எழுத்தாளர் பாலகணேஷ்

 


#ஜோதிவிமர்சனம்

எழுத்தாளர் : பாலகணேஷ்

படைப்பு : இருள் கொலைகள்

வெளியீடு : புஸ்தகா

விக்னேஷ் :

கண் தெரியாத காரணத்தால் ஆர்மியில் இருந்து விடுவிக்கப்பட்டு, தன் அத்தை வீட்டிற்கு வந்திருக்கும் இவர், வெளியே சென்றிருக்கும் நேரம் எதிர்பாராத விதமாக விபத்தில் மாட்டுகிறார். அவரை காப்பாற்றி இருவர் வீட்டிற்கு அழைத்துச் செல்ல அங்கு ஒரே களேபரம். ஆண், பெண்ணின் சப்தம் மாறி மாறி கேட்க, ஒரு கட்டத்தில் யாரோ இறந்தது போலவும், ஒரு பெண்ணின் பெர்பியூம் வாசத்தையும் நுகரும் இவர், தட்டுத் தடுமாறி தப்பி ஓடுகிறார்.

அத்துடன் எதிரியா, நண்பரா, உறவினரா என்று தெரியாமல் குழப்பம் அவருக்கு கண் பார்வை தெரிந்ததில் இருந்து ஆரம்பமாகிறது. அவரை துரத்தும் எதிரிகள் யார் ? அத்தை பெண்ணாக வந்திருக்கும் புதினா சாரி சாரி புனிதா குற்றவாளியா அல்லது நிரபராதியா? எதற்காக அந்த கொலை நடைபெற்றது. கொலையை செய்தது யார் என பல கேள்விகளைக் கொடுத்து அவர்களோடு நம்மையும் விறுவிறுப்பாக இயங்கும் விதமாக கதைக்களம் இருக்கிறது.

நானும் எதிரி யாராக இருக்கும் என்று யோசித்து யோசித்து 🤣🤣 இறுதி வரை குழம்பிட்டேன். வந்தனாவா? அனாமிகாவா? சாரோட புதினா சட்னியா? மிஸ்டர் தொப்பை கோபாலா என்று 🤣🤣🤣 

நாவல் வாசிக்க ரொம்ப நன்றாக இருக்கிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லை. அப்படியே நம்மையும் துப்பறிய செய்து விடும் நோக்கில் கதையோட்டம் நகர்கிறது.

எழுத்து நடை வெகு சிறப்பு. மேலும் நிறைய எழுதவும், விருதுகள் பல வாங்கவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சார்💐💐

Comments