தேன் நிலா

 


#எழுத்தாளர் அறிமுகப்படலம்

#சீசன் இரண்டு

ஹாய் பிரண்ட்ஸ்,

இன்றைய அறிமுக எழுத்தாளர் தேன்நிலா அவர்களைப் பற்றிய நேர் காணல் இதோ :



பெயர் :💕தேன் நிலா 

சொந்த ஊர் : 💕மலேஷியா 

படிப்பு :💕spm

பணி :💕செஃப் 

தளம் :💕பிரதிலிபி,theannilanovels.comtheannilatales.blogspot.com 

அமேசான் பெயர் & லிங்:💕தேன் நிலா J..

தற்சமயம் எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் பெயர் & லிங் :

💕"காதல் போதை தந்த கள்ளி 18", - பிரதிலிபியில் படிக்க :

https://tamil.pratilipi.com/story/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-18-grkc6gnzrkk8?utm_source=android&utm_campaign=content_share

இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்

💕நெருங்கினா(ள்)ல்?

theannilatales.blogspot.com

முடிவுற்ற நாவல்களின் லிங் :💕theannilanovels.comtheannilatales.blogspot.com..

amazon kindle தேன் நிலா J

*****

உங்களைப் பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:

💕எழுத்தை காதலிக்கும் பெண்.. அம்மாவிற்கு தொல்லைக் கொடுக்கும் மகள். அக்காவின் தோழி. அக்கா குழந்தைகளின் அன்பு சித்தி. என்னவனின் தொலைதூர காதலி.. கனவுகள் ஆயிரம் அதை அடைய வழி தேடிக் கொண்டிருக்கும் சாமானிய நங்கை.

...
அருமை

******

உங்களது எழுத்து அனுபவத்தைப் பற்றி சொல்ல முடியுமா:

💕ஒவ்வொரு படைப்பிற்கும் என் எழுத்து பக்குவமடைந்து வருகிறது. அதற்கு காரணம் வாசகர்களின் நேர்மையான விமர்சனங்களும் அவர்கள் எதிர்பார்ப்பும் தான். அவர்களின் ஆவல் தான் அடுத்த படைப்பிற்கு இன்னும் மெனக்கிட வைக்கிறது.
...
நிஜம் தான்

*****

நீங்கள் எழுத்துலகிற்கு வரும் ஆவல் எப்படி எழுந்தது:

💕அப்பொழுது மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன்.. ஒரு அன்பு பொய்த்து போன சமயம். ஏமாற்றம், தாங்கிக் கொள்ள முடியாத வலியை கொடுத்தது. அதுவரை வாசகியாக இருந்த நான் என் மன ஆறுதளுக்காக எழுத தொடங்கினேன். உண்மையில் நினைத்துப் பார்க்கவில்லை. என் கதைகளுக்கு இவ்வளவு வாசகர்கள் கிடைப்பார்கள் என்று. கடவுளுக்கும் என் வாசக அன்பர்களுக்கும் நன்றிகள் கோடி.

******

நாவல் எழுத வந்த பிறகு நீங்கள் எதிர் கொண்ட பிரச்சினைகள் மற்றும் சந்தோசமான விசயங்கள் என்னென்ன:

💕கதை திருட்டு பெரிய பிரச்சனை. சந்தோசமான விஷயங்கள் நிறைய.. நல் உள்ளங்களை தோழமையாக பெற்றுக் கொண்டது.

*****

போட்டிக் கதை எழுதிய அனுபவம் இருக்கிறதா :

💕பிரதிலிபியிலும் சங்கமம் தளத்திலும் எழுதி உள்ளேன்.

*****

இரண்டு பேர் சேர்ந்து போட்டிக்கதை எழுதியதா சொல்லியிருக்கீங்க. அதைப் பற்றி சொல்ல முடியுமா :

💕நானும் அர்பிதா அக்காவும் சங்கமம் தளத்தில் நடைப்பெற்ற இரட்டை ரோஜாக்கள் போட்டியில் சேர்ந்து எழுதினோம். அது ஒரு தனி அனுபவம். 

*****

இருவரின் எண்ணவோட்டம், எழுத்து நடை, கற்பனைகள் ஒரே கோட்டில் பயணிக்குமா :

💕இருவரின் எண்ண ஓட்டமும் நேர்கோட்டில் பயணிப்பது சிரமம்தான். ஆனால் அதை நாங்கள் முயற்சி செய்தோம்.  அந்த முயற்சியில் வெற்றிகரமாக வெற்றியும் பெற்றோம். 

****

தீண்டாய் முளரிப் பகையே கதை உருவான விதம் பற்றி சொல்ல முடியுமா :

💕அர்பிதா அக்கா தான் என்னை இம்மாதிரி போட்டி உள்ளது உனக்கு எழுத ஆர்வமா என்று கேட்டார். சரி இது ஒரு புது முயற்சி என்று  எழுத ஒத்துக்கொண்டேன். கதைக்கரு அர்பிதா அக்காவுடையது. அவர் ஏற்கனவே இந்த கதையை திட்டமிட்டு வைத்திருந்தார். அதன் பிறகு அந்தக் கதையை மெருகேற்றும் பணியை இருவரும் சேர்ந்து செய்தோம். இருவரின் கடின உழைப்பால் கதை நல்லபடியாக முற்று பெற்று இன்று புத்தகமாக வெளிவந்து விட்டது. பலமுறை அர்பிதா அக்காவுக்கு நன்றி சொல்லி விட்டேன். இருந்தும் இந்த வேளையிலும் அவருக்கு நன்றி சொல்கிறேன்.

*****

மலேசியப் பெண்ணான நீங்க நல்லா தமிழ் எழுத கத்துக்கிட்டீங்களே. உங்கள் தாய் மொழியே தமிழ் தானா :

💕என் தாய்மொழி மலையாளம். என் அம்மா தமிழ், அப்பா மலையாளி.. மலேசியாவைப் பொறுத்தவரை தொடக்க நிலைப் பள்ளி தமிழ் மலாய் சீனம் ஆகிய மூன்று பிரிவில் இருக்கும்.பெற்றோருக்கு விருப்பமான பள்ளியில் குழந்தைகளை சேர்க்கலாம்.13 வயதில் மூவினமும் சேர்ந்து படிக்கும் இடை நிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டும். என் பெற்றோர் என்னை தமிழ் பள்ளியில் சேர்த்தார்கள். இடைநிலைப் பள்ளிக்கு சென்றாலும் தமிழை விடாமல் என் விருப்பப் பாடமாக எடுத்துக்கொண்டேன்.

...
மகிழ்ச்சி

*****

உங்கள் இடத்தில் வரும் காட்சிகள், சம்பவங்களை கதையில் கோர்த்த அனுபவம் இருக்கிறதா :

💕கண்ணே கலங்காதடி என்ற திகில் கதை முழுக்க மலேசியாவில் நடப்பதைப் போன்று தான் எழுதியுள்ளேன்.

****

மலேசியாவைப் பற்றி சொல்லுங்க. உங்க ஊரின் சிறப்பு அம்சம் எவையெல்லாம் :

💕நான் மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தை சேர்ந்த பெண். எங்கள் மாநிலத்தின் சிறப்பே கண்ணாடி கோயில்தான்.. நிறைய சிறப்பம்சங்களை கொண்ட எங்கள் மாநிலத்தை எனக்கு மிகவும் பிடிக்கும்.. எங்கு பார்த்தாலும் மூவின மக்களின் சேர்க்கையை நீங்கள் காண முடியும். தெருவெங்கும் உணவு கடைகளும் ஜனக்கூட்டமும் வான் உயர்ந்த கட்டிட்டங்களும் எங்கள் நாட்டின் சிறப்பு. சுத்தமும் மகிழ்ச்சியும் எங்கள் நாட்டின் இன்னொரு சிறப்பு.

...
அழகான தகவல்

****

ஒரு நாவல் அல்லது சிறுகதை எழுதும் முன்பு நீங்கள் செய்வது என்ன :

💕பெயர் வைப்பது.

*****

உங்களது சிறுகதைகளின் கருக்கள் எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றன :

💕அந்த வினாடியில் எனக்கு என்ன தோன்றுகிறதோ அதுதான் என் கதையின் கருக்கள்.

*****

கவிதை, கற்பனை அதிகமாக கலந்து வரும் படைப்புகளுக்கும், அவற்றைக் கெடுக்காமல் எழுத்தாளரின் சொந்த நடையிலே வருகின்ற எழுத்துக்கும் உள்ள வித்தியாசமாக ஏதாவது சொல்ல நினைக்கறீங்களா :

💕ஒவ்வொரு எழுத்தாளருக்கும் தனி சிறப்பும் உண்டு கண்ணோட்டமும் உண்டு.

...
நிஜம் தான்

*****
உங்களது நட்பில் உள்ள எழுத்தாளர் :

💕நிறைய பேர்.

*****

நீங்கள் விரும்பி படிக்கும் நூலின் ஆசிரியர் :

💕சிவசங்கரி, கல்கி, அகிலன், சுஜாதா, ஜெயகாந்தன்.

*****

நூல்கள் :

💕பொன்னியின் செல்வன், சிவகாமி சபதம், பால்மரக் காட்டினிலே, சயாம் மரண ரயில், பாலங்கள்..

*****

ஆன்லைன் எழுத்துலகால் உங்களுக்கு கிடைத்த நன்மை அல்லது தீமை களைப் பற்றி சொல்ல முடியுமா :

💕நான் முதன் முதலில் எழுத வந்ததே ஆன்லைன் எழுத்துலகில் தான். அதில் நிறைய நன்மைகளையும் பெற்றிருக்கிறேன் சில தீமைகளையும் கண்டிருக்கிறேன்.

*****

போலீஸ் கதை தவிர்த்து மற்ற அனைத்தும் எழுதி விட்டதாக சொல்லியிருக்கீங்க. ஏன் அதை மட்டும் தவிர்க்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?

 💕ஐடியா கிடைக்கவில்லை..

*****

பேன்டஸி, திகில் சம்மந்தமான கதை எழுத என்ன தெரிந்திருக்க வேண்டும்:

💕கற்பனைக் குதிரையை கண்டபடி தட்டிவிட தெரிந்திருக்க வேண்டும்.

******

நீங்கள் எழுதிய முதல் நாவல்:

💕இந்த நொடி போதுமே 

*****
 
மொத்தம் எத்தனை நாவல் எழுதியிருக்கீங்க :

💕11 நாவல்கள்.

*****

உங்கள் படைப்புகளின் பெயர்கள் :

💕 இந்த நொடி போதுமே,
கண்ணே கலங்காதடி,
நேசத்தினால் என்னை கொன்று விடு, ருத்ர சண்டிகா,
இஞ்சி இடையழகி,
உயிர் அலையுதடி,
கொஞ்சம் புன்னகை,
அதரா,
சொக்குப்பொடி போட்டு செந்தூரமே, காதல் போதை தந்த கள்ளி,
பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா..

...
அழகான பெயர்கள்

*****

உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள்:

💕நிறைய பேர்..

*****

நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள்:

 💕நிறைய உள்ளது

******

உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க:

💕 நிச்சயமாக எனது முதல் நாவல்..

*****

எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது:

💕 மூன்று வருடங்கள்..

*****

உங்களது தனிப்பட்ட விருப்பம் ஆசை என்று ஏதாவது இருந்தால் சொல்ல முடியுமா :

 💕சீக்கிரமாக என் கடமைகளை செய்து முடித்துவிட்டு என் தொலைதூர காதலனை காண செல்ல வேண்டும்..

...
உங்கள் எண்ணங்கள் யாவும் ஈடேற என்னுடைய வாழ்த்துகள்💐💐

*****

நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்?

💕 நிஜத்தில் நடக்க முடியாத விஷயங்களை நான் கற்பனையில் எழுதி மகிழ்ந்து கொள்வேன். எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் என்றால் ருத்ர சண்டிகாவின் ஹீரோ ருத்ரன்.

*****

ஒரு நாவல் எழுத நீங்கள் எடுத்துக் கொள்ளும் கால அவகாசம்:

💕என் மனநிலை பொறுத்து கால அவகாசம் நீடிக்கும்.

*****

ஒரு நாவல் எழுதும் போது அதன் அத்தியாயங்கள் இத்தனை வர வேண்டும். வார்த்தைகள் இத்தனைக்குள் முடிய வேண்டும் என்று திட்டமிட்டு எழுதுபவரா நீங்கள் :

💕 அத்தியாயங்கள் குறைந்தது இருபதுக்கு மேல் வரவேண்டும் என எண்ணுவேன். வார்த்தைகள் என் எண்ண ஓட்டத்தை பொருத்து.

*****

நிஜ சம்பவத்தையும், கற்பனை காட்சிகளையும் இணைந்து எழுதப்படும் நாவலில் எது வாசகர்களின் விருப்பத்திற்கு ஏற்றதாக இருக்கும் :

💕 கற்பனையோடு இடையிடையே நிஜ சம்பவத்தை இணைத்து எழுதும் போது அது வாசகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும்.

*****

கதைக்கு வரும் விமர்சனங்கள் எப்படி இருக்கணும்னு நினைக்கறீங்க:

💕 எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் பிறரின் தூண்டுதலினாலோ அல்லது தனிப்பட்ட வன்மத்தோடோ  விமர்சனம் அளிக்கக்கூடாது. முதலில் அந்தப் படைப்பை முழுவதுமாக படித்து முடிக்கவேண்டும்,ஒரு பக்கத்தை மட்டும் படித்துவிட்டு மொத்த கதைக்கும் விமர்சனம்  கொடுப்பது அவசர குடுக்கை தனமாகும். பிறரின் மனம் புண்படாமல் அவரின் தனிப்பட்ட வாழ்வை அங்கே வெளியிடாமல் கதைக்கு மட்டும் விமர்சனம் அளித்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம்..

...
சரியான கருத்து

*****

மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏

உங்களது கேள்வி பதில்கள் அனைத்தும் அருமையாக இருந்தன. மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐

நன்றி தோழமைகளே




Comments