அர்பிதா

 #எழுத்தாளர் அறிமுகப்படலம்


#சீசன் இரண்டு


ஹாய் பிரண்ட்ஸ்,


இன்றைய அறிமுக எழுத்தாளர் அர்பிதா அவர்களைப் பற்றிய நேர்காணல் இதோ…


பெயர் : Ashwini 


சொந்த ஊர் : சென்னை 


படிப்பு : MBBS


பணி : DOCTOR 


தளம் : CHENNAI 


அமேசான் பெயர் : அர்பிதா.


****


நீங்கள் எழுதிய முதல் நாவல்:

இது தான் காதல் என்பதா❤️🥰😍


******


நீங்கள் எழுதிய மொத்த நாவல் :

7


******


எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது:

3


*******



நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து தொடர்கதை or நாவல்:

ஈர்மத்தின் எச்சங்கள்.


*******


உங்கள் நாவல்கள் சிலவற்றின் பெயர் :

இது தான் காதல் என்பதா

நித்திரை கலைத்த மாயவள்

மாயோனின் மாத்திரை 

உன்னுள் உனதானேன்.

ஈர்மத்தின் எச்சங்கள்.

தீண்டாய் முளறிபகையே.

மற்றொன்று பெயர் குறிப்பிட இயலாது 



இரண்டு வாசித்திருக்கிறேன்


******


உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:


சென்னையில் வாழ்ந்து வரும் இயல்பான பெண் நான். படிப்பு மொத்தம் இங்கே முடித்து, வீட்டில் கூண்டுக் கிளியாய் வாழ்ந்து வந்த எனக்கு, சிறகு கொடுத்தது என்னவோ என்னுடைய மேல் படிப்பு தான்.


அதிகம் பேசாமல், யாருடனும் அதிகம் பழகாத என்னை, இன்று ஒரு இடத்தில் நிலைக்க பெற செய்ததும் அதே படிப்பு தான்.


இப்பொது அம்பத்தூரில் ஒரு மருத்துவமனையில் மூன்று வருடமாய் மருத்துவராய் பணியாற்றி வருகிறேன்.


எழுத்துலகிற்கு வந்து சேர்ந்து மூன்று வருடம் ஆகிறது.


என்னை பற்றிச் சொல்ல இருப்பது மொத்தம் இதுவே.



அழகான அறிமுகம்


******


உங்களது விருப்பமான எழுத்தாளர்:


இந்திரா சௌந்தராஜன்

பாலகுமாரன்

ராஜேஷ் குமார்

கல்கி கிருஷ்ணமூர்த்தி

ஜெயகாந்தன் 

சுஜாதா

இன்னமும் பலர்.


*******


உங்களது எழுத்து அனுபவத்தைப் பற்றி சொல்ல முடியுமா:


மூன்று வருடம் முன்பு, பாதை புரியாமல் நாட்களை நான் கடத்திய போது, என்னைத் தேற்றும் துணையாய் என் கையில் கிடைத்தது தான் இந்த எழுத்துலகம்.


அங்கிருந்து முளைத்து எழுந்தவள் தான் நான்.


எழுத்துக்கு அதிக முக்கியத்துவம் உண்டு என் வாழ்வில். திசை அறியாமல் திணறிய போது வழி காட்டியது அந்த எழுத்துக்கள் தான்.


இன்று என் வாழ்க்கையின் உறவையே எனக்கு அறிமுகப் படுத்தி, மீளா காதலில் என்னை திளைக்க வைத்து கொண்டு இருக்கிறது.


நானே தேடினாலும் கிடைக்காத என் உயிரை என்னிடம் கொண்டு சேர்த்த இந்த எழுத்தை, முயன்றும் விட இயலுமா என்னால்.😍❤️❤️



முடியாது தான்


******


உங்களது திறமையை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க:


வண்ணங்களை போல எண்ணங்களில் பிறக்கும் எழுத்துக்களுக்கும் தனித்தனி ரசனைகள் உண்டு. போற்றப்படாத நாவல்கள் திறமையை வெளிக்காட்டவில்லை என்பதை விட, சரியான வாசகர்களை அது சேரவில்லை என்றே பொருள். என் திறமையை எண்ணி என்னை நான் வியக்கும் அந்த கணத்தை கொடுக்கும் அந்த எழுத்தை நோக்கி எழுதி கொண்டு இருக்கிறேன்.


********


உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள்:


லிஸ்ட் பெருசா போகுமே.🤣🤣🤩


******


நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள்:


காதல் குடும்ப கதைகளை விட, சற்று மாறுபட்டு, திகில், அமானுஷ்யம், ஃபான்டஸி போன்ற கதை கருவில் ஆர்வம் அதிகம் எனக்கு.


******


உங்களது நாவல்கள் சமூகப் படைப்பாக இருக்குமா அல்லது காதல் நகைச்சுவை குடும்பம் இதை பொறுத்து இருக்குமா:

காதல், நகைச்சுவை, குடும்பம் இது எல்லாம் சேர்ந்ததே சமூகம் என்றால், என் நாவலும் அப்படியே. அதோடு நில்லாமல் என் கற்பனைகளையும் ஒப்பனையாக கொண்டிருக்கும். எல்லாயில்லாதது கற்பனையில் தோன்றும் எழுத்துக்கள் மட்டும் தானே.



நிச்சயமா


*******


நீங்கள் தொடர்ந்து வாசிக்க விரும்பும் நாவல்கள்:

டாலர் தேசம்

மாயவலை


******


நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்:


எப்பவுமே முதல் கதை தான் மனதிற்கு அதிக நெருக்கமாய் இருக்கும். அதே போல் என்னுடைய முதல் கதை தான் என் கற்பனை உலகை திறக்கும் திறவு கோலாய் மாறி இருந்தது. இன்று நான் எழுதும் எழுத்துக்கள் அனைத்திற்குமே ஆரம்பம் அது தான்.


கவர்ந்த கதாபாத்திரம்- உன்னுள் உனதானேன் கதையில், சூர்யா என்ற பாத்திரம்.


ஆரம்பத்தில் நான் அவனை வடிவமைத்த போது, என்னை ஈர்க்க தவறிய அந்த பாத்திரம், கதையின் நகர்வில் என்னை மொத்தமாய் கொள்ளையடித்து விட்டது என்றே கூறலாம்.


ஒரு சில இடங்களில், "நானா இப்டி எழுதி இருக்கிறேன்" என்ற வியப்பை என்னுள் தந்ததும் அது தான்.


******


உங்கள் நாவல் or தொடர்கதை எது  வாசகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது, அதற்கான காரணத்தை விளக்க முடியுமா :


       பொதுவாகவே தொடர்கதை அதிக வாசகர்களை கவர்கிறது தற்காலத்தில். இயந்திர உலகில் தொடர்கதைக்கு வாசிப்பு நேரம் ஒதுக்குவது எளிதாக அமைவதும் காரணமாகலாம். சமீபத்திய மின் செயலிகளும் தளங்களுமே தொடர்கதையை சற்று அதிகம் ஆதரிக்கிறது. தொடர்கதை மட்டுமே வாசகர்களை மீண்டும் மீண்டும் செயலி அல்லது தளத்திற்கு வரவைக்கும். அதில் நல்லதொரு வியாபாரமும் இருக்கிறது.


என் தனிப்பட்ட முறையில் பார்த்தால், நாவல்கள், தொடர்கதைகள் இரண்டும் பேசப்படுகிறது. எண்ணிக்கைகள் மாறினாலும் அன்பும் ஆதரவும் ஒன்று தானே.


******


உங்கள் கதைகளை வாசிக்கும் போது அதில் சமூக சிந்தனைகள், நிஜ சம்பவத்தின் தாக்கம் ஏதாவது இருக்குமா :


என் கதைகளில் இரண்டும் இணைந்தே தான் இருக்கும். இரண்டையும் விட அதிகமாக கற்பனைகளே நிறைந்திருக்கும். ஒரு எழுத்தாளரின் கற்பனைதான் அவரின் தனித்தன்மை என்பதை நம்புபவள் நான்.


******


நிஜ வாழ்வின் நடக்கின்ற சம்பவங்களை நாவலாக வடிவமைக்க என்ன செய்ய வேண்டும்:


அப்போதும் அதிகமாக கற்பனைதான் செய்ய வேண்டும்.


*****


உங்களது நாவல் எழுதும் பழக்கம் எப்படி ஆரம்பமானது. அதன் தூண்டுகோல் யாரென்று சொல்ல முடியுமா:


தூண்டு கோல் என்றால், அது நான் எழுதும் முன்பு வாசித்த கதைகள் என்று தான் கூற வேண்டும்.


அதில் மிக முக்கியமாய் குறிப்பிட வேண்டியது, ரியா மூர்த்தி அக்காவை தான். பல நாட்கள் எழுத நினைத்து கொண்டு இருந்து என்னை, உடனே எழுத வைத்தது அவரின் கதை தான்.


நான் எழுதிய முதல் கதையின் முதல் அத்தியாயத்தை வாசித்து, மேலும் ஊக்க படுத்தியது என் நண்பன். அவனும் இந்த பயணத்தின் மிக முக்கிய அங்கம்.


******


டாக்டராக பணிபுரியும் நீங்கள் எழுத்தாளராக அவதாரம் எடுத்தது எப்படி :


மருத்துவ பணியில் எனக்கு இருக்கும் பணிச்சுமை, ஸ்ட்ரெஸ் என்று அனைத்திற்குமே மருந்தாய் விளங்குவது என் எழுத்து தான்.


என்னால் சமாளிக்க இயலாத அளவு விதி என் வாழ்வில் விளையாடிய போது, கை கொடுக்கும் நண்பனாய் இருந்ததும் எழுத்து தான்.


இன்றும் என் பணி சுமை, என்னை ஆட்கொள்ளாமல், என்னை பத்திரமாய் பாதுகாப்பதும் அதே எழுத்துகள் தான். 


*******


உங்களுக்கு  கிடைக்கும் ஓய்வு நேரங்களில் கதை எழுதுவது சலிப்பாக இருக்காதா :


நிச்சயம் இல்லை. என்னை நிம்மதியாய் ஓய்வெடுக்க வைப்பதே இந்த எழுத்து தான்.


வேடிக்கை என்னவென்றால், பலருக்கு மருந்தாய் இருக்கும் எனக்கே மருந்தாகி போனது இந்த எழுத்துக்கள். 


******


உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு கதை எழுதிய அனுபவம் இருக்கிறதா :


உண்டு. என் முதல் கதை கிட்டத்தட்ட உண்மை கதையும், சிறு கற்பனையும் கலந்ததாக தான் இருக்கும்.


******


நாளிதழ்களில் கதை எழுதிய அனுபவம் பற்றி இருந்தால் சொல்லுங்க :


இதுவரை அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்க வில்லை.


******


இன்றைய எழுத்தாளர்கள் கற்றுக் கொள்ளக் கூடியவை என்று ஏதாவது உண்டா:


இன்றைய நேற்றைய நாளைய என்று அத்தனை எழுத்தாளர்களுக்கும் கற்றுக்கொள்ள எத்தனையோ உண்டு. வாசிப்பு மட்டும் தான் அதற்கு தீர்வாக நான் கருதுவது. எழுதுவதே நின்றாலும் வாசிப்பு நீள வேண்டும்.


நானும் இன்றைய எழுத்தாளர் தான். நான் கற்றுக்கொள்ள வேண்டியது எதாவது இருந்தால் சொல்லுங்கள். பரிசீலிக்கிறேன். 😛


….


வாசியுங்கள் விமர்ச்சியுங்கள்🙏🙏🙏


******


ஒரு நாவலில் வரக்கூடிய எந்த மாதிரியான காட்சிகள் நம்முடைய மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்னு நினைக்குறீங்க:


அதிகமாய் காதல் கட்சிகளும், பிரிவை காட்டும் சோக காட்சிகளும் தான் என்பது என் எண்ணம்.


*****


நீங்க you tube Channal and Audio ஏதாவது வச்சிருக்கங்களா:


SenAsh என்னுடைய youtube சேனல்.

https://youtube.com/channel/UCF4EXOHcwuJXe-yYYFrGPHg


SenAsh Series என்னுடைய  podcast.

https://open.spotify.com/show/2PeSVKK3FOCl0TmsEGvVie?si=Z6qOff-ZSUm50Qzud_4-NA&utm_source=copy-link&dl_branch=1


*******

மின்னிதழ் என்றால் என்ன?


பல கைகள் ஒன்றாய் கோர்த்து, செய்யும் கூட்டு முயற்சி.


******

கொரோனா பற்றி கதை எழுதிய அனுபவம் இருக்கிறதா :


கொரோன பற்றிய விழிப்புணர்வை நானே என் பக்கத்தில் போட்டு வந்தேன். பின் பணி சுமையால் அது பாதியிலேயே நின்று போனது.


******


திகில் கதை எழுதிய அனுபவத்தை பற்றி பகிர்ந்து கொள்ள முடியுமா :


இதுவரை இல்லை.



ஒரு பேய் கதை வாசித்த நியாபகம் இருக்கிறதே..


******


தீண்டாய் முளரிப் பகையே போட்டிக் கதை ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது. அப்படி ஒரு கதை எழுதவேண்டும் என்று எப்படி தோன்றியது. அந்த கதை பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா :


அந்த கதையின் கரு பல நாட்களாய் என் மனதில் இருந்தது தான். ஏனோ எழுத நேரமோ, மனமோ வராமலே இருந்தது.


இரட்டை ரோஜா கதை அறிவிப்பு வந்ததுமே, எத்தனையோ கதையின் கருக்கள் மனதில் ஓடி கொண்டு தான் இருந்தது.


பல தடைகள் தாண்டி, பல ஏமாற்றங்களை தாண்டி, இனி இது வேண்டாம் என்ற எண்ணத்தில் நான் இருந்த போது என்னை கை தங்கி பிடித்து தேன் நிலா தான் 🥰🥰🥰.


ஆரம்பம் முதல் முடிவு வரை, அவள் இல்லாமல் இந்த கதை சாத்தியமே இல்லை


கற்பனை இருவரின் பங்கு உண்டு என்றாலும், அவள் இல்லாமல் போயிருந்தால், தீண்டாய் முளரிப்பகையே உருவாகமலே அழிந்து இருக்கும்.


நான் துவண்டு நின்ற ஒவ்வொரு முறையும் என்னை எழுத தூண்டியவள், இறுதி வரை என் கை கோர்த்தே தான் முடிக்கவும் செய்தாள். 


*****


தொடர்கதையில் வரக்கூடிய எந்த மாதிரியான விஷங்கள் படிப்பவரின் கருத்தை கவரும்னு நினைக்கிறீங்க :


காதல் குடும்ப கதைகளாக இருந்தால் தான், வாசகர்கள் மத்தியில் அதிகம் படிக்க தேர்ந்தெடுக்க படுபவை.


அதே காதல், பிரிவு, உறவு என்றாலும், அதை வித்தியாசமாக கொடுக்கும் எழுத்தாளர்களே இன்று அதிகம் பேச படுகிறார்கள் என்பது என் எண்ணம்.


….


நிஜம் தான்


******


இனி வாசகருக்கான கேள்வி பதில் :


அர்பிதா கதை ரொம்ப நல்லயிருக்கும் மாயாஜால கதை படித்து இருக்கிறேன்.❤️❤️❤️❤️❤️❤️

 உங்களுக்கு எப்படி எழுத ஆர்வம் வந்ததது . டாக்டர் தொழில் பிடிக்குமா? எழுதுவது பிடிக்குமா dear:


இந்த இரண்டையும் என்னில் இருந்து பிரிக்கவே முடியாது.


ஒரு வலிக்கு மருந்து அளித்து, காயம் போகும் போது பிறருக்கு கிடைக்கும் அமைதியும், மகிழ்ச்சியும் எனக்கு தருவது எழுத்து தான்.


ஒன்றில்லாமல் மற்றொன்று இருக்காது. அப்படி இருக்குமேயானால், நான் இருப்பதும் சந்தேகம் தான்.


*****


மாயாஜாலக் கதைகளில் வார்த்தைக் கோர்வு மற்றும் காட்சி நகர்வு இவற்றிற்கிடையேயான தொடர்பினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்.

இதில் மொழி வழக்கு பற்றி உங்களது கருத்து என்ன ?


மொழி தேர்ச்சி இதுல ரொம்பவே முக்கியமான ஒன்னு. எவ்வளவு படிச்சுருந்தாலும், கற்பனைக்கு உயிர் சேர்ப்பது நம்மளோட வார்த்தை தேர்வுகள் தான்.


நாம் கற்பனை செய்யும் ஒரு காட்சி, படிப்பவரின் கற்பனையையும் தூண்டியே ஆக வேண்டும். அது தான் அந்த கதைக்கான வெற்றி.


அந்த வெற்றியை பெற, சரியான வார்த்தை தேர்வும் கற்பனை காலத்தின் அமைப்பும் இருந்தால் மிக முக்கியம்.


******


ஒரே சமயத்தில் மூன்று நான்கு கதை எழுதி வருபவர்கள் ஏதேனும் ஒன்றை கொடுத்து முடித்த பிறகு அடுத்த கதை எழுதினால் வாசிப்பவர்களுக்கும் சிரமம் இல்லை. கதையும் தொய்வின்றி நகரும் என்று நினைக்கிறேன் இது பற்றி நீங்க ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :


அப்படி இல்லை. நானும் ஒரு நேரத்தில் இரண்டு கதை எழுத்துபவள் தான்.


எனக்கு திருப்திகரமான அத்தியாயத்தை என்னால் கொடுக்க இயலும் போது, ஒரே நேரத்தில் இரண்டு மூன்று கதைகள் எழுத்துவத்தில் தவறு இல்லையே.


என் கதைக்கு நான் தானே முதல் ரசிகை. நானே ரசிக்கும் போது, அதில் சொதப்பல்கள் இருக்காது என்பது என் நம்பிக்கை.


….


நம்பிக்கை எல்லாருக்கும் பொதுவான விஷயம் தான். ஆனால் நிறைய கதை அல்லது குறிப்பிட்ட எழுத்தாளர்களின் எழுத்துகளை தேர்ந்தெடுத்து வாசிப்பவர்களுக்கு அது சிரமமாக தான் இருக்கிறது. அது போல கொடுக்கப்படுகின்ற நான்கு கதைகளில் ஏதாவது ஒன்றிரண்டு மட்டுமே பெயர் பெரும் என்ற சாத்தியகூறுகளும் உள்ளது.


******


சரித்திர நாவல் எழுதும் ஆசை இருக்கிறதா :


உண்டு. மாயோனின் மாத்திரை அப்படி பட்டக் கதை தான். நேரம் ஒதுக்கி வாசித்துப் பார்த்து கூறுங்கள்.



அது மட்டும் சிக்கல்🤣🤣🤣


*****


பொன்னியின் செல்வன் கதை திரைப்படமாக மாறுவது பற்றிய உங்களது கருத்து:


எத்தனையோ நாவல்கள் நூல்கள் இருக்கும் போதும், ஒரு சில மட்டும் பிரபலப்படுத்த படுவதில் அரசியல் இருப்பதாக நான் கருதுகிறேன்.


ஆயிரமாயிரம் மனக் கண்களில் தனித்தனி காட்சியாக கடந்து முடிந்த ஒரு நாவல் மீண்டும் திரையிடப் படுகிறது. இன்னும் வாசகர்களை சென்று அடையாத, அடைய வேண்டிய பல கதைகள் அவலமாய் காத்து கிடக்கிறது.


….


மிக்க நன்றி🙏🙏 


உங்களுடைய பதில்கள் அனைத்தும் அருமையாக இருந்தன. மேலும் பல படைப்புகள் வழங்கிடவும் சாதனைகள் பல நிகழ்த்திடவும் மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐


ஹாய் பிரண்ட்ஸ்,


இன்றைய எழுத்தாளரின் படைப்புகளை வாசித்தவர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவியுங்கள் மற்றவர்கள் அவரது திறமையை வாழ்த்துங்கள்


நன்றி

Comments