க. சபரீஸ்வரி

 #எழுத்தாளர் அறிமுகப்படலம்


இது நம்ம ஏரியா


சீசன் இரண்டு


ஹாய் பிரண்ட்ஸ்,


இன்றைய அறிமுக எழுத்தாளர் சபரீஸ்வரி அவர்களைப் பற்றிய நேர்காணல் இதோ:


பெயர் :  க.சபரீஸ்வரி


சொந்த ஊர் :  ஈரோடு


படிப்பு : b.tech Information Technology, JKKM College of Technology


பணி : software developer



தளம் : இல்லை


அமேசான் பெயர் & லிங்:  Sabareeshwari Kannan (SSK)


தற்சமயம் எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் பெயர் & லிங் : நெயிர்ச்சியின் முலுவல் நீ


https://tamilpens.madhunovels.com/viewforum.php?f=80



முடிவுற்ற நாவல்களின் லிங் :  I want to recommend this product at Amazon


உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் (Tamil Edition)

by Amazon Asia-Pacific Holdings Private Limited

Learn more:


https://www.amazon.in/dp/B093Z4HNLB/ref=cm_sw_em_r_mt_dp_Q0ARXKNMPQKW1E3JTE8H


*****


உங்களது விருப்பமான படிப்பு :  biology related course


*****


நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள் : 


காதல் கதைகள், பேண்டசி கதைகள்…


******


உங்களது முதல் நாவலின் பெயர் : 


உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்


*****

மொத்தம் எத்தனை நாவல் எழுதியிருக்கீங்க : 1


*****


உங்கள் படைப்புகளின் பெயர்கள்: 


உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், நெயிர்ச்சியின் முழுவால் நீ, துணையாக வா சகி, மறுபாதி, சேயின் கண்ணீர்..


*****


உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:  


 வாழ்கையின் அர்த்தத்தையும், என்னுடையை தனிதிரமையையும் தேடிக் கொண்டு இருக்கும் சராசரி பெண்..


*****


உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:  


கதைகள் நிறைய படிக்கிற பழக்கம் உண்டு.. அதனால்  கற்பனையில் எப்பொழுதும் சில கதைகளோடு உலாவுவேன்.. அதுவே

எழுதும் ஆர்வத்தை தூண்டியது.. இன்னும் எழுத்து உலகில் நான் கடைக்குட்டி மட்டுமே..


*****


ஒரு கல்லூரி மாணவியான நீங்கள் எழுத்துலகிற்கு எப்படி வந்தீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா : 


கல்லூரி காலத்தில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் மட்டுமே இருந்தது.. அதன் பிறகே எழுத ஆரம்பித்தேன்..


*****


உங்களது படைப்புகளை வாசிக்கும் வீட்டாரின் கருத்துப் பரிமாற்றம் எப்படிப்பட்டதாக இருக்கும் : 


அப்பா , அம்மா இருவரும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் உடையவர்கள்.. அவர்களிடம் இருந்து தான் எனக்கும் வாசிக்கும் பழக்கம் வந்தது.. முதல் கதையை பாதி மட்டுமே இருவரும் வாசித்து உள்ளார்கள்..  நான் மிகவும் உழைக்க வேண்டும் என்று கூறுவார்கள்.. எழுத்து பிழைகளை திருத்த சொல்லி இருகிறார்கள்.

….


அருமையான ஆலோசனை


*****


கல்லூரி வாழ்க்கைனா எப்படி இருக்கணும்னு எதிர்பார்க்கிறீங்க:  


கல்லூரி  படிப்பு முடித்து நீங்கள் வரும் பொழுது, குறைந்த பட்சம்  50% உங்கள் நிஜ வாழ்கையை  எதிக்கொள்ள கற்று தந்து இருக்க வேண்டுமென நான் நினைக்கிறேன்..


*****


குறுங்கதை எழுதும் முன் கையாள்வது என்ன: 


ஒரே ஒரு குறுங்கதை மட்டுமே எழுதி உள்ளேன்.. உண்மை சம்பவத்தை அடிப்பையாக கொண்டு..


 *****


உங்களது எழுத்துகளை பற்றி சொல்லுங்க : 


ஒரே ஒரு எண்ணம் மட்டுமே ,  முடிந்த அளவு மகிழ்ச்சியாகவும், சுவாரசியமாகவும் எழுத வேண்டும் என்று நினைப்பேன்..

 

*****


 ரமணி மேமின் மயக்குகிறாள் ஒரு மாது கதை பிடிச்சுருப்பதா சொல்லியிருக்கீங்க. அந்த கதை எதனால் உங்களுக்கு பிடிச்சது. உங்களை கவர்ந்த பாத்திரம் என்ன : 


 பல நாட்களாக தேடி தேடி பார்த்து கடைசியில் ஒரு வருடத்திற்கு பிறகு

 படித்த நாவல்... நான்  படித்த முதல் ஆன்டி ஹீரோ கதை..  சில சமயம் நம் அதீத தேடல்களே அந்த விஷயத்தின் சுவாரசியத்தை குறைத்து காட்டும்.. ஆனால் அந்த நாவல் சுவாரசியத்திற்கு குறைவு இல்லாமல்

 சென்றது...

….


நிச்சயமாக, நானும் பலமுறை ரசித்து வாசித்திருக்கிறேன். சுதாகர் & மாயா அருமையான கதாபாத்திரம்


*****


கவிதை, கற்பனை அதிகமாக கலந்து வரும் படைப்புகளுக்கும், அவற்றைக் கெடுக்காமல் எழுத்தாளரின் சொந்த நடையிலே வருகின்ற எழுத்துக்கும் உள்ள வித்தியாசமாக ஏதாவது சொல்ல நினைக்கறீங்களா : 


அவரவர் திறமை மற்றும் கற்பனை சக்திற்கு ஏற்ப எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள்...


*****


உங்களது நட்பில் உள்ள எழுத்தாளர் : 


கயல் விழி, ராணி தென்றல் அக்கா,  மதுமதி பரத் அக்கா...  இவங்களோட நிறைய பேசி இருக்கேன்..


*****


நீங்கள் விரும்பி படிக்கும் ஆசிரியர் : ரமணிச்சந்திரன், ராணி தென்றல்,வநிஷா,பொம்மு ..


நூல்கள் :  மோனிஷா - அவள் த்ரோவ்பதி அல்ல

நிவேதா ஜெயானந்தன் - ஸ்டராபெர்ரி ஆசைகள்

வநீஷா - உயிர் விடும் வரை உன்னோடு தான்..

ராணி தென்றல் - தென்றல் 1, 2 சீரியஸ்..

பொம்மு - வேட்டையாடு விளையாடு சீரீஸ்..

சரண்யா ஹேமா - மேகம் வந்து தாலாட்ட


*****


ஆன்லைன் எழுத்துகளால் உங்களுக்கு கிடைத்த நன்மை அல்லது தீமை களைப் பற்றி சொல்ல முடியுமா : 


நன்மை - அனைவருக்கும் ஒரு முயர்ச்சி செய்து பார்க்க எளிமையாக உள்ளது.


தீமை - pdf திருட்டு..


நிஜம்தான்


*****


லவ், கிரைம், பேண்டஸி இந்த மூன்று பிரிவில் நீங்கள் தேர்ந்தெடுத்தவை:


லவ் ஸ்டோரி மட்டுமே எழுதி உள்ளேன்..


****


உங்கள் கதைகளில் நீங்கள் ரசித்த காட்சிகளைப் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா:  


ஒரு இடத்தில் ஹீரோயின் அவள் நண்பனுக்கு தனது காதல் கை கூடாதுன்னு பூடகமா ஒரு குட்டி கதை சொல்லி சொல்லுவா.. அந்த இடம் அப்புறம் அதுக்கு ஹீரோ தர பதில் ரொம்ப பிடிக்கும்..


அருமை


*****


திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நாவல் எழுதும் எண்ணம் இருக்கிறதா : 


ஆம்


*****


ஒரு எழுத்தாளன் தன்னுடைய படைப்புகளின் மூலம் வாசகரை கட்டிப்போடுவது எப்படி : 


சுவாரசியத்தோடு கதைகள் எழுத வேண்டும்...


*****


எழுத்தாளர்களுக்கு இடையேயான நட்புறவு எப்படி இருக்க வேண்டும்னு சொல்ல முடியுமா : 


அடுத்தவரின் எழுத்து சுதந்தரத்தில் தலையிடாமல் இருப்பது நன்று..


*****


ஒரு நாவலில் வரக்கூடிய எந்த மாதிரியான காட்சிகள் நம்முடைய மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்னு நினைக்குறீங்க:


 அது படிக்கும் வாசகர்களையும் அவர்கள் சூழ்நிலையையும் பொறுத்தே அமையும்..


*****


தொடர் கதையின் ஆரம்ப அத்தியாயங்கள் எப்படி இருக்க வேண்டும்: 


அக்கதையில் வரும் கதாபாத்திரங்களின் கேரக்டர் சொல்வதோடு, கதையின் போக்கையும் ஒரு அளவேனும் யூகிக்க வைக்க வேண்டும்.


*****


ஒரு நாவல் or தொடர் கதையை கையில் எடுத்து வாசித்தவுடன் எதனால் தொடர்ந்து வாசிக்க ஆசைப்படுகின்றனர்.? ஏன் சலிப்பாக இருப்பதாக நினைத்து மாற்றி விடுகிறார்கள்: 


கேரக்டர் description கு நிறைய பக்கங்கள் எழுதுவது.. கதையின் மய்ய புள்ளியில் கதையை நகர்த்தாமல் இருப்பது.. (ஒரு வாசகியா இது இரண்டும் எனக்கு சலிப்பை ஏற்படுத்தும்)


எனக்கும். அப்படிப்பட்டது நாவலாக இருந்தாலும், திரைப்படமாக இருந்தாலும் வாசிக்க மற்றும் பார்க்க பிடிக்காது.


*****


நிஜ சம்பவத்தை அடிப்படையாக கதை எழுதிய அனுபவம் இருக்கிறதா : 


குறுங்கதை நிஜ சம்பவத்தை தழுவியது தான்..


*****


நீங்கள் கதை தேர்ந்தெடுக்கும் முறை : 


 வாசகர்களின் விமர்சனங்களை வைத்து கதைகளை படிப்பேன்...


எழுதுவதற்கு எப்பொழுதும் என் மனதில் ஓடும் கதைகளையே இதுவரை தேர்ந்து எடுத்து உள்ளேன்


 *****


இன்றைய எழுத்துக்களை பற்றி சொல்ல முடியுமா: 


மிக நன்றாகவே உள்ளது.. ஆனால் நிறைய எழுத்தாளர்கள் உள்ளதால் , விரைவில் தேடி படிக்க முடியவில்லை..

.... 


நிஜம் தான்.


*****


ஒரு நாவல் எழுத நீங்கள் எடுத்துக் கொள்ளும் கால அவகாசம்: 


சில ஆண்டுகள்...



நீண்ட இடைவெளி நம்முடைய நாவலை வாசிப்பவர்க்கு மட்டும் திருப்தியின்மையை கொடுப்பதில்லை சகோதரி, அதை எழுதுபவர்க்கும் கதையோட்டம் மறந்து போக செய்கிறது. அதனால் விரைவாக படைப்புகளை கொடுத்து எண்ணற்ற வாசகர்கள் மனதில் நீங்கா இடம்பிடிக்க கேட்டுக் கொள்கிறேன்.


*****


நீங்கள் நாவல் எழுத ஆரம்பிக்கும் முன்பு இத்தனை வார்த்தையில் முடிக்கணும், வருணனை,  கவிதை, கற்பனை போன்றவற்றை சேர்க்கணும் என்று யாரிடமாவது கலந்து ஆலோசிப்பது உண்டா:


 இல்லை


*****


தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல நினைக்கறீங்களா :  


நிறைய வாசிங்க... இதெல்லாம் மட்டுமே நான் வாசிப்பேன்னு ஒரு எல்லை கோட்டுல நிக்காம... அணைத்து நூல்களையும்  வாசிங்க.. (இது

எனக்கும் பொருந்தும்)


*****


உங்களது நாவலை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு சொல்ல நினைப்பது: 


உங்களை மாதிரி பொறுமை எல்லாம் எனக்கு சத்தியமா கிடையாது மக்களே... நன்றியை தவிர சொல்ல ஒன்னும் இல்ல.. நான்

ஒரு கதையை முடிக்க வருடக்கணக்கில் எடுத்தாலும் தொடர்ந்து படிச்சிட்டு கம்மென்ட் சொல்ற என்னோட pratilipi வாசகர்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி..


*****


மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏


உங்களது கேள்வி பதில்கள் மிகவும் அருமையாக இருந்தது. மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கவும், விருதுகள் பல வாங்கவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐

Comments