ஃபேன்டஸி நாவல்

#அரட்டை அரங்கம்

இது நம்ம ஏரியா

முகநூல் லிங் :

https://m.facebook.com/story.php?story_fbid=1151245905706459&id=100024631818745


ஹாய் பிரண்ட்ஸ்,


இன்றைய அரட்டை அரங்கத்தில் "ஃபேண்டஸி நாவல்கள்" என்னும் தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.


இந்த மாதிரி நாவல் எழுத என்ன தெரிந்திருக்க வேண்டும்? இக்கதை எழுதும் முன் எழுத்தாளர்கள் கையாளும் வழிமுறை என்ன ? எழுத்து நடை உரை நடை மற்றும் பேச்சு நடையில் எதை கையாள வேண்டும். ஃபேண்டஸி நாவல் மற்ற நாவலை விட மாறுபட்டு காணப்படுவதன் காரணம் என்ன ? உங்களுக்கு பிடித்த நாவல் எழுத்தாளர் பெயர் என்ன ? லிங் இருந்தால் அதற்கான பதிலுடன் அனுப்பி விடுங்கள். முகநூல், வாட்சப், உள்பெட்டிக்கு...


இதற்கான பதில் தெரிந்தவர் முன் வைக்கலாம். தெரியாதவர் வரும் ஞாயிறன்று வரும் அரட்டை அரங்கத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.


அன்றைய கேள்விக்கான இன்றைய பதில்கள்:


ரம்யா சந்திரன் :


** நிஜத்தில் நடக்க சாத்தியமில்லாத விஷியங்களை கற்பனையாய் உருவேற்றி காகிதத்தில் எழுத்துக்காய் மாற்றி ரசிக்க வைக்கும் நாவல்கள் தான் ஃபேண்டஸி கதைகள். எனக்குமே முதல்ல தயக்கமா இருந்தாலும் நாமளும் அதே போல எழுதி பார்க்கலாம்னு தான் எழுத ஆரம்பிச்சேன்.


சாதாரண குடும்ப நாவல்களும் கூட நாம அக்கம் பக்கம் கேட்டது, பார்த்தது, எங்கையோ நடக்குற விஷியங்களை கேட்டதாலோ தான் எழுதுறோம். ஆனா ஃபேண்டஸி நாவல்கள் முழுக்க முழுக்க கற்பனைகள் கலந்தவை தான். நாம யோசிக்கிற மாதிரி மத்தவங்க யோசிக்கிறது அரிது. சிறு பிராயத்தில் நாம பார்த்த, இப்ப பார்க்குற கேலிக்கை சித்திரம் கூட இந்த வகையைச் சார்ந்தது தான் . 


** இதெல்லாம் சிறுவர்களுக்கோ, பெரியவர்களுக்கோ பிடிக்க காரணம் அவை நிஜமல்லாத சுவாரஸ்யம் கொண்ட ஒன்றாக இருந்ததால் தான்.

கடலளவு கற்பனைகளே ஃபேண்டஸி நாவல்களின் பிறப்பிடம். 

இந்த மாதிரியான நாவல்கள் எழுத நிச்சயம் கற்பனைக் களஞ்சியமும், ஆர்வமும் தேவை. இன்னும் சொல்லப்போனா குழந்தைத் தனமும்..

இது என் கருத்து மட்டுமே. என் மகனோடு சேர்ந்து நானும் கார்ட்டூன்ஸ் பார்ப்பேன். காரணம் அது பிடித்ததால் தான்.


** இந்த மாதிரியான கதைகள் எழுதும் முன், கதையோட்டம், கதை மாந்தர்கள், இடம், பெயர்கள் அனைத்தையும் தேடி தேர்வு செய்ய வேண்டும்.‌ ஆரம்பமும், முடிவும் முதலில் முடிவு செய்து விட்டு, பிறகு கதையோட்டத்தின் இடையே மற்றவற்றை பூர்த்தி செய்து விடுவேன். ஆனாலும் மற்ற கதைகளை விட இதுல சில நேரங்களில் லாஜிக் மிஸ்டேக்ஸ் வர வாய்ப்பு இருக்குது.

நான் எழுதிய வரை எழுத்துநடை வடிவில் தான் சில கதைகளை எழுதியிருக்கிறேன். எனக்கு இந்த பாணியில் எழுத ரொம்ப பிடிச்சதால எழுதுறேன். 


** ஃபேண்டஸி நாவல் மற்ற நாவல்களை விட மாறுபட்டிருக்க காரணம், அதன் சுவாரஸ்யமும், கற்பனையும், ரசித்துப் படிக்கத் தூண்டும் விதத்திலான கதைச்சொல்லலும் தான். வெறுமனே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வகையில் எழுதினால் நிச்சயம் அக்கதை ரசிக்கும்படி இருக்காது.

நான் அதிகமாக எவரது நாவல்களையும் படித்ததில்லை. நான் படித்த முதல் ஃபேண்டஸி கதை எழுத்தாளர்,ரியாமூர்த்தி அவர்களின் மாந்த்ரீகன் தான். இந்நாவல் புத்தகமாக வெளிவந்திருக்கிறது.


** அமேசான் லிங்க்.

I think you might like this book – "மாந்த்ரீகன் (Tamil Edition)" by Rhea Moorthy.

Start reading it for free: https:

https://amzn.in/5LnAWcS

வாய்ப்பளித்தமைக்கு ரொம்ப நன்றி அக்கா 🥰


        -  ரம்யா சந்திரன்.


*****

டெய்ஸி ஜோசப் ராஜ் :


அரட்டை அரங்கம் இது நம்ம ஏரியா

அரட்டை அரங்கம்னா ஜாலியா அரட்டை அடிக்கணும். அதனால் இதை கேள்வி பதில் செஷனா இல்லாம ஒரு ஜாலி அரட்டையா எடுத்துக்குவோம்.

1. ஃபேன்டஸி நாவல்கள் எழுத என்ன தெரிந்திருக்க வேண்டும்

குறுநகையுடன் என் மனதில் தோன்றிய முதல் பதில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். கோச்சுக்காதீங்க ஆனந்திமா! ஜஸ்ட் ஃபார் ஃபன்

ஃபேன்டஸி நாவல்களும் சாதாரண கதைகள் போன்றதுதான். என்ன ஃபேன்டஸி நாவல் என்று சொல்லிக் கொண்டு நம் கற்பனையை இஷ்டத்திற்கு எவ்வளவு வேண்டுமென்றாலும் விரித்துக் கொள்ளலாம். அது நமக்குக் கிடைக்கும் சுதந்திரம். ஆடு, மாடு, கோழி குருவி, நாய், ஆமை என்று எந்த உயிரினம் பேசினாலும் அது எப்படி சாத்தியம் என்று யாரும் சண்டைக்கு வரமாட்டார்கள். 

என்ன ஒரே விதி, நம் எழுத்தின் மூலம் வாசகர்கள் காணாத ஒரு ஃபேன்டஸி அதாவது ஒரு கற்பனை உலகிற்கு அழைத்துச் செல்லணும். கற்பனையில் ஒரு புதிய உலகைப் படைக்கலாம். அதில் வரும் கதை மாந்தர்களைப் பேச வைக்கலாம். சிரிக்க, அழ, ஏன் கவிதை கூட எழுத வைக்கலாம். அனைத்தும் உங்க கற்பனையைப் பொறுத்தது.

நான் எழுதிய ‘ஒத்தக்கல்லு மூக்குத்தி’ நாவலில் அந்தக் கதையின் ஹீரோ வளர்த்த அவனுடைய செல்ல நாய் இறந்து அவனிடம் ஒரு ஆன்மாவாய்த் திரும்பி வருகிறது. அது அவன் கண்களுக்கு மட்டும் தெரியக் கூடிய ஒரு கோஸ்ட். பின்னர் அவன் காதலி கண்களுக்கும் தெரிகிறது.

இந்த ஒன் லைன் ஸ்டோரியை என் மனதில் விதைத்தது என் குடும்பத்தில் குழந்தைகள் போல் வளர்ந்த ஹாரி, ஹெர்மி என்ற இரண்டு பொமரேனியன் நாய்குட்டிகளும் எங்க வீட்டுக்கருகிலிருக்கும் கடற்கரையில் அனாதையாய் திரியும் கடற்கரை நாய்களும்தான்...

கதைக்குள் ஒரு கோஸ்ட் (ghost) வந்து அது பேசத் தொடங்கினாலே அது ஃபேன்டஸி கதைக்குள் போய்விடுகிறது.

என் கதை பற்றி நான் கொடுத்த ஒரு இன்ட்ரோவையே இங்கே பதிகிறேன். படித்துவிட்டு உபயோகமான டிப்சானு சொல்லுங்க.

இந்த நாவல் முற்றிலும் கற்பனையான, சாகசங்கள் நிறைந்த ஓர் காதல் கதை. இந்தக் கதையில் பல மந்திர, தந்திர, சாகசங்கள் புரிவது ஒரு குட்டிநாய் ஹாரி. நம் ஹீரோ ப்ரேமின் அந்தச் செல்ல நாய் ஹாரி, ஒரு விபத்தில் இறந்தபின் ஓர் அரூப ஆன்மாவாய் தன் எஜமானிடமே திரும்பி வருகிறது.

பல திறமைகளைத் தன்னகத்தே கொண்ட பொறியியல் பட்டதாரியான ஹீரொ ப்ரேம், தன் பொறியியல் மென்பொருள் வேலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, ஒரு பைத்தியக்காரனைப் போல் கடற்கரை நாய்களோடு கடற்கரையை சுற்றி வருகிறான். அவனுடைய மனமோ நிம்மதி இழந்து தவிக்கிறது.

அப்பொழுதுதான் அவனுடைய நாய் அரூப ரூபத்தில்  அவனிடம் ஒரு செய்தியோடு வருகிறது., எர்டிக்கா கோளின் பேரரசியான கிளியோபாட்ராவை மேன்மை பொறுந்திய ஓநாய்களின் இரத்தச் சிவப்பு சந்திரகிரஹன முழுநிலவு நாளான அன்று சந்திக்க வேண்டும் என்பதே அவர்களுக்கு வந்த கட்டளை. இருவரும் அந்தப் புதுமையான நாயுலகிற்குச் செல்கிறார்கள். 

புவியில் தொலைத்த அரசியின் புதல்விகளை அவளிடம் கொண்டு வந்து சேர்ப்பதுதான் அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை... தங்களின் ஏழாவது ஜென்மத்தில் பெண்களாய் பிறந்து தங்களின் 25வது வயதில் ஜிலுஜிலுவென்றிருக்கும் அந்த ஐந்து அழகிகளையும், குறிப்பிட்ட காலகட்டத்திற்குள்  அந்தத் தாயிடம் கொண்டு வந்து சேர்ப்பதுதான் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட டாஸ்க். அந்த டாஸ்க்கை வெற்றிகரமாய் முடித்தால் ப்ரேம் தன்னுடைய தோஷங்கள் நீங்கி அவன் தன் காதலியோடு இணையலாம் என்று கூறுகிறது ஹாரி. 

எர்டிக்கா கோளில் நாய் ஓணாய்களுக்கு இடையே பல யுகங்களாக நடக்கும் சிம்மாசனப் போட்டிச் சண்டையில் மாட்டிக் கொள்கிறான் ப்ரேம்      

பொறியியலில் கடல் தொழில் நுட்பம் (Ocean Technology) படித்து, கடலையும், கடல் சார்ந்த மற்ற தொழில்களையும் கப்பலையும், கரைத்துக் குடித்த நிலா, பிரேமின் அன்புக் காதலியாய் வந்து, ஹாரியோடு சேர்ந்து மூவரும் கடலையே கடைகிறார்கள். அமிர்தம் கிடைத்ததா என்று கதையின் முடிவில் பார்ப்போம்.

உலகில் உள்ள ஐவகை நிலங்களான குறிஞ்சி, முல்லை மருதம், நெய்தல், பாலை, அவற்றில் உள்ள, மலைகள், காடுகள், அருவிகள், வயல்வெளிகள், கடல், பாலை நிலங்கள் என்ற அனைத்து வகை நிலங்களிலும் ஏதாவது ஒரு வகை நிலத்தில், ஒவ்வொரு பௌர்ணமியிலும் ஒரு பெண் என்ற விகிதத்தில் அந்த 25 வயது அழகிகளை ஒவ்வொரு பெண்ணாய் நம்ம ஹீரோ ப்ரேம் தூக்க வேண்டும்.

வைரம்-வெள்ளை, மாணிக்கம்-சிவப்பு, மரகதம்-பச்சை, புஷ்பராகம்-மஞ்சள், மற்றும் நீலம்-ஷப்பையர் இந்த ஐந்து நவரெத்தினக்கற்களில் ஏதாவது ஒரு கல் பதிக்கப்பட்ட ஆபரணத்தை அவர்கள் அணிந்திருப்பார்கள்.

அந்தப் பெண்கள் ப்ரேமின் சிந்தையில் மலர வேண்டுமென்றால் அரசியால் அவனிடம் கொடுக்கப்படும் நவரெத்தினக்கல்லும் அந்தப் பெண்களின் ஆபரணங்களில் உள்ள அதே இன நவரெத்தினக் கல்லும் உரச வேண்டும். 

ஆனால் அவர்கள் உலகின் எந்த மூலையில் பிறந்திருப்பார்கள், அவர்கள் அணிந்திருக்கும் எந்த ஆபரணத்தில் அந்தக் கல் புதைந்திருக்கும் என்ற அனைத்துமே இரகசியமாயிருக்கும்!

குழந்தைகள் பாடும் ரைம்சிலிருந்து ப்ரேமிற்கு பல குறிப்புகள் கிடைக்கிறது. அவன்தன் செல்லநாயோடு உலகம்முழுவதும் பயணிக்கிறான்

நம் ஹீரோவால் எல்லா உயிரினங்களின் உணர்வுகளோடு அவற்றின் பாஷையில் பேச முடிகிறது.

அந்த ஐந்து பெண்களையும் தேடிக் காப்பாற்றும் பணியில், ப்ரேமால் காப்பாற்றப்படும், பவளமீன், ஆமை, சிட்டுக்குருவி, ஆடு, கொரிலா, ஃப்ளமிங்கோஸ், அணில், என்று பல உயிரனங்கள் அவனுக்குப் பெரிதும் உதவுகின்றன.

ப்ரேம், நிலா காதலை வைத்தே அவர்களைக் கலாய்த்து கிண்டல் கேலியோடு இந்தக் கதையை அழகாய் நகர்த்துகிறது ஹாரி.

ப்ரேம் கவிதைகள், மணற்சிற்பங்கள், உயிர்களிடத்து காட்டும் ஜீவகாருண்யம் நிறைந்த தனித்தன்மையுள்ள MULTI TALENTED, VERSATILE PERSONALITY யாக வந்து தூள் கிளப்புகிறான்.

நிலா கப்பல் தொழிலில் ஒரு சக்ரவர்த்தினியாக வந்தாலும், ஒரு சாதாரணப் பெண்மணியாய் அன்பையும், காதலையும் காட்டுவதில் நம் மனதைக் கொள்ளையடிக்கிறார். 

இதற்கிடையே வரும் ப்ரேமின் உறவுகள், நாய்களின் காதலனாய் வரும் அவனை ‘வைத்துச் செய்கிறார்கள்.’


முக்கியமாக அவனுடைய அப்பா தன் மகனையே தன் கிண்டலிலும் கேலியிலும் தரையில் போட்டுத் தேய்த்தெடுக்கிறார். அவனுடைய அம்மாவோ மகனை முந்தானைக்குள் பொதிந்து வைத்துக் கொள்கிறார். 

கதைக்கு ஒரு வில்லன் வேண்டுமே! அவன்தான் ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் ஒரு ஓநாயாய் மாறும் நிலாவின் அத்தை மகன் கேசவன்!

ஆறு யுகங்கள்‘ கழித்து அந்த ஏழாவது யுகத்தில் சூப்பர் உல்ஃப் ப்ளெட் ரெட் மூன்’ என்று வருடத்தின் முதல் சந்திரகிரஹனத்தன்று தொடங்கும் கதை, அதே வருடத்தில் வரும் ஆறாவது பௌர்ணமியோடு முடிகிறது.

அதற்காக நான் படைத்த கற்பனை உலகம்தான் எர்டிக்கா என்னும் ஒரு புதிய கோள். அது ஓநாய்களின் உலகம். அந்த உலகத்தின் பின்னூட்டமாய் வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஜூலியஸ் சீசர், கிளியோபாட்ராவின் காதல் கதையும், அவர்களுக்கு எதிராய் சதி செய்து முதுகில் குத்திய புரூட்டஸ், காஸியஸின் கதை, அவர்களின் எர்டிக்கா கோள் நாய்கள் மற்றும் ஓநாய்கள் உலகம் அவர்களின் தெய்வமான நிலவுத்தாய் சந்திரமதி தர்மத்தின் பக்கம் நின்று அந்த நாய்களின் உலகம் காப்பாற்றப்படுவது.

அரசி கிளியோபாட்ரா எதிரிகளின் சதியால் புவியில் தொலைத்த  ஐந்து செல்லப் பெண்களும் அரசிக்குத் திரும்பக் கிடைத்தார்களா. ப்ரேமுக்கு அவன் காதலி நிலா கிடைத்தாளா?

அவ்வளவுதான் ஒரு வரியில் தோன்றிய கதை ஒரு லட்சம் வார்த்தைகள் நிறைந்த நாவலாய் கற்பனையில் விரிந்துள்ளது.

கற்பனை வளம், கதையின் கட்டமைப்பு, எழுத்து நடை, ஜாலி உரையாடல்கள், ஒரு நல்ல பேக்ட்ராப். தேட்ஸ் ஆல் ஒரு ஃபேன்டஸி நாவலை யார் வேண்டுமானாலும் எழுதலாம்  

2. எழுத்தாளர்கள் கையாளும் வழி முறை என்ன?

நிறைய கனவு காணுங்கள். உங்கள் கண் முன்னால் நடக்கும் நிகழ்வுகளை உங்கள் மனதில் ஆழமாய்ப் பதிவிடுங்கள்.

3. எழுத்துனடை, உரைநடை, பேச்சு நடை???

ஃபேன்டஸி நாவலுக்கென்று என்னுடைய, எழுத்துநடை, பேச்சுநடை, உரையாடல்கள் என்று எதையும் நான் மாற்றிக் கொள்ளவில்லை. என் கதையில் வரும் நாய்கூட கவிதை எழுதுவதாய்க் காட்டியிருப்பேன்.

ஃபேன்டஸி நாவல்கள் மற்ற நாவல்களிலிருந்து மாறுபட்டுக் காணப்படுவதற்குக் காரணம்.

அதிலிருக்கும் நம்ப முடியாத பல காட்சிகளும், கற்பனை கலந்த எதார்த்தமும்தான்.

4. உங்களுக்குப் பிடித்த ஃபேன்டசி நாவல்கள் எழுத்தாளர்கள் லிங்க்ஸ்

தமிழில் என் மனதைப் பாதித்த ஃபேன்டஸி கதைகள் படித்ததில்லை. இப்பொழுது நேரமின்மை காரணமாயிருக்கலாம். லிங்க் கொடுத்தால் படிக்க முயற்சி செய்கிறேன்.

ஆங்கிலத்தில் எத்தனையோ நாவல்கள் உண்டு. அதில் ஹாரிபாட்டர் ஒரு மேஜிக்கல் நாவல் என்றாலும் அதை ஓர் ஃபேன்டஸி கதையாகத்தான் நான் நினைக்கிறேன். 

ப்ரான்டன் சான்டர்சன் அண்ட் ராபர்ட் ஜோர்டான் Brandon Sanderson, and Robert Jordan  இவர்களின் கதைகள் என் மனதைவிட்டு நீங்காதவை.

‘ஒத்தைக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி’ என்ற நாவல் டூ பார்ட்ஸ் நாவலா அமேசானில் உண்டு. லிங்க் வேணும்னா சொல்லுங்க தர்றேன்.

அரட்டை அரங்கை முன்னெடுத்த்ச் செல்லும் ஆனந்த ஜோதிக்கும் மற்றும் அனைத்து எழுத்தாள வாசகத் தோழமைகளுக்கும் என்னுடைய நன்றிகளும் வாழ்துக்களும்.

என்னுடைய எழுத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சாய் லக்ஷ்மி, செல்வராணி மா, மற்றும் கவிதா அன்புச் செல்வனுக்கு என்னுடைய ஸ்பெஷல் நன்றிகள்.


*****


பார்கவி முரளி :


'ஃபேன்டஸி' - ஒரு எழுத்தாளரோட கற்பனை வளத்திற்கான சான்று. எழுத்தாளர் தங்களோட கற்பனையை மொழி புலமையோட வெளிப்படுத்துவது மட்டும் ஃபேன்டஸி கதைகளுக்கான வெற்றி என்று சொல்லிவிட முடியாது. அந்த கற்பனை வாசகர்களை கவரும் விதத்தில் இருக்க வேண்டும். எழுத்தாளருக்கு அந்த கதையை எழுதும்போது, எப்படி காட்சிகள் கற்பனையில் விரிந்ததோ, அதே போல வாசகர்களுக்கும் அந்த காட்சிகள் மனக்கண்ணில் தோன்ற வேண்டும். என்னை பொறுத்தவரை அது தான் அந்த கதைக்கான வெற்றி. 

மேலும், ஃபேன்டஸி கதைகள் எதார்த்தத்துக்கு அப்பார்ப்பட்டவை. அதனால், லாஜிக் இருக்காது தான். ஆனால், அதையும் வாசகர்களுக்கு கன்வின்சிங்காக கொடுக்க முயன்றால், அந்த கதையும் வெற்றிபெற்ற கதை தான். 

எழுத்து நடை, பேச்சு நடை எல்லாம் மற்ற கதைகளில் எப்படி இருக்குமோ அதே போல  ஃபேன்டஸி கதைகளிலும் இருத்தல் நலம். கற்பனை என்பதால் இடம், பொருள் பற்றிய விளக்கங்கள் இருக்கலாம். இதுவும் மிகாமல், வாசிப்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்திவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

ஃபேன்டஸி கதைகள் எழுதும் முன்பு, முதலில் எழுத்தாளர் அவர்களின் கற்பனை உலகில் பயணிக்க வேண்டும். முழுதாக இல்லை என்றாலும், ஒவ்வொரு அத்தியாயத்திலும் இதை தான் கூற போகிறோம் என்று முன்கூட்டியே தயார் செய்து வைத்து விட்டால், அந்தந்த அத்தியாயம் எழுதும்போது, அதனுடன் சில காட்சிகளை இணைத்தும் வெட்டியும் எழுதுவதற்கு சுலபமாக இருக்கும். 


ஃபேன்டஸி கதைகளின் பக்கம் என்னை இழுத்த எழுத்தாளர் JK Rowling தான். இப்போதும் கூட, அவரது எழுத்துகள் என்னை பிரமிப்பில் ஆழ்த்துவது உண்மை.


******

அர்பிதா :


பான்டசி கதைகள்ல என்னோட ஈர்ப்பு ஆரம்பிச்சது தோராயமாக நான்கு இல்லை ஐந்து வயசுல இருக்கலாம். நம்ப முடிலயா, ஆனா நிஜம் தான். எனக்கு மட்டும் இல்லை, ஏணைய இந்திய குழந்தைகளோட முதல் பான்டசி சூப்பர் ஹீரோ கிருஷ்ண பரமாத்மா தான். ஆரம்பத்துல எல்லாமே நிஜம்னு தான் நானும் நினைச்சுட்டு இருந்தேன். போக போக தான் மனிதனோட கற்பனையின் எல்லையில்லா சக்திய யூகிக்க முடிஞ்சது. நாம இதுவரை பார்த்திராத, கேட்டிராத, படிச்சிராத விஷயங்களை கூட காட்சிகளா கொண்டு வர முடியும். 

அது மட்டும் இல்லை, நமக்காக நாம புது உலகத்தை கூட உருவாக்க முடியும். அஃன்றிணைக்கும் உயிர் கொடுக்க முடியும். நம்மளோட ஆசை, பயம், கனவுனு எல்லாத்துக்கும் உயிர், உடல், மொழி கொடுத்து உலாவர செய்ய முடியும். அப்டி ஒரு விஷயம் என் எழுத்துக்குள்ள எப்படி வந்துச்சுனா.,

சிறு வயதில் இருந்தே படிக்கும் ஆர்வம் அதிகம் எனக்கு. கல்வி படிப்பை விட கதை புத்தகத்தை படிப்பதில் தான் அதிக ஆர்வம். 😁

அதுவே நான் எழுத வரவும் காரணம். நான் எழுத ஆரம்பித்த காலத்தில், ஏதாவது புதிய படைப்பை வாசகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற முயற்சியே நான் கதை எழுதும் போது அதிகம் இருக்கும்.

அதுவும் ஃபான்டஸி கதைகளை நான் கையில் எடுத்த போது, நடப்பில் சாத்தியமே இல்லாத பல கற்பனைகளை படிக்க அந்த பிரிவு இலகுவாக இருந்தது என்பதை விட, புதிதாய் எதையாவது எழுத வேண்டும் என்ற என் குறிக்கோளுக்கு இந்த பிரிவு ஒரு தீனியாகி போனது என்பது தான் உண்மை.


அதிலும் நான் இந்த பிரிவை அதிகம் விரும்ப மற்றொரு காரணம்,

எனக்கு எப்போதும் ஒரு கற்பனை உண்டு. எழுத வரும் முன்பே, நானே என்னுள் இந்த கற்பனையை பல முறை செய்து இருக்கிறேன்.

அது என்னனா, ராஜா காலத்தில், அதாவது, ராஜ ராஜ சோழன் காலத்து முன்பு இருந்த காலகட்டத்தில் இருந்த மன்னரும் மக்களும் அவர்களின் வாழ்க்கை முறையும், அதுவும் இயற்கையோடு ஒன்றி அவர்கள் வாழ்ந்த விதமும், அதில் இருக்கும் நுணுக்கமும் எப்படி இருந்து இருக்கும் என்ற கற்பனை என்றும் என்னுள்/இன்றும் குறையாமல் இருந்து கொண்டே தான் இருக்கும்.

இப்டி என்னுள் இருக்கும் அந்த கற்பனை தான் என்னை இந்த பிரிவிற்கு ஈர்த்து இருக்க வேண்டும் என்பதே என் நம்பிக்கை.

எனக்கு காதல் கதையும், ரொமான்ஸ் பிரிவையும் எழுதுவதை விட, ஃபான்டஸி, கிரைம், மிஸ்ட்ரி போன்ற பிரிவுகளில் எழுதுவது எளிது மற்றும் பிடித்ததுமே.

இன்னைக்கு தொழில்நுட்பங்கள் நிறைந்து பான்டசி கதைகளுக்கு உயிர் கொடுத்து நம் கண்களுக்கு விந்தைய விருந்தா ஆக்குது. ஆனா அத்தனைக்கும் மூலதனம் ஒரு எழுத்தாளரோட எல்லையில்லா கற்பனை மட்டுமே தான். அதுமட்டுமில்ல பான்டசி படங்களுக்கு ஒரே ஒரு காட்சி மட்டும் தான். பான்டசி கதைகளுக்கு படிக்கிற ஒவ்வொரு வாசகருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை வாய்ந்த காட்சி இருக்க முடியும் மனக்கண்ல.

ஆனால் ஏனோ, நம் வாசகர்களுக்கு இந்த பிரிவுகள் அதிகம் படிக்கும் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லையோ என்றே எனக்கு தோன்றும். இதை படிக்கும் வாசகர்கள் உங்களுக்கு பிடித்த பிரிவையும் சொல்லிட்டு போங்க.

****

செவ்வந்தி துரை:


பேன்டஸி எழுத கற்பனை செய்ய தெரிஞ்சி இருக்கணும்.. வேறு ஒரு உலகத்தை படைக்கும் அளவுக்கு தெரிஞ்சிருக்கணும். வேற்று உலகம், வேற்று மனிதர்களை உருவாக்க தெரிஞ்சி இருக்கணும்..

கையாளும் வழிமுறை.. தன் எழுத்துகளுக்கு சுதந்திரம் கொடுப்பது மட்டும்தான்..

சாதாரண கதையாக இருந்தால் பேச்சு மொழியாக எழுதலாம். இறந்த காலம் ராஜா காலத்து கதையாக இருந்தால் எழுத்து  வழக்கை பயன்படுத்த வேண்டும்.

ஃபேண்டஸி மாறுபட்டு இருக்க காரணம் அதூ முழுக்க முழுக்க கற்பனை புனைவு என்பதாலதான்.. கற்பனைகள் எப்போதும் அலாதியானவை. 

எனக்கு பிடித்த ஃபேன்ஸி எழுத்தாளர் செவ்வந்தி துரை..


லிங்க்..


"வெதின்ஸா நகரத்து இராஜகுமாரி..! (முடிவுற்றது)", - பிரதிலிபியில் படிக்க :

https://pratilipi.page.link/LNZmp7DChVAxpQ5u6

இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்


"எம தூதனின் காதலி!✔️✔️", - பிரதிலிபியில் படிக்க :

https://pratilipi.page.link/joRBC6ui5oh32cf17


இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்

*****

மீனாட்சி முருகப்பன் :

ஃபேண்டஸி கதைகள் எழுதுவதற்கு கொஞ்சம் கற்பனை வளம் இருந்தால் போதும். எப்பொழுதும் இருக்கும் ஒரு விஷயத்தை ஆராய்ந்து எழுதுவதைத் காட்டிலும் இல்லாத ஒன்றை நம் கற்பனையில் புனைவது எளிது. அதே போல் தெரிந்த விஷயங்களைப் காட்டிலும் தெரியாத ஒன்றில் இருக்கும் சுவாரஸ்யமும் அதிகம். அதனால் அது சுவாரஸ்யம் மிகுந்ததாக இருக்கலாம். மேலும் நம் கற்பனை உலகில் வாசகரை கட்டி போடும் அம்சம் இந்த கதைகளில் இருப்பதாக நான் நினைக்கிறேன். 

என் தீரா வஞ்சம் கதையில் வரும் அகரன் கதாபாத்திரம் மற்றும் அற்றைத் திங்களில் வரும் நனியிதழ் கதாபாத்திரம் இருட்டும் ஃபேண்டஸி கதாபாத்திரங்கள். கதையில் உள்ள மத்த பாத்திரங்களைப் காட்டிலும் இவர்கள் இருவரும் வாசகர் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றனர்.

*****

பதிலுரைத்த  எழுத்தாள தோழமைகள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏





Comments

  1. நாவல் உலகில் சிரமாமன விஷயம் ஃபேன்டஸி நாவல் எழுதுவது. நாம் உருவாக்கும் ஒவ்வொன்றும் இதுவரை எவரும் அறிந்திடாத ஒன்றாய் யோசித்து உருவாக்க வேண்டியிருக்கும். அதுவும் எழுத்தாளரும் வாசிப்பவரும் நேர் அலைவரிசையோடு கதையை அனுபவித்து மகிழும்படி காட்சிகள் நகர்தல் வேண்டும்.

    கற்பனை உலகில் எழுதுபவன் வைப்பதுதான் சட்டம்‌. வாசகர்கள் எழுத்தாளனிடம் 100 சதவீதம் துல்லியத் தன்மையை எதிர்பார்க்க கூடாது. கற்பனைகள் கலப்பு இருந்தால் மட்டுமே அதனுக்கு கதை என்று பெயர்...

    யதார்த்தம் விரும்பும் மனதிற்கு இவ்வகை செயற்கை கதைகள் பிடிக்காது. என்னைப் போல விதவிதமான உலகில் சஞ்சரிக்க விரும்பும் உள்ளங்கள், ஃபேண்டஸி நாவல்களை விரும்புவதில் தவறேதும் கிடையாது. இதை சிலர் ஏற்பதில்லை... அவர்களிடம் நாம் சொல்ல எதுவுமில்லை...

    எனக்கு பிடித்த ஃபேண்டஸி எழுத்தாளர் மீனாட்சி அடைக்கப்பன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மா.... என் பெயர் குறிப்பிட்டமைக்கு

      Delete

Post a Comment