தீபா கோவிந்த்

 #எழுத்தாளர் அறிமுகப்படலம்


#சீசன் இரண்டு


ஹாய் பிரண்ட்ஸ்,


இன்றைய அறிமுக எழுத்தாளர் தீபா கோவிந்த் …


அவர்களைப் பற்றிய நேர்காணல் :


பெயர் :  தீபலெஷ்மி



சொந்த ஊர் : பிறந்தது பொதிகை


வாழ்வது நெல்லை


படிப்பு : இயற்பியல் 


பணி : உணர்வுகளை செந்தமிழ்வழி செலுத்துகிறேன் 


தளம் : SMS 


அமேசான் பெயர்: இன்னும்  அந்தப் பக்கம் போகவில்லை 


******


உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல  முடியுமா 


 என் மனதின் உணர்வுகளை சில உண்மைகளை தழுவி விரியும்  காட்சிகளை வர்ணிக்க முயல் சற்றே  வித்தியாசமாக எனது பாணியில் 


*****


உங்களது விருப்பமான எழுத்தாளர்: 


எல்லாரோடதும் பிடிக்கும்  ஆனா  எல்லாம்  பிடிக்காது. 


******


உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா: 


எனது முதல் முயற்சி புத்தகமாக வெளிவந்துள்ளது அவ்வளவுதான் 


*****


நீங்கள் எழுதிய முதல் நாவல்: களவறியா காதலன் நான் 


*****

உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள்: 


 வட்டாரத்தில்  நிறைய பேர் இருக்கிறார்கள்  ஆனால் நெஞ்சத்திற்கு நெருங்கியவர்கள் சிலர் 


******


நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள்:


என்னை ஈர்க்கும்  எதுவும்  


******


உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க: 


தெரியலை படிச்சவங்கதான் சொல்லனும் 


******


நீங்கள் எழுதிய மொத்த நாவல் :


ஏழு


*******


எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது:


மூன்று 


******


நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து தொடர்கதை or நாவல்:


அணங்குடை முந்நீர்  நேரடியாக புத்தகத்திற்கு 


தடாகக்கரை 


*******


உங்கள் நாவல்களின் பெயர் :


உங்களது நாவல்கள் சமூகப் படைப்பாக இருக்குமா அல்லது காதல் நகைச்சுவை குடும்பம் இதை பொறுத்து இருக்குமா


களவறியா காதலன் நான் 


ஆஸ்பெர்ஜர்ஸ் பற்றிய  கதை


வான்காதல் மலர் நேசம் 


விமான படை வீராங்கனை மலர் விவசாயி 


மற்றும் ஹோட்டல் குண்டுவெடிப்பு சம்பவம் என நகரும்


நங்கை என் நம்பி


சீரியல் கில்லர் கலந்த  சஸ்பென்ஸ் கதை


மயங்கொல்லிபிழைகள்


ஆண் விபச்சாரி மற்றும் தெற்கு சூடான் பிரச்சினை எனும் வகையில் காதல்  களம் கொண்டு நகரும் 


மாமழை போற்றுதும் மாமலை போற்றுதும் 


மலேசிய  இந்திய தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பற்றிய கதை 1930 மற்றும் தற்போதைய என காலங்களில் பயணிக்கும் 


வேதிக்கூடுகை விதியெனில் நேசப் பொருண்மை அழியுமோ 


லிவிங் டு கெதர் அடிப்படையிலான கதை


தடாகக்கரை 


பல்லவ அரசன் ஒருவரை பற்றிய  வரலாற்று நாவல் 


பதங்களின் தோரணம் (கவிதை  தொகுப்பு)ongoing 


மனம் ஒன்று உணர்வுகள் பல அது மாதிரி  கதை ஒன்று அதன் மூலம் நானும் காதல் சமூகம்  நகைச்சுவை வரலாறு  என விரிகிறேன். 



வாவ்!! மிகவும் அருமை சிஸ்டர்


******


நீங்கள் தொடர்ந்து வாசிக்க விரும்பும் நாவல்கள்:


 இது தான்  என வரையறுத்து கொள்வதில்லை. வாசிக்கும் மனநிலை நேரம் அவ்வளவுதான் 


******


நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்?


எழுதிய எதுவுமே எனக்கு  பிடித்தது தான்  எழுதி  முடித்ததும் கவர்ச்சியில்  இருந்து  வெளியே  வந்தால் தான்  வேறு ஒரு கதாபாத்திரத்தின் கவர்ச்சிக்கு  உட்பட முடியும். 



நிஜம்தான்


*******


உங்கள் நாவல் or தொடர்கதை எது  வாசகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது, அதற்கான காரணத்தை விளக்க முடியுமா :


நான் இன்னும்  பிரபலமானவர்கள் சங்கத்தில்  இல்லை ஆதலால்  வாசகர்கள்  பேசுவதை நான் அறியவில்லை.  


*****


போட்டி கதைகளில் பங்கேற்ற அனுபவம் இருக்கிறதா:


SMS அழகிய சங்கமம் 2


*****


உங்களது நாவல் எழுதும் பழக்கம் எப்படி ஆரம்பமானது. அதன் தூண்டுகோல் யாரென்று சொல்ல முடியுமா:


எனது முகநூல் நண்பர்கள் ஜெயந்தி  கவிதா தஹி அகிலா பவானி  ரூபி பானுமா புஷ்பா  கலை  போன்றவர்கள்  எனது  சில கவிதைகளை படித்துவிட்டு  கதை எழுத  ஊக்குவித்து எழுதிய பின் மனம்  புண்படாமல் கருத்துகளும் கூறி இன்றுவரை  துணைநிற்பவர்கள்


 மேலும் கேட்டதும் திரி அமைத்து ஊக்குவித்ததோடு அல்லாமல் எனது புத்தகத்தையும் வெளியிட்டு தந்த எனது எழுத்துலக தாய் ஸ்ரீகலா அவர்கள்.


மற்றும் எழுத்தாளர்கள் தாமரை சிவநயனி மாலினிராஜா ப்ரஷா ஆண்டாள்அருகன்   இன்னும்  சொல்லப்படாத நண்பர்கள் 


******


நாளிதள்களில் கதை எழுதிய அனுபவம் இருந்தால் அதைப் பற்றி சொல்லுங்க :


இல்லை 


******


நாவலில் வரக்கூடிய எந்த மாதிரியான காட்சிகள் நம்முடைய மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்னு நினைக்குறீங்க:


அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம் மனம் மற்றும்  சூழல் சார்ந்தது அம்பு ஒன்று தான் எய்பவரும் ஒருவர் தான் படும் தளம் இரும்பா இலையா என்பதை  பொறுத்து மாறுபடும். 


******


தொடர் கதையின் ஆரம்ப அத்தியாயங்கள் எப்படி இருக்க வேண்டும்:


 படிக்கற மாதிரி 


*******


ஒரு நாவல் or தொடர் கதையை கையில் எடுத்து வாசித்தவுடன் எதனால் தொடர்ந்து வாசிக்க ஆசைப்படுகின்றனர்.?, ஏன் சலிப்பாக இருப்பதாக நினைத்து மாற்றி விடுகிறார்கள்


அதான்  சொல்லிட்டீகளே சலிப்புன்னு 


******


உங்களது நாவல்களை தொடர்ந்து வாசிப்பவர் களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :


ஆயிரக்கணக்கான  எழுத்தாளர்களுக்கு மத்தியில்  எனது எழுத்துக்களையும் பல்வேறு சூழல்களுக்கு இடையில் நேரம் எடுத்து படித்து எனக்காக மெனக்கிட்டு  கருத்திடும் அல்லது அமைதியாக கடந்து போகும் 


அந்த  மனசு இருக்கே  மனசு  அதான்  சார் கடவுள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 


******


வாசகர்களின் கேள்வி பதில்கள் :


ஒரு சில எழுத்தாளர்கள் ஏன் மற்றவர்களின் கதைகளை படிப்பதில்லை?


தெரியலையே நான்  எல்லாரோடதும் வாசிப்பேன் ஆனால்  உள்ளிழித்து கொள்வதும் தக்கவைத்து கொள்வதும் அவர்களது  திறமை


*******


சினிமா பாடல்களை ஏன் தலைப்பா வைக்கிறாங்க? கதைக்கு பொருத்தமா தலைப்பு வைக்க தெரியாதா?


அத அவங்ககிட்டதான் கேட்கனும் நான்  வைக்கறதில்லை. எனது தலைப்பு கதையை ஒரிரு வார்த்தைகளில் சொல்லும். ஆனால் எல்லாரும்  ஏன்  சோறே சாப்பிடறோம் பழிகிடுச்சி


ஏன் புது உணவ தேடறோம் வேறு சுவையதேடி


இதில் எத்தனை முரன் மற்றும் உண்மை இருக்கோ அத்தனையும் அதில் இருக்கு 


******


நிறைய புது எழுத்தாளர்கள்  முதல் கதையிலோ சும்மா அசத்துறாங்க அவர்களை கண்டு பிடிப்பது எப்படி :


உங்களது ஆர்வம்  மட்டும் தான் கண்டுபிடிக்க  உதவும் 


*****


எதிர்மறை விமர்சனம் பற்றிய உங்கள் கருத்து :


அது வியாபரம் எனில் கொள்பவர்  கொடுப்பவர் இடையிலானது. அறிவார்ந்தது எனில்  பொது வெளியில் தங்களது எல்லையை அறிந்தவரும் அறியாதவரும் உண்டு


...


நிச்சயமாக


*****


பொங்கல் எதற்காக போடப்படுகிறது (தைப்பொங்கல்) அல்ல 🤣🤣🤣 கதை வாசிப்பவர் கொடுக்கும் பொங்கல்:


வலசை போகும் மிருங்கள் அதற்காக காத்திருக்கும் மிருகங்கள் இரண்டிற்கும்  அவற்றுக்கான நியாங்கள் உண்டு


*******


எதிர்மறை விமர்சனத்தை ஒரு எழுத்தாளன் நேரடியாக கையாள்வதை விட்டு, தன்னுடைய நட்புகளை வைத்து பஞ்சாயத்து செய்வதாக வருகின்ற செய்தி குறித்த தங்களுடைய கருத்து :


நமது  சமூகமும் காடும் அதன் விலங்குகளைபோலத்தான் சிங்கம்  புலி நரி என பலவிதம் எதுவும்  அதனுடைய  குணத்துடன் தான் இருக்கிறது. அவ்விதம் இருந்தால்தான் காடு . ஆனால் எதுவும் அதனுடைய எல்லைக்குள் இருக்கும் வரை பிரச்சினைகள் குறைவு தாண்டும் போது தாக்கப்படும் அபாயம் அதிகம். 


*****


அருமையான உதாரணம் சிஸ்டர் 


மிக்க நன்றி🙏🙏🙏

உங்களது பதில்கள் அனைத்தும் எளிமையாக இருந்தது. 


மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிட மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐


ஹாய் பிரண்ட்ஸ்,


இன்றைய எழுத்தாளரின் கதையை வாசித்தவர்கள் அதைப் பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம். மற்றவர்கள் வாழ்த்தலாம்..


நன்றி

Comments

  1. அருமை அருமை.. எளிமையான கூர்மையான பதில்கள்.

    ReplyDelete
  2. தெளிவான பதில். எழுதாளர் தன் நிலையில் சரியாக நிற்கிறார். அவரின் பதில்களே தெளிவாக காட்டுகிறது.
    இன்னும் சிறந்த படைப்புகள் வர எனது வாழ்த்துகள்

    ReplyDelete

Post a Comment