#எழுத்தாளர் அறிமுகப்படலம்
#சீசன் இரண்டு
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய அறிமுக எழுத்தாளர் பத்மா கிரகத்துரை அவர்களைப் பற்றிய நேர்காணல் :
பெயர் : பத்மா கிரகதுரை
சொந்த ஊர் : சிவகாசி
படிப்பு : B.sc
பணி : குடும்பத்தலைவி
தளம் : www.padmagrahadurai.com
தற்சமயம் எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் பெயர் & லிங் : இரண்டு நாவல்கள் பாதியில் நிற்கிறதுப்பா ( தோழமைகள் கட்டையை தூக்கிக் கொண்டு அலைவதால் தலைமறைவாக இருக்கிறேன் . )
தற்போது மாத நாவலுக்காக எழுதிக் கொண்டிருக்கும் கதை - புதுச்சுடர் பொழிந்ததே !
முடிவுற்ற நாவல்களின் லிங் : www.padmagrahadurai.com
*****
உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:
பிறந்த ஊர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள ஏழாயிரம்பண்ணை . பெற்றோர் தொழிலதிபர்கள் . உடன்பிறந்தோர் மூவர் . விருதுநகர் வன்னியப்பெருமாள் கல்லூரியில் டிகிரி படித்தேன். ( discontinue , பாதி படிப்பில்
பச்சப்புள்ளைக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்கப்பா ?
திருமணம் முடித்த ஊர் சிவகாசி .கணவர் தொழிலதிபர் . இரண்டு பிள்ளைகள் .மகள் பொறியியல் ( B.E ) , தொழில்நுட்ப மேற்படிப்பு ( MBA ) படித்தவர் .திருமணம் முடிந்து பெங்களூரில் இருக்கிறார் .மருமகன் பொறியியல் ( BE ) படித்தவர்.மகன் கட்டிடக்கலை வல்லுநர் ( B Arch ) .இப்போது குடும்பத்தில் ஒரு புது வரவு எனது பேரன் .
…
அருமை சிஸ்டர்
*****
உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:
எழுத்து அனுபவம் மிகுந்த மனநிறைவையும் , தன்னம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது .மிக ஜாலியாக ஒரு ஜனரஞ்சக திரைப்படத்தை பார்ப்பது போல் எழுதுவேன் . ஆதலால் எனது எழுத்து அனுபவம் என்பது என்னையே ரசிக்க கூடியது .
*****
நீங்கள் எழுத்துலகிற்கு எப்படி வந்தீர்கள் என்று சொல்லுங்க :
என்னை சார்ந்த அனைவருக்கும் இது தெரியும் . தெரியாத சிலருக்காக ...என்னை எழுத்துலகிற்கு அறிமுகம் செய்தது என் தோழி முத்துலட்சுமி ராகவன் அவர்கள் .அறிமுகம் செய்ததோடு எனது தொடர் முன்னேற்றத்திலும் கவனம் வைத்து என்னை வளர்த்து விட்டார். அவரது ஆதரவில்லையெனில் இந்த எழுத்துலகில் நான் இல்லை .
*****
நாவல் எழுத வந்த பிறகு எதையாவது மிஸ் பண்ணிட்டதா நினைக்கறீங்களா :
இல்லை . நிறைய பெற்றதாகத்தான் நினைக்கிறேன் .
*****
நாளிதழில் எழுதிய அனுபவம் இருக்கிறதா, இருந்தால் அதைப் பற்றி சொல்லுங்க:
இல்லை . தினமலர் வாரமலரில் எனது சிறுகதை வெளியாகியுள்ளது .சமீபத்தில் குங்குமம் வார இதழில் ஒரு சிறுகதை வெளியாகியுள்ளது .
*****
நீங்கள் எழுதிய முதல் நாவல்:
வா என் வண்ண நிலவே .
******
உங்களது முதல் நாவலின் பெயர் :
வானவில் தேவதை .
******
எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது:
ஆறு வருடங்கள்
******
மொத்தம் எத்தனை நாவல் எழுதியிருக்கீங்க :
37
*****
உங்கள் படைப்புகளின் பெயர்கள் :
வா என் வண்ணநிலவே - புத்தகமாக வெளி வராமல் தளத்தில் மட்டுமே வந்த எனது முதல் கதை .
புத்தகமாக வந்த கதைகள் :
1 . வானவில் தேவதை
2 . நீ தந்த மாங்கல்யம்
3 . கடல்காற்று
4 . முள்ளில் ரோஜா
5 . நந்தனின் மீரா
6 . கற்பூர பொம்மை ஒன்று
7 . அதோ அந்த நதியோரம்
8 . மயிலாடும் சோலையிலே
9. சரணடைந்தேன் சகியே
10. சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
11 தேரேறி வந்த நிலா
12 .தித்திக்கும் சூரியனே
13 .உறவு சொல்ல ஒருவன்.
14 .பாரதிக்கு கண்ணம்மா
15 .விளக்கேற்றும் வேளையிலே
16 .மலையோரம் வீசும் காற்று
17 . கொடியிலே மல்லிகை பூ
18 .வெண்ணிலா முற்றத்திலே
19 எங்கே நீயோ நானும் அங்கே
20. கார்த்திகை தீபங்கள்
21 .கன்னம் வைத்த கள்வனே ( மூன்று பாகங்கள் )
22.அதிகாலை பூங்காற்று .
23 . உன்னில் தொலைந்த நெஞ்சம் .
24 . கரை புரண்டோடுதே கனா .
25 . என்னுள்ளே எங்கோ எங்கும் கீதம்
26.தங்க தாமரை மலரே
27 .மயங்கினேன் மன்னன்இங்கே
28 நந்தன் என் காதலன்
29இது ஒரு காதல் மயக்கம்
30 உடலென நான் உயிரென நீ
31 ராமனின் மோகனம்
32 வானமழை போல் ஒரு காதல்
33 கனா காணும் கண்கள்
34 தேர் கொண்டு வந்தவன்
35 சுந்தரா கண்ணால் ஒரு சேதி
36 தவிக்குது தயங்குது ஒரு மனது
…
வாவ்!! அழகான பெயர்கள் தேர்ந்தெடுப்பு
******
உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள்:
நிறைய எழுத்தாள தோழமைகள் இருக்கிறார்கள் . அறிமுகம் ஆகும் போது வாசகர்களாக அறிமுகம் ஆகி பின் எழுத்தாளர்களான எத்தனையோ தோழமைகள் இருக்கிறார்கள் . அனைவருமே திறமையானவர்கள் . எனக்கு பிடித்தவர்கள் .
…
நல்லது
******
நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள்:
ராஜம் கிருஷ்ணன் , வாசந்தி நாவல்கள் .பொன்னியின் செல்வன் பிடிக்கும் .
*****
உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க:
கடல்காற்று , கற்பூர பொம்மை ஒன்று ,நந்தனின் மீரா .
*****
உங்களது நாவல்கள் சமூகப் படைப்பாக இருக்குமா அல்லது காதல் நகைச்சுவை குடும்பம் இதை பொறுத்து இருக்குமா:
காதல் கலந்த குடும்ப பின்ணனியில் சிறிது சமூக கருத்துக்களையும் தூவுவது என் பாணி .
*****
நீங்கள் தொடர்ந்து வாசிக்க விரும்பும் நாவல்கள்:
தற்போதைய நம் சகோதரிகளின் நாவல்கள் அனைத்தையும் வாசிக்க ஆசை . ஆனால் நேரம் கிடைக்க மாட்டேனென்கிறது .
******
உங்களது தனிப்பட்ட விருப்பம் ஆசை என்று ஏதாவது இருந்தால் சொல்ல முடியுமா :
ஏதாவது ஒரு தீவில் தனியாக ஒரு வாரம் ஒதுங்கி ஒரு வேளை மட்டுமே உணவுண்டு எனது பாதியில் நிற்கும் கதைகளை முடிக்க ஆசை .
*****
நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்?
எல்லா கதைகளையுமே பிடிக்குமே ! பிடிக்காமல் அந்தக் கதையை எப்படி எழுதியிருக்க முடியும் ?
…
நிஜம் தான்
******
உங்கள் நாவல் or தொடர்கதை எது வாசகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது, அதற்கான காரணத்தை விளக்க முடியுமா ?
நந்தனின் மீரா ,கன்னம் வைத்த கள்வனே , சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் , கார்த்திகை தீபங்கள் ,உறவு சொல்ல ஒருவன்
கதைகள் பிரபலமாக பேசப்பட்டது .காரணம் வாசகர்களிடம்தான் கேட்க வேண்டும் .
*****
இன்றைய எழுத்தாளர்கள் கற்றுக் கொள்ளக் கூடியவை என்று ஏதாவது உண்டுமா :
கற்றுக் கொடுக்கும் அளவு நான் பெரிய ஆள் இல்லை . எனக்கு ஒரு வேண்டுகோள் உண்டு . காதல் கலந்து எழுதுங்கள் ...செக்ஸ் கலந்து எழுதாதீர்கள் ப்ளீஸ் .
….
அருமை சிஸ்டர்
*****
எத்தனையோ விதமான படைப்புகள் இருக்க ஒரே மாதிரி படைக்கப் படுகின்ற கதையம்சம் வாசிக்க சலிப்பை ஏற்படுத்துமா அல்லது அந்த எழுத்தாளரின் மீது கோபத்தை ஏற்படுத்துமா :
மிகத் திறமையாக புதுமை பூசி கையாளப்பட்டிருக்கும் பழைய கதைகளின் ஆசிரியருக்கு சபாஷ் சொல்லத்தான் தோன்றும் . அரைத்த மாவு என்று இங்கே எதுவும் கிடையாது . காலம் காலமாக மாவரைத்துக் கொண்டிருப்பவர்கள்தாமே நாம் . ஒவ்வொரு வீட்டு இட்லியும் அந்தந்த வீட்டு பெண்களின் கைப் பக்குவம்தானே ? அவரவர் பக்குவப்படி சமைக்கப்பட்டிருக்கும் கதைகள் எனக்கு மிக விருப்பமே .
…
👌👌👌 ரொம்ப அழகா சொல்லிட்டீங்க சிஸ்டர் அருமை.
******
உங்கள் கதைகளை வாசிக்கும் போது அதில் சமூக சிந்தனைகள், நிஜ சம்பவத்தின் தாக்கம் ஏதாவது இருக்குமா :
இருக்கும் . எனது கதைகளின் களங்களை தேர்ந்தெடுக்கும் போது , அக் களங்களின் நடந்த நிஜ சம்பவங்கள் , சமூக அவலங்களை கதைக்கேற்ப இணைத்துக் கொள்வேன் .
******
நிஜ வாழ்வின் நடக்கின்ற சம்பவங்களை நாவலாக வடித்த அனுபவம் இருந்தால் சொல்ல முடியுமா :
நான் எழுதுவது பெரும்பாலும் குடும்பக் கதைகள்தானே ? நிஜ வாழ்வின் சம்பவங்களின் தாக்கம் நிறைய இடங்களில் இருக்கத்தான் செய்யும் .
******
உங்களது நாவல் எழுதும் பழக்கம் எப்படி ஆரம்பமானது. அதன் தூண்டுகோல் யாரென்று சொல்ல முடியுமா:
எனது ஆரம்ப எழுத்து கவிதைகள்தாம் . முகநூலில் என் கவிதைகளை படித்து பாராட்டி என்னை கதைகள் எழுத தூண்டியது எழுத்தாளரும் , என் தோழியுமான திருமதி .முத்துலட்சுமி ராகவன் அவர்கள்தாம் . என் எழுத்துக்களின் தூண்டுகோல் அவர்கள்தான் .
******
நீங்கள் நாவல் எழுத எடுத்துக் கொள்ளும் கால அவகாசம்:
சில மாத நாவல்களை ஒரே வாரத்தில் கூட முடித்துக் கொடுத்திருக்கிறேன் .நெடு நாவல்களுக்கு சில மாதங்கள் ஆகும் .
******
ஒரு நாவல் எழுதும் போது அதன் அத்தியாயங்கள் இத்தனை வர வேண்டும். வார்த்தைகள் இத்தனைக்குள் முடிய வேண்டும் என்று திட்டமிட்டு எழுதுபவரா நீங்கள்
ஆமாம் . மாத நாவல்களை இந்த கட்டுப்பாட்டிற்குள்தான் எழுதுகிறேன் .
*****
உங்கள் கதைகளில் சொந்தவூரைப் பற்றி எழுதியிருக்கீங்களா :
இல்லை .இதுவரை எழுதவில்லை .ஆனால் எழுதும் யோசனை இருக்கிறது .
*****
சிவகாசி என்றால் அங்கு பட்டாசு தொழில் தான் முக்கியப் பங்கு வகிப்பதாக கேள்வி பட்டிருக்கிறேன். வேறு ஏதாவது விசேசம் உண்டுமா :
சிவகாசி என்றால் பட்டாசும் , அச்சுத் தொழிலும் முக்கியம்பா .எங்கள் குடும்பத் தொழிலும் பட்டாசுதான் .
*****
முத்துலெட்சுமி ராகவன் மேடத்தைப் பற்றி உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்க :
உழைக்க அஞ்சாதவர் .உடல்நிலை சரியில்லாத போதும் உழைப்பில் குறையேதும் வைக்காதவர் . இறுதி மூச்சு வரை எழுத்துடனேயே இருந்து மறைந்தவர் .பெண் எழுத்தாளர்களான நமக்கெல்லாம் அவர் முன்னோடி . குழந்தை உள்ளம்கொண்டவர் . நினைத்ததை நடத்தி முடிக்கும் மன வல்லமை வாய்ந்தவர் . இன்னமும் சொல்லிக் கொண்டே போகலாம் .மொத்தத்தில் அவர் ஒரு சகாப்தம் .
…
நன்றிகள் சிஸ்டர்
******
மேமின் எழுத்துலக அனுபவத்தை ஒரு நண்பராக எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா :
அசராமல் பகுதி நாவல்கள் எழுதியவர்
.எத்தனையோ மன அழுத்தங்களுக்கிடையேயும் தனது எழுத்துக்களை துறக்காதவர் ." எழுத்தரசி " எனக் கிடைத்த பட்டத்தை வேண்டாமென உதறியவர் .பெண் எழுத்தாளர்களிடையே ஒரு புரட்சியை உண்டு பண்ணியவர் .அவரது பணிச்சுமையையும் , மன அழுத்தத்தையும் நான் மிக நன்றாக அறிவேன் .நான் வியந்து பார்த்த பெண்மணி அவர் . அவர் எழுத்துக்கள் என்றும் நம்மோடு இருக்கும் .
*****
ஆன் லைனில் எழுதுவதற்கும், வார நாளிதழில் எழுதுவதற்கும் உள்ள வித்தியாசமாக நீங்க சொல்ல விரும்புவது :
ஆன்லைனில் அத்தியாயங்களை நமது மனம் போல் நீட்டித்துக் கொள்ளலாம் . திடுமென நான்கு பாத்திரங்களை சேர்த்துக் கொள்ளலாம் .வர்ணனைகளை கூட்டிக் கொள்ளலாம் .ஆனால் வார இதழ்களுக்கு அழுத்தமான கதையும் , கச்சிதமான பாத்திரங்களும் , அளவான வர்ணனைகளும் தேவை .
…
நிஜம் தான்.
*****
இனி வாசகர் கேள்விகள் :
சுகன்யா பாலாஜி:
when u will start a new story exclusively for online readers?
மிக விரைவிலேயே வருகிறேன்பா .நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதிக் கொண்டே இருக்கிறேன் .
******
பத்மாவதி
பச்சை மலை பூவு எப்போது வரும்?
எழுதிக் கொண்டே இருக்கிறேன்பா .சீக்கிரமே வரும்
******
வீட்டில் வேலை செய்யும் போது கதை மாந்தர்கள் புத்தியில் வந்தால் என்ன செய்வீங்க ?
எனது கதை மாந்தர்கள் பெரும்பாலும் எனது வீட்டு வேலைகளினிடையே உருவானவர்கள்தாம் பத்மாவதி . நாவல்களில் வரும் சில சமையல் குறிப்புகள் , உடை , நகை வர்ணனைகள் எல்லாம் எனது அனுபவங்கள்தாம் .
*****
உங்கள் நாவல் கதாநாயகிகளின் தனித்துவத்திற்கு என்ன காரணம்
என் கதாநாயகிகள் தனித்துவமாக இருக்க வேண்டுமென்ற ஆசையோடு படைப்பதுதான் . ஒரு கதை என் மனதில் தோன்றும் போது முதலில் நான் உருவாக்குவது அதன் நாயகியைத்தான் . பிறகு அவளுக்கேற்றாற் போல் நாயகனை படைப்பேன் . துணைக் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் நான் அன்றாடம் சந்திப்பவர்களின் குணங்களை பெற்றவர்களாயிருப்பார்கள் . எனது நாயகிகளின் பொது குணமான தைரியமும் , நிமிர்வும் எனது மகளின் குணத்திலிருந்து எடுத்தது.
*****
சித்ரா ஸ்ரீனி:
உங்களுக்கும் முத்துலட்சுமி அம்மாவிற்குமான நட்பு எப்படி மலர்ந்தது... உங்களுக்குள் இருக்கும் நினைவுகள் மறக்கமுடியா தருணங்கள் இனிய ஞாபகங்கள் முடிந்தால் பகிருங்கள் மா:
முகநூல் என்றாலே எனக்கு எம்.ஆர் மேடம்தான் . அவருடனான நட்பிற்கு ஆசைப்பட்டுத்தான் சும்மா கிடந்த எனது முகநூல் கணக்கை தூசு தட்டினேன் . அப்போது மேடத்திற்கு முகநூலில் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த சிலரிடம் கோபம் கொண்டு எனது ஆதரவை மேடத்திற்கு தெரிவித்தேன் . எப்படி என்று இப்போது வரை தெரியவில்லை ., நான் அதிகம் பேசாத அமைதி டைப் .மேடம் கொஞ்சம் படபட ,கலகல. எப்படி எங்களுக்கிடையே நட்பு ?
ஏதோ விட்ட குறை தொட்ட குறை என்பார்களே அப்படி இருக்கலாம் .அவரது மிக நெருங்கிய தோழியாக ஆனேன் .எனது கவிதையை முதன் முதலில் அவர் பாராட்டிய தருணம் , கதைகள் எழுதச் சொன்னது , அவற்றை அவரே வெளியிட்டது , அவர் தளத்தின் பொறுப்புகளை என்னிடம் ஒப்படைத்தது என எல்லாமே நானே எதிர்பாராத சம்பவங்கள் .எத்தனையோ இரவுகள் நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்திருக்கிறோம் .இருவரது வாழ்வின் இக்கட்டான தருணங்களை பகிர்ந்து கொண்டிருந்திருக்கிறோம் .
தீர்வுகள் கண்டிருக்கிறோம் .ப்ச்...விதி வசம் ...பிரிந்தோம் .இப்போது...மிகப் பெரிய குற்றவுணர்வுடன் இருக்கிறேன் .என் தோழியின் இடம் நிரப்பப்படாமல் காற்று நிரம்பிக் கிடக்கிறது .இனியொருவர் நிச்சயம் அந்த இடத்திற்கு வரவே முடியாது .
….
நிஜம் தான். நான் ஒரு நாள் முகநூலில் அவர்களிடம் பேச வேண்டி அனுமதி கேட்டேன். அதற்கு அவர்கள் 'உங்க கிட்ட பேசியதில் எனக்கும் ரொம்ப சந்தோசம் . இன்னும் பேச ஆசையாக தான் இருக்கு. ஆனால் தற்சமயம் உடல் நிலை சரியில்லை. நீங்கள் என்ன விசயம் என்று செய்தி அனுப்புங்க. பார்த்து விட்டு பதில் அனுப்புகிறேன்' என்றார்.
ஆனால் அதற்கு பிறகு பதில் வரவில்லை. எனது காத்திருப்பு வீணானது மட்டுமின்றி அவரும் இம் மண்ணுலகை விட்டு சென்று விட்டார்.
*****
விஜி ரமேஷ் கோமல் :
Who is your inspiration to write stories ?
அப்படியெல்லாம் யாருமில்லப்பா . சும்மாஅப்படியே எழுத ஆரம்பிச்சதுதான் .
*****
When did you start writing and which makes you to write ?
ஐந்து வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன்பா . எம்.ஆர் மேடத்தின் நட்புதான் என்னை எழுத தூண்டியது.
******
காஞ்சனமாலா
When u start writing? what inspiered u to start writing? Solamal thotu selum thendral , nandnin Meera pondra kadaigal neriya vati ketu eruken, mulil roja oru different story, neengàl innum neriya nala kadaigal illautha enn valthukal
இன்ஸ்பிரேசன்னு பெரிய வார்த்தைகளெல்லாம் தேவையில்லைப்பா .சும்மாஅப்படியே ஜாலியா எழுத ஆரம்பித்ததுதான் .உங்கள் பாராட்டிற்கு நன்றி
*****
சபரீஷ்வரி ஆனந்த்:
கதை நடையில் உங்கள் சொல்லாடல் தனித்து தெரிகிறது. இது தங்கள் இயல்பா? அல்லது தாங்கள் அமைத்து கொண்ட விதமா?
இதற்கெல்லாம் மெனக்கெடலைப்பா . கவிதை எழுதுவதால் சொற்கள் சில கவித்துவமாக வந்திருக்கலாம் . அப்படியே எழுத்துப் போக்கில் வருவதுதான் .
******
உமா ஸ்ரீனிவாசன்
பத்மா கிரகதுரை எனக்கு உங்க novel daily படிக்கணும்.
நிச்சயம்பா. விரைவில் ஆன்லைன் எழுத்துக்களுக்கு வருகிறேன் .பிரியங்கள் .
*****
மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏
உங்களது நேர்காணல் மிகவும் அருமையாக இருந்தது. நீங்க எம். ஆர். மேமின் நட்பில் உள்ளவர்கள் என்று தெரிந்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்களது பதில்கள் மூலம் அவரைப் பற்றி தெரிந்து கொண்டதில் சந்தோஷப் படுகிறேன்.
மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கவும், விருதுகள் பல வாங்கவும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐💐
நன்றி தோழமைகளே
எனது ஆறு வருட எழுத்து வாழ்க்கையை திரும்பிப் பார்க்க வைத்ததற்கு நானும் நன்றி கூறிக் கொள்கிறேன் ஆனந்தஜோதி .
ReplyDeleteமிக்க நன்றி சிஸ்டர்🙏🙏
Deleteமனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐