சௌந்தர்யா உமையாள்

 #எழுத்தாளர் அறிமுகப்படலம்


#சீசன் இரண்டு


ஹாய் பிரண்ட்ஸ்,


எழுத்தாளர் அறிமுகப்படலத்தில் இன்று அறிமுகப்படுத்தப்போவது சௌந்தர்யா உமையாள் …


அவர்களைப் பற்றிய நேர்காணல் இதோ:


வணக்கம்!


பெயர் : சௌந்தர்யா


சொந்த ஊர் : குசும்புக்கு பெயர் பெற்ற ஊர் தாங்க, கோயம்புத்தூர் 😁


படிப்பு : BSc Mathematics, Diploma in Yoga.


பணி : இப்போது நான் வேலையை விட்ட பட்டதாரி 😎


தளம் : வைகை தமிழ் நாவல்கள் மற்றும் ப்ரதிலிபி.



அமேசான் பெயர்: சௌந்தர்யா உமையாள்



****


உங்களது முதல் படைப்பு : 


விந்தையின் விடைப்பாகன் (நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது)


அதன் பின்னர் சில சிறுகதைகள், குறுங்கதைகள்..



*****


தற்சமயம் எழுதிக் கொண்டிருப்பது : ஜாத ரூபம் - குறுங்கதை


*****


மொத்தம் எத்தனை நாவல்கள் எழுதியிருக்கீங்க: 


1 நாவல் தாங்க.. ஆனா 3 ongoing ல இருக்கு 🙃


*******


உங்களது படைப்புகளின் பெயர்கள் : 


விந்தையின் விடைப்பாகன்


சிவகாமவள்ளி 


விரல்கள் மீட்டாத இசை நீ! (Ongoing)


அனிச்சவிழி அழகினிலே காதல்


மங்கையவளின் குருதி காத்திருப்பு


ஜாத ரூபம்


….


அழகான பெயர்கள்


****


உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:


எல்லாத்தையும் பாசிட்டிவ்வா பார்க்கக் கூடய ஆள். நிறைய புதுப் புது விசயங்கள் கத்துக்கனும் என்ற தீரா தாகம் எப்பவுமே என்னிடம் உண்டு.


வீட்டில் மூத்த பிள்ளை, பெற்றவர்களுக்கு செல்ல பிள்ளை. வீட்டில் எல்லாரும் என்னை எடுத்துக்காட்டா பேசுவாங்க 🤭 அதுக்கு தக்க இருக்கனும்னு தினமும் போராடும் நபர்.


அவ்வளவு தாங்க..


*****


நீங்கள் எழுத்துலகை தேர்ந்தெடுப்பதற்கான காரணம் : 


எழுதனும்னு வரல.. ஒரு உந்துதல். அம்மா நல்ல கவிதைகள் எழுதுவாங்க, அது இருந்தாலும் எழுத்தாளர். கௌரி முத்துக்கிருஷ்ணன் அவர்களின் கதைகள் படித்த பின் ஒரு தாக்கம். அதன் காரணமாக எழுத தொடங்கிய தான் என் பயணம்.


என் எழுத்தை செதுக்க உத்வேகம் கொடுத்தவர் கௌரி அக்கா. நல்ல வழிகாட்டி எனக்கு.


தவிர, சமூக சார்ந்த கதைகளை சொல்ல வேண்டும் என்ற எண்ணமும், என் சிந்தனைக்கு உயிர் கொடுக்க எழுத்தை கையில் எடுத்தேன்.


….


அருமை


*****


உங்களது கனவு லட்சியம் என்று ஏதாவது இருக்கிறதா :


கனவு, லட்சியம் இது ரெண்டுமே இல்ல. அப்படி எதுவும் நான் மைண்ட்'ல வெச்சுக்கிட்டதும் இல்லைங்க.


எனக்குள்ளையே ஒரு short span வைச்சு, நினச்சத முடிச்சிடுவேன். அவ்வளவு தாங்க..


******


உங்கள் முதல் படைப்பை பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா:


முதல் படைப்பின் தாக்கம், இப்போ எல்லாருக்குமே தெரிந்த PPT தான், அதாவது PostPartum Depression. 


சில கதைகள் படித்த தாக்கம், அதை வேறு விதமாகவும் சொல்லலாமே'னு எழுத ஆரம்பித்த கதை தான், விந்தையின் விடைப்பாகன். 


சில காரணமாக இப்போ பாதில நிக்குது.. சீக்கிரம் தொடங்கிருவேன் 💛



நல்லது


******


நீங்கள் எப்போதில் இருந்து கவிதைகள் எழுத

ஆரம்பித்தீர்கள் :


கவிதைகள் எழுத உந்தியது அம்மாவின் எழுத்துக்கள் தான். நான் ஒரு புகைப்பட விரும்பி, அதை வைத்தே சில கவிதைகள் எழுதி பின் அதையே தொகுப்பாகவும் பலதை கிறுக்கியும் உள்ளேன்.


******


கவிதை எழுத என்ன தெரிந்திருக்க வேண்டும் :


எழுத தெரிந்தாலே போதும் அக்கா. இது தேவைனு எதும் வரையறுக்க தேவையில்லை. ஒரு சின்ன விசயம் மனதில் தோன்றினாலும் அதற்கு எழுத்து வடிவம் கொடுங்க, அதுவே அழகான ஒரு கவிதையா மாறிடும் 💛


முழுமையற்ற வாக்கியங்கள் கூட சில நேரம் கவிகள் தான்!



அருமையாக சொன்னீங்க


*****


குறுங்கதை எழுதிக் கொண்டிருக்கும் நீங்கள் பெரிய நாவல்கள் எழுதும் ஆசை இருக்கிறதா :


சொல்ல வேண்டிய கருத்தை சுறுங்க, நச்சுனு சொல்லனும். அதுக்கு எத்தன வார்த்தைகள் வருமோ அதுவரைத் தான் எழுதுவேன். தவிர பெரிசா எழுதர ஆசையில்லைங்க அக்கா.


படிக்கறவங்களும் சலிப்பு வரமா, நம்ம மனசுக்கு திருப்தி வர மாதிரி எழுதனும். அதுதான் என் எண்ணம். 



🙂🙂🙂


******


புரூப் ரீடிங் பற்றி சொல்ல முடியுமா : 


நுட்பமாக செய்ய வேண்டிய வேலை. பொறுமையா ஒரு பக்கத்தை இரு தடவை படித்து பிழைகளைத் திருத்த வேண்டும்‌. நேரம் அதிகம் தேவைப்படும், அதே சமயம் பொறுமையும் அதிகமாகவே வேண்டும். 


*****


நாவல்களில் வரக்கூடிய பிழைகள், வார்த்தை கோர்வு பற்றிய உங்களது கருத்து :


பிழைகள் இயல்பு தான். ஆனா வார்த்தைக் கோர்வு இல்லை என்றால் அர்த்தமே சில சமயம் மாறி விடும். இப்போ நாங்களே பிழைத் திருத்துறோம்'னா, அந்த இடங்களில் ரொம்பவே கவனமா இருப்போம்.


எழுதிய பாங்கு ஒரு விதமாகவும், திருத்திய பாங்கு வேறாக இருந்தாலும் எல்லாமே வேஸ்ட் ஆகிடும்.


******


சிறுகதைக்கும், குறுங்கதைக்கும் உள்ள வித்தியாசமாக சொல்ல நினைப்பது:


எண்ணிக்கையின் அடிப்படையில், 2000 வார்த்தைகளுக்குள் இருப்பவை சிறுகதைகள். 


அதுவே ஒரு 7000 வார்த்தைகளுக்கு உள்ளே இருப்பவை குறுங்கதைகள். 


ஒரே கோட்டில் எழுதாம, பகுதி வகையா நா குறுங்கதைகளை எழுதுவேன்.


*******


நாம் சொல்ல வருகின்ற விசயத்தை வாசகர்களின் ரசனைக்கு ஏற்ப சொல்வதெப்படி :


அந்த வித்தை எனக்கு இன்னும் தெரியலைங்க அக்கா 🤭‌ எனக்குனு ரசிகர்கள் யாரும் இல்லை. (அம்மா, சித்தி தவிர 😝)


ஆனா ரொம்ப வளவளனு ஜவ்வா இழுக்காம சுறுங்க, எதார்த்தமா சொன்ன போதும்.



😂😂😂


******


இன்றைய அறிமுக எழுத்தாளர்கள் ஒரு சிலரது எழுத்துகள் பொதுவெளியில் விமர்சிக்கப்படுவதற்கான காரணமாக ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :


பெரும்பாலான கருத்து, சின்ன வயசுல எப்படி உணர்வு பூர்வமா எழுவாங்க, நிறைவா எழுவாங்க -ன்ற கேள்வி. (நான் கேட்ட வரை) எண்ணைத்தப் பொறுத்து அது மாறவும் செய்கிறது.


அனுபவம், ஒருவரின் எழுத்தில் நன்கு தெரியும். சின்ன வயசுலேயே உணர்வு பூர்வமாக கதைகளைக் கொடுக்க முடியாதா? என்பதே என் கேள்வி.


இதில் வயது என்பதை விட, அவர்களின் எழுத்து கொடுக்கும் தாக்கத்தை பார்த்தாலே போதுமானது. 


வயசு பார்த்து படிச்சா, நல்ல கதைகள் பலவற்றை வாசகர்கள் படிக்க தவறவிடுவார்கள் 😝



நிஜம் தான். ஆனால் இது அவர்களுக்கு தெரியலயே..


******


நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்:

 

சிவகாமவள்ளி, என் முதல் நாவல் 💛 எப்பவுமே எனக்கு ஸ்பெஷல். உண்மை கதைனால இருக்கலாம் ஆனா அதில் வந்த ஒரு ஒரு கதாப்பாத்திரமும் எனக்கு ரொம்ப பிடிச்சு ரசித்து எழுதினேன்.


இப்போ ஒரு குறுங்கதை, புளிகமழகி'னு.. அதில் வரும், சுந்தர யாழினி 💛


******


அன்றைய நாளில் நாவல்களை புத்தகமாக வாசித்து வருவதற்கும் இன்றைய நாளில் ஃபோனில் வாசிப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன :


அப்போ கண்களுக்கு பாதிப்பு இல்லை. இப்போ ஸ்மாட் ஃபோன் பயன்படுத்தரனால கண்களுக்குத் தான் நிறைய பாதிப்பு வருது. அதான் வித்தியாசம் 😂


புக் படிச்சா அதில் வரும் சுகம் தனி, ஃபோன்'னா அது ஒரு புதிய வகை உணர்வு. 


தவிர எதில் படித்தாலுமே உணர்வுகளும் ஈடுபாடு ஒன்று போலவே உள்ளது என்பது என் கருத்து.

 

….


கட்டாயம்


*******


நாவல்களில் புகுத்தப்படும் திரைப்பட பாடல் வரிகள் சரியான தொகுப்பாக இருக்குமா? அல்லது அதற்கு ஏற்ப நாம் எழுதும் கவிதை வரிகள் ஏற்புடையதாக இருக்குமா:


கவிதை வரிகள் தான் பெஸ்ட். அதுவும் ஒரு எட்டு வரிகள் இருந்தால் நலம் என்பது என் கருத்து.


******


எழுத்தாளர்களின் மீதான வாசகர்களின் நம்பிக்கை பற்றி ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா:


நம்பிக்கை வைப்பதே பெரிது தானே!

ஒருவர் இப்படித்தான் எழுதுவார் என்ற பின்பம் வாசகர்களிடம் இருக்கும். அதையும் பொய்யாக்காமல், புதுவித களத்தில் தன் சிந்தனைக்கும் எண்ணத்திற்கு தீனி போடும் வகையில் எழுத்தாளரின் படைப்பு இருக்க வேண்டும்.


அதுவே இருவருக்கும் ஏற்ற படியும் இருக்கும்.


******


சிறுகதை என்றால் எத்தனை வார்த்தைகளுக்குள் அடங்க வேண்டும். அதில் என்னென்ன சாரம்சம் அடங்கியிருக்க வேண்டும் என்று நினைக்கிறீங்க:


2000 வார்த்தைகள் வரை இருக்கலாம்.


கதையின் கரு ஆழமாக, சுருங்க சொல்வது போல் இருக்க வேண்டும். அதற்குத் தக்க காட்சிகளையும் கதாப்பாத்திரமும் இருந்தாலே போதும். 


******


இன்றைய சமூகத்தைப் பற்றி ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :


சொல்லுறதுக்கு பெருச ஒன்னுமில்லை அக்கா.. பேப்பர், டீவி பார்த்தவே தெரிந்துவிடும்!


நான் வேற தனியா ஏதாவது சொல்லபோறது இல்ல 😂


******


அன்றைய பெண்களின் நிலையும் இன்றைய நிலை பற்றியும் சொல்ல முடியுமா :


Becomed more Bold!


அப்போது சிலரைத் தவிர்த்து, தன் கருத்தை பகிர, வெளியே வர, எண்ணத்தை நிறைவேற்ற என்ற பல தயக்கங்கள் இருந்தன. வீட்டில் பேசவே ஒரு தயக்கம்.


இன்று அந்த தயக்கங்கள் இல்லாமல் பலர் வெளியே தங்களின் திறமைகளை காட்டுகின்றனர். அதற்கு பெற்றோரும் ஒரு காரணம் தானே. அப்போது அவர்களுக்கு மறுக்கப்பட்டதை இப்போது அவர்களின் பிள்ளைகளுக்கு கிடைக்கச் செய்கின்றனர்.


வீட்டுக்குள்ளையே இருந்தவங்க, இப்போ வெளியவும் இன்னுமே சுதந்திரம இருக்காங்க.. ஆனா அப்போ இருந்த கட்டுப்பாடு இப்போ இருந்தா பரவாயில்லை என்ற நிலை வராம இருக்கனும்!



நிஜம் தான்


******


உங்களது குறிக்கோள் , எழுத்துலகில் நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன :


குறிக்கோள் என்றால் ஒரு ஐந்து நாவல்கள் அடுத்த வருடத்திற்குள் எழுத வேண்டும் என்ற எண்ணம் 😜


சாதிக்க விரும்புவது, அப்படி ஒன்றும் இல்லையே. என் படைப்பைப் படித்து விமர்சனம் வந்தாவே நான் ஏதோ சாதிக்க ஃபீல் தாங்க அக்கா.



கவலை வேண்டாம் விரைவில் கிடைக்கும்


******


உங்களது நட்பில் உள்ள எழுத்தாளர்களை பற்றி சொல்ல முடியுமா:


எல்லாரும் எனக்கு வேண்டியவர்கள், எனக்கு ஊக்கமும் உற்சாகமும் தரும் சகாக்கள் 💛


*****


உங்களது படைப்புகள் காதல், குடும்பம், சமூகம், ஆன்மீகம், வரலாறு இதில் எதை சார்ந்ததாக இருக்கும்:


பெரும்பாலும் காதல் மற்றும் சமூகம் சார்ந்த கதைகள் தான். இப்போது தான் இந்த மர்மம், அமானுஷ்யம் வகையில் இரு கதைகள் எழுதியுள்ளேன். 


குடும்பம் சார்ந்த கதைகள் எழுத இன்னும் போதிய அளவுக்கு எனக்கு அனுபவம் இல்லை என்ற கருத்தும் உள்ளது. ஆனால் அவ்வப்போது சிறிய கதைகளம் கொண்டு எழுத முயற்சிக்கிறேன்.


*****


ஒரு நாவல் அல்லது நாடக கதை எழுதும் முன்பும், பிறகும் என்ன வேண்டும்:


கதாப்பாத்திரங்கள் தேர்வு மற்றும் அவர்களுக்கான தனித்தன்மைகளை இப்படிதான் இருக்க வேண்டும் என்ற ஒரு rough sketch.


கதை களம், சில காட்சிகள் இதெல்லாம் கதை ஆரம்பிக்கும் முன்னர் pre production works மாதிரி.


கதை எழுத ஆரம்பித்தவுடன், நமக்கே ஒரு feel வரும். இப்படி எழுதலாம் என்று. நம்ம எண்ணத்தின் ஓட்டத்தை நூல் பிடித்து எழுதினாலே போதுமானது.


******


உங்களுடைய நட்பில் உள்ள எழுத்தாளர்கள் :


சிலர் தான். அவ்வளவு close யார்கிட்டையும் இல்ல. 


வதனி அக்கா, நந்தினி சுகுமாரன் அக்கா, ரஜனி அக்கா, Sree Maami இப்படி சிலர் அடங்கும்.


*****


 நீங்கள் தொடர்ந்து வாசிக்க ஆசைப்படும் எழுத்தாளர் மற்றும் நூல்கள் :


நந்தினி சுகுமாரன் அக்காவின் படைப்புகள் 💛


வேதா மேம், கொடி சுந்தர் இவர்களின் எதார்த்த படைப்புகள் பிடிக்கும்💛


நூல்கள் என்று தனிப்பட்டது எதுமில்லைங்க அக்கா. படைப்புகள் நன்றாக இருந்தால் படிக்கலாம் 💛



கொடி சுந்தர் சகோதரரின் அவளின் டைரி இன்னும் 2 நாவல் படித்திருக்கிறேன். அருமையான நகர்வு


******


தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல நினைத்தால் தயங்காமல் கூறலாம்


எழுத்துலகம் இல்லாத தனி மனிதியாய் ஒரு வேண்டுகோள்.


முயன்ற வரை அனைத்தையும் ரசித்து, மகிழ்ந்து பாருங்கள், பழகுங்கள்.


உங்களை நம்பினால் எதுவும் முடியாதது இல்லை. 


Love and Believe yourself, the magic will unfold! 


*****


உங்களுக்கு இரண்டு கேள்விக்கான வாய்ப்பு தரேன். கேள்விகளை உருவாக்கி பதிலையும் நீங்களே கூறலாம்


எழுத்தாளராக என் விருப்பம்..


ஒரு படைப்பை கொடுக்க எங்களின் முயற்சிகளும் நேரமும் அதிகம். அதை வாசகர்களுக்கு எளிதில் எங்களின் எண்ணத்தையும் சிந்தனையும் சரியாக கொடுத்து சென்றடைய செய்ய வேண்டும்.


இப்போது உள்ள புதிய எழுத்தாளர்களின் படைப்பை படித்தால், குறைந்த பட்சம் ஒரு வரியிலாவது கமெண்ட் பண்ணுங்க. 


எழுத்தாளரா இது என் வேண்டுகோள்.


நன்றி 💛


எனக்கும் வாய்ப்பளித்து, கருத்துக்களை பகிர செய்த ஜோதி அக்காவிற்கு என் நன்றிகள் 💛



நன்றி,

சௌந்தர்யா..


….


மிக்க நன்றி சகோதரி🙏🙏


உங்கள் பதில்கள் மிகவும் அருமையாக இருந்தன. மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிட மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐💐


ஹாய் பிரண்ட்ஸ்,


இன்றைய எழுத்தாளரின் படைப்புகளை  வாசித்தவர்கள் அது பற்றிய கருத்துகளை பரிமாறிக் கொள்ளுங்கள் மற்றவர்கள் வாழ்த்துங்கள்


நன்றி


Comments

Post a Comment