மீனாட்சி அடைக்கப்பன்

  #எழுத்தாளர் அறிமுகப்படலம்


#சீசன் இரண்டு


ஹாய் பிரண்ட்ஸ்,


இன்றைய அறிமுக எழுத்தாளர் மீனாட்சி அடைக்கப்பன் அவர்களைப் பற்றிய நேர்காணல்



பெயர் : மீனாட்சி அடைக்கப்பன்


சொந்த ஊர் : நாட்டரசன்கோட்டை(சிவகங்கை)


படிப்பு : B.Tech Biotechnology


பணி : Software Engineer


தளம் : Pratilipi, Eread, Thoorigai


அமேசான் பெயர்: Meenakshi Adaikappan


******


இத்தனை வருட எழுத்து அனுபவத்தில் உங்களது சாதனை மற்றும் சோதனைகளை பற்றி சொல்ல முடியுமா :


எழுத்தில் இன்னும் சாதித்ததாக எண்ணவில்லை. இதுவரை சோதனைகளும் இல்லை. இரண்டும் வர இன்னும் பல மைல் கற்கள் கடக்க வேண்டும் போல.


********


1970 -> எழுத்து , நாவலுக்கும் 2021 -> தற்சமயத்து எழுத்துக்கும் உள்ள வித்தியாசமாக ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :


அந்தந்த காலநிலையின் தாக்கங்கள் அந்தந்த நூற்றாண்டுகளில் இருக்கும். மக்களின் மனம், நாகரீகம் என்று அனைத்திலும் மாற்றம் கொண்டுவிட்டோம். மாற்றம் ஒன்றே மாறாதது. Old is gold என்று சொல்வது போல் 1970களில் உள்ள எழுத்தில் நம் கடந்து வந்த வரலாற்றின் சுவடுகள் இருக்கும். அப்பொழுதைய மனிதனின் மனநிலை, காலநிலை, அவர்களின் வாழ்வியல் முறை என்று.  நம் எண்ணங்களும் கருத்துக்களும் மாறுபட்டதால் நிச்சயம் எழுத்திலும் மாற்றம் இருக்கிறது.


....


ஆம் நிஜம் தான்


******


உங்களது குறிக்கோள் , எழுத்துலகில் நீங்கள் படைத்த சாதனை அதற்காக வாங்கிய விருதுகளை பற்றி சொல்ல முடியுமா:


எழுதுவதில் ஒரு சுகம். தமிழை எழுதுவதில் பரமசுகம். பிரதிலிபி நடத்திய சில போட்டிகளில் பரிசு வென்றிருக்கிறேன். என்னுடைய முதல் புத்தகம் ஆயிரம் பிரதிகள் அச்சானது. கவிதை உறவு பத்திரிக்கை நடத்திய இலக்கிய மன்றத்தில் என்னுடைய நாவல் பரிசு பெற்றது‌.


...


அருமை சிஸ்டர் வாழ்த்துகள்


*******


உங்களது நட்பில் உள்ள எழுத்தாளர்களை பற்றி சொல்ல முடியுமா:


நிறைய இருக்கிறார்கள். குறிப்பிட்டு சொல்ல விருப்பம் இல்லை.


*******


உங்களது படைப்புகள் காதல், குடும்பம், சமூகம், ஆன்மீகம், வரலாறு இதில் எதை சார்ந்ததாக இருக்கும்:


வரலாறு, அறிவியல் புனைவு, சமூகம்


******


ஒரு நாவல் அல்லது நாடக கதை எழுதும் முன்பும், பிறகும் என்ன வேண்டும்:


தெளிவு.... கதாசிரியருக்கு என்ன எழுதுகிறோம் என்ற தெளிவு இருந்தால் போதும்.


******


இதழில் நாவல்கள் எழுத என்ன தெரிந்திருக்க வேண்டும். என்னென்ன செய்ய வேண்டும்:


அனுபவம் இல்லை..


******


உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:

உயிரித் தொழில்நுட்பம் படித்துவிட்டு, மென்பொருள் பணியில் இருக்கிறேன். எழுத்து -  என் மூன்றாவது பிள்ளை.


இன்னும் கொஞ்சம் திமிர் கொள்ளலாம் தமிழனென்று பிழையில்லை! - இதுதான் நான். தமிழனாய் பிறந்ததில் துளியும் என் பங்குயில்லை, எனினும் எனக்குள் நானே பெருமிதம் கொள்ளும் மீப்பெரு விடயம் உண்டென்றால் அது இதுதான்.


சமூகத்தில் நடக்கும் பிழைகளைக் கண்டும் காணாமல் கடந்து செல்லும் சாமானியையான மென்பொருள் பணியாளர் நான். அதையெல்லாம் கொட்டித் தீர்த்து, என் மனப்புழுக்கம் தளர்த்தவே எழுத நினைக்கிறேன்.


...


சபாஷ்


******

               

உங்களது விருப்பமான எழுத்தாளர்:


கல்கி, சாண்டில்யன், சுஜாதா, இந்திரா சௌந்தரராஜன், அகிலன், விக்ரமன், பாலகுமாரன்,  ஸ்டெப்னி மேயர், சேத்தன் பகத், இப்போ புலியூர் கேசிகன்(தொல்காப்பியம், புறனானூறு உரை எழுதியவர்). இன்னும் நிறைய...


******


உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:


எப்படி எழுத வேண்டும் என்று கற்றுக்கொண்டிருக்கிறேன். என் எழுத்திற்கான என் தேடல்களே என் அனுபவம்.


*******


நீங்கள் எழுதிய முதல் நாவல்:


திரௌபதி சபதம்


******


உங்களது நாவல்கள் மற்றும் சிறுகதைகள் சிலவற்றின் பெயர்:


தீரா வஞ்சம் தீர வாராயோ..

அற்றைத் திங்களில்

நித்தமும் உன்மத்தம் ஏறுதடி நின் பகையால்

சுவர்ண பூமி

மோப்பக் குழையா அனிச்சம்

ஒழுகும் நிலவு வழியும் இரவு


நின்னைத் தழுவிடிலோ

பூரணமாய் ஒரு பயணம்

ஒரு கோப்பை காஃபி.. கொஞ்சம் காதல்

நகலெடுத்த நினைவுகள்


...


அழகான பெயர்கள் சிஸ்டர்


******


சிறுகதை என்றால் எத்தனை வார்த்தைகளுக்குள் அடங்க வேண்டும். அதில் என்னென்ன சாரம்சம் அடங்கியிருக்க வேண்டும் என்று நினைக்கிறீங்க:


குறைந்த கதாபாத்திரங்கள் கொண்டு சொல்ல வரும் கருத்தை முன் வைப்பது சிறுகதை.


*******


இன்றைய சமூகத்தைப் பற்றி ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :


சமூகம் என்பது நாம் உருவாக்கியது. நமக்காகவே அதை உருவாக்கினோம். அது எப்படி இருக்க வேண்டும் என்று தனி ஒருவன் தீர்மானம் செய்ய முடியாது எனினும், சமூக மாற்றங்கள் தனியொருவனிடத்திலிருந்தே தொடங்கும். நாம் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறோம் என்பது அவரவர் பொறுத்து மாறுபடும்.


******


அன்றைய பெண்களின் நிலையும் இன்றைய நிலை பற்றியும் சொல்ல முடியுமா :


அன்றைய பெண்கள் என்றால் முந்தைய தலைமுறையா.. இல்லை அதற்கும் முந்தைய தலைமுறையா.. அன்றைய பெண்கள் அடிமைத்தனத்தில் முடங்கியிருந்தனர் என்று பொத்தாம் பொதுவான கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் பெண் புலவர்களில் தொடங்கி, சோழர்களின் பெருந்தகை குந்தவை, ஆங்கிலேயனை வென்ற வேலு நாச்சியார் என்று அனைத்து காலகட்டத்திலும் சாதித்தவர்கள் இருக்கிறார்கள். இடையில் கொஞ்சம் அடிமைத்தனம் அதிகமாய் இருந்தாலும் இப்பொழுது மீண்டு வருகிறோம் என்று கூறுவது மிகையாகாது‌. என்றுமே பெண்களின் நிலை அவர்களின் மனநிலை பொறுத்ததே.


.....


நிஜம் தான் சிஸ்டர்


*******


ஒரு நாவல் வாசிப்பவர் மனதை சென்றடைய எழுத்தாளன் என்ன செய்ய வேண்டும் :


உணர்வுகளை வார்த்தையில் வடிக்க வேண்டும். வாசிப்பவனின் பொழுதை மட்டுமல்லாது, மனதையும் களவாட வேண்டும்.


******


திருமணமாகி கணவரின் வீட்டுக்கு சென்ற பிறகு ஒரு பெண் எத்தகைய வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும்னு நினைக்கிறீங்க:


அட.. இந்த கேள்விக்கு இப்படித்தான்னு பதில் சொல்ல முடியாது. சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி நடந்துகொள்ள வேண்டியதுதான். இதுக்கு புரட்சிகரமான பதில் எங்கிட்ட இல்லைங்க‌. மனைவி என்பது ஒரு பதவி. பின் அன்னை என்பதும் பதவி. சொல்லிக்கொடுத்துலாம் கத்துக்க முடியாது. அனுபவம் சொல்லித்தரும். அனுபவ பாடங்கள் உளியாகலாம் வரும்காலத்தில்.


*******


ஏன் ஒரு சில பெண்கள் திருமணம் முடிந்த பிறகு புகுந்த வீட்டாரை விட பிறந்த வீட்டாருக்கு அதிக வெகுமதி அளித்து அவர்களை அவமதிக்கிறாள். கணவனை விலக்கி அவளது வீட்டில் சென்று அமர்கிறாள். அவளால் ஒரு குடும்பமே அழிந்து போய்விடுகிறது என்பதைப்பற்றி ஏதாவது சொல்ல நினைக்குறீங்களா :


அவளின் சூழிநிலை என்ன என்பதுதான் இதற்கு பதில். மகளைப் பெற்றவர்கள் மகளுக்கும் மருமகளுக்கும் ஒரே சலுகைகள் அளிக்க தவறுவது.


மொத்த சமூகமும் பெண்களை அதிகார வர்க்கத்தில் அமர வைக்க பாடுபடுகிறது. அப்படி வளரும் பெண்களை எப்படி கையாள வேண்டும் என்று ஆண்களுக்கு சொல்லிக் கொடுக்க மறந்துவிட்டது‌.


....


நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் ஆண்களில் அதிகாரம், தலைகனம் ஒரு சிலருக்கு இருப்பது போல பெண்களிலும் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது வேதனையான விஷயம். கதையில் கோபத்தை கொட்டி தவறு செய்ய நினைப்பவரை திருத்தலாம். ஆனால் நிஜத்தில்... கேள்விக்குறி தான்


*******


என்ன தான் சட்டம் ஒழுங்கு கடுமையாக்கப் பட்டாலும் சிறு குழந்தை முதல் பெரிய பெண்மணி வரை பாலியல் கொடுமையிலும்,  இள வயது பெண்கள் ஒரு தலை காதலிலும் சிக்கி சீரழிந்து உயிரிழக்கின்றனர் அதைப் பற்றி ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :


இந்த தவறுக்கான சட்ட ஒழுங்கு இன்னும் கடுமையாக்கப்படவில்லை என்பது என் கருத்து. பெண் குழந்தைகளை கற்பு நெறிகளோடு வளர்க்கும் சமூகம் ஆண்களுக்கு கற்பு இருக்கிறது என்று வளர்க்கவில்லையே...


******


நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்:


அனைத்தும் பிடிக்கும்..


அற்றைத் திங்களில் நனியிதழ் என் மனதிற்கு நெருக்கமான பாத்திரம்.


******


அன்றைய நாளில் நாவல்களை புத்தகமாக வாசித்து வருவதற்கும் இன்றைய நாளில் ஃபோனில் வாசிப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன :


குழந்தையை கைகளில் ஏந்திக் கொஞ்சுவதற்கும், வீடியோ காலில் கொஞ்சுவதற்கும் உள்ள வித்யாசம்....


******


நாவல்களில் புகுத்தப்படும் திரைப்பட பாடல் வரிகள் சரியான தொகுப்பாக இருக்குமா? அல்லது அதற்கு ஏற்ப நாம் எழுதும் கவிதை வரிகள் ஏற்புடையதாக இருக்குமா:


அவரவர் விருப்பம்..


******


எழுத்தாளர்களின் மீதான வாசகர்களின் நம்பிக்கை பற்றி ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா:


எழுத்தாளர் என்பது ஒரு மாயபிம்பம். எழுத்துப் புரட்சி செய்யலாம். ஆனால் எழுத்தாளன் என்றாலே புரட்சியாளன் அல்ல. அவன் வெகு சாமானியனாகக் கூட இருக்கக்கூடும். என்னப்போல். அதனால் எப்பொழுதும் எழுத்தின் மீது மட்டும் நம்பிக்கை வேண்டும் வாசகர்களுக்கு.


*******


வாசகர்களுக்கான கேள்வி பதில் :


தொடர்கதையின் இறுதி அத்தியாயம் பற்றிய உங்களது கருத்து :


வாசித்தவனுக்கு மனநிறைவைத் தர வேண்டும். மூளைக்குள் சென்று நிரந்தர இடம் பிடிக்க வேண்டும்.


******


ஏன் எபிலாக் போடுறாங்க:


பெரும்பாலும் எந்த வகையைச் சேர்ந்த கதையாக இருந்தாலும், ஒரு பிரச்சினை இருக்கும். அதன் தீர்வை நோக்கி கதை நகரும். ஆசிரியர் உலாவவிட்ட கதாபாத்திரங்கள் வாசகனின் மனதையும் தொட்டிருக்கலாம். கடைசியில் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று முடித்தால், வாசிப்பவனுக்கு மனநிறைவு வரும் என்று நினைப்பதால் இருக்கலாம்.


******


ஒரு குழந்தையை பெற்றெடுத்து வளர்கிறதுக்குள்ள மூச்சு திணறுது இதுல ஒரே பிரசவத்துல மூணு குழந்தைகள்🤣🤣 பிறப்பது போல எழுதுவது பற்றி என்ன நினைக்கிறீங்க :


அப்படி மூச்சுமுட்ட நான் எழுதினது இல்லை. அப்படி எழுதவும் வராது. அனுபவம் இருப்பவர்களைக் கேட்கலாம்.


*******


நீங்கள் செளந்தரராஜன் சார் கூட சேர்ந்து எடுத்த ஒரு போட்டோ போட்டிருந்தீங்களே அதை பற்றி சொல்ல முடியுமா :


என்னுடைய அற்றைத் திங்களில் நாவலுக்கு இந்திரா சௌந்தரராஜன் அவர்கள் அணிந்துரை எழுதியிருக்கிறார். அது அவரை சென்று பார்க்கும்பொழுது எடுத்த புகைப்படம். சுருக்கமா சொல்லணும்னா "It's a coffee with Indra sir." நான் படித்து வியந்த எழுத்தாளர் ஒருவருடன் உரையாடியதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அவயின் அணிந்துரை வந்துவிட்டது. விரைவில் பதிவிடுகிறேன்.


*******


உங்களது நாவல்கள் எதைப் பொறுத்து இருக்கும். காதல் குடும்பம் திகில் மர்மம் :


பெரும்பாலும் வரலாறு, அறிவியல் புனைவு, சமூகம் சார்ந்ததாக இருக்கும். ஃபேண்டஸி வகையும் எழுதியிருக்கிறேன்.


******


போலீஸ் , கிரைம் நாவல் எழுதிய அனுபவம் இருக்கிறதா :


அற்றைத் திங்களில் கதை‌ அந்த வகையிலும் வரும்.


.....


மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏🙏


உங்கள் பதில்கள் அனைத்தும் அருமையாக இருந்தன. 


மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கவும், விருதுகள் பல வாங்கவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐💐


ஹாய் பிரண்ட்ஸ்,


இன்றைய எழுத்தாளரின் நாவலை வாசித்தவர்கள் அதைப் பற்றிய கருத்துகளை பரிமாறிக்கொள்ளுங்கள். மற்றவர்கள் வாழ்த்துகளை தெரிவியுங்கள்.


நன்றி

Comments

  1. என்னுடைய எழுத்து வடிவ நேர் காணலை பதிவு செய்தமைக்கு நன்றி சகோதரி

    ReplyDelete

Post a Comment