#எழுத்தாளர் அறிமுகப்படலம்
சீசன் இரண்டு
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய அறிமுக எழுத்தாளர் பவ்யா சுப்ரமண்யா அவர்களைப் பற்றிய நேர்காணல் இதோ:
பெயர் : பவ்யா சுப்ரமண்யா
சொந்த ஊர் : கும்பகோணம் இப்ப இருக்கிறது கர்னாடகா
படிப்பு : ப்ளஸ் டூ
பணி : குடும்ப தலைவி
தளம் : பவ்யா தமிழ் நாவல்(சொந்த தளம்)
அமேசான் பெயர்: பவ்யா சுப்ரமண்யா(Bhavya Subramanya)
******
உங்களது முதல் படைப்பு : Mr.Perfect-Mrs.Faulty
******
தற்சமயம் எழுதிக் கொண்டிருப்பது : மன்னவனின் நேரிழையே
******
மொத்தம் எத்தனை நாவல்கள் எழுதியிருக்கீங்க: மொத்தம் 3
*******
உங்களது படைப்புகளின் பெயர்கள் :Mr.Perfect-Mrs.Faulty
Marcus weds Chaitanya
Then mazhai
மன்னவனின் நேரிழையே (ongoing)
******
உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:
பெற்றோருக்கு ஒரே செல்ல மகள். திருமணத்திற்கு முன்பு வரை சுதந்திர பறவை திருமணத்திற்கு பிறகு பல கஷ்டங்களை சந்தித்தப் பிறகு கொஞ்சமே கொஞ்சம் பொறுப்பு வந்திருக்குன்னு நினைக்கிறேன் 😊 திடிரென தமிழ்நாட்டை விட்டு கர்னாடாகாவில் வந்து மொழி பழக்கவழக்கங்கள் புரியாம முழிச்சு இப்போ பேச்சு பழக்கங்களை சுமாரா தெரிஞ்சிட்டு இருக்கேன்.
*******
நீங்கள் எழுத்துலகை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் :
இருபது வருடங்களாக புத்தக வாசிப்பு தான் காரணம். நாம எழுதினால் எப்படி இருக்கும்னு நினைச்சு தான் எழுத ஆரம்பிச்சேன்.
******
உங்களது கனவு லட்சியம் ஏதாவது இருக்கிறதா :
எழுத்துலகில் எனக்குன்னு ஒரு முத்திரை பதிப்பது தான்.
…
சபாஷ்
******
உங்கள் முதல் படைப்பை பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா :
முதல் கதை சும்மா எழுதி பார்க்கலாமேன்னு ஆரம்பிச்சேன் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது அது என்னை மேல எழுதத் தூண்டியது.
******
உங்கள் படைப்புகளை வாசிக்கும் வாசகர்களை உங்கள் எழுத்தின் மூலம் திருப்தி படுத்தியிருக்கிறீர்களா:
அதை அவங்களதான் கேக்கனும்
******
உங்கள் வாசகர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது :
வித்தியாசமான கதைகளை
******
நீங்கள் ஒரு நாவல் எழுதுவதற்கு முன்பும் பின்பும் செய்வது என்ன:
எழுதுவதற்கு முன்பு அதைப்பற்றி முழுதாக யோசித்து வைத்துவிடுவேன். முடித்த பின் அது சரியாக திருப்தியாக வந்திருக்கிறதா என்று சரிப் பார்ப்பேன்.
******
உங்களுடைய முதல் கதைக்கு கிடைத்த பாராட்டு விமர்சனத்தைப் பற்றி சொல்லமுடியுமா:
முதலில் எனக்கு எழுத அவகாசம் கொடுத்த சஷி முரளி அக்காவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.அவங்க தளத்துல தான் எழுதத் தொடங்கினேன் கதை ஆரம்பத்தில் இருந்தே நிறைய பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்துக்கிட்டே இருந்தது முடிந்த பின்னும் நிறைய பேர் படிச்சு நல்லா இருக்கிறதா சொன்னாங்க அது என் வாழ்க்கைல அற்புதமான நாட்கள்.
*****
போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் இருக்கிறதா :
எஸ்எம் சைட்ல சித்திரை திருவிழால தேன் மழை போட்டி நடந்தது. பொன்னியின் செல்வன்ல வர ஆதித்த கரிகாலன் பத்தி கதை எழுதனும். ஒர்ஜினல் கதைல அவன் முடிவு எனக்கு ரொம்ப வருத்தமா இருந்தது..ஏத்துக்கவே முடியலை. அதனால இதுல அவனுக்காக அவனை விரும்பும் தேன்மொழிங்கற கதாபாத்திரத்தை உருவாக்கினேன். எல்லாருக்கும் அந்த கதை ரொம்ப பிடிச்சது...செல்க்ட் ஆன கதைல என்னோடதும் ஒன்று. மொழிநடை கற்பனை வளம் அருமையா இருக்கிறதா வந்த விமர்சனம் என்னால மறக்கவே முடியாது.
…
வாழ்த்துகள்
******
நீங்கள் எழுதும் படைப்புகளில் நிஜ சம்பவங்களின் தாக்கம் அதிகமாக இருக்குமா அல்லது நிஜமும் கற்பனையும் கலந்த கலவையாக இருக்குமா :
நிஜம் கொஞ்சம் கற்பனை அதிகமாக இருக்கும். சொல்லப் போனா எனக்கு பேன்டசி கதைகள் தான் நல்லா வரும்..
*****
விமர்சனங்களில் நெகடிவ் வந்தவுடன் பொங்குபவர்களை பற்றிய உங்களது கருத்து:
பொதுவாக எவ்வளவோ கஷ்டங்களை கடந்து தான் எழுத்தாளர்கள் கதை எழுதுறாங்க அப்படி இருக்கும் போது நெகடிவ் விமர்சனம் வரும்போது அது அவங்களை கண்டிப்பா பாதிக்கும் தான். ஆனா நெகடிவ் விமர்சனமே இல்லைன்னா எழுத்தை இம்ப்ரூவ் பண்ணனும்னு எண்ணமே எழுத்தாளருக்கு தோன்றாது. நெக்டிவ் கமெண்ட்ஸ்க்கு பொங்காம நல்லவிதமாகவே எடுத்துக்கலாம். சொல்லப் போனா பொங்கறதால அது இன்னும் அதிகம் தான் ஆகும்.
******
நீங்கள் எழுதிய நாவல்களில் உங்களுக்கு பிடித்தது எது அதைப் பற்றி சொல்லமுடியுமா:
என் இரண்டாவது கதை மார்கஸ் வெட்ஸ் சைதன்யா அதுவும் குறுநாவல் போட்டிக்காக தான் எழுத ஆரம்பிச்சேன். ஆனா சூழ்நிலையால டயம்க்கு சரியா கொடுக்க முடியல. அப்புறமா தான் எழுதி முடிச்சேன். டெங்ஷனா இருந்ததாகவும் இந்த ஸ்டோரி படிச்சிட்டு அது போன இடம் தெரியலேன்னு வந்த விமர்சனங்கள் எனக்கு அவ்ளோ சந்தோஷத்தை கொடுத்தது. அதுனால இந்த கதை எனக்கு கொஞ்சம் ஸ்பெஷல் தான்.
******
உங்கள் நட்பில் உள்ள எழுத்தாளர்கள் :
உமா மகேஸ்வரி, ஸ்ரீநவி சிஸ், ஷாந்தினிதாஸ், அழகி சிஸ், தாமரை சிஸ் இன்னும் லிஸ்ட் பெருசா போகும்.
******
நீங்கள் தொடர்ந்து வாசிக்க ஆசைப்படும் எழுத்தாளர்:
லஷ்மி,கமலா சடகோபன்,ரமணிசந்திரன்,ஜெய்சக்தி,எழிலன்பு
*******
ஆன்டி ஹீரோ கதைகளுக்கு வரும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு பற்றிய உங்களது கருத்து:
ஹீரோவை முரடனாகவும் கோபக்காரனாகவும் காட்றதுல தப்பில்ல அதற்கு என் ஆதரவும் உண்டு. ஆனா அதுவே சைகோ அதீத பழி வாங்கல்ன்னு காட்றதை நானே எதிர்க்கறேன்.அது மனரீதியாக பாதிக்கற அளவு போறதைப் பத்தி வந்த நிஜ சம்பவங்கள் வருத்தத்தை கொடுக்கிறது.
…
நிச்சயமாக
******
ஆன்டி ஹீரோ கதை என்றால் எப்படி இருக்கனும்னு நினைக்கறீங்க:
பெண்ணை அடிச்சு துன்புறுத்தி ரேப் பண்ணாதான் அவன் ஆன்டி ஹீரோ ஆகனும்னு இல்ல....முகம் கொடுத்துப் பேசாம இருந்து, திருமணத்துக்கு ஒத்துகாம படுத்தி, வேற பெண்ணை விரும்பறதா பொய் சொல்லி, பஸ் ஸ்டாண்டில் கால் கடுக்க நிக்கற பாத்தும் லிஃப்ட் கொடுக்காம போறது இப்படி பண்ணாக் கூட அவன் ஆன்டி ஹீரோ தான். இந்த அளவே போதுமே!
…
🙂🙂🙂🙂 போதும்
*******
உங்கள் நாவல்களில் கவிதை, வர்ணனை கலந்து எழுதிய அனுபவம் இருக்கிறதா :
கவிதை எழுதினது இல்ல வர்ணனை அங்கங்கே வரும்
*******
சமூக நாவல், நிஜ சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்படுகின்ற நாவலுக்கு உள்ள வித்தியாசம் என்ன :
அதிக வித்தியாசம் இல்ல… சமூக நாவல் நிஜ சம்பவம் கொண்டு எழுதப்பட்ற நாவல். ரெண்டுலையுமே நல்ல கருத்து வாழ்க்கை பாடம் இரண்டையுமே தெரிஞ்சுக்குறோம்.
*****
போலீஸ் கதை எழுதிய அனுபவம் இருந்தால் அதைப் பற்றி சொல்லமுடியுமா :
இன்னும் எழுதல ஆனா எழுத ஆசை இருக்கு.
******
தளந்தோறும் புதிது புதிதாக எழுத்தாளர்கள் பெருகிவிட்டனர் தளங்களும் அதிகரித்து விட்டன. ஆனால் எழுத்தாளரின் கற்பனை ஓட்டம் குறைந்துவிட்டதாக நினைக்கறீர்களா, எதற்காக பலருடைய படைப்புகள் பொதுவெளியில் விவாதத்திற்கு உள்ளாகிறது:
செட்டி பெருத்தால் பட்டணம். அதுபோல தளங்கள் பெருகறதுனால எழுத்தும் எழுத்தாளரும் அதிகம் ஆவாங்க நல்ல விஷயம் தானே. ஆனா அதுல சும்மா மேலோட்டமாக பொழுதுபோக்குக்கு எழுதும் கதைகள் தான் விவாதத்திற்கு உள்ளாகிறது. இதையே நல்ல நல்ல கதைகளை விவாதத்திற்கு உட்படுத்தினா மறைவுல இருக்கற திறமைகள் வெளிவருமே.
….
கட்டாயம். ஆனால் அப்படி செய்வதால் அவரது திறமைகள் வெளியே தெரிந்து விடுமே என்ன செய்ய?🤣🤣🤣 இதையெல்லாம் உணர்ந்து செய்ய வேண்டும்.
*******
விருது, பரிசுகள் வாங்கிய அனுபவம் இருந்தால் நாவலின் பெயர்களை சொல்லுங்கள்:
விருது பரிசுகள் இன்னும் எதுவும் வாங்கவில்லை.
******
நாவல் எழுதும் போது கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள் ஏதாவது உண்டுமா :
காற்றுக்கென்ன வேலின்னு கற்பனைக்கு விதிமுறைகள் இருந்தா அது கதையின் அழகை கெடுத்துவிடும் என்பது என் தாழ்மையான கருத்து. படிப்பவர்கள் மனதை வாழ்க்கையை பாதிக்காமல் இருந்தால் அதுவே போதும்.
******
ஒரு நாவல் அல்லது தொடர்கதை எழுதும் போது இத்தனை அத்தியாயத்திற்குள், வார்த்தைகளுக்குள் முடிக்க வேண்டும் என்று எழுதுவீர்களா :
அப்படி ஒன்னும் இல்ல. சாதாரணமா 1000 வேர்ட்ஸ் மேல தான் எழுதுவேன் கற்பனை பொங்கிப் பெருகினால் இரண்டாயிரம் மூவாயிரம் கூட போகும்.
******
பேன்டஸி கதை ரொம்ப நல்லா வரும்னு சொல்லியிருக்கீங்க. அப்படி அதன் மீது மட்டும் அப்படி என்ன தனிப்பட்ட விருப்பம் :
எனக்கு முதலில் இருந்தே லாஜிக் இல்லாத அதீத கற்பனை மேல ரொம்ப விருப்பம். நடக்க முடியாத ஒன்றுதான் ஆனாலும் கதையா வாசிக்கும்போது ஒரு த்ரில்
******
பேன்டஸி கதை எழுத என்ன தெரிஞ்சுருக்கணும் :
நிஜத்தில் நடக்காத ஒன்றுதான் பேன்டஸி ஆனா அப்படி நடந்தா அப்படிங்கற கேள்விக்கு பதிலா அந்த கதை இருக்கனும்...படிக்கிற வாசகர்கள் அதை நிஜம்னே நம்பனும் அப்படி கொடுக்கும் போது அந்த பேன்டஸி கதை வெற்றியடையும் நான் இப்ப ஆன்கோயிங் மன்னவனின் நேரிழையே அந்த மாதிரி கதைதான்.
******
உங்களது படைப்புகளை தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது:
நடுவில் சில பிரச்சனைகளால் தொடர்ந்து அப்டேட் கொடுக்க முடியல அதை மனசுல வச்சுக்காம தொடர்ந்து ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
******
தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல நினைத்தால் தயங்காமல் கூறலாம் :
தளத்தில் யாரேனும் தங்கள் கதைமை எழுத விரும்பினால் bhavyasubramanya1961@gmail.com இந்த இமெயிலுக்கு தொடர்புக் கொள்ளுங்கள்
Amazon link:
https://www.amazon.in/Bhavya-Subramanya/e/B089P2GB26?ref_=dbs_p_ebk_w0m_abau_000000
Recent link
https://bhavyatamilnovel.com
******
மிக்க மகிழ்ச்சி சிஸ்டர்.
மனதில் இருப்பதை மறையாமல் அப்படியே சொல்லியிருக்கீங்க.
மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐💐
நன்றி நட்புக்களே
🙏🙏🙏
Comments
Post a Comment