#அரட்டைஅரங்கம்
இது நம்ம ஏரியா
முகநூல் லிங்:
ஹாய் பிரண்ட்ஸ்,
அரட்டை அரங்கம் நிகழ்ச்சியின் மூன்றாவது தலைப்பு " இடம், காலம், நேரம்"
அதாவது நாம் எழுதுகின்ற ஒரு படைப்பு எந்த சமயத்தை ஆரம்பமாக கொண்டு எழுதினால் சிறப்பாக இருக்கும். அந்த நேரத்தை எழுத்தாளன் எப்படி கையாள வேண்டும்.
கிராமம், நகரம், வெளியூர், வெளி நாடு, மலைப்பகுதி, நீர் நிலைகள், பாலைவனம், காட்டுப் பகுதி, போன்ற இடங்ளைப் பற்றி படைப்பில் எதுவும் போது எந்த மாதிரிப்பட்ட வர்ணனைகள், காட்சிகள் கட்டாயம் எழுத வேண்டும் என்று குறிப்பிடுவது எதனை…
நேரம் என்பது பலர் 12:00 என்பதும், ஒரு சிலர் பன்னிரெண்டு மணிக்கு என்பதுமாக உள்ளது. இதில் எது சரி. கால நேரத்தை எழுத்தாளன் எங்கனம் தன்னுடைய படைப்பில் கையாள வேண்டும்? ஒரு கதையின் ஆரம்பம் எந்த நேரத்தில் துவங்குவது சிறப்பாக இருக்கும். அதில் வரும் வர்ணனை வரிகள் பொருத்தமாக இருக்குமா அல்லது சுவாமி பாடல்கள் வரிகள் சரியாக இருக்குமா… இல்லை என்றால் ஆரம்பமே கதையோட்டமாக இருந்தால் அருமையாக இருக்குமா?
இன்றைய கேள்விகள் இவ்வளவு தான். இதற்கு மேலும் உங்கள் படைப்புகளில் நீங்கள் பயன்படுத்துபவர் என்றால் தயங்காமல் முன்வைக்கலாம்…
அரட்டை அரங்கம் என்பது எழுத்தாளர், விமர்சகர், புரூப் ரீடர், வாசகர், அனைவருக்கும் தெரிந்த கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும், தெரியாத எழுத்தாளர்கள் தங்களுடைய படைப்புகளை மெருகேற்றிக் கொள்ளும் விதமாக தோற்றுவிக்கப்பட்டது.
ப்ளீஸ் … உதவுங்கள் நட்புக்களே
13-2 - 2022 இன்றைய அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் " இடம், காலம், நேரம்" தலைப்பிற்கான பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வாசித்துப் பார்த்து பயனடையும் படி கேட்டுக் கொள்கிறேன் .
R. சுமதி மேம்:
1. என்னைப் பொறுத்தவரை எனக்கு எழுத கிடைக்கும் எல்லா நேரத்தையும் பயன்படுத்தி கொள்வேன். பள்ளிக்கூடம் செல்லும் நாட்களில் வகுப்பு தொடங்குவதற்கு முன், ஃப்ரீ பீரியட் என எழுதுவேன். பேருந்துக்காக காத்திருக்கும் நேரத்தில் கூட எழுதுவேன். வீட்டில் இருந்தால் முதலில் எழுத்து தான். இடையிடையே தான் வீட்டு வேலை, சமையல் எல்லாமும். சில நாட்களில் வீடு பெருக்காமல் விட்டது கூட உண்டு.
2. பெரும்பாலும் அந்த இடத்திற்கு ஏற்ப கற்பனைகள் வர்ணனையாக தோன்றிவிடும். வயல்களை மலைகளை, நதிகளை வர்ணனை செய்யும் போது, சங்க இலக்கியங்களை மேற்கோளாகக் காட்டுவது உண்டு.
3. எண்களாக நேரத்தைக் குறிப்பிடுவதை விட எழுத்துக்களில் குறிப்பிடுவதைத்தான் நான் விரும்புகிறேன்.
4. பெரும்பாலும் ஆரம்பம் என்பது கதையைப் பொறுத்துத்தான். எல்லா கதைகளையும் பொழுது விடிவதைப் போலவோ, சாமிப்பாட்டு கேட்பதைப் போலவே ஆரம்பிக்க முடியாது. கதையின் கருவைப் பொருத்து அது அமைய வேண்டும்.
எஸ். பர்வீன் பானு சிஸ்டர் :
1. நேரம் காலம் என்பது கதை போக்கை பொறுத்தது. சில கதைகள் முதலில் எதிர்காலத்தை பதிந்து, அதில் இருந்து கடந்த காலத்துக்கு பயணமாவது போல் அமையும். கதையின் சுவரஸ்யம் என்பது கதை போக்கை தீர்மானிக்கும் தவிர, காலம் என்பது எழுத்தாளர் கையாள போகும் கருவை பொறுத்தது. பெரும்பாலும் குடும்ப நாவல்களை நான் காலையில் இருந்தே துவங்குகிறேன். அப்படி துவங்காத கதைகளும் எழுதுகிறேன். கதை தான் அதை தீர்மானிக்கிறது.
2. பனிரெண்டு என்றுதான் குறிப்பிடுகிறேன். இட, வார்த்தை அளவை சுருக்கும் போது அது 12:00 என்றும் குறிப்பிடலாம் . ஒவ்வொரு வார்த்தைக்கும் வடிவமைப்பிற்கும் ரிஷிமூலம், நதி மூலம் பார்ப்பதில்லை நான். ஆற்றுக்கு கரைகள் தன்னால் உருவாவது போல், எழுத எழுத எழுத்திற்குள் இருக்கும் அத்தனை மூலங்களும் தன்னால் புரியத் தொடங்கிவிடும். இவற்றை கற்றுக்கொண்டு எழுத வருவது என்பது எத்தனை பேருக்கு கை வரும் என்பது கேள்விக்குறியே.
3. வர்ணனைகள் அவரவர் கற்பனையின் நீட்சி. அது அவரவர் ரசனையைப் பொறுத்தது. இயற்கையை பற்றிய வர்ணனை பெரும்பாலும் சிறப்பாக இருக்கும். பார்க்கும் அனைத்தையும் ரசனையாய் வர்ணிப்பது அந்தந்த எழுத்தாளர்களின் தனிப்பட்ட திறமை. அதை வளர்த்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும்.
காஞ்சனா ஜெயதிலகர் மேம் :
எழுத்தாளர்கள் தாங்கள் அறியாமலே செய்யும் ஒரு காரியம் இது. அதாவது கதையை மட்டும் கொடுக்கிறது இல்லை.வித்தியாசமான கதாப்பாத்திரம் மட்டுமில்லை தாங்கள் எழுதும் அந்த நேரம், காலத்திற்கான பதிவையும் தங்களுடைய நாவலில் கொண்டு வந்துடறாங்க.
ஆக, இந்த ப்ராக்ஜய் உடன் இருந்தால், தற்காலத்தில் பதிவு செய்ய வேண்டிய காலம், கதையை ஒட்டியதாக இருக்க வேண்டும். இல்லாதது பொல்லாதது எல்லாம் கூட்டி வந்து கொடுத்தால் கொஞ்சம் கதை குப்பையாகி விடும்.
அதனால் கதையை ஒட்டிய,சுவாரசியமான,முக்கியமான தகவல்களை இணைத்துக் கொண்டால், அது ரொம்ப அழகாகப் பதிவு செய்யப்படும் அந்தக் கதையோடு கூட.
அதைப் போலவே இடம்.
நான் பல இடங்களைப் பார்த்தபிறகு தான், அதைச் சுற்றி என் கதைகள் பின்னப்பட்டு இருக்கின்றன.அதனால் இடத்திற்க்கு அது மிகவும் முக்கியமான இடம் உண்டு.
எனக்குப் பிடித்தமான சொல் வழக்கு.
'வாழ்க்கை வித்தியாசமான மர்ம நாவல். அதன் முடிவுமட்டும் அல்ல அடுத்த பக்கத்தைக் கூட நாம் யூகிக்க முடியாது.'
அத்தனை சுவாரசியமான வாழ்க்கையை , கதைகளை , கதாபாத்திரங்களை முழுமையாக ஒரு எழுத்தாளர் தர வேண்டும் என்றால், அதாவது அந்த ரிச் பீல் வரணும் என்றால் இடம்,காலம், நேரம் எல்லாம் அடிப்படை.
அதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
நன்றி
அன்னபூரணி தண்டபாணி :
இடம், காலம், நேரம்
இடம்: பொதுவாக நான் வாழும் இடமான சென்னையை சுற்றிதான் என் கதை களம் இருக்கும். ஏனெனில் எனக்குத் தெரிந்த இடங்கள் நான் பார்த்த இடங்களை வைத்து எழுதுவது எனக்கு எளிது. மேலும் ான் காதில் கேட்டு வளர்ந்த சென்னைத் தமிழ்தான் வழக்கு மொழியாக எழுத பயின்று இருக்கிறேன்.
மற்ற ஊர்களின் வட்டார மொழியும் வார்த்தைகளும் எனக்கு அதிகம் தெரியாததால் மற்ற இடங்களை அதிகம் எழுதுவதில்லை. அப்படியே எழுத வேண்டிய அவசியம் வந்தால் நிறைய படித்து நண்பர்களிடம் கேட்டு சரியான தகவலை எழுதுவதை வழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
காலம்:
இதுவும் 90% நிகழ்காலத்தைதான் எழுதுகிறேன். அல்லது எனக்கு நன்றாகத் தெரிந்த 80s 90s தான் அதிகம் எழுதுவது. தெரியாத கால்தை எழுத வேண்டுமென்றால் முதலில் இப்போது வழக்கில் இருக்கும் செல்ஃபீ போன்ற வார்த்தைகளை தவிர்க்க வேண்டும்; இப்போது நாம் பழகியிருக்கும் கேட்ஜெட்களைத் தவிர்த்து எழுத பெரு முயற்சி செய்ய வேண்டும்; அதனால் நிகழ்காலத்தைதான் என் கதை நடக்கும் காலமாக நான் எழுதுவது.
நேரம்:
இதுவும் கதையில் முக்கிய நிகழ்வுகள் நடக்கும் போது மாலை சரியாக 5.00மணி; லேசாக இருட்டத் தொடங்கியிருந்தது போன்ற வாக்கியங்களால் கதைின் நிகழ்வுகளை விவரிக்கவும் வாசகர்கள் அதனை காட்சிப் படுத்திப் பார்க்க எளிதாகவும் இருக்குமாறு எழுதுகிறேன்.
மற்றபடி நேரம் காலம் இடம் இவற்றின் வர்ணனை எனக்கு அவ்வளவு கவித்துவமாக எழுத வராது. உவமைகள் எழுதத் தெரியாமல் தப்பும் தவறுமாக எதையோ கிறுக்குவதற்கு பதில் எழுதாமல் இருப்பதே மேல் என்று எனக்கு நானே விதி வைத்துக் கொண்டு வர்ணனைகளை எழுதாமல் விட்டு விடுவேன்.
தீபா செண்பகம் :
இடம், காலம், நேரம் இது நல்ல தலைப்பு தான்.
* நான் கதை எழுத ஆரம்பிக்கும் போது ஏதாவது ஒரு மாதம், பண்டிகை ஆகியவற்றிலிருந்து ஆரம்பித்து கதை பயணிப்பது போல் எழுதுவேன். இது நமது கதையின் நகர்வுக்கு பலம் சேர்க்கும். நீங்கள் சம்பவங்களை கற்பனை செய்ய, கோர்க்க வசதியாக இருக்கும். அந்த பண்டிகைகளை வைத்து கதையை நகர்த்தி விடலாம்.
இதற்கு உங்களுக்கு எந்த மாதத்தில் எந்த பண்டிகை வரும், அந்த மாதத்தில் மழையா, குளிரா, வெயிலா எது அதிகமாக இருக்கும் என்பன போன்று யோசித்து, காட்சி படுத்தலாம்.
* இடம், கதை எந்த இடத்தில் நடக்கிறது என்பதை கற்பனை செய்தீர்களானால் , அந்த ஊரை, அதன் அமைப்பை, அந்த வீட்டின் அமைப்பை வைத்தும் உங்கள் கதையை வடிவமைக்கலாம். இடத்தை பற்றிய குறிப்பையுமே டாக்குமெண்ட்ரி போல் அல்லாமல், சுவாரஸ்யமாகச் சொல்ல வேண்டும். உண்மையில் உள்ள ஊர்களை வைத்து, அதன் அடிப்படையில் எழுதினீர்களேயானால், அங்கே உங்கள் கதா பாத்திரங்களை வாசகர்கள் கற்பனை செய்து கொள்வார்கள். அது கதைக்கு உயிரோட்டத்தை தரும்.
* மிகத் துல்லியமாக இத்தனை மணி என்பதையெல்லாம் கதைக்குத் தேவையாக இருந்தால் குறிப்பிட்டுச் சொல்லலாம். இல்லையெனில், காலை உணவு, வேலைக்கு கிளம்பும் நேரம், வெயில் தாழ, அந்தி சாயும், இருளடைந்த... இப்படி பொழுதுகளை, கதையின் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம்.
* எல்லாவற்றிலும் முக்கியமான விசயம், இந்த விசயங்களை கையாலும் போது, லாஜிக்கல் எரர் இல்லாமல், இந்த விசயங்களை, ஒரு முறைக்கு இரு முறை அறிந்துக் கொண்டு எழுதவேண்டும்.
நந்தினி சுகுமாரன் :
நான் நேரத்தைக் குறிப்பிடும் பொழுது எழுத்துகளையே பயன்படுத்துவது ஜோதிமா. ஏனோ அதை எண்களால் குறிப்பிடத் தோன்றவில்லை. அது சரியா தவறா என்றும் தெரியவில்லை.
இடம் - எந்த ஒரு இடமாக இருந்தாலும் காலத்திற்கேற்ப அதன் சூழலும் தட்பவெட்பமும், வளர்ச்சி, பொருளாதாரம் என அனைத்திலுமே மாற்றம் ஏற்படும்.
காலையில் சென்னையில் ரயிலில் ஏறியதாக காட்சி இருந்தால், கதாபாத்திரம் செல்லும் இடம், எந்நேரத்தில் அடைவர், பயண காலம் இது போலானவற்றை லாஜிக் இடிக்காமல் கொடுத்தால் நன்று.
இருபது வருடங்களுக்கு முன், முப்பது வருடங்களுக்கு முன் என குறிப்பிட்டு கதைக்கு பிளாஸ்பேக் சொல்லப்படும் போது.. தொலைபேசி, தொலைக்காட்சி, விமானம், பண பரிவர்த்தனை போன்றவற்றை அக்காலத்தின் பயன்பாடை ஒரளவு அறிந்து எழுதுதல் நலம்.
இவை எனக்குத் தோன்றியவை மட்டுமே.
அனிதா ராஜ்குமார் :
ஹாய் நட்பூஸ்
இன்றைய அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் "இடம், காலம், நேரம்" தலைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனந்த ஜோதி தோழி ஊக்கத்தால், எனக்குத் தெரிந்ததை இங்கே பகிர்கிறேன்.
எனக்கும் பலர் சொன்னதை அடிப்படையாக வைத்துத் தான் இவற்றை இங்கே பகிர்கிறேன். இங்கே என் கதைகளில் நான் செய்வதை கொடுக்கிறேன். இது உங்களுக்குப் பொருந்தி வரலாம். இல்லாமலும் போகலாம்.
சுலபமாகப் புரிந்து கொள்ள, திரைப்பட சூழ்நிலைகளை,என் கதைகளை உதாரணமாகக் கொடுக்கிறேன்.
1. நாம் எழுதுகின்ற படைப்பு எந்தச் சமயத்தை, நேரத்தை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பித்தால் சிறப்பாக இருக்கும்?
நேரம் மற்றும் இடம் - கதையில் நம்பகத்தன்மையை நிலைநாட்டவும், பராமரிக்கவும் இந்த இரண்டு அடிப்படை கூறுகளும் உருவாக்கப்பட வேண்டும்.
நீங்கள் ஒரு அறை வழியாக அல்லது தெருவில் நடக்கும்போது, அதை இரு பரிமாணமாகப் பார்க்கிறீர்களா? இல்லை. அந்த நடையின் ஒவ்வொரு பகுதியையும் நீங்கள் அனுபவிக்கிறீர்கள். உங்கள் ஐந்து புலன்களில் ஒவ்வொன்றையும் பயன்படுத்துகிறீர்கள்.சுற்றி நடப்பதை ஐம்புலன் கொண்டே பார்க்கிறோம்,உணர்கிறோம், ரசிக்கிறோம்.
வாசகர்கள் கதையை அவர்களின் ஒவ்வொரு புலன்கள் மூலமாகவும் அனுபவிக்க வைப்பதில் இருக்கிறது நம் கதையின் ஈர்ப்பு.
நீங்கள் புனைகதை அல்லது புனைகதை அல்லாதவற்றை எழுதினாலும், உங்கள் காட்சிகளிலும் கதையிலும் ஒரு அமைப்பை உருவாக்குவது மிகவும் முக்கியமானது. செயல் எங்கு அல்லது எப்போது வெளிப்படுகிறது என்பது உங்கள் வாசகர்களுக்குத் தெரியாவிட்டால், அவர்கள் தொலைந்து போவார்கள்.கதையோடு ஒன்ற முடியாமல் போகலாம். நிஜத்தில் கண் முன்னே நடப்பது போன்ற விசுவல் கிடைக்காமல் போகலாம்.
ஒரு சில கதைகளுக்கு விமர்சனம் வரும் போது சினிமா பார்த்த பீல், அந்த சினிமா பார்த்தேன் உங்கள் கதை தான் நினைவிற்கு வந்தது. அத டிவி தொடர் உங்க கதை போலவே இருந்தது என்று வரும் விமர்சனம் எல்லாம் அங்கே கதை என்பது விசுவல் ட்ரீட் ஒன்றை வார்த்தை மூலம் கொடுத்து வெற்றி பெற்று இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்கிறது.
யார், என்ன, எப்போது, எங்கே, ஏன், மற்றும் எப்படி என்ற கேள்விகளுக்குப் பதிலளிப்பதன் மூலம், நீங்கள் தெரிவிக்கும் நிகழ்வுகளை, வாசகர் தங்களால் மனதிற்குள் காட்சிப்படுத்த முடியும். உங்கள் வாசகரை உங்கள் கதைகளில் நிலைநிறுத்துவது உங்களுடைய பொறுப்பு. .
கதாபாத்திரங்கள், கதைக்களம், அவர்கள் எதிர்கொள்ளும் மோதல்கள், ஒட்டுமொத்த தீம் அனைத்தும் ஒரு நல்ல கதையின் முக்கிய கூறுகள். ஆனால் நடக்கும் எல்லாவற்றிற்கும் சூழலை வழங்கும் மற்றொரு முக்கியமான கதை கூறு உள்ளது: எங்கே, எப்போது என்பதே அது.
மணி என்ன?
இது என்ன பருவம்?
சரித்திர கதை என்றால் வரலாற்றில் இது எந்த ஆண்டு?
சயின்டிபிக்,ஏலியன் கதை என்றால் பூமியில் (அல்லது அதற்கு அப்பால்) எல்லாம் எங்கே நடக்கிறது?
கதை அமைப்பு மாறினால் அது மற்ற நான்கு கூறுகளை எவ்வாறு மாற்றும்? போன்றவை எல்லாம் முக்கியம்.
நேரத்தை, சமயத்தைக் கதையின் கருவே முடிவு செய்யும்.
கதை அமைப்பு/story setting என்பார்கள் இதை.
இது ஒரு காட்சி நிகழும் நேரம் மற்றும் இடம். இது மனநிலையை அமைக்கவும், கதாபாத்திரங்கள் நடந்து கொள்ளும் விதத்தில் செல்வாக்கு செலுத்தவும், உரையாடலைப் பாதிக்கவும், நிகழ்வுகளை முன்னறிவிக்கவும், உணர்ச்சிபூர்வமான பதிலைத் தூண்டவும், கதாபாத்திரங்கள் வாழும் சமூகத்தைப் பிரதிபலிக்கவும், சில சமயங்களில் கதையில் ஒரு பங்கை வகிக்கவும் உதவும். இந்த அமைப்பு விவாதிக்கப்படுவதற்கான கட்டமைப்பை வழங்குவதால் இது புனைகதை அல்லாத முக்கிய அங்கமாகவும் இருக்கலாம்.
புகைப்படத்திற்கு முன்புறமும் பின்னணியும் இருப்பது போல் கதைக்கும் உள்ளது. முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் செயல்கள் முன்னணியில் உள்ளன. நிகழ்வுகளின் நேரம் மற்றும் இடம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள சமூக சூழல் ஆகியவை பின்னணியை உருவாக்குகின்றன.
உதாரணத்திற்க்கு கொலை,கடத்தல், ஏதாவது திரில்லர் போன்ற ஸீன் உடன் கதை ஆரம்பமாகிறது என்றால், இரவு நேரம் சரியாக இருக்கும். இரவு என்றதும் மனம் அதற்கு உண்டான ஒரு த்ரில்,பயத்தை தானாகவே உணரும். இது மனித மனதில் தானாகப் பதிந்து விட்ட ஒன்று. பேய் படத்தைக் காலை பார்ப்பதற்கும்,இரவில் பார்க்கும் போதுநம் மனதில் அது ஏற்படுத்தும் தாக்கமே இந்த வித்தியாசத்தைச் சொல்லி விடும்.
துருவங்கள் பதினாறு, நெற்றிக்கண், திட்டம் ரெண்டு போன்ற படங்களில் இந்தக் கான்செப்ட் தான் கொடுத்து இருப்பார்கள். கொலை,கடத்தல் இரவில் நடப்பது போன்ற சூழ்நிலை அதற்க்கு மழை எபெக்ட் பார்க்கும் போதே அந்தச் சூழ்நிலை அடுத்து என்னவோ என்ற அந்தத் திகில் ஆட்டோமேட்டிக்காக நம் மனதை உலுக்கும்.
ஆனால் இது எல்லாத்துக்கும் செட் ஆகுமா என்பது கேள்விக்குறி. ஒரே templet,மாடல், ஒரே மாதிரியாக இருக்கிறது என்றும் சொல்லும் வாய்ப்பு உண்டு.cliche வா இருக்கு என்ற மறுப்பும் வரலாம்.
சினிமா கொடுக்கும் அந்த விசுவல் ட்ரீட் கதையில் கொண்டு வந்ததால் தான் ரீச் இருக்கும். நம் வார்த்தைகள் தான் வாசகர்கள் மனதில் அந்தச் சீனை படமாக ஓட்டிக் காட்டும்.
என் மூன்றாவது நாவல் ஊரு விட்டு ஊரு வந்து ஸ்டார்டிங் பெண்ணை இரவு சடங்கிற்கு அழைத்துச் செல்வார்கள். கணவன் ஆவலுடன் அறைக்குள் வருவார். அங்கே அந்தப் பெண் இறந்து கிடக்கும். இந்தச் சூழ்நிலை அந்தச் சடங்கு இரவு என்பதால் இதை change செய்ய முடியாது.சோ கதையின் ஸீன், சூழ்நிலை, தான் நேரத்தையும்,சமயத்தையும் முடிவு செய்யும்.
அதே கதையில் இரவு ட்ரெயின் ட்ராவல் என்று வரும். அது ஓரளவுக்கு போகும் இடத்தின் டிஸ்டன்ஸ் அடிப்படையாகக் கொண்டே எழுத முடியும்.பஞ்சாப் கதைக்களம் என்பதால் amrister ஜங்ஷன் ட்ரெயின் டைம் அறிந்து, bathindaa செல்ல ஆகும் 203 கிலோமீட்டர், 3 மணி நேர இரவுப் பயணம் என்பதால் அதற்கு ஏற்பத் தான் கதை அமைக்க முடியும்.
2) கிராமம், நகரம், வெளியூர், வெளிநாடு,மலைப்பகுதி, நீர் நிலை,பாலைவனம், காட்டு பகுதி என்றால் அதை எப்படி கையாள வேண்டும்?
ஒரு கதாபாத்திரத்தைப் போலவே, உங்கள் நாவலில் இடம் என்பதற்கு அதன் சொந்த ‘குரல்’ இருக்க வேண்டும்.
உங்கள் கதாபாத்திரங்கள் வாழும் இடத்தில் அவர்களின் ஆளுமைகள், மதிப்புகள், மனப்பான்மைகள் மற்றும் அவர்களின் பிரச்சனைகளுக்குக் கூட பங்களிக்கலாம். உங்கள் கதையின் அமைப்பு உங்கள் கதையில் உள்ளவர்கள், அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் மற்றும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
உள்ளூர் மொழி வேறுபாடுகளைக் கண்டறியவும்.எப்படி பேசுவார்கள் என்பது தெரியவில்லை என்றால் சாதாரண ஸ்லாங் பயன்படுத்தலாம்.
பஞ்சாப் இது வரை நான் போகாத மாநிலம். ஆனால் பஞ்சாபி குடும்பம் நண்பர்கள் என்பதால் ஓரளவுக்கு என்னால் அவர்களின் வாழ்வை கதைக்குள் கொண்டு வர முடிந்தது. அந்த நிலம், மக்கள், பழக்க வழக்கம் தெரியாமல் எழுதுவது பிரச்சனை ஏற்படுத்தும்.
இந்தப் பிரச்சனையை என் மூன்றாவது கதையில் நான் சந்திதேன்.
பஞ்சாப் சீக்கிய பிரிவில் ஒரு சிலர் டர்பன் அணிவதையே வழிபாடாகச் செய்வார்கள். 23 கிலோ இருக்கும் டர்பனை தலையில் கட்ட ஒருத்தருக்கு 5 மணி நேரம் ஆகும் என்று குறிப்பிட்டு இருந்தேன். அதெல்லாம் இல்லை,தவறான தகவல்களைக் கொடுக்க வேண்டாம் என்று பஞ்சாபி நண்பர்கள் கொண்ட வாசகி சொல்லி இருந்தார்.அவர் சொல்வது தான் சரியென்று அவர்களின் பஞ்சாபி நண்பர்களும் சொன்னார்கள்.
நல்லவேளையாக நான் எடுத்த சோர்ஸ்,டர்பன் கட்ட அவர் வாங்கிய கின்னஸ் சாதனை ரெகார்ட், பஞ்சாப் நாளிதழில் வந்த செய்தி, யு tube வீடியோ லிங்க் எல்லாம் அனுப்பி வைத்தேன். அதன் பிறகு தான் அந்தச் சர்ச்சை ஓய்ந்தது.
சோ தெரியாத ஊர், மாநிலம்,இதுவரை நீங்கப் பார்க்காத இடம் என்றால் ஒன்றுக்கு பத்து சோர்ஸ் தேடி பிடித்துப் படியுங்கள். 100 சதவீதம் அந்த ஊர் பற்றிய description மாறாமல் கொடுக்க முடியும் என்றால் தைரியமாக எழுதலாம். போட்டோ, வீடியோ,இடங்களைப் பற்றிய விவரம் எல்லாம் கூகிள் அங்கிள் கிட்டே இருக்கு. அவரைப் பிடிச்சுக்கோங்கோ.
3) நேரம் என்பதை ஒரு சிலர் 12pm/am என்றும் ஒரு சிலர் இரவு பன்னிரெண்டு மணி என்பதுமாக உள்ளது.
இது பத்தாவது படிக்கும்போது என் தமிழ் ஆசிரியர் எனக்குச் சொல்லியது. தமிழில் எழுதும்போது நேரத்தை அதற்கு உண்டான முழு தமிழ் எழுத்தாகத் தான் எழுத வேண்டும் என்றார். ஒருமணி, நான்கு மணி.நம்பர் எழுதி am/pm என்று எழுதக் கூடாது என்று சொல்லி இருந்தார்.
இது சரியா தவறா என்பதும் தெரியலை. ப்ரூப் readers,தமிழ் புலமை கொண்டவர்கள் தான் பதிலளிக்க முடியும்.
4) வர்ணனைகள் சரியாக இருக்குமா?இல்லை சாமி பாடல்கள்,ஸ்லோகங்கள் சரியாக இருக்குமா?ஆரம்பமே கதையோட்டமாக இருந்தால் சரியாக இருக்குமா?
இதில் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் நிறைய முரண் கருத்து சில வருடங்களுக்கு முன் வந்தது. சாமி ஸ்லோகங்களுடன் ஏன் கதை ஆரம்பமாகிறது வாசகி ஒருத்தர் கேள்வி எழுப்பி இருந்தார்.சினிமா பாடல்கள் நடுவே புகுத்தலாமா? கவிதைகளில் இன்ஸெர்ட் செய்யலாமா வேண்டாமா என்று நிறைய முரண் கருத்துக்கள் எழுந்தது.
மூச்சு விடுவது போல் அந்தந்த மத இறைவனை வழி பட்டு எந்தச் செயலையும் ஆரம்பிப்பதாகக் காலம் காலமாய் மக்கள் மனதில் ஊறி போன ஒன்று. தவிர எழுத ஆரம்பிக்கும் கதை writers block வராமல் கொண்டு போகக் கூட ஒரு pychological பூஸ்டர் ஆக இதை நினைத்துக் கொள்ளலாம்.
இதையும் அந்தந்த கதைக்கு ஏற்ப அந்த எழுத்தாளர் முடிவே சரி. கதை என்பது நம் சொந்த குழந்தை.நம் கற்பனை வித்து. அந்தக் கற்பனை மற்றவர்களின் யோசனைக்கு ஏற்ப நாம் கொண்டு செல்ல ஆரம்பித்ததால் எங்குமே சென்று சேர முடியாது.தவறுகள் இருப்பின் திருத்திக் கொள்ளலாம்.
என்ன தவம் செய்தேன் -திருவிளையாடல் படத்தில் வரும், 'நான் அசைந்தால் அசையும்' பாடலுடன் தொடங்கி இருக்கும்.
காஞ்சி தலைவனில் ‘ இளவரசன் ஆதித்ய கரிகாலன் அடர்ந்த காட்டில் புரவியில் செல்வது போலவும்,
ஊரு விட்டு ஊரு வந்து -திருமண ரிசெப்சன் வர்ணனையுடன்,
சமர்ப்பணம்- தேவ தேவம் பஜே திவ்யப்ரபாவம் |
ராவணாஸுரவைரி ரணபும்கவம் || என்ற பாடல் ஹோட்டல் லாபியில் ஒலிப்பது போலவும்,
, உயிரோடு விளையாடு - ‘கிருஷ்ணா!... ஜனார்தனா!...என்ற பாடல் கோயிலில் ஒலிப்பது போலவும் கதை சூழ்நிலைக்கு ஏற்பத் தான் அமைக்கப்பட்டு இருக்கும்.
இதுவும் எழுத்தாளரின் கற்பனையே சரியாக இருக்கும் .
எல்லோர் ரசனையும் ஒரே மாதிரியா இருப்பதில்லை என்பதை விட,இப்பொழுது வாசகர்கள் படிக்கும் கதைக்கு இப்படி கொண்டு போய் இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று சொல்லும் அளவுக்கு அட்வான்ஸ்ட் ஆக இருக்கிறார்கள்.
ஒரு தீசிஸ் செய்யும் அளவுக்கு அக்குவேறு ஆணிவேராக பிரித்து மேய்ந்து விடுகிறார்கள்.
ஆனால் கற்பனை, கதையின் கரு compromise ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கதை என்பது உங்கள் identity.நீங்கள் நீங்களாக இருந்தால் தான் மதிப்பு. compromise செய்து கொண்டே இருந்தால் உங்கள் individuality காணாமல் போய்டும்.
மற்றவர்கள் கொடுக்கும் அறிவுரை சேமித்து, உங்கள் யோசனையை பயன்படுத்தி, உங்கள் கதை உங்கள் கற்பனை வித்தாக பார்த்து கொள்ளுங்கள். -with love -anitha rajkumar
பதில் கூறிய எழுத்தாள தோழமைகள் அனைவருக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
Comments
Post a Comment