#எழுத்தாளர் அறிமுகப்படலம்
சீசன் இரண்டு
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய அறிமுக எழுத்தாளர் பிரதீஷா மணி அவர்களைப் பற்றிய நேர்காணல் இதோ :
பெயர் : செல்வமணி
ஊர் : நாமக்கல் மாவட்டம்., மாணிக்கம் பாளையம் (பச்சானூர் கிராமம்)
படிப்பு :12
பணி: முழுநேர விவசாயி.
தளம் : mallikamanivannan.com
அமேசான் பெயர் மற்றும் லிங்: பிரதீஷா மணி
https://www.amazon.com/kindle-dbs/author?ref=dbs_G_A_C&asin=B093FFYRW5
தற்சமயம் எழுதி கொண்டிருக்கும் லிங்:
https://www.mallikamanivannan.com/community/categories/pratheesha-mani.1700/
உங்களுடைய புத்தகத்தின் பெயர் மற்றும் கிடைக்கும் முகவரி :
1.நேசவிதை தூவும் காரிகையவள்.
2.இதய துடிப்பின் ஓசையானா(ளே)னே...
பாகம்.1,2
3.மயக்(ங்)கும் தாமரை மணாளனே...
உங்களுடைய முதல் கதையின் பெயர்:
மயக்(ங்)கும் தாமரை மணாளனே...
மொத்தம் எத்தனை எழுதியிருக்கீங்க :
முடிவற்ற கதை 7.
ஆன்கோயிங் 3.
உங்கள் படைப்புகளின் பெயர்கள் :
1.மயக்(ங்)கும் தாமரை மணாளனே...
2.என்னை ஆளவந்த தேவதை.
3.அன்பு வாழும் வீடு.
4.நேசவிதை தூவும் காரிகையவள்.
5.காதலும் கசிந்துருகும் நம் காதலில்.
6.இதயதுடிப்பின் ஓசையானா(ளே)னே… பாகம். 1,2
7.மூங்கிலின் தென்றலவள்.
ஆன்கோயிங்:
1.நினைவலையில் நீந்துகிறேன்.
2.தந்தையுமானவள்,
3.தம்பிக்கு கல்யாணம்.
உங்களைப் பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா :
ரொம்ப அமைதியான பொண்ணு🤪🤪🤪🤪
உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா :
நான்கு வருடத்திற்கு முன்பு திடிர்னு ஒரு நாள் நாமலும் எழுதி பார்த்தா தான் என்னனு தோணுச்சு. என்னோட முகநூல் ப்ரண்ட் ராஜலக்ஷ்மி அக்கா கிட்ட சொன்னேன். அவங்களும் எழுதுனு சொல்லி முதல் கதைக்கு உதவி பண்ணாங்க. அத படிச்ச ப்ரண்ட்ஸ்ம் நல்லாருக்குனு சொல்லவும் எழுத ஆரம்பிச்சிட்டேன்.
*****
நீங்கள் எழுத்துலகை தேர்ந்தெடுத்ததற்கான காரணம்:
காரணம் எல்லாம் பெருசா எதுவும் இல்லை. பிடிச்சிருக்கு அவ்வளவுதான்.
*****
சிறுகதை / குறுநாவல் எழுதிய அனுபவம் இருக்கிறதா :
மூன்று குறுநாவல் எழுதியிருக்கிறேன். சிறுகதை இதுவரையில் எழுதியதில்லை.
*****
திருமணம் முடிந்து விட்டதா அல்லது கல்லூரி மாணவியா? உங்களது
பள்ளி பருவம் பற்றி சொல்ல முடியுமா:
திருமணம் முடிந்து ஒன்பது வருடங்கள் ஆகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது. +2 வரை படித்திருக்கிறேன். நாமக்கல் மாவட்டம், பச்சானூர் என்ற சிறிய கிராமத்தில் வசிக்கிறேன்.
*****
திகில், சஸ்பென்ஸ், பேய், போலீஸ், வரலாறு , பேண்டஸி இதில் நீங்கள் எதிலெல்லாம் எழுதி இருக்கீங்க.
குடும்ப நாவல் எழுதுவேன். போட்டிக்கு நானும் இன்னொரு ரைட்டரும் சேர்ந்து பேய்&க்ரைம் கலந்த த்ரில்லர் நாவல் எழுதிருக்கிறேன்.
*****
நிஜ சம்பவம் அடிப்படையா கதை எழுதி இருக்கீங்களா :
எழுதியிருக்கிறேன். கதை பெயர் மூங்கிலின் தென்றலவள்.
*****
கவிதை எழுதிய அனுபவம் :
இல்லை.
*****
பிடித்த வேலை :
பிடித்த வேலை என்று சொல்வதை விட முழுநேர வேலையே விவசாயம்தான். இதற்கிடையில் தோன்றும் போது கதை எழுதுவேன் அவ்வளவுதான்.
*****
எதற்காக எழுத்து துறையை தேர்ந்தெடுத்தீங்க:
நான்கு வருடத்திற்கு முன்பு திடிர்னு ஒரு நாள் நாமலும் எழுதி பார்த்தா தான் என்னனு தோணுச்சு. என்னோட முகநூல் ப்ரண்ட் ராஜலக்ஷ்மி அக்கா கிட்ட சொன்னேன். அவங்களும் எழுதுனு சொல்லி முதல் கதைக்கு உதவி பண்ணாங்க. அத படிச்ச ப்ரண்ட்ஸ்ம் நல்லாருக்குனு சொல்லவும் எழுத ஆரம்பிச்சிட்டேன்.
...
நிஜமாக நன்றாக தான் இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.
முகநூலில் உங்களுக்கு கிடைத்த நட்புகள் :
இங்க எனக்கு கிடைத்த நண்பர்கள் வெகு குறைவுதான். அதற்கு காரணம் என்னோட வேலை பளு. முகநூல் வரதே குறைவு. அதனால் அவ்வளவா யாரோடையும் பழக்கமில்லை.
உங்களுக்கு விருப்பமான ஹீரோ & ஹீரோயின் :
சூர்யா, ஜோதிகா, நயன்தாரா, அனுஷ்கா.
******
உங்களுடைய பொழுது போக்கு :
நாவல் படிப்பேன். யூடியூபில் அரசியல் சார்ந்த விசயங்களை பார்ப்பேன்.
*****
உங்களுக்கு பிடித்த பிரபல முன்னணி எழுத்தாளர்கள்:
என், கணேசன், ஷான்.கருப்பசாமி, ரமணி அம்மா, மல்லிகா மணிவண்ணன், இன்பா அலோஷியஸ், சரண்யா ஹேமா, ரேணுகா முத்துக்குமார், மேக்னா சுரேஷ், கவி பிரிதா.
உங்களுக்கு பிடித்த ஆன்லைன் எழுத்தாளர்:
மல்லிகா மணிவண்ணன்.இன்பா அலோஷியஸ், சரண்யா ஹேமா, ரேணுகா முத்துக்குமார், மேக்னா சுரேஷ், கவி பிரிதா.
நீங்க வியந்து நோக்கும் எழுத்தாளர் யாராவது இருக்கிறார்களா :
என். கணேசன். அவரோட எழுத்துக்கு நா ரசிகை.
******
ஒரு நாவல் எழுதும் முன்பு இத்தனை அத்தியாயம், வார்த்தை, கவிதை, வர்ணனை வர வேண்டும் என்று முடிவு செய்து பின்னர் எழுதுபவரா நீங்கள்:
அப்படிலாம் யோசிச்சிட்டு எழுத மாட்டேன். கதை முடிவு திருப்தியா இருக்கனும் அவ்வளவுதான்.
*****
"நேச விதை தூவும் காரிகையவள் " நாவலில் எதிர்பாராமல் நடக்கின்ற திடீர் திருமணம், கணவனின் பாராமுகம், மாமியாரின் தேவையில்லாத பேச்சு, மனையாளின அமைதி, சுய கௌரவம் என்று எழுதியிருந்தீங்க. அதில் நாயகி கதாபாத்திரம் ரொம்ப அழுத்தமாக கொடுக்கப்பட்டிருந்தது, அவர்களது, பேச்சு, பழக்கம் எல்லாம் கிராமிய வாழ்க்கையை கண்முன் காட்டியது. இப்படி ஒரு கதை எழுத உங்களுக்கு எப்படி தோன்றியது :
அந்த கதை எழுதும்போது இதெல்லாம் யோசிக்கவே இல்லை . எழுத ஆரம்பிக்கறப்ப தோன்றியது தான்.. யசோதா கேரக்டர் என்ற அம்மாவ மனசுல வச்சி தான் எழுதினேன். என்ற அம்மாவ பார்த்து வளர்ந்ததுனாலையோ என்னவோ எனக்கு பெண்கள் தோத்து போறது. அடிமையா இருக்கிறது பிடிக்காது. அதனாலையே எல்லா கதையிலுமே பெண்களுக்கு சுயமரியாதை, தன்னம்பிக்கை இருக்கமாதிரிதான் எழுதுவேன். அவ எந்த சுழ்நிலையிலும் பயந்து பின்வாங்காம போராடி வெற்றி பெறனும். அது கதையா இருந்தாலும் சரி வாழ்க்கையா இருந்தாலும் சரி.
நீங்களும் வேறொரு எழுத்தாளரும் இணைந்து திரில்லர் நாவல் எழுதியிருப்பதாக சொல்லியிருக்கீங்க. அது எதற்காக எழுதப்பட்டது, அந்த கதையின் சார அம்சம் என்ன:
சங்கமம் தளத்தில் இரட்டை ரோஜா போட்டிக்காக நானும் சேதுபதி விஸ்வநாதன் தம்பியும் தான் எழுதினோம். அது க்ரைம், அமானுஷ்யம் சார்ந்த கதை.
கதை பேர்: இருளில் ஒளிரும் இரகசியன்.
*****
இருவர் சேர்ந்து எழுதும் போது கதையோட்டம், எழுத்து நடை, கற்பனை, வருணனை இதெல்லாம் ஒத்து வரும்னு நினைக்கிறீங்களா :
நாம் நினைச்சா வரும். இரண்டு பேர் எழுதும்போது அங்க நீ பெருசு நா பெருசுங்கற ஈகோ மட்டும் வரவே கூடாது.
உங்க சொந்த ஊரைப் பற்றி உங்களுடைய படைப்புகளில் எழுதிய அனுபவம் இருக்கிறதா. உங்கள் ஊரில் உள்ள முக்கியமான இடங்கள், அதன் சிறப்புகளை பற்றி சொல்ல முடியுமா :
இதயதுடிப்பின் ஓசையானா(ள)னே… கதை என்னோட ஊர்ல நடக்கற மாதிரி தான் எழுதியுள்ளேன். மூங்கிலின் தென்றலவள் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் பத்தி எழுதியுள்ளேன். அன்பு வாழும் வீடு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிறப்புகள் பத்தி எழுதியுள்ளேன்.
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்,கொல்லிமலை இப்படி ஏகப்பட்டது இருக்கு.
இதய துடிப்பின் ஓசையானவனே(ளே) பார்ட் 1&2 நான் காத்திருந்து வாசித்து கருத்து தெரிவித்த கதை . இதில் நாயகனை விட அவனது அப்பா ஸ்கோர் தட்டிச் சென்றிருப்பார்👌👌👌. அந்த கதைப் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா:
நா யோசிச்ச கரு வேறு. எழுதும்போது மாறிடுச்சு. ராம் ஒரு ஹிரோவா ஆகிட்டார் 😍
*****
நீங்கள் எழுதிய படைப்புகளில் உங்களை கவர்ந்தது எது, ஏன்:
நேசவிதை தூவும் காரிகையவள், மூங்கிலின் தென்றலவள். ரெண்டுமே என்னை சார்ந்தவர்கள மனசுல வச்சி எழுதிருப்பேன்
உங்கள் படைப்புகளை வாசிப்பவர் உள்ளிடம் எதிர்பார்ப்பது :
ரெகுலரா எபி குடுக்கனும்ங்றதுதான்😂😂
விமர்சனங்கள் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க :
விமர்சனங்கள் னு சொல்லும்போது நெகடிவ் பாசிட்டிவ் ரெண்டு இருக்கனும். அப்போதான் அடுத்த தடவை அதை சரி பண்ணிட்டு கதை எழுத முடியும்.
உங்க கதைக்கு பெயர் தேர்வு செய்யும் முறை:
அதெல்லாம் அப்பப்ப தோன்றதுதான்.
*****
உங்களது கனவு லட்சியம் ஏதாவது இருந்தால் சொல்ல முடியுமா:
அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை. இருக்கும் வரைக்கும் இதே நிம்மதியோட நமக்கு பிடிச்ச மாதிரி வாழ்ந்துட்டு போகனும்.
*****
பார்ட்1 பார்ட் 2 எதனால் எழுதுறிங்க? இரண்டில் எது வாசகர்களை கவர்ந்தாக இருக்கும்:
இரண்டு பாகம் எழுதனும்னு நினைச்சி எல்லாம் ஆரம்பிக்கல... கதை பெருசா போகவும் ரெண்டா புக் போடவேண்டிய சூழ்நிலை. அது வாசகரை கவர்ந்துச்சா இல்லையான்னு அவங்கதான் சொல்லனும்.
*****
ஏன் உங்களுடைய கதையில் பெரும்பாலும் கொங்கு தமிழையே பயன்படுத்துறீங்க :
எனக்கு கொங்கு ஸ்லாங்தான் தெரியும். நானே நார்மல் ஸ்லாங்ல எழுத நினைச்சாலும் என்னையும் அறியாம அந்த வார்த்தைகள் வந்துடுது.
*****
பிரதிலிபியில் எழுதி வெளிவிடுவதை வாசிக்கும் வாசகர்களின் கருத்திற்கும், முகநூல் வாசகர்களின் கருத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன :
ரெண்டுக்கும் பெருசா எந்த வித்தியாசமும் எனக்கு தெரியலை. எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கு.
****
அழுத்தமான கதையோட்டத்தை மட்டும் எதனால் போட்டியில் தேர்ந்த்தெடுக்கிறார்கள் :
அழுத்தமான கதைக்களம் மனசுல ரொம்ப நேரத்துக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் கூட இருக்கலாம்.
*****
உங்களுடைய முகநூலில் காய்கறிகள் படம் பார்த்த நியாபகம் தோட்டகலை பற்றி சொல்ல முடியுமா :
எங்களுக்கு வயல் இருக்கறதால வீட்டு தோட்டம் எல்லாம் நா போட்டதில்லை. வயல்ல எந்த பயிர் எப்ப பயிரிட்டா லாபம் கிடைக்கும். அதோட லாபம் நஷ்டம் இதெல்லாம் கேட்டிங்னா சொல்லுவேன்😊
*****
இருவர் சேர்ந்து கதை எழுதிய அனுபவத்தை பற்றி சொல்லுங்க :
எங்க ரெண்டு பேருக்குமே அது ஒரு சுவாரசியமான அனுபவம் தான். அதபத்தி சொல்லனும்னா ஒரு எபி அளவுக்கு எழுதலாம். அந்த அளவுக்கு நானும் தம்பியும் லூட்டி அடிச்சிருக்கோம். ரெண்டு பேர் எழுதுனாலும் நாங்க கதை முடியும் வரையும் எங்களுக்குள்ள எந்த ஈகோவும் வரல.. ஒரே எபிய ரெண்டு பேரும் கலந்துதான் எழுதுவோம். அதுல நா முதல்ல ஆர்வமா எழுதுனாலும் கடைசில தம்பியாலதான் கதையே முடிஞ்சது. அந்த அளவுக்கு கடைசில அவன படுத்தி எடுத்துட்டேன்😀😀
*****
தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :
பெண்கள் எப்பவும் தைரியமா இருக்கனும். எந்த சூழ்நிலையிலும் தோத்து போயிட்டேனு தேங்கி நின்னுடாம முயற்சி பண்ணிட்டே இருக்கனும்.
*****
உங்கள் படைப்புகளை வாசிப்பவர்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது :
என்னோட கதையை படிக்கற சைலண்ட் ரீடர்ஸ் அட்லிஸ்ட் கதை முடிஞ்ச பிறகு இன்பாக்ஸ்ல கதை எப்படி இருக்குன்னு சொன்னா நா சந்தோச படுவேன். நல்லா இல்லைனாலும் சொல்லனும்
வாசகர் கேள்வி & பதில்கள்:
கலை கார்த்தி:
அரசியல் தளம் கலக்கறிங்க எப்படி இதை எழுத தோனுச்சு sis:
எனக்கு அரசியல் விசயங்களை பேச, விவாதிக்க, அதைப்பத்தி தெரிஞ்சுக்க ரொம்ப பிடிக்கும்ங்க. அரசியல் தெரிஞ்சாவே போதும் உள்ளூர் முதல் உலக விசயங்கள் வரை நம் உள்ளங்கையில். ஒரு வகையில் அறிவை வளர்க்கும்னு நினைப்பேன். ரொம்ப நாளாவே அரசியல் களத்த வச்சி கதை எழுதனும்னு நினைப்பேன். அது இப்போதான் நிறைவேறி இருக்கு.
#######
ஜான்சி மைக்கேல்:
ஹாய் பிரதீஷா
விவசாயம் குடும்பம் என மிக பிசியென அறிந்துக் கொண்டு இருக்கின்றேன்.எழுதுவதற்காக உங்களுக்கு உகந்த நேரம் எது?
அப்படி எல்லாம் எந்த நேரமும் இல்லைங்க. எனக்கு தோன்றப்ப எழுதுவேன்.
உங்கள் எழுத்துப்பணி சிறக்க நல்வாழ்த்துகள்.
நன்றி மா🙏
######
சித்ரா சரஸ்வதி:
நாட்டின் மிக முக்கியமான பணியான விவசாயத்தை பார்க்கும் உங்களுக்கு எப்படி எழுதும் எண்ணம் வந்தது?.
எல்லாரும் எழுதறத பார்த்ததுட்டு நாமலும் எழுதுனா என்னனு தோன்றவும் அப்ப எழுத ஆரம்பித்தது தான்மா.
எழுத நேரம் எப்படி ஒதுக்குகிறீர்கள்?.
எழுத்துக்கு எல்லாம் தனியா நேரம் ஒதுக்குவது இல்லை. வேலை இல்லாதப்ப எழுதுவேன்.
ஒரு பகுதியை சார்ந்த கதைகளை அழகாக கொடுக்கிறீர்கள்.
நன்றிமா. உண்மைய சொல்லனும்னா நா பிறந்தது வளர்ந்தது எல்லாமே கிராமத்தில் தான். எங்க ஊர தாண்டுனதுக்கூட சொந்தக்காரங்க வீட்டுக்காரர் தான் இருக்கும். வேற எங்கையும் போனதில்லை. அதனாலையே கொங்கு பகுதி சுத்தி மட்டும் கதை களம் எடுப்பேன். தெரியாத ஒண்ண கற்பனையா எழுதறத விட தெரிஞ்சத எழுதும்போது அது உணர்வு பூர்வமா வரும்னு நினைப்பேன்.
வேறு வகை கதையை இப்பொழுது முயற்சி செய்வதும் நல்ல செயல்தான்.
நன்றிமா.
உங்களின் நகைச்சுவைக் கதை என்னவானது?
அதையும் எழுத தான் முயற்சி பண்றேன். வயல் வேலை வரப்ப எழுத முடியறது இல்லை. இனி எழுதறேன்மா.
#######
ஷபிகா:
Hero professor @ herione student ya oru novel yeluthuga pa😊
எழுதிட்டா போச்சு😍
########
பிரதீபா சுரேஷ்:
நீங்க நிறைய குடும்ப கதை எழுத்துரீங்க அது ரொம்ப பிடிக்கும்.
வேற topics இப்போ try பண்ண போறிங்க..?
எனக்கும் டிப்ரெண்ட் கான்செப்ட் வச்சி எழுதனும்னு ரொம்ப ஆசை. இரட்டை ரோஜா போட்டிக்கதைக்கு க்ரைம் அமானுஷ்யம் எழுதியிருக்கேன். இப்போ அரசியல் களம் எடுத்துருக்கேன்.
******
மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏
உங்களுடைய கேள்வி பதில்கள் மிகவும் இயல்பாகவும், எதார்த்தமாகவும் இருந்தன. மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கவும் விருதுகள் பல வாங்கவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐
Comments
Post a Comment