#எழுத்தாளர் அறிமுகப்படலம்
#சீசன் இரண்டு : 16
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய அறிமுக எழுத்தாளர் வேதா விஷால் …
அவர்களைப் பற்றிய நேர் காணல் :
பெயர் : சுதா
சொந்த ஊர் : தஞ்சாவூர்
படிப்பு : M A B Ed.
பணி : ---
தளம் : Prema Novels, Sangamam Novels, Ptatilipi
அமேசான் பெயர்: Vedha Vidhal
******
சொந்தப் பெயரில் கதை எழுதுகிறீர்களா அல்லது புனைப்பெயரா இது : புனைப்பெயர்
*****
உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:
ம்...நத்திங் மச். ரொம்ப ட்ரெடிஷனலா வளர்ந்தேன். பாட்டு, வீணை, கோலம், பூ தொடுப்பது, ஸ்லோகம் சொல்வது, புக் படிப்பது… இப்படி. திருமணமான பின் ஏர்ஃபோர்ஸ் வாழ்க்கை நிறைய நிதர்சனங்களை, வாழ்க்கையில் முன்னுரிமையை (priorities) கற்றுக் கொடுத்தது.
கணவர் ஒரு விமானப்படை அதிகாரி.
ஒரு மகள், ஒரு மகன்.
…
அருமை
******
நீங்கள் நாவல் எழுதும் போது உணருவது என்ன :
பொறுப்புணர்வும், சில வரிகளுக்கான எதிர்வினை எப்படி இருக்கும் என்பதும்.
******
ஒரு எழுத்தாளனின் எழுத்துக்கள் எப்படி இருக்க வேண்டும். அதை வாசிக்க ஆரம்பிக்கும் போதும் முடிக்கும் போதும் என்ன விதமான உணர்வுகள் மனதில் தோன்ற வேண்டும் :
தி ஜானகிராமனின் கதைகளைப் போல தொடக்கம் முதல் முடிவு வரை அதிக மாற்றங்களோ, அதிரடிகளோ இல்லாது நீரோடையைப் போல் இருக்க வேண்டும். சம்பவங்களை விட கதாபாத்திரங்களே மனதில் நிலைக்க வேண்டும்.
******
போட்டி கதைகளில் பங்கு பெற்ற அனுபவம் இருந்தால் சொல்ல முடியுமா :
என் முதல் கதையே பிரேமா நாவல்ஸில் நடந்த சிறுகதைப் போட்டிக்குதான் எழுதினேன். இறுதிச் சுற்றுக்கு தேர்வானது. இதுபோல் இன்னும் இரண்டு இடங்களிலும் கலந்து கொண்டேன்.
சங்கமம் தளத்தின் எக்ஸ்பிரஸ் நாவல் போட்டியில் (அ)த்வைதம் கதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது.
உண்மையில் நிறைய பாராட்டு கிடைத்தாலும், போட்டிக்கு எழுதுவது சிறிது அழுத்தத்தை தருகிறது.
….
நிஜம் தான். எழுதும் போதும், எழுதி முடித்த பிறகும் கூட
******
போட்டி கதைகளில் எழுதப் படுகின்ற எழுத்து எதை பொறுத்து இருக்க வேண்டும்:
எந்தக் கதையுமே கதையைப் பொறுத்துதான் இருக்க வேண்டும்.
******
கட்டுப்பாடு விதிக்கப்படுகின்ற இடத்தில் எழுத்தாளனின் கற்பனை, கதையின் கரு எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் :
கற்பனைக்கென்ன கட்டுப்பாடு? போட்டிக்கென எழுதுகையில் கதைக் கரு, கற்பனை இரண்டுமே நடைமுறையோடு ஒத்து வந்தால் நன்று.
*****
உங்களது விருப்பமான எழுத்தாளர்:
கல்கி முதல் கமலி வரை அனைவரும்.
*****
உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:
மகிழ்ச்சியாக இருக்கிறது. கலைத்து கலைத்து ஆடும் இந்த ஆட்டம் எனக்குப் பிடித்திருக்கிறது.
…
🙂🙂🙂
*****
நீங்கள் எழுதிய முதல் நாவல்:
வரன் தந்த சாமி
*****
உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க:
திமிருக்கு அரசன்
*****
நீங்கள் எழுதிய மொத்த நாவல் :
ஒன்பது நாவல்கள், மூன்று குறுநாவல்கள். பத்தாவது நாவல் ஆன் கோயிங்.
******
எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது:
ஒன்றரை வருடங்கள்
*****
நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து தொடர்கதை or நாவல்:
இடைவெளி குறைகையில்
******
உங்கள் நாவல்கள் சிலவற்றின் பெயர்கள் :
சொப்பன சந்தரி
வரன் தந்த சாமி
திமிருக்கு அரசன்
மண் சேரும் மழை
நெஞ்சம் திண்டாடுதே
நீலவான ஓடையில்
கற்பூரம் நாறுமோ
உடம்(ன்)படு மெய்
(அ)த்வைதம்
கண் மூடிடும் மின்னல்
கருகத் திருவுளமோ
அங்கீகாரம்
இடைவெளி குறைகையில்
….
அருமையான பெயர்கள் தேர்ந்தெடுப்பு
****
உங்கள் நாவலை வாசித்தால் அதில் என்ன மாதிரியான செய்திகள், கருத்துகள் நிறைந்து காணப்படும் :
என் வீடும், வாழ்க்கையும் எனக்கு கற்றுக் கொடுத்த ஒரே பாடம் BE FLEXIBLE. ACCEPT PEOPLE.
அனுசரி. ஏற்றுக்கொள்.
*****
உங்களது நாவலுக்கு வந்த விமர்சனம், கருத்துப் பரிமாற்றங்களைப் பற்றி சொல்ல முடியுமா :
இதுவரை நேர்மறையான விமரிசனங்களைத்தான் சந்தித்திருக்கிறேன். மீதியை வாசகர்களிடம்தான் கேட்க வேண்டும்.
******
Police / Crime / வரலாறு சம்பந்தமான நாவல் எழுதிய அனுபவம் இருக்கிறதா :
எழுதும் எண்ணம் இருக்கிறது.
*****
நீங்கள் எழுதிய நாவலில் உங்களுக்கு பிடித்தது, வாசகர்களால் கொண்டாடப்பட்டது எது:
கற்பூரம் நாறுமோ. எனக்கு நெருக்கமான குடும்பத்தில் நடந்த சம்பவம் அது.
நெஞ்சம் திண்டாடுதே, கண் மூடிடும் மின்னல் இரண்டும் பெரிதும் எதிர்பார்ப்புடன் ரசிக்கப்பட்டது.
*****
இதுவரையில் உங்களது நாவலுக்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்திருக்கிறதா :
இல்லை.
******
உங்க நட்பில் உள்ள எழுத்தாளர்கள்
இப்போது முகநூலில் குடும்ப நாவல் எழுதும் அநேக எழுத்தாளர்களும் தொடர்பில் இருக்கிறார்கள். அதிலும், எனக்கு முன்பிருந்து எழுதுபவர்கள் அவர்களே ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்தால், மிக மகிழ்ச்சியாக உணர்வேன்.
*****
வாசகர் கேள்வி பதில் :
ஒரு வாசகரின் கேள்வி இது " ஒரு படைப்பை வாசிக்கும் போது அது எழுத்தாளனின் கற்பனையாக இருக்க வேண்டுமா அல்லது அசை வாசிப்பவரின் கற்பனையாக இருக்க வேண்டுமா:
50:50
******
Vedha Vishal அவர்களின் கதைகளை படித்ததுண்டு. குடும்ப பாங்க கதைகள் அதில் ஒரு ஒரு கதாப்பாத்திரம் அழுத்தமாகவும் அவர்களின் தேவையை சரியாக பதிவதில் அருமையாக இருக்கும்.
அனைத்து கதைகளிலுமே ஒரு விருவிருப்பு எதார்த்தம் கண்டிப்பாக இருக்கும்.
தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியாது.
அவருக்கான என் கேள்வி: ஒரு கதாப்பாத்திரத்தை மிகத் தெளிவாக பதிவு செய்யறீங்க.. அதுக்கான home works பண்ணுவீங்களா?
கண்டிப்பா. நான் பார்த்த, பார்க்கும், பழகிய மனிதர்களே என் கதை மாந்தர்கள். அப்படியே நகலெடுக்காமல் சில நேரத்தில் வேறொருவரின் சிற்சில குணாதிசயங்களை இணைப்பதும் செய்கிறேன்.
******
சமீபமா தான் வேதா விஷால் அக்கா கதைகளை படித்திருக்கிறேன்...அவங்க எழுத்து நடை பிடிக்கும்...அதோட அவங்க வைக்கிற செல்லப்பேர்கள் ரொம்ப பிடிக்கும்...புது கதைல என்ன செல்லப்பேர் வைப்பாங்கனு ஆர்வமா இருந்திருக்கேன்...எபி எப்ப போடுவாங்கனு வெயிட் பண்ணி படிச்சிருக்கேன்..ஒவ்வொரு எபிலயும் நிறைய தகவல் தருவாங்க...
என்னோட கேள்வி..
எல்லா தகவல்களையும் திரட்டிட்டு தான் கதை ஆரம்பிப்பிங்களா இல்ல எபி எழுதமுன்ன தான் தகவல் சேகரிப்பிங்களா
Vedha Vishal :
கதை, கேரக்டர், அவர்களின் படிப்பு, வேலை, சூழலை முடிவு செய்து விட்டால் தகவலை திரட்டிக் கொள்வேன். விரல் நுனியில் உலகம்!
*****
முதன்முதலில் தங்களுக்கு வந்த எதிர் மறையான விமர்சனம் எது எதற்காக வந்தது ... அடுத்து உங்கள் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் உண்மையில் இருப்பவர்களா இல்லை கற்பனையா😂😂😂 imagination + real ah :
இதுவரை அதிகம் வந்த எதிர் மறை விமர்சனம் சூர்யா என்னும் கதாபாத்திரத்திற்குதான். எதிர்மறை என்பதை விட கண்டனம் என்று சொல்லலாம்.
என் எல்லா கதைகளிலுமே குறைந்தது ஒரிரு கேரக்டர்களும், முக்கியமான கருவும் நிஜமே. சூழ்நிலைகள், மொழிகள், சமுக நிலைதான் வேறு. சில கதைகளில் வெவ்வேறு உண்மை மனிதர்களை ஒன்றாக இணைத்திருக்கிறேன்
*****
கதையை முடிவு செய்து விட்டு, வாசகர்களின் கருத்துக்களை பார்த்து கதையின் போக்கினை மாற்றியது உண்டா?
இதுவரை இல்லை.
****
உண்மை சம்பவத்தின் அடிப்படையில் கற்பனையை கலந்து எழுதும் போது, நாம் சொல்ல நினைத்த விசயம் சரியான முறையில் சொல்ல முடிகிறதா?
உறுதியாக சொல்ல முடியவில்லை. பஃபே முறைக்கான காலம் இது. விருப்பமும், உண்பதும், அவரவர் ரசனைக்கு.
*****
கதைக்கான எதிர்மறை கருத்துகள் அல்லது logic mistakes பொது வெளியில் விவாதிக்க படுவது ஆரோக்கியமான விசயம் தான் என்று நினைக்கிறீர்களா?
எழுத்தாளராக NO
வாசகராக YES
******
கொஞ்சம் ஏடாகூட மான கேள்விகள் என்று நினைக்கிறேன். பதில்கள் தருவது அவரவர் விருப்பத்தில் மட்டுமே... Not compulsory 👍 best wishes authors 👍👍
*****
ஒரு சில எழுத்தாளர்கள் திருமணம், வளைகாப்பு, பிறந்த நாள் என எது வந்தாலும் வைரத்தையே சூட்டி அலங்கரிக்கின்றனர் அது ஏன்:
நம்மால முடியாததை கற்பனையிலாவது அனுபவிக்கத்தான்😍
*****
ஆடி கார், பென்ஸ் தான் புகழ் வாய்ந்ததா... மற்ற கம்பெனி கார்களின் பெயர்கள் பிரபலமானதாக பேசப்படவில்லையே அது எதனால் என்று நினைக்கிறீங்க
என் கதைகளில் ஆடி, பென்ஸ் எல்லாம் கிடையாது. நம் வீட்டு ஆண்கள்தான் ஹீரோக்கள்.
கதைக்கு தேவையானால் ரோல்ஸ் ராய்ஸே வாங்கித் தரலாம்.
****
உங்களது படைப்புகளை வாசித்து வருபவர்களுக்கு சொல்ல நினைப்பது:
நன்றி நட்புக்களே🙏🙏💚⚘💚
******
தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல நினைக்கிறீங்களா :
கடவுளுக்கும், வாசகர்களுக்கும் நன்றி🙏
மிக்க நன்றி சிஸ்டர்,
உங்களுடைய பதில்கள் அனைத்தும் அருமையாக இருந்தது. மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிட மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய எழுத்தாளரின் நாவலை வாசித்தவர்கள் அதைப் பற்றிய கருத்துக்களை தெரிவிக்கலாம். மற்றவர்கள் அவரது திறமையை வாழ்த்தலாம்.
நன்றி
சுதா பிரேமா சைட்டில் எழுத ஆரம்பிக்கும் போதிலிருந்தே கதைகளை படித்து வருகிறேன். நாளுக்கு நாள் எழுதும் நடையில் மெருகு ஏறிக் கொண்டு இருக்கிறது.அவர்கள் வைக்கும் செல்லப் பெயர்கள் சூப்பரா இருக்கும்.எல்லா கதைகளும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
ReplyDeleteI am big fan of her story the way of writing is amazing
ReplyDeleteசுதா பிரேமா சைட்ல எழுத ஆரம்பித்ததிலிருந்தே நான் தீவிர ரசிகை.அவரோட செல்லப் பெயர்கள்👌👌👌👌.
ReplyDeleteகோதை சுரேஷ்..
அக்கா அருமைகா
ReplyDelete