ஷேஹா ஸகி

 


#எழுத்தாளர் அறிமுகப்படலம்

சீசன் இரண்டு

ஹாய் பிரண்ட்ஸ்,

இன்றைய அறிமுக எழுத்தாளர் ஷேஹா ஸகி
அவர்களைப் பற்றிய நேர்காணல் :


பெயர் :  ஃபாத்திமா ஸகியா (புனைப்பெயர்- ஷேஹா ஸகி)

சொந்த ஊர் : இலங்கை கொழும்பு மாவட்டம்

படிப்பு : Advanced level in commerce stream & Diploma in English  (இப்போ இவ்வளவுதான். அடுத்தவருடம்தான் என்னுடைய மேல்படிப்பு ஆரம்பாகுது😌)

பணி : கணக்காளரா இருக்கேன். கூடவே, கதைகள் எழுதுறேன். அப்புறம் ஸ்வீட், கேக்னு ஆர்டர் எடுத்து கஸ்டமர்க்கு செய்துகொடுக்குறேன். என்ட், கதைகளை ஆடியோ நாவலா வெளியிடுற யூடியூபர் ஆ இருக்கேன்(அதுவும் பணியில வரும்தானே😅)

தளம் : எஸ்.எம் தளம்

அமேசான் பெயர் & லிங்:

ஷேஹா ஸகி

https://www.amazon.in/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%95%E0%AE%BF/e/B08ZYCHG6C/ref=dp_byline_cont_ebooks_1

தற்சமயம் எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் பெயர் & லிங் :

தற்சமயம் எஸ்.எம் தளத்தில் நடைபெறும் போட்டிக்காக கதையெழுதிக்கிட்டு இருக்கேன். கதைப்பெயர் வெளியில் சொல்லக்கூடாது 😅

முடிவுற்ற நாவல் லிங் :

முதல் மூன்று நாவல்கள் அமேசன் கிண்டலில் படிக்கலாம். ஒரு நாவல் புத்தகமா கிடைக்கும். மீதி இரண்டு முடிவுற்ற நாவலுக்கான லிங்க்

https://forum.smtamilnovels.com/index.php?categories/zaki.1097/

*****

உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:

இன்னாரோட பொண்ணு, இன்னாரோட மனைவின்னு இல்லாம தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்குவதற்காக போராடுற ஒரு பொண்ணு. அப்படின்னு சொல்லலாம்.

*****

உங்களது எழுத்து அனுபவத்தைப் பற்றி சொல்ல முடியுமா:

ஆரம்பத்துல என் தோழி சொன்னதால தான் வாசகரா இருந்த நான் கதையெழுத அடியெடுத்து வைத்தேன். அத்தியாயத்தை டைப் பண்ணி வட்ஸ்அப்ல என் நான்கு தோழிகளுக்கு மட்டும் அனுப்பி வைப்பேன்.

அப்போ அவங்க சொல்ற இரண்டு கருத்துக்கள்தான் பிரதிலிபியில் நான் கதையெழுத ஆரம்பிக்க ஊக்குவிப்பா இருந்தது. அதுக்கப்றம் இன்னும் நிறைய தளங்களில் எழுத ஆரம்பிச்சேன்(இப்போ எஸ்.எம் தளம் மட்டும்தான்). என்னோட குடும்ப, நட்பு வட்டாரத்துல நான்தான் எழுத்துலகிற்கு முதல்ல வந்திருக்கேன். யாருக்கும் இந்தத்துறை பற்றி எதுவும் தெரியல. அதனால, யாருக்கும் பிடிக்கல.

எனக்கும் ஆரம்பத்துல கதையெழுதி போடுவதே போராட்டமாதான் இருந்தது. அப்போ எனக்கு நிறைய எழுத்தாள நண்பர்கள் உதவி பண்ணாங்க. அவங்களுக்கு நன்றி சொல்லியே ஆகணும். ஆரம்பத்துல எதிர்த்த என் அம்மா இப்போ என் கதைகள வாசிக்க ஆரம்பிச்சிருக்காங்க. அதுவும் எஸ்.எம்.எஸ் தளத்துல நடைபெற்ற அழகியசங்கமம் 2 போட்டியில் என்னுடைய கதை வெற்றி பெற்றதிலிருந்து.

நேர் மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் பார்த்திருக்கேன். எதிர்மறை விமர்சனங்களால ஆரம்பத்துல ரொம்பவே பயந்தேன். இப்போ ஏத்துக்க பழகிட்டேன்.

இப்போதைக்கு எழுத்துத்துறையில இவ்வளவுதான் என்னுடைய அனுபவம்.

...

அருமையான அனுபவம்

*****

நீங்கள் எழுத்துலகிற்கு எப்படி வந்தீர்கள் என்று சொல்லுங்க:

A/l (உயர்தரக்கல்வி) படிச்சி முடிஞ்சதும் அடுத்த இரண்டு வருடங்கள் தனிப்பட்ட முறையில் நிறைய பிரச்சினை. மேல்படிப்பை கூட தொடர முடியாத நிலை. அதன் விளைவுதான் மனஅழுத்தம்.

அதைப் போக்கிக்க கதைகள வாசிக்க ஆரம்பிச்சேன். பிரச்சினைகள மறக்க நாவல் உலகத்துக்கு வந்தேன். அப்போ என்னோட நெருங்கிய தோழிதான் என்னை கதை எழுத சொன்னா. அவ மட்டும் வாசிக்கிறதுக்காக ஆரம்பத்துல எழுத ஆரம்பிச்சி, இப்போ நிறைய வாசகநண்பர்களுக்காக எழுதிக்கிட்டு இருக்கேன்.

*****

உங்கள் கல்லூரி வாழ்க்கை பற்றி சொல்ல முடியுமா :

கல்லூரி வாழ்க்கை இன்னும் ஆரம்பமாகல. ஆனா, என்னோட பள்ளிக்கூட வாழ்க்கைப்பற்றி சொல்ல நிறையவே இருக்கு.

தரம் ஒன்றிலிருந்து பதினொன்னாம் வகுப்பு

வரைக்கும் ஒரு ஸ்கூல்ல படிச்சிட்டு A/l (உயர்தரக்கல்வி) வேற ஸ்கூல்ல தான் படிச்சேன். பதினொரு வருடம் Co education ல படிச்சிட்டு தனிப்பெண்கள் மாத்திரம் பயிலும் பாடசாலையில் சேர்ந்தது வித்தியாசமான அனுபவம். கூடவே, புது நண்பர்கள்.

கொஞ்சம் நல்லா படிக்குற பொண்ணுதான் நானு😁 பதினொன்னாம் வகுப்பு படிக்கும் போது சுகாதாரப் பிரச்சினை காரணமா என்னால இறுதிப்பரீட்சை சரியாக பண்ண முடியல. ஆனா, அதையெல்லாம் ஈடு செய்ற மாதிரி என்னோட A/l இறுதிப் பரீட்சையின் முடிவு இருந்திச்சு. என் வாழ்க்கையில எனக்கு கிடைச்ச முதல் வெற்றி.

....

அருமையான பதில்

*****

உங்களது நண்பர்கள் படைப்புகளை வாசித்துவிட்டு சொல்வதென்ன:

ஆரம்பத்துல நாலு பேர் வாசிச்சாங்க. நாவல் வாசிக்கிறதுல அவங்களுக்கு அதிகம் ஈடுபாடு கிடையாது.

என்னோட நட்புவட்டாரத்துல இப்போ என் கதைய வாசிக்குறது ஒரே ஜீவன்தான். என்னோட உயிர்த்தோழி😅.  அதுவும் யூடியூப்காக அவதான் கதைய குரல்பதிவு செய்து அனுப்பணும். அந்த ஒரே காரணத்துக்காக வாசிக்கிறா😬😬.

ஆனா என்னன்னா, நான் ஒரு கன்செப்ட் யோசிச்சிட்டேன்னா அதை அவக்கிட்டதான் முதல்ல சொல்வேன். என்னோட விஷயத்துல அவளோட தெரிவு எப்போவும் சரியா இருந்திருக்கு. அவ என்னோட கன்செப்ட்ட ஓகேன்னு சொன்னா மட்டும்தான் எழுத ஆரம்பிப்பேன். என்னோட பரிசோதனை எலி அவதான்னு சொல்லலாம்😂.

...

அருமையான தோழி

*****

கல்லூரி முடிஞ்சா வீடு, படிப்பு இதற்கிடையில் எழுத்து. எப்படி உங்களால் இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடியுது :

இப்போதைக்கு மேல்படிப்பு இன்னும் ஆரம்பமாகல. அதனால அந்த பிரச்சினைய இன்னும் நான் சந்திக்கல. ஆனா, படிப்பு ஆரம்பமானாலும் நேரத்துக்கு ரீடர்ஸ்க்கு அத்தியாயங்கள கொடுப்பேன்னு என்னை நானே நம்பிக்கிட்டு இருக்கேன்😄

*****

நாவல் எழுதும் போது நீங்கள்  உணர்வதென்ன:

நிஜமாவே நாவல் எழுதும் போது நான் நிகழ்காலத்துலயே இருக்க மாட்டேன். என்னை சுத்தி நடக்குறதை கூட என்னால உணர முடியாது. கதைக்குள்ள மூழ்கி போயிருவேன்.

சிலநேரங்கள்ல நேரம் போகுறது கூட தெரியாம எழுதியிருக்கேன். என்னோட எல்லா பிரச்சினைகளையும் மறக்க வைக்குற ஒரு மெடிசின்தான் நாவல் ரைட்டிங்.

*****

உங்களது நட்புகள் ரொம்ப அருமையா இருக்குன்னு சொன்ன படைப்புகள் எவை :

என் உயிர்த்தோழிக்கிட்ட நான் கதைக்கருவ சொல்லும்போது 'என்கிட்ட மட்டும் காசிருந்தா இதை படமாவே எடுப்பேன். அவ்வளவு பிடிச்சிருக்கு'ன்னு சொன்னது என்னோட 'அனல் பார்வை அறி' கதைதான்.

ஆனால், என்னோட வாசக நண்பர்களை ரொம்ப கவர்ந்தது,  அதிக விமர்சனங்கள், கருத்துக்கள்னு நான் பெற்ற கதைதான் 'காதல்போதையடா நீ எனக்கு' . சொல்லப்போனா, நிறைய வாசகர்கள் அதோட பகுதி 2 எழுத சொல்றாங்க. அந்தளவுக்கு மாயாவும் ரோஹனும் அவங்கள கவர்ந்திருக்குறதை பார்க்கும் போது அவ்வளவு ஹேப்பியா இருக்கு.

*****

இலங்கை வாசியான நீங்க உங்க இடத்தைப் பற்றி கதையில் எழுதியிருக்கீங்களா :

என்னுடைய ஆறாவதுநாவல் லவ் ஆர் ஹேட் மீ கதையுடைய கதைக்களம் இலங்கைதான். என்னுடைய சொந்த ஊரான கொழும்பை பற்றி விரிவாக எழுதவில்லையென்றாலும் மாத்தளை மாவட்டத்தின் அழகை பற்றி கதையில்  வர்ணித்திருப்பேன்.

*****

உங்கள் ஊரின் சிறப்பு அம்சத்தைப் பற்றி சொல்லுங்க :

பிறந்ததுல இருந்து இப்போவரைக்கும் கொழும்புலதான் இருக்கேன். சைனாவ குத்தகைக்கு எடுத்த குட்டி நகரம் மாதிரி இருக்கும் என்னோட ஊரு😅

இலங்கையோட தலைநகரம். ஆனால், இலங்கையில சின்ன மாவட்டமும் அதுதான். அதிகமான ஜனத்தொகை இருக்குற மாவட்டமும் அதுதான். சுத்தி பார்க்குறதுக்கு இடத்துக்கு பஞ்சம் இருக்காது. அதே மாதிரி சாப்பாட்டுக்கும் பஞ்சம் இருக்காது. (தெருவுக்கு ஒரு ஹோட்டல் வச்சிருக்காய்ங்க😂)

Gangaramaya Temple, Galle Face, Viharamahadhevi park, சுதந்திர சதுக்கம்(மனஅமைதிய தேடி நான் ஓடுற ஒரே இடம்), இலங்கை நூதனசாலை, Lotus Tower இந்தமாதிரி நிறைய இடங்கள். சுற்றுலா பயணிகள் வந்தா திரும்பி போக மனசே இருக்காது. கண்டிப்பா நீங்களும் ஒருநாள் வந்து பாருங்க.

...

மகிழ்ச்சி சகோதரி

*****

நீங்கள் நாவல் எழுத எடுத்துக்கொள்ளும் கால அவகாசம்:

நான் காட்சிகளை யோசிச்சதுமே ஃபோன்ல இல்லைன்னா லெப்டாப்ல டைப் பண்றது கிடையாது. நோட்ல எழுதிட்டுதான் டைப் பண்ணவே ஆரம்பிப்பேன்.

ஒருநாளைக்கு ஒரு அத்தியாயம்தான் வீட்டுல எழுத விடுறாங்க(விட்டாலும் என் கண்ணு ஒத்துக்க மாட்டேங்குது. அது வேற டிபார்ட்மென்ட்😅) ஆரம்பத்துல ஒருமாத காலஅவகாசம் தேவைப்பட்டிச்சு. இப்போ ஒன்றரை மாதம் ஆகுது. (ரொம்ப சோம்பேறியாகிட்டேன்னு நினைக்கிறேன்😑)

******

ஒரு நாவல் எழுதும் போது அதன் அத்தியாயங்கள் இத்தனை வர வேண்டும். வார்த்தைகள் இத்தனைக்குள் முடிய வேண்டும் என்று திட்டமிட்டு எழுதுபவரா நீங்கள்:

ஆம், ஆரம்பத்துல நான் கற்றுக்கொண்ட படிப்பினையே அதுதான்.

முதல் மூன்று நாவல்கள் கதைய மட்டும் யோசிச்சிட்டு கை போன போக்குக்கு வார்த்தைகளின் எண்ணிக்கை வரையறை இல்லாம எழுதிட்டே போனேன். அப்றம்தான், சில அறிவுரைக்கேற்ப இப்போ ஒரு  அத்தியாயத்துக்கு 1500 வார்த்தைகள்  இத்தனை அத்தியாயங்களென வரையறை செய்து திட்டமிட்டு எழுதுகிறேன்.

*****

திகில், பேய், அமானுஷ்யம், பேன்டஸி, வரலாறு, ஆன்மீகம் , காதல், குடும்பம் இவற்றில் எவையெல்லாம் உங்களது தேர்வு :

காதல், ஃபேன்டஸி மற்றும் குடும்பம்

*****

எந்த மாதிரியான நாவல் வாசித்தவுடன் மனதில் ஒட்டிக்கொள்வதாக நினைக்கறீங்க :

எந்தவொரு கதையால் வாசகரின் யூகிப்பை தகர்க்க முடிகிறதோ? எந்தவொரு கதாபாத்திரங்களால் வாசகரை கதைக்குள் சிறைப்பிடிக்க முடிகிறதோ? அவ்வாறான நாவல்கள் எத்தனை வருடங்கள் கழிந்தாலும் மனதில் ஆழமாக பதிந்திருக்கும்.

*****

உங்கள் கல்லூரி வாழ்க்கையைப் பற்றி கதை எழுதிய அனுபவம் இருக்கிறதா:

இல்லை.

ஆனா, என் நட்பு வட்டாரத்தில் நடந்த சில சம்பவங்களை என் கதையில்  எழுதியிருக்கிறேன்.

*****

ஆன்லைன் எழுத்தாளரில் உங்களுக்கு பிடித்தவர்கள் யார் யார்:

குறிப்பிட்டு சொல்ல முடியல. நிறைய பேர் இருக்காங்க. ஒருத்தரை சொல்லாம விட்டாலும் என்னால ஏத்துக்க முடியாது.

இருந்தாலும் நீங்க கேக்குறீங்கன்னு சொல்றேன். எனக்கு ரொம்ப பிடித்த ஆன்லைன் எழுத்தாளர் அது நான்தான்😁 நானும் ஆன்லைன் எழுத்தாளர்தானே😅 (உன்மீது உனக்கே நம்பிக்கை இல்லையென்றால் கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை. விவேகானந்தர் சொன்னது😌)

*****

உங்களது விருப்பமான எழுத்தாளர்:

ரமணிச்சந்திரன்

கல்கி கிருஷ்ணமூர்த்தி

*****

நீங்கள் எழுதிய முதல் நாவல்:

உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி

*****

உங்களது நாவல்களின் பெயர் :

1,உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி

2,என்னை தீண்டாதே என் ஜீவனே

3,காதல்போதையடா நீ எனக்கு

4,உன்னாலே உயிர்த்தேனே உயிர்காதலே

5,அனல் பார்வை அறி

6,லவ் ஆர் ஹேட் மீ

...

அழகான பெயர்கள்

*****

எழுத வந்த இத்தனை வருடத்தில் நீங்கள் எதையாவது சாதித்து விட்டதாக நினைக்கிறீர்களா :

ஆரம்பத்துல என்னுடைய ஒரு கதை புத்தகமாக வெளிவந்தால் போதும் அதுவே என்னோட சாதனைன்னு நினைச்சேன்.

நினைச்ச மாதிரி

என்னுடைய உன்னாலே உயிர்த்தேனே உயிர்காதலே இப்போது புத்தகமாக பல வாசகர்களின் கையில். ரொம்ப ஹேப்பி. பட், இன்னும் முடியல, இப்போ இதுல சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்குன்னு தோனுது.

*****

தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல நினைத்தால் தயங்காமல் கூறலாம்:

தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்லணும்னா... நேர், எதிர்மறை விமர்சனங்கள் இரண்டையுமே ஏத்துக்குற மனநிலையோட தான் இந்தத்துறையில காலடி எடுத்து வைக்கணும். குனிவதால் எழுத்துக்கள் நிமிரும், பணிவதால் வாழ்க்கை உயரும் என்கிறதை நான் ரொம்பவும் நம்புறேன்.

நேர் விமர்சனங்களை ஏத்துக்கும் போது எதிர்மறை விமர்சனங்களையும் ஏத்துக்க பழகிக்கணும். சிம்பிளா சொல்லணும்னா, நீ விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாத! நீ விரும்பியதை உலகமே எதிர்த்தாலும் செய்து முடி!(இதுவும் நான் என் வாழ்க்கையில கடைப்பிடிக்குற ஒரு தத்துவம்)

....

👌👌👏👏👏

*****

உங்கள் படைப்புகளை தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :

என்னுடைய வாசக நண்பர்களுக்கு நான் நிறைய நன்றி சொல்லணும். வாசகர்கள் இல்லைன்னா எழுத்தாளர்கள் இல்லை. ரொம்ப கஷ்டமா ஃபீல் பண்ணும் போதெல்லாம் என்னோட வாசக நண்பர்களோட கருத்துக்கள் என்னை சிரிக்க வச்சிருக்கு. ரொம்ப ரொம்ப நன்றி.

என்ட், முக்கியமான மேட்டர் சைலன்ட் ரீடர்ஸ்க்கு. உங்களுக்கும் ரொம்ப நன்றி பட், ப்ளீஸ் ஏதாச்சும் ரியாக்ட் பண்ணுங்க 😂😂 அப்போதானே நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எனக்கு புரியும்(இவ்வளவு பேசுற நானே ஒரு சைலன்ட் ரீடர்தான்😁)

******

நீங்கள் எழுதிய கதைகளில் மனதை கவர்ந்த  ஒரு காட்சியை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா:

காட்சிகள் மனதை கவரப்போய் தான் கதையில் எழுதுகிறேன். எல்லாமே என்னுடைய கற்பனைதான். எல்லாமே ரொம்ப பிடிக்கும்.  இதுதான்னு குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியல.

இருந்தாலும் இருக்குற நிறைய காட்சிகள்ல ஒன்னு சொல்றதுன்னா,

காதல்போதையடா நீ எனக்கு கதையில தனக்கிட்ட காதல சொல்ல வர்ற பொண்ணுங்கள ஓடவிட ஹீரோ ஒரு பெரிய டயலாக் பேசுவாரு😅.  ஹீரோ அதே டயலாக்க ஹீரோயின் கிட்ட சொல்ல வரும் போது அவர பேசவிடாம ஹீரோவோட டயலாக்க மாத்தி ஹீரோயின் பேசுவா. அது எனக்கு ரொம்ப பிடிக்கும்😍

...

🤣🤣🤣 அருமை

*****

வாசகர்கள் கேள்வி

1, இக்கட்டான நேரத்தில் அறிமுகம் இல்லாத நபர் உதவியது உண்டா?

இந்தத் துறைக்கு வந்த ஆரம்பத்துலயிருந்து இப்போ வரைக்கும் நிறைய இக்கட்டான சூழ்நிலைகள். அதை கடக்க உதவிய எல்லோருமே ஆரம்பத்தில் அறிமுகம் இல்லாதவர்கள். இப்போது எழுத்தாள நண்பர்கள் ☺

*****

2, வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவு? மறக்க விரும்பும் நினைவு?

மறக்க முடியாத நினைவுகள் நிறையவே இருக்கு🤩. மறக்க விரும்பும் நினைவுகள்னு எதுவும் இல்லை. கசப்பான நினைவுகளா இருந்தாலும் கூட அது என் வாழ்க்கைக்கு படிப்பினையாகத்தான் இருந்திருக்கிறது. எதையும் என் வாழ்க்கையில் நான் மறக்க விரும்பவில்லை😌

*****

3, ரொம்ப நாளா கேட்கணும்னு நினைச்ச கேள்வி 😁😁 ஏன் உங்க கதையில வர்ற ஹீரோ எல்லாரும் ஃபர்ஸ்ட் ரொம்ப டெரரா வராங்க, அப்புறம் அப்படியே பல்டி அடிக்கிறாங்க, அதுவும் சாதா பல்டி இல்ல அந்தர்பல்டிடிடிடி 😁......

😂😂😂 how do i tell you... ஆல் மை ஹீரோஸ் ஃபேட் 😅

...

🤣🤣🤣🤣

*****

4, ஒரு எழுத்தாளரா ஆரம்பத்தில் இருந்து இறுதி வரைக்கும் கடைபிடிக்க வேண்டிய மனநிலை எதுவா இருக்கும் ?

நேர் விமர்சனங்களை ஏற்கும் அதே மனநிலை எதிர்மறை விமர்சனங்கள், கருத்துக்களிடமும் இருக்க வேண்டும்.

*****

6, விமர்சனம் என்பது எப்படி இருக்க வேண்டும்?

என்னைப் பொருத்தவரையில் கதையின் கருவை அப்படியே சொல்வதல்ல விமர்சனம். கதாபாத்திரங்கள் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கமும், கதை முடிந்தபிறகு உள்ள நம் மனநிலையுமே அந்தக் கதைக்கான விமர்சனம்.☺

*****

7, உங்கள் எழுத்தை உங்கள் உறவுகள் எப்படி எடுத்து கொள்கிறார்கள்...

ஆரம்பத்தில் வீட்டிலிருந்தவர்களுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. காகிதத்தில் ஏதோ கிறுக்குவதாக நினைத்துக்கொண்டார்கள். ஏன் இன்றும் அப்படித்தான்😒😒. ஆனால்,  என் கதைகளை வாசித்து என் மாதாஜீ கருத்து சொல்லும் அளவுக்கு நிலைமை இப்போது சரியாகியுள்ளது😅.

******

8, எனக்கு உங்க ஸ்டோரில் ரொம்ப பிடிச்சது காதல் போதை, அவங்களுக்கு செகண்ட் பார்ட் எழுதலாமே

செகன்ட் பார்ட் எழுதுவேனான்னு தெரியல. பட், மாயாவோட கேரக்டெர்ல கண்டிப்பா இன்னொரு காதல்கதை எழுத ஆர்வம் இருக்கிறது. ☺☺

*******

மிக்க நன்றி சகோதரி

ரொம்ப அருமையான பதில். தெளிவாக சொல்லியிருந்த விதம் அழகு.

மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐

நன்றி நட்புக்களே..

Comments