நிலா பிரகாஷ்

 


#எழுத்தாளர் அறிமுகப்படலம்

சீசன் இரண்டு

ஹாய் பிரண்ட்ஸ்,

இன்றைய அறிமுக எழுத்தாளர் நிலா பிரகாஷ் அவர்களைப் பற்றிய நேர்காணல் இதோ :

பெயர் : நிலா பிரகாஷ்

சொந்த ஊர் : கோவை

படிப்பு : முதுகலை பட்டதாரி

பணி : -------

தளம் : அமேசான்

அமேசான் பெயர் & லிங் :  நிலா பிரகாஷ்

https://www.amazon.com/gp/f.html?C=Z9SQXHR9LXA4&K=108RNY314346D&M=urn:rtn:msg:20211109165700c701112b60df4c258e7396b16660p0na&R=1OJLEFVETV6U9&T=C&U=https%3A%2F%2Fwww.amazon.com%2Fauthor%2Fnilaprakash.amazon.com%3Fref_%3Dpe_1724030_132998060&H=CDEOJG8E3ZQFE798EVIVMMXWIGSA&ref_=pe_1724030_132998060


தற்சமயம் எழுதிக் கொண்டிருக்கும் நாவல் லிங்& முடிவுற்ற நாவலின் லிங்  : என் சுவாசக் காற்று நீயடி 

என் சுவாசக் காற்று நீயடி (Tamil Edition) https://www.amazon.in/dp/B09L56D2D2/ref=cm_sw_r_apan_glt_AAS0E5N2Y953YFFS0ZG6


புத்தகம் கிடைக்கும் இடம்& புத்தகத்தின் பெயர்:
தற்போதைக்கு kindle ல் மட்டுமே எனது நாவல்கள் உள்ளன

*****

எழுத வந்த வருடம் :

June 2021 மேம்

*****

நீங்கள் எழுதிய முதல் நாவல்:

எனை மீறும் காதல் (குறுநாவல்)

எனை மீறும் காதல் (Tamil Edition) https://www.amazon.in/dp/B097YQTBS7/ref=cm_sw_r_apan_glt_2R60VKA6ASBDDHNVE027


எனை மட்டும் சுடும் குளிரே ( நாவல்)

எனை மட்டும் சுடும் குளிரே (Tamil Edition) https://www.amazon.in/dp/B09BL6BC8Z/ref=cm_sw_r_apan_glt_750TFYQF3DNSYYDYSTYC

*****

நீங்கள் எழுதிய கவிதை தொகுப்புகளின் பெயர்:

தனிமை
மழைத் தூறலின் இதம் காதல்

****

கவிதை  எழுத என்ன தெரிந்திருக்க வேண்டும்:

எதையும் ரசிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
எல்லா உணர்வுகளையும் எழுத்துக்களில் வடிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

*****

உங்களைப் பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:

என்னுடைய எழுத்துலக முகவரி இதுவே
நிலவொளி போல் ரசித்திடும் நினைவுகளை மட்டுமே எழுத முயற்சிக்கும் இளம் எழுத்தாளர் நான் .. வலிகளையும் கண்ணீரையும் மனதை கனமாக்கும் யதார்த்தங்களையும் நான் அதிகம் எழுதுவதில்லை..ஒரு கடின உழைப்பாளியின் சில நிமிட ஒய்வு இடைவேளையில் பருகிடும் தேநீர் தித்திப்பு போல் வாழ்வைக் கடக்கும் பொழுதுகளில் என் எழுத்துக்கள் வாசகர்களுக்கு இதம் தந்தால் போதும் என்றே எழுதுகிறேன்

...

அருமை

*****

உங்களது விருப்பமான எழுத்தாளர்:

கல்கி
சுஜாதா
சாண்டில்யன்
ரமணிசந்திரன் ❤️

*****

உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:

சிறுவயது முதலே கவிதை கட்டுரை எழுதுவதில் பரிசுகள் வென்று இருக்கிறேன்..பல வருடங்கள் கழித்து  என் பள்ளித் தோழிகள் இருக்கும் வாட்ஸ் அப் குரூப் ல் கொரனா காலத்தில் தோழிகளுக்கென கதை எழுதி அனுப்ப அதில் என் தோழி   திடீரென்று ஒரு கதை போட்டி லிங்க் அனுப்பி பங்கு கொள்ளேன் என்றதும் நானும் கதை எழுத ஆரம்பித்தேன் ..பிறகு அதை கிண்டிலில் பதிவிட்டு நல்ல வரவேற்பு கிடைக்க தொடர்கிறேன்

*****

நீங்கள் ஒரு எழுத்தாளராக வருவேன் என்று எப்போதாவது நினைத்தது உண்டு மா:

நிச்சயமாக ..ஆனால் எனக்கு காலமும் வாய்ப்பும் அமைய நாளாகும் என நினைத்தேன்..என் நினைப்புக்கு மாறாக வெகு சீக்கிரத்திலேயே அமைந்தது ..

*****

எழுத்து துறைக்கு வந்ததால் உங்கள் வீட்டாரின் சப்போர்ட் எப்படி இருக்கு :

நல்ல ஊக்கம் அளிக்கிறார்கள்..❤️

*****

உங்க சொந்த ஊர் கோவை தானே. அதைப் பற்றி உங்கள் படைப்புகளில் ஏதாவது செய்தி, விபரம் இருக்குமா :

சில சமயங்களில் எளிதில் நான் எழுதக் கூடிய சொல் நடை நான் பேசி வளர்ந்த வார்த்தைகள் என் எழுத்துக்களில் வெளிப்படுவது இயற்கை தானே..

...

ஆமாம். கட்டாயம்

****

உங்கள் ஊரின் சிறப்பு பற்றி சொல்ல முடியுமா:

கோவை சிறுவாணி ஆறு, சில்லென்ற ஊட்டி , இயற்கையை இன்னும் சற்றே பிடித்து உயிர்ப்போடு வைத்து  இருக்கும் நகரம்

*****

உங்களது நட்பில் உள்ள எழுத்தாளர்களை பற்றி சொல்ல முடியுமா:

நான் இப்போது தான் எழுத ஆரம்பித்து இருப்பதால் தற்பொழுது தான் அறிமுகம் ஆகி கொண்டு இருக்கிறேன்

*****

உங்களது படைப்புகள் காதல், குடும்பம், சமூகம், ஆன்மீகம், வரலாறு இதில் எதை சார்ந்ததாக இருக்கும்:

காதல் ❤️

*****

ஒரு நாவல் எழுதும் முன்பும், பிறகும் என்ன தெரிந்திருக்க வேண்டும்:

எழுத்துக்களுக்கு எந்த ஒரு வரையறையும் பொருந்துவதில்லை எனைப் பொறுத்த வரை ..அது எழுத்தாளனின் தனிப்பட்ட சுதந்திரத்தின் படைப்புலகம் ..ஒருவர் இதைத் தான் ரசிக்க வேண்டும் என்பது எப்படிப்பட்ட அடக்குமுறையோ அதைப் போன்றே இப்படி தான் எழுத வேண்டும் சிந்திக்க வேண்டும் என வரையறை வகுப்பது ..எனக்கு பிடித்ததை ரசித்ததை நான் காதலித்து எழுதுகிறேன்..அது போன்றே மற்றொரு எழுத்தாளரும் .. ஒருவருக்கு பிகாஸோ ரவிவர்மா ஓவியம் அழகாகத் தெரியலாம் ஒருவருக்கு சிறு மழலையின் க்ரேயான் கிறுக்கல்கள் அதை விட சிறப்பாகத் தோன்றலாம்..

...

நிச்சயமாக

*****

உங்களது விருப்பமான எழுத்தாளர்:

கல்கி , சேக்ஸ்பியர்

*****

நீங்கள் விரும்பி படிக்கும் நூல் :

பொன்னியின் செல்வன்

*****

உங்களது படைப்புகளின் பெயர்:


எனை மட்டும் சுடும் குளிரே 

எனை மட்டும் சுடும் குளிரே (Tamil Edition) https://www.amazon.in/dp/B09BL6BC8Z/ref=cm_sw_r_apan_glt_750TFYQF3DNSYYDYSTYC

தீராதடி மோகினி

மோகம் தீராதடி மோகினி (Tamil Edition) https://www.amazon.in/dp/B09DX897M3/ref=cm_sw_r_apan_glt_YKGJ1PXT5AXCHKX74A6J

என் சுவாசக் காற்று நீயடி 

என் சுவாசக் காற்று நீயடி (Tamil Edition) https://www.amazon.in/dp/B09L56D2D2/ref=cm_sw_r_apan_glt_AAS0E5N2Y953YFFS0ZG6

மழைத்தூறலின் இதம் காதல்

மழைத்தூறலின் இதம் காதல் (Tamil Edition) https://www.amazon.in/dp/B09C8XW7Z1/ref=cm_sw_r_apan_glt_4ZDG2CG4FBJQ6N910ARC


*****

உங்களது ஆசைகள், விருப்பம் என்று ஏதாவது இருந்தால் சொல்ல முடியுமா :

என் எழுத்துக்கள் வாசகர்கள் முகத்தில் புன்னகை அரும்ப காரணமாக வேண்டும்.
உலகம் முழுவதும் பயணித்து மனிதர்களையும் இறைவன் படைத்த அழகிய உலகத்தையும் பார்த்து விட ஆசை உண்டு

*****

உங்கள் எழுத்துக்கள் நிஜ சம்பவங்களை முன் வைத்து இருக்குமா அல்லது கற்பனை கலந்த குடும்ப நாவலாக இருக்குமா :

பெரும்பாலும் நிஜங்களில் சிறிது கற்பனையோ அல்லது கற்பனைகளில் சிறிது நிஜத்தையோ கலந்தே எழுதுகிறேன் ..

******

எழுத வரும் முன்பு நீங்கள் இருந்த மனநிலைக்கும், இப்போது உள்ள நிலைக்கும் உள்ள வித்தியாசமா எதையாவது சொல்ல நினைக்கறீங்களா :

நான் காதலித்து காதலித்து தீராத போதை எழுத்துக்கள்..கதைகளை எழுதும் போது ஒரு தனி உலகில் படைப்பவராக வலம் வரும் இன்பம் தனியே..நான் நிமிடங்களை ரசித்து ருசித்துச் செலவிடும் வித்தையை எழுதுவது எனக்கு புதிதாக கற்றுக் கொடுத்திருக்கிறது எழுத்து உலகம்

*****

உங்களது படைப்புகளில் சொந்த வாழ்வில் நிகழ்ந்த அனுபவங்களை கதையாக எழுதிய அனுபவம் இருக்கிறதா :

எழுதியிருக்கிறேன் .. இன்னும் எழுதுவேன்

*****

Fantasy கதை எழுதிய அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா :

என் எழுத்துக்களின் கதாநாயகர்கள் பெரும்பாலும் நிஜங்களில் கிடைக்கப்பெறா மனிதர்கள் ‌.‌...கற்பனைகளில் இப்படி தான் ஒரு ஆணும் பெண்ணும் காதலில் கசிந்துருகி இருக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பதை எழுதுவதால் அதை Fantasy ல் பதிவிடுகிறேன்.

*****

குறுநாவல் என்றால் எத்தனை வார்த்தைகளில் முடிப்பீர்கள். நாவல் என்றால் எத்தனை அத்தியாயம், வார்த்தைகளில முடிவு பெறும்:

10000 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதுவது குறுநாவல்
இருபதாயிரம் முதல் நாற்பதாயிரம் வார்த்தைகளுள் எழுதுவது நாவல்
அடியேன் அறிந்த வரை

*****

உங்கள் படைப்புகளின் முடிவுகள் வாசகர்கள் ஏற்றுக் கொள்ளும் விதமாக பாஸிடிவ்வாக வருமா?

எப்பொழுதும் பாஸிடிவ் ஆகவே தான் எழுதுகிறேன் எழுதுவேன்

*****

பாஸிடிவ் முடிவை கொடுத்தால் ஏற்கும் வாசகர்கள் ஏன் நெகடிவ்வை ஏற்பதில்லை. இது பற்றி ஏதாவது சொல்ல நினைக்கறீங்களா :

திரைப்படத்தில் தவறு செய்யும் வில்லனை அடித்து துவைக்கும் ஹீரோவைக் கைத் தட்டி ரசிக்கும் மக்கள் தங்களால் யதார்த்தங்களில் காண முடியாததை திரையிலாவது கண்டு விட்ட திருப்தி .. இதே தான் சில சமயங்களில் எழுத்துக்களில் ஒருவனால் (எழுத்தாளரால்) தீர்மானிக்கப்படக் கூடிய விதியில் கூட ஏன் வலிகளுக்கு விலக்கு அளிக்க மறுக்கிறார்கள் என்ற ஆற்றாமையாக இருக்கலாம்

..

நிச்சயமாக

****

உங்களது படைப்புகளுக்கு வந்த மிகச் சிறந்த பாராட்டாக நீங்கள் நினைப்பது :

எனக்கு Goodreads மற்றும் Amazon ல் ஸ்டார் குறியீடு மற்றும் விமர்சனம் அளித்த அத்தனை வாசகர்களும் ❤️❤️❤️

*****

ஒரு கருத்துப் பரிமாற்றம் என்பது எழுத்தாளர்களை எத்தகைய வழிகளில் ஊக்குவிக்கிறது :

  
என் முதல் படைப்பில் அது குறுநாவல் என்பதால் என்னால் விரிவாக எழுத இயலவில்லை .. நீளமான நாவல்களை அதிகம் வாசிக்கும் வாசகர் ஒருவர் ஒரு ஸ்டார் குறியீடு இட்டு நேர விரையம் எனக் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.. அதில் அந்த வாசகர்  என் எழுத்துக்களில் என்னிடம் எதை எதிர்பார்த்து ஏமாந்தார் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது…. காயப்படுத்தும் நிலைகளானாலும் கற்றுக் கொள்ள எப்பொழுதும் வாய்ப்பு உண்டு கருத்து பரிமாற்றங்களில்…. அதே சமயம் எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரு ஒற்றை நட்சத்திர குறியீடு  ஒரு பெண் விமர்சகர்களால் என் சக எழுத்தாளர்களே வருத்தப்பட்டதை அறிந்தேன்.. எனக்கு அந்த அனுபவம் உண்டு.. வாசித்தார்களா என நிச்சயமில்லாத புத்தகப் புழு எனக் காட்டிக் கொள்ள இடப்படும் விமர்சனங்களை விட வாசித்து தங்களது கருத்துகளை நேர்மையாக எழுதும் நான் முதன் முதலாக குறிப்பிட்ட விமர்சனம் மிக சிறந்த கருத்து பரிமாற்றமே‌

...

நானும் ஒரு சில தோழமைகளின் இது போன்ற வருத்தமாக உரையாடலை கேட்டிருக்கிறேன். ஆனால், எதற்காக இப்படி போட்டு அவர்களது மனதில் வருத்தத்தை ஏற்படுத்தணும். இதை விட போடாமலே இருந்திருக்கலாமே என்பேன் நான்..

*****

கிண்டிலில் மட்டுமே நாவலை பதிவிடுவதற்கான காரணம் :

உண்மையில் எனக்கு வேறு எதிலும் அதிகம் பழக்கமில்லை
கிண்டில் எனக்கு எளிதான இலகுவான தளமாக உணர்கிறேன்

*****

உங்கள் படைப்புகளை வாசிப்பவர்களுக்கு சொல்ல நினைப்பது :

என் எழுத்துக்கள் உங்களுக்கு பிடிச்சிருக்கு என்பதே எனக்கு கிடைக்கும் மிகப் பெரிய அங்கீகாரம்..நன்றி 🙏
மக்களே உங்களுக்கு பிடிச்சிருக்கு இல்லை விமர்சனங்கள் எதுவாகிலும்
Nilaprakash98@gmail.com என்ற மின்னஞ்சலில் அனுப்புங்கள் ❤️

தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல நினைக்கிறீங்களா :

சந்தோசமாக இருங்க மக்களே
வாழ்க்கை ரொம்ப ரொம்ப சின்னது
❤️❤️❤️

*****

மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏

மிகவும் அருமையான, எதார்த்தமான பதில்கள்.

மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐

நன்றி நட்புக்களே

Comments