#எழுத்தாளர் அறிமுகப்படுத்தப்
#சீசன் இரண்டு
ஹாய் பிரண்ட்ஸ்,
எழுத்தாளர் அறிமுகப்படலத்தில் இன்றைய அறிமுக எழுத்தாளர் தேவி கண்மணி அவர்களுக்கான நேர்காணல் இதோ :
பெயர் : தேவி கண்மணி
சொந்த ஊர் : திருச்சி
படிப்பு : B. Sc .,B. Ed
பணி : அறிவியல் ஆசிரியை
தளம்: Pratilipi , Thoorigai Tamil novel
அமேசான் லிங்:
தேவிகண்மணி என்ற பெயரில் இரண்டு கதைகள் இருக்கும்
தற்போதைய நாவலின் பெயர் & லிங் :
என் மனதை வதம் செய்கிறாய்
"என் மனதை வதம் செய்கிறாய் -01", - பிரதிலிபியில் படிக்க :
https://tamil.pratilipi.com/series/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-01-bo5qy4hfa26q?utm_source=android&utm_campaign=content_series_share
இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்
"மாயாவின் தீரனவன்", - பிரதிலிபியில் படிக்க :
https://tamil.pratilipi.com/series/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-xlurtjegdpei?utm_source=android&utm_campaign=content_series_share
இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்
"நெஞ்சே நெஞ்சே நெருங்கிவிடு -01", - பிரதிலிபியில் படிக்க :
https://tamil.pratilipi.com/series/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81-01-q8yxuyix8s6p?utm_source=android&utm_campaign=content_series_share
இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்
உங்களது புத்தகம் கிடைக்கும் இடம் :
இன்னும் புத்தகம் எதுவும் போடவில்லை அதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறேன்
******
இதுக்கு முன்பு எத்தனை நாவல்கள் புத்தகமாக மாறி இருக்கு:
எதுவும் இல்லை
*****
உங்களது முதல் படைப்பு :
விழி வழியே இதயம் நிறைந்தாய்
*****
மொத்தம் எத்தனை நாவல்கள் எழுதியிருக்கீங்க:
14 தொடர்கதைகள் இரண்டு நாவல்கள் ஆறு சிறுகதைகள்
******
உங்களது படைப்புகளின் பெயர்கள் :
1.விழி வழியே இதயம் நிறைந்தாய்
2. உன்னில் உருகிடவா என் சிந்தனையே
3. ஜீவநதி
4. மறந்தாலும் என் காதல் மாறாது மானே (சிந்தனேயே கதையின் இரண்டாவது பாகம்)
5. பாரடி என்னைக் காதலோடு
6. நீதானே என் ஆதியும் அந்தமும்
7. இனி என் வாழ்வு உன்னோடு தான்
8. உன் காதலில் என் ஜீவன் வாழும்
9. அக்னியின் சிறகாய் அவள்
10. எல்லாம் காதல்மயம்
11. நெருப்பாய் குளிரும் காதல் ( விழி வழியே கதையின் இரண்டாவது பாகம்)
12. வருவேனே உயிராக
13. நெஞ்சத்தில் தஞ்சமானவளே
14. மலரே உனக்காக என் காதல்
15. சுவாசமும் நேசமும் நீதானடி
16. மீராவின் கண்ணன்
17. நெஞ்சே நெஞ்சே நெருங்கிவிடு ( ஆன்கோயிங் )
18. என் மனதை வதம் செய்கிறாய் (ஆன்கோயிங்)
19. மாயாவின் தீரனவன் (ஆன்கோயிங் )
20. செந்நிற பூமியில் சிவந்தமலரே (சகாப்தம் தளத்தில் போட்டி கதை )
சிறுகதைகள்.
1.மகளான மருமகள்
2.முதல் காதல்
3. முதல் பட்டதாரி
4. அத்தைமகன்
5. காதலுடன்
6. கூட்டாஞ்சோறு
….
அருமையான பெயர்கள்
*****
உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:
நான் தேவிகண்மணி… அறிவியல் ஆசிரியை தற்போது இல்லத்தரசி இரு குழந்தைகளின் அம்மா வளர்ந்து வரும் எழுத்தாளினி …
*****
நீங்கள் எழுத்துலகை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் :
நிறைய எழுத பிடிக்கும் … மனதில் தோன்றிய கற்பனைகளை எழுத மிகவும் ஆசை அதை நிறைவேற்றவே தேர்ந்தெடுத்தேன்
…
அழகான பதில்
******
உங்களது கனவு லட்சியம் ஏதாவது இருக்கிறதா :
ஆசிரியை ஆவது எழுத்தாளர் ஆவது இரண்டும் நிறைவேற்றி விட்டேன்
******
சிறு வயது, திருமணம் முடிந்த பிறகு , இரண்டில் எது விரும்பத் தகுந்ததாக இருக்கிறது என்பதைப் பற்றி சொல்ல முடியுமா:
சிறு வயது எல்லோராலும் வளர்ந்த பிறகு விரும்பப்படும் பருவம்… ஏனெனில் அதிகம் பொறுப்பு கிடையாது திருமணம் முடிந்த பிறகு பொறுப்புகள் நிறைய உண்டு. எனக்கு சிறுவயது பருவம் மிகவும் பிடிக்கும்
…
எனக்கும் ரொம்ப 🙂🙂
******
கல்லூரி மாணவியாக இருந்த போது கதை எழுதுவது, வாசிப்பு அனுபவம் எல்லாம் எப்படி இருந்தது :
கல்லூரி மாணவியாக இருக்கும் போதே நாவல் எழுதினேன் மூன்று பகுதி எழுதி இருப்பேன்.. அது முழுவதும் அப்படியே பழைய பேப்பர் கடைக்கு சென்று விட்டது. வாசிப்பு நிறைய இருந்தது . கதை புத்தகம் தவிர அறிவியல் தகவல் நிறைந்த புத்தகம் படிப்பேன்..
******
உங்கள் ஊர் திருச்சி மாவட்டத்தில் இருப்பதாக சொல்லியிருக்கீங்க. அங்கு உள்ள ஸ்பெஷல் இடங்களைப் பற்றி கதைகளில் எழுதிய அனுபவம் இருக்கிறதா :
ம்ம்ம் இருக்கிறது. மலரே உனக்காக என் காதல் கதையில் எழுதி இருப்பேன்
******
மணப்பாறை பற்றி ஏதாவது சொல்ல முடியுமா :
மணப்பாறை முறுக்கிற்கு பெயர் பெற்ற இடம்… இங்கு கிடைக்கும் உவர்நீரை கொண்டு தயாரிப்பதால் முறுக்கின் சுவை கூடுதலாக இருக்கும்..
மணப்பாறை மாட்டு சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது.
மணப்பாறை மாரியம்மன் கோவில் பிரபலமானது.
வீரப்பூர் பெரிய காண்டியம்மன் கோவில் வரலாற்று சிறப்பு மிக்க ஸ்தலம்… அண்ணன் தங்கை பாசத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த தெய்வங்கள் உள்ள தலம்
…
வாவ்!! சூப்பர் சிஸ்டர். பிரமாதம்.
******
நீங்கள் நாவல் எழுத அமர்வது பகலிலா அல்லது இரவிலா:
பெரும்பாலும் பகல் வேளையில்… இரவில் எப்போதாவது எழுதுவேன்
*****
பிரதிபலியில் சிலர் தினம் ஒரு யூடி வீதம் போட்டு வாசகர்களுக்கு விருந்து அளிப்பர். அப்படிப் பண்ணிட அவர்கள் மேற்கொள்வது என்ன:
மற்றவர்களை பற்றி தெரியவில்லை. நான் தினமும் ஒரு யூடி கொடுத்துக் கொண்டிருந்தேன்.. வேலை காரணமாக சில நாட்கள் விட்டு விடுவேன்.. நேரம் கிடைக்கும் போது எல்லாம் எழுதி விடுவேன்… மீண்டும் ஒரு முறை படித்து திருப்தி கிடைத்த உடனே பதிவிட்டு விடுவேன்… . ஒரு யூடி தர வேண்டும் என்றால் என் நினைவு அதை சுற்றியபடியே மற்ற வேலைகளை செய்வேன்
******
உங்களது படைப்புகள் வாசிப்பவரின் எதிர்ப்பார்புகளை நிறைவேற்றியிருக்கிறதா.
நிறைவேற்றி இருப்பதாக நிறைய வாசகர்கள் கூறி உள்ளனர்
******
உங்கள் முதல் படைப்பை பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா
விழி வழியே இதயம் நிறைந்தாய்… என்னுடைய முதல் கதையே மனதுக்கு இதம் அளித்தது தான்… என் நாயகி கருப்பு பேரழகி… அந்த அழகி தான் வேண்டும் என்ற நாயகன்… மற்றொரு கதாநாயகி உடல் எடை அதிகமிருப்பவள் அவளை விரும்பும் நாயகன்… மூன்றாவது நாயகன் படிப்பறிவு இல்லாவிட்டாலும் பாசத்தில் சிறந்தவன்… இவர்களை சுற்றி எனது கதை இருந்தது… கருப்பாக இருப்பதால் நாயகிக்கு வந்த தாழ்வு மனப்பான்மை இந்த சமூகத்தில் அவளுக்கு ஏற்படும் கசப்பான அனுபவங்கள் தான் கதை
******
நீங்கள் எப்போதில் இருந்து கதை எழுத
ஆரம்பித்தீர்கள் :
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே எழுதினேன்… அப்படியே விட்டு விட்டேன் பிறகு போன வருடம் ஜனவரியில் இருந்து எழுத துவங்கி இதுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது எழுத்து பயணம்
*****
நாவல் எழுத நீங்கள் தேர்ந்தெடுப்பதென்ன :
கதைக்கரு அதில் நட்பு பாசம் கலந்து தான் இருக்கும்
ஜானர் என்றால் குடும்பம் நாவல் தான் அவ்வப்போது மர்மம் திகில் நாவல்..
******
ஒரு நாவல் வாசகர் மனதை சென்றடைவது போல, அவர்கள் எழுதும் குறுங்கதை, சிறுகதை செல்கிறது என்று நினைக்கிறீர்களா :
இல்லை என்று தான் சொல்வேன்… பிறகு படித்து கொள்ளலாம் என மறந்து விடும் நிலை தான் உள்ளது.
******
இப்போது நிறைய எழுத்தாளர்கள் படைப்புகளை கொடுத்து தங்களது திறமைகளை நிரூபிக்க போராடிக்கொண்டிருக்கின்றனர். அது பற்றிய உங்களது கருத்து :
முயற்சித்து கொண்டே இருங்கள் உங்களுக்கான வெற்றி நிச்சயம் கிடைக்கும்… உண்மையில் இப்போது உள்ளவங்களுக்கு எந்த இடத்தில் தங்களை வெளிக்காட்ட வேண்டும் என நன்றாக தெரிந்து உள்ளது.
*******
ஒரே படைப்பில் வாசகர்களால் கொண்டாடப்பட்டவர்களும் இருக்கின்றனர். பத்து கொடுத்தும் வெளியில் தெரியாதவர்களும் இருக்கின்றனர் இதைப் பற்றி என்ன நினைக்கறீங்க :
இந்த கேள்வி எனக்கு ரொம்ப நாளா இருக்கு எனக்கே விடை தெரியாத ஒன்று தான் இது… நானே நிறைய பேரை அப்படி கண்டிருக்கிறேன்.
******
திகில், பேய், அமானுஷ்யம், பேன்டஸி, வரலாறு, ஆன்மீகம் , காதல், குடும்பம் இவற்றில் எவையெல்லாம் உங்களது தேர்வு :
காதல் குடும்பம் பேன்டசி கதைகள் … மற்றவையும் பிடிக்கும் இருந்தாலும் முதன்மை இவற்றிற்கு தான்
******
எந்த மாதிரியான நாவல் வாசித்தவுடன் மனதில் ஒட்டிக்கொள்வதாக நினைக்கறீங்க :
காதல் நாவல்கள்… . அதிலும் வித்தியாசமான முடிவு இருந்தால் மனதை விட்டு அகலாது.
******
உங்கள் கல்லூரி வாழ்க்கையைப் பற்றி கதை எழுதிய அனுபவம் இருக்கிறதா :
எனது கதைகளில் ஏதாவது ஒரு இடத்தில் கண்டிப்பாக சேர்த்து இருப்பேன்.
******
நாவல்கள் எழுதும் போது உங்கள் பிள்ளைகளைப் பற்றி/அவர்களது
பெயர் பழக்கவழக்கங்களை கதையாக வடித்த அனுபவம் இருக்கிறதா :
இருக்கிறது என் பெண்ணை ஏதாவது ஒரு பாத்திரமாக வடித்து விடுவேன் அவளது குணங்களை யாராவது ஒருவருக்கு தந்து விடுவேன்
*******
நாவலில் வரக்கூடிய பிழைகள், வார்த்தைக் கோர்வு பற்றிய உங்களது கருத்து :
பிழைகள் ஏற்படுவது இயல்பு தான் நிறைய படிப்பதும் எழுதுவதும் அதனை களைய உதவும்… நீங்கள் எழுதுவதை ஒரு முறைக்கு இரு முறை படித்து விட்டு பின்னர் வெளியிடுங்கள்
*****
நாம் சொல்ல வருகின்ற விஷயத்தை வாசகர்களின் ரசனைக்கு ஏற்ப சொல்வதெப்படி :
இயல்பு நடையில் கூறினால் ஏற்றுக் கொள்வதாக நினைக்கிறேன். வெறும் இயல்பு நடை மட்டுமில்லாமல், எழுத்து நடையிலும் இருக்க வேண்டும்…
******
இன்றைய அறிமுக எழுத்தாளர்கள் ஒரு சிலரது எழுத்துகள் பொதுவெளியில் விமர்சிக்கப்படுவதற்கான காரணமாக ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :
இல்லை கருத்து சொல்லும் அளவிற்கு இன்னும் வளரவில்லை என்று நினைக்கிறேன்
*******
உங்களது எழுத்து அனுபவம் :
நிறைய புதிய வார்த்தைகளை கற்று கொண்டேன்… கோர்வையாக எழுதவும் வருகிறது…
*******
எழுத்துலகில் வந்த பிறகு கிடைத்த நல்ல நட்பு:
நிறைய பேர் இருக்கிறார்கள்… பல வாசகர்கள் உண்டு சில எழுத்தாளர்களும் உண்டு …
ஒருவரை குறிப்பிட்டு மற்றவரை விட்டு விட்டால் அது நன்றாக இராது.
*******
உங்கள் கதைகளில் ஒன்றே ஒன்று பற்றி விவாதிப்பதாக இருந்தால் :
நட்பு… நிச்சயம் நட்பின் முக்கியத்துவம் பற்றி கூறி இருப்பேன்
******
உங்கள் கதையில் கவிதை, வருணனை, அத்தியாயம், மொத்த வார்த்தை எல்லாம் எவ்வளவு வருவது போல பார்த்துக் கொள்கிறீர்கள்:
கதை போகின்ற போக்கை பொறுத்து அப்புறம் நான் கூற வரும் கருத்தை பொறுத்து அமையும் சகி… குறைந்தபட்சம் பத்து அத்தியாயம் அதிக பட்சமாக 65 அத்தியாயம் எழுதி உள்ளேன்
…
65 அத்தியாயமா? ஆச்சர்யம்!! இவ்வளவு பெரியதாக உங்களது படைப்பு அமைய கூடுமோ! வாழ்த்துகள் சிஸ்டர்
******
தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :
நிறைய எழுத நிறைய படியுங்கள்… கற்றலும் கேட்டலும் எழுத்தை அதிகம் மேம்படுத்தும்
*****
உங்களுக்கு இரண்டு கேள்விக்கான வாய்ப்பு தரேன். கேள்விகளை உருவாக்கி பதிலையும் நீங்களே கூறலாம்.
கேள்வி 1- எப்போ முழு நீள திகில் கதை எழுதுவாய் ??
கூடிய விரைவில்
கேள்வி-2 சோகமான மனதை அழுத்தும் முடிவினை தர விருப்பம் உள்ளதா??
நிச்சயம் இருக்கிறது ஆனால் முடியலை.
…
👌👌👌
*******
வாசகர் கேள்வி பதில் :
முதலில் ஒன்றரை வருடம் தொடர்ந்து கதை எழுதும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மா 😍😍😍😍
1. பெரும்பாலும் நீங்கள் காதல் கதைகள் எழுதுவதற்கு ஏதாவது காரணம் உண்டா?????
இந்த உலகமே காதலில் நிரம்பியது தானே அது தான் காரணம் 😍😍😍😍
*****
2. அறிவியல் ஆசிரியரான நீங்கள் ஏன் அறிவியல் புனைவு கதை எழுத நினைத்தது இல்லை....
எழுத நினைப்பது உண்டு நேரமின்மையால் எழுத இயலவில்லை கூடிய விரைவில் எழுதலாம்
*****
3. ஒரு குறிப்பிட்ட கதைக்கரு அல்லது சப்ஜெக்ட் வைத்து எழுதவில்லையே என்று நினைத்து இருக்கிறீர்களா...
ம்ம்ம் இல்லை இப்போதைக்கு அது போல எதுவும் யோசித்திடவில்லை
*****
4. வேறு ஜனார்களில் பயணிக்க தயங்குவது எதிர்மறை விமர்சனத்துக்கு பயந்தா?? அல்லது விருப்பம் இன்மையா...
இல்லையே வேறு ஜானர்களையும் தொட்டு தான் வந்திருக்கிறேன்... ஆனால் முழுமையாக தொடவில்லை வருங்காலத்தில் எழுதலாம்
*****
5. இந்த எழுத்தாளர் மிக சிறப்பாக எழுதுகிறாரே நம்மால் அப்படி எழுத முடியுமா என்று நீங்கள் வியந்த எழுத்தாளர்.... ( பிரதிலிபி யில் )
ஒவ்வொருவரின் திறமையும் வெவ்வேறு மாதிரியானது.. . ஆனால் இங்கு நான் வியந்த எழுத்தாளர்கள் நிறைய உண்டு.
*******
6.இவரை உங்கள் வாசகர்களில் சிறந்த விமர்சகர் அல்லது சரியாக கருத்து கணிப்பவர் யார்???? இந்த கேள்விக்கு விருப்பம் இருந்தால் பதிலாளிக்கலாம் இல்லை விட்டு விடலாம்....
என் எழுத்தை விமர்சிக்கும் அத்தனை பேரும் சிறந்த விமர்சகர்கள் தான்... அது நிறைய பேர் இருக்கிறார்கள்... ஒருவரை விட்டு ஒருவரை கூற முடியாது... எல்லோரும் தங்களது கருத்துக்களை சொல்ல தவறியதில்லை
*******
7. இப்பொழுது சென்று கொண்டு இருக்கும்.. மாயாவின் தீரானவன் தொடரில் மர்மகாட்சிகளில் இன்னும் கூட சுவாரஷ்யம் கூட்டலாம் என்பது என் கருத்து உங்கள் பதில் என்னவோ....
கண்டிப்பாக உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகும் என்று நினைக்கிறேன்... கதையின் போக்கில் பார்க்கலாம்
*****
8. உங்களின் கதையை அங்கீகரித்து முதல் முதலில் வந்த பாராட்டு அதை வாசித்தபோது உங்களின் மனநிலை.....
நைஸ்... . இது தான் எனக்கு வந்த முதல் கமெண்ட்... சலீம் அண்ணா கொடுத்திருந்தாங்க ... விரிவா விமர்சனம் முதல்ல தந்தது ... அந்த மொமெண்ட்ஸ் நாமளும் ஒருத்தரை மகிழ்ச்சி ஆக்குற அளவு எழுதி இருக்கோம் னு தோணுச்சு. .. ஹாப்பினஸ் அளவிட முடியாத ஒண்ணு
******
9. இதுவரை எழுதிய நாவல்களில் பெண்ணை மையப்படுத்தி பல கதை எழுதி உள்ளீர்கள்... இது சமுதாயகருத்தா அல்லது உண்மை சம்பவம் எதும் உள்ளதா....
பல உண்மை சம்பவத்தை தழுவியே தான் எனது கதைகள் அமையும்.. . சமுதாயத்திற்கு கருத்து சொல்ற அளவுக்கு இன்னும் வளரலைங்கோ
******
10. நீங்கள் எழுதிய நாவலில் நீங்களே ரசித்து... இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம் என்று நினைத்த கதை....
உன்னில் உருகிடவா என் சிந்தனையே, வருவேனே உயிராக இரண்டும்
உங்கள் எழுத்துபணி மென்மேலும் தொடர மீண்டும் என் வாழ்த்துக்கள்... வாழ்க தமிழ்....
*******
மிக்க மகிழ்ச்சி சிஸ்டர்🙏🙏🙏
உங்களது கேள்வி பதில்கள் அனைத்தும் அருமை.
மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐💐.
நன்றி தோழமைகளே
Comments
Post a Comment