#எழுத்தாளர் அறிமுகப்படலம்
சீசன் இரண்டு
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய அறிமுக எழுத்தாளர் தீபா செண்பகம் அவர்களைப் பற்றிய நேர்காணல் இதோ :
பெயர் : தீபா செண்பகம் .
தீபா வீட்டில் கூப்பிடும் பெயர் , செண்பகம் - கணவர் பெயர் செண்பகநாதனில் முன் பாதி . இது எழுத்தாளராவோம் என வைத்த பெயரெல்லாம் கிடையாது. மெயில் ஐடி உருவாக்க வைத்த பெயர். அதுவே அடையாளம் ஆகிவிட்டது.
சொந்த ஊர் : மதுரை
படிப்பு : dipolomo in fashion designing. MA-Hindhi
பணி : தையல் , ஹிந்தி பயிற்றுனர்.
(கதை எழுத ஆரம்பித்த பின், அவை பின் சென்று விட்டன. எல்லோரும் பயன் பெரும் விதமாக அது சம்பந்தமான புத்தகமும் போட ஆசை)
தளம் : பிரதிலிபி, தமிழ் நாவல் ரைடர்ஸ் , வைகை தமிழ் நாவல்
Blog ; https://senbagadeepam.blogspot.com/
அமேசான் பெயர் & லிங்: தீபா செண்பகம்
https://www.amazon.in/deepa-senbagam/e/B08NHMXC3Y%3Fref=dbs_a_mng_rwt_scns_share
தற்சமயம் எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் பெயர் & லிங் :
ப்ரதிலிபில ரீரன்.
https://tamil.pratilipi.com/user/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2z0009c7wm?utm_campaign=myprofile_share&utm_source=android
உங்களது முதல் படைப்பின் பெயர் : மனதின் வார்த்தைகள் புரியாதோ.
மொத்தம் எத்தனை படைப்பு எழுதியிருக்கீங்க : 7 தொடர்கதைகள், 1 நாவல் , 2 குறுநாவல் , 1 கவிதை தொகுப்பு.
உங்களுடைய படைப்புகளின் பெயர்கள் :
1.மனதின் வார்த்தைகள் புரியாதோ
2. தளிர் மனம் யாரைத் தேடுதோ.
பாண்டிக் குடும்பம் கதைகள் .
3. மனச தாடி என் மணிக்குயிலே
4. தான்வி கல்யாண வைபோகமே
5. மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே
சகாப்தம் போட்டி கதை
6. ஹாசினி சந்திரா
7. சிந்தா-ஜீவநதியவள்
முதல் பதிப்பு புத்தகம்
8. நீயே எந்தன் மகளாய் -
குறுநாவல்
9. ஆதித்தன் காதலி
10. மங்கை மான் விழியாள்
கவிதை தொகுப்பு
எண்ணங்களின் எழுத்துக் கோர்வை.
உங்களது படைப்புகள் இதுவரையில் புத்தமாக மாறி இருக்கிறதா , இருந்தால் பதிப்பகத்தின் பெயர் தொலைப்பேசி எண் :
நீயே எந்தன் மகளாய்…
வைகை பதிப்பகம்.
புத்தகங்களை ஆன்லைனில் வாங்க
9486802859 94444 62284
இந்த இரண்டு எண்களையும் பயன்படுத்தலாம்.
*****
உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:
புதிதாக எதையாவது முயற்சித்துக் கொண்டே இருப்பவள். எதுவாக இருந்தாலும் அதன் அடி வரை தொட்டுவிட்டு வருவேன். தையல், எம்பிராய்டரி, பெயின்டிங், ஹிந்தி, சைவ சித்தாந்தம் , இப்போது கதை எழுதுவது எல்லாமே.
என் கணவர் - செண்பகநாதன் , கல்லூரி பேராசிரியர். என் கதைக்கு கிடைத்த வாசக விசிறிகளை விட, அதிக மாணவ விசிறிகளை கொண்ட நல்லாசிரியர். ஆசிரியர் தினமோ, அவர்களது பிறந்த தினமோ, அலைபேசி திணறும் விதமாக வாழ்த்துக்கள் வரும்.
எனது எந்த முயற்சிக்கும் இது வரை தடங்கலே சொன்னது இல்லை, எதுவாக இருந்தாலும் நானே கற்றுக்கொண்டு செய்ய வேண்டும் என்பார்கள்.
ஒரு மகன்- ஆடிட்டர் ஆகும் இலட்சியத்தோடு ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறான்.
ஒரு மகள்- கல்லூரி இறுதியாண்டு , சோசியாலஜி மாணவி.
பெரிய பிள்ளைகள் இருப்பதை வைத்து , என் வயதை கணக்கு போடாதீங்க.
….
வேகமா சொல்லிட்டீங்க. அருமை
*****
உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:
இந்த டிஜிட்டல் நாவல் உலகம் , மிகவும் தாமதமாகவே எனக்கு அறிமுகமானது, இப்படி கதைகள் வருமென்பதே எனக்குத் தெரியாது.
2011 முதலே, indus ladies என்ற ஆன்லைன் கம்யூனிடியில் , ட்ரான்ஸ்லிட்டரேட் வைத்து கவிதைகள் எழுதிய ஆள் நான். "கவிதையில் கண்ணன் கதை" என சூர்தாஸ் கவிதைகளை மொழிபெயர்த்து உள்ளேன். அப்போதே blog ஆரம்பித்து எழுதி இருக்கிறேன். எங்கள் குடும்பம் , பழனிக்கு காவடி எடுத்த நிகழ்வை, நினைவுகளும், பகிர்வுகளும் என மற்றொரு blog ல் பதித்தேன், அது தான் முதல் முயற்சி. Fb ல நிறைய கவிதை எழுதி கிறுக்கினேன்.
எழுத்து என்பது இறை வரம், என் 25 ஆண்டுகால வாசிப்பின் தாக்கம். எந்த ஊருக்கு போனாலும் மளிகை கடை தேடுவது போல், லைப்ரரியை தேடுவேன். புகழ் பெற்ற ஆசிரியர்கள் நூல்களையும் தாண்டி , அரசு நூலகத்தில் தான் மொழிபெயர்ப்பு நூல்கள் முதல் எல்லாமே கிடைக்கும்.
எங்கள் வீடுகளில் , வாரப்பத்திரிகைகளில் வரும் தொடர்களை எடுத்து பைண்டிங் செய்து வைப்பார்கள். அப்படி வந்த குடும்பத்தில் வாசிப்பு பெரிய விஷயமில்லை தானே. ஆனால் நானே எழுத்தாளர் ஆனது எதிர்பாராதது. என் அம்மா மிகப் பெரிய கதை பைத்தியம், அதே போல சினிமா கதையை , அந்த பாட்டு முடிவதற்குள் சுவாரசியமா சொல்லி முடிப்பாங்க. ஒருவேளை அந்த ஜீன் தான் போலும். நான் எழுதுவதை பார்க்க , என் அம்மா இல்லை என்பது தான் எனக்கு மிகப் பெரிய வருத்தம். இருந்திருந்தா என் அம்மா தான் எனக்கு முதல் வாசகியாக இருந்திருப்பார்கள்.
…
அருமையாக சொன்னீங்க. எங்க அம்மாவும் அப்படி தான் ராணி புத்தகத்தில் வரக்கூடிய தொடர்களை தனியாக கிழித்து வைத்து 4 பெரிய புத்தகமாக பைண்ட் பண்ணி வச்சுருந்தாங்க. சரியான கதை பைத்தியம் தான். உங்கள் வீட்டைப் போலவே🙂🙂🙂
*****
பெருங் கதைகளாக எழுதி வரும் நீங்கள் அதற்கான கதைக்களத்தை எப்படி தேர்வு செய்கிறீர்கள் :
“எங்க குடும்பம் ரொம்ப பெரிசு, பிள்ளை குடிகளோ பத்து தினுசு. “ என ஒரு பாடல் வரி வரும், அதுபோல் குடும்ப கட்டமைப்பில் வளர்ந்ததால், கதையையும் அப்படியே கற்பனை செய்து விடுகிறேன்.
*****
இத்தனை அத்தியாயம் மற்றும் வார்த்தைகளுக்குள் நாவலை எழுதிமுடிக்க வேண்டும் என்று எழுதுவதில்லையா :
இல்லை, எழுதிட்டே போவேன். 40 எபி ஒவ்வொவொரு அத்தியாயமும் 3000 வார்த்தைகளில் எழுதினாலும் அதுக்குள்ள முடித்துவிட்டீர்களேன்னு வாசகர்கள் கேட்பாங்க. கதாபாத்திரங்கள் அதிகமாக இருப்பதால், பதிவு நீளமாக போகிறது. ஆரம்பத்தில் வரும் கதாபாத்திரம் கடைசி வரை வரும், அதுவும் ஒரு காரணம்.
என் கணவர், கல்கிக்கு பிறகு நீ தான் இவ்வளவு பெரிசா எழுதியிருக்கேன்னு கேலி செய்வார்கள்.
போட்டி கதைகள் மட்டுமே 60000 வார்த்தைகளில் எழுதி முடித்திருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் , 40000 வார்த்தைக்குள் இருந்தால் தான் புத்தகம் போட எளிது , என்பதே இப்போது தான் தெரியும். இனி அந்த முயற்சியும் தொடரும்.
…
ஆமாம் சிஸ்டர். கதாபாத்திரங்களை குறைத்து கதைகளை எழுத திட்டமிடுங்கள். சிறிய வடிவில் தொடர்கதை கிடைகும் . நம் புத்தகம் விற்பனை ஆகும் போது வாங்குபவரைப் பற்றியும் பார்க்க வேண்டும் இல்லையா??
*****
ஒரு சில தளங்களில் 30K 40 k அளவுகளில் மட்டுமே தங்களுடைய படைப்புகளை எழுத வேண்டும். அப்போது தான் புத்தகம் போட்டு தருவோம் என்றால் அதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க. உங்களால் இந்த கோரிக்கைக்கு தகுந்தபடி கதை எழுத முடியுமா:
எழுதிட்டேன், அதுவும் சாத்தியமாகி விட்டது. நம் வழக்கமான பாணியிலிருந்து , வார்த்தைகளை குறைத்து தரவேண்டுமெனில், அதற்கேற்ப கதை கருவை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு பக்க கதை முதல் , பெரும் தொடர் வரை எல்லாமே எழுதலாம், கொஞ்சம் மெனக்கெடனும் அவ்வளவு தான்.
…
நிஜம் தான்
*****
பிரதிலிபி தளத்தில் எழுதி பதிவிடுவதற்கும், தளத்தில் எழுதி முகநூலில் பதிவிடுவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன:
பிரதிலிபியில் ,புதுமுக எழுத்தாளர் கூட எளிய முறையில் பதிவேற்றலாம். என்னை எழுதத் தூண்டியதே பிரதிலிபி தான். விமர்சனம் உடனே வரும், அது புது எழுத்தாளருக்கு ஊக்கம் தரும். விளம்பரம் செய்ய தேவை இல்லை.
தளத்தில் எழுதுவது , மற்றொரு வாசகர் குழுவுக்குள் செல்வது போல் தான். அங்கு மெல்ல தான் உங்கள் வாசகர்களை பெற இயலும். பொறுமை வேண்டும். எங்கே இருந்தாலும் எழுத்தாளர், எழுத்தும் நடையும் பிடித்திருந்தால் தேடி வாசிப்பார்கள்.
*****
பிரதிலிபி எழுத்தாளர்களுக்கு அதிகப்படி பாலோவர் இருப்பது போல, முகநூலில் பதிவிட்டு வருபவர்களுக்கென்றும் தனி பாலோவர் உள்ளனர் இரண்டில் ஒன்று மட்டுமே ஆரம்பகாலத்தில் சாத்தியம். ஆனால், கருத்துகள் , விமர்சனங்கள் கிடைக்க வில்லை என்று வருத்தப்படுவது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க :
எனக்கு , அதிர்ஷ்ட வசமாக இரண்டுமே அமைந்தது. பிரதிலிபியில் தான் முதலில் எழுத ஆரம்பித்தேன், தளங்கள் இருப்பதே , மற்றொரு எழுத்தாளர் போட்ட போஸ்ட் வைத்து தான் கண்டு பிடித்தேன். அப்படி வந்தது தான் TNW , அதில் கதை படிக்க கூட தெரியவில்லை. கதை பதிவேற்ற இரு முறை முயன்று தோற்றேன். டிஜிட்டல் குரு -மகிழ் குழலி தான் , கற்றுக் கொடுத்தார்கள்.
Tnw யாருடைய தளம் என்பதெல்லாம் தெரியாது. அட்மினுக்கு மெயில் போட்டேன், எழுத திரி கொடுத்தார்கள். கிண்டிலில் போட வேண்டும் என்றால் திரியை நீக்கி விடுவார்கள். அதன் பிறகு தான் அது மல்லி மேம் சைட் என்பதே தெரியும். நன்றி மல்லிகா மணிவண்ணன் மேம்.
Tnw வில் என் கதைக்கான தொடர் ஆதரவாளர்கள் உண்டு.
பானுமதி ஜெயராமன், மேரி மெட்றாஸ், இன்னும் வாசகர்கள் லிஸ்ட் கூடும். இவர்கள் இருவரை மட்டும் குறிப்பிட காரணம், மேரி சிஸ் , ரிவியூக்கள் இப்பொழுது எல்லாம் வருவதே இல்லை. I hope she is fine.
பானு சிஸ் , எனக்கு அவர்கள் முகம் கூட எனக்குத் தெரியாது. ஆனால் தொடர்ந்து அவர்கள் கொடுத்த ஊக்கம். அவர்கள் மறைவிற்கு பின்னும் அவர்களை நினைக்க வைக்கிறது.
I miss you bhanu sis.
மகிழ் குழலி, ஆரம்பத்தில் ஒரு ரிலே கதைக்காக இவர்களோடு சேர்ந்தேன், அது முதல் மகிழ் எங்கு சென்றாலும், என் கையை பிடித்து கூட்டிச் செல்வார். உங்களுடைய வழிகாட்டி, உங்களை விட வயதில் மூத்தவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. விஷயம் தெரிந்திருந்தால் போதும்.
மின்னிதழ் ,தளம், பதிப்பகம் எல்லா இடங்களுக்கும் என்னை கொட்டிச் செல்லும் கிருஷ்ண குழலி தான் மகிழ். இப்போது வைகை பதிப்பகத்தில் எனது முதல் பதிப்பு புத்தகமும் அவரால் சாத்தியமானது.
வைகை - வதனி . வைகை தமிழ் நாவல் எனப் பெயர் பார்க்கவும், நதி பரிட்சயமானதே என பார்க்க பரிட்ச்சயமானவர் வதனி. ஒரு புக் பப்ளிஷ் செய்வதற்குள் பாடாய் படுத்தி விட்டேன். லட்சம் வார்த்தையில் எழுதுபவளை , முப்பதாயிரம் வார்த்தைகளில் எழுத வைத்து, என்னால் எந்த வகை நாவல்களும் எழுத முடியும் என நம்பிக்கை தந்தவர். நன்றி வதனி சிஸ் .
*****
நமது படைப்புகளில் வரக்கூடிய கவிதை வரிகள் காட்சிக்கு பொருத்தமாக இருக்குமா? அல்லது அதற்கு ஏற்ப வரக்கூடிய சினிமா பாடல்கள் பொருத்தமாக இருக்குமா :
சினிமா பாட்டோ, என் கவிதையோ அல்லது பண்டை நூல்களோ, கிராமிய பாடலோ பொருத்தமானதை கையாளலாம் . சினிமா பாட்டு ரீச் முதல் வரிகளை எழுதினால் ரீச் அதிகம் அவ்வளவே. படம் போது , பாட்டை ஸ்கிப் செய்வது போல் வாசகர் அதை கடந்து விடுவார்கள். நமக்கு அடுத்து எழுத கன்டென்ட், உற்சாகம் இதற்காகத்தான் அவை.
*****
ஒரே வகையான கதையம்சம் உடைய படைப்புகளை கொடுப்பவர்கள், வாசிப்பவர் சலிப்பின்றி படிக்க என்ன செய்ய வேண்டும் :
சிறு, சிறு சம்பவங்கள் உங்களை சுற்றி நடப்பதை , சமயோசிதமாக தரவேண்டும். எதார்த்தம், மிகைப்படுத்தல், பென்டஸி எதுவாக இருந்தாலும் வாசகரும் அதற்குள் fix ஆக வேண்டும்.
கர்ணன் கதை தான் தளபதி. மணிரத்னம், ரஜினி, மம்முட்டி, இளையராஜா, அரவிந்த் சாமி , கேமரா இப்படி எல்லாமும் சேர்ந்து புது ருசியை தரவில்லையா. ஏன் ராமாயணம், மகாபாரதமே எத்தனை முறை எழுதப் பட்டு, எத்தனை முறை திரையில் வந்துள்ளது.
…
நிஜம்தான். தளபதி எனக்கு ரொம்ப பிடித்த படம்.
*****
பேன்டஸி, கிரைம், திரில்லர் வகை கதை எழுதிய அனுபவம் இருக்கிறதா :
இன்னும் இல்லை.
*****
வரலாற்று நாவல்கள் எதனால் என்றும் முதல் இடத்தை பெறுவதாக நினைக்கிறீங்க :
கல்கியும், சாண்டில்யன் எழுத்தும் ஏற்படுத்திய தாக்கம். ராஜா எனும் போது கிடைக்கும் மாய சித்திரம், இன்றைய தொழில்நுட்பம் இல்லாமல் , அன்றைய தொழில் நுட்பம், வாழ்க்கை முறையை அறியும் ஆர்வம். நாம் எப்போதுமே இறந்த காலத்து பெருமையில் வாழ்பவர்கள். கற்பனையில் நான் அந்த ராஜா, ராணியாக மாறிவிடுவோம்.
*****
எதனால் நீங்கள் எழுத்து துறையை தேர்வு செய்தீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா :
எழுத்து, எழுத ஆரம்பித்த பிறகு , என் துறையாக மாறி உள்ளது. என் அம்மாச்சி என்னை பற்றி சொல்லும் பொழுது கற்பனையில் வாழ்பவள் என சொல்வார்கள். தினமும் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்ற ஆர்வ கோளாறு. அதற்கான தீனி எழுத்தில் நிறைய உள்ளது. உபரியாக பணமும் வருகிறது அவ்வளவே.
*****
நீங்கள் நாவல் எழுத ஆரம்பித்த பிறகு வீட்டில் கிடைத்த ஊக்குவிப்பு என்று ஏதாவது உண்டுமா:
இருக்கே. என் தங்கையும் , தங்கை மகளும் என் கதை விசிறிகள்.
மகனும் மகளுக்கும் தமிழ் வாசிப்பில் ஆர்வம் இருந்ததில்லை, ஆனால்
கதைகளுக்கான வீடியோ ப்ரமோ , என் மகளை பாடாய் படுத்தி செய்ய வைத்து விடுவேன்.
என் கணவர், என் கதைகளை வாசிப்பாரா எனவும் தெரியாது. ஏனெனில் வாசிப்பில் , சமூக கதைகள் வாசிப்பதை அவர்கள் கடந்து விட்டார்கள். ஆனால் தனி மனித சுதந்திரம் உண்டு. Demotivate செய்ய மாட்டார்கள்.
முக்கியமான விஷயம், என் கணவரின் தாத்தா ரா. சிதம்பரம் அவர்கள் 60களில் ஆனந்தவிகடன், கலைமகள் பத்திரிகைகளில் சிறுகதை எழுதி, அதன் தொகுப்பை வெளியிட்டவர்கள். அதனை ஆய்வு நூலாக , mphil பட்டத்துக்கு ஆராய்ந்து உள்ளார்கள்.
தாத்தாவின் நூற்றாண்டு விழாவிற்கு , “புதைந்த சிற்பம் “ சிறுகதை தொகுப்பை சொந்த செலவில் வெளியிட்டோம், எனவே எழுத்தாளருக்கு எங்கள் வீட்டில் ஆதரவு உண்டு. என் பதிப்பு புத்தகத்தையும் நிச்சயம் வெளியிடுவாங்க.
*****
ஒரு கதைக்கரு தேர்வு செய்யுமுன் வீட்டார் யாருடனாவது கலந்து ஆலோசிப்பது உண்டுமா :
கதை கரு என்பது என்னுடையது தான். மனதில் பதிந்தால் தான் எழுத இயலும்.
கருத்துக் கேட்டால் கரு உருமாறி விடும். பதிப்பு புத்தகம் என வந்த போது, கதை சுருக்கம் சொல்லிக் கருத்து மட்டும் கேட்டேன்.
*****
ஒரு சில எழுத்தாளரின் படைப்புகள் ஒன்றிலே உயரத்திற்கு செல்வதும், சிலரது படைப்புகள் பத்து தாண்டியும் மிளிராமல் இருப்பதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று நினைக்கிறீங்க :
எழுத்தாளர் தன் கதைகளை உரிய முறையில் வாசகரிடம் சென்று சேர்க்கவில்லை. அல்லது அவரின் கதைகளில் வாசகரை கவரும் அம்சம் இல்லாமல் இருக்கலாம். எண்ணிக்கை பொருட்டே அல்ல, காலம் , விளம்பர யுக்தி தேவைப்படும். நீங்க கதை எழுதுகிறீர்களோ இல்லையோ, வாசகரோடு தொடர்பில் இருக்கவேண்டும்.
*****
சைலண்ட் ரீடர் பற்றிய உங்களது கருத்து :
சைலண்டாக வாவது ரீட் பண்றாங்களேன்னு சந்தோசப் படவேண்டும். அவர்களால் தான் ரீட் கவுண்ட் உயரும்.
….
நிஜம் தான்.
*****
உங்கள் படைப்புகளில் வாசகர்களால் மிகவும் பாராட்டப் பெற்றது எது, ஏன் :
மனதில் வார்த்தைகள் புரியாதோ , முதல் கதையே நிறைய பாராட்டுகளை வாங்கித் தந்தது. ஆனால் பாண்டிக் குடும்பம், மனச தாடி மணிக்குயிலே நிறைய வாசகர்களை சென்றடைந்து. காரணம், கதைக்கரு, வட்டார வழக்கு, பாண்டிக் குடும்பம்.
*****
உங்களது படைப்புகள் காதல், குடும்பம், பேண்டஸி, வரலாறு, இவற்றில் எதை பொருத்து காணப்படும் :
குடும்பம், காதல் கலந்த முழு நீள தமிழ் படம் போல் இருக்கும்.
*****
கிரைம், திரில்லர் வகை நாவல் எழுத என்ன தெரிய வேண்டும் :
க்ரைம் - இன்றைய காலத்தில் எழுத, தொழில் நுட்பத்திலிருந்து எல்லாமே தெரியணும், அத்தனை வகை இருக்கே. கற்பனை சக்தி, மிகையாக இருக்க வேண்டும்.
*****
அமேசான் கிண்டில் பற்றி சொல்ல முடியுமா :
அதன் அரசியல் பற்றி எல்லாம் கவலை படாமல் எழுதினால், எழுத்தாளருக்கான பொருளாதார ரீதியான வரம். தீபாஸ் நாவல் , தீப்ஸ் தான் எனக்கு இதை அறிமுகப் படுத்தினார்கள். எனக்கு எழுத்தாளர் என்ற நம்பிக்கையை தந்தது கிண்டில் வருமானம் தான்.
*****
குடும்ப கதை எழுதிவரும் நீங்கள் அதில் காதல் காட்சிகள், குடும்பம், நகைச்சுவைகளை எங்கனம் புகுத்துகிறீர்கள்:
நம்மை சுற்றி நடப்பது தான். வீட்டில் பேசும் போது , கேலி கிண்டல் நகைசுவை இருக்கும் தானே. அதை தான் கதைகளிலும் புகுத்துவேன்.
*****
உங்களது எழுத்துக்கு கிடைத்த மிகச்சிறந்த ஊக்கமாக நீங்கள் நினைப்பது:
வாசகர் விமர்சனம். இன்பாக்ஸ் வரை வந்து அடுத்த எபி கேட்பது.
*****
போலீஸ், திரில்லர் கதை எழுதிய அனுபவத்தைப் பற்றி சொல்லுங்க:
போலீஸ் கதை, திரில்லரா பாண்டிக்கு குடும்பம், தான்வி கல்யாண வைபோகத்தில் வந்து விடும். நாயகன் ips ஆபீசர். நாயகி ias ஆபீசர். ஆனால் இந்த கேட்டகிரில வருமான்னு தெரியலை.
ஆன்டி ஹீரோவையே மக்கள் ஆன்டி ஹீரோவா ஒத்துக்கலை , என் டிசைன் அப்படி.
….
🙂🙂
*****
உங்கள் படைப்புகளை வாசிக்க விரும்புவர்களுக்கு நீங்கள் கூற நினைப்பது :
என் படைப்புகள் என்று இல்லை, பொதுவாக வாசிப்பை விரும்புங்கள். விமர்சித்து எழுதி பழகுங்கள், நீங்களும் ஒரு நாள் எழுத்தாளர் ஆகலாம்.
*****
உங்கள் படைப்புகளில் நீங்கள் ரசித்து எழுதியது எது, அது பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா :
என் எழுத்தாளர் தாத்தா, அவர்கள் புத்தக முன்னுரையில் சொல்லி இருப்பார்கள் , “ கதைக்காக கற்பனையில் துப்பாக்கி எடுத்து சுட்டு பழகி, நாயகியை காதலித்தேன்” . அதே தான், ஒவ்வொரு கேரக்டராவும் நானே வாழ்கிறேன். பாண்டிக் குடும்பம் என வந்து விட்டால், என் கண் முன்னாடி நடமாடுவார்கள். Enjoy writing - இது தான் தாரக மந்திரம்.
*****
பாண்டி குடும்ப கதை மூணு பார்ட்டாக எழுதி முடித்திருப்பதாக சொல்லி இருக்கீங்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். அப்படி என்ன ஸ்பெசல் அந்த கதையில் இருக்குனு தெரிஞ்சுக்கலாமா?
பாண்டிக் குடும்பம் - 50 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டது. ஆரம்பத்தில் வாசிக்கும் போது பெயர்கள் குழப்பும். ஆனால் வாசிக்க, வாசிக்க அவர்களோடு பயணப்பட ஆரம்பித்து விடுவீர்கள்.
அதன் கதாபாத்திரங்கள் , வட்டார வழக்கு தான் சிறப்பு. எதார்த்தமான கதை களம். அத்தனை கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் படம் பிடித்துக் காட்டும். பாண்டிக் குடும்பத்தில் நீங்களும் ஒருவர் ஆகி விடுவீர்கள்.
கிண்டில் பிரீ டவ்ன்லோட் கொடுத்த பொழுது, இவ்வளவு நீண்ட கதையை 2500 பேர் டவுன்லோடு செய்திருந்தார்கள். அது தான் பாண்டி குடும்பத்தின் வெற்றி. மணிக்குயில்- ஒரு லட்சம், தான்வி ,பைங்கிளி -ஒன்றறை லட்சம் வார்த்தைகள் கொண்டது. நான்கு, ஐந்து என பிளாஷ் பேக், லீப் கதைகளை கேட்கிறார்கள். உண்மையில் இந்த வாசகர்களே எனக்கு கிடைத்த மிகப் பெரிய சொத்து.
பாண்டிக் குடும்பத்து பெயர்கள் உறவுமுறையை நினைவில் வைத்து, மருமகள்கள் ஊரோடு பாண்டிக் குடும்ப Family tree போட்டுத் தந்ததே, TNW வாசகர் சகோ வெற்றிமதி அவர்கள் தான்.
….
அப்போவ் பிரமாதம்👌👌👌
*****
தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா
ஒரு மனிதன் வாழ்வில் ,வாசிப்பு என்பதில் வயதுக்கு தகுந்த வளர்ச்சியோடு , சிறுவர் கதை முதல், நட்பு, காதல், சுயமுன்னேற்றம், விருப்பங்கள், ஆன்மிகம், மெய்ஞானம் என முடிய வேண்டும் என என் மாமனார் சொல்வார்கள். எழுத்தாளருக்கும் அது பொருந்தும். நானும் அப்படி பயணிக்கவே விரும்புகிறேன்.
தனது எழுத்துப் பணிக்கு நடுவில், நிறைய சிரமங்களையும் பொறுத்துக் கொண்டு, எழுத்தாளர் அறிமுகப் படுத்தும் பணியையும் திறமையாகச் செய்யும், சகோதரி ஆனந்த ஜோதி அவர்களுக்கு நன்றியும், பாராட்டுக்களும். தொடரட்டும் உங்கள் சேவை.
ஒரு எழுத்தாளராக நீங்கள் மென் மேலும் உயர வாழ்த்துக்கள்.
…
மிக்க நன்றி சிஸ்டர்
******
வாசகர் கேள்வி பதில்.
Rajesh maha.
ஏன் நீங்க கிராமத்து காதலையே மிகை படுத்தி சொல்றீங்க! நகரத்துல உண்மை காதலே இல்லையா? இல்லை இங்கே யாருக்கும் காதலிக்க தெரியலையா?
காதலில், நகரம் , கிராமம் என்ற வகை எங்கு உள்ளது. காதல் என்பது உயிர்களுக்கான ஓர் உணர்வு. என் கதை களம் , பெரு நகரங்களில் அல்லாது சிறு நகரத்தில் நடப்பது. அதனால் அப்படி தோன்றுகிறது.
*****
Srimathi Suresh
இது வரை எத்தனை கதைகள் எழுதியிருக்கிறீர்கள் தீபா மேம்
8 கதை முடிந்தது.
*****
Sangavi Priya
Ungaluku enthana language therium.
Unga story padigara appo....kan munnadi nagara mari irukum epdi tha yosigariga....ella epi um suspense ah mudipiga.. unga story la eppavum...aduthathu enna nu aval irukum...
தொடர்கதை எழுத முக்கியமான விதியே, அடுத்து படிக்க வாசகரை தூண்டுவது தான். அதை யோசிச்சா தான் எபி எழுதவே உட்காருவேன். காட்சிகள் சட்டுனு முன்னாடி வரும், அது தான் படைத்தவன் அருள், சரஸ்வதி கடாட்சம் என்பதோ என்னவோ, நானே பல சமயம் வியந்தது உண்டு.
******
Santhoshi Velayutham
Epo kathai elutha arambichenga unga favourite story ethu
2020 ஜனவரி 4. சரியாக இரண்டு வருடம். என் கதைகள் எல்லாமே எனக்கு favourite தான். எனக்கு திருப்த்தி இல்லாமல் ஒரு எபிசொட் கூட போட மாட்டேன்.
*****
Padma Vathy
பாண்டி குடும்ப உறுப்பினர்கள் யாராவது நீங்கள் சந்தித்த நிஜ மனிதர்களா? எவர்கீரின் ஹீரோவா செல்வத்தை எப்படி ஸ்ருஷ்டி செய்தீங்க
எல்லாருமே கற்பனை தான். ஆனால் இங்குள்ள மக்களின் பொதுவான பிதிபலிப்பு. செல்வமணி கதாபாத்திரம்… மறுமணம் செய்ய ஒரு உயர்ந்த உள்ளம் வேண்டுமே. இன்று நிறைய பெண்கள் பூங்குயில் போல் பாதிக்கப் பட்டவர்கள் உள்ளனர், அவர்களுக்கு இப்படி ஒரு ஆண் துணையாக கிடைக்க வேண்டும் என்பது எனது பேராசை.
*****
Mangai Naidu
உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும் சகோதரி
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மட்டுமே. மற்ற மொழிகளை , உறவுமுறைகள் இப்படி சொல்லுவார்கள் என அறிந்த ஆர்வம், கதைகளில் உபயோகித்துக் கொண்டேன் . இப்பொழுது தான் வலைத்தளம் இருக்கே.
******
சூர்யா ராஜாராஜன்
உங்களோட கதையில வட்டார வழக்குகள் சிறப்பா இருக்கிறதா எல்லாரும் சொல்லிருக்காங்க அது எப்படி..? அதுக்கு ஏதாவது தனிப்பயிற்சி செய்றீங்களா..?
நான் வசித்த ஊர்களில் மக்கள் பேசுவதை ஒன்றி கவனித்ததில் கிடைத்த வரம். எந்த ஊரை கதைக்களமாக வைக்கிறேனோ, மக்களை கதா பாத்திரமாக வைக்கிறேனோ, அவர்கள் சாயலில் எனக்கு தெரிந்த அந்த ஊர்காரர் எப்படி பேசுவார் என கற்பனை செய்து விடுவேன்.
*****
Shanaz Siraj
Pandi kudumbam next part epa sis arambipinga? Paingili story mudichutu innum athula irunthu velila vara mudiyala.. already two parts padichuten.. waitinggg for your fourth part sis
எனக்குமே அந்த குடும்பத்தை விட்டு வரமுடியலை. கொஞ்ச நாள் ஆகட்டும் , பாண்டிங்க வந்து மண்டையை தட்டுவாய்ங்கே அப்ப வந்துடுறேன்.
*****
மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏
மேலும் பல அட்டகாசமான படைப்புகளை கொடுத்து எழுத்துலகில் சாதனை படைக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐💐
ரொம்ப மகிழ்ச்சி... பாண்டி குடும்பத்துக்கு அப்புறம் தான் தீபா மேம் ஒட எல்லா நாவலும் படிச்சேன், சிந்தா, ஹாசினி, ஜானகி, பூங்குயில், தான்வி, சிவப்ரியா யாரையும் மறக்க முடியாது... ரத்தோட், தங்கம், செல்வம், முத்து எல்லாரும் எப்பவும் சந்தோசமா இருக்கணும் நினைக்கிற அளவுக்கு அவங்க எல்லாரும் எங்களுடவே வாழ்ந்துகிட்டு இருக்காங்க.. தீபா சிஸ்டர் இதுதான் உங்களுடைய வெற்றி 👍👍👍
ReplyDeletevery happy to receive such a wonderful comments. thanks a lot.
Deleteதீபா ஒரு சிறந்த கவிதாயினி என்று தெரியும்.நாங்கள் இருவரும் கவிதை.மூலமாக தான் அறிமுகம் ஆனோம்.அதன் பின் அவரது கதைகளை பார்த்ததும் ரொம்ப சந்தோஷமா இருந்தது.தமிழில் சிறந்த பாண்டித்தியம் உள்ளவர்.அவரது தனித்தன்மை கூட்டு குடும்ப கதைகள் எழுதுவது என்று சொன்னால் மிகை ஆகாது.தீபா நீங்கள் இன்னும் பல கதைகள் எழுத என் மனம் நிறைந்த பிரார்த்தனை.வாழ்த்துக்கள் மா
ReplyDeleteநன்றி அம்மா.id பார்க்கவும் கொஞ்சம் யாரென குழப்பியது. ஆனால் வார்த்தை வரிகளை படிக்கவும் ,இது எங்கள் il இன் பாசமிகு பெரியம்மா, முகநூலின் rukku raj அம்மா எனத் தெரிந்தது.நன்றி அம்மா.
ReplyDeleteநன்றி ஆனந்த ஜோதி சிஸ் .
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துகள் தீபா சிஸ்டர்💐💐💐💐
ReplyDelete