# எழுத்தாளர் அறிமுகப்படலம்
#சீசன் இரண்டு - 14
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய அறிமுக எழுத்தாளர் ஜெயலட்சுமி கார்த்திக்…
அவர்களைப் பற்றிய நேர்காணல்:
பெயர் : ஜெயலட்சுமி கார்த்திக்
சொந்த ஊர் : பிறந்தது, வளர்ந்தது எல்லாம் திண்டுக்கல், இன்னிக்கு வாசம் செய்யறது சிங்காரச் சென்னை.
படிப்பு : இளங்கலை தகவல் தொழில்நுட்பம்
பணி : குடும்பத்தலைவி, freelance designer
தளம் : சங்கமம், பிரதிலிபி, சக்கரவாகம்
https://sangamamnovels.com/forums/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-jeyalakshmi-karthik.151/
***
பிரதிலிபியில் என்னை ஃபாலோ செய்ய :
https://tamil.pratilipi.com/user/311t70ycl2?utm_source=android&utm_campaign=myprofile_share
**
https://sakaravagamtamilnovels.blogspot.com/?m=1
***
அமேசான் பெயர்: Jeyalakshmi Karthik
https://www.amazon.in/Jeyalakshmi-Karthik/e/B086R3FT96/ref=dp_byline_cont_ebooks_1
******
உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:
சாதாரணமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த வால் பிள்ளை தான் நான். நிறைய சேட்டை செய்வேன். இருக்கிற இடம் எப்பவும் சந்தோசமா இருக்கணும்ன்னு நினைக்கிற கேரக்டர். என்கிட்ட கேட்கறவங்களுக்கு என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்ணுவேன். கண்டிப்பா கோபக்காரி தான். திருமணம் முடிந்து 9 வயது மகளும், 5 வயது மகனும் இருக்காங்க. வீட்டுக்காரர் ரொம்பவே சப்போர்ட்டிவ். அதனால குடும்ப வண்டி நிதானமா ஓடுது. என்னைப்பத்தி அவ்ளோ தான் நான் சொல்ல முடியும். வேற ஏதாவது உங்களுக்கு தெரியும்ன்னா நீங்க சொல்லுங்க நட்புகளே.
…
அப்போ, என்னைப் போலவேனு சொல்லுங்க
*****
உங்களது கனவு லட்சியம் என்ன:
கனவு..
எப்பவும் எதையாவது கத்துகிட்டே இருக்கணும். புதுசு புதுசா தெரிஞ்சுக்கணும். எங்கயும் தேங்கி நின்னுடக்கூடாது. நதி மாதிரி ஓடிக்கிட்டே இருக்கணும். இதான் வாழ்நாள் லட்சியம்.
….
அருமை சிஸ்டர்
******
எதற்காக நீங்கள் எழுத்துலகை தேர்ந்தெடுத்தீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா:
எழுத்துலகை தேர்ந்தெல்லாம் எடுக்கல பா. வாசிப்பு ரொம்பவே பிடிக்கும். நிறைய வாசிப்பேன். நாவல் பக்கம் என்னை இழுத்தது எழுத்தாளர் உமா சரவணன் தான். அவங்க வாசிச்ச புத்தகங்களை எங்க வீட்டுக்கு எடுத்துட்டு வருவாங்க. அப்படியே நாவல்கள் என்னை உள்ளே இழுத்துகிச்சு. அப்பறம் 2019ல ஒரு துயரமான சம்பவத்துல இருந்து வெளில வர, வாசிக்கும் போது, எனக்குள்ள ஒரு கதை தோணுச்சு. அதை செல்போன் நோட்ஸ்ல எழுதிட்டு இருந்தேன். கணவர் அதை கவனிச்சிட்டு எழுத சொல்லி ஊக்கம் கொடுத்தார். பிரவீணா, நித்யா மாரியப்பன், சித்ராதேவி போல வாட்பேட்ல இருந்த எழுத்தாளர்களும் ஊக்குவிக்க, எழுத ஆரம்பிச்ச கதை தான் ‘அமுதங்களால் நிறைந்தேன்’. உண்மையில் அந்த கதை தான் என்னை எழுத்துலகுக்கு கொண்டு வந்து விட்டது.
….
🙂🙂🙂
******
எழுத்துலகில் நீங்கள் சாதித்தது என்ன:
சாதிக்கிற அளவுக்கு இன்னும் வளரல பா. போட்டிகளில் பரிசு வாங்கி இருக்கேன். சங்கமம் ல சிறுகதை போட்டி, இரட்டை ரோஜா போட்டில, பிரதிலிபில அருவி, மறுபடியும் போட்டிகளில் பரிசு வாங்கி இருக்கேன்.
******
உங்கள் நாவலை வாசிக்கும் வாசகர்களுக்கு அதில் ஏதாவது கருத்துக்கள் இருக்குமா அல்லது குடும்ப நாவலாக மட்டுமே இருக்குமா?
கண்டிப்பா என் கதையை வாசிக்க அவங்க செலவு செய்யும் நேரத்துக்கு பயனுள்ளதா அவங்களுக்கு ஏதாவது தகவல் என் கதைகளில் இருக்கும், தொழில் சார்ந்து, சமூகம் சார்ந்து, குடும்ப உறவுகள் சார்ந்து, கண்டிப்பா ஏதாவது அவங்க தெரிஞ்சுக்க தேடி எடுத்து எழுதுவேன். அதுல எனக்கு ரொம்ப நிறைவா இருந்தது வாழ்க்கை நெறிகள் பற்றி திருக்குறள் பொருள் கலந்து ஒவ்வொரு அத்தியாயமும் எழுதிய ‘இணை கோடுகள்’ கதை தான்.
******
நீங்கள் நாவல் எழுதுவது என்பதை பகுதி நேர பணியாக செய்கிறீர்களா அல்லது முழு நேர வேலையாக வைத்திருக்கிறீர்களா :
பகுதி நேரம் முழு நேரம் அப்படின்னு சொல்ல இதை நான் தொழிலா பார்க்கல. இது பொழுதுபோக்கு துறையில் என் பங்கு அவ்ளோ தான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ud type பண்ணுவேன், இல்ல அதுக்காக google கூட குப்பை கொட்டுவேன்.
…
🤣🤣🤣🤣
******
நீங்க எழுதிய நாவல்களில் ரசிகர் விரும்பி கொண்டாடியது எது ? ஏன்..
கொண்டாடினாங்களான்னு தெரியாது, ஆனா ரொம்ப ரசிச்சு வாசிச்சது ‘மகளே.. என் மருமகளே..’ கதை தான். ஒன்னு நாம இப்படி மாமியாரா இருக்கணும், இல்ல இப்படி மாமியாருக்கு மருமகளா போகணும்ன்னு பலரும் லயிப்போடு பேசிய கதை அது.
அப்பறம் ‘தேடல்களோ தீராநதி’ ரெகுலர் காதல் கதை இல்லாம அப்பா மகளுக்கான தேடல் தான் அந்த கதை. கூடவே கடல்சார் தகவல்கள் நிறைந்த கதை அது.
******
உங்கள் நாவல்களை வாசித்து வரும் வாசக தோழமைகளை எதிர்பாராமல் சந்திக்கும் சூழ்நிலை வந்தால்:
சந்தோஷமா கொண்டாட வேண்டியது தான். ஜாலியா காபி லஞ்ச்.. கூடவே அவங்க வாசிச்ச மத்த நல்ல கதைகள் பற்றி மகிழ்ச்சியா பேசலாம்.
******
ஏன் போட்டியில் வெற்றி பெற்ற கதைகளை எழுதும் எழுத்தாளர்களது கதைக்கு மட்டும் பெருவாரியான எதிர்பார்ப்பு கிடைக்கிறது:
ஒரு வெற்றி எளிதானது கிடையாது. அப்படி ஒருவர் வெற்றி பெறும்போது அவங்க மேல இயல்பாவே ஒரு எதிர்பார்ப்பு உருவாகிடும். வெற்றி பெற்ற கதையில் பெற்ற அதே நிறைவை மற்ற கதைகள் தரும் அப்படிங்கற நம்பிக்கை தான் எதிர்பார்ப்புக்கு முக்கியமான காரணியா அமையுது.
*****
தனி நபர் விமர்சன தாக்குதல் என்றால் என்ன? அப்படிப்பட்டவர்களை எப்படி எதிர்கொள்வது சிறப்பானது :
எனக்கு இந்த தாக்குதல் என்னன்னு புரியல சிஸ். விமர்சனம் சொன்னா சரின்னு போக வேண்டியது தான். நம்ம நல்லதுக்குன்னா எடுத்துக்கலாம் இல்லன்னா விட்டுட்டு நம்ம ud type பண்ண வேண்டியது தான். ரெண்டு கை தட்டினா தானே ஓசை. கண்டுக்கலன்னா ஒன்னும் இல்லையே.
******
ஒரு தொடர்கதையில் வரக்கூடிய அத்தியாயத்தின் அளவு எத்தனை இருக்க வேண்டும் :
அது அவங்கவங்க எழுதுற விதம் பொறுத்து மாறும் சிஸ். நான் அதிகளவு 1200-1500 வார்த்தைகள் தான் வைப்பேன். 4 முதல் 5 நிமிஷம் வரக்கூடிய அத்தியாயம் தான் என்னோட சாய்ஸ். அத்தியாயத்தோட முடிவு அடுத்த அத்தியாயத்தை பத்தி எதிர்பார்ப்போட முடியணும்ன்னு நான் நினைப்பேன். என்னோடது அப்படித்தான் இருக்கும்.
******
சிறுகதை எழுதிய அனுபவம் இருக்கிறதா :
எழுதி இருக்கேன் பா. ஐந்து இல்லன்னா ஆறு இருக்கும்.
*****
நாவலுக்கும் , சிறுகதைக்கும் உள்ள வித்தியாசமாக ஏதாவது சொல்ல நினைக்கிறீங்களா :
நாவல் நமக்கு தாராளமா நிறைய விஷயங்களை விளக்கி சொல்ல முடியும். ஆனா சிறுகதை தான் நறுக்குன்னு சுருங்க சொல்லி விளங்க வைக்கறதா பளிச்சுன்னு முகத்துல அறையிற நிஜங்களை சொல்ல வசதியா இருக்கும்.
…..
கண்டிப்பாக
******
அமோசான் போட்டி கதை முடிவு பற்றிய உங்களது கருத்து:
ஒரு விஷயத்தை பத்தி கருத்து சொல்லணும்னா நமக்கு அதைப்பத்தி தெரிஞ்சிருக்கணும். நான் அமேசான் போட்டியில் கலந்துக்கல. வாசகரா நான் படிச்ச கதைகளை பத்தி முகநூல்ல பேசி இருக்கேன். மத்தபடி அபிப்பிராயம் எதுவும் இல்லை.
******
போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் கதைகள் எதை பொறுத்து காணப்பட வேண்டும்:
யார் போட்டி வைக்கிறாங்களோ அவங்க ஆரம்பத்திலேயே விதிகளையும் தேர்வு முறைகளையும் கண்டிப்பா சொல்லிடுவாங்க. அதை பூர்த்தி செய்யற கதைகள் தேர்ந்தெடுக்கப்படும். நமக்கு பிடிக்கணும் அப்படிங்கறத விட போட்டிக்கு எது கேட்கப்பட்டிருக்கு அப்படிங்கறது தான் முக்கியம். அவ்ளோ தான்.
******
ஒரு தொடர்கதையின் அத்தியாயங்கள் மற்றும் வார்த்தைகள் எத்தனை வரிகளில் இருப்பது ஏற்புடையது :
கதையின் தன்மை பொறுத்து அத்தியாயங்கள் வகுப்பது அவங்கவங்க விருப்பம். இதுல ஏற்புடையது, இல்லன்னு நாம சொல்ல முடியாது. நான் ஆரம்பத்தில் 50 அத்தியாயம் வரை எழுதினேன். ஒன்னு 70 அத்தியாயம் வரை போச்சு. ஆனா அப்பறம் 25, 30 க்குள்ள கதைகளை சுருக்கிட்டேன். காரணம்ன்னு பெருசா இல்ல. Forum ல தேடி தேடி என்னாலையே நிறைய அத்தியாயம் உள்ள கதைகளை வாசிக்க சிரமமா இருந்தது. அதனால அளவா எழுத ஆரம்பிச்சிட்டேன். கதைக்கு தேவை இருந்தா இவ்ளோ வேணா எழுதலாம். அது எழுத்தாளர் விருப்பம்.
…
நிஜம் தான்
*****
ஒரு நாவல் எழுத என்னென்ன தெரிந்திருக்க வேண்டும்?
நல்ல வாசிப்பு அனுபவம் இருக்கணும். விசாலமான சிந்தனை இருக்கணும். முக்கியமா தமிழ் வார்த்தைகளை அழகா உபயோகிக்க தெரிஞ்சிருக்கணும். கொஞ்சம் கோர்வையும், லாஜிக்கா தப்பில்லாம எழுத தெரிஞ்சா நல்லது.
******
நீங்க you tube Channal and Audio ஏதாவது வச்சிருக்கங்களா:
நாங்கள் பத்து எழுத்தாளர்கள் இணைத்து நடந்தும் youtube சேனல் தான் மேகதூதம் தமிழ் நாவல்கள். இப்போது பத்து நாவல்கள் வரை அங்கே ஒலிவடிவில் கிடைக்கும்
https://youtube.com/channel/UC-csIq7e5B-kIFkoupJOmkQ
******
உங்க நட்பில் உள்ள எழுத்தாளர்கள்:
எல்லாரும் நம்ம நட்புகள் தான். குறிப்பிட்டு சொன்னா மத்தவங்க லிட்டில் ஹார்ட் உடைந்துவிடும். அதனால... கேள்வி பாஸ்..
******
உங்களுடைய எழுத்து அனுபவம்:
ஒன்றரை வருஷம் தான் பா ஆகி இருக்கு. அனுபவம் கொஞ்சம் கம்மி தான்.😔
******
முதல் கதையின் பெயர்:
அமுதங்களால் நிறைந்தேன்
******
தற்சமயம் எழுதி வரும் கதையின் பெயர் :
உன் காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்
******
உங்களது படைப்புகளை தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு சொல்ல நினைப்பது:
நன்றி நன்றி நன்றி.. அச்சோ அரசியல்வாதி மாதிரி இருக்கோ. பரவால்ல.. ஆனா நன்றியை தவற என்ன சொல்றது? பிழைகளை குறிப்பிட்டு சொல்றது, நல்லா இருக்கும் போது ஊக்குவிக்கிறது போஸ்ட் வரலன்னா கூப்பிட்டு கேட்கறதுன்னு இவ்ளோ அன்பா இருக்கற அவங்களுக்கு நன்றியை தான் சொல்ல மனமார சொல்ல முடியும். நன்றி அன்பு உள்ளங்களே.
தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல விருப்பம் இருக்கிறதா...
எழுத்தாள தோழமைகளே, உங்க வாசகர்களை மற்ற எழுத்தாளர் கதையையும் வாசிக்க ஊக்குவிங்க. ஏன்னா அப்போ தான் அவங்க வாசிப்பு அனுபவம் விசாலமாகும். கண்டிப்பா நம்மளை விட்டு அவங்க போக மாட்டாங்க. நம்ம எழுத்தை மெருகேற்ற கண்டிப்பா உதவியாவும் இருப்பாங்க. எழுத்தால அவங்களுக்கு நல்ல கருத்துக்களை நாம சொல்றது போல, வாசிப்புக்கு வரையறை இல்லாம எல்லாத்தையும் வாசிக்க அவங்களை நாம ஊக்குவிக்கணும். இது வாசகர்களுக்கு எழுத்தை தாண்டி நாம செய்யற இன்னொரு நல்லது. நம்மை போல உள்ள சக எழுத்தாளருக்கும் புது வாசகர்கள் கிடைப்பாங்க. உயர்வோம், உயர வைப்போம்.! நன்றி.
….
நிச்சயமாக சிஸ்டர்
*******
என் கதைகள்:
நாவல்:
அமுதங்களால் நிறைந்தேன்
மகளே .. என் மருமகளே..
ஏங்கினேன் என் ஏந்திழையே
அன்பின் வழியது உயிர்நிலை
அகலாதே ஆருயிரே
மொட்டவிழாயோ காதல் மலரே
தணியாயோ என் இன்பக்கனலே
சிப்பியில் தப்பிய நித்திலமே
தண்மதியே தாரகையே
தேடல்களோ தீராநதி
இணை கோடுகள்
காற்றாகி கைகோர்த்து போவோமே(hold)
உன் காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்(ongoing)
குறுநாவல்:
மெய்யாகுமோ மெய்நிகர்?
தந்தியின் தாரணி
கூவம்
வாயு
6 சிறுகதைகள் மற்றும்
50 க்கும் மேலான 1பக்க கதைகள்
எழுதி இருக்கிறேன்.
….
அருமையான பெயர்கள் தேர்ந்தெடுப்பு
*****
வாசகர் கேள்விக்கான பதில்கள் :
புவனா மாதேஷின் கேள்வி : முதன்முதலில் தங்களுக்கு வந்த எதிர் மறையான விமர்சனம் எது எதற்காக வந்தது ...
மகளே கதைக்கு தான் வந்தது. இவ்ளோ நல்ல மாமியார் யாருமே இருக்க மாட்டாங்க ன்னு சொன்னாங்க. கண்டிப்பா ஊருக்கு ஒருத்தராவது இருப்பாங்க. அதை சொல்ல இங்க யாரும் இல்ல. நான் சொல்றேன். அவ்ளோதான் அப்படின்னு பதில் சொல்லிட்டு அடுத்த ud எழுத போயிட்டேன். (புவனா அம்மா அப்படிப்பட்ட மாமியார் தான். பிரவீணா அவங்களோட மாமியார் கூட அப்படித்தான். நமக்கு தெரிஞ்சே ரெண்டு பேர். தெரியாம எத்தனை பேரோ?)
*******
உங்கள் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் உண்மையில் இருப்பவர்களா இல்லை கற்பனையா😂😂😂 imagination + real ah:
கற்பனை தான். இவங்க இப்படி இருந்தா நல்லா இருக்கும்ன்னு நாம சந்திக்கிற சிலரை நினைப்போம்ல. அந்த கற்பனை நிறைய கதையில் பிரதிபலிக்கும்.
******
நித்யா மாரியப்பனின் கேள்வி : ரீடர்சுக்காக எப்போவாச்சும் உங்க கதையோட்டத்தை மாத்திருக்கீங்களா? இது வரைக்கும் மாத்தலனா ஃப்யூச்சர்ல மாத்துற ஐடியா வருமா?
வாசகர்கள் கருத்துக்கு கண்டிப்பா மரியாதை உண்டு. ஆனா எழுதுற எனக்கு தான் அதை ஏன் எழுதறேன்னு காரணம் தெரியும். அவங்க விருப்பத்துக்கு நான் மாத்தி எழுதிட்டா நான் சொல்ல வர்றதை சொல்ல முடியாம போகலாம். அதனால முழுமையா படிச்சிட்டு நான் செய்தது சரியான்னு சொல்லுங்கன்னு சொல்லுவேனே தவிர கதையோட்டத்தை மாற்ற மாட்டேன். இனியும் முடியாது என்பதே நிஜம்.
******
ஸ்ரீநவி அவர்களின் கேள்விகள்:
கதையை முடிவு செய்து விட்டு, வாசகர்களின் கருத்துக்களை பார்த்து கதையின் போக்கினை மாற்றியது உண்டா?
இல்ல. மாட்டேன்.
******
உண்மை சம்பவத்தின் அடிப்படையில் கற்பனையை கலந்து எழுதும் போது, நாம் சொல்ல நினைத்த விசயம் சரியான முறையில் சொல்ல முடிகிறதா?
கண்டிப்பா சொல்ல முடியும். அதற்கு தேவையான அழுத்தத்தை எந்த காரணத்துக்காகவும் நாம குறைக்காம இருக்கும் போது கண்டிப்பா சொல்லிடலாம்.
******
கதைக்கான எதிர்மறை கருத்துகள் அல்லது logic mistakes பொது வெளியில் விவாதிக்க படுவது ஆரோக்கியமான விசயம் தான் என்று நினைக்கிறீர்களா?
எதிர்மறை கருத்துகள் விவாதிக்கப்படுவது தவறு கிடையாது. தனியே, பொது என்ற பாகுபாடும் தேவையில்லை. நம்ம கதை மேல சொல்லப்படும் விஷயத்தோட தன்மையை தான் ஆராயணுமே தவிர அவங்க நம்மை சொல்லிட்டாங்கன்னு நினைக்க தேவையில்லை. Personal லா எடுத்துக்க வேண்டாம். எனக்கும் என் கதையில் ஏரர் இருக்கறதா நீங்களும் (ஸ்ரீநவி), அருணா கதிர், அமிர்தா சேஷாத்திரி அம்மாவும் பொதுவில் சொல்லி இருக்காங்க. நான் என் தரப்பு விளக்கத்தை கொடுத்திருக்கேன். நான் அதை எந்த விதத்திலும் தவறாக கருதல. அடுத்தமுறை இன்னும் நுட்பமா யோசிக்கணும் ன்னு எனக்கே சொல்லிக்கிட்டேன். சொல்லப்போனா அதை வைத்து நிறைய மாற்றிக்கொண்டும் இருக்கேன். எனக்கு உதவியா இருந்தது. நான் அதை ஆரோக்யமானதா தான் பாக்கறேன்.
*****
நீங்கள் எழுதிய நாவல்களில் வாசகர்களால் பாராட்டப் பெற்றாகவும், விமர்சனத்தால் மனம் மகிழ்ந்ததாகவும் கிடைக்கப் பெற்றது எது:
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் பாராட்டை பெற்றது தான். சூப்பர் என்று வரும் விமர்சனம் கூட நிகரில்லாத மகிழ்ச்சியை அள்ளித்தரும்.
******
காஃபி ரைட்ஸ் பற்றிய உங்களது கருத்து:
அதை வச்சு இப்போதைக்கு என்ன பண்றது? ஒரு கதை போலவே இன்னொன்னு இருக்க கூடாது ன்னு தான் காபி ரைட் கொண்டு வந்தாங்க. இப்போ அதை செயல்படுத்த முடியுமா? ஒரே மாதிரியான கற்பனைன்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க. இது என்னோடதுன்னு நாமே சொல்லிக்கலாம் அவ்ளோ தான். வாங்கி வச்சுக்கறது பாதுகாப்பு
******
மிக்க நன்றி சிஸ்டர்
உங்களுடைய பதில்கள் எல்லாமே அருமையாக இருந்தது. மேலும் பல படைப்புகளை வழங்கிட மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய எழுத்தாளருடைய நாவலை வாசித்தவர்கள் அது பற்றிய கருத்துகளை பரிமாறிக்கொள்ளுங்கள். மற்றவர்கள் வாழ்த்துங்கள்
அருமையான பதில்கள்😘
ReplyDeleteNeththiyadi pathilgal. Congrats dear 👍👍👍👍
ReplyDeleteஅருமையான பதில்கள்
ReplyDelete