#எழுத்தாளர் அறிமுகப்படலம்
#சீசன் இரண்டு
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய அறிமுக எழுத்தாளர் அஞ்யுகா ஸ்ரீ அவர்களைப் பற்றிய நேர்காணல் இதோ :
பெயர் :
அஞ்யுகா ஶ்ரீ (புனைப்பெயர்)
***
சொந்த ஊர் :
வளர்ந்தது, படித்தது எல்லாமே நாமக்கல் மாவட்டம்.
***
படிப்பு :
பாவை காலேஜில் கணினி அறிவியல் முடித்தேன்.
***
பணி :
அப்பாவுடைய கார்மெண்ட்ஸ்ல வேலை பார்க்கிறேன்.
***
தளம் :
அழகிய தமிழ் மகள் மற்றும் தூரிகை தமிழ் நாவல்கள் இரண்டிலும் எழுதறேன்.
***
அமேசான் பெயர்:
Anjuka Sri அஞ்யுகா ஶ்ரீ
*****
உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:
வீட்டுக்கு முதல் மகள்… பள்ளிப்படிப்பு முழுவது அரசு உதவிபெறும் பள்ளியில்… யூஜி முடிச்சிட்டு அடுத்தவர்களுக்கா வேலை செய்வது பிடிக்காமல் சின்ன தாக இருந்தாலும் அப்பாக்கூட வேலை செய்றேன்… என்னதான் அப்பாக்கூட வேலை செய்தாலும் எந்த சலுகையும் கிடையாது ஒன்பது மணி நேரம் வேலை செஞ்சே ஆகணும்… அது போக கிடைக்கும் நேரத்தில தான் கதை எழுதறேன்… அதுவும் எனக்கே எனக்காக.
….
உங்களுடைய உழைப்பிற்கு ஏற்ற பலன் நிச்சயம் ஒருநாள் கிடைக்கும்
*****
உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா :
ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம் கிடைத்திருக்கு... இவை எல்லாம் தான் என்னை அடுத்த கதை எழுத தூண்டியது.
*****
உங்கள் நாவலை வாசிக்கும் வாசகர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது என்ன :
ஆன்டி ஹிரோ மற்றும் பேண்டஸி
*****
உங்களது கனவு லட்சியம் என்று ஏதாவது இருக்கிறதா :
சுயமா ஒரு தொழில் செய்யணும்… “நானே ராஜா நானே மந்திரி” மாதிரி.
புக் பப்ளிஸ் பண்ணணும்.
…
அருமை சகோ
******
எதற்காக நீங்கள் எழுத்துலகை தேர்ந்தெடுத்தீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா:
எனக்கு எழுதுவதை விட படிப்பது ரொம்ப பிடிக்கும்… பேய் மாதிரி கதை படிப்பேன்… விடியவிடிய கூட படிப்பேன்(கதை மட்டும் பாடபுத்தம் இல்லை)… அந்த ஆர்வம் தான் நான் எழுத காரணம்.
*****
எழுத்துலகில் நீங்கள் சாதித்தது என்ன:
சாதனைனு சொல்ல முடியாது ஒவ்வொரு நாளும் கத்துக்கிறேன்… எழுத்தையும் சரி மனிதர்களையும் சரி.
***
உங்கள் நாவலை வாசிக்கும் வாசகர்களுக்கு அதில் ஏதாவது கருத்துக்கள் இருக்குமா அல்லது குடும்ப நாவலாக மட்டுமே இருக்குமா :
நிறையா சொல்லியிருக்காங்க அதற்கான விளக்கமும் அப்பப்ப நான் சொல்லிருவேன்… இதுவரை நான் குடும்ப நாவல் தான் எழுதியிருக்கேன்…. அதிலும் பெண்களை மையமா கொண்டு தான் இருக்கும்.
..
நல்லது
*****
நீங்கள் நாவல் எழுதுவது என்பதை பகுதி நேர பணியாக செய்கிறீர்களா அல்லது முழு நேர வேலையாக வைத்திருக்கிறீர்களா :
கிடைக்கும் நேரத்தில் எழுதுவேன்… இதற்காக தனியா நேரம் ஒதுக்குவது இல்லை.
*****
நீங்க எழுதிய நாவல்களில் ரசிகர் விரும்பி ரசித்தது எது ? ஏன்..
அதிகமா ரசிகர்கள் விரும்பி வாசித்தது தணலில் பூத்த வெண்தாமரை மற்றும் என் எழில் மின்னலே!.
தணலில் பூத்த வெண்தாமரை- அன்னைக்காக மகள் போராடுவாள்.
என் எழில் மின்னலே! - கணவன் மனைவி உறவில் மூன்றாவது நபர்களால் ஏற்படும் பிரச்சனை பற்றியது.
…
நான் உங்களுடைய என் எழில் மின்னலே படிச்சிருக்கேன். அருமையாக இருந்தது.
*****
ஒரு அத்தியாயத்தில் வரக்கூடிய வார்த்தையின் அளவு எத்தனை இருக்க வேண்டும் :
என்னை பொறுத்தவரை 1200 வார்த்தைக்களுக்கு கீழ் இருக்க கூடாது அதற்கு மேல் எழுத்தாளர் விரும்பம்… அதற்கு கீழ இருந்தா சட்டுனு முடிஞ்ச மாதிரி ஆகிடும்.
*****
சிறுகதை எழுதிய அனுபவம் இருக்கிறதா :
அனுபவம் இருக்கிறது.
*****
நாவலுக்கும் , சிறுகதைக்கும் உள்ள வித்தியாசமாக ஏதாவது சொல்ல நினைக்கிறீங்களா :
நாவல் என்றால் மனதிலிருப்பதை மொத்தமா கொட்டிட முடியும்.
சிறுகதை என்றால் சொல்லவந்ததை எளிமையா சொல்லிடணும்... கொஞ்சம் இடரினாலும் மொத்தமா சொதப்பிடும்.
…
நிஜம் தான்
*****
தனி நபர் விமர்சன தாக்குதல் என்றால் என்ன? அப்படிப்பட்டவர்களை எப்படி எதிர்கொள்வது சிறப்பானது :
இதுவரை நான் இந்த மாதிரியான தாக்குதலை அனுபவித்ததில்லை… அதனால் எனக்கு தெரியலை.
இருந்தாலும் என்னுடைய கருத்து “தனிப்பட்ட மனஸ்தாபத்தை இதில் காட்டாதிங்க”.
*****
ஒரு தொடர்கதையின் அத்தியாயங்கள் மற்றும் வார்த்தைகள் எத்தனை வரிகளில் இருப்பது ஏற்புடையது :
நான் எழுதும் கதைகளின் அத்தியாயம் 1200 – 1400 எழுதுவேன்.
மொத்த வார்த்தைகள் 35000 – அதற்கு மேல்.
*****
ஒரு நாவல் எழுத நீங்கள் தேர்ந்தெடுப்பது என்ன..
அதிகமா குடும்பமும் பெண்களையும் வைத்துதான் எழுதினேன்.
*****
போட்டி கதை எழுதிய அனுபவத்தை பற்றி சொல்லமுடியுமா:
முதலில் எழுதிய கதையே போட்டிக்காக எழுதிய கதை தான்… கொஞ்சம் சிரமாம தான் இருந்தது… அதற்கு பின் அதிகமா நாவல் போட்டியில் நான் கலந்துக்கலை… சிறுகதை போட்டியில் தான் கலந்துக்கிட்டேன்
*****
போட்டியில் வரக்கூடிய கதைகள் எதை பொறுத்து இருக்கணும்னு நினைக்கறீங்க:
அது எழுதும் எழுத்தாளரின் விருப்பத்தை பொறுத்து மாறும்.
*****
ஒரு கதை எழுத ஆரம்பிக்கும் முன்பு முழுவதையும் டைரியில் எழுதி விட்டு அத்தியாயம் வாரியாக கொடுக்கிறீர்களா அல்லது மனதின் எண்ணங்களைவார்த்தைகளாக கோர்கிறீர்களா :
என் மனதில் எண்ணத்தை தான் எழுத்தா எழுதுவேன்… இதுவரை நான் எழுதிவைத்து கதை எழுதியது இல்லை.
*****
கட்டுப்பாடு விதிக்கப்படுகின்ற இடத்தில் எழுத்தாளனின் கற்பனை, கதையின் கரு எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் :
கட்டுப்பாடுகளை பொறுத்து அவை எழுத்தாளனின் கைகளில் தான் இருக்கு.
….
நிஜம் தான்
******
உங்கள் நாவல்களை தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்களுக்கு நீங்கள் கூறுவது :
படிச்சு முடித்ததும் மறக்காமல் உங்கள் கருத்துக்களை சொல்லுங்க… உங்க கமெண்ட் தான் எங்களுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
*****
உங்களுடைய தொடர்கதையான " என் வேரின் பந்தம் அவனில் " ராசியற்றவள் (நாயகி) என வீட்டாரால் புறக்கணிக்கப் பெற்றவளாகவும், குப்பை தொட்டி அருகே இருந்த குழந்தையை எடுத்து நாயகி வளர்ப்பது போலவும்,கொடுத்திருந்தீங்க அந்த கதை பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா:
நாட்டில் இன்னும் ராசினு சொல்லி குழந்தைகளை புறக்கணித்துக்கொண்டு தான் இருக்காங்க… அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி… சிலது வெளியே தெரிந்திடுது சிலர் படும் அவலம் தெரியாமலே போய்டுது… பத்துமாதம் சுமந்து பெத்த குழந்தையைவிட ராசியும் அதிர்ஷ்டமும் பெறுசா பார்க்கிறார்.
குப்பை தொட்டினு சொன்னாவே பிறந்த உடனே இறக்கமின்றி வீசப்படும் குழந்தைகள் தான் நியாபகத்தில் வருது… சமீபத்தில் கூட பிறந்த குழந்தையை சாக்கடையில் வீசிட்டு போனாத நியூஸில் வந்தது.
யாரோ பண்ணிய தப்புக்கு குழந்தைகள் தான் அநாதை என்ற பட்டத்தோடு உலகத்தில் போராடுகிறார்.
எல்லாம் இருக்கும் போதே படும் அவலங்கள் எண்ணமுடியாத அளவுக்கு இருக்கும் போது இவர்களின் நிலை கேள்வி தான்.
…..
நிச்சயமாக சகோ, அற்ப சுகத்திற்கு ஆசைபட்டு விலை மதிக்க முடியாத பொக்கிஷங்களை வீசி எறிகின்றனர். எத்தனையே பேர் இல்லையே என்று கதறி அழ இவர்களோ இப்படி நடந்து கொள்கின்றனர்.
எல்லாம் காலக்கொடுமை. இன்றைய சமூகத்தின் மிகச்சிறந்த முன்னேற்றமா அல்லது சாதனையா என்று தான் தெரியவில்லை
*****
"என் எழில் மின்னலே' தொடர்கதையின் சென்றாயன், சரசு, அவரது மகன் மதுசூதனன் அவரது மனைவி வாகீஸ்வரி கதாபாத்திரம் எல்லாமே அருமையாக இருந்தது. அந்த தங்கை கதாபாத்திரம் பற்றியும் அது நிஜ சம்பவத்தின் தாக்கமா என்பது பற்றியும் சொல்ல முடியுமா :
இந்த கதையில் சில நிகழ்வுகள் உண்மையா நடந்தவை… குறிப்பிட்ட சொல்ல விரும்பலை.
…
பரவாயில்லை. விட்டிடலாம்
*****
உங்களுடைய சிறுகதை" கல்லாய் போன மனது" பற்றி சொல்லுங்க
இதன் கருவும் உண்மையை தழுவியவை தான்… இத்தகையை பாவங்களை செய்தவர்கள கர்மாவை மறந்துவிடுகிறார்கள்… திருப்பி தாக்கும் போது அதன் வீரியம் என்னவாக இருக்கும் என்று யோசியுங்கள்… காலங்கள் மாற மாற வீடுகளை விட ஆசிரமங்களின் எண்ணைக்கை கூடும் போல்…
…
திருமணமாகி கணவன் வீட்டுக்கு செல்கின்ற பெண்கள் பிறந்த வீட்டினர் மீது காட்டுகின்ற பாசத்தை போல புகுந்த வீட்டினரின் மீதும் பாசம், விட்டுக் கொடுப்பு, அக்கறை என்றிருந்தால் இந்த பிரச்சினை வரப்போவது இல்லை.
குறிப்பாக ஒரு கணவன், குடும்பத்தலைவன் எந்த சூழ்நிலையிலும் தன்னிலை மாறாமல் இருபக்கமும் சரிசமமாக நடந்து கொண்டால், அவன் மனையாளும் அப்படியே இருந்து குடும்பத்தை அனுசரித்து போவாள்.
அவனே அடிமை ஆகிவிட்டால்…
*****
உங்களின் நாவல்கள் மற்றும் சிறுகதைகளின் பெயர்கள் :
முடிவுற்ற நாவல்கள் :
என் வேரின் பந்தம் அவன்
அன்பே நீ புயல்? தென்றல்?
தணலில் பூத்த வெண்தாமரை
என் எழில் மின்னலே!
நெஞ்சில் துஞ்சும் சாரல்
ஆன் கோயிங் நாவல்கள் :
மதுரம் கொஞ்சும் மாயோன்(ள்) நீயே.
உயிரை ஆளும் அழகிய!
சிறுகதைகள் :
இமயம் என் இமைக்குள்
புழுதியொரு பூவாகி
ஆலம் விழுதென ஆயிரம் ஆசைகள்
கல்லாய் போன மனது
ஊனும் நீ! உயிரும் நீ!
பிரம்மனின் விசித்திரக்கலை இவள்!
பிழையாய் வடித்த சிலை இவள்!
எங்கும் மரண ஓலம்.
தீயாய் தகிக்கும் நெஞ்சம்
….
அருமையான பெயர்கள் தேர்ந்தெடுப்பு
*****
வாசகருக்கான கேள்வி பதில் :
நீங்கள் குடும்ப நாவல் எழுதுவது ரொம்ப நல்லா இருக்கு இப்படியே தொடர்ந்து கொடுக்க முடியுமா :
முடிந்தவரை என்னுடைய பெஸ்ட்டை கொடுக்க முயற்சி பண்றேன்.
*****
உங்கள் தொடர்கதை வாசிக்க ரொம்ப இயல்பாக இருக்கு அதிகப்படியான ரொமான்ஸ் காட்சிகளை இணைக்காமல் இப்படியே கொடுங்க :
கண்டிப்பாக இயல்பாகவும் படிக்க முகம் சுளிக்கும் படியாகவும் இருக்காது.
*****
கல்லாய் போன மனது சிறுகதைக்கான முடிவை மாத்தி கொடுத்திருக்கலாம் சிஸ்டர் அது ரொம்ப சோகம் . ஏன் இப்படி ஒரு முடிவை கொடுத்தீங்க :
இதற்கு அழுத்தம் தேவை.. இயல்பா கொண்டுபோயிருந்தா நாடகம் மாதிரி இருந்திருக்கும்… இது என் கருத்து
*****
குடும்ப கதையே சதா கொடுத்துட்டு இருக்கும் நீங்க எப்போ ஆன்டி ஹீரோ நாவல் கொடுக்கப் போறீங்க :
கண்டிப்பா கொடுப்பேன் ஆனால் இப்போதைக்கு இல்லை… எப்ப ஆன்டி ஹீரோக்கான சரியான கரு கிடைக்கிறதோ அப்ப
*****
உங்க கதை படிக்கிறப்போ ஒரு குடும்ப கதை படிச்ச பீலாக இருக்கும். இப்படியே தொடர்ந்து கொடுக்க முடியுமா :
நிச்சயமாக…
*****
உங்கள் நட்பில் உள்ள எழுத்தாளர்கள் :
நிறையா பேர் இருக்காங்க… குறிப்பிட்டு செல்ல முடியாது (பெயர்விட்டுட்டா யார் மாட்டிக்கிட்டு முழுப்பது”
***
நீங்கள் தொடர்ந்து வாசிக்க விரும்பும் எழுத்தாளர்:
அப்படினு தனியா யாரையும் சொல்ல முடியாது… எனக்கு பிடித்த மாதிரி இருக்க அனைவருடைய கதைகளையும் முடிந்தவரை படிப்பேன்.
….
மிக்க நன்றி சகோதரி,
உங்களுடைய பதில்கள் அனைத்தும் அருமையாக இருந்தது. மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய எழுத்தாளரின் நாவலை வாசித்தவர்கள் அதைப் பற்றிய கருத்துகளை பரிமாறிக் கொள்ளலாம்.
மற்றவர்கள் அவரது திறமையை வாழ்த்தலாம்.
நன்றி
Comments
Post a Comment