லஷ்மி ராம மூர்த்தி

 #எழுத்தாளர் அறிமுகப்படலம்


சீசன் இரண்டு


ஹாய் பிரண்ட்ஸ்,


இன்றைய அறிமுக எழுத்தாளர்

லஷ்மி ராமமூர்த்தி அவர்களைப் பற்றிய நேர் காணல் இதோ ...


 பெயர் : ,

லஷ்மி ராமமூர்த்தி


சொந்த ஊர் : 

சென்னை


படிப்பு :

Pre graduation

Shorthand typing higher

Hindi Praveen


பணி :

தனியார் கம்பெனியில் சென்னையிலும் டில்லியிலும் மேனேஜிங் டேரைக்டருக்கு செகரட்ரியாக பணியாற்றி இருக்கிறேன்.


தளம் :


பிரதிலிபி


அமேசான் பெயர்:

அங்கே எழுதியதில்லை


*****


நீங்கள் எழுதிய முதல் நாவல்:

நாவல் எழுதியதில்லை


******


நீங்கள் எழுதி வரும் தற்சமயத்து நாவல் :


நாவல் எதுவும் எழுதவில்லை


******


இத்தனை வருட எழுத்து அனுபவத்தில் உங்களது சாதனை மற்றும் சோதனைகளை பற்றி சொல்ல முடியுமா:


இப்போதுதான் ஒரு வருடமாக பிரதிலியில் மட்டும் எழுதிக் கொண்டு இருக்கிறேன்.


*******


1970 -> எழுத்து , நாவலுக்கும் 2021 -> தற்சமயத்து எழுத்துக்கும் உள்ள வித்தியாசமாக ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :


இப்போதுள்ள பதிவுகளில் மனம் திறந்த பதிவுகள் வருகிறது. எழுத்து சுதந்திரத்தை நன்றாக செயல்படுத்துகிறார்கள்.


******


உங்களது குறிக்கோள் , எழுத்துலகில் நீங்கள் படைத்த சாதனை அதற்காக வாங்கிய விருதுகளை பற்றி சொல்ல முடியுமா:


குறிக்கோள் என்பது ஏதும் இல்லை.

எந்த மாதிரியான சூழ்நிலையிலும

பெண்கள் தன்னம்பிக்கையுடன் நிமிர்ந்து நிற்கவேண்டும் என்பதை

என் பதிவுகளில் சொல்கிறேன்.

பெண்களுக்கு கல்வியும் பணியும் அவசியம். திருமணம் முன்னுரிமை அல்ல.


******


உங்களது நட்பில் உள்ள எழுத்தாளர்களை பற்றி சொல்ல முடியுமா:


 நன்றாக எழுதுகிறீர்கள் என்று முதலில் சொன்னதே திருமதி புவனா சந்திரசேகர் அவர்கள். அடுத்தது திரு.ஜார்ஜ் வாஷிங்டன் அவர்கள்.


மேலும்

நட்பில் உள்ளவர்கள் பலராக இருப்பினும் சிலரைச் சொல்கிறேன்

திரு.மாதவன் நாராயணன்

திரு.வெற்றி வேந்தன்

திரு.ஜமதக்னி சங்கர்

திரு & திருமதி சாக்ரடீஸ்

திரு.மனு வேந்தன்

திருமதி லதா சேகர்

திருமதி. மயிலா நீலன்


******


உங்களது படைப்புகள் காதல், குடும்பம், சமூகம், ஆன்மீகம், வரலாறு இதில் எதை சார்ந்ததாக இருக்கும்:


எல்லாவற்றிலும் ஆன்மீகம் இருக்கும்


******


ஒரு நாவல் எழுதும் முன்பும், பிறகும் என்ன தெரிந்திருக்க வேண்டும்:


சமூகத்தில் நடப்பதை பிரதிபலிக்க தெரிந்திருக்க வேண்டும்


******


உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:


என் கணவர் எம்.என்.ஸி.யில் இருந்து ஓய்வு பெற்றவர்.


என் மகள் தன் கணவன் இரண்டு குழந்தைகளுடன் குர்கானில் செட்டிலாகி இருக்கிறாள்.


மகன் அமெரிக்காவில் ஆட்டோமொபைல் இன்ஜினியராக செட்டிலாகி இருக்கிறான்.

அலையன்ஸ் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.


******


உங்களது விருப்பமான எழுத்தாளர்:


தி.ஜானகிராமன் 

லஷ்மி

சுஜாதா

லஷ்மி சரவணகுமார்

ரவி சுப்ரமணியன்


******


உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா

அனுபவம் என்றால் "அருமை",என்றாலே

மகிழ்ச்சிதான்


*****


உங்களது நாவல்கள் மற்றும் சிறுகதைகள் சிலவற்றின் பெயர்:

சிறு தொடர்களில் சில


இரும்பு என்பது அரை நிமிடக் கதை


மரபணு சிறு தொடர் " ஏன் ஒழுக்கம் தேவை" சொல்லும் கதை


சுழற்சி :குழந்தையைத் தொலைத்த பெண்ணும். மன வளர்ச்சி குன்றிய பெண்ணும வாழ்க்கை சுழற்சியில் சுழன்ற கதை.


மெழுகு: ஆட்டிஸம் விழுப்புணர்ச்சி கதை


இணைந்த வாழ்தல்: 

Living together before marriage 

நேர்மறையுடன் எழுதி பாதகங்கள் சொன்ன கதை.


நகல் : போலி ஜோதிடம் போலி வாஸ்து

நிபுணர் மூலம் சீரழிந்த குடும்பத்தின் கதை


வாட் நெக்ஸ்ட் ல் பரிசாக வந்த கம்ப ராமாயணம் சுந்தர காண்டம் உ.வே.சாமிதய்யர் உரையை

சுந்தரன் என்ற பெயரில் எளிய அனைவரும் புரிந்துக் கொள்ள கூடிய உரைநடையில் எழுதியுள்ளேன்.


சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி,‌குண்டலகேசி இவைகளை எளிய தமிழில் உரைநடைபடுத்தியுள்ளேன். 


....


மிகவும் அருமை சிஸ்டர். வாழ்த்துகள்💐💐


சிறுகதை என்றால் எத்தனை வார்த்தைகளுக்குள் அடங்க வேண்டும். அதில் என்னென்ன சாரம்சம் அடங்கியிருக்க வேண்டும் என்று நினைக்கிறீங்க:


 சிறுகதைகள் 600 வார்த்தைகளுக்கு மேம்படாமல் இருந்தால் நலம்.

கதை என்ன என்பதை தெளிவாக்க வேண்டும்.


******


இன்றைய சமூகத்தைப் பற்றி ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :


நன்றாகத்தான் உள்ளது.

ஒவ்வொரு குடும்பமும் கல்வியிலும்

ஒழுக்கத்திலும் சிறந்து இருந்தால் போதும். சமூகம் தானே முன்னேறும்.


******


அன்றைய பெண்களின் நிலையும் இன்றைய நிலை பற்றியும் சொல்ல முடியுமா :


அன்றைய பெண்கள் பொருளாதாரத்தில் சார்ந்து இருத்தலினால் அடிமை போல் வாழ வேண்டிய நிலை.  


இன்றைய பெண்களுக்கு கல்வி

தனித்தன்மை பொருளாதாரத்தில் மேன்மை இவைகளால் தன்னம்பிக்கையுடன் நிமிர்ந்து நிற்கின்றனர். இருப்பினும் சிறந்த குடும்பத் தலைவியாகவும் இருப்பது

இன்றைய பெண்களின் தனிச் சிறப்பு.


...


நிஜம் தான்


******


ஒரு நாவல் வாசிப்பவர் மனதை சென்றடைய எழுத்தாளன் என்ன செய்ய வேண்டும் :


1. மென்மையான காதல் வேண்டும்

2. சுதந்திரம் என்ற பெயரில் அத்துமீறல்

     வேண்டாம்.

3. பிறர் கதையை இன்ஸ்பிரேஷன் என்ற

     பெயரில் கையாள வேண்டாம்

4. நிஜ சம்பவமும் கால் பாகம் இருந்தால்

     நல்லது.

5 . பெண் கல்வி,, பணிக்கு முன்னுரிமை

     கொடுங்கள்

6. நகைச்சுவையை இரண்டு பொருள்                

       வரும் உரையாடல்கள் மூலம்

      சொல்லுங்கள்.

7. ‌அத்தியாயத்தின் எண்ணிக்கையை 

     அதிகமாக்க

சம்பவங்களைக் திணிக்காதீர்கள்.


...


அருமையான தகவல்


******


திருமணமாகி கணவரின் வீட்டுக்கு சென்ற பிறகு ஒரு பெண் எத்தகைய வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும்னு நினைக்கிறீங்க:


குடும்பம்தான் முதல்.

கணவன் குழந்தைகள் முதலிடம்.

அவர்களை புறக்கணித்துவிட்டு தன்னுடைய passion க்கு அதீத முக்கியத்துவம் கொடுத்தால் 

குடும்பத்தினர் அன்பையும் இழப்பீர்கள்.

பேஷனும் பரிமளிக்காது.


...

🙂🙂🙂


******


நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்:


எனக்குப் பிடித்தது இணைத்து வாழ்த்தில் பாவனா.


******


அன்றைய நாளில் நாவல்களை புத்தகமாக வாசித்து வருவதற்கும் இன்றைய நாளில் ஃபோனில் வாசிப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன :


பவா செல்லத்துரை கதை சொல்வதைத்

கேட்க பிடிக்கும்.

அமேசானிலும் போனிலும் படிக்க பிடிக்கும்

புத்தகத்தை விட இவைகளை தற்சமயம் விரும்புகிறேன்.

போனில் ஏழுதபவர்களுக்கு வரப்பிரசாதம்.

இப்போதைய தொழில்நுட்பம்தான் வசதி


...


நிஜம்தான்


******


நாவல்களில் புகுத்தப்படும் திரைப்பட பாடல் வரிகள் சரியான தொகுப்பாக இருக்குமா? அல்லது அதற்கு ஏற்ப நாம் எழுதும் கவிதை வரிகள் ஏற்புடையதாக இருக்குமா:


தன்னுடையது சொந்த கவிதைகளை புகுத்துவது நல்லது.  


******


எழுத்தாளர்களின் மீதான வாசகர்களின் நம்பிக்கை பற்றி ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா:


குடும்பக் கதை எழுதுபவர்களை வாசகர்கள் ஊக்குவிக்கிறார்கள்.

கதையின் ஏற்புடைய முடிவுகளை தன் குடும்பத்திலும் ஏற்க தயாராக உள்ளனர்.


ஆன்மீக கதைகளுக்கும் வரவேற்பு உண்டு.


திகில் கதைகளை ரசிக்கிறார்கள்.


...


நிஜம் தான்


******


ஒரு நாவலில் வரும் கற்பனைக்காட்சி எப்படி இருக்க வேண்டும் '


சமூகத்திற்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும்.  

கூடா ஒழுக்கத்தை ஆதரிக்க கூடாது.


******


நீங்கள் எழுத்துலகை தேர்ந்தெடுத்ததற்கான காரணம்:


எழுதப் பிடிக்கும்

நேரம் உள்ளது


*****


ஒரு நாவல் எழுதும் போது இத்தனை அத்தியாயம், வார்த்தைக்குள் வரவேண்டும் என்று முடிவு செய்து விட்டு தான் எழுதுவீர்களா :


நாவல் எழுதியதில்லை


தொடர்கதை 25 பதிவுக்கு மேல் வளரவிட்டதில்லை


******


ஒரு எழுத்தாளனால் படைக்கப்படுகின்ற படைப்பு, வாசகர்களின் எண்ணங்களை பெறுத்து மாறுபடுமா, அல்லது தான் மனதில் நினைத்ததை மட்டுமே எழுதி முடித்து விடுவார்களா :


வாசகர்கள் எண்ணப்படிதான் மாறுகிறது


******


நாவலில் இடம் பெறும் வருணனை, கவிதைகளைப் பற்றி சொல்ல முடியுமா :


கதைக்கு தான் ‌முக்கியத்துவம்

கவிதையும் வர்ணனையும அதிகம் வேண்டாம்.


******


 நிஜ சம்பவத்தை தழுவி எழுதும் நாவலிற்கும், கற்பனை காட்சிகளை புனைந்து எழுதுவதற்கும் உள்ள வித்தியாசமாக ஏதாவது சொல்ல நினைக்கறீங்களா :


எல்லா நாவல்களிலும் நிஜ வாழ்க்கை கலந்திருக்கும்.


******


தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல நினைத்தால் தயங்காமல் கூறலாம்


எல்லா தளங்களும் எழுத ஊக்குவிக்கிறது.  எழுத எழுத எழுத்து நடை முன்னேறும்.

விமர்சனங்களை சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.  

அனைத்து எழுத்தாளர்களிடமும் நட்பிலேயே இருங்கள்.  

பகைமையே வேண்டாம்.


******


மிக்க நன்றி சிஸ்டர்🙏


உங்களது அனைத்து பதில்களும் எழிமையாகவும் அருமையாகவும் உள்ளது. 


மேலும் பல படைப்புகளை வழங்கிடவும் விருதுகள் பல வாங்கிடவும் மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐


ஹாய் பிரண்ட்ஸ்,


இன்றைய எழுத்தாளரின் படைப்புகளை வாசித்தவர்கள் அது பற்றிய கருத்துகளை தெரிவிக்கலாம். மற்றவர் வாழ்த்தலாம்


நன்றி


Comments