காதம்பரி குமார்

 

#எழுத்தாளர் அறிமுகப்படலம்

#சீசன் இரண்டு

ஹாய் பிரண்ட்ஸ்,

இன்றைய அறிமுக எழுத்தாளர் காதம்பரி குமார் அவர்களைப் பற்றிய நேர் காணல் இதோ:



பெயர் : காதம்பரி

சொந்த ஊர் : ராஜபாளையம், வசிப்பது மும்பை.

படிப்பு : M.C.A

பணி : கதை, கவிதை எழுதுவது

தளம் :  SMtamilnovels

அமேசான் பெயர் & லிங் : காதம்பரி amazon.com/author/kathambari_07

தற்சமயம் எழுதிக் கொண்டிருக்கும் நாவல் லிங்& முடிவுற்ற நாவலின் லிங் :

முடிவுற்ற நாவலின் லிங் : https://forum.smtamilnovels.com/index.php?categories/kathambari.822/

புத்தகம் கிடைக்கும் இடம்& புத்தகத்தின் பெயர்: https://www.smtamilnovels.com/product-category/kathambari/

1.       கற்புநிலை யாதெனில்

2.       கனலை விழுங்கும் இரும்பு

3.       ஜீவனின் துணை எழுத்து

4.       பொக்கிஷ பேழை

*****

நீங்கள் எழுதிய முதல் நாவல்: 

உனக்கென ஓர் வாழ்வு [சிறுகதை]

****

உங்களது படைப்புகளின் பெயர் :

1.       உனக்கென ஓர் வாழ்வு [சிறுகதை]

2.       மிதக்கும் ஆயுதங்கள்

3.       கற்புநிலை யாதெனில்

4.       கனலை விழுங்கும் இரும்பு

5.       ஜீவனின் துணை எழுத்து

6.       பொக்கிஷ பேழை

7.       ஈடில்லா இஷ்டங்கள்

8.       நிரல் மொழி

9.       இசை, இயற்கை மற்றும் இருவர்

10.   யாழோவியம்

...

அருமையான பெயர்கள்

*****

எழுத வந்த வருடம் : 2018

*****

உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா?

பெயர் காதம்பரி. கணவருடன் மும்பையில் வசித்து வருகிறேன். ஒரு பெண் குழந்தை இருக்கிறது. எழுதுவதைத் தவிர பிடித்த மற்ற விடயங்கள்... வீட்டை அலங்கரிப்பது, சமையல் செய்வது மற்றும் car drive பண்றது.

*****

உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா?

பள்ளியில் படிக்கும் பொழுது கவிதை எழுதுவதில் ஆரம்பித்து... இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

....
நல்லது

*****

திகில், சஸ்பென்ஸ், ஃபேன்டஸி பிரிவுகளில் கதை எழுதியிருப்பதாக சொல்லும் நீங்க கதையை தேர்ந்தெடுப்பது எப்படி?

ஒரு கதை முடிந்ததும், நிறைய கதைக்கருக்கள் எண்ணத்தில் வரும். அவைகளில் எது மனதிற்கு உடன்படுகிறதோ… மேலும் இப்பொழுது இருக்கும் அனுபவத்தில் எந்தக் கதைக்கருவை சரியாகக் கையாள முடியுமோ... அதையே தேர்ந்தெடுப்பேன்.

*******

போலீஸ் ஸ்டோரி எழுதிய அனுபவத்தைப் பற்றி சொல்ல முடியுமா:

காவல் துறையினர் பற்றி முதன் முதலில் எழுதிய கதை ‘மிதக்கும் ஆயுதங்கள்’. என் முதல் நெடுங்கதையும் கூட.

ஆணையர் மற்றும் துணை ஆணையர் பற்றிய தகவல்கள், அவர்களின் அதிகார வரம்புகள், ஆணையர் அலுவலக கட்டிடம் பற்றிய விவரங்கள் சேகரித்து எழுதியிருந்தேன்.

பெரிய அனுபவம் ஏதும் இல்லை என்பதால், கதையின் கருவை கையாள்வதில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது.

*****

மும்பையில் உள்ள பிரபலமான இடங்களைப் பற்றி உங்களது படைப்புகளில் சொல்லியிருக்கிறீர்களா?

இல்லை.

*****

மும்பையில் உள்ள வாழ்க்கை முறைக்கும் நம்முடைய தமிழ்நாட்டு வாழ்க்கை முறைக்கும் உள்ள வித்தியாசமா ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா?

நிறைய வித்தியாசம் இருக்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் உணவுப் பழக்க வழக்கமும், பேசும் மொழியும்.

******

சிறுகதை வாசிப்பதற்கும், நாவல் வாசிப்பதற்கும் உள்ள வித்தியாசம்?

நேரம் மட்டுமே என்று நினைக்கிறேன்.

*****

இரண்டில் எது வாசகரின் மனதை உடனடியாக சென்றடைவதாக நினைக்கிறீங்க?

தாக்கத்தை ஏற்படுத்தும் எழுத்துகள்… சிறுகதை, கவிதை, நாவல் என எந்த வடிவில் இருந்தாலும் வாசிப்பவரின் மனதைச் சென்றடையும்.

****

திரில்லர் கதை எழுத என்ன தெரிந்திருக்க வேண்டும்?

ஒரு பாதியில் போடப்படும் முடிச்சுகள் அனைத்தும், அடுத்த பாதியில் குழப்பங்கள் ஏதுமின்றி (வாசகர்கள் குழம்பாத வண்ணம்) அவிழ்க்க தெரிந்திருந்தால் நன்றாக இருக்கும்.

*****

போட்டி கதைகளில் பங்கேற்ற அனுபவம் இருக்கிறதா?

இருக்கிறது.

*****

உங்களது நாவலில் சினிமா பாடல் வரிகளை புகுத்திய அனுபவம் இருக்கிறதா? அப்படி புகுத்தியிருந்தால் அது சரியான தேர்வா அல்லது கவிதை வரிகள் பொருத்தமான தேர்வாக இருக்குமா?

சினிமா பாடல் வரிகள் பயன்படுத்துவது இல்லை. இசை, இயற்கை மற்றும் இருவர்’என்ற கதைக்காக, பக்திப் பாடல்கள் பயன்படுத்தி இருக்கிறேன்.

*****

நீங்கள் ஒரு நாவல் எழுத எடுத்துக்கொள்ளும் அவகாசம்?

முன்பெல்லாம் கதைக்கருவை யோசித்துவிட்டு, பதிவுகள் கொடுக்க ஆரம்பித்துவிடுவேன். ஆகையால் ஒன்று அல்லது இரண்டு மாதங்களே போதுமானதாக இருந்தது. இப்பொழுது முழுக்கதையையும் முடித்த பின்பே பதிவுகள் கொடுக்க முடிவெடுத்திருப்பதால், ஐந்து மாதங்களுக்கு மேல் தேவைப்படுகிறது.

*****

உங்களது படைப்புகளில் ஏதாவது சமூக கருத்துகள் பதிவிடப்படுமா?

கதாபாத்திரங்களின் குணநலன்களைப் பொறுத்து, அவர்கள் பேசும் பொழுதும்… காட்சிகளின் சூழலைப் பொறுத்தும் சமூக கருத்துக்கள் வெளிப்படும் விதமாக எழுதியிருக்கிறேன்.

*****

நிஜ சம்பவத்தை கதையாக எழுதிய அனுபவம் இருக்கிறதா. இருந்தா சொல்லுங்க?

இருக்கிறது. கதையின் பெயர் யாழோவியம். இது இந்தியாவில் நடந்த ஒரு ஊழல் குற்றத்தை அடிப்படையாகக் கொண்ட கற்பனை கதை.

அனுபவம்... இதற்காக நிறைய தரவுகள் சேகரித்தது. அது தவிர வழக்கு, ஊழல், நீதிமன்றம், அரசியல், ஆட்சியர் அலுவலகம்... இதனைப் பற்றி எழுதுவதற்கு பயன்படுத்திய தமிழ் சொற்கள்... நல்ல அனுபவம். நிரம்ப பிடித்திருந்தது.

*****

உங்கள் படைப்புகள் எதிர்பார்த்த அளவிற்கு வாசகர்களை சென்றடைகிறதா?

ஓரிரு கதைகளைத் தவிர, மற்ற கதைகள் எதிர்பார்ப்பின் அளவை எட்டியிருக்கிறது.

*****

கதையினோட்டம், கற்பனையால் எழுதப்படும் போது. நிஜ சம்பவம் கலந்து எழுதுவது, எழுத்திற்கு தடையாக இருக்குமா அல்லது தொடர்கதையின் நகர்வுகள் செல்ல இலகுவாக இருக்குமா?

கதையின் நகர்வுகளை முதலிலே திட்டமிட்டு விட்டால்... எதுவும் எழுத்திற்கு தடையாக இருக்காது.

****

நீங்கள் எழுதிய நாவல்களில் வாசகர்களால் கொண்டாடப்பட்ட நாவல் எது? ஏன்?

கற்புநிலை யாதெனில், கனலை விழுங்கும் இரும்பு, ஈடில்லா இஷ்டங்கள்... மிகுந்த வரவேற்பைப் பெற்ற படைப்புகள். இந்தப் படைப்புகள் எழுதிய விதம் பிடித்திருந்திருக்கும் என நினைக்கிறேன்.

******

உங்களது படைப்புகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த காட்சிகளில் ஒரு சில பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

என் படைப்புகளில் என்றில்லை... பொதுவாக நுட்பமான துப்பறியும் காட்சிகளும், வித்தியாசமான காதல் காட்சிகளும் பிடிக்கும்.

...
நல்லது

*****

எழுதுவது தவிர்த்து நீங்கள் வேறு ஏதாவது வேலை செய்றீங்களா?

இல்லை.

*****

நாளிதழில் கதை எழுதிய அனுபவம் இருக்கிறதா?

இல்லை.

*****

கல்லூரி, குடும்பம், உறவுகள் இவற்றை நீங்கள் உங்கள் கதைகளில் எழுதிய அனுபவம் இருக்கிறதா?

இருக்கிறது.

*****

கதையின் பெயர் மற்றும் கதாப்பாத்திரத்தின் பெயர் எப்படி தேர்வு செய்றீங்க?
கதைக்கரு யோசித்து முடித்ததும், அதை மனதிற்குள் ஓட்டிப் பார்க்கும் பொழுது வருவதுதான் கதாபாத்திரங்கள் பெயர்கள். மெனக்கெடல் எடுத்து வைத்த கதாபாத்திரங்களின் பெயர்கள் யாழ்மாறன், ஓவியச்சுடர் (யாழோவியம்) அனலிகா (மிதக்கும் ஆயுதங்கள்).

கதைக்கருவிற்கு ஏற்றார் போல அல்லது கதைக்கருவை பிரதிபலிப்பது போன்ற தலைப்புகளை கதையின் பெயராகத் தேர்ந்தெடுப்பேன்.

*****

நாவல்கள் எழுதும் போது உங்கள் பிள்ளைகளைப் பற்றி/அவர்களது பெயர் பழக்கவழக்கங்களை கதையாக வடித்த அனுபவம் இருக்கிறதா?

இல்லை.

*****

நாவலில் வரக்கூடிய பிழைகள், வார்த்தை கோர்வு பற்றிய உங்களது கருத்து?
பிழைகள் இல்லாமல், வார்த்தை கோர்வுகள் சரியாக இருந்தால் நன்றாக இருக்கும். கூடவே அடிப்படை இலக்கண விதிகளை பின்பற்றி எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும்.

*****

உங்கள் படைப்புகளை வாசிப்பவர்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது? தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல நினைக்கிறீங்களா?

கதைகளைப் படித்து வருபவர்களுக்கும்... விருப்பங்களும், கருத்துகளும் பகிர்ந்து கொள்பவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

*****

திகில் என்றால் எப்படி பட்டது உங்களது படைப்புகளில் வெளியிடப்படும்?

 இந்த வகையில் கதை எழுதவில்லை சிஸ்டர்.

 *****

மிக்க நன்றி சிஸ்டர்.

உங்களது பதில்கள் அனைத்தும் எதார்த்தமாக இருந்தன. மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐💐

நன்றி நட்புக்களே





Comments