#ஜோதிரிவ்யூ
எழுத்தாளர் : Arnika Nasser
படைப்பு : யார் முதலில்
வெளியீடு : விகடகவி
லிங் :
காலையில் எழுந்து தன் வீட்டின் அருகில் உள்ள முருங்கை மரத்தில் காய்த்துக் கிடந்த முருங்கை காய்களை எண்ணிப் பார்த்தவள், நேற்றை விட இருபது காய்கள் குறைவாக தோன்றவும், உடனே பக்கத்து வீட்டு நபர் வேலைக்காரியை வைத்து திருடி விட்டதாக எண்ணி வார்த்தைகளை விடுகிறார். காரணம் புரியாமல் வந்து நின்று விசயத்தை கேட்பவர் மீது குற்றம் சுமத்த, அவரோ சாதாரணமாகத்தான் பதில் கூறுகிறார்.
அவரது சமாதானத்தை ஏற்காமல் "நடிக்காத நூர்ஜஹான்ம்மா நீதான் எடுத்திருப்ப. குதுலு குந்தாணி மாதிரி உன் வீட்ல ஒரு வேலைக்காரி இருக்காள்ல… அவ உன் சார்பா முருங்கைக்காய்கள் திருடியிருப்பா. ஆளுக்கு பத்தா பங்கு பிரிச்சிருப்பீங்க!” என்று கூற அவர் மறுப்பாக பதிலளிக்க, அவள் எகிறிக் கொண்டு வர🤣🤣🤣 பதிலளித்தும் முடியாமல் கணவனை அழைத்து விசயத்தை கூற, உடனே அவளும் கூற என்ற முருங்கைகாயில் ஆரம்பித்த சண்டை, வீடு கட்டும் போது நடந்த திருட்டு வரையில் செல்கிறது.
கட்டையும், அரிவாளும் கைகளில் பிறக்கிறது. வார்த்தை யுத்தம் தொடர்ந்து நடக்கிறது. அதற்குப் பிறகு அவர்களது நிலை என்ன? சமாதனம் ஆகிறார்களா இல்லையா? என்பதை அருமையாக சொல்லியிருக்காங்க.
சிறுகதையை வாசிக்கும் போது பக்கத்து வீட்டு சண்டையை நேரில் பார்த்தது போன்ற அனுபவத்தை தந்தது. முடிவு மாஸ் ... சிறுகதையிலும் ஒரு சிறப்பான கருத்தை கொடுத்திருக்கிறாங்க. எழுத்து நடையும், கதையோட்டமும் ரசிப்புடன் கண் எதிரில் ஒரு களேபரத்தை கொண்டு வருகிறது.
மேலும் நிறைய எழுதவும், விருதுகள் பல பெறவும் மனமார்ந்த நல்வாழ்த்துகள் சார்💐💐💐
Comments
Post a Comment