#எழுத்தாளர்அறிமுகப்படலம்
வணக்கம் மேம்,
எங்களுடைய எழுத்தாளர் அறிமுக நிகழ்ச்சிக்கு ஒரு முன்னணி எழுத்தாளராகிய நீங்கள் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்தற்கு மிக்க நன்றி மேம்
உங்களைப் பற்றிய விபரங்கள்:
1. பெயர் : மணிமாலா. இயற் பெயரும்
அதுவே
2. உங்களுடைய ஊர்: சென்னை
3. என்ன படிச்சிருக்கிங்க : MA
4. எழுத்தாளராக மட்டும் அல்லாமல் வேறு எதாவது பணி நோக்குகிறீர்களா :
முன்பு மூன்று இதழ்களுக்கு எடிட்டராகப் பணிபுரிந்து இருக்கிறேன். இப்போது இல்லை.
5. உங்களுடைய குடும்பத்தை பற்றி சொல்ல முடியுமா :
கணவர் சுப்பிரமணிய பிரசாத்- பிஸ்னஸ் மேன்+அரசியல்வாதி. மகன் சூரிய பிரசாத் படித்துக் கொண்டிருக்கிறார்.
6. மேம் உங்களை பற்றி சில வரிகளில் சொல்வதாக இருந்தால் :
எழுதுவதில் இருக்கும் ஆர்வம்... பொது வெளியில் வருவதில் தயக்கம்.'மைக்'கை பார்த்தாலே நடுக்கம். அதனால் என் வட்டம் சிறியது... அவ்வளவுதான் நேரம் செலவழிக்க முடியும் என்பதும் ஒரு காரணம்! மீதி... நீங்கள் தான் சொல்லனும்.
7. எழுத்துலகிற்கு வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது:
1994 ல் முதல் நாவல் வெளிவந்தது. அப்போது கல்லூரியில் முதல் வருடம் படித்துக்கொண்டிருந்தேன்.
8. நீங்கள் தற்சமயம் எழுதி வரும் நாவல்:
எழுதி முடித்த பின்பே தலைப்பைச் சூட்டுவேன்.
9. நீங்கள் எந்த இதழ்களிலாவது தொடர்கதை எழுதியிருக்கிறீர்களா :
எத்தனை என்று கேளுங்கள், ராணி, குங்குமம், இதயம் பேசுகிறது போன்ற இதழ்களில் இருபது தொடர்கள் வரை. அதில் இதயம் பேசுகிறது வார இதழில் துளசி என்னும் தொடர்கதை ஒரு வருடம் வெளிவந்தது. அந்த தொடரே விஜய் டிவியில் சீரியல் ஆகவும் வெளிவந்தது.
10. நீங்கள் எழுதிய நாவலிலே உங்களுக்கு மிகவும் பிடித்த நாவல், கதாபாத்திரம் என்னவென்று எதை நினைக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா :
பிடிக்காமல் எதையும் எழுத முடியாது. ரொம்ப பிடித்தது என்று ஒரு பட்டியலே போடலாம். முக்கியமாக சொல்லனும்னா... தேவியின் தொடராக வந்த"தண்ணீரிலே... தாமரைப்பூ"கதையின் நாயகி மதுமதி. தன்னைக் கற்பழித்தவனை கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லும் சமூகத்தை எதிர்க்கும் கேரக்டர்...அதன்பொருட்டு ஏற்படும் உறவுகளின் எதிர்வினைகள்.
11. இதுவரை எழுதியிருக்கும் நாவல்களுக்காக எத்தனை முறை விருதுகள் வாங்கியிருக்கிறீர்கள் அந்த நாவலின் பெயரை பற்றி சொல்ல முடியுமா :
சில விருதுகளை வேண்டாமென
தவிர்த்திருக்கிறேன்.
12. உங்களது முதல் படைப்பு நாவலாக வெளி வந்த போது உங்களது மனநிலை எப்படி இருந்தது:
எப்படி இருக்கும் என்று சொல்லித்தான் தெரியனுமா? அதுவும் +2 படிக்கும்போதே ரெக்கார்ட் நோட்டில் மறைச்சு மறைச்சு எழுதிய கதை அது! அந்த முதல் நாவலே என்னை மிக உயரத்திற்கு கொண்டுச் சென்றது. அந்தக் கதைக்கு வந்த 400 விமர்சன கடிதங்களை போட்டு என்னை கௌரவப் படுத்தினார்கள்.
13. இத்தனை வருட எழுத்துலகில் நிரந்தரமான வாசகர் யாரையாவது பெற்றிருக்கிறீர்களா? அதாவது உங்கள் நாவல் விற்பனைக்கு வந்த உடன் வாங்கி படித்து அதைப் பற்றி கருத்துகளை பகிர்ந்து கொள்வதற்கு ஏற்ப :
நிறையவே! குறிப்பிட்டு ஒரு சிலரை மட்டுமே சொல்ல முடியாதே! என் நாவல்களை படித்து முடித்து பீரோவில் பத்திரப்படுத்து பவர்கள்.
14. உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள் சிலரை பற்றி சொல்ல முடியுமா:
முக்கியமா எல்லா எழுத்தாளர்களும். வாரம் ஒரு முறையாவது போணில் பேசிக்கொண்டிருக்கும் எழுத்தாளர் தோழி என்றால் ஆர் சுமதி.
15 .ஒரு எழுத்தாளர் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்கிறீங்க:
எழுத்தாளர் எப்படி இருக்க வேண்டும் என்பது நான் சொல்ல முடியாது. அவர் படைக்கும் எழுத்துக்கள் வாசகர்களால் காலம் கடந்தும் நினைவு கூறுவதாய் இருக்க வேண்டும்.
16 .ஒரு எழுத்தாளரின் படைப்பு எப்படி இருக்க வேண்டும். அவர் எழுதிய நாவலை கையில் எடுத்த உடன் என்ன மாதிரி உணர்வு தோன்ற வேண்டும் :
கடையில் அவர் பெயரைப் பார்த்ததும் புத்தகம் வாங்க தூண்ட வேண்டும்.
17. ஆர்சி, காஞ்சனா, லெஷ்மி, ஆர்.சுமதி, வி. உஷா, சிவ சங்கரி, அனுராதா ரமணன், தேவிபாலா, இராஜேஸ்குமார், இந்திரா சௌந்தர ராஜன்.... போன்ற பல எழுத்தாளர்கள் நாவல்களை படைத்த சமயம் நீங்களும் நாவல்கள் எழுதியிருக்கிங்க. அப்போது அவர்களை விட தனிப்பட்டு தெரிய வேண்டும் என்றோ அல்லது அவர்கள் முன்பு எப்படியாவது உங்களுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என்று ஏதாவது குறிக்கோள் வைத்திருந்தீர்களா? அந்த சமயத்து அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா :
இதில் பலருடன் சிறப்பிதழில் இரட்டை நாவல்களாக என் நாவலும் வந்துள்ளன. நான் மட்டுமல்ல, எல்லா எழுத்தாளர்களும் தங்கள் எழுத்துக்கள் தனிப்பட்டுத் தெரிய வேண்டும் என்றுதானே எழுதுவார்கள்? நானும் எழுதி நிரூபித்தும் இருக்கிறேன். என் நாவலை'சுட்டு 'இன்னொருவர் சீரியலாக்கிய சம்பவமும் உண்டு! இதற்குமேல் இதை விரிவாகப் பேச வேண்டாம்.
18. அன்றைய நாளில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை ராணி புத்தகமும், மாதத்தில் இரண்டு ராணி முத்து புத்தகமும் , கண்மணி புத்தகமும் தான் வந்தது .அப்போதெல்லாம் எப்போதடா புத்தகம் கைக்கு கிட்டும் என்று நாட்களை விரட்டி தள்ளுவோம் .ஆனால் இப்போது ஆண்லைனில் கதை எழுத ஆரம்பித்ததால் கடை தேடி அலைய வேண்டிய அவசியமில்லாமல் போய் விட்டது அதை பற்றிய உங்களது கருத்து:
புத்தக வாசனையுடன் ஒவ்வொரு பக்கமாய் புரட்டி படிக்கும் திருப்தி எக்காலத்திலும் வராது. என்னைப் பொருத்தவரை இது ஆரோக்கியமான விஷயம் அல்ல.
19.ஆண்லைனில் கதை எழுதி அமோசானில் போட்டு விடுவதால் பலரும் வீட்டில் இருந்து படித்து மகிழ்கின்றனர். அதனால் கடையில் விற்பனை செய்யப் படும் புத்தகத்திற்கு பாதிப்பு வருவதாக நீங்கள் நினைக்கிறீங்களா :
நிச்சயமாக!
20. ஆன்டி ஹீரோ கதைகளை நான் ஆர்சி மேம், உஷா மேம், கதைகளில் படித்திருக்கிறேன். இப்போது வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் அது போல எழுதினால் பலர் வரவேற்றாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் அது பற்றிய உங்களது கருத்து:
நம் மனதை பாதிக்கும் எதுவுமே படைப்பாக வருவதில் எந்த தடையும் இருக்கக்கூடாது. சிலரின் எதிர்ப்பு அலட்சிய படுத்த வேண்டியது. பலரின் வரவேற்பு இருக்கிறதே! ஆனால், எதை எழுதுவதாக இருந்தாலும், எழுத்து எல்லை மீறாது இருக்கவேண்டும்.
21. இன்று பல துறைகளில் பெண்கள் சாதித்து உயர்ந்த நிலைக்கு வந்து கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறார்கள் அத்தகைய பெண்களின் முன்னேற்றம் பற்றிய உங்களது கருத்து:
இன்று நிறைய வசதிகள் உள்ளன. அதை எப்படி பயன்படுத்தி உயர வேண்டும் என்று நாம் அறிவுறுத்த வேண்டிய அவசியமின்றி அவர்களின் சாதனைகளால் பிரமிப்பை ஏற்படுத்துகிறார்கள். அவர்களுக்கு அட்வைஸ் தேவை இல்லை. நம்மை கைப்பிடித்து புதிய உலகிற்கு அழைத்துச் செல்பவர்கள் அவர்கள். சாதித்த... சாதிக்க நினைக்கும், அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!
22. என்ன தான் சட்டம் ஒழுங்கு கடுமையாக்கப் பட்டாலும் சிறு குழந்தை முதல் பெரிய பெண்மணி வரை பாலியல் கொடுமையிலும், இள வயது பெண்கள் ஒரு தலை காதலிலும் சிக்கி சீரழிந்து உயிரிழக்கின்றனர் அதைப் பற்றி ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :
பிரம்மாண்டமாய் வளர்ந்து விட்ட டெக்னாலஜி முக்கியமான காரணம். வேறென்ன சொல்ல?!
23. Pdf திருட்டு பற்றிய உங்களது கருத்து :
என்னிடமே நிறைய திருடி இருக்கிறார்கள். அந்த வயிற்றெரிச்சலை எப்படி சொல்ல?!
24. இன்றைக்கு பல புதிய எழுத்தாளர்கள் எழுத்துலகில் சாதனை படைத்திட ஆசைக் கொண்டு அதற்காக முயற்சி செய்து வருகிறார்கள் .அவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்கள் இருந்தால் ஏதாவது இருந்தால் சொல்ல முடியுமா :
நிறைய பேர் நன்றாக எழுதுகிறார்கள். ஆரம்பிக்கும் முன் ஒன்லைன் போட்டுக் கொள்வது... லாஜிக், விறுவிறுப்பு போன்றவற்றை சரி செய்துக் கொள்ள முடியும். இன்றுவரை நான் கடைபிடிக்கும் விஷயம் அது!
25. உங்களது நாவல்களை தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறிங்களா:
எப்போதும் தொடர்ந்து படிங்க. புத்தகம் வாங்கி படிங்க.
அது தேய்ந்துக் கொண்டிருக்கும் பத்திரிகை தொழிலுக்கும் நல்லது
😂
26. பெண்ணல்ல நீயொரு பொம்மை நாவலின் கதாபாத்திரங்கள் இன்றளவும் மனதை தாக்கி வருவதால் எனது முதல் கதைக்கு அரவிந்தன், கோபி நாத், ரஞ்சனி , அனிதா கதாபாத்திரங்களை நான் எடுத்துக் கொண்டு உங்களது கதையின் சில வரிகளையும் சேர்த்து சற்று வித்தியாசமான முறையில் எழுதி ( 32 யூடி 56,000 ) வார்த்தையில் தொடர்கதையை முடித்தேன். அதற்காக ஒரு அறிமுக எழுத்தாளராக உங்களுக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
எனது ஆரம்ப வெற்றி உங்களால் தான் கிட்டியது. அதை எப்படி வாய் வார்த்தைகளால் சொல்வது என்று தெரிய வில்லை. தவறாக நினைக்க மாட்டீர்களே மேம்:
என் நாவல் ஒரு எழுத்தாளரை உருவாக்கியிருப்பதில் பெரும் மகிழ்ச்சியே! இந்த "பெண்ணல்ல நீயொரு பொம்மை...!"கண்மணி நாவல் போட்டியில் (1997) முதல் பரிசு பெற்றப் நாவல்...!!
நன்றி மேம்
ஹாய் பிரண்ட்ஸ்,
பிரபல எழுத்தாளர் R. மணிமாலா எழுத்துலகிற்கு வந்து 27 வருடங்கள் ஆன நிலையில் மொத்தம் 168 நாவல்களை வெளியிட்டிருக்கிறார்கள்.
அவர்கள் எழுதிய முதல் நாவல் "
"மன்னிக்க மாட்டாயா?'கண்மணி மாத இதழில் "அதன் பிறகு பெண்ணல்ல நீயொரு பொம்மை, அழகே உன்னை ஆராதிக்கிறேன், மலரே மௌனமா , திருமகள் தேடி வந்தாள், ஆகாய கங்கை அனல் மேல் பனித்துளி, .....போன்ற பல நாவல்களை வெளியிட்டிருக்காங்க.
அவர்களது முதல் சமயம் வந்த நாவல்கள் அனைத்தும் நான் சிறு வயதில் படித்தது தான். அப்போதெல்லாம் குடும்ப பாங்கான காதல் படைப்புகளாக தான் இருக்கும் ....
உங்களது விருப்பமான நாவலாசிரியர்கள் யாரெல்லாம் என்று கேட்டதற்கு "லட்சுமிம்மா, சிவசங்கரி, பிகேபி, ப்ரியா கல்யாணராமன்!" என்று சொல்லியிருக்கிறார்கள்.
மேற்பட்ட தகவல்களை அவர்களே சொல்லியிருப்பதால் அதைப் பற்றி நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன்....
நான் கேட்டு கொண்டதற்கு இணங்க உடனடியாக சம்மதம் தெரிவித்து ஒரு தோழமையுடன் பழகிய உங்களது குணம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது மேம். என்னுடைய விருப்பமான எழுத்தாளருடன் பேசியதையும், அவருடன் இப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதையும் நினைத்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிடவும், விருதுகள் பல வாங்கிடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐💐💐
இருபது வருடங்களுக்கு முன்பு வெளியான நாவல்களை மறுபடியும் அச்சில் வார்த்து விற்பனை செய்தால் நன்றாக இருக்கும் என்று நான் பல சமயம் நினைப்பதுண்டு. ஏனென்றால் கதையும் காட்சிகளும் விழிகளுக்குள் வலம் வந்தாலும் நாவலின் பெயர் மறந்து போய் விடுகிறது.
இப்படி விற்பனை செய்வதன் மூலம் என்னைப் போன்ற பல வாசகர்கள் படித்து பயன் பெறுவார்கள் . அது போல நூலகங்களை தோற்று விற்று அங்கு எல்லா விதமான நாவல்களையும் வைத்திருந்தால் ,பழைய எழுத்தாளர்களை உடனுக்குடன் அடையாளம் கண்டு கொள்வதோடு, அந்த கதைகளை எழுதியவர்களுக்கும் நிறைவை கொடுக்கும், என்னைப் போன்ற வாசகர்களும் படித்து பயன் பெறுவோம் இதற்கு ஏற்பாடு செய்யப் பட்டால் மிக்க மகிழ்சியடைவேன்......
இன்றைய எழுத்தாளரின் நாவல், தொடர்கதை களைப் படித்திருப்பவர்கள் அதைப் பற்றிய உங்களது கருத்துக்களை தாராளமாக பகிர்ந்து கொள்ளுங்கள். அல்லாதவர்கள் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவியுங்கள்
நேரடியாக தங்களது படைப்பின் விமர்சனங்களை பார்த்து அவர்களும் மகிழட்டும்.
நன்றி


Comments
Post a Comment