#எழுத்தாளர் அறிமுகப்படலம்
சீசன் இரண்டு
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய அறிமுக எழுத்தாளராக வருவது விபா விஷா அவர்களைப் பற்றிய நேர்காணல் இதோ…
பெயர் : விபா விஷா.
சொந்த ஊர் : பவானி
படிப்பு : B.Tech
பணி : முழு நேர இல்லத்தரசி
தளம் : ஒன்னு ரெண்டு இல்ல.. வாய்ப்பு கிடைக்கற எல்லா இடங்களிலும் இருப்பேன்.. இப்போதைக்கு.. அன்னா ஸ்வீட்டி தமிழ் நாவல் தளம், வைகை நாவல்கள்.
அமேசான் பெயர்: அமேசான்லையும் விபா விஷா தான்.
******
உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:
என்னை பற்றி சொல்லனும்னா.. என்ன சொல்றது?? எல்லாரையும் போல ஒரு சாதாரண பொண்ணு.. நிறைய நட்புகள் வேணும்.. என்ன சுத்தி நிறைய ஆட்கள் வேணும்னு நினைக்கற பொண்ணு.. ஆனா, பேசறதுக்கு கொஞ்சம் ஸ்டார்டிங் ட்ரபிள் உண்டு.. நீங்க முதல்ல பேச ஆரம்பிச்சுட்டா.. அப்பறம் நான் என் பேச்சை நிறுத்த மாட்டேன்.. என் மேல யாரவது கொஞ்சம் பாசம் காண்பிச்சா.. நான் நூறு மடங்கு பாசமா இருப்பேன். அதே சமயம் ௦.௦1% நான் வேணாம்னு நினச்சா.. அப்படியே விலகிடுவேன். மத்தபடி என்கூட இருக்கறவங்கள எப்பவும் சந்தோசமா வச்சுக்கணும் நினைப்பேன்.. அவ்வளவு தான்.
….
என்னைப் போலவே🙂🙂
*******
நீங்கள் எழுதிய முதல் நாவல்:
அஃபிஷியலா எழுதினது ஆழியின் காதலி.
******
எழுத வந்த வருடம் :
ஒரு வருடம்
******
தற்சமயம் எழுதிக் கொண்டிப்பது :
தற்சமயம் "தீராதே என் தேடல்?" நாவல் முடிவடைந்து வைகை தளத்தில் உள்ளது.
*****
உங்களது நாவல்களின் பெயர் :
1.ஆழியின் காதலி
2.நீரினைத் தேடிடும் வேரென நான்
3.விடாமல் தொடரும் உன் விதியே..
4.காதலாய்த் தூறுதே வான் மேகம்!
5.காக்க! காக்க!
6.ஏகனே! அனேகனே!
7.உடம்பொடு உயிரிடை
8.தீராதோ என் தேடல்?
9.உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் (ஆன் கோயிங்)
10.இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில் (ஆன் கோயிங்)
11. மாயோனின் வேங்குழல் நானாகிடவோ? (ஆன் கோயிங்)
….
அழகான பெயர்கள் தேர்ந்த்தெடுப்பு
******
உங்களது விருப்பமான எழுத்தாளர்:
என்னுடைய விருப்பமான எழுத்தாளர்கள் நிறைய பேர் இருக்காங்களே
*******
எழுத வந்த இத்தனை வருடத்தில் நீங்கள் எதையாவது சாதித்து விட்டதாக நினைக்கிறீர்களா :
நானெல்லாம் எழுதறதே சாதனை தான்.. அதுக்கும் மேல.. நான் எழுத வந்ததும் எனக்குள்ள நானே வச்சுக்கிட்ட ஒரு கெடு என்னன்னா.. ஒரு வருஷத்துக்குள்ள என் கதை புத்தகமா வரணும்னு.. அதுவும் நடந்துடுச்சு
******
நாவல் எழுதும் ஆவல் உங்களுக்கு எப்படி தோன்றியது :
என் கணவரோட சவாலால தான் எழுதணும்னு நினச்சேன்.. ஆனா, இப்போ இருக்கற எல்லார் கதையும், நான் அந்த சமயத்துல படிச்சிருந்தா ரொம்ப பயந்திருப்பேன்.. ஏதோ குருட்டாம்போக்குல எழுத வந்தேன்.. ஆனா இந்த எழுத்து எனக்கு இத்தனை இத்தனை விஷயங்களை கொடுத்தது இறைவனோட ஆசி
******
உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:
அது ஒரு பெரிய கதை.. நீங்க வேணாம்னு சொன்னாலும் நான் சொல்லியே தீருவேன்.. நான் ஒரு மகா மகா புத்தகப் பைத்தியம்.. கல்யாணத்துக்கு பிறகு ஒரு சமயம் என் கணவர்.. இப்படி இத்தனை புத்தகம் படிக்கறியே.. நீயே ஒரு கதை எழுதினா என்னன்னு கேட்க.. நானும் எழுத ஆரம்பிச்சேன்..அப்போ எனக்கு இது போல ஆன்லைன்ல கதை எழுதற விஷயமே தெரியாது.. இருந்தாலும் நான் ஒரு நோட்ல "காதலே கசிந்துருகி"ன்னு ஒரு கதை எழுதினேன்.. கிட்டத்தட்ட முடிக்கற சமயம்.. ஒரு கோபம்.. முட்டாள்த்தனமான கோபம்.. அதுல, அந்த நோட்டை குப்பைத் தொட்டியில போட்டுட்டேன்.. இது நடந்தது 2018ல.. அப்பறமும் நிறைய படிச்சேனே தவிர எழுதல.. மறுபடியும், 2019 கடைசில தான் அன்னா ஸ்வீட்டி சிஸ் ஓட புதினம் போட்டி நடக்கற அறிவிப்பு வந்துச்சு. ஆனா, நான் போட்டிக் கதைகள் படிக்காம, அவங்க கதைகள் படிச்சு, பயங்கரமா இம்ப்ரெஸ் ஆகி.. என் கணவர் கிட்ட சொன்னா.. நீ இப்படி ஒரு கதை எழுது பார்க்கலாம்.. "நான்" இம்ப்ரெஸ் ஆகற மாதிரின்னு சொன்னார். அப்போ எனக்கு ரெண்டாவது குழந்தை பிறந்து சில மாதங்கள் தான் ஆகியிருந்தது. அப்போ தான் இன்னொரு கதை.. வித்தியாசமா எழுதணும்னு எழுதினேன்.. ஒவ்வொரு எபிசோடும் சைட்ல போடப் போட.. என் கணவர் படிச்சுட்டே வந்தாரு.. என் கதை தான் அவர் வாழ்க்கையிலேயே படிச்ச முதல் கதை.. இப்படி அந்த முதல் கதை படிக்கவும் தான்.. உனக்கு நல்லா எழுத வருது.. நீ இந்த அளவுக்கு எழுதுவன்னு நினைச்சே பார்க்கல.. தொடர்ந்து எழுதுன்னாரு.. இதோ இப்போ ஒரு வருடம் தாண்டிட்டேன்..
…
வாவ்!! சூப்பர் சிஸ்டர்! ரியலி கிரேட் உங்க கணவர். நன்றிகள் அண்ணா
*****
வரலாற்று நாவல் எழுதிய அனுபவம் இருக்கிறதா, அல்லது இனி எழுதவேண்டும் என்ற ஆசை இருக்கிறதா :
வரலாற்று நாவல் தானே? இரண்டு நாவல்கள் எழுதியிருக்கேனே.. அதாவது வரலாற்று காலத்துல நடக்கறது போல புனைவு நாவல்கள் எழுதியிருக்கேன்.. அதுல ஒன்னு.. முன் ஜென்மம் சார்ந்த கதை.. மற்றொன்று.. இணை பிரபஞ்சக் கோட்பாடு வச்சு எழுதினது. அந்த தமிழ் எனக்கு ரொம்பவே இஷ்டம்.. அதுக்காகவே எழுதினேன்.
…
எனக்கும் ரொம்ப பிடிக்கும் சிஸ்டர். இந்த மாதிரி கதைகளை தேடி வாசிப்பவள் நான், எழுத வந்த பிறகு நிறைய மிஸ் பண்ணிட்ட பீலாகுது
*****
ஒரு தொடர்கதை அல்லது நாவல் எழுத ஒரு எழுத்தாளருக்கு என்ன தெரிந்திருக்க வேண்டும் :
தொடர்கதை, நாவல், சிறுகதை எதுவா இருந்தாலும் நாம எதை பற்றி எழுத போறோங்ற தெளிவு நமக்கு வேணும். நாம சொல்லப்போற விஷயம் வாசகர்கள் மத்தியில எப்படியான தாக்கத்தை உண்டு பண்ணும்னு நமக்கு தெளிவு வேணும். இன்னொன்னு.. தொடர்கதையில உடனுக்குடனான வாசகர்கள் கருத்து நமக்கு கிடைக்கும்.. ஆனா, அவங்க பார்வைக்கு தகுந்த படி நம்ம கதை மாறாம இருக்கணும்னு நான் நினைப்பேன். முக்கியமா சஸ்பென்ஸ் கதைகள் எழுதும் பொழுது கண்டிப்பா ரொம்ப கவனமா இருக்கணும் இல்லையா?
…
கட்டாயம்
******
ஒரு நாவலில் வரக்கூடிய வருணனை மற்றும் கவிதைகளின் பங்கு எங்கனம் இருக்க வேண்டும் :
வருணனையும் சரி, கவிதையும் சரி.. சில வரிகளுக்குள் இருந்தால் நலம்ன்றது என் கருத்து. ஏன்னா, ஆரம்பகாலத்துல நானும் கவிதைகள் புகுத்தினேன் என் கதையில.. ஆனா பிறகு தான் அது வாசகர்களுக்கு கொஞ்சமே கொஞ்சம் உறுத்தலா இருக்கும்னு தோணுச்சு. அதனால அளவோடு இருக்கும் அமிழ்தமே நன்று!
*******
நீங்கள் எழுதிய கதைகளில் மனதை கவர்ந்த ஒரு காட்சியை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா:
எல்லாமே என் குழந்தைங்க தான்.. இது எல்லாரும் சொல்ற வாசகம் தான்.. இருந்தாலும் என்னை உயிரோட மட்டுமில்ல.. உயிர்ப்போடு வச்சுருக்கறதும் இந்த எழுத்து தான்.. ஆனா.. குறிப்பிட்டு ஒன்னு சொல்லனும்னா.. என்னோட ரெண்டாவது கதை.. "நீரினைத் தேடிடும் வேரென நான்.." அந்த கதை பேர். அது இப்போ என் கூட இல்லாத என் அண்ணாவுக்காக எழுதினது. அவர் அந்த சமயத்துல சின்ன வயசுல கூட படிச்ச பொண்ண தேடிட்டு இருந்தாரு.. அதை வச்சு ஒரு கதை.. அவர் பேர் வச்சே எழுதினேன். என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான கதை அது.
…
அருமை சிஸ்டர்
*****
எழுத்தாளர்கள் பலர் புதுசு புதுசாக அறிமுகமாகி வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு எதாவது சொல்ல நினைக்கிறீர்களா :
நானும் தான் புது எழுத்தாளர். இப்போ வரவங்களுக்கு சொல்றதுக்கு எதுவும் இல்ல.. நான் தான் அவங்கள பார்த்து நிறைய கத்துக்கறேன்.. நிறைய வியந்து போறேன்.. சின்ன வயசு பொண்ணுங்களுக்கு கூட என்ன ஒரு தெளிவு அவங்க எழுத்துல? அதனால் நான் ஒவ்வொருத்தரையும் பார்த்து கற்றுக்கொள்ள மட்டுமே செய்கிறேன்..
….
நிஜம் தான் . முதல் கதையிலே 50,000/ 60,000 வார்த்தைகளுக்கு எழுத்துப் பிழை, வார்த்தை கோர்வு இல்லாம சும்மா அடிச்சு விடுறாங்க. வளரட்டும் அவர்களது தமிழ் புலமை ...
******
ஒரு நெகடிவ் விமர்சனத்தை எதிர்கொள்ளும் பக்குவம் வரவில்லை. பாஸிடிவ்வை எதிர்கொள்பவர்கள் ஏன் நெகடிவ்வை ஏற்க மறுக்கிறார்கள் என்று சொல்பவர்களை பற்றி என்ன நினைக்கிறீங்க:
நெகட்டிவ் ன்னா.. கதையில இருக்க எழுத்துப்பிழை பற்றி சொல்லலாம்.. அல்லது லாஜிக் மிஸ்டேக் பற்றி சொல்லலாம்.. ஆனா ஒரு சிலர்.. திரும்பவும் சொல்றேன்.. மிகச் சிலர், எழுத்தாளரை, அவங்க ரசனையை குறையா சொல்றாங்களே.. ஒரு வாசகருக்கு அந்த கதையை பற்றி விமர்சிக்க தாராளமா உரிமை உண்டு.. கண்டிப்பா நிறையோட, குறையையும் சொல்லுங்கன்னு தான் கேட்கறேன்.. ஆனா, அந்த எழுத்தாளரை பெர்சனலா விமர்சிக்க வேண்டாமே.. முகநூல்ல முகம் தெரியாதுன்றதால நம்ம கண்ணியத்தை நாம இழக்கலாமா சொல்லுங்க?
…
கட்டாயம்
*****
அன்றைய பெண்களின் வாழ்க்கை நிலையும் இப்போதைய நிலையினையும் பற்றி என்ன நினைக்கறீங்க :
இது என்னுடைய அனுபவத்தில் இருந்து மட்டுமே சொல்றேன்.. அன்றைய பெண்களை.. (என்னையும் உட்பட..) ஒரு நல்ல மனைவியா இருக்க மட்டுமே தயார் செய்தாங்க.. அப்பவும் சிலர் வெளி வேலைகளையும் கவனிச்சுட்டு, வீட்டு வேலையும் கவனிச்சுட்டு இருந்தாங்க தான். ஆனாலும் பெண்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருந்துச்சு அப்போ.. ஆனா, இன்றைக்கு வெளி உலகத்துக்கு வரோம் நாம.. எல்லா தரப்பு மக்களையும் பார்க்கறோம்.. இங்க பெண்கள் எல்லா காலத்துலையும் திறமைசாலிகளாகத் தான் இருக்கோம். ஆனா, இன்றைய பெண்களுக்கு லட்சியம் விரிவடைஞ்சிருக்கு.. நமது பார்வைகள் விசாலமாகியிருக்கு இல்லையா?
…
நிஜம் தான்
*******
கிராமத்து கதைக்கும், நகரத்து கதைக்கும் உள்ள வித்தியாசம் என்ன? எதனால் நகரத்தை விட கிராமமே முதலிடத்தை பெறுகிறது :
அப்படியா என்ன? இப்போ எல்லாம் ஆன்ட்டி ஹீரோ தான அதிகம் விரும்பப்படற மாதிரி தெரியுது? கிராமத்து கதைகள்ல ஆன்ட்டி ஹீரோக்கல்லாம் இருக்காங்களா? ஆறடி உயரம்.. அழகிய உருவம்.. ஆறாயிரம் கோடிக்கு சொந்தமான ஆன்ட்டி ஹீரோக்கள் தான கொடிகட்டி பறக்கறாங்க?
…
🤣🤣🤣 நிஜம் தான் சகோதரி. ஆனால் ஆன்டி ஹீரோவை விட கிராமத்து நாயகன் தான் என்றுமே முதலிடம் பெறுகிறான் என்று நான் உரக்கச் சொல்லுவேன் . எப்பொழுதும் முரடனை ரசிக்க முடியாது. அதே நேரம் கிராமத்து மணம் கமழ் பாத்திரம் மனதை விட்டு அகலாது. நானும் ஒன்னு இப்போ தான் ஆரம்பிக்க போறேன். அது என்னை எப்படி கொண்டு போகப் போகுதோ பார்க்கலாம்🤣🤣🤣
******
கொரானா / புயல்/ வெள்ளப்பெருக்கு/ சுனாமி இதைப் பற்றி ஏதாவது நாவல் எழுதிய அனுபவம் இருக்கிறதா :
இல்லையே.. இனிமே யோசிக்கலாம்..
…
நல்லது.
******
உங்கள் படைப்புகளை தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :
என் கதைகளை தொடர்ந்து வாசிக்கறாங்களான்னு எனக்கு தெரியலையே.. ஆனாலும் ஏதாவது சொல்லனும்னா.. "நன்றி சொல்ல உனக்கு, வார்த்தை இல்லை எனக்கு"ன்னு பாட்டு தான் பாடணும்.. கூடவே.. நிறைய வாசிங்க.. யார் கதை வேணாலும் வாசிங்க.. ஆனா வாசிச்சுட்டு உங்க கருத்தையும்.. நிறை-குறை எதுவா இருந்தாலும் சொல்லுங்க.. அவ்ளோ தான்
******
தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல நினைத்தால் தயங்காமல் கூறலாம்:
தனிப்பட்ட முறையில், ஆனந்த ஜோதி சிஸ் உங்களுக்குத் தான் மனமார்ந்த நன்றிகள் சொல்லணும். நீங்க செய்யறது பெரிய வேலை. ஆனா அதை விடா முயற்சியோடு செய்யறீங்க.. நீங்க இன்னும் இன்னும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்களும் கூட
…
மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏🙏
உங்களது நேர் காணல் நிகழ்ச்சி மிகவும் அருமையாக இருந்தது. மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கவும் , விருதுகள் பல வாங்கிடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐💐
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய எழுத்தாளரின் படைப்புகளை வாசித்தவர்கள் அது பற்றிய கருத்துகளை தெரிவிக்கலாம். மற்றவர்கள் வாழ்த்தலாம்.
நன்றி
Comments
Post a Comment