#எழுத்தாளர்அறிமுகப்படலம்
சீசன் இரண்டு
ஹாய் பிரண்ட்ஸ்,
எழுத்தாளர் அறிமுகப்படலத்தில் இன்று நான் அறிமுகப்படுத்தப்போவது ரேணுகா முத்துக்குமார்...
அவர்களைப் பற்றிய நேர் காணல் :
பெயர் : ரேணுகா முத்துக்குமார்
சொந்த ஊர் : கொரடாச்சேரி (திருவாரூர் மாவட்டம்), இப்போது வசிப்பது பட்டுக்கோட்டை (தஞ்சாவூர் மாவட்டம் )
படிப்பு : Bsc(nursing)
பணி : இந்திய இராணுவத்தில் செவிலியர் துறையில் கேப்டன் ஆக இருந்தேன். என் குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக வேலையை ராஜினாமா செய்து விட்டேன்.
தளம் : mallikamanivannan. com
அமேசான் பெயர்: அமேசானில் இல்லை
*****
உங்களது முதல் படைப்பு : கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
******
தற்சமயம் எழுதிக் கொண்டிருப்பது : சமீபத்தில்தான் ஒரு கதை முடித்தேன். தற்சமயம் எதுவும் எழுதவில்லை. அடுத்து எழுத சில நாட்கள் ஆகும்.
******
மொத்தம் எத்தனை நாவல்கள் எழுதியிருக்கீங்க: 11
*******
உங்களது படைப்புகளின் பெயர்கள் :
1) கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
2) கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே
3) நீ வானம் நான் நீலம்
4) நெஞ்சில் நின்றாடும் வெள்ளி நிலவே
5) வானவில் கோலங்கள்
6) ஒன்றானதே நம் ஜீவனே
7) மணிப்புறாவும் மாடப்புறாவும்
8) காதல் சாம்ராஜ்யம்
9) உயிரில் கலந்த ரோஜாவே
10) உள்ளமெங்கும் உன்னை நிறைத்தேன்
11) ஆலோலம் பாடும் கிளிகள்
....
அழகான பெயர்கள் தேர்ந்தெடுப்பு
******
உங்களைப் பற்றி சொல்ல முடியுமா :
நான் இப்போது இல்லத்தரசி. கணவர் மற்றும் 5 வயது மகனுடன் இருக்கிறேன். தொடக்கப் பள்ளியில் பயிலும் காலத்திலேயே என் தாத்தா மூலமாக வாசிப்பு பழக்கம் ஆரம்பித்துவிட்டது. இப்போது கதைகள் எழுதி வருகிறேன்.
*******
நீங்கள் எழுத்துலகிற்கு வந்தது பற்றி சொல்ல முடியுமா :
இடையில் கிட்டத்தட்ட 10 வருடங்களாக வாசிப்பு பழக்கம் விட்டுப் போயிருந்தது. ஊரடங்கு காலத்தில் மல்லிகா அக்காவின் நாவலை முதன் முதலாக ஆன் லைனில் வாசித்து மீண்டும் வாசிப்பு பழக்கத்தை புதுப்பித்துக் கொண்டேன்.
திடீரென அதிகமாக படிப்பதை பார்த்த என் கணவர், எனக்கும் எழுத ஆசை இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு ஊக்குவித்தார். மல்லிகா அக்கா தளத்தில் எழுத வாய்ப்பு அளித்தார். வாசகர்கள் உற்சாகமளிக்க தொடர்ந்து எழுதுகிறேன்.
******
உங்கள் நாவல்கள் சமூகம், குடும்பம், காதல், நகைச்சுவை இதில் எதைப் பொறுத்து வரும்:
மென்மையான காதல் மற்றும் குடும்ப கதைகள்தான். இடையில் சில சமூக கருத்துக்களும், நகைச்சுவையும் கதையோட்டத்தோடு ஆங்காங்கே இருக்கும்.
*******
ஆன்லைனில் நாவல் எழுதும் நீங்கள் உணருவது என்ன : எழுத நினைப்பவர்களுக்கு சிறப்பான களம். உடனுக்குடன் கருத்துக்களை தெரிந்து கொள்ள முடிவகிறது. மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
******
ஒரு நாவல் எழுதுவதற்கு அந்த எழுத்தாளருக்கு எத்தகைய கற்பனை வளம் இருக்க வேண்டும்:
எல்லை மீறாத, ஏற்றுக் கொள்ளக் கூடிய(லாஜிக் மீறாத), சுவாரஷ்யம் நிறைந்ததாக கற்பனை வளம் இருக்க வேண்டும்.
******
நிஜமும், கற்பனையும் கலந்து எழுதப்படும் படைப்புகளில் எது வாசிப்பவரின் மனதில் நிலைத்து நிற்கும் என்று நினைக்கறீங்க:
நிஜமோ, கற்பனையோ எதுவாக இருந்தாலும் சுவாரஷ்யமாக இருந்தால் வாசிப்பவர் மனதில் நிற்கும்.
...
நிஜம் தான்
******
மென்மை கலந்த காதல் கதை, அழுத்தம் நிறைந்த காதல் கதை என இரண்டு வகை இருக்கு. இதில் எது வாசகர்களை உடனடியாக சென்றடைகிறது:
மென்மை நிறைந்த காதல் கதைகள். அழுத்தமான கதைகள் படிக்க சிலர் தயங்கலாம்.
******
போலீஸ் கதை எழுதியிருப்பதாக சொல்லியிருக்கீங்க அந்த நாவலைப் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா:
சில வருடங்களுக்கு முன் தான் இழந்த காதலை மீட்டெடுத்து, பல வருடங்களுக்கு முன் தன் தந்தை ஆணவக் கொலை செய்யப் பட்டதற்கு காரணமானவர்களை பழி வாங்கும் காவலனின் கதை. சிவமித்ரன் கதா பாத்திரத்தை மிகவும் ரசித்து எழுதினேன்.
*******
ஆலோலம் பாடும் கிளிகள் கதையில் அப்படி என்ன ஸ்பெசல் இருக்கிறது. எதனால் வாசகர்களை கவர்ந்ததாக நினைக்கிறீங்க:
பல வாசகர்கள் அவர்களது வாழ்க்கையில் நடந்த ஏதோ ஒரு சம்பவத்தை கதை நினைவு படுத்தியதாக கூறினார்கள். அது காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
******
ஒரு எழுத்தாளன் வாசகர்களை தன் எழுத்தின் மூலம் கட்டிப் போட என்ன செய்ய வேண்டும் :
குழப்பம் இல்லாமல் தெளிவாகவும், சுவாரஷ்யமாகவும், அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்போடும் எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்.
...
நிச்சயமாக
*****
உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க:
நீ வானம் நான் நீலம்
*******
நீங்கள் ஒரு கதை எழுத ஆரம்பிக்கும் முன்பு செய்வதென்ன :
அடுத்தடுத்த கதைகளுக்கு அதிக இடைவெளி எடுப்பதில்லை என்பதால், ஏற்கனவே தேர்வு செய்து வைத்திருக்கும் மற்ற எழுத்தாளர்களின் இரண்டு கதைகளையாவது அடுத்த கதை தொடங்கும் முன்னர் படித்து விடுவேன். முந்தைய கதை மற்றும் கதாபாத்திரங்களில் இருந்து வெளிவர உதவியாக இருக்கும்.
கதைக் கருவை முடிவு செய்து விட்டால் அதற்கு தேவையான விவரங்களை குறிப்பு எடுத்து வைத்துக் கொள்வேன்.
******
ஒரு கதை எழுத ஆரம்பிக்கும் முன்பு முழுவதையும் டைரியில் எழுதி விட்டு அத்தியாயம் வாரியாக கொடுக்கிறீர்களா அல்லது மனதின் வார்த்தைகளை எழுத்தாக மடைமாற்றம் செய்கிறீர்களா:
ஒரு நோட் புத்தகத்தில் முழு கதையையும், அல்லது பாதிக்கும் மேலாகவாவது எழுதி முடித்த பிறகே பதிவிடுகிறேன்.
....
ஆமாம் நானும் கூட...
******
உங்களுடைய நாவல்களை வாசிக்கும் போது அது சாதாரணமான குடும்ப நாவலாக இருக்குமா அல்லது சமூகம், நிஜ சம்பவம் கலந்து கதை வாசித்து சில மணிநேரங்களுக்கு மனதை விட்டு நீங்காத அளவிற்கு வாசகர் நெஞ்சோடு கலந்து போயிருக்குமா :
மென்மையான காதல் மற்றும் குடும்ப உறவுகள் சார்ந்த கதையாக இருக்கும். மனதை விட்டு நீங்காத அளவிற்கு இருக்குமா என்பது எனக்கு தெரியவில்லை. வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்.
******
நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்:
எல்லா கதைகளுமே பிடிக்கும். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் உள்ளமெங்கும் உன்னை நிறைத்தேன். எனக்கு பொதுவாக போலீஸ் கதைகள் பிடிக்கும், அதனால் இந்த கதை.
அதைப் போலவே எல்லா கதாபாத்திரங்களும் பிடிக்கும். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ‘மணிப்புறாவும் மாடப்புறாவும்’ கதையின் கதாநாயகன் இன்பசாகரன், கதாநாயகி பிரியதர்ஷினி மற்றும் உள்ளமெங்கும் உன்னை நிறைத்தேன் சிவமித்ரன்.
*******
ஒரு நெகடிவ் விமர்சனத்தை எதிர்கொள்ளும் பக்கம் வரவில்லை. பாஸிடிவ்வை எதிர்கொள்பவர்கள் ஏன் நெகடிவ்வை ஏற்க மறுக்கிறார்கள் என்று சொல்பவர்களை பற்றி என்ன நினைக்கிறீங்க:
புதிதாக எழுத வரும் போது சற்று காரமாக கூறப்படும் எதிர்மறை விமர்சனங்களை கையால்வது கடினம் தான். மனம் புண்படாத வகையில் குறைகளை எடுத்து சொன்னால் கண்டிப்பாக பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றே நினைக்கிறேன்.
.....
நிச்சயமாக
******
Positive Review வந்தால் கடந்து செல்வது பற்றிய உங்கள் கருத்து :
எனக்கு தெரிந்து அப்படி யாரும் செல்வதில்லை. கண்டிப்பாக நன்றி கூறுகிறார்கள். சில சமயம் அவர்கள் கவனத்துக்கு வராமல் போய் இருக்கலாம்.
*****
ஒரு சிலர் நாவலை வாசித்து விட்டு அவர்களுடைய முகநூலில் அந்த எழுத்தாளரையும், அவரது எழுத்தையும் தாக்கி பதிவிடுகிறார்கள் அது பற்றி ஏதாவது சொல்ல நினைக்கறீங்களா :
எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் ஆரோக்கியமான உறவு அவசியம். குறைகளை ஏற்றுக் கொள்ளும் விதத்தில் சுட்டிக்காட்டலாம். ஆரோக்கியமான முறையில் விவாதிக்கலாம். பிடிக்கவில்லை என்றால் கடந்து விடலாம். கதையின் ஆரம்பத்திலேயே கதை நன்றாக இல்லை என்றால் படிக்காமல் விட்டு விடலாம். நேரடி/மறைமுக தாக்குதல் ஆரோக்கியமற்ற ஒன்று. தவிர்க்கப்பட்டால் நலம்.
....
கட்டாயம். இதை எத்தனையோ முறை சொல்லிப் பார்த்தாகி விட்டது. சம்மந்த பட்டவரின் செவியில் விழுந்தால் அல்லவே...
********
தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல விருப்பப்படுகிறீர்களா :
நான் தொடர்ந்து எழுத ஒரே காரணம் எனது அன்பு வாசகர்கள்தான். முதல் கதையிலேயே உற்சாகமான வரவேற்பு அளித்தார்கள். தொடர்ந்து அளித்து வருகிறார்கள். அனைவருக்கும் இதயப் பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் என் எழுத்துக்களை மேம்படுத்திக் கொண்டு நல்ல கதைகள் தர முயற்சி செய்கிறேன்.
******
Chithrasaraswathi அவர்களின் கேள்விகள்:
உங்களுக்கு பிடித்த கதைக்களம் எது :
மென்மையான காதல் கதைக்களம்.
*****
நீங்கள் எழுத்துலகுக்கு வர யார் காரணம் இல்லை, வேறு ஏதாவது தூண்டுதலா:
எனது ஈடுபாட்டை கண்டறிந்து ஊக்குவித்த என் கணவர்தான் காரணம். மல்லிகா அக்காவும் உடனே வாய்ப்பு தந்தார்கள்.
******
யதார்த்தமான கதை மாந்தர்களையே தேர்ந்தெடுக்க ஏதாவது காரணம் உண்டா:
என்னை சுற்றி உள்ள மனிதர்கள் பற்றி எழுதுவது எளிதாக இருக்கிறது.
******
வியாபார காந்தம் நாயகன் கதையை ஏன் தேர்வு செய்யவில்லை :
வியாபாரிகள் பற்றி அதிகம் தெரியாது. அதனால் காதநாயகர்கள் சாதாரண மனிதர்களாகவே இருக்கிறார்கள். அப்படியும் ஒரு கதை எழுதினேன். உயிரில் கலந்த ரோஜாவே ரிஷிதேவ் வியாபாரிதான். ஆனால் ஒழுக்கமான, பெண்களை துன்புறுத்தாத கதாநாயகன்.
******
கதையை எழுதி முடித்த பின் தளத்தில் பதிவிடுறீங்களா, ஏன் இந்த கேள்வி என்றால் உங்கள் நேரம் தவறாத பதிவுதான்:
கதை முன்பே எழுதி முடித்து விடுவேன். ஆனால் டைப் செய்வது, பதிவிடப் போகும் ஒரு நாள் முன்புதான்.
******
SINDHU NARAYANAN அவர்களின் கேள்விகள்:
நீங்க எழுதின கதைகளில் இன்னும் கொஞ்சம் பெட்டெர் ஆக எழுதி இருக்கலாம்னு ஏதாவது கதைக்கு தோணியது உண்டா?:
எல்லா கதைகளிலுமே ஏதாவது ஒரு இடத்தில் நன்றாக எழுதியிருக்கலாம் என்று தோன்றும். ஒன்றானதே நம் ஜீவனே நினைத்தது போல எழுத முடியவில்லை என்ற வருத்தம் உண்டு. இழந்த குடும்பத்திற்கு திதி கொடுக்க செல்லும் போது பிரிந்த மனைவியை சந்திக்கிறான் ரகு. திதியில் ஆரம்பித்து, ஒரு திருமணத்தில் மீண்டும் தங்கள் அன்பை மீட்டெடுத்து, ஒரு குழந்தை பிறப்பின் போது இணைகிறார்கள். ஆனால் கதையாக இதை சொல்லும் போது என் எழுத்துக்களில் அத்தனை திருப்தி வரவில்லை.
******
கதைக்கரு எப்படி சூஸ் பண்றீங்க?:
சுற்றி நடக்கும் விஷயங்களை வைத்தோ, எப்போதோ செய்தி தாளில் படித்தது, கேள்வி பட்டதை வைத்தோ கதைக் கருவை தேர்ந்தெடுக்கிறேன். சில சமயங்களில் வாசகர்களின் கருத்துக்கள் மூலமாகவே கரு கிடைத்து விடும்.
காதல் சாம்ராஜ்யம் கதைக்கு நீங்கள் அளித்த ஒரு கமெண்ட்லதான் உயிரில் கலந்த ரோஜாவே கதை உருவானது.
******
உங்க குடும்பத்தோட ஆதரவு வரவேற்பு எப்படி?:
அனைவரும் ஆதரவளிக்கிறார்கள். என்னை ஊக்கப் படுத்துகிறார்கள்.
*****
உங்கள் கதை புத்தகமா வந்தப்போ எப்படி ஃபீல் பண்ணுனீங்க?:
புத்தகமாக வெளிவரப் போகிறது என செய்தி கேட்ட அன்று அதிகமான உற்சாகத்தால் உறக்கமே வரவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்த தருணம் அது.
******
ரேணுகா- உங்களை எழுத தூண்டியது எது :
எனக்கும் எழுதும் ஆசை இருந்தது. எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. ஆன்லைனில் வாசிக்க ஆரம்பித்த பிறகு எனது எழுதும் ஆர்வத்தை தெரிந்து கொண்ட என் கணவர்தான் என்னை எழுத தூண்டியது.
******
சரியாக இருபது அத்தியாயங்களில் கதையை நிறைவு செய்வது யதேட்சையானதா? இல்லை முன்பே முடிவு செய்துவிடுகிறீர்கா. ஆனால் இந்த நறுக்கென்று முடிக்கும் விதம் என்னை மிகவும் ஈர்க்கிறது.
இருபது அத்தியாயங்கள் என்று முன்பே முடிவு செய்வதில்லை. முழுக்க யதேச்சையானது. சில சமயங்களில் பெரிதாக எழுத நினைத்து முடியாமல் போனது உண்டு. தாங்கள் ஈரக்கிறது என்று கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றிகள்.
******
மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏🙏
உங்களுடைய பதில்கள் அனைத்தும் அருமையாக இருந்தன. மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிடவும், விருதுகள் பல வாங்கிடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐💐
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய எழுத்தாளரின் படைப்புகளை வாசித்தவர்கள் அதைப் பற்றி கருத்து தெரிவிக்கலாம். மற்றவர்கள் வாழ்த்தலாம்.
நன்றி
எனக்கு பிடித்த எழுத்தாளரகளுள் இவரும் ஓருவர், குழப்பாமல் மனதில் பட்டதை நச்சென்று கூறி, காலம் நேரம் தாழ்த்தாமல் பதிவிடுவதை பார்க்கும் போது ஒரு உற்சாகம், இது அவர் பணிபுரிந்த காரணத்தினால் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். குறுகிய காலத்தில் இத்தனை கதைகளை எழுதிய அவர் 100 நாவல்களை எழுதி உச்சத்தை அடைய வாழ்த்துக்கள்.
ReplyDeleteWow super sis!!!! எதார்த்தமான மெல்லிய காதல் உங்கள் கதைகள் அனைத்திலும் இருக்கும்,படிக்கும் போது நாங்களும் அதை அனுபவித்து கொண்டு இருக்கிறோம் அருமை சகி!!! உங்களோட அனைத்து கதைகளையும் நான் படித்து விட்டேன் !!
ReplyDeleteமுதல் கதை கண்ட நால் முதல் கதல் பெருகுதடி ல இருந்து தொடர்ந்து அனைத்து கதைகளையும் பிடிக்கும்!!!
உங்கள் கதையில் வரும் ஹீரோ அவரது யதார்த்தமான மனதிற்கு நெருக்கமான நாம் விரும்மும்படியான ரொமான்டிக் ஹீரோ அனைவருமே மனைவிகளை தாங்கும் விதம் அவ்வளவு அருமையாக இருக்கும் முக்கியமாக அவர்களுக்கு சமைத்து தருவது முடியவில்லை என்றால் ஹோட்டலில் சாப்பாடு வாங்கி தருவது!!!!!
பிரிந்து இருந்தாலும் அவர்களின் நினைப்பாய் மீண்டும் இணைவதும் அவர்களுக்குத் துணையாக இருப்பதும் அவர்களின் லட்சியத்தை நிறைவேற்றுவதும் அப்படின்னு ஹீரோயின்களை விட ஹீரோக்களே மனதை அதிகம் வருகிறார்கள்!!!!
உங்கள் கதைகள் ஹைக்கூ கவிதைகள் போல் ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஸ்டோரி!!!!
உங்கள் எழுத்துப் பயணம் வெற்றிகரமாக தொடர வாழ்த்துகிரோம் சிஸ்!!!! மேலும் பலப்பல இதேபோல நல்ல கதைகளை குடும்ப கதைகளை தருமாறும் கேட்டுக் கொள்கிறோம் வாழ்த்துக்கள் சிஸ்!!!