ஆனந்த ஜோதி

 இன்று என்னுடைய நாள் அதனால் என்னைப் பற்றிய சில வரிகள்:


இன்றைய தினம் நான் 41 வது அகவையில் காலெடுத்து வைக்கப் போகிறேன். பெண்கள் பொதுவாக தங்களுடைய வயதை வெளிப்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை. ஆனால் நான் அப்படியல்ல.


எனது பெரிய மகன் K.A. சூர்யா BCOM 3-வது வருடம் படித்துக் கொண்டிருக்கிறார்.


இளைய மகன் K.A. கெளசிக் தற்சமயம் 12வது வகுப்பு முடித்து Neet Coaching class சென்று கொண்டிருக்கிறார்.


இரண்டு மகன்களும் பெரியவனாக இருக்கும் பட்சத்தில் வயதை மறைக்க விரும்புவதில்லை எப்போதுமே …


1981 ஆம் வருடம் கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை காவலர் குடியிருப்பின் அருகில் உள்ள மருத்துவமனையில் இன்றைய தினம் பிறந்ததாக எனது தாயார் R. சுசிலா கனகலிங்கம் கூறினார்.


அதன் பிறகு காவலனின் மகளாக 5 வயது வரையில் காவலர் குடியிருப்புகளில் இருந்து வந்தோம். பிறகு, நாகர்கோவில் அருகே உள்ள ஆலன்கோட்டை புதூர் எனது சொந்த ஊருக்கு சென்றோம். அங்கேயே சொந்தமாக வீடு கட்டி குடித்தனத்தை ஆரம்பிக்க வைத்தார் எனது தந்தையார் S. கனகலிங்கம் அவர்கள்.


எனது தமையன்மார்கள் K.S. மணிகண்டன் & K.S. சுதன்


1 - 5 வரையில் ஆலன் கோட்டை அரசு துவக்கப்பள்ளியில் பயின்று, 6 -ம் வகுப்பு பயில கணபதிபுரம் அன்ன விநாயகர் தேவஸ்தான மேல்நிலை பள்ளிக்கு சென்றேன். சரியான சூட்டிகை, வாயாடித்தனம், குறும்பு, விளையாட்டுத்தனம் அனைத்தும் கலந்த கலவை நான்😂😂😂 இதை சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. இப்போது வரையிலும்...


ஜோதி இருக்கும் இடமே கலகலப்பு என்பார்கள் எனது நட்புகள்

11-வது வகுப்பில் அறிவியல் பாடத்தின் மீதான பிடித்தத்தில் வேதியியல் பிரிவை தேர்ந்தெடுத்தேன்.


இயற்பியல் ஆசிரியை ஜெயகௌரி, தாவரவியல் ஆசிரியை ஜெயகுமாரி, உடற்கல்வி ஆசிரியர் லீலாவதி (என் அப்பாவின் ஆசிரியர் பேத்தி என்று உரிமை பாராட்டுபவர்) வேதியியல் ஆசிரியர் C. ரெங்கராஜ், தமிழாசியர் சதாசிவம்பிள்ளை, விலங்கியல் ஆசிரியர் செந்தில் குமார் எவரையும் மறக்க முடியாது. அத்தனை அருமையாக பயிற்று விற்கும் ஆசான்கள். என்னிடமும் அன்பு பாராட்டுபவர்கள், இப்போது பார்த்தாலும் கைகுவித்து வணக்கம் என்று சொல்லும் போது அவர்களது முகம் அப்படியே பரவசப்படும். எனக்கோ பள்ளி நாட்களின் நினையில் அச்சம் கலந்த மகிழ்ச்சி ஏற்படும்.


கல்லூரியிலும் அதே வேதியியல் பிரிவில் பயின்றேன். சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் விலங்கியல் பிரிவில் இடம் கிடைத்தது. முடியாது என்று கன்னியா குமரி விவேகானந்தா கல்லூரிக்கு சென்றோம். எனது உறவினர்கள் அங்கு புரோபஸராக இருந்தார்கள். உடனே வேதியியல் பிரிவில் சேர்த்து விட்டார்கள். மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்தால், மறுநாளே நாகர்கோவில் பயோனியர் குமார சுவாமி கல்லூரியில் வேதியியல் பிரிவில் இடம் கிடைத்து விட்டது. அப்படியே துள்ளி குதியாட்டம் போட்டு எனது தாயாரை கட்டிக் கொண்டேன்.


கல்லூரி படிப்பின் மூன்றாவது வருட ஆரம்பத்தில் Aug 30 2001 அன்று எனது ஊரைச் சார்ந்த உறவினரான T. கிருஷ்ணகுமார் CISF என்பவரை மணம் புரிந்தேன்.


அதன் பிறகில் இருந்து அப்படியே வாழ்க்கை தலை கீழாக மாறிவிட்டது எனலாம். எனது கணவர் பணிபுரியும் இடம் (மேற்கு வங்காளம், துர்க்காபூர்) சென்றோம் 2001 -2005 வரையில் அங்கேயே இருந்தோம்.


மகன்கள் 2002 - 2003 பிறந்தார்கள். அங்கு வைத்து வெண்ணிற டவ்வல், ஊலன் நூலில் டிசைன்கள் ( டீவி, டீப்பா, பிரிட்ஜ், வாசிங் மெசின், மிக்ஸி, கதவு நிலை) போடுவது என ஹிந்து பேசுபவர்களிடம் பயின்றேன். முதலில் முடியவில்லை. முயன்றால் முடியாதா என்ன? முயற்சியுடன் செய்தேன். அவர்களே வியந்து பாராட்டினார்கள். திறமைசாலி என்றார்கள்.


2004 - 2009 வரையில் எர்ணாகுளம் போர்ட் டிரஸ்டில் இருந்தோம். மகன்கள் இருவரும் பள்ளிக்கு போனார்கள். நான் டெய்லரிங் கற்றுக் கொள்ள சென்றேன்.


2009 - 2013 வரையில் காவல்கிணறு (திருநெல்வேலி ) ISRO Unit - இருந்தோம். எனது சொந்த ஊரில் இருந்து ஒன்றரை மணிநேர தொலைவு


2014 - 2019 வரையில் வல்லிய மலை திருவனந்தபுரத்தில் இருந்தோம். அங்கு CISF Welfare Centre-ல் டெய்லரிங் கற்றுக் கொடுக்கும் ஆசிரியையாக சென்றேன்.


2019 - 2022 தற்சமயம் சத்தீஸ்கரில் இருக்கிறோம்.


வீட்டை விட்டு வெளியே சென்று பழக்கம் இல்லை. அடுத்தவரிடம் வாயடித்து பொழுது போக்க விருப்பம் இல்லை. சதா சும்மா இருக்க பிடிக்க வில்லை. அப்படியே நேரப்போக்கிற்காக நாவல் வாசிப்பு, விமர்சனம் என சென்றது. பாகுபாடு பாராமல் கதை வாசித்து பலரை தூக்கி விட்டேன். பிறகு ஒரு வருடம் கழித்து 2020 Aug 5 அன்று சிறுகதையின் மூலம் எழுத்துலகிற்குள் காலெடுத்து வைத்தேன். இத்தனை மாதங்களில் 4 சிறுகதை, 10 தொடர்கதை, 1 நாவல், 1 ஆன்கோயிங் என சென்று விட்டேன். 


நான் பிறந்து வளர்ந்த இத்தனை வருடங்களில் என்ன கற்றுக் கொண்டேன். எதை விட்டேன், எதை விலக்கினேன் என்றால் வாசிப்பு, எழுத்து, நேர்காணல் தவிர்த்து எதுவும் இல்லை எனலாம் 😂😂😂


கோபம் என்னிடம் இருக்கும் - நெகட்டிவ்


யார் என்று தெரியாமல் பாசம் காட்டுவதும், உடனே நம்பி விடுவதும் - பாசிட்டிவ்


சுயநலமான மனிதர்கள், பொறாமை குணம், தலைக்கனம் நிறைந்தவர்கள் எனது - எதிரி


அன்புடன் அக்கா, சிஸ்டர், ஜோதி என்பவர் - என் சகோதரி, தோழி


இதுவே நான் …


ஆனந்த ஜோதி


ஆனந்தம் - என்னிடம் உண்மையான அன்புடன் பழகுபவர்களுக்கு


ஜோதி - தீபமாகவும், அதே நேரம் நெருப்பாகவும் அதை பழகுபவர் பொறுத்து மாறுபவள்


எப்படியோ என் அப்பா அப்போதே கணித்து தான் இந்த பெயரை வைத்திருக்கிறார் போலும்🙂🙂🙂


எனக்கு மிகவும் பிடித்தது எனது பெயர். அதனால் தான் பிரதிலிபி, முகநூல், அமேசான், புத்தகம் அனைத்திற்கும் கொடுத்திருக்கிறேன்.


இத்தனை வருடங்கள் சென்றது போல இனிவரும் நாட்களும், துயர் இல்லாமல் செல்ல இறைவனை வேண்டுகிறேன். வந்தாலும் கடந்து செல்லும் மனபக்குவத்தை இறைவன் எனக்கு கொடுக்கட்டும்


நன்றிகள் நட்புக்களே

🙏🙏🙏🙏

Comments

  1. Awesome dear. Wishing you a very happy birthday. Stay blessed

    ReplyDelete
  2. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் சகோதரி......

    ReplyDelete
  3. Happy birthday ma. May God bless you.

    நான் படித்த பயோனியர் குமார சுவாமி கல்லூரியில் படித்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி. 1975-78 ல் கணித பிரிவில் பட்டம் பெற்றேன். அப்பொழுது அது ஆண்கள் கல்லூரி. நன்று

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார். மகிழ்ச்சி

      Delete
  4. தங்களைப் பற்றி அறிந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி நல்ல மனம் கொண்டவர்கள் நம்முடன் விரைவில் இணைந்து விடுவார்கள் அந்த விதத்தில் ஏனோ உங்களை மிகவும் பிடித்துப் போனது நம்முடைய நட்பும் அன்பும் என்றும் தொடரட்டும் நன்றி சகோதரி இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சிஸ்டர்🙏
      நன்றிகள் பல..

      Delete
  5. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி 🎂🎉🎊. நானும் தக்கலை பக்கம் தான். அதே வேதியல் துறை தான் நானும். இளங்கலை திருச்சிலுவைகல்லூரி,2006-2009, முதுகலை மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் 2010 -2012.நமது மாவட்டத்தில் இருந்து எழுவதில் மகிழ்ச்சி 💐💐

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி
      நம் ஊர் என்றாலே தனிதான்

      Delete
  6. வாவ் சூப்பர் கா என்னமோ தெரியல உங்கள எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்குது லவ் யூ மை lovely அக்கா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கலை
      நன்றிகள் பல...

      Delete
  7. 25 ஆண்டுகள் கழித்து தோழியின் வாழ்க்கை பயணத்தை பற்றி தெரிந்து கொண்டனமக்கு மிக்க நன்றி,
    நாம் ஒன்றாக பயணித்த அந்த இரண்டு ஆண்டுகள் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நினனவுகளாக இன்றும் இருக்கிறது,இனத நினனவு படுத்தியதற்கு நன்றி,இன்னும் பல்லாண்டுகள் இதே நினனவுகளுடன் குடும்பத்துடன் பிறந்த நாள் கொண்டாட எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்,
    இப்படிக்கு
    வே.ரமேஷ் ,MA...,BL
    (+2 SCIENCE GROUP)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பிரண்ட்🙏🙏
      நன்றிகள் பல...

      Delete
  8. சூப்பர்க்கா...வாழ்க வளமுடன்

    ReplyDelete
  9. Semma ka... Wishing you a very happy birthday akka...

    ReplyDelete
  10. என்னைப்போலவே நீயும் இரு மகன்களுடன் இருக்கிறாய். தக்க வயது வந்ததும் அவர்களும் திருமணமாகி குழந்தை குடும்பம் என்று பிரிந்து விட்டாலும் நமக்கு தனிமையில்லை, தமிழும் கதையும் டெய்லரிங்கும் என்றென்றும் இறுதிவரை தொடர்ந்திருக்கும். வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சிஸ்டர்

      Delete

Post a Comment