#எழுத்தாளர் அறிமுகப்படலம்
சீசன் இரண்டு
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய அறிமுக எழுத்தாளர் யமுனா அவர்களைப் பற்றிய நேர்காணல் இதோ:
பெயர் : யமுனா GK
சொந்த ஊர் : சென்னை
படிப்பு : B.pharmacy
பணி : ot pharmacist
தளம் : பிரதிலிபி
அமேசான் பெயர் & லிங்: இல்லை
தற்சமயம் எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் பெயர் & லிங் :
பாதியில் விட்ட என்னோட முதல் கதையை தான் எழுத ஆரம்பிச்சிருக்கேன் ..மொத்தமா முடிச்சிட்டுதான் சைட்ல போடனும். நாவல் பெயர் "நினைவில் தத்தளிக்கும் நேசமது".
முடிவுற்ற நாவல்களின் லிங் :
பிரதிலிபியில் என்னை ஃபாலோ செய்ய :
https://tamil.pratilipi.com/user/03i2b2e140?utm_source=android&utm_campaign=myprofile_share
எண்ணிலடங்கா கதைகள், கவிதைகள், கட்டுரைகளை இந்திய மொழிகளில் இலவசமாக படியுங்கள்.
*****
உங்களது முதல் படைப்பின் பெயர் : ஏரிக்கரை
*****
மொத்தம் எத்தனை படைப்பு எழுதியிருக்கீங்க :
இரண்டு நாவல்கள் , மூன்று குறுநாவல்கள் , மூன்று சிறுகதைகள்.
*****
உங்களுடைய படைப்புகளின் பெயர்கள் :
நாவல்கள் : 1. அணுவே என் வர(சாப)மாய்!!
2. சந்தித்தோமே கனாக்களில்
குறுநாவல் : 1. ஏரிக்கரை
2.எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா ??
3.முரண்பாடே காதலாய்
சிறுகதை : 1. அந்தமில்லாதவள்
2. மகள்களின் வரம்
3. விண்ணரசியின் சிரிப்பு
…
அழகான பெயர்கள் தேர்ந்தெடுப்பு
*****
உங்களது படைப்புகள் இதுவரையில் புத்தமாக மாறி இருக்கிறதா , இருந்தால் பதிப்பகத்தின் பெயர் தொலைப்பேசி எண் :
இதுவரை இல்லை.
*****
உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:
கொஞ்சம் இல்லஇல்ல நிறைய நிறைய டவுட்ஸோட சுத்துற கேட்டகரி நானு. எதுனாலும் அதை பத்தி தோண்டிதுருவி தெரிஞ்சிக்க பார்ப்பேன்(அடுத்தவங்க விஷயம்லாம் இதுல வராதுபா). தென் யாரு என்னனுலாம் பார்க்காம எல்லோரோடவும் பேசுவேன் , ஆனா என்னனா என்ன தான் அதுக்குமேல பேசமாட்டேன் பேசவும் வரமாட்டுது .
…
நல்ல குணம் தான்
*****
உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:
எனக்கு ஆரம்பத்துல இருந்தே கவிதை எழுதுறது ரொம்ப பிடிச்ச விஷயம் … சின்னசின்னதா அப்போ அப்போ எனக்கு தோன்றதை எழுத ஆரம்பிச்சேன்.. நம்ப ஸ்கூல் படிக்கறப்போ தமிழ் சப்ஜெக்ட்ல கதை அல்லது கவிதை எழுத சொல்லி ஒரு கேள்வி வரும் . முதல் தடவை கவிதை எழுதிட்டு அடுத்ததடவை ஏன் கதை எழுத கூடாதுனு தோணுச்சி . அப்போ ஆரம்பிச்சது தான் எழுதுற பழக்கம் , ஆனா எழுத வந்த இந்த இரண்டு வருஷத்துல சிலபல தடைகள் பர்சனலா ..சோ ஆரம்பிச்ச நிறைய விஷயம் அப்படியே நிக்குது ,வரும் வருஷத்திலாவது முடிக்கனும் எல்லாம்.
…
முயற்சி தன் மெய் வருந்த கூலி தரும் சகோதரி
*****
நீங்கள் ஒரு எழுத்தாளராக மாறுவதற்கு என்ன காரணம் :
காரணம்னு சொல்ற அளவுக்கு பெருசா எதுவும் இல்லை...எழுத பிடிச்சிருந்தது , அதுவுமில்லாம எனக்கு எதாவது ஒரு விஷயம் நடந்தா அது எப்படி என்ன ஏதுனு ஆராய தோணும் . அந்த குணம் தான் முதல்முதலா நான் எழுதுன "ஏரிக்கரை" கதைக்கு அடிதளம்.
*****
போட்டிகள் சூழ்ந்த இந்த உலகில் உங்களால் சோர்வின்றி இறுதி வரைக்கும் எழுத முடியும் என்று நினைக்கிறீர்களா :
கண்டிப்பா , நான் யாரோடவும் போட்டிபோடனும்னு நினைக்கலை.. என்னோட எண்ணங்களை , கற்பனையை எழுதுறேன் அவ்வளவுதான். ஆனா என்னோட கதையையும் எல்லோரும் படிக்கனும்னு கொள்ளை ஆசை இருக்கு.
…
அது இயல்பாக பலருக்கு இருக்கும் ஆசை தான். உங்கள் ஆசைகள் ஈடேற வாழ்த்துகள்.
*****
உங்களது விருப்பமான படிப்பு :
எனக்கு ஸ்கூல் டேய்ஸ்ல ஆர்க்கியாலஜி படிக்கனும்னு ரொம்ப ஆசை.
*****
நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள் :
கூட்டு குடும்பமா வர கதைனா பிடிக்கும் , அதும் கிராமத்து கதைனா சூப்பர். பேய் கதை , சித்தர்கள் பத்திலாம் படிக்குறது ரொம்ப பிடிக்கும்.
*****
உங்க சொந்த ஊர். அதன் சிறப்பு அம்சங்கள், பற்றி சொல்ல முடியுமா:
சொந்த ஊரே சென்னை தான், சென்னைல எல்லாமே சிறப்பு தான.
*****
எழுத வந்த இத்தனை மாதங்களில் நீங்கள் கற்றுக் கொண்டது என்ன :
எழுதுறதை பத்தி கத்துகிட்டேனோ இல்லையோ , மனிதர்களின் ரசனைகள் எத்தனை எத்தனை விதமாக இருக்குனு தெரிஞ்சிகிட்டேன் . ஒரே கதைக்கு வரும் மாறுபட்ட கருத்துகள் வச்சி ஒரே விஷயம் ஒவ்வொருவர் பார்வையிலும் மாறுபடுதுனு கத்துகிட்டேன். இது நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் மக்களை கடக்க நல்லாவே யூஸ் ஆகுது.
*****
நீங்கள் எழுத வந்த பின் கற்றுக்கொண்டதும், சலிப்பான விசயங்களும் என்னென்ன :
தொடர்கதை எழுத ஆரம்பிச்சா அடுத்தடுத்த அத்தியாயம் குறிபிட்ட இடைவெளியில் தரணும்னு கத்துகிட்டேன். சலிப்பான விஷயம்னா எப்பவும் விமர்சகர்கள் குறிப்பிட்ட எழுதாளர்களின் கதைகளை மட்டும் படித்து விமர்சிப்பது .
…
🙂🙂👌👌
*****
ஆன்லைனில் எழுதுவது உங்களுக்கு என்ன மாதிரி உணர்வை தோற்றுவிக்கிறது:
நம்ப கதையையும் படிக்க ஆள் இருக்காங்கபானு தான் ஹாஹாஹா ...
…
😂😂😂
*****
நீங்கள் எழுதிய படைப்புகளை வாசிக்கும் வீட்டார், உறவினர்களின் மனநிலை, கருத்துப் பரிமாற்றம் பற்றி சொல்ல முடியுமா :
ஏரிக்கரை , முரண்பாடே காதலாய், அணுவே என் வர(சாப)மாய் மூணு கதைக்குமே எங்க அக்காவை தான் படிக்க வச்சேன். நல்லா இருக்குனா நல்லா இருக்கு எதாவது புரியலைனா புரியலைனு சொல்லிடுவாங்க . அதும் அணுவே என் வர(சாப)மாய் கதையில் அவங்களுக்கு பிடிச்ச ஒருத்தனை வில்லனா ஏன் போட்டனுலாம் கேட்டு தொல்லை பண்ணாங்க .
...
நல்ல அக்கா தான் கொடுத்து வச்சவ 👌👌
*****
போட்டிகதைக்கு மட்டுமே எழுதுறேன். மற்றபடி கதை வாசித்து கருத்து சொல்ல யாரும் இல்லை என வருத்தப்படும் நீங்கள் ஏன் போட்டியில் பெயர் தெரியாமல் பங்கேற்று கிடைக்க கூடிய ஆதரவையும் இழக்க பார்க்கிறீர்கள் :
பெயர் தெரியாம எழுதுனா யாருனு தெரிஞ்சிக்கிற ஆர்வத்துலையாவது கதையை படிக்க மாட்டாங்களானு தான் எழுதினேன்.
*****
சஸ்பென்ஸ், திரில்லர், பேமிலி ஸ்டோரிஸ், திகில் உங்களுடைய விருப்பம்னு சொல்லி இருக்கீங்க. நீங்கள் எழுதிய படைப்புகளை பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா :
1.ஏரிக்கரை - க்ரைம் த்ரில்லர் , ஒரு ஏரிக்கரையில வரிசையாய் பிணங்கள் கிடைக்குது அதும் பெண்களின் பிணங்கள் எல்லாமே தற்கொலைனு காரணங்கள் பக்காவா இருக்கு. அது கொலை தானா இல்லையானு கண்டுபிடிக்கிறார் " அரசு "என்னும் அதிகாரி. இந்த கதை உண்மை சம்பவத்தை வச்சி எழுதுனது .
2. முரண்பாடே காதலாய் - இச்சாதாரி நாகங்கள் பற்றியும் , பொள்ளாட்சியில் நடந்த சம்பவத்தை வைத்தும் எழுதிய குட்டியான சஸ்பென்ஸ் த்ரில்லர் ஸ்டோரி . எனக்கு பர்சனாலா இந்த கதை ரொம்ப பிடிக்கும்.
3. அணுவே என் வர(சாப)மாய் - இது பொம்மு நாவல்ஸ் தளத்தில் எழுதிய போட்டி கதை. " சஸ்பென்ஸ்" தான் கான்ஸெப்ட்டே .
....
அருமை சகோ, சூப்பர்👌👌👌
*****
நீங்கள் கதை எழுத எந்த மாதிரிப் பட்ட கதைக்கருவை தேர்ந்தெடுக்குறீங்க: நான் எழுதுற கதையில் எதாவது சில நல்ல கருத்துகள் இருக்கனும்னு நினைப்பேன் . மோஸ்ட்லி அழுத்தமான, யாருக்கும் பெரியதாய் தெரியாத சில விஷயங்களை தான் கதை கருவா தேர்ந்தெடுப்பேன்.
*****
சிறுகதை எழுதிய அனுபவம் இருக்கிறதா : ஆம்
*****
கவிதை எழுத என்ன தெரிஞ்சிருக்கணும்:
ரசிக்க தெரிஞ்சாலே போதும்..நம்ப மனசுக்கு தோன்ற வார்த்தைகளை கோர்த்துக்கலாம் .
*****
நீங்க ஒரு பிரதிலிபி எழுத்தாளர் அப்படியானல் அங்கு உங்கள் படைப்புகளை வாசிப்பவர்கள் பாலோவர்ஸ் அதிகம் இடம் பெற்றிருக்கிறார்களா : ஆம்
*****
உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த விமர்சனம், பாராட்டாக நீங்கள் நினைப்பது என்ன :
பவித்ரா நாராயணன் அக்கா சொன்னாங்க " hope you'll be master in thriller someday girl"னு அது எனக்கு மறக்க முடியாத பாராட்டு.
*****
சிறுகதை எழுத என்ன தெரிய வேண்டும். அதன் கருவோட்டம் எதை பொறுத்து இருக்க வேண்டும்:
பெரிய விஷயத்தை கூட சின்னசின்ன வரிகளில் பளிச்சினு புரிஞ்சிக்கிற மாதிரி சொல்ல தெரியனும். சிறுகதையோ நாவலோ கருவோட்டம்ன்றது எழுதுற எழுத்தாளர்களின் மனநிலை பொருத்துதான் இருக்கும்.
…
நிஜம் தான்
*****
உங்களது நாவல் or சிறுகதை இத்தனை வார்த்தைகள் அத்தியாயங்களில் வர வேண்டும் என்று முடிவு செய்து எழுதும் வழக்கம் உடையவரா நீங்கள் ??
கதையின் போக்கை வைத்து தான் எழுதுவேன் , முன்பே வார்த்தைகளின் அளவை திட்டமிடுவதில்லை.
*****
உங்களது எழுத்துகள் எதைப் பொறுத்து காணப்படும்:
பொதுவாய் ஏதேனும் உண்மை சம்பவங்களை மையபடுத்தியே எழுதுகிறேன்.
*****
ஒரு படைப்பில் வரக்கூடிய கவிதை, வருணனை, கற்பனை, எப்படி இருக்க வேண்டும். அதை ஒரு எழுத்தாளன் எங்கனம் கையாள வேண்டும் :
எந்த இடத்தில் வருணனை தேவையோ அங்கே மட்டுமே இருக்க வேண்டும் , அடுத்து என்ன என சீட்டின் நுனியில் அமரவைக்கும் காட்சிகளை தொடர்ந்து அங்கு வருணனை வந்தால் அதை கடக்கவே பலர் நினைப்பர். ஒவ்வொரு அத்தியாயத்தின் முன்னால் அல்லது இறுதியில் அந்த அத்தியாயத்திற்க்கு சம்பந்தமாய் வரும் கவிதைகள் அர்த்தமானதாய் இருக்கும் என நான் நினைக்கிறேன்.
…
ஆம், நானும் அப்படி நினைப்பது உண்டு
*****
ஒரு நாவலில் வரக்கூடிய எந்த மாதிரியான காட்சிகள் நம்முடைய மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்னு நினைக்குறீங்க??
எனக்கு தெரிஞ்சி மனசு நிறைய காதலை வெச்சிகிட்டு அதை வெளிபடுத்த முடியாம தான் காதலிக்கிறவங்க முன்னாடியே குற்றவாளியா நிப்பாங்க பாருங்க அப்படிபட்ட காட்சிகள் படிக்குறப்போ நமக்கே அப்படி வலிக்கும் . எடுத்துகாட்டு சொல்லனும்னா , "இதயம் " நாவல் கார்த்திக் , " சித்ராங்கதா" ஜிஷ்ணு , "அன்பே நீ இன்றி " விஜயேந்தர்.
*****
தொடர் கதையின் ஆரம்ப அத்தியாயங்கள் எப்படி இருக்க வேண்டும்:
முதல் இரண்டு அத்தியாயங்களிலே இதான் கதைனு புரிந்தமாதிரி இருக்கனும் , ஆனா இதை எப்படி கொண்டுபோகபோறாங்கனு கொஞ்சம் த்ரில் இருக்கனும் . தெளிவா சொல்லனும்னா நம்ப குஷி படத்துல எஸ்ஜே .சூர்யா சொல்வாருல "இவங்க ரெண்டு பேர் தான் சேரபோறாங்க ஆனா எப்படி சேரபோறங்கன்னு தான் கதை "னு அப்படி இருக்கனும்.
*****
ஒரு நாவல் or தொடர் கதையை கையில் எடுத்து வாசித்தவுடன் எதனால் தொடர்ந்து வாசிக்க ஆசைப்படுகின்றனர்.?, ஏன் சலிப்பாக இருப்பதாக நினைத்து மாற்றி விடுகிறார்கள்:
கதையின் காட்சியமைப்புகள் தான் காரணம். அடுத்து என்ன என்னும் ஆர்வமே படிக்க தூண்டும் . தேவையே இல்லா வருணனைகள் , சம்பந்தமில்லா காட்சிகள் சலிப்பை ஏற்படுத்தி கதையுடன் ஒன்றவிடாமல் செய்யும்.
*****
தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல நினைக்கறீங்களா :
கதையை படிக்குற ரீடர்ஸ்க்கு சொல்ல நினைக்குறது எல்லோருக்கும் சில ரைட்டர்ஸ் பேவரேட்டா இருக்கலாம் அது தப்பில்லை , ஆனா அந்த கதையை பற்றின உண்மை விமர்சனங்களை மட்டும் க்ரூப்ல பகிருங்க . அப்போ தான் அந்த அந்த ரைட்டர்ஸும் கூட உடனே நீங்க சொல்ற மிஸ்டேக்ஸை கரெக்ட் பண்ணுவாங்க . நீங்க சும்மாவே ஆகாஒகோ னு புகழ்ந்தா அவங்களுக்கு அது தெரியாது . இது எதுக்கு சொல்றனா , உங்களுக்கு பிடிச்ச ரைட்டர்ஸ் பண்ற சின்ன தப்பைகூட நீங்க சொல்லி அவங்க மாத்திகிட்டா அந்த கதை இன்னும் அழகா வரும் இல்லையா அதுக்காகதான்.
அண்ட் உங்களுக்கு பெரியபெரிய நன்றி அக்கா , என்னையும் எல்லோருக்கும் அறிமுகபடுத்துறதுக்கு. இப்படி நேர்காணல் நடத்துறது சுலபம் இல்லை ஆனா நீங்க அதை அழகா செம்மையா செஞ்சிட்டு இருக்கீங்க . உங்களோட இந்த பணியால இன்னும் இன்னும் நீங்க அறிமுகபடுத்த போகும் அறிமுக எழுத்தாளர்கள் என்னைபோலவே ஹாப்பியா பீல் பண்ணுவாங்க . அவங்க எல்லோர் சார்பாகவும் இப்பவே சொல்றேன் ரொம்ப ரொம்ப நன்றி அக்கா.
…
மிக்க மகிழ்ச்சிமா . ஏதோ என்னால முடிஞ்ச உதவியா இதை செய்ய நினைக்கிறேன் அவ்வளவு தான். நிறைய வாசிக்கணும் பாகுபாடு பாராமல் விமர்சனம் தரணும்னு எனக்கும் ஆசைதான் ஆனால், எழுத்து மேல் இருக்கும் ஆசையில் வாசிப்பு தடை பட்டு போகுது
*****
உங்களது நாவலை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது:
என் கதையில் எதாவது குறைகள் தெரிஞ்சா அதை சொல்லுங்க , என்னோட கோணத்துல கவனிக்காம விட்ட பாய்ண்ட்ஸ் எதாவது படிக்குற உங்களுக்கு தெரியலாம் அது நீங்க சொன்னாதான் எனக்கு தெரியும் .உங்க நேரத்தை ஒதுக்கி என் கதைகளை வாசிப்பதற்க்கே நிறைய நிறைய நன்றிகள்.
****
online எழுத்தாளர்களில் உங்களில் மிகவும் பிடித்தவர் யார் : ஒருத்தரா இரண்டு பேரா நிறைய இருக்காங்க.
*****
யாருடைய நாவலை மிகவும் விரும்பி வாசிப்பீர்கள் :
இவங்களோடதுனு குறிபிட்டுலாம் படிக்க மாட்டேன் . கதை எப்படி இருக்குன்றதை பொருத்துதான் நான் படிக்கிறது எல்லாம்.
…
என்னைப் போலவே
*****
வாசகர்கள் கேள்வி பதில்கள் :
1. Art pearl :
உங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஜானர் எது?? இது நம்ம எழுதுறது ஈஸியா இருக்கும் நல்லா வரும்னு நீங்க நினைக்கிறது crime love romance fantasy இப்படி..?
பதில் : எனக்கு பிடிச்சதுனா "க்ரைம் "தான் அக்கா...எனக்கு அதான் வரும்னும் நல்லா நினைக்கிறேன் ஏன்னா இதுவரைக்கும் எழுதுன ஐந்து ஸ்டோரில க்ரைம் ஸ்டோரியா எழுதுன "ஏரிக்கரை" க்கு தான் நிறைய கமெண்ட்ஸ் வந்தது.
*****
2. Malini
எழுதனும்னு உனக்கு எப்படி தோணுச்சி..உன்னோட இன்ஸ்பிரேஷன் யாரு?
பதில் : அது ஏன் தோணுச்சினு தான் தெரியலையே ...இன்ஸ்பிரேஷன்னு தனியா யாரையும் சொல்ல முடியாது கா… என்னோட தனிமையான நேரங்களில் எல்லாம் புக்ஸ்தான் எனக்கு கம்பெனி கொடுத்துச்சி , யாரோட ஸ்டோரினாலும் நல்லா இருந்தா படிப்பேன் சோ குறிப்பிட்டு சொல்ல முடியலை.
****
3. Poornima Karthick
நீங்க எவ்வளவு நாளா கதை எழுதுறீங்க?
பதில் : இரண்டு வருடம்
*****
மிக்க நன்றி சகோதரி,
உங்களது கேள்வி பதில்கள் ரொம்ப ரொம்ப நன்றாக இருந்தது. மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கி, வாசகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐
Comments
Post a Comment