#ஜோதிரிவ்யூ
எழுத்தாளர் : பாலகணேஷ்
படைப்பு : முன்னை இட்ட தீ
வெளியீடு : புஸ்தகா
உதய் :
பிரபல முன்னணி தொழிலதிபரான இவர், இரண்டு மகன்கள், மகள், மனையாள் என்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வருபவர். அலுவலக ஃபைலில் கையொப்பம் இடுவதற்காக பார்க்கின்ற போது "நாளை உன் மகனுக்கு இறந்த நாள்" என்று எழுதி வைக்கப்பட்டு இருக்கிறது. திகைப்புடன் அதை கொண்டு வைத்தவரை அழைத்து விசாரிக்க, ஆரம்ப அத்தியாயமே விறுவிறுப்பாக செல்கிறது.
அடுத்து கைப்பேசியிலும் அதேபோல் சேதி வர "யாருடா அது? அப்போ எதிரி பக்கத்தில் தான் இருக்கிறான்" என்ற எண்ணத்தை அவருக்கு மட்டுமல்ல நமக்கும் தோற்றுவிக்கிறது.
பதற்றத்தில் வீட்டிற்கு ஓடுபவரின் வாழ்வில் நடப்பதென்ன? குறுஞ்செய்தியில் வந்தது போல வாரிசு மரணிக்கப்படுகிறாரா? எதனால் யாரால் அப்படி வருகிறது? அவர் வாழ்வில் செய்த தவறென்ன? "இது ஆரம்பம் தான் இழப்புகள் தொடரும்" என்பதன் அர்த்தம் என்ன ? போன்ற பல கேள்விகளை கொடுத்து, மிரட்டலான பதில்களை விறுவிறுப்பாக கொடுத்திருக்கிறாங்க.
நந்திதா & நரேன் காதலும் பேச்சும் நன்றாக இருந்தது. நவீன் பாசத்திற்குரியவன். ராகவ் அப்பாவை போலவே... தாண்டவன், யாமினி மிரட்டல்!
ஷர்மா சந்தேகத்திற்குரிய பட்டியலில் ஆரம்பத்திலேயே இடம் பெறுகிறார். இன்ஸ்பெக்டர் இன்னும் விசாரணையை துரிதபடுத்தாமல் விட்டு விட்டாரே என்று தோன்றியது.
ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பு, சஸ்பென்ஸ், அச்சத்திற்கு பஞ்சமில்லை. ஒரு சில நேரங்கள் "ஐயகோ!! அடுத்து என்ன நடக்கப் போகுதோ... " என்ற எதிர்பார்ப்பும், "அச்சச்சோ!! எதுவுமே நடந்து விடக்கூடாது" எனும் பயமும் நமக்குள் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
கதை ஒரே மூச்சில் படித்து முடித்து விடும் விதமாக எழுதப்பட்டிருக்கிறது. படித்து முடித்த பிறகு அழுத்தமும், வருத்தமும், கண்ணீரும் அப்படியே உறைந்து வேறு எந்த எண்ணமும் அருகில் வராமல் செய்து விட்டது. "மாதா பிதா பாவம் மக்கள் தலையிலே என்பார்கள்" என்பதற்கான அர்த்தம் கொடூரமாக தோன்றியது... பாவம் அல்லவா அவர்கள்!!
நாவல் ரொம்ப நன்றாகவும், மிரட்டலாகவும் இருந்தது சார். மேலும் நிறைய எழுதவும், விருதுகள் பல பெறவும் மனமார்ந்த நல்வாழ்த்துகள் 💐💐💐💐
Comments
Post a Comment