சுஜாதா நடராஜன்

 




#எழுத்தாளர் அறிமுகப்படலம்


சீசன் இரண்டு


ஹாய் பிரண்ட்ஸ்,


இன்றைய அறிமுக எழுத்தாளர் சுஜாதா நடராஜன் அவர்களைப் பற்றிய நேர் காணல் இதோ :



பெயர் : சுஜாதா நடராஜன்


சொந்த ஊர் : ஜலகண்டபுரம் , சேலம்


படிப்பு : B.com (CA)


பணி : திருமணத்திற்கு முன்பு ஆசிரியை மற்றும் கணக்காளராக பணியாற்றி இருக்கிறேன். அதன் பிறகு அபேகஸ் பயிற்றுவித்தேன். தற்சமயம் தையல் கலை நிபுணராக இருக்கிறேன்.


தளம் : பிரதிலிபி, அமேசான் மற்றும் சங்கமம் தளங்களில் எழுதி வருகிறேன்.


அமேசான் பெயர்: சுஜாதா நடராஜன்


அமேசான் லிங் : https://www.amazon.in/dp/B0956QYWTP/ref=cm_sw_r_apan_glt_WZPQKDWZFTJ9H8NSRM2A


தற்சமயம் எழுதிக் கொண்டிருக்கும் நாவல் or முடிவுற்ற லிங்: https://tamil.pratilipi.com/series/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-r4iuaasvcglw?utm_source=android&utm_campaign=content_series_share


புத்தகம் போட்டிருக்கும் நிலையத்தின் பெயர், புத்தகத்தின் பெயர் :


ஶ்ரீ பதிப்பகம்

  1. புரியாத புதிர் நீயடி !

  2. முடிவிலா காதல் !


புத்தகங்களை தபால் / கொரியர் மூலம் பெறுவதற்கு, கீழ் கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்


7038304765 / 08050785817


******


உங்களது பிறந்தகம், புகுந்தகம் பற்றி சொல்ல முடியுமா:

இரண்டுமே பெரிய தலை கட்டு கொண்ட குடும்பங்கள். அதிலும் பிறந்தகத்தில் மூத்த பெண் மகள்… புகுந்தகத்திலும் மூத்த மருமகள். அதிக கடமைகளும் பொறுப்புகளும் சூழ்ந்த வாழ்க்கை முறை. 


******


உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:


என்னை பற்றி சொல்லனும்னா… தற்போது குடும்பத் தலைவியாக என் பொறுப்புகளை கடமைகளை செய்துக்கொண்டு இருக்கிறேன். ஆனால் வெறும் குடும்பத் தலைவி என்ற அடையாளம் மட்டும் போதாது என்று நினைத்து எனக்கான அடையாளத்தை தேடினேன். என் தேடலுக்கும் முயற்சிக்கும் இறைவன் அருளியிருக்கும் வாய்ப்பு எழுத்துலகம். 



அருமை


******


உங்களது விருப்பமான எழுத்தாளர்: 

கல்கி , இந்திரா சௌந்திராஜன் மற்றும் குடும்பக் கதைகள் எழுதும் அனைவரும்.


******


உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:


எழுத தொடங்கும் முன் நான் ஒரு வாசகி. வாசிப்பு என் தனிமைக்கு என்றுமே துணையாய் இருந்திருக்கிறது. வாசிப்பு ஒரு அனுபவம். அந்த வாசிப்பு என்னுள் இருந்த எண்ணங்களை வடிவமைக்க உதவியது. நான் அறியாமலே வார்த்தைகளை கோர்த்து கவிதை படைத்திருக்கிறேன் பதின்பருவத்தில். ஆனால் அன்று அதை பதிப்பிக்கவோ… அதை ஒரு ஆச்சரியமான விசயமாகவோ எண்ணியதில்லை என் மனம். பதின்பருவம் முடிந்து படிப்பு வேலை திருமணம் என்று கடந்த வாழ்க்கையில்… மீண்டும் வாசிப்பு உள்நுழைய… அந்த வாசிப்பே என்னை எழுத்தாளராக மாற்றிவிட்டது.


******


நீங்கள் எழுதிய முதல் நாவல்:


அவனும் - அவளும் ( புரிதல் )


*****


நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து தொடர்கதை or நாவல்:


தற்சமயம் பிரதிலிபி அவார்ட்ஸ் போட்டிக்காக ஒரு சிறிய தொடர் எழுதுகிறேன். 'சுவரில்லா சித்திரமே! "


https://tamil.pratilipi.com/series/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-awqnk6mbd40w?utm_source=android&utm_campaign=content_series_share


******


உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள்:


 நிறைய பேர் இருக்காங்க. என்னோடு பேசும் அனைவரும் என் நட்புகளே… நீங்களும் இப்போது என் நண்பர் தானே…


*****


நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள்: 


எப்போதும் விரும்புவது 'பொன்னியின் செல்வன்'. மற்றபடி கவிதைகள் படிக்க பிடிக்கும். நாவல்கள் படிப்பேன். குறிப்பிட்டு இது என் விரும்பம் என்று இல்லை. தமிழ் மொழி சார்ந்த நூல்கள் படிக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது.


*****


உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க:


எழுதும் ஒவ்வொரு நாவலிலும் சிறுகதைகளிலும் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு இருக்கவே முயன்றுக் கொண்டு இருக்கிறேன். ஒவ்வொரு நாவலும் ஒவ்வொரு வகையில் வெளிப்படுவதால் இது தான் என் திறமையை வெளிப்படுத்தியது என்று குறிப்பிட முடியாது அல்லவா. தவறுகளை திருந்திக் கொண்டு மேலும் மேலும் சிறந்த படைப்பை எழுதவே நினைக்கிறேன்.


என்றாலும் முதல் குழந்தை போல… என் முதல் நாவல் என்னுள் இருந்த எழுத்தை வெளிக்கோர்ந்ததால் அதை குறிப்பிடுவேன். "அவனும் - அவளும் (புரிதல்).


******


நீங்கள் எழுதிய மொத்த நாவல் :


நாவல் - 15

குறுநாவல் - 10

சிறுகதைகள் - 40 - 45 

சில பல கவிதை கிறுக்கல்கள்


******


எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது: 


மூன்று வருடம்


******


உங்கள் நாவல்களின் பெயர் :


  1. அவனும் - அவளும் ( புரிதல் )

  2. இவன் யாரோ

  3. கண்ணே கலைமானே (ஆதியின்காதல்)

  4. மாலையிடும் சொந்தம்

  5. எனக்கு எப்ப ஓகே சொல்லுவே

  6. ஒரு தடவை சொல்வாயா

  7. நின்னை நான் அறிவேன்

  8. உன்னில் எந்தன் பிம்பம்

  9. இரண்டாம் நிலவு

  10. மனதோடு கோடைக்காலம்

  11. முடிவிலா காதல்

  12. புரியாத புதிர் நீயடி

  13. என்னோடு நீ இருந்தால்

  14. பிறை தேடும் இரவு

  15. மறப்பத்தில்லை நெஞ்சம்



அழகான பெயர்கள் தேர்ந்தெடுப்பு


*****


பெரும்பாலான எழுத்தாளர்கள் திருநெல்வேலி, குற்றாலம் என்று அவர்களது நாவலில் அவர்களது சொந்த

ஊர், பிரசித்தி பெற்ற இடங்களைப் பற்றி சொல்லியிருக்காங்க. அதுபோல நீங்கள் உங்கள் படைப்பில் ஏதாவது எழுதியிருக்கீங்களா :


நான் பிறந்த ஊர் ஈரோடு. முதல் கதையில் சில இடங்களை சொல்லியிருக்கிறேன். 'முடிவிலா காதல்' கதையில் காட்சிக்காக சில இடங்கள் இருக்கும். இன்னும் கதைகளின் கதைகளங்களுக்கு ஏற்றார் போல சில இடங்களை கூறுவேன். மற்றபடி பிரசித்தி பெற்ற இடங்கள் என்று குறிப்பிட்டதில்லை. காட்சிகளோடு அந்த இடங்களும் ஒன்றிவிடும்.


*****


நிஜ சம்பவம், கற்பனைக் காட்சி கலந்து எழுதும் போது அது எழுத்தாளருக்கு திருப்தியை கொடுக்க எப்படிப்பட்ட கதைகளை தேர்வு செய்யணும் :


யதர்த்தமான உணர்வை தரவேண்டும் என்பதே என் எண்ணம். கற்பனை என்றாலும் கூட மிகைப்படுத்த நினைக்க மாட்டேன். 


******


போலீஸ், கிரைம், திகில் நாவல் எழுதிய அனுபவம் இருக்கிறதா :


திகில் கதை எழுதியிருக்கிறேன். அதில் ஒன்று பிரதிலிபி போட்டியில் வெற்றியை பெற்று தந்தது. 'யார் அழைப்பது ' பிரதிலிபியில் உள்ளது.


******


தூய தமிழில் எழுதும் நாவலை வாசிக்கும் போது தோன்றும் உணர்வுக்கும் ,பேச்சு வழக்கில் எழுதப்படுகின்ற நாவலை வாசிக்கும் போதும் தோன்றுகிற உணர்வுக்கும் என்ன வித்தியாசம் இருப்பதாக நினைக்கறீங்க :


வரலாற்று நாவல்கள் தூய தமிழில் இருந்தால் படிக்க இன்பமாக இருக்கும். நடைமுறை வாழ்க்கையை சித்தரிக்கையில் வசனத்திற்கு பேச்சு நடையும் பத்திகளுக்கு எழுத்து நடையும் இருந்தால் வாசிக்க நன்றாக இருக்கும்.


….


நிஜம் தான்.


******


நீங்கள் ஒரு நாவல் எழுத எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் :


குறிப்பிட்டு சொல்ல முடியாது. எனில் கதையின் போக்கு…மற்றும் என் தனிப்பட்ட சூழ்நிலையை பொறுத்து கால அளவு மாறுபடும். 


******


உங்கள் கதைகளின் அத்தியாயம், மொத்த வார்த்தை இத்தனை வர வேண்டும் என்று திட்டமிட்டு எழுதுகிறீர்களா :


தொடர்கள் எழுதும்போது திட்டமிட மாட்டேன். ஆனால் புத்தகம் பதிப்பிற்கான கதை என்றால் மொத்த வார்த்தைகளை அடிப்படையாக வைத்து எழுதுவேன். போட்டிக்கு எழுதும்போதும் திட்டமிட்டு எழுதுவேன்.


*****


நாவல்களில் தோன்றும் எது வாசிப்பு திறனை தடை செய்வதாக நினைக்கறீங்க :


அது அவரவர் ரசனைக்கு ஏற்ப மாறுபடும். எனக்கு அதிக வர்ணனைகள் தடையாக தோன்றும். 



எனக்கும் கூட, அதை நான் கமெண்டில் சொல்லிவிடுவதும் உண்டு


*****


நிஜ சம்பவத்தை கதையாக எழுதிய அனுபவம் இருந்தால் சொல்ல முடியுமா:


நிறைய இருக்கு. கதைகளின் போக்கில் சில அனுபவங்களை பகிர்ந்துவிடுவேன். 


*****


பிரதிலிபி தளம் பற்றிய உங்களது கருத்து :


பிரதிலிபி பயன்படுத்த எளிமையான தளம். எழுத்தாளர் மற்றும் வாசகரின் நிறை குறைகளை கேட்டு… அதை களைய எப்போதும் முயற்சிக்கும் தளம். அங்கு பாகுபாடு கிடையாது. அனைவரையும் சமமாக நினைப்பதே அதன் சிறப்பு. அங்கு நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை எங்கே சொல்கிறோம் என்பதே நம் பிரச்சனைகளை களைய உதவும்.



ஆமாம். நிஜம் தான்.


******


தற்சமயம் நடந்து வரும் போட்டிகளைப் பற்றியும் அதனால் எழுத்தாளர்களுக்கான ஊக்குவிப்பை பற்றியும் சொல்ல முடியுமா :


பிரதிலிபி ஒவ்வொரு மாதமும் போட்டி அறிவிப்பு தருகிறது. தற்போது இரண்டு சிறப்பு போட்டிகள் நடக்கிறது. ஒன்று 12 மொழிகளுக்கான போட்டி. மற்றொன்று எழுத்தாளர்களின் புத்தக கனவை நனவாக்கும் போட்டி. இரண்டுமே எழுத்தாளர்களின் திறமைக்கான சவாலாக பார்க்கிறேன். 12 மொழிகளில் தமிழ் மொழி தேர்வானால் அது மிகச்சிறப்பாக இருக்கும். பன்மொழிகளோடு போட்டியிடுவது நம்முள் இருக்கும் சிறந்த எழுத்தாளரை நிச்சயம் வெளிக்கோணர உதவும். 



உண்மை தான்


******


கமெண்ட், வியூவ்ஸ் இல்லாமல், தொய்வில்லாத கதையோட்டத்தை கொடுக்கும் எழுத்துகளுக்கு, போட்டியில் மதிப்பு இருக்கும்னு நினைக்கறீங்களா :



கமென்ட்ஸ், வியூவ்ஸ் எல்லாம் ஒரு ஊக்குவிப்பிற்கு மட்டுமே. அது ஒருபோதும் எழுதும் எழுத்தாளரின் மனதின் எண்ணத்தை பாதிக்க கூடாது. அப்படி பாதித்தால் தொடர்ந்து பயணிக்க சிரமமாக இருக்கும். சிறந்த படைப்புகள் ஒரு போதும் தோற்காது. ஒன்று போட்டியில் வெல்லும் இல்லையேல் வாசக நெஞ்சங்களை வெல்லும். இது என் அனுபவம்.



நிஜம் தான்


******


உங்கள் பாலோவர்ஸ் உங்களிடம் எதிர்பார்ப்பது என்ன:


'தொடர் யூடிகள்…' 'கதையை சீக்கிரம் முடிச்சிடாதீங்க….' அப்படிங்கறதுன்னு நினைக்கிறேன்.



அப்படியே எனக்கு கிடைச்சது போல🤣🤣🤣


*******


உங்களது நாவலுக்கு கிடைத்த வெகுமதியாக நீங்கள் நினைப்பது :


ஒவ்வொரு வாசகரின் அன்புமும் வாழ்த்துக்களும்


******


ஒரு எழுத்தாளனின் மைக்கு உள்ள வேலை என்ன :


எழுத்து வெறும் பொழுதுபோக்காக இல்லாமல் இருத்தல்...


*****


எழுத்தாளர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமை பற்றி சொல்ல முடியுமா :


ஒற்றுமை வேற்றுமையின் எதுவும் இல்லன்னு தோணுது. யாரோட கருத்துக்கு யார் ஒத்துப்போறாங்களோ அவங்கவங்க ஒற்றுமையாகவும், ஒத்துப்போகாதவங்க வேற்றுமையாகவும் தெரியலாம். ஆனா அவங்கவங்க கருத்து தான் சரின்னு வாதாடும் போது அது பெரிய வேறுபாடா தெரியுது. 


….


ஆமாம் நிஜம் தான்


******


உங்கள் வாசகர்களிடம் இருந்து பெறப்பட்ட அழகான மனதை விட்டு அகலாத வாழ்த்து, கருத்துப் பரிமாற்றமாக எதையாவது சொல்ல நினைக்கறீங்களா :


யாரையும் குறிப்பிட்ட சொல்ல முடியாதுங்க காரணம்… சிலரால் தன்னோட உணர்வை வார்த்தைகளால சொல்லிட முடியும். ஆனா சிலர் படிச்சிட்டு திருப்தியா ஒரு புன்னகையோட நகர்ந்திடுவாங்க. அந்த புன்னகையும் நமக்கான வாழ்த்து தானே. அதனால நான் இரண்டையுமே ஒன்னா தான் பார்க்கிறேன். வாசகர்கள் சொல்லும் 'super', கதையின் ஆழத்தை உணர்ந்து எழுதிய வாழ்த்துக்கள், நட்சத்திரங்கள் கொடுத்து சொல்லும் அன்பு, திருப்தியான புன்னகை அனைத்தும் என் மனதை விட்டு அகலாத பரிமாற்றங்கள். அவற்றை கொடுக்கும் என் வாசக நெஞ்சங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி


******


ஒரு நாவலை வாசித்து விட்டு ஒரு ஸ்டார் மட்டும் கொடுத்து விட்டு போவது எதைக் காட்டுகிறது:


I just ignore that. அதை பெருசா எடுத்துக்கிட்டா அடுத்த நகர்வு தாமதமாகும். தவறை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்தால் அதற்கு பதில் விளக்கம் தரலாம். இல்லையேல் திருத்திக்கொள்ளலாம்… எதுவுமே இல்லாத ஒற்றை நட்சத்திரத்தை பெரிதாக எடுத்துக் கொள்வது நேர விரயம். சில சமயம் டெக்னிக்கல் கோளாறு காரணமாக கூட ஒற்றை நட்சத்திரம் வரலாம். அதற்காக வருத்தப்பட்டால் எப்படி ?


******


நாளிதழில் எப்படி கதை எழுதும் வாய்ப்பு கிடைத்தது:


எனக்கு நாளிதழ்களுக்கு எழுதனும்னு ஆர்வம் இருந்துச்சு. அதுக்காக வழிமுறைகளை தேடிக்கிட்டு இருந்தேன். அப்பதான் சங்கமம் தளம் நடத்திய இரட்டை ரோஜா போட்டியில் எனக்கு ஜோடியா கிடைச்சாங்க சங்கரி அப்பன் மேம். அவங்க நிறைய நாளிதழ்களில் எழுதறாங்க. அவங்க என்கரேஜ்மென்ட்டும் guideness என்னோட கதை கண்மணியில் வர உதவியா இருந்தது.


******


எத்தனை நாவல்களை கண்மணியில் எழுதியிருக்கீங்க :


ஒன்று


******


 தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல நினைக்கறீங்களா :


எதையும் நேர்மறையா யோசிக்கலாம் என்பது தான்.


******


உங்கள் நாவலை வாசிக்கும் வாசகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது :



தொடர்ந்து வாசித்து உங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்திடுங்கள் அன்பு நெஞ்சங்களே. தொடர்ந்து இணைந்திருப்போம்….  


என்றும் அன்புடன் உங்கள் சகோதரி ,

சுஜாதா நடராஜன்.

நன்றி 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐



ஆனந்த ஜோதி உங்களுடய புதிய முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடரட்டும் உங்கள் பணி….💐💐💐💐💐💐


******


மிக்க நன்றி சிஸ்டர்🙏


உங்களது பதில்கள் அனைத்தும் அருமையாக இருந்தன.

 மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐


நன்றி தோழமைகளே

🙏🙏🙏🙏




Comments