#எழுத்தாளர்அறிமுகப்படலம்
சீசன் இரண்டு
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய அறிமுக எழுத்தாளர் மேக வாணி, அவர்களைப் பற்றிய நேர்க் காணல் இதோ :
பெயர் : மேக வாணி
சொந்த ஊர் : மதுரை
படிப்பு : B.sc computer science
பணி : kinder Garten டீச்சரா வொர்க் பண்ணேன். இப்போ முழு நேர எழுத்தாளர்.
தளம் : பிரதிலிபி, eread, aksharam தளங்கள்ல எழுதிட்டு இருந்தேன். இப்போ எழுத்தாள நண்பர்களின் உதவியுடன் தூரிகை தமிழ் நாவல்கள் என்ற பெயரில் சொந்த தளம் தொடங்கியுள்ளேன்.
******
அமேசான் பெயர்: megavani or மேக வாணி
******
உங்களைப் பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:
எனக்கு படிக்க பிடிக்கும். அதுலயும் ஃபீல் குட் நாவல் படிக்க ரொம்ப ரொம்ப பிடிக்கும். என்னோட பல நேர தனிமையில உற்ற தோழியா மாறுறது கதைகளும், அதில் வரும் கதாபாத்திரங்களும் தான்.
இப்போ என்னோட சொந்த
கற்பனையில உருவான கதாபாத்திரங்களை ரசிக்கும் வாசகி.😉
******
உங்களது விருப்பமான எழுத்தாளர்:
ரமணிசந்திரன், ராஜேஷ் குமார் நாவல்கள் எப்போதும் என்னோட ஃபேவரைட்.
******
உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:
எழுத்து அனுபவம்... என் ஸ்கூல் டேஸ் ல இருந்தே ஆரம்பிச்சது தான்... கவிதை எழுத எனக்கு ரொம்பவே பிடிக்கும். வாரமலர்ல வர்ற கவிதை பக்கம்ல என்னோட ஒரு கவிதை யாச்சு வரணும்ன்னு ரொம்ப ஆசைப்பட்டேன். அதுக்காக வாரம் வாரம் கவிதை எழுதி போஸ்ட் பண்ண முயற்சி செய்வேன். ஒரு தடவை போஸ்ட் பண்ணவும் போனேன். ஆனால் சில பல ஃபேமிலி இஸ்ஸு ஆனதால கவிதைகள் எல்லாம் என் குட்டி நோட் ஓட நின்னுடும். என் தாத்தா வீட்டு பால்கனில, எதிர்ல ஓடுற வைகை ஆத்தை பார்த்துக்கிட்டே, மனசுல தோனுறதை கவிதையா வடிக்கிறதை விட ஒரு சொர்க்கம், இதம் வேற இந்த உலகத்துல இருக்கான்னு தெரியல. அது ஒரு வேற லெவல் ஃபீல். 🤩 அதுக்கு அப்பறம் என் மேரேஜ் க்கு அப்பறம் எங்க காதல் கதையை டைரில எழுதனும் ன்னு மனசுல தோனுன எண்ணம் தான்... அதை ஏன் பிரதிலிபி ல எழுதக் கூடாதுன்னு தோணுச்சு... தென், கற்பனை உலகத்துல வாழ ஆரம்பிச்சுட்டேன்🙈
....
அருமையான அனுபவம் தான்
*****
நீங்கள் எழுதிய முதல் நாவல்:
நம் விழியின் கனவு... உண்மை கதை தான் சில கற்பனைகளை சேர்த்து எழுதி இருந்தேன்.
*****
நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து தொடர்கதை or நாவல்
காணாத நாளில்லை கண்ணா... பிரதிலிபி சிறந்த எழுத்தாளர் போட்டிக்காக எழுதுறது. திருநங்கைகள் சம்பந்தமான கதைக் கரு. பட் ஜாலி லவ் ஸ்டோரி தான்.❤️
*****
உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள்:
நிறய பேர் இருக்காங்களே 🤔 ஒருத்தரை விட்டு எப்படி இன்னொருத்தர சொல்றது. ஆனால் முதல் முதல்ல எதிர்பாராத விதமா ரொம்ப க்ளோஸ் ஆனது சாரா மோகன் தான். அதுக்கு அப்பறம் தான் நிறய பேர் கிட்ட பேசி க்ளோஸ் ஆனேன்... இப்போ லிஸ்ட் ரொம்ப பெருசு😂
******
நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள்:
எனக்கு லைட் ஹார்ட் ஸ்டோரீஸ், ஆர் ஃபுல் க்ரைம் நாவல்கள் ரொம்ப பிடிக்கும். சோ ரமணி அம்மா, ராஜேஷ் குமார் சார் கதைகள் ஒன்னு விடாம படிச்சுடுவேன்
*******
நீங்கள் தொடர்ந்து வாசிக்க விரும்பும் எழுத்தாளர்:
ரமணி அம்மா கதைகளே 🤩
******
உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க:
நான் எழுதிய ரெண்டாவது கதை உயிர் தொடும் நல்லிசையே ... அதுல ரெண்டு பார்ட் முடிக்கும் போதே நல்ல வரவேற்பு கிடைச்சுது
*****
நீங்கள் எழுதிய மொத்த நாவல் :
17 நாவல்கள், 4 சிறுகதைகள், 2 குறுநாவல்கள்
*****
எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது:
இரண்டு வருடம்
*****
உங்கள் நாவல்களின் பெயர் :
1.நம் விழியின் கனவு
2.உயிர் தொடும் நல்லிசையே பார்ட் 1
3.காதலோடு பேதமில்லை பார்ட் 2
4.ஊனோடு உறைந்து விடு
5.நேசமே சுவாசமாகி
6.மௌனமே வேதமா
7.ஜீவன் பருகிடும் தாகம் நீ ( உயிர் 8.தொடும் நல்லிசையே, ஊனோடு 9.ஸ்டோரி அடுத்த தலைமுறை கதை)
10.செவ்வானம் நாணுமோ பாவையாலே
11. அலைகடல் தீண்டும் ஆழமே
12. ஹே! கிட்கேட் பெண்ணே!
13. உறங்காத நேரமும் உன் கனா பாகம் 1
14. உறங்காத நேரமும் உன் கனா பாகம் 2
15. உன் ரசிகன் நானல்லவா
16. மூங்கில் குழலான மாயமென்ன
17. யுகம் மாறினும் மறவேன் வஞ்சிமுகம்
குறுநாவல்
18. உயிர் நீத்தும் உனதாவேன்
19. ஸ்பரிசங்கள் இனிதோ! பிரதிலிபி அவார்ட்ஸ் போட்டிக்கதை
சிறுகதைகள்:
20. கலாட்டா கல்யாணம்
21. என்னில் இழைந்த உறவே
22. வெண்பனி மலரே
23. தொலைந்ததடி ஜீவனும் உன்னில் (அமேசானில் மூன்றாவது பரிசு பெற்ற கதை)
....
அருமையான பெயர்கள் வாழ்த்துகள் சகோதரி
*****
உங்களது நாவல்கள் சமூகப் படைப்பாக இருக்குமா அல்லது காதல் நகைச்சுவை குடும்பம் இதை பொறுத்து இருக்குமா:
அனைத்தும் கலந்த கலவையாகவே இருக்கும். 😍
*****
நீங்கள் இதுவரையில் எந்த மாதிரி நாவல் எல்லாம் எழுதியிருக்கீங்க:
கிரைம் த்ரில்லர், சென்டிமென்ட், சைல்ட் அபியூஸ் (பாய், கர்ள்), இலங்கை தமிழர்கள், செகண்ட் மேரேஜ் (பாய், கர்ள்) ஃபேண்டஸி...
*******
பேன்டஸி வகை எழுதிய அனுபவம் இருக்கிறதா :
எஸ் இரண்டு கதைகள் எழுதி இருக்கிறேன். உயிர் நீத்தும் உனதாவேன், யுகம் மாறினும் மறவேன் வஞ்சிமுகம்
*******
அது எழுத என்ன தெரிந்திருக்க வேண்டும் :
நடக்கவே நடக்காத ஒரு விசயத்தை நிஜத்துல நடக்குற மாதிரி வாசகர்களை உணர வைக்கணும்...
*****
நீங்கள் நாவல் எழுதும் முன்பு கதைக்கரு எப்படி தேர்ந்தெடுக்கிறீங்க :
ஜெனரல் ஆ ஒரு டாபிக் ரெடி பண்ணிக்குவேன். லைக் ட்ரக் ரிலேடட் கான்செப்ட் அப்டின்னா, அதுக்கான கதாபாத்திரங்கள், அதனை சுற்றிய கதை கருவை யோசிச்சுக்குவேன். மெய்ன் டுவிஸ்ட் மட்டும் டிசைட் பண்ணிட்டு ஸ்டோரி ஸ்டார்ட் பண்ணுவேன். தென் ஒரு flow vanthudum😍
******
உங்கள் நாவல்களில் வாசகர்களால் விரும்பி ரசிக்கப்பட்டது எது , ஏன்?
எல்லா கதைகளும் ஒவ்வொரு விதத்தில் வாசகர்களால் ரசிக்கப்பட்டது. அதில் நானும் மிகவும் ரசித்தது... உன் ரசிகன் நானல்லவா கதை தான். அமேசானிலும் 70 கும் மேற்பட்ட ரேட்டிங்கை பெற்றது. 🤗
*****
நீங்கள் எழுதிய நாவல்களில் ஏதாவது ஒரு சில காட்சிகள் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா:
மனசுக்கு நெருக்கமான நிறய காட்சிகள் இருக்கே🤔 ஊனோடு உறைந்து விடு கதையில கப்பல்ல வச்சு ஹீரோ துருவ், உத்ராவை தன்னை எப்போவும் மறக்க கூடாதுன்னு கல்யாணம் பண்ணிக்குவான், அவனை ஒரு விபத்துல மறக்க போறது தெரியாம.
மௌனமே வேதமா கதையில, முதல் கணவன் விஷ்ணு வால தன்னோட வாழ்க்கையை இழக்குற ஆத்விகா கிட்ட மித்ரன் சொல்ற டயலாக்... "என்னை மாதிரி ஒருத்தன் இல்லைன்னாலும் பரவாயில்ல. விஷ்ணு மாதிரி ஒருத்தன் இல்லாம இருந்தாலே போதும்" ன்ற வசனம்.
செவ்வானம் நாணுமோ கதையில சிறு வயது பாலியல் தொந்தரவால பாதிக்கப்பட்ட தேவாவை, இசை மாத்த நினைக்கிற எல்லா காட்சிகளும் ரொம்பவே மனசுக்கு நெருக்கமானது. ரொம்ப மெனக்கெட்டு எழுதுனதும் கூட.
உன் ரசிகன் நானல்லவா கதையில வாய் பேச முடியாத தமிழின்பன் சைகையாலேயே தமிழரசி கிட்ட பேசுற வெளிவராத வார்த்தைகள், அந்த ஃபீல எழுதுன அனைத்து காட்சிகளும் விவரிக்க முடியாதது தான்.
இதுக்கு மேல லிஸ்ட் போட்டா இதை படிக்கிற எல்லாரும் கத்தியோட என்னை ரௌண்ட் அப் பண்ணிடுவாங்க😂😂😂
*******
எழுத்துலகிற்கு வந்த இத்தனை வருடத்தில் பெற்ற விருது, வெற்றி, தோல்வி பற்றி கூற முடியுமா :
அமேசான் pen to publish போட்டில ஷார்ட் ஃபார்ம் கதைக்கு மூன்றாம் பரிசு கிடைச்சுது... வீட்டுக்கு அதுக்காக ஷீல்ட் வந்தப்போ அதை எக்ஸ்பிரஸ் பண்ணவே முடியல... அது தான் என் வாழ்க்கையிலயே முதல் முதல்ல பெற்ற பரிசு
*****
உங்களது கனவு லட்சியம் விருப்பம் ஏதாவது இருந்தால் சொல்ல முடியுமா :
எழுதணும் எழுதணும் எழுதிகிட்டே இருக்கணும் அதான் என்னோட
லைஃப் டைம் கோல் 😉
*****
புதிதாக தளம் ஆரம்பித்திருக்கும் நீங்கள் அது பற்றி சொல்ல முடியுமா :
சொல்ல போனா புதிதா தளம் ஆரம்பிச்சு இருக்குறது எந்த அளவு சந்தோசமா இருக்கோ, அதை விட அதிகமா பயமா தான் இருக்கு. பிகாஸ், என்ன செஞ்சாலும், என்ன பேசினாலும் அது தப்பாவே சித்தரிக்கிறவங்க இடத்தில வான்டட் ஆ நம்மலே தலையை குடுக்கணுமா ன்னு ரொம்ப யோசனையா தான் இருந்துச்சு. 😂 Writer aa readers aa frnds aa என் கூட இருக்குற எல்லாரும் ரொம்பவே சப்போட் பண்ணாங்க. சொல்ல போனா ரொம்பவே உழைச்சு இருக்காங்க. அவங்க எல்லாருக்கும் நான் ரொம்ப தேங்க்ஸ் தான் சொல்லணும். And எங்களை நம்பி தளத்தில எழுத வந்த எழுத்தாளர்களுக்கும் நான் ரொம்பவே கடமைப்பட்டு இருக்கேன். ஆரம்பிக்கிறது ஈஸி. ஆனா எத்தனை தடை வந்தாலும் அதை தொடருறது ஒரு சவாலான விஷயம் தான். நிச்சயமா அந்த சவாலை எதிர்கொள்வோம் ன்ற நம்பிக்கை இருக்கு. அட்லீஸ்ட் ஒரு மாசமா ராத்திரி பகலா தூங்காம வெப்சைடை
ரெடி பண்ண என் ஹப்பிக்காக வாச்சு சிறப்பா நடத்தனும் ன்ற எண்ணம் ஓடிகிட்டே இருக்கு.
*****
உங்கள் தளத்தில் நாவல் எழுதுபவர்களுக்கு என்னென்ன செய்யப் போறீங்க :
முதல்ல தூரிகை தளத்துல இத்தனை பேர் தான் எழுதணும்ன்ற ரூல் கிடையாது. யார் வேணாலும் லாகின் செஞ்சு கதைகளை பதிப்பிக்கலாம்.
சைட் டிசைன் பண்ணதே ரீடர் க்கும் சரி, ரைட்டர் க்கும் சரி யூசர் பிரண்ட்லியா இருக்குற மாதிரி தான். தென், ஒரு எழுத்தாளருக்கு தேவையானதே வாசகர்கள் கிட்ட இருந்து வர்ற கருத்துகள் தான்.
வாசகர்கள் இன்னும் அதை சுலபமா குடுக்குற மாதிரி காயின் சிஸ்டம் வச்சு இருக்கோம். அந்த காயின்ஸ் கிளிக் பண்ணாலே அவங்க படிக்கிற கதைகளின் பிரிவுக்கு ஏற்ற மாதிரி விமர்சனங்கள் இருக்கும். அதை கிளிக் பண்ணி எழுத்தாளருக்கு காயின் வித் கமென்ட் குடுக்கலாம். கண்டிப்பா எழுத்தாளருக்கும் அது ஊக்கம் பெறும் விதமா இருக்கும்.
இன்னும் சைட் மூலமா writer க்கு என்ன மாதிரியான எங்கரேஜ்மெண்ட் குடுக்க முடியுமோ அதற்கான வேலைகள் நடந்துகிட்டே இருக்கு. புக் பப்ளிஷிங் பத்தின அறிவிப்பும் சீக்கிரமே குடுப்போம் ன்னு நம்புறோம்.😍
******
உங்கள் தளத்தில் நடந்த, நடக்கப் போகும் போட்டிக்கதை பற்றி சொல்ல முடியுமா :
முதலில் தளம் ஆரம்பிக்கையில் சிறுகதை, ஒரு பக்க கதை, கவிதை போட்டி நடந்துச்சு.
இப்போ தூரிகை பட்டாசு நாவல் போட்டி அறிவிச்சு இருக்கோம். அதற்கான பதிவுகள் நடந்துக்கிட்டே இருக்கு...
*****
புத்தகம் போட்டுக் கொடுக்கும் முயற்சி செய்வீர்களா :
கண்டிப்பா முயற்சி எடுத்துட்டு இருக்கோம்.
*****
உங்கள் தளத்தில் இணைந்திருக்கும் எழுத்தாளரின் எண்ணிக்கை :
30 க்கு மேல்.
*****
நீங்கள் எழுத வந்த நோக்கம்:
எனக்கு படிக்க, எழுத பிடிக்கும். கதை படிக்கும் போது நம்ம கதைக்குள்ளையே போய்டுவோம். அந்த அளவு மனச பாதிக்கிற கதைகளை நகைச்சுவை கலந்து குடுக்கணும்ன்னு நினைச்சேன். குடுத்துட்டும் இருக்கேன்.
*****
நாவல் எழுதுவதை தாண்டி வேறு பணி நோக்குகிறீர்களா :
டீச்சர் ஆ வேலை பார்த்தேன். இப்போ முழு நேர எழுத்தாளர் தான்.. அப்படின்னு என்னை நானே சொல்லிக்கிட்டேன்🙈😂
******
உங்கள் கதைகள் வாசிப்பவருக்கு உணர்த்துவது என்ன
அதை வாசகர்கள் தான் சொல்லணும்... 🙈
******
நீங்கள் எழுதிய நாவல்களின் முடிவு வாசகர்களின் கருத்தைப் பொறுத்துமாறியிருக்கிறதா :
இல்லை... நான் குடுக்குறது எல்லாமே இனிய முடிவு மட்டும் தான். அதே நேரம் எதார்த்தமாவும் இருக்கணும் ன்னு நினைப்பேன். இதுவரை ஸ்டோரி பிளோ, எண்டிங் எதும் மாறுனது இல்ல.
*****
நல்ல முடிவை ஏற்றுக் கொள்ளும் வாசகர்கள் சோக முடிவை, பிரிவை ஏற்றுக் கொள்வது இல்லை ஏன் :
ம்ம்... கதை படிக்கிறதே மனசுக்கு சந்தோசம் குடுக்க தானே. சோ அந்த கதையும் அந்த கதாபாத்திரங்களும் சந்தோஷப்பட்டா அதை படிக்கிற நமக்கும் சந்தோசமா இருக்கும். அந்த ஃபீல் மனசுல ஒரு அமைதியை குடுக்கும். அந்த அமைதியாய் எதிர்பார்த்து தான் நிறய பேர் கதை படிக்கிறாங்க. என்னையும் சேர்த்து. இதுவரை நான் சோக ending கதைன்னு தெரிஞ்சு படிச்சது இல்ல. தெரியாம படிச்சு ஃபீல் பண்ணிருக்கேன். ஐ மீன் அந்த கதாபாத்திரத்தை நினச்சு. ஆனா நான் எழுத மாட்டேன். 🏃🏼♀️
உண்மையா மனசுல நிறைஞ்சு நிக்கிறது சோகமான, அழுத்தமான கதைகள் தான். அது எத்தனை வருசம் ஆனாலும் நமக்கு மறக்கவே மறக்காது. அப்படி எழுதவே எழுத்தாளருக்கு ரொம்பவே மன தைரியம் வேணும். அவங்களும் அந்த உணர்வை அனுபவிக்கனும். அப்படி கதை எழுதுற எல்லாருக்கும் ஹேட்ஸ் ஆஃப்...
...
நிஜம் தான்
******
நாம் எழுதும் நாவலை வாசிப்பவர் என்ன மாதிரி உணர வேண்டும் என்று நினைக்கறீங்க :
கண்டிப்பா அந்த கதைக்குள்ள போய் அந்த கதாபாத்திரங்களோட மிங்கில் ஆகிடனும். அப்படி ஒரு ஃபீல் குடுக்கணும் ன்னு தான் நான். நினைப்பேன்.
...
நிஜம்தான்
*****
நீங்கள் ஒரு நாவலை எழுத ஆரம்பிக்கும் முன்பு செய்வது என்ன?
மெய்ன் டுவிஸ்ட்ஸ் / knots மட்டும் யோசிச்சு வச்சுப்பேன். அந்த twist நோக்கி கதையோட பயணிப்பேன்.
*******
Utube & Audio & நாவலுக்கு உள்ள வித்தியாசமென்ன. மூன்றில் எது வாசகர்களை உடனடியாக சென்றடைவதாக நினைக்கறீங்க:
யூ ட்யூப் சேனல பொறுத்த வரை, எழுத்தாளர்கள் உழைப்பை திருடி தன்னோட சேனல்ல போடுறவங்களுக்கு தான் நல்ல வரவேற்பு. ஒரிஜினலா எழுத்தாளர் நடத்துற சேனல் மியூட் ல தான் இருக்கோன்னு ஒரு எண்ணம்... என்னோட சேனல்ல நான் வீடியோ ரொம்ப ஸ்லோ வா தான் போடுவேன். இப்போ தான் அடிக்கடி வீடியோஸ் போடுறேன். பட், reading stories தான் ரெஸ்பான்ஸ் நிறய...
*****
தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல நினைத்தால் தயங்காமல் கூறலாம் :
🤣 இப்படி பொதுவா கேட்டா பொங்கல் கிண்ட தான் தோணுது. நான் இதுவரை இவளோ சீரியஸ் ஆ பேசுனதே இல்ல...உங்க கேள்வி எல்லாம் ரொம்ப டஃப் ஆ இருந்துச்சு sis😉 என்னையவே சீரியஸ் ஆ பேச வச்சிட்டீங்க... இந்த நேர்காணல் நடத்துறது அவ்ளோ ஈஸி இல்ல. ஆனால், அதையும் நீங்க செம்ம ஸ்ட்ராங் ஆ நடத்துறது வேற லெவல்...
...
நன்றிகள் சகோதரி, ஏதோ என்னால் முடிந்த உதவிகளை செய்து கொடுக்க நினைத்தேன் அவ்வளவு தான்...
*****
உங்கள் படைப்புகளை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது:
நிறய சொல்லணுமே! இதுவரை நான் எழுதுற எல்லா கதைகளுக்கும் சப்போட் செஞ்சு, அழுத்தமா எழுதினா கோபப்பட்டு, தப்பா எழுதினா திருத்த வச்சு ன்னு நான் புக் போடுற அளவு வந்து இருக்கேன் ன்னா கண்டிப்பா அதுக்கு நீங்க தான் காரணம்.😍😍😍🥰 Thank u soooo much allll... இனிமேலும் உங்க support மட்டும் தான் நான் எதிர்பார்க்குற பெரிய asset...😍
இந்த லாஸ்ட் குவெஸ்டீன் பார்த்ததும் தான் ஆத்தா நான் பாஸ் ஆகிட்டேன் ஃபீல். 🤣🤣🤣 Thank u soooooo much akka இப்படி ஒரு அனுபவத்தை குடுத்ததுக்கு... நான் சொன்ன பதில்களையும் ரொம்ப பொறுமையா படிச்ச எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் drs😍
******
மிக்க நன்றி சகோதரி🙏🙏
உங்களது கேள்வி பதில்கள் அனைத்தும் அருமையாக இருந்தன. மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய எழுத்தாளரின் நாவலை வாசித்தவர்கள் அது பற்றிய கருத்துகளை பரிமாறிக் கொள்ளுங்கள். மற்றவர்கள் வாழ்த்துங்கள்.
நன்றி
Comments
Post a Comment