#எழுத்தாளர் அறிமுகப்படலம்
சீசன் இரண்டு
1 ) பெயர் : கார்த்திக்.. மிதுன் செல்ல பெயர் மாறி.. மிதுன ராசி.. அதனால் மிதுன் கார்த்திக்ன்னு சேர்த்து வச்சது..
ஊர் : அதிகம் இருந்தது பெங்களூர்..
பூர்விகம் : மதுரை/ஶ்ரீவில்லி..
படிப்பு : மொத்தம் நான்கு
டிகிரிகள்..
பணி: தனியார் துறையில் வேலை .
தளம் : பிரதிலிபி மட்டும்..
அமேசான் பெயர் மற்றும் லிங்:
விரைவில் தொடங்க இருக்கிறேன்..
தற்சமயம் எழுதி கொண்டிருக்கும் லிங்:
ஹோய் பொண்டாட்டி, ஹேய் புருஷா..
https://tamil.pratilipi.com/series/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE-uxkuqb5bnfrm?utm_source=android&utm_campaign=content_series_share
உங்களுடைய முதல் கதையின் பெயர்:
அன்புள்ள மான்விழியே!..
மொத்தம் எத்தனை எழுதியிருக்கீங்க :
மூன்று...
உங்கள் படைப்புகளின் பெயர்கள் :
முதல் கதை "அன்புள்ள மான்விழியே!".. (நன்றாக ஆரம்பித்து தவிர்க்க முடியாமல் தொடர்ந்து எழுத முடியவில்லை!..)
ஹோய் பொண்டாட்டி!, ஹேய் புருஷா!..
பிரம்மனின் பிழைகள்!..
https://tamil.pratilipi.com/series/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-2h8oyfrihfig?utm_source=android&utm_campaign=content_series_share
*****
உங்களைப் பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா :
ஒரு சாமான்யன் அவ்வளவே!.. கடவுளின் அருளால் ஒரு சில திறமைகளும், பாரம்பரிய குடும்பமும், நண்பர்களும், தோழமைகளும் கிடைக்கப்பெற்றவன்..
*****
உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா :
எனக்கு எழுதுவது புதிதல்ல.. ஆனால் கோர்வையாக இது போன்ற நாவல்கள் எழுதுவது என்பது கடினமான ஒன்று.. அதேபோல் வாசிக்கும் பழக்கம் பெரிதாக இல்லாத நபர் நான்..
கல்லூரிகளில் மிமிக்ரி, நாடகம் போன்றவற்றிற்கு ஸ்கிரிப்ட் எழுதி உள்ளேன்!..
அநேக ஜோதிட கட்டுரைகள் எழுதி உள்ளேன்..
எங்களது ஊர் மற்றும் பாரம்பரியம் குறித்து ஒரு சில குறிப்புகள் கட்டுரைகள் எழுதியுள்ளேன்!
…
வாவ்!! அருமை சகோ,
*****
நீங்கள் எழுத்துலகை தேர்ந்தெடுத்ததற்கான காரணம்:
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் முதன்மையான காரணம் என்னுடைய தந்தையாரின் மறைவு என்னுடைய வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது!.. அதிலிருந்து வெளியே வர நான் தேர்ந்தெடுத்தது இந்த எழுத்து உலகம்..
ஒரே ஒரு கதை மட்டும் வாசித்ததில்.. அது எனக்கு மிகவும் பிடித்தது.. அதன் பிறகு நான் இதுவரை முயற்சி செய்யாத ஒன்று, "நாவல் எழுதுவது"..
சரி!.. புதிதாக அதையும் முயற்சித்துப் பார்த்தால்..சற்று எனக்கான ஒரு மனநிறைவு கிடைக்கும் என்று.. நான் செய்த ஒரு சிறு முயற்சியே.. இந்த நாவல்கள் எழுதும் படலம் தொடங்க, முத்தாய்ப்பாய் அமைந்தது!..
*****
உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து கதை எழுதியிருப்பதாக சொல்லியிருக்கீங்க? அதைப் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா :
நிச்சயம் பகிர்ந்து கொள்ளலாம்!..
என்னுடைய நெருங்கிய நட்பு வட்டத்திலிருந்து சட்ட ஆலோசனைக்காக என்னிடம் வந்த இரண்டு நபர்கள். இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சாரம் கொண்ட பிரச்சனைகள். (Domestic Violence, Physical/Verbal Abuse)..
ஒரு கதையில் அந்த பெண்ணிடம் பிரச்சினை இருந்தது!.. மற்றொரு கதையில் அந்த ஆணிடம் பிரச்சனை இருந்தது.. அவர்கள் அனுபவித்த உடல் மற்றும் மன வேதனை எனக்கு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது!...
*****
2 ) மிமிக்ரி, பாடுவது, சமையல் கலைகள் உங்களது பொழுதுபோக்குகள் என்றால்… நல்ல கலா ரஞ்சகன் தானா நீங்கள் :
கலா ரசிகன், ரஞ்சகன் ரெண்டுமே தான் sis..
*****
யாரோட வாய்ஸ்ல எல்லாம் மிமிக்ரி பண்ணுவீங்க. நண்பர்கள், வீட்டில் யாரையாவது மிமிக்ரி பண்ணிய அனுபவம் இருக்கிறதா :
நாலாப்பு படித்துக்கொண்டிருந்த பொழுது.. ஏதோ நான் ஒரு வித்தியாசமான விஷயம் செஞ்சுட்டு இருந்தேன்.. கிளாஸ் ரூம்ல அதை பார்த்தவங்க.. அதை எல்லாத்துக்கும் முன்னாடி குரல் மாற்றிப் பேச சொன்னாங்க!..
குறிப்பா பெண்கள் sidela இருந்து என்னுடைய சக தோழிகள்,அந்த வாய்ஸ் பண்ணு, இந்த வாய்ஸ் பண்ணுன்னு குரல் வந்துச்சு.. இந்த மிமிக்கிரி கலைக்கு, இவ்வளவு வரவேற்பு இருக்கும் என்று அப்போதான் எனக்கு புரிந்தது.. அப்புறம் அப்படியே படிப்படியா நிறைய வாய்ஸ் பேச ஆரம்பிச்சேன்..
கிருபானந்த வாரியார், எம் ஆர் ராதாவில் ஆரம்பித்து அதுக்கப்புறம் விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், ரகுவரன் சிம்பு இன்னும் பல குரல்கள்..
…
வாவ்!! சூப்பர்👌👌👌👏👏👏
*****
3 ) ஆண்களில் பலர் திறமையான சமையல் கலை வல்லுனர்கள் இருக்க, இப்படி ஒரு கேள்வியை கேட்பது தவறு தான் ஆனாலும் உங்களிடம் கேட்கிறேன். நீங்கள் எப்படி சமையல் செய்ய கற்றுக் கொண்டீர்கள், என்னென்ன ஐட்டம் சுவையாக செய்வீர்கள். உங்களது சமயலை சாப்பிட்டவர்களின் பதில்களைப் பற்றி சொல்ல முடியுமா ? பேசுவாங்க இல்லயா?🤣🤣🤣:
நீங்க என்ன கேக்க வர்றீங்கன்னு எனக்கு நல்லா புரியுது sis..
இதுவரைக்கும் என் சாப்பாட்டை சாப்பிட்டுட்டு யாருக்கும் உசுருக்கு எந்த சேதாரமும் வந்தது இல்லை..
சின்ன வயசுல இருந்து சமையல் மிகவும் பிடித்த ஒன்று.. தெரியல.. அம்மா பாட்டி அவங்களை பார்த்தது..
சரி!. நமக்கு பிடித்ததை நாமே சமைச்சு சாப்பிடலாம் அப்படிங்கிற ஒரு எண்ணமும் கூட..
அப்படியே ஆரம்பிச்சேன்!.. பெங்களூரு போனப்புறம் ஒரு தனி கிச்சன் கிடைச்சது..அங்க அப்படியே சமைக்க ஆரம்பிக்க... எடுத்தவுடனே என்னுடைய தோழர் ஒருத்தர் பக்கத்திலிருந்து ஒரு சின்ன உருளைக்கிழங்கு பொரியல கூட அவ்வளவு பிரமாண்டமான பாராட்டினார்!.. அப்போது தான் "அந்த பையனுகுள்ள என்னமோ இருந்திருக்கு பாரேன்" அந்த மோமெண்ட்..
ஓரளவுக்கு அசைவ உணவுகள் சைவ உணவுகள் இரண்டுமே நல்லா செய்வேன்.. பிடித்தமான உணவு மட்டன் பிரியாணி!.. மீன்..
சைவம் : பால்கறி, சேனைக்கிழங்கு வறுவல்..
…
பிரமாதம்👌👌👌
*****
ஒரு கதை வாசித்த பின் எழுத வந்திருப்பதாக சொல்லி இருக்கிறீங்க. ஆனால் எப்படி எழுத்து நடை உங்களை சோதனை செய்யாமல் இருந்தது. நாம் பேசுவது போல எழுதலாம் ஈஸி தானே என்று எழுத வந்தீர்களா? அல்லது எழுத்து நடை நன்றாக வரும் என்ற தைரியத்தில் எழுத வந்தீர்களா :
எனக்கு எழுதுதல் புதியதல்ல.. நாவல்கள் எழுதுவது மட்டுமே புதியது..
நான் எழுத வந்த மனநிலையும் சூழ்நிலையும் வேறு..
ஈசியாக எழுதிவிடலாம் என்று நினைத்து வரவில்லை sis.. சற்று கடினமாக இருந்தாலும் அதை சமாளித்து எழுதலாம் என்றே எழுத வந்தேன்.. இங்குள்ள நல்ல உள்ளங்கள் அதற்காக உதவினார்கள்.. அதனால் சற்று நல்லபடியாக என்னுடைய கதை மெருகேற்றும் வாய்ப்பு கிடைத்தது..
….
நல்லது
*****
"ஹோய் பொண்டாட்டி ஹே புருஷா" இதென்ன வித்யாசமான பெயர்? இந்த கதை எழுதிய அனுபவம் மற்றும் கதையில் உள்ள ஸ்பெஷல் என்னவென்று சொல்ல முடியுமா:
நான் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தை ஹோய்.. இது கல்லூரி காலம் முதல் பயன்படுத்தி வருகிறேன்!.
ஒரு தலைப்பு என்று எண்ணிய போது என் மனதில் தோன்றிய ஒரே டைட்டீல் இதுவே.. ஆகையால் அதை வைத்து விட்டேன் sis..
இந்த டைட்டில் எனக்கு ஒரு ஸ்பெஷல் அந்தஸ்து வாங்கி கொடுத்தது.. அநேகர் இந்த டைட்டில் பற்றி என்னிடம் கேட்டனர்..
இந்த கதைக்கருவும் கொஞ்சம் ஸ்பெஷல் தான். இது முழுக்க முழுக்க என்னுடைய வாழ்க்கையை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.. சற்று புனைவும் சேர்த்து எழுதப்பட்ட கதையிது. அதை எல்லாம் தாண்டி பெண்களின் மாதவிடாய் பிரச்சனையான PMS/மூட்ஸ்விங் பற்றி எழுத ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது..
ஒரு ரொமாண்டிக் காமெடியாக ஆரம்பிச்ச ஒரு கதை.. பின் பெண்களின் வலிகளை எழுதுவதற்கு வாய்ப்பாக அமைந்தது கூடுதல் ஸ்பெஷல் தான்..
அதற்கு பெண்களிடன் கிடைத்த அந்த வரவேற்பு, எப்பவுமே மறக்க முடியாது..
ஒரு ஐந்து வெவ்வேறு கதைகள் எழுதிய ஒரு ரைட்டர்க்கு எந்தவித ஒரு வரவேற்பும், அன்பும் கிடைக்குமோ.. அது எனக்கு கிடைத்தது.. என் கதையை படித்த அந்த நல்ல உள்ளங்களுக்கு என்னுடைய நன்றியை இந்நேரத்தில் கூறிக்கொள்கிறேன்..
*****
4 ) உங்கள் படைப்புகளில் ஒன்று வாசிக்கும் ஆவல் எனக்கும் இருந்தது. ஆனால் தலைக்கு மேல் வேலை. சில நேரங்களில் சலிப்பு ஏற்பட்டு வாசிக்க முடியாமல் போய் விடுகிறது. தற்சமயம் எழுதி வரும் நாவல் பற்றி சொல்லுங்க, எத்தனை அத்தியாயத்தில் செல்கிறது எத்தனையில் முடியும் என்று :
மகிழ்ச்சி sis.. இங்கு சில நண்பர்களுக்கு என்ன பற்றி தெரியும்.. இரண்டு வருடங்களுக்கு முன்பு என் தந்தையாரின் மறைவு என்னுடைய வாழ்க்கையில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது அந்த சந்தர்ப்பத்தில் தான் இந்த கதை எழுத ஸ்டார்ட் பண்ணேன்.. அதனால வெவ்வேறு மனநிலை மாற்றங்கள். அதையெல்லாம் தாண்டி கிட்டத்தட்ட இந்த கதை முடியும் தருவாயில் வந்துவிட்டது!..
*****
உங்கள் பூர்விகம் பற்றி கதையில் எழுதியது உண்டுமா:
எங்க பூர்வீகம் ஸ்ரீவில்லிபுத்தூர் தான்.. ஆனா எங்க தாத்தா வேலை பார்த்தது, வீடு எல்லாமே மதுரையில் அழகர் கோவில்.. அதனால எங்க ஊரு ஆண்டாள் கோவில் ஆடிப்பூரம் திருவிழா ரொம்ப ஃபேமஸ்..
அத அப்படியே கண் முன்னே கொண்டு வரணும் அப்படிங்கிற ஒரு காரணத்துக்காக.. ஒரு ஃபுல் எக்ஸ்க்ளூசிவ் எபிசோட் "திருவிழா எபிசோடு" எழுதினேன்.
அப்படியே எங்க ஊருக்கு போனால் எப்படி இருக்குமோ அந்த அனுபவத்தை எழுத்து வடிவில் நான் பதிவு செய்தேன் . அது ரொம்ப ரொம்ப என்னுடைய வாசகர்களுக்கு பிடித்து ஒரு எபிசோட்..
*****
உங்கள் ஊரில் உள்ள ஸ்பெஷல் இடங்கள் பற்றி சொல்ல முடியுமா:
ஸ்ரீவில்லிபுத்தூர்ன்னா ஆண்டாள் கோவில் தான்.. அதுக்கப்புறம் காட்டழகர் கோயில் trekking பண்ணி போனா காட்டுக்குள்ள நல்ல ஒரு அனுபவம் கிடைக்கும்!..
அதுக்கப்புறம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், நாயக்கர் மஹால் அப்படியே போர் அடிச்சா விளக்கத்தூண் போய் ஒரு ஜிகர்தண்டாவை போடலாம்!..
அப்புறம் எங்கு திரும்பினாலும் கோவில்கள், நல்ல மனுஷங்க நல்ல சாப்பாடு கிடைக்கிற இடம் மதுரை தான்.. தூங்கா நகரம் அதுவும் ஃபேமஸ் தான்.
*****
5 ) நான்கு டிகிரி வாங்கும் அளவிற்கு படிச்சிருக்கீங்க அப்போ திறமைசாலி தான். உங்களது கல்லூரி கால அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா:
படிப்புக்கும் திறமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை sis.. naan ஒரு நார்மல் ஸ்டுடென்ட் தான்.. கல்லூரி காலம் ரொம்ப மறக்க முடியாத ஒரு காலம் தான்..
பாக்கெட்ல பத்து பைசா காசு இல்லனாலும் மனசுல அவ்வளவு மகிழ்ச்சி இருக்கும்.. நாளை பத்தின கவலை கிடையாது..
ரத்தின சுருக்கமா சொல்லனும்னா படிக்கறதை தவிர எல்லா வேலையும் காலேஜ்ல பண்ணி இருக்கோம் . பாட்டு பாடி இருக்கேன், மிமிக்ரி பண்ணிருக்கேன்.. பட்டிமன்றம் அப்படி இப்படின்னு பரிசு வாங்கி குவித்திருக்கேன்..
நான் எல்லாத்தையும் சிரிக்க வைக்கிற ஒரு ஆளு.. ஆனா என்ன சிரிக்க வைக்கிற ஒரு நபர் என்னுடைய நண்பன் அன்புதான் என்னுடைய கல்லூரி காலத் தோழன்.. இப்ப வரைக்கும் என் கூட இருக்கிறான்..
அவனை ஒரு கேரக்டரா வைத்து என்னுடைய கதைகளை இப்போவும் எழுதிக்கிட்டு இருக்கேன்.. நண்பேன்டா!..
ஒரு எபிசோட் போடுற அளவுக்கு content irukku sis.. போய்ட்டே இருக்கும்..
*****
ஒரு லீகர் அட்வைஸராக இன்றைய சமூகம் பற்றி சொல்ல முடியுமா.
சமூகம் எப்பொழுதுமே ஒரு பரிணாம வளர்ச்சியுடன் அதுபாட்டுக்கு பெருகிக்கொண்டே இருக்கும்.. அதுக்கு எந்த விதமான அணையும் கிடையாது.. ஆனால் நாம அந்த சமூகத்தோடு எப்படி வாழவேண்டும்..
அதிலுள்ள நெளிவு சுளிவு என்ன அதோடு எப்படி நம்ப மேட்ச் ஆகலாம் அப்படிங்கற விஷயத்தை கத்துக்கிட்டா!.. கண்டிப்பா சமூகத்தில நாமும் முன்னேறி ஜெயிக்கலாம்..
…
உண்மைதான்
*****
ஆண் எழுத்தாளர்கள் மட்டுமே திறமை சாலிகள் அல்ல பெண்ணும் உண்டு … ஆனால் எதற்கிந்த பாகுபாடு? ஏன் பெண் எழுத்தாளர்களை தாக்கி ஒரு சிலர் பதிவிடுகிறார்கள் :
கலைக்கு பாலினம் கிடையாது.. ஆணும் பெண்ணும் யார் வேண்டுமானாலும் எழுதலாம்.. அவரவர் திறமையும், அவரவர் ரசனையும் பொருத்தே கலைநயம்..
என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால், இந்த எழுத்துலகில் பெண்ணுக்கு பெண்தான் எதிரியாக இருப்பதாக தெரிகிறது..
அதான் இங்கே முதலில் ஒரு பெண்ணுக்குத்தான் ஒரு பெண்ணைப் பற்றிய புரிதல் வேண்டும் என்று நினைக்கின்றேன்.. ஒரு பெண் என்று ஒரு சக பெண்ணை நன்றாக வழிநடத்தி, அவர்களுக்குள்ளே புரிதல் ஏற்படும் போது, இந்த நிலை மாறும்..
ஆணோ, பெண்ணோ பெற்றெடுப்பவள் ஒரு பெண் தான்.. ஆகையால் அங்கிருந்து அந்த புரிதலும், அந்த மரியாதையும் கற்றுக்கொடுத்து வருமாயின்.. ஒரு ஆணின் கண்ணோட்டத்தில் ஒரு பெண் நிச்சயம் போற்றப்படுவராய் மாறுவார்கள்..
….
கேள்விக்கான பதில் எங்களையே யோசிக்க வைப்பதா?😂😂😂
****
6 )அதென்ன மீம்ஸ் மிதுன் ? மீம்ஸ் போட்டு கலக்குவதில் மன்னனா நீங்கள்?
விளையாட்டாக ஒரு மீம் உருவாக்கினேன்.. அதற்கு கிடைத்தது ஆதரவில்லை பேராதரவு.. அதிலிருந்து மக்களை சிரிக்க வைப்பதற்காகவும், பர்த்டே வாழ்த்துக்களுக்கும் மீம்ஸ் கிரியேட் செய்ய ஆரம்பித்து.. அதிலிருந்து மக்களை சிரிக்க வைத்ததற்காக எனக்கு கிடைத்த சிறப்பு பட்டம், அன்பு பட்டம் "மீம்ஸ் மிதுன்".. நான் வாங்கிய டிகிரியை விட இது ஸ்பெஷல் தான் sis..
*****
உங்களுக்கு முகநூலில் நிறைய நட்புகள் கிடைத்திருக்கிறார்கள். முதலில் நானும் உங்கள் நட்பில் இருந்தேன். பிறகு எழுத்தின் மீதான ஆர்வத்தில மீம்ஸ் போஸ்டை கவனிப்பதில்லை. உங்கள் நட்பு வட்டாரத்தைப் பற்றி சொல்லுங்க :
ஒரு புது ஆளா நான் இங்கே வந்தவன் எனக்கு யாரையும் தெரியாது..
என்னோட மீம்ஸ் வச்சு நான் நிறைய பேரோட பேசியிருக்கேன்!. அதுக்கப்புறம் நான் பாடினாலும் சரி, சமையல் பதிவுகளை பதிவிட்டாலும் சரி.. மீம்ஸ் போட்டாலும் சரி.. கவிதை எழுதினாலும் சரி... கதை link குடுத்தாலும் சரி..
எதுனாலும் ஏதாவது ஒரு வகையில் அவங்க என்னை ஊக்குவிச்சுகிட்டே இருப்பாங்க! அவன் கொடுத்த அந்த அப்பலாஸ் தான், மிதுன் கார்த்திக் அப்படிங்கற ஒரு தனி அடையாளம் எனக்கு கிடைச்சது..
அன்பால சேர்ந்த கூட்டம் இது..🙏😊..
*****
முகநூலில் உங்களுக்கு கிடைத்த மறக்க முடியாத அனுபவம் என்ன :
இதுவரை வாழ்க்கையில் சில விஷயங்கள் செய்ய முடியாமல் இருந்தது.. அது எல்லாத்தையும் எனக்கு எக்ஸ்பிரிமெண்ட் பண்ணி, அதுக்கு பரிசு, அப்பிளாஸ் எல்லாமே கிடைத்த ஒரு பிளாட்பார்ம் குறிப்பிட்ட இந்த முகநூல் அக்கவுண்ட் தான்..
*****
7 ) உங்களது படைப்புகளை வாசித்த வாசகர்களின் கருத்து பற்றி சொல்ல முடியுமா:
வாசகர்கள் என்பதை விட, என்னுடைய செல்லகுட்டிஸ் தங்கம்ஸ் அப்படின்னு தான் சொல்லுவேன் நான்..
என்னுடைய வாசக நண்பர்கள் எல்லாம் ரொம்ப தூரமா இருக்க மாட்டாங்க.. ரொம்ப உரிமையா கலாய்பாங்க.. கோவ படுவாங்க..
அதுக்கப்புறம் எதுனாலும் இன்பாக்ஸ்ல வந்து அவங்க எமோஷனல் ஷேர் பண்ணி இருக்காங்க!.. எவ்வளவு தாமதமாக எபிசோடு போட்டாலும் பொறுமையா படிப்பாங்க!..
பாசத்தில என் தாய ஓவர்டேக் பண்ணிட்டாங்க!.. நிஜமான பாசக்கார பய புள்ளைங்க அவங்க தான்.. ரைட்டர் மிதுன் அடையாளம் தந்தவங்க அவங்க தான்..
குறிப்பா, பிரதிலிபியில் எல்லா வாசகர் செல்லம்ஸ், எழுத்தாளர்கள் பிரமிளா பரசு, கௌரி கலா, இன்பா செல்வம், கோகுல பிரியா, ருத்விகா, நான்சி மேரி, பிரஷா,ஜானு நவீன், காஞ்சனா அக்கா, வெண்ணிலா ராஜன், பொம்மு இவங்க எல்லாருமே எனக்காக என் கதையை படித்து கருத்துக்களை தெரிவித்தவங்க.. 🙏🙏
இன்னும் அந்த ஸ்டிக்கர், coins அதெல்லாம் கொடுத்து என்னை ஊக்குவித்த எல்லாருக்கும் நன்றி
*****
உங்கள் நட்புகள் மற்றும் வாசகர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது:
முதல்ல நான் என் செல்லம்ஸ் கிட்ட ஒரு மன்னிப்பு கேட்க கடமை பட்டிருக்கேன்.. இதுவரை அலச்சியமா நான் அப்டேட் போடாம இருந்ததில்லை. தவிர்க்க முடியாத காரணத்தினால் தான் இப்படி.. இருந்தாலும் அவர்களுடைய தரப்பில் நிச்சயம் ஒரு அதிருப்தி இருக்கும்..ரெண்டு திட்டு திட்டிட்டு.. வழக்கம் போல என்னை உங்க விட்டு பிள்ளையா நினைச்சு மன்னிச்சிடுங்க!..😁😁
*****
பிரபல முன்னணி எழுத்தாளர்களில் உங்கள் மனதைக் கவர்ந்தவர்கள்:
எனக்கு நிஜமாக படிக்கும் பழக்கம் கிடையாது.. நான் படித்தது மிக சில புத்தகங்கள்/கதைகள் மட்டுமே.. இவர்கள் பிரபலமா அல்லது முன்னணியா என்று எனக்கு தெரியாது.. ஆனால் எனது மனதிற்கு பிடித்த, நான் கதை படித்த எழுத்தாளர்கள் இவர்கள் கார்த்தி சௌந்தர், கொடி சுந்தர், இன்பா செல்வம், ராஜி கருப்பசாமி, எமி தீப்ஸ், சிராஜ்நிஷா, ஜனனி நவீன், பொம்மு..
*****
8 ) உங்கள் படைப்புகளை வாசிப்பவர்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது :
ஹோய், ஹேய் - லவ் அண்ட் லவ் ஒன்லி கதை, பீரியட்ஸ் டைம்ல எமோஷன்ஸ், அன்பு, நட்பு, இது மட்டும் தான் இருக்கும்.. ரொம்ப அழுத்தம், வர்ணனைலாம் இருக்காது.. 🙏..
பிரம்மனின் பிழைகள் - இது இரண்டு உண்மை கதையை மையமாக வைத்து எழுதப்பட்ட ஸ்டோரி ..கொஞ்சம் மனதை திடமாக வச்சுகிட்டு தான் படிக்கணும்.. ஆனா முடிவு கண்டிப்பாக ஹாப்பி எண்டிங் தான்..
Delayed marriage is better than drastic marriage.. இதான் கரு..
இதுல அழுத்தம், விறுவிறுப்பு எல்லாம் இருக்கும் .
மாதவிடாயோ!.. நீ மாதரை விடாயோ!..
இது என்னோட வாழ்க்கை அனுபவ குட்டி கதை.. நிச்சயம் எல்லா மகளிருக்கும் பிடிக்கும் கதை..
எல்லாம் சொல்லியாச்சு sis…
******
நண்பர்களின் கேள்விகள்:
டான் :
அதிக பெண் நண்பர்களை கொண்ட நீங்கள்... சிங்கப்பெண்கள் என நினைக்கும் ஒரு ஐந்து பெண்களைப் பற்றிச் சொல்லுங்கள்...
எங்க வீட்டில இருந்து ஸ்டார்ட் பண்றேன் .எங்க அக்கா, எங்க அம்மா தான் என்னோட முதல் சிங்க பெண்கள் .
மற்ற பெண்களை சிங்க பெண்களாக பாவிக்க, என்னை வளர்த்தது மேற்சொன்ன அந்த இருவரும்தான்..
அப்புறம் ஒரு குடிகாரன்/பொறுப்பு இல்லாதவன் அல்லது உடல் ஊனமுற்றவர் இவங்களோட குடும்பம் நடத்தும் அந்த பெண் சிங்கப்பெண்..
மிக இளம் வயதில் திருமணம் செய்து கொள்ளும் பெண்களும், இளம் வயதில் கணவனை இழந்த பெண்களும்...
எல்லாவற்றுக்கும் மேலாக மாதம் மூன்று நாட்கள் பீரியட்ஸ் வலியையும் மற்றும் பிரசவ வலியை தாங்கிக் கொண்டு அலுவலகம்/வேலைக்கு சென்று பிறருக்காக வாழும் அனைத்து பெண்களும் சிங்க பெண்களே!..
*****
எப்பொழுது எங்களுக்கு திருமணம் சாப்பாடு போட போகிறீர்கள்? 🥰
விரைவில் டான்... உங்க wishes உடன்..
*****
Dikshita Laxmi
நீங்கள் எந்த மாதிரியான கதைகளை வாசிப்பீர்கள்.
ரொமாண்டிக் காமெடி, crime திரில்லர்..
****
பொன்னியின் செல்வன் கதை வாசித்து இருக்கிறீர்களா? அப்படி வாசித்து இருந்தால் அதில் பிடித்த கதாபாத்திரம் யாரு? எதனால்?
முழு கதை கரு கொஞ்சம் தெரியும்.. சிறிது வாசித்து உள்ளேன் .
அருள்மொழி வர்மன் தான்..
அரசனாக, தந்தையாக, சகோதரனாக ஒரு ராஜ தந்திரியாக மிகவும் பிடிக்கும்..
*****
கோவளர் சுரேன் :
Men writers unga romba kammi... Avangaluku enna solla vitumburinga..?
எழுத்துக்கு ஆண், பெண் பேதம் இல்லை ப்ரோ..
*****
செவ்வந்தி துரை :
உங்களுக்கு பிடிச்ச ஜானர் எது.? எதிர்காலத்தில் எந்த வகையில் அதிக கதைகளை எழுதலாம்ன்னு இருக்கிங்க.?
Romantic காமெடி, கிரிமினல் திரில்லர்..
எல்லா விதமான content என்னிடம் உண்டு சகி...
சஸ்பென்ஸ் திரில்லர் தான் எழுத ஆசை..
*****
Adv சரண்யா, சரண்யா விசு, இதழிகா :
எது உங்களை எழுத தூண்டியது:
தந்தையின் மரணம் தந்த ப்ரேக், அதை மறக்க ஒரு கதை படிக்க வந்து, பின் எழுத நேரிட்டது...
நம்ப interview ரொம்ப லெந்த் ஆக போய்டுச்சுன்னு் நினைக்கிறேன்.. இதுவரை பொறுமையாக படித்த எல்லா அன்பு உள்ளங்களுக்கும் நன்றி!.
Oru தனி முயற்சி எடுத்து, அறிமுக படலம் நடத்தும் ஜோதி அக்காவிற்கு என் வாழ்த்துகள், நன்றிகள்
இப்படிக்கு,
பாசக்கார பயபுள்ள
மிதுன் கார்த்திக்
*****
மிக்க நன்றி சகோதரா🙏🙏🙏
உங்களது பதில்கள் அனைத்தும் மிகவும் அருமையாகவும், ரசனையாகவும் இருந்தன. மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கவும், எதிர்காலத்தில் உங்களது கனவுகள் யாவும் கை கூடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐
Nice and interesting interview answers sago... I have seen you in pratilipi but haven't read ur stories. Will try to read. Congratulations 👏🏻
ReplyDeleteThanks Mithra maa. Sure ah padinaga pa.. 😊🙏
Deleteஅருமை சகோ....
ReplyDeleteதங்களின் பதில்கள் அனைத்தும் யதார்த்தமாகவும் எளிமையாகவும் இருக்கிறது
தங்களின் கதைகள் போலவே...
பிரதிலிபி உங்கள் கதை HPHP ஹோய் பொண்டாட்டி ஹேய் புருஷா படித்திருக்கிறேன். மிகவும் நன்றாக இருந்தது பெண்களின் மனதினை படம் பிடித்து காட்டுவது போல் ..பெண்கள் தன்னைச் சுற்றி இருக்கும் ஆண் எவ்வாறு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் பெண்ணின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் ஆண் கதாபாத்திரங்கள்....
தந்தை, சகோதரன்,நண்பன்,கணவன்..
மென்மையான காதல்கதை .....
தங்கள் எழுத்து பயணம் தொடர வாழ்த்துக்கள்.....
ரொம்ப நன்றி மா. கண்ணுவேர்க்குது..நிச்சயம் ஒரு ஹாப்பி எண்டிங் ஆ கதை முடிப்பேன்.. 🙏🥺😊
Deleteஅருமையான பதில்கள் கார்த்திக். உன் கதையை படிச்ச தில்லை, சீக்கிரமே படிக்கிறேன். வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்
ReplyDeleteயாருனு தெரில.. நன்றிங்க மா.. கண்டிப்பா படிச்சுட்டு சொல்லுங்க..
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅருமையோ அருமை
ReplyDeletePaara. Marigold epo padicha.. thanks da
Delete