழ் நிலைத்திருக்கும்.
ReplyDeleteசமீபகாலமாகத்தான் முகப்புத்தகத்தில் உங்கள் தளத்தில் இணைந்து கதைகளை படிக்க ஆரம்பித்தேன்
ReplyDeleteஉனதன்பில் உயிர்த்தேன் என்னுள் யாவும் நீயாக இன்னுயிராய் ஜனித்தாய்
ஈடில்லா எனதுயிரே
அனைத்துக் கதைகளும் அருமை !!அருமையோ அருமை!!
உங்கள் கதையின் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்!!!
சூப்பர் sis! Vaazhththukkal!!! தங்களின் எழுத்துப் பயணம் தொடர வாழ்த்துகிறோம்!!!!