துமி

 #எழுத்தாளர் அறிமுகப்படலம்


சீசன் இரண்டு


பெயர் : துமி


சொந்த ஊர் : சொந்தமா ஊர் வாங்குற அளவுக்கு வசதி இல்லீங்😜😜


படிப்பு : டாக்டர் ஆஃப் சயின்ஸ்னு சொல்லனும்னு ஆசை. ஆனா இங்க பிஹெச்டி படிக்கவே தரிங்கனத்தோம் போடுது😒😒😒


பணி : இப்போதைக்கு விவிவிஐபி😛😛😛


தளம் : சிவரஞ்சனி தளத்துல எழுதறேன்


அமேசான் பெயர் & லிங் : மணிஷா ராஜேந்திரன், துமி


தற்சமயம் எழுதிக் கொண்டிருக்கும் நாவல் லிங்& முடிவுற்ற நாவலின் லிங் :


தென்கொரியாவில் தேன்மொழி கதை தான் ஆன்கோயிங்ல இருக்கு.


புத்தகம் கிடைக்கும் இடம்& புத்தகத்தின் பெயர்:


புக் போடுற அளவுக்குலாம் இன்னும் நான் வளர்லீங்😪😪😪


******


நீங்கள் எழுதிய முதல் நாவல்: 


முரணியல் கவிதைல ஆரம்பிச்சி அப்படியே ஆட்டோ ஓட்டி காதல் யட்சனை முதல்ல முடிச்சேன்ங்😅😅


*****


உங்களது படைப்புகளின் பெயர் :


காதல் யட்சன்

யமுனா கல்யாண வைபோகமே

முரணியல் கவிதை

இமை மீதூறும் துளிகளில்

தென்கொரியாவில் தேன்மொழி (ஆன்கோயிங்)


...


முதல் கதை படிச்சிருக்கேன்


*****


உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா?


Sweet but psycho🤪🤪🤪


*****


உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா? 


அட அதை வேற ஏன்ங்க நியாபக படுத்திக்கிட்டு… யூடி எழுதனும்னு உக்காந்தா தூக்கம் வரும், கனவு வரும், விக்கல் வரும், தும்மல் வரும், தலை வலிக்கும், பக்கத்து வீட்டு குழந்தை அழுகும், ரோட்ல பஸ் போகும். ஆனா கதை மட்டும் வராது.


....


🤣🤣🤣 நல்ல கதையோட்டத்தை தேர்வு செய்தால், அதை தவிர வேறு நினைவுகளே அண்டாது.


*****


உங்களுடைய எழுத்துலக அறிமுகத்திற்கான காரணம். அதாவது சும்மா எழுதிப் பார்க்கலாம்னு வந்தீங்களா அல்லது எழுத்துலகில் ஏதாவது சாதிக்கும் வெறியுடன் எழுத வந்தீர்களா :


புக்கர் அவார்ட் வாங்குற அளவுக்கு எழுதலைனாலும் ஒரு சாகித்திய அகாதமி விருதாச்சும் வாங்குற அளவுக்கு எழுதனும்னு நினைச்சேன். ஆனா எழுத வந்த அப்பறம் தான் தெரிஞ்சுது என்னை நான் காப்பாத்திக்கறதே பெருசுனு😒😒😒 அதனால சும்மா எழுதி பாக்கலாம்னு வந்தேன்னு சொல்லுறது தான் சேஃப் ஜோன்.


.....


கடவுளே என்னைக் காப்பாத்து 😂😂😂


*****



உங்களது ஆசைகளை கதையின் வடிவில் வெளியிடும் போது உங்களுடைய மனம் உணருவது என்ன :


அதுல ஒன்னும் இல்ல. கீழ போட்டுரு மொமண்ட்


*****


பேய், பேன்டஸி போன்ற கதைகளை எழுதியிருக்கும் நீங்க அந்த நேரத்து அனுபவத்தை பகிர்ந்து கொள்ள முடியுமா :


நான் எழுதின ஒரே ஒரு பேய் கதைக்கு, குழந்தை கூட பயப்படாதுங்க. இதுல அனுபவம் எங்கிட்டு வர…


...


அப்போ, அது பேய் கதை இல்ல🤣🤣🤣


*****


திகில் கதை வாசிக்கும் போது பக்கு பக்குங்குது அதை எழுதும் உங்களுக்கு ரொம்ப தைரியம் இருக்கணும். கதை எழுதிய இரவுகளில் பேய் கனவில் வந்தது உண்டா :


நாட் ஒன்லி கனவுங்க… நேர்லையே பாத்துருக்குன்.  வெள்ளை கலர் ட்ரஸ்ல போட்டுக்கிட்டு அங்கிட்டு இங்கிட்டு ஓடும். ஆனா அதை வச்சி கதை தான் எழுத முடியல☹️☹️☹️


...


மை காட். இன்றோடு என்னுடைய திகில் கதை எழுதும் ஆசைக்கு, ஒரு குட் பை போட்டுடறேன்😂😂😂


*****


காதல் யட்சன் எனும் நாவலை தான் நான் வாசித்தேன். ரொம்ப ரொம்ப அருமையாக இருந்தது. அந்த ஹீரோ பாத்திரம் கண்ணுக்குள்ளேயே நிற்குது. ஆனால் ஏன் தொடரும் அத்தனை ஜென்மத்திலும் பிரிச்சுட்டீங்க:


நான் எங்கங்க பிரிச்சேன். அவங்களா செத்து போய் பிரிஞ்சிட்டாங்க… வாட் ஐ டூ?


...


ஆஹாங்!! கதை எழுதியது நீங்க தானே உங்க கிட்ட கேட்காம வேறு யாரிடம் கேட்பது.


*****


காதல் யட்சன் பார்ட் – 2 எழுதும் ஐடியா இருக்கிறதா :


இப்போதைக்கு இல்லைங்க


*****


காதல் கலந்த குடும்ப நாவல் எழுதிய அனுபவம் இல்லையா :


இருக்கே. முரணியல் கவிதை, இமை மீதூறும் துளிகளில் இரண்டுமே காதல் கலந்த குடும்ப நாவல் தான். ஆனா படிக்க தான் ஆள் இல்ல🤭🤭🤭


*****


நீங்கள் எழுதிய கவிதை வரிகளில் சில சொல்ல முடியுமா :


புகாரை புகாஆர் றெண்ணி

புக்கொண்டாயே – மறி கடலே

புகார் புகாஆர் அல்ல

புகார் புகும்ஆர் ஆகும். 


*****


குறுநாவலுக்கும், நாவலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன:


வார்த்தை அளவு தான் வித்தியாசம்


*****


உங்களது விருப்பமான எழுத்தாளர்:


ஒன்றா இரண்டா எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா


*****


Online எழுத்தாளரில் உங்களது நெருங்கிய நட்பில் உள்ளவர்கள் :


கயல்விழி

ரிஷா

ஹாசினி

தர்ஷி ஸ்ரீ அன்ட் 99+ அதர்ஸ்


*****


யாருடைய படைப்புகளை தொடர்ந்து வாசிக்க ஆசைப்படுகிறீர்கள் :


நல்ல கதை யாரோடதா இருந்தாலும் வாசிப்பேன். குறிப்பிட்டு ஒரு ஆள்னு இல்லை.


*****


வாசகர்கள் கருத்துக்களைப் பார்த்து முடிவு, கதாபாத்திரம் எதையாவது மாற்றிய அனுபவம் இருக்கிறதா?


நிச்சயமா இல்லை. யாருக்காகவும் என்னுடைய கதையை சமரசம் செய்ய மாட்டேன்.


****"


உங்கள் கல்லூரி காலம் கலாட்டா நிறைந்ததாக காணப்பட்டதா. அப்படியானால் அதைப் பற்றிய நிகழ்வுகளை கதையில் புகுத்திய அனுபவம் இருக்கிறதா :


இருக்கு. இமை மீதூறும் துளிகளில் கதைல என்னோட அனுபவத்தை தான் எழுதிருக்கேன். நான் இன்ஜினியரிங் படிச்சப்ப பையனுங்க பொண்ணுங்க பேச கூடாது. மீறி பேசினா டிசி தான். மெக்ல ஒரே ஒரு பொண்ணு, அப்பாலஜி லெட்டர், ரெக்கார்ட் நோட் இதெல்லாம் ரியல் லைஃப் இன்சிடென்ட்ஸ்.


******


திருச்சி மாவட்டத்தின் புகழ் பெற்ற இடங்கள் அதன் சிறப்பைப் பற்றி சொல்லுங்க :


இமயமலைக்கு முன்னாடியே தோன்றின மலைக்கோட்டை சிறப்பை பத்தி பேசவா? ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், சமயபுரம், உறையூர் (வெக்காளி), வயலூர்னு திரும்பின பக்கமெல்லாம் இருக்க கோவில் பெருமையை சொல்லவா? தமிழ்நாட்டுலையே மிகப்பெரிய ஆற்றுப்பாலமான பெரியார் பாலத்தை பேசவா இல்லை கரிகாலன் கட்டின கல்லணை பத்தி சொல்லவா? அடுத்த தமிழ்நாட்டோட தலைநகராக்கலாம்னு பேசறாங்களே அதை சொல்லவா?


திருச்சியை பத்தி பெருமை பேசனும்னா ஒரு மாநாடே போட்டு விடிய விடிய பேசலாம்😎😎😎


...


அருமை. கட்டபொம்மன் ரேஞ்சுக்கு வசனம் பேசுறீங்க சூப்பர்👌👌👌


*****


உங்களது நாவலை வாசிக்கும் வீட்டாரின் பதில்கள் :


அதுக்கெல்லாம் வாசிக்கனுமே


*****


கல்லூரி நட்புகள், உறவினர்கள், உங்களது படைப்புகளை வாசித்து கருத்து தெரிவித்த அனுபவம் இருக்கிறதா :


இல்லீங்கோ🤧🤧🤧


*****


நீங்கள் நாவல் எழுதுவது என்பதை பகுதி நேர பணியாக செய்கிறீர்களா அல்லது முழு நேர வேலையாக வைத்திருக்கிறீர்களா :


ஆத்மார்த்தமா செய்யறேங்க. இது எனக்கு புரொபஷன் கிடையாது. எனக்குள்ள இருக்க ஒரு கதை சொல்லியை வார்த்தைகள் மூலமாக வெளிப்படுத்தறேன். அவ்வளவு தான்.


*****


நீங்க you tube Channal and Audio ஏதாவது வச்சிருக்கங்களா?


இல்லீங்கோ🤧🤧🤧


*****


தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல விருப்பப்படுகிறீர்களா?


இது என்னோட ப்ரியத்திற்குரிய சக எழுத்தாளர்களுக்கு…


நாம கதை எழுத வந்திருக்கோம். கதைக்கான விமர்சனத்தை நாம ஏத்துக்கலாம். அதை விட்டுட்டு நாம கதை எழுதறதையே யார்னா மரியாதை குறைவான பேசினா, திருப்பி கேளுங்க மக்களே. எழுத வந்துட்டா எல்லாத்தையும் சகிச்சிக்கனும்னு நமக்கு தலையெழுத்து கிடையாது.


கதை எழுதறது ஒன்னும் அவ்வளவு தப்பான வேலை இல்லையே. அப்பறம் ஏன் ஒருத்தவங்க நம்மளை அவமானப்படுத்தும் போது, அதை நாம பொறுத்து போகனும்.


யாரையோ தானே சொல்லுறாங்கனே நினைக்காதிங்க… அந்த கை சீக்கிரமே உங்களை நோக்கியும் வரலாம்.


...


நிஜம் தான். தவறு செய்யாத பட்சத்தில் கேட்பதில் தவறில்லை. அப்படி கேட்காமல் நட்புகள், வாசகர்கள் என்று பலரும் புகுந்து பிரச்சினையை பெரிதாக்குவது தான் சரியில்லாதது.


*****

 

இரண்டு கேள்விகளை உங்களுக்கான தரேன் உங்களுக்கு சொல்ல விருப்பம் இருப்பதை தாராளமாக தெரிவிக்கலாம்


எனக்கு ஒரு கேள்வி போதும்ங்க…


எல்லாரையும் பேட்டி எடுக்கற உங்களை நான் பேட்டி எடுக்கவா😍😍😍


....


ஓ பேஷா! எப்போ சொல்லுங்க தாராளமா பண்ணிடலாம். நன்றி🙏🙏


****


உங்களது ரசனைக்கு ஏற்ற நாவல்:


எல்லாவிதமான நாவலையும் படிப்பேங்க… முதல் பக்கத்திலையே என்னால அந்த கதைககுள்ள நுழைய முடியலனா அப்படியே மூடி வச்சிடுவேன் அந்த கதையை.


...


நானும் கூட


*****


ஹிஸ்டோரிக்கல் நாவல் எப்போ எழுதுவிங்க?

(வாசகர் கேள்வி – மஹி அபிநந்தன்)


எனக்கே தெரியலை மா… வரலாற்று கதை எழுதனும்னா நிறைய டீட்டெயில்ஸ் தெரிஞ்சிருக்கனும். மீ பெரிய சோம்பேறி. சோ அதுக்கெல்லாம் வருச கணக்காகும்.


*****


சஸ்பென்ஸ் திரில்லர் கதை எழுத என்ன தெரியவேண்டும்:


எழுத தெரிய வேண்டும். 


....


🤭🤭😂😂😂


******


உங்களது படைப்பிற்கு கிடைத்த மிகச்சிறந்த ஊக்குவிப்பாக நீங்க நினைப்பது :


கமெண்ட்ஸ் 😁😁😁.


******



உங்கள் படைப்புகளை வாசிப்பவர்களுக்கு சொல்ல நினைப்பது:


என் கதையை வாசிக்கறதே நாலு பேர் தான். அவங்களுக்கு நான் என்ன சொல்ல? அவங்க எதுனா எனக்கு சொன்னா தான் உண்டு.


*****


மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏


உங்களது பதில்கள் குறும்புத்தனமாகவும், அழகாகவும் இருந்தன.


மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிட, என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐


நன்றி நட்புக்களே

Comments

  1. ஹாஹாஹா ஏன் ஏன் இப்டி துமி 😜சிரிச்சிட்டே படிச்சேன்

    ReplyDelete

Post a Comment