JB Mam

 


#எழுத்தாளர் அறிமுகப்படலம்

ஹாய் பிரண்ட்ஸ்,

இன்று நான் உங்களிடம் அறிமுகப் படுத்தப் போகும் நபர் எழுத்தாளர் ஜேபி மேம்...

அவர் பற்றிய விபரங்கள்:

பெயர் : ஜேபி ;-)

சொந்த ஊர் : திருச்சி

படிப்பு : ;-)

பணி :
Sr Database Administrator (IT), Owner of JLine Exotic Arts & JLine Arts and Silks.

தளம் :
https://jbjlinenovels.com/index.php

அமேசான் பெயர்:
JB

************

உங்களைப் பற்றிச் சில வரிகளில் சொல்ல முடியுமா:

ஓவியம் வரைவதில் அலாதி விருப்பம். அவ்வப்பொழுது சமையல் அறையில் என் கைங்கரியத்தைக் காட்டுவேன்.
இந்தியக் கலாச்சாரம், பாரம்பரியம், கலை இவற்றை அறிந்துக் கொள்வதிலும், இருபது வருடங்களுக்கு முன்னரே இந்தியாவை விட்டுக் குடிபெயர்ந்துவிட்டாலும் இவற்றைப் பின்பற்றுவதிலும் மிகுந்த ஆர்வம் உள்ளவள்.

என்னுடைய கதைகளில் வரும் நாயகர்கள் பெரும்பாலும் என்னுடைய குணத்தையே சார்ந்தவர்களாக இருப்பார்கள். அது சிலருக்குத் தவறாகப்படும், ஆனால் என்ன செய்வது அப்படியாகப் படைக்கப்பட்டவள் LOL. I trust my own instincts. அதே போல் லூனாவில் வரும் பொன்னிலாவும், குருக்ஷேத்திரத்தில் வரும் ஆதித்யாவும் கலந்த குணம் என்றும் சொல்லலாம்.
என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாத சில விஷயங்கள் sexual/physical abuse, verbal abuse, child abuse, racism, non human(ity)

**************

உங்களது விருப்பமான எழுத்தாளர்:
திரு. கல்கி, திரு. சாண்டில்யன்

**************

உங்களது எழுத்து அனுபவம் பற்றிச் சொல்ல முடியுமா:

கற்பனையில் கூட நினைத்தறியாத ஒரு உலகத்தில் நான் காலடி எடுத்து வைத்த அனுபவம், நினைக்கும் நேரம் எல்லாம் வித்தியாசமான உணர்வுகளைத் தரும். சின்ன வயசில் எனக்குப் பிடிக்காத ஒரு வகுப்புன்னா, அது தமிழ் தான்.. சொன்னால் நம்ப முடியாதுதான், ஆனால் அது தான் உண்மை. ஆனால் எழுத ஆரம்பிச்ச போது தான் எவ்வளவு அழகான மொழி இதுன்னு கற்றுக் கொண்டேன். அதே போல் ஒரு தனித்தன்மை வேண்டும் என்று வர்ணனைகளைக் கதைக்குத் தக்கதாக நான் கொண்டு வரும் பொழுது என்னையே அவ்விடத்திற்குப் பயணிக்கச் செய்த காட்சிகள் நிறைய உள்ளன. அப்ப எல்லாம் மனசு சிலிர்க்கும்.. அது மட்டும் அல்ல, பல நல்ல உள்ளங்களை எனக்கு அறிமுகப்படுத்திய உலகம் இது. என்னுடைய முதல் நாவலான காதலா கர்வமாவில் துவங்கி இன்று வரை என் நலம் விரும்பிகளாக இருக்கும் நிறைய நல்ல உள்ளங்கள் என்னுடன் பயணிக்கச் செய்த களம் இது.
அதே சமயம் How to ignore or respond to negative criticism? How to deal with Difficult People? Downs and disadvantages of being known to public/strangers, இதை எல்லாம் கற்றுக் கொடுத்த உலகமும் இது தான்.

***************

நீங்கள் எழுதிய முதல் நாவல்:
காதலா? கர்வமா?

*****************

உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள்:

எழுத்தாளர்கள், வாசகர்கள்னு பிரிச்சுப் பார்ப்பதில்லை. இன்றைய வாசகர்கள் நாளைய எழுத்தாளர்களாக உருவாகுறாங்க இல்லையா? ஆகையால் என்னைத் தனிப்பட்ட முறையில் பிடிக்காதவர்களைத் தவிர (அதுக்கு நான் என்ன செய்றது!) மற்ற எல்லாருமே எனது நட்பு வட்டத்திற்குள் இருப்பவர்கள் தான். :-)

..

அருமை

***************

நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள்:

சின்ன வயசுல கதைப் படிக்கிற அனுபவம் எல்லாம் கிடையாது. கில்லி, கோ கோ,கோலி, பம்பரம், கிரிக்கெட், Dodgeball இப்படி விளையாட்டுக்களில் தான் என் பெரும்பாலான நேரம் போகும். என்னுடன் பிறந்தவர்கள் ரெண்டு பேர், அண்ணா & தம்பி. அண்ணா ரொம்ப அமைதி, நானும் தம்பியும் தான் வால்தனம் பண்ணுவோம்.. அம்மா அடிக்கடி சொல்வாங்க, எனக்குப் பிறந்தது மூணு, அதில் மூத்தது தங்கம், மற்ற இரண்டும் தகரம்னு. அந்த அளவுக்கு எங்களைத் துரத்தி துரத்தி அடிக்கிறதுல ரொம்ப டயர்டாகிட்டாங்க :-)

எங்க வீட்டோட அமைப்பும் எங்களுக்கு ஓடி ஒளியறதுக்கு ஏதுவாக இருக்கும். ஹாலில் இருந்து கிட்சன், பிறகு ட்ரெஸிங் ரூம், பிறகு பெட் ரூம் அடுத்து திரும்பவும் ஹால்னு ஒரே பாதை, ஏறக்குறைய ஒரு நீள் சதுர வடிவில் இருக்கும்.. ஹாலில் ஆரம்பிச்சமுன்னா ஒரே சுற்றில் திரும்பவும் ஹாலிற்கு வந்துடுவோம், ஆனால் அம்மாவால் அவ்வளவு வேகமாக ஓட முடியாது. அதனால் ஆரம்பிச்ச இடத்திற்குத் திரும்பவும் வந்து தானே ஆகணும்னுட்டு எங்களுக்காக வெயிட் பண்ணுவாங்க, ஆனால் நாங்க ஏதாவது ஒரு ரூமுக்குள் ஒளிஞ்சிப்போம். அப்ப தான் சொல்வாங்க, இந்த வீட்டுல தான் இருக்கீங்க, இன்றைக்குத் தூங்குறதுக்குள்ள எப்படியும் அடி இருக்கு, அப்ப பார்த்துக்கிறேன்னு.. ஒரு அடிக்கு பயந்துக்கிட்டு நாள் முழுசும் அரண்டு போய்ச் சுத்தறதை விட அந்த அடியே மேலுன்னு அப்புறம் நாங்களே போய் அடி வாங்கிக்குவோம். ஸ்கூலிற்குக் கட் அடிச்சு மலைக்கோட்டை போய் அதுக்குச் சிறப்பான அடிகள் வாங்கியதெல்லாம் தனிக் கதை.

இங்க யு.எஸ்க்கு வந்ததுக்குப் பிறகும் நான் பார்க்கும் சீரியல்ஸ் எல்லாமே க்ரைம் series ஆகத் தான் இருக்கும். Prison break வரையிலும் பார்த்தாச்சு, பிறகு வீட்டில் ஒரே திட்டு. Car பார்க்கிங் லாட்டில் கூட என் பின்னால் வருகிறவன் ஒரு சீரியல் கில்லரா இருப்பானோன்னு ஆராய்ச்சி செய்ததை எல்லாம் பார்த்துட்டு, இனி crime series பார்க்கக் கூடாதுன்னு என் husband பயங்கரக் கண்டிஷன். அப்போ தான் கல்கி, சாண்டில்யன் அவர்களின் புத்தகங்களை airport shop ல வாங்கிக் கொடுத்தார். ஆனால் இப்பொழுது நேரம் கிடைப்பதில்லை. கிடைக்கும் பொழுது போக்கிற்கான நேரத்தையும் ஓவியம் தீட்டுவதில் செலவழித்துவிடுகின்றேன்.
காதலா கர்வமா எழுதும் முன்னர்ப் பிற எழுத்தாளர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களின் கதைகளில் சிலவற்றை எடுத்துப் படித்திருக்கின்றேன், current trend தெரிந்து கொள்வதற்கு.

....

மிகவும் அருமை மேம். உங்களது சிறு வயது சேட்டைகளை படித்ததும் அப்படியே எனது சேட்டைகளும் அம்மாவின் துரத்தலும் ஓட்டமும் நியாபகம் வந்து விட்டது. காலங்கள் மாறினாலும் மாறாத பொக்கிஷ நினைவுகள்🙂🙂🙂🙂

******************

உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க:

மலரினும் மெல்லியவள்

******************

நீங்கள் எழுதிய மொத்த நாவல் :
6

*****************

எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது:

3 வருடங்கள்

******************

நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து தொடர்கதை or நாவல்:

இப்பொழுது எதுவும் எழுதவில்லை

*********************

உங்கள் நாவல்களின் பெயர் :

காதலா?கர்வமா?
மலரினும் மெல்லியவள்
கணவனே கண்கண்ட எதிரி
குருக்ஷேத்திரம்
உதயேந்திர வர்மன்
லூனா

******************

உங்களது நாவல்கள் சமூகப் படைப்பாக இருக்குமா அல்லது காதல் நகைச்சுவை குடும்பம் இதைப் பொறுத்து இருக்குமா:

காதல் கலந்த குடும்ப நாவல்களின் வகையைச் சார்ந்தவை, அதனில் ஒரு சமூக விழிப்புணர்வை உருவாக்கும் களமும்/கருவும் இருக்கும்.

******************

நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? உங்களைக் கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்:

காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு அல்லவா, எனக்கு என் நாவல்கள் அனைத்துமே பிடிக்கும், அதனில் மிகவும் பிடித்த படைப்புக்கள் என்றால் 'உதயேந்திர வர்மன்' மற்றும் 'லூனா'. அதே போல் அனைத்துக் கதாப்பாத்திரங்களும் பிடிக்கும். மிகவும் பிடித்த கதாப்பாத்திரங்கள் என்றால் ஆதித்ய வர்தன், உதயேந்திர வர்மன், மகிழ்வதனி, அஷ்வத் மற்றும் பொன்னிலா.

*****************

உங்கள் நாவல் or தொடர்கதை எது வாசகர்கள் மத்தியில் பிரபலமாகப் பேசப்பட்டது, அதற்கான காரணத்தை விளக்க முடியுமா :

மலரினும் மெல்லியவள்
நிறையப் பேருக்கு அந்தக் கதைப் பிடிச்சிருந்தது. குறிப்பாகக் கதாநாயகன் அர்ஜுனும் அவனுடைய பெர்ஸ்னாலிட்டிஸும், இறுதிக் காட்சியில் அர்ஜூனே அவன் மனைவி திவ்யாவிற்குப் பிரசவம் பார்த்தது, க்ளைமேக்ஸில் வில்லனிற்கு அர்ஜூன் கொடுக்கும் தண்டனை.. இதெல்லாம் வாசகர்களின் விமர்சனங்களிலும் கருத்துக்களிலும் குறிப்பிடப்பட்டவை.

*******************

உங்கள் கதைகளைத் தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :

அப்ப எல்லாம் குறைந்த அளவு தான் எழுத்தாளர்கள் இருந்தார்கள், ஆனால் இப்ப ஏகப்பட்ட பேர் இருக்கிறாங்க.. அதில் இந்த ஜேபியின் கதைக்கும் வாசகர்களும், நட்பு வட்டாரமும் இருப்பது ரொம்ப ரொம்பச் சந்தோஷம்.. என்னுடைய கதைகள் எல்லாருக்குமே பிடிக்கும்னு நான் எதிர்பார்த்தால் என்னை விட ஒரு முட்டாள் இருக்க முடியாது.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்தில் விருப்பம் இருக்கும்.. எனக்குச் சாண்டில்யன் அவர்களின் கதைகளில் வரும் வர்ணனைகள் மிகவும் பிடிக்கும்.. அதை அப்படியே நேரில் பார்ப்பது போல் கற்பனை செய்வதும் பிடிக்கும்.. Basically an artist, right? அதுவே என்னுடைய வர்ணனைகளுக்குமான முன்னோடி.. ஆனால் சிலருக்கு அது பிடிக்காது.. அதுவும் அவர்களுடைய விருப்பம்.. ஆனால் என்னுடைய கதைகளை விரும்பி தொடர்ந்து படித்து, பிறகு அதனில் உள்ள குறைகளை மனசு கஷ்டப்படாமல் அழகாக என்னிடம் எடுத்துக் கூறி, என் எழுத்துக்களை மெருகூட்டி வரும் வாசகர்களுக்கு tons and tons of thanks and hugs. :-)

****************

நாவல் எழுதுவதற்கும் தொடர்கதை எழுதுவதற்கும் உள்ள வித்தியாசம்:

ஆன்லைனில் போடும் பொழுது அது தொடர்கதைப் போலத் தானே வருகின்றது.. அதாவது ஒவ்வொரு வாரமும் ஒரு அத்தியாயமோ அல்லது இரு அத்தியாயங்களோ பதிவிடும் பொழுது. Or தொடர்கதைக்கு வேறு அர்த்தம் எதுவும் இருக்கா?

...

இல்லை அப்படி கேட்க வில்லை மொத்தமாக எழுதி பதிவிடும் நாவலிற்கும், வாரா வாரம் பதிவிடும் அத்தியாயங்களும் உள்ள வித்தியாசம் மற்றும் இரண்டில் எது பெஸ்டாக இருக்கும் அப்படி கேட்டேன்

*********************

போட்டி கதைக்கும் சாதாரணமாக எழுதும் கதைக்கும் உள்ள வித்தியாசம்:

நான் இதுவரையிலும் கதைக்கான எந்தப் போட்டிகளிலும் பங்கேற்றதில்லை, ஆகையால் பதில் சொல்லத் தெரியலைப்பா.

******************

உங்களது நாவல் எழுதும் பழக்கம் எப்படி ஆரம்பமானது. அதன் தூண்டுகோல் யாரென்று சொல்ல முடியுமா:

இதை நான் ஏற்கனவே முகநூலில் சொல்லிவிட்டேன், அதனையே இங்குப் பதிவிடுகின்றேன்.
மென்பொருள் துறையில் பணியாற்றி வரும் என்னையும் எனது குழு உறுப்பினர்களையும் இன்னும் சில சக பணியாளர்களையும் மற்றொருமொரு குழுவிற்கு எதிர்பாராதவிதமாக இடம் மாற்றம் செய்தனர். அந்த டீமிற்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை, ஆனால் அது நிர்வாகம் எடுத்த முடிவு. அப்ப அடிக்கடி அங்க மீட்டிங்ஸ் நடக்கும்.. ஒண்ணுமே புரியாது, ஆனால் புரிவது மாதிரி நடிக்கணும்.. ஆனால் என்னால் அது முடியாது.. அப்ப தான் அந்த நேரங்களில் ஏதாவது செய்யலாமே என்று முடிவு செய்து, கதை எழுத ஆரம்பித்தேன்.. என்ன ஒரு தொழில்பற்று! ROFL
ஆனால் சுத்தமா தமிழ் டைப் பண்ணத் தெரியலை.. நீச்சலே தெரியாம நீச்சல் போட்டியில் கலந்துக்குற மாதிரி இருந்துச்சு.. அதனால் முதல்ல தமிழில் டைப் பண்ணக் கத்துக்கலாம்னு ஆரம்பிச்சேன்.. (அதற்குத் தூண்டுகோல் எனது coworker, a lady from Russia) That was the biggest challenge for me, rather than creating a story. சரியா இரண்டு மாசம் பிடிச்சது ஒழுங்கா keyboard பார்க்காம தமிழில் டைப் செய்ய.. பிறகு தான் கதையே எழுத ஆரம்பித்தேன்.. இதுல பெரிய காமெடி என்னன்னா, நான் ரொம்பச் சீரியஸா வேலைப் பார்க்குறேன்னு மீட்டிங்கில் நினைச்சுக்குவாங்க.. அப்ப தான் சொன்னேன், "புரியாத ஒரு வேலையைப் புரிஞ்ச மாதிரி நடிக்கிறதை விட, எனக்குத் தெரிஞ்சதை நான் செய்யறேன்னு.. நீங்க என்னுடைய ஸ்கில்ஸ்கும் டெசிக்னேஷனுக்கும் சம்பந்தமில்லாத ஒரு இடத்துலக் கொண்டு வந்து போட்டுட்டீங்க, அப்ப நான் என்ன செய்யறது? வாழ்க்கையில் நிறையக் கத்துக்கணும், ஆனால் அதை நான் உபயோகப்படுத்தும் பட்சத்தில் மட்டுமே.. மழையே பெய்யாத ஊரில் குடை எதுக்குங்கிற மாதிரி, உண்மை தானேன்னு கேட்டேன்.."

அப்படி உருவானது தான் காதலா? கர்வமா? (ஆனால் அதுக்கப்புறம் பழையபடி எங்களை முந்தைய டீமிற்கே மாற்றிவிட்டார்கள், அது வேற கதை.. 😉 For every action, there is an equal and opposite reaction - proved moment.. Hence I could not continue my stories at work LOL

அதற்குப் பிறகு மலரினும் மெல்லியவள், கணவனே கண்கண்ட எதிரி, குருக்ஷேத்திரம், உதயேந்திர வர்மன், லூனான்னு என்னுடைய பயணம் இந்த எழுத்துலகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது எனது நலம் விரும்பிகள் மற்றும் நட்புக்களின் பேராதரவுடனும், கடவுளின் ஆசிகளுடனும்..

...
மிகவும் அருமையான அனுபவம்😂😂😂

*******************

உங்களது நாவல் எழுதும் பழக்கத்தை வீட்டினர் மற்றும் கணவர் எந்த வகையில் ஊக்கு விக்கின்றனர் என்று சொல்ல முடியுமா :

என்னுடைய கணவருக்கு அவ்வளவாக நான் எழுதுவது பிடிக்காது, காரணம் என் உடல் நிலை. கொஞ்சம் ஹெல்த் இஷ்யூஸ் இருக்கு.. பிள்ளைகள், என் அம்மா மற்றும் என் உடன் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சியே.

******************

ஒரு எழுத்தாளன் எப்பொழுது வெற்றி பெறுகிறானு நினைக்கிறீங்க:

தனித்தன்மை/Uniqueness -> எழுத்தாளர் என்பவர் மட்டும் அல்ல, எந்த ஒரு படைப்பாளரும் அவருக்கென்று ஒரு தனித்தன்மையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். மற்றவர்களில் இருந்து தனித்துத் தெரிய வேண்டும்.
படைப்பாளிக்கென்று இருக்கும் பொறுப்பு/ Responsibility of every human being- > என்னைப் பொறுத்தவரை இந்தக் காலக்கட்டத்தில் சமூக ஊடகங்களின் தாக்கம் வயது வரம்பு இல்லாது அனைத்து மக்களிற்கும் மிகவும் அதிகப்படியாகவே இருக்கின்றது.. அதுவும் பல விஷயங்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. திரைப்படங்களாகட்டும், நாடகங்களாகட்டும், புத்தகங்களாகட்டும், இல்லை வலைத்தளங்களில் வெளிவரும் எந்த ஒரு காட்சியாகட்டும் எளிதாக மக்களிடம் சென்று சேரும் காலத்தில் நாம் இருக்கின்றோம். ஆகையால் நாம் படைக்கும் ஒவ்வொரு படைப்புகளும் முடிந்த அளவு படிப்பவர் அனைவருக்குமே நன்மை பகரும் வகையில், நேர் மறையான உணர்வுகளைக் கொண்டு வருவதாகவே இருக்க வேண்டும்.

Knowledge sharing -> Sharing knowledge is the greatest of all callings. பொதுவாக நாம் வாழும் இந்தப் பரபரப்பான வாழ்க்கையில் பொது அறிவு சார்ந்த விஷயங்களை இணையத் தளங்களுக்கோ அல்லது நூலகங்களுக்கோ சென்று கண்டறிய நேரம் கிடைப்பதில்லை.. அப்படியே கிடைத்தாலும் ஏதாவது ஒன்றிரண்டு விஷயங்களைப் பற்றியே தேடிப் படிக்கிறோம். அந்த வகையில் நமக்குத் தெரிந்தவற்றை, நம்மால் இயன்றவரை சுவாரசியம் குறையாத அளவிற்குக் கதைகளின் ஊடே சொல்லுவதைப் பழக்கமாக எடுத்துக் கொண்டால் படிப்பவர்களும் பயன்பெறுவார்கள்.

Dedication/Hardwork/Positive Attitude/Hold your ground -> இது எழுத்தாளர்களுக்கு மட்டும் இல்லை, அனைவருக்குமே தான். ஒன்றே செய் நன்றே செய்னு சொல்கிற மாதிரி, செய்கின்ற காரியத்திற்காக உங்களை நீங்களே அர்ப்பணம் செய்யற அளவுக்கு உழைக்கணும். நல்ல மனப்போக்கும், நேர்மறையான எண்ணங்களும் உங்களின் படைப்புக்களில் பிரதிப்பலிக்கணும். நம் மனதிற்குப் பிடித்தவைகளை (அது நல்லவனவாக இருக்கும் பட்சத்தில்) செய்யும் பொழுது பிறருக்காக நம்மை மாற்றிக்காமல் இருக்க வேண்டும். எழுத்துலகமும் ஒரு களம் தான், இதனைப் போன்ற எத்தனையோ களங்களில் நீங்கள் இறங்கலாம், ஆனால் எங்குமே உங்களின் individuality -ஐ கைவிட்டுவிடாதீர்கள்.. அதுவும் உங்களின் படைப்புக்களில் ரிஃப்ளெக்ட் ஆகட்டும்.
இவை அனைத்தையும் கடைப்பிடித்தாலே எதிலும் வெற்றி பெறலாம்.

...

அருமை மேம் பிரமாதம்👏👏👏👏

********************

சில எழுத்தாளர்கள் நிஜத்தை அப்படியே கண் முன் காட்சி படமாக விரிவது போல எழுதுகிறார்கள் .அது எப்படினு சொல்ல முடியுமா:

என்னைப் பொறுத்தவரை நான் எழுதும் காட்சிகள் என் கண் முன்னே விரிய வேண்டும். நான் அங்கு இருக்க வேண்டும்.. உதாரணத்திற்கு லூனாவில் வரும் கள்ளழகரை ஆற்றில் இறக்கும் காட்சி. நானே அங்கு இருப்பது போல் கற்பனை செய்து கொள்வேன். அதற்கு ஏற்றார் போல் காட்சிகளை எழுத்துக்களாகக் கோர்ப்பேன். திரும்பப் படித்துப் பார்க்கும் பொழுது நான் அந்த இடத்திற்கு மனதால் பயணம் செய்வேன். மனம் ஒட்டவில்லை என்றாலோ அல்லது நான் அந்த இடத்தில் இல்லாதது போன்று தோன்றினாலோ அந்தக் காட்சியின் அமைப்பில் ஏதோ குறை இருக்கின்றது என்று பொருள் எடுத்துக் கொண்டு அதனை மாற்றி அமைக்க முயற்சி செய்வேன்.

********************

காதல் காட்சிகளை உணர்வு பூர்வமாகக் கையாண்டால் நன்றாக இருக்குமா அல்லது காட்சிக்கு ஏற்ப நகர்வு இருந்தால் நல்லா இருக்குமா:

உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும், ஆனால் அதற்காகத் தேவையற்ற இடங்களில் திணிப்பது கூடாது.

***************

ஆண்லைன் கதைக்கும் புத்தகத்திற்கும் உள்ள வித்தியாசம் :

புத்தகம் ஒரு பொக்கிஷம். பிற்காலத்தில் நாம் இருப்போமோ அல்லவோ ஆனால் எங்கோ, ஏதோ ஒரு இடத்தில் நம் பெயர் பொறிக்கப்பட்ட ஒரு புத்தகம் இருக்கும் என்பது மனதிற்குள் ஒரு அளப்பறியா மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஆனால் அதனிலும் ஒரு குறை இருக்கின்றது. எனது கதைகளை நான் ஆன்லைனில் பதிவிடும் பொழுது, ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் கீழ் facts, references, video links etc கொடுப்பேன். உதாரணத்திற்குக் குருக்ஷேத்திரம் கதையின் போது பெண்களால் உண்டான மகாப்பெரிய யுத்தங்களை வரலாற்றுச் சான்றுகளுடன் விளக்கியிருந்தேன். உதயேந்திர வர்மனின் நாயகி மகிழ்வதனி கர்ப்பிணியாகப் போர் புரியும் இடத்தில், வரலாற்றில் கர்ப்பிணிப் பெண்கள் போர் புரிந்த சம்பவங்களை எடுத்துக்காட்டுக்களோடு கொடுத்தேன்.

மலரினும் மெல்லியவள் இரண்டாம் முறை ஆன்லைனில் பதிவிடும் பொழுது ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் தக்க வகையில் ஒவ்வொரு மலராகத் தேர்ந்தெடுத்து அதனைப் பற்றிய விளக்கங்கள் (facts) கொடுத்தேன். இவை அனைத்தையும் என்னால் புத்தகங்களில் செய்ய இயலாது. :-)

**************

கூட்டுக் குடும்பக் கதைகள் அண்மையில் குறைந்து காதல் படைப்புகள் பெருகி விட்டதென்று நினைக்கிறீர்களா :

[அனைத்துமே வெவ்வேறு genre கள் தானே.. அது மட்டும் இல்ல, இந்தக் கேள்வி நம்மைச் சுற்றியுள்ள எழுத்தாளர்களின், வாசகர்களின் வட்டாரத்தை மட்டுமே சார்ந்ததா தெரியுது. இதையும் தாண்டி ஒரு மிகப் பெரிய எழுத்துலகம் இருக்கு. :-) ]

உங்கள் கேள்விக்கான என் பதில், நான் சில காலங்களாக இங்குப் பார்ப்பது காதலுக்கான definition தவறாகப் புரிந்து கொள்ளப் படுகின்றது, Love, Desire, Romance, Lust, Vulgarity, இவை அனைத்துமே வெவ்வேறு பொருள் கொண்டவை. காதல் என்ற ஒரு சொல்லிற்குக் கீழ் அனைத்தையும் கொண்டு வர இயலாது. நான் செய்த ரிசேர்ச் படி romance is the most favorite subject for several people. ஆனால் ரொமான்ஸுக்கான அர்த்தம் தான் சிலரிடம் மாறுபட்டுள்ளது.

*****************

Mobile & laptop இரண்டில் கதை எழுதி பதிவிட எது ஈஸியாக இருக்கும்.. ஏன் :

Laptop. எனக்கு keyboard and monitor பெருசா இருக்கணும்.

***************

நாவல் அல்லது தொடர்கதை எழுதும் போது எந்த மொழி வழக்குப் பயன்படுத்தினால் வாசிக்க அழகாக இருக்கும்:

இது கதைக்குத் தக்கப்படி இருக்க வேண்டும். அந்த வட்டார மொழியில் இருந்தால் அழகாக இருக்கும் என்பது என் கருத்து, ஆனால் எழுதுவது எளிதல்ல.

***************

ஆன்டி ஹீரோ விற்கும் அழுத்தமான ஹீரே விற்கும் உள்ள வித்யாசம்:

இங்கு ஆன்டி ஹீரோவுக்கான அர்த்தம் தவறாகவே பயன்படுத்தப்படுகின்றது என்பது என் கருத்து.. An antihero or antiheroine is a main character in a story who lacks conventional heroic qualities and attributes such as idealism, courage, and morality.
அறநெறி இல்லாதவர்களையே ஆன்டி கேரக்டர்ன்னு சொல்லுவாங்க.. ஒவ்வொரு நாயகனையும் நாயகியையும் கதைகளில் உருவாக்கும் பொழுது அவர்களுக்கென்று தனிப்பட்ட குணாதிசயங்களை உருவாக்கலாம். அதில் கதைக்கருவிற்குத் தக்க மாதிரி ஹீரோக்கள் rude/strong personality குணமுடையவர்களாகவும், எதிர்மறையான குணங்கள் உள்ளவர்களாகவும் படைக்கப்படலாம், ஆனால் எதற்கும் ஒரு அளவு இருக்க வேண்டும் என்பது என் கருத்து. The Line Between Good and Evil ன்னு சொல்வாங்க.. இங்க அது மாதிரி ஹீரோக்களைப் படைக்கும் பொழுது ரொம்பக் கவனமாகவே இருக்கணும். அதே போல் பெண்களை அநியாயத்திற்குத் துன்புறுத்துவதாக எழுதுவதில் எனக்கு விருப்பம் இல்லை.. கதைக்குத் தேவையான பட்சத்தில் சில இடங்களில் கொண்டு வரலாம், ஆனால் அதுவும் ஒரு லிமிட்டோடு தான் இருக்க வேண்டும் என்று நினைப்பவள் நான். வலி கதையில் [plot] இருந்தால் என்ன? காட்சியில் [scenario] இருந்தால் என்ன? வலிதானே.

கதையைக் கதையாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று பிறர் கூறுவதைக் கேட்டிருக்கின்றேன். ஆனால் ஒரு படைப்பாளியின் வெற்றியே, கதைகளை வாசகர்களின் மனதில் காலங்கள் கடந்து நிற்க செய்வதாக எழுதுவதில் தானே இருக்கின்றது? இன்றும் வந்தியத்தேவனை மறக்க முடியுமா? சமுத்திர குமாரி என்ற பெயரைக் கேட்டாலே நியாபகத்தில் வருபவர் யார்? மனதிற்குள் இனிய நினைவாகப் புதைய வேண்டிய கதை மாந்தர்களை அநியாயத்திற்கு Reactive attachment disorder (RAD) உள்ள மனிதன் மாதிரி காட்டுவதில் எனக்கு விருப்பம் இல்லை. Villain character என்பது வேறு. Again this is my personal opinion.:-)

..

அருமையான கருத்துக்கள்

****************

நான் உங்களுடைய இரண்டு கதைகள் தான் படித்தேன் காதலா கர்வமா , பொன்னிலா கதை.
அதில் காதலா கர்வமா தொடர் கதையில் ஹர்ஷாவின் திமிர் கோபம் கர்வம் எல்லாமே ரசனையாக அருமையாக இருந்தது. நாயகி கன்னிகாவின் அமைதியும் அழகாக இருந்தது .அந்தக் கதை பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா:

அது என்னுடைய முதல் கதை.. Baby steps நான் எடுத்து வைத்த கதை. மனதிற்குத் தோன்றியதை எழுதினேன், அவ்வளவு தான். முதல் கதையிலேயே கருத்துச் சொல்வதெல்லாம் வேண்டாம் என்றும், இதுவே கடைசிக் கதையாக இருந்தாலும் இருக்கலாம் என்ற சூழ்நிலையிலும் நான் எழுதியது. எதிர்பாராமல் எனக்கு நிறைய வாசகர்களைக் கொடுத்த நாவல். மற்றபடி அது சாதாரணக் கதைக்களம் தான். Harsha, also known as Harshavardhana, was an Indian emperor who ruled North India from 606 to 647 CE. திரு. சாண்டில்யன் அவர்களின் கதைகளில் வரும் கதாப்பாத்திரம். அதில் இருந்து ஹர்ஷா என்ற பெயரில் எனக்கு ஒரு தனி அட்டேச்மெண்ட். :-)

...

மிக்க நன்றி மேம்...
உங்களுக்கு இருக்கும் வேலைப் பளுவிற்கு இடையில் நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சம்மதம் தெரிவித்து மறு நாளே அனைத்து கேள்விகளுக்கான பதிலையும் அனுப்பி கொடுத்துட்டிங்க.
உங்களது பேச்சின் கம்பீரம் எழுத்து நடையில் தெரிந்தது.

மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிடவும் , விருதுகள் பல வாங்கிடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐💐💐

ஹாய் பிரண்ட்ஸ்,

இன்றைய எழுத்தாளரின் படைப்புகளை வாசித்தவர்கள் அதைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம். மற்றவர்கள் அவரது திறமையை வாழ்த்தலாம்....

நன்றி
🙏🙏🙏

Comments