மது ஹனி

 


#எழுத்தாளர் அறிமுகப்படலம்


#சீசன் இரண்டு


ஹாய் பிரண்ட்ஸ்,


இன்றைய அறிமுக எழுத்தாளர்

மது ஹனி அவர்களைப் பற்றிய நேர்காணல் : 


பெயர் : மது 


        (வீட்டில் அழைக்கும் செல்லப் பெயர். என் பெற்றோர் எனக்கு முதன்முதலில் வைத்தப் பெயர் என்பதால்  அதையே எழுத்துலகில் என் அடையாளமாக வைத்துக் கொண்டேன்))


சொந்த ஊர் : 


யாதும் ஊரே யாவரும் கேளிர். பிறந்தது மதுரையில். வளர்ந்தது வடலூரில் (நெய்வேலிக்கு அருகில் இருக்கிறது) சென்னை ஜெய்பூர் என்று சுற்றித் திரிந்து தலைநகர் தில்லியில் சில வருடங்களாக வசித்து வருகிறேன்.

      

படிப்பு : 


வாழ்க்கை என்னும் பாடத்தில் இன்னும் அரிச்சுவடியைக் கூட கற்றுத் தேறவில்லை.


பணி : 


செய்யும் பணியாவும் நற்பணியாக இருக்க வேண்டும் என்றே எனது முயற்சியும் நோக்கமும்.


தளம் : 


முன்பு சில்சீயில் எழுதினேன். இப்போது https://vathsalaraghavannovels.wordpress.com என்ற ப்ளாக்கில் எழுதுகிறேன்.


அமேசான் பெயர்:  Madhu honey


 ******


உங்களைப் பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:


டாடியின் செல்லப் பெண், வின்னுவின் (விநாயகர்) நண்பி, மழையின் தோழி, காபியின் காதலி.


ஆக்சுவலி நான் ஒரு Extreme personality. எதிர் துருவ ஆளுமை தன்மைகள் கொண்டவள். சுதந்திரப் பறவையாக ஜாலியாக சிறகுகள் விரித்துப் பறப்பவள் திடீரென்று கூட்டுக்குள் ஒடுங்கிக் கொள்ளும் நத்தையாகி விடுவதுண்டு. 


ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால்


A fiercely Independent  Free Spirited Introverted  Soul. (தமிழில் இதை எப்படி சரியாகச் சொல்வது என்று தெரியவில்லை)


….


அருமை சிஸ்டர்


******


உங்களது விருப்பமான எழுத்தாளர்:


சிறு வயது முதலே புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உண்டு. நிறைய நிறைய புத்தகங்கள் வாசித்திருக்கிறேன் என்பதால் விருப்பமான எழுத்தாளர் என்று நிறைய இருக்கிறார்கள்.


இதிகாசங்கள், புராணங்கள், சங்கத்தமிழ் இலக்கியங்கள், மகாகவி பாரதியின் கவிதைகள் ரொம்பவே விருப்பம். 


கல்கி, சாண்டில்யன், சுஜாதா, வாஸந்தி, எண்டமூரி  இவர்களின் படைப்புகளை திரும்பத் திரும்ப வாசிப்பேன்.


தமிழுக்கு இணையாக ஆங்கில நாவல்கள் வாசிப்பதில் ஆர்வம் உண்டு.  Ayn Rand, Jeffery Archer, Sydney Sheldon, Dan Brown என்று லிஸ்ட் நீளும். இந்திய ஆங்கில நாவல் எழுத்தளார்களில் Amish Tripathi, Devdutt Pattnaik, Anand Neelakantan  நாவல்கள் மிகவும் கவர்ந்தவை.

 

Contemporary  எழுத்தளார்கள் ஒவ்வொருத்தரும் எவ்வளவு அழகாக அருமையாக எழுதுகிறார்கள் என்று எப்போதும் நான் பிரமிப்பது உண்டு.


காஞ்சனா ஜெயதிலகர், லக்ஷ்மி சுதா, N.சீதாலக்ஷ்மி, சுபஸ்ரீ கிருஷ்ணவேணி, மனோரம்யா, சித்ர பாலா, வத்சலா ராகவன், சகி, பிந்து வினோத், உஷா, ஜெய், தேவி, ஸ்ரீ, ஆர்த்தி ரவி, யாழ் சத்யா, ஹமீதா, மோனிஷா, மேக்னா சுரேஷ், ஹேமா ஜெய், திருமதி லாவண்யா, உஷாந்தி, சம்யுக்தா, அருணா கதிர், நந்தினி சுகுமாரன் வேறு யாரையேனும் மிஸ் செய்தேனா தெரியவில்லை. இவர்கள்  நாவல்கள் விரும்பி வாசித்திருக்கிறேன்.


இந்த தருணத்தில் முத்துலட்சுமி ராகவன் அம்மாவை நினைவு கூற விரும்புகிறேன். She was a very passionate writer.


இன்னும் மற்ற மொழிகள் எல்லாம் இருக்கு. Non Fiction எழுத்தாளர்களும் லிஸ்டில் உள்ளனர்.  மற்றொரு சந்தர்ப்பத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.


 …


🙂🙂🙂 அழகான பதில் சிஸ்டர்


 ******


உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:


மிகவும் வித்தியாசமான இனிமையான அனுபவம். எனது சிந்தனைகள், எண்ணங்கள் எழுத்தின் வடிவில் உலகத்தில் எங்கோ இருக்கும் ஒருவரை சென்றடைகிறது என்பது சந்தோஷமாக இருக்கிறது.


 ….


ஆமாம் சிஸ், எனக்கும் கூட


********


நீங்கள் எழுதிய முதல் நாவல்:


மார்பில் ஊறும் உயிரே


 *******


உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள்:


நட்பு வட்டத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் பர்சனல் தொடர்பில் இருப்பவர்கள் வெகு சிலரே.


 ******


நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள்:


நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமே என்னைத் தீவிர வாசகியாக்கியது. எந்த Genre நூலாக இருந்தாலும் நான் அறியாத புதிய விஷயங்கள் ஒரு கதையில் இருக்குமானால் விரும்பி வாசிப்பேன். 


*******


உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க:


திறமையா??!! எனக்கு எழுத்துத் திறமை எல்லாம் சுத்தமாக இல்லை. என்  முதல் நாவலான  மார்பில் ஊறும் உயிரே  ‘மது ஹனி’ என்ற என் அடையாளத்தின் வெளியுலக அறிமுகம் என்று சொல்லலாம்.


 *******


 நீங்கள் எழுதிய மொத்த நாவல் :


தனி நாவல்கள் ஒன்பது. வத்சலாவுடன்  இணைந்து எழுதிய நாவல் ஒன்று மற்றும் ரிலே ஸ்டோரி நாவலில் ஒரு அத்தியாயம் எழுதியிருக்கிறேன்.  


சில சிறுகதைகள் மற்றும் ஒன்பது கவிக் கதைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.


 *******


எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது:


நாவல்கள் எழுத ஆரம்பித்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன.


 ******


நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து தொடர்கதை or நாவல்;

 

தற்போது ஆன்கோயிங் எதுவும் எழுதவில்லை.


 *******


உங்கள் நாவல்கள் சிலவற்றின் பெயர் :


மார்பில் ஊறும் உயிரே


முடிவிலியின் முடிவினிலே


துடிக்கும் இதயம் உனதே உனது


ரகசியமாய் ரகசியமாய்


மழையே மழையே மனதில் நீயே


செந்தமிழ் தேன்மொழியாள்


தொடர்கதையான விடுகதை


யார் சொல்வதோ! யார் சொல்வதோ!


நினைவடுக்கில் முகிழ்ந்த நறுமுகைகள்


விழாக் காணுமே வானம் (வத்சலா ராகவனுடன் இணைந்து எழுதியது)


விண்ணோடு மேகங்கள் (ரிலே ஸ்டோரியில் முதல் அத்தியாயம்)


 ….


அருமையான பெயர்கள் தேர்ந்தெடுப்பு


 ********


உங்களது நாவல்கள் சமூகப் படைப்பாக இருக்குமா அல்லது காதல் நகைச்சுவை குடும்பம் இதை பொறுத்து இருக்குமா:


குடும்பம், சமூகம் சார்ந்த கதைகள் என்று சொல்லலாம். ஆனால் என் கதைகளில் வரும் குடும்பம் சமூகம் கொஞ்சம் பெரியது.


வானம், மேகம், மழை, கடல், மண், மரம், ஜீவராசிகள் என சிருஷ்டியின் ஒவ்வொரு அங்கமும் என் குடும்பத்தில், சமூகத்தில் அடக்கம். இதில்  மனித  வாழ்க்கையை, உணர்வுகளை, ரசனைகளை, ஆக்கபூர்வமான சக்திகளை  மையமாகக் கொண்டு அன்பின் வழியது உயிர்நிலை என்பதை பறைசாற்றும் என் கதைகள்.


 *******


நீங்கள் தொடர்ந்து வாசிக்க விரும்பும் நாவல்கள்:


புதுமையான கதைக்களம், அழுத்தமான கன்டன்ட், ஆழமான உணர்வுகள், இனிமையான ரசனைகள்  இவற்றில் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டோ இருக்கும் கதைகளை வாசிக்க விருப்பம்.


********


நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது?


இன்னும் எத்தனை கதைகள் எழுதினாலும் எப்போதும் என் முதல் கதை மார்பில் ஊறும் உயிரே தான்.


****


உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்?


எனது கதையிலா? என் கதைகளில் என்னைக் கவர்ந்த கதாபாத்திரம் மழை. எனது எல்லாக் கதைகளிலும் நிரந்தர கதாபாத்திரம் மழை.


******

உங்கள் நாவல் or  தொடர்கதை எது  வாசகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது, அதற்கான காரணத்தை விளக்க முடியுமா:


பிரபலம் என்று சொல்ல முடியாது. ஆனால் நிறைய பேருக்குப் பிடித்தக் கதையாக மார்பில் ஊறும் உயிரே, முடிவிலியின் முடிவினிலே இரண்டுமே இருக்கின்றன.


காரணம் இரண்டு கதைகளுமே என் ஆன்மாவின் அடி ஆழ உணர்வுகளைப் பிரதிபலிப்பவை. Both stories are extensions of the emotions  embedded  in the depth of my soul.


அப்போ மற்றக் கதைகள் அப்படி இல்லையா என்று நீங்கள் கேட்கும் முன் நானே விடை சொல்லி விடுகிறேன். மற்ற கதைகள் எனது சிந்தனைகளின், ரசனைகளின் வெளிப்பாடு என்று சொல்லலாம்.


….


நிச்சயம் சிஸ்டர். நாம் எத்தனை படைப்புகளை கொடுத்திருந்தாலும் ஏதாவது ஒரு சிலதில் ஸ்பெஷாலிட்டி இருக்கத்தான் செய்கிறது

 

*****


உங்கள் கதைகளை வாசிக்கும் போது அதில் சமூக சிந்தனைகள், நிஜ சம்பவத்தின் தாக்கம் ஏதாவது இருக்குமா :


ஆழமான  சிந்தனைகள் கண்டிப்பாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட நிஜ சம்பவத்தின் அடிப்படையாக வைத்து நான் இது வரை எழுதியதில்லை. ஆனால் கடந்து வந்த எத்தனையோ நிஜ சம்பவங்கள் சிந்தனையில் பதிந்து அதுவே கலவையான வடிவில் கதையில் வெளிப்படுவதாக  நினைக்கிறேன்.


 ******


நிஜ வாழ்வின் நடக்கின்ற சம்பவங்களை நாவலாக வடிவமைக்க என்ன செய்ய வேண்டும்:


நாவல் 'வடிவமைப்பது' எப்படி என்றே எனக்குத் தெரியாது. நிஜ வாழ்வின் சம்பவங்கள் ஏதோ ஒரு வகையில் கதைகளில் தானே வெளிப்படும்.


….


கட்டாயம்


 ********


உங்களது நாவல் எழுதும் பழக்கம் எப்படி ஆரம்பமானது. அதன் தூண்டுகோல் யாரென்று சொல்ல முடியுமா:


எனக்கு கவிதைகள் என்றால் மிகவும் பிடிக்கும். எதுகை, மோனை, உவமைகளில் தனி மயக்கம் உண்டு.  பள்ளி நாட்களில் இருந்து அவ்வப்போது கவிதை எழுதுவேன். சில்சீயில் வாசகியாக நுழைந்த போது எழுதி வைத்திருந்த கவிதைகள், கவிக் கதைகள் என்று வெளியிட்டேன். அந்தத் தளத்தில் சிறுகதை போட்டி ஒன்று நடைபெற்ற போது நட்புகள் விருப்பத்திற்காக கலந்து  கொண்டு முதல் பரிசும் பெற்றேன்.


கவிதை, சிறுகதை போல நாவலை ஒரே ஃப்ளோவில் எழுதி விட முடியாதே. திட்டமிட்டு மேம்படுத்தி அதை செயலாக்குதல் (Planning, Developing, Executing) மிகப் பெரிய டாஸ்க்.


முதலில் நான் ஒரு மூடி பர்சன் Moody person. கூடவே பயங்கர சோம்பேறி. அதனால் நாவல் எழுதுவது என் cup of coffee  யாக இருந்ததில்லை.



என் தந்தையின் திடீர் மறைவின் பிறகு பற்றிக் கொள்ள அவரின் நினைவுகள் மட்டுமே இருந்த நாட்களில் என் ஆன்மாவின் ஆழத்தில் புதைந்திருந்த பந்தத்தோடு, உணர்வுகளோடு அவரின் நினைவுகளும் கொஞ்சம் கற்பனையும் கலந்து எனது முதல் கதை உருவானது.  நான் முழு நீளக் கதை எழுதியது என் அறிவிற்கு அப்பாற்பட்டு நடந்த ஒன்று. என் டாடி அவரின் மதுக்குட்டியை எழுத வைத்தார் என்று தான் எண்ணுகிறேன்.



….


🙂🙂🙂


******


நாளிதழ்களில் கதை எழுதிய அனுபவம் பற்றி இருந்தால் சொல்லுங்க :


நாளிதழ்களில் இதுவரை எழுதியதில்லை.


 *******


இன்றைய எழுத்தாளர்கள் கற்றுக் கொள்ளக் கூடியவை என்று ஏதாவது உண்டுமா :


இன்றைய எழுத்தாளர்களில் நானும் அடக்கம் என்பதால் தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கு கற்றுக் கொள்ள வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.


 ******


ராணிமுத்து, கண்மணி, மாலைமதி நாவல்களில் எல்லாம் எழுத்தாளர்களின் படைப்புகள் வெளிவரும்போது அவர்களது புகைப்படமும் இணைக்கப்படும். அதைப் பார்த்தவுடன் அத்தனை மகிழ்ச்சியாக காணப்படும் ஆனால் இன்றைய எழுத்தாளர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள நினைப்பதில்லை. அது ஏன்னு சொல்ல முடியுமா :


Every form  of art carries a piece of soul of the creator. எந்த ஒரு கலை வடிவமும் அதை வடிப்பவரின் ஆன்மாவின் ஒரு பகுதியைத் தாங்கியிருக்கும்.  


எழுத்தாளர்களின் அகத்திலே இருக்கும் உணர்வுகளை, சிந்தனைகளை, ரசனைகளை அவர்கள் எழுத்து கண்ணாடி போலக் காட்டி விடுகிறதே. 


அந்த வகையில் அகம் காட்டும் எழுத்தே ஒரு புகைப்படம் தானே. 


….


வாவ்! சூப்பர் பதில் சிஸ்டர்


*******


நீங்கள் நாவல் எழுத எடுத்துக் கொள்ளும் கால அவகாசம்:


வரையறை இல்லை. முப்பது நாளும் ஆகும். முப்பது மாதங்களும் ஆகும். முப்பது வருடங்கள் ஆகாமல் இருந்தால் சரி.


 ******


ஒரு நாவல் எழுதும் போது அதன் அத்தியாயங்கள் இத்தனை வர வேண்டும். வார்த்தைகள் இத்தனைக்குள் முடிய வேண்டும் என்று திட்டமிட்டு எழுதுபவரா நீங்கள் :


திட்டமிட்டு எழுதுவது எப்போதுமே கிடையாது. ஆனால் கதை கொஞ்சம் நீளமாக போகிறது என்று எனக்குத் தோன்றினால் இவ்வளவு போதும் என்று முடித்து விடுவேன். கதை எழுதுவதை விட அதை எடிட் செய்வது இருக்கிறதே. ஷப்பா. இதுக்காகவே கதையை ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா முடித்து விடுவேன்.


 ….


ஆமாம் சிஸ்டர் பெரிய நாவலாக எழுதுவது கூட கஷ்டமில்லை . மிஸ்டேக் பார்க்கிறது🙄🙄🙄😂😂😂 சரியான உயிரெடுப்பு


******


நிஜ சம்பவத்திற்கும், கற்பனை காட்சிக்கும் உள்ள வித்தியாசமாக என்ன சொல்ல நினைக்கிறீங்க :


6


இதை நேரில் பார்த்தால் ஆறு.  திருப்பிப் பார்த்தால் ஒன்பது.  வடிவம் ஒன்று தான். ஆனால் கோணம் வேறு.  நிஜ சம்பவமும் கற்பனைக் காட்சியும் அப்படியே. எப்போதோ மனதில் பதிந்த நிஜ சம்பவம் தான் கற்பனையாக உருப்பெறுகிறது. அதே சமயம் கற்பனைகளில் விரியும் காட்சிகள் நிஜ சம்பவங்களாகவும் உருவாகிறது.   


 ….


நிச்சயம் சிஸ்டர். அருமையான உதாரணம்


******


காதல் எனும் மூன்று எழுத்தில் மறைந்திருக்கும் பொருளை விளக்க முடியுமா:


மண் மீது மழை கொண்ட காதலில் உயிர் செழிக்கிறது. மலர் மீது தேனீ கொண்ட காதலில் சிருஷ்டி சுழல்கிறது. கடல் மீது நதி கொண்ட காதலில் நாகரீகம் தழைக்கிறது.


நிலை ஆற்றல் (சிவம்) மீது இயக்க ஆற்றல் (சக்தி) கொண்ட காதலில் தான் இந்த பிரபஞ்சமே இயங்குகிறது.


காதல் பிரபஞ்ச விதிகளின் சூத்திரம்.  


 ….


👏👏👏👌👌👌


*******


ஒரு நாவல் எழுதும் முன்பு அதற்கான வருணனை, கற்பனைக்காட்சி, நிஜ சம்பவம், நகைச்சுவை, காதல் , குடும்பம் ... இன்னும் நிறைய இருக்கு இதில் நீங்கள் உங்களுடைய நாவலுக்கு தேர்ந்தெடுப்பது என்ன :


கதைக்களம், கதையின் ஓட்டம், இத்தனை கதாபாத்திரங்கள், கதையின் முடிவு இது. இப்படி எதையுமே நான் பிளான் செய்து எழுதியதில்லை.


திடீரென ஒரு ஐடியா மின்னலாய் வெட்டும். மழையை ஓபனிங் கேரக்டராக கதையில் இறக்கி விடுவேன். நாவல் இன்னிங்ஸ் மேட்ச் போன்றது.  அது பாட்டுக்கு ஓடிக் கொண்டே இருக்கும். யார் யார் களம் இறங்குகிறார்கள். பவுண்டரி, சிக்ஸர், விக்கெட் இதெல்லாம் லைவ்வாக அந்தந்த அத்தியாயத்தில் (ஓவரில்) தானாகவே செட் ஆகும். என்ன ஒரு முரண் என்றால் இந்த இன்னிங்க்ஸில் மழை பொழிந்தால் தான் ஆட்டம் சூடு பிடிக்கும்.


கேரக்டர்களின் பெயர்கள் மற்றும் கதைக்கான டைட்டில் இவற்றை நான் யோசித்து நட்புகளுடன் ஆலோசித்து தேர்வு செய்வேன். இந்த  இரண்டும் தான் நான் திட்டமிட்டு தேர்வு செய்வது.


 ….


🙂🙂😂 மழை ரொம்ப பிடிக்கும் போல உங்களுக்கு


*******


உங்களது நாவல் எழுதும் பழக்கத்தை வீட்டினர் மற்றும் கணவர் எந்த வகையில் ஊக்குவிக்கின்றனர் என்று சொல்ல முடியுமா :


சிங்கிள் சிங்கமாக இருப்பதால் எனக்கு நானே ஊக்குவித்துக் கொண்டால் தான் உண்டு.


அம்மாவுக்கு எழுதுகிறேன் என்று  தெரியும். என்ன எழுதுகிறேன் என்று  டிஸ்கஸ் செய்ய மாட்டேன். ஏனென்றால் என் அம்மா பயங்கரமான ரீடர். அதை விட பயங்கரமான க்ரிடிக். அதுவும் நான் எழுதும் கதை என்றால் துவைத்துப் பிழிந்து காயப் போட்டு விடுவார்கள். 


முதல் கதை புத்தகமாக வந்த பிறகு தான் கதை எழுதுவதை சொல்லவே செய்தேன். எப்போது  வாசித்தார்கள் என்று எனக்குத் தெரியாது. ஏதோ  ஒரு சந்தர்பத்தில் பரவாயில்லை நல்லா தான் எழுதிருக்க இன்னும் இம்ப்ரூவ் செய்ய வேண்டும் என்று  சொன்னார்கள். அவ்வளவு நிம்மதியாக இருந்தது. மற்றக் கதைகளை வாசித்தாரா என இன்று வரை கேட்டுக் கொண்டதில்லை.


வெளிநாட்டில் வசிக்கும் என் உடன்பிறப்பிற்கு புக்ஸ் படிப்பதில் நாட்டம்  இல்லை. புக் வெளிவந்தால் ஷேர் செய்வேன். மனதார வாழ்த்துச் சொல்வாள்.


கறுப்பும் வெள்ளையுமாக இருக்கும் என் எழுத்துக்களுக்கு வண்ணங்கள் சேர்ப்பவரக்ள் என் ஆத்மார்த்தமான நட்புகள். அவ்வளவு தான் என் வீட்டு மெம்பர்ஸ். 


 …


🙂🙂🙂


*****


நீங்கள் நாவல் எழுத ஆரம்பிக்கும் முன்பு இத்தனை வார்த்தையில் முடிக்கணும், வருணனை, கவிதை போன்றவற்றை சேர்க்கணும் என்று யாரிடமாவது கலந்து ஆலோசிப்பது உண்டா?


என்ன எழுதப் போகிறேன் என்று எனக்கே தெரியாத போது  என்னவென்று ஆலோசிப்பது. கதை எழுதிய பிறகு இப்படி எழுதியிருக்கிறேன் என்று நட்புகளிடம் ஷேர் செய்வதுண்டு.


*******


நீங்கள் எழுதிய நாவல்களில் ஏதாவது ஒன்று பற்றி விவரிக்க முடியுமா:


கண்டிப்பாக.


மழையே மழையே மனதில் நீயே! இந்தக் கதையை எழுத ஆரம்பித்தது ஏப்ரல் மாதத்தில். நல்ல கொளுத்தும் வெயில். கதையின் அறிவிப்பு கொடுத்த அன்றிரவு அதிசயமாக மழைத் தூறல்கள்.


எப்போதும் மழை பொழிந்து கொண்டே இருக்கும் தீவு ஒன்றில் நாயகனும் நாயகியும் சந்தித்துக் கொள்கிறார்கள். காதலில் ஒவ்வொரு நிலையாக அவர்கள் முன்னேறிச் செல்ல நாயகி தான் சிக்கியிருக்கும் மாயச் சுழலில் இருந்து படிப்படியாக வெளிவருகிறாள்.


கதை எழுதும் போதெல்லாம் இயற்கை எழில் கொஞ்சும் ஆலித் தீவிற்கே போய்விட்டிருந்தேன். மழையையும் இயற்கையையும்  அணுவணுவாய் ரசித்து எழுதிய அந்த அனுபவம் மிக இனிமையானது. 


ஹைலைட் என்னவென்றால் கதையின் அத்தியாயங்கள் ப்ளாக்கில்  வெளிவந்த ஏப்ரல் மே மாதங்களில் நாடு முழுவதும் நல்ல மழை.


….


😂😂😂😂அட்டகாசமான பதில்

 

*****


உங்கள் நாவலை தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கறீங்களா :


எனது ஒன்பது நாவல்கள் வெளிவந்திருக்கின்றன என்றால் அது சாத்தியமானது என் கதைகளை தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்களால் தான். இல்லையென்றால் அக்கதைகள் என் சிந்தனைக் கிடங்கிலோ அல்லது என் லேப்டாப்பின் ஏதோ ஒரு ஃபோல்டரிலோ நீண்ட ஹைபர்நெஷனில் இருந்திருக்கும்.


நான் ஒரு ரைட்டர் என்று என்னை உணரச் செய்தவர்கள் வாசகர்கள் தான்.


Thank you from the bottom of my heart.


******


வாசகர்களுக்கான கேள்வி பதில்:


திரைப்படத்திலே ரொமான்ஸ் காட்சிகளுக்கு என்று வரைமுறை இருக்கிறது. ஆனால் நாவலில் எல்லை மீறிய வருணனை காட்சிகளையும், அதிக அளவிளான ரொமான்ஸையும் திணிப்பது பற்றிய உங்களது கருத்து :


மிகவும் நல்ல கேள்வி.


வரைமுறைகள், எல்லைகள் என்பது வெளியில் இருந்து இல்லாமல் தனி மனிதனின் உள்ளிருந்து நிர்ணயம் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு எழுத்தாளரும் தங்கள் எழுத்துக்களை சுய தணிக்கை செய்து கொள்ள வேண்டும் என்பதே என் கருத்து.  


 *******


ஒரு நாவல் எழுத என்ன தெரிய வேண்டும்:


ஒரு நாவல் எழுத எழுத்து மொழி நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். மற்றபடி கதையைப் பொறுத்து என்ன தெரிய வேண்டும் என்பது வேறுபடும்.


 ******


நாவலில் திரைப்பட நாயகர்களின் ஆதிக்கம் எந்த அளவுக்கு இருக்க வேண்டும் :


ஒரு நாவலில் திரைப்பட நாயகர்களின் ஆதிக்கம் எதற்கு??  திரைக்கதையில் தானே அவர்கள் ஆதிக்கம் இருக்க வேண்டும்.


 ******


முன்பு தளங்கள் குறைவாக காணப்பட்டன. எழுத்தாளர்களின் எண்ணிக்கையும் சொல்லி விடும்படியாக இருந்தது. இப்போது எண்ணிடலங்கா தளங்கள், எழுத்தாளர்கள் உருவாகி வருவது பற்றிய உங்களது கருத்து :


ஒரு வீட்டில் முன்பு நான்கு பூச்செடிகள் இருந்தன. அதில் அவ்வவ்போது ஆறேழு பூக்கள் பூத்தன. இப்போது பெரிய பூந்தோட்டமே இருக்கிறது.  நித்தம் விதவிதமான பூக்கள் மலர்ந்து குலுங்குகின்றன. அது மகிழ்ச்சி தானே. 


….


நிச்சயம் சிஸ்டர்


******


எழுத்தாளர்களின் அறிமுகப் படலத்தை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டு வரும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி. மது ஹனியாக என் முதல் இன்டர்வியூ. மகிழ்ச்சியுடன் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். 


இனிமையுடன் 


மது 


  ….


மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏🙏🙏


 உங்களது பதில்கள் அனைத்தும் மிகவும் அருமையாகவும், அழகாகவும் இருந்தது. மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்


ஹாய் பிரண்ட்ஸ்,


இன்றைய எழுத்தாளரின் நாவல்களை வாசித்தவர்கள் அதைப் பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள். மற்றவர்கள் அவரது திறமையை வாழ்த்துங்கள்


நன்றி


Comments

  1. உங்களில் இரு பதிலை வெகுவாக ரசித்தேன் சகோதரி. படிப்பு, பணி என்பதின் பதிலை. வாவ் என சொல்ல தோன்றியது.

    ReplyDelete

Post a Comment