காதலனே நீ காதலன் ஆனாய்



கதைக்கான மீம்ஸ்:



அமேசான் லிங்:

புத்தகம் கிடைக்கும் இடம்:
சகாப்தம் பதிப்பகம்
9176374227

புவனா சந்திரசேகரன் சகோதரியின் விமர்சனம் :


நேத்து ப்ராமிஸ் செஞ்ச மாதிரி அடுத்த விமர்சனத்தோட வந்துட்டேன்.

ks 119- காவலனே நீ காதலன் ஆனாய்(ல்)!
தலைப்பிலேயே கதையைப் பத்தி க்ளூ கொடுத்துட்டார் ஆசிரியர். ஆமாம், காவல் அதிகாரி நாயகன் . அவருங்கு சரி சமமாத் தகுதியுள்ள பிரபல கிரிமினல் லாயர் தான் நாயகி. 

முதல் சந்திப்பிலேயே மனதைத் தொடற காதல். நாளாக நாளாக ஒருத்தருக்காக ஒருத்தர் உருகுறது, கல்யாணம் வரைக்கும் போய் நிக்கறது, அப்புறம் திரும்ப சந்திக்கறது எல்லாமே சுவாரஸ்யமா நகைச்சுவையா சொல்லிட்டே போறாரு.

காதல் கதை தான் அப்படின்னு உறுதியாச் சொல்லறதுக்காகக் காதல் ரசத்தை அள்ளித் தெளிச்சிருக்காங்க கதை முழுவதுமே. அதுவும் நகைச்சுவையா.

எந்தத் திரைப்படக் கதைக்கும் குறைஞ்சதேயில்லை இந்தக் கதையும் .

நாயகன் சத்யா என்ற சத்யவாசன் ஐ.பி எஸ். ஆஃபிஸர். நாயகி கிரிமினல் லாயர் சந்தியாவின் வாசு அத்தான். மிடுக்கான ஹீரோ. துடுக்கான ஹீரோயின். விறுவிறுப்பாகவும் நல்ல சுவாரஸ்யத்தோடயும் நகைச்சுவையோடயும் கதை சொல்லியிருக்காங்க. விஷ்ணு நாயகனின் தோழன் நகைச்சுவை விருந்து படைக்கிறார். அவருக்கு ஜோடியாக நாயகியின் பி.ஏ. ராகினி. அவருக்கு ஒரு முன்கதை. தெரிஞ்சுக்க நீங்களே முன்கதையைப் படிச்சுப் பாருங்க.

எல்லாருமே நல்லவங்கன்னா இந்தக் கதையில கல்யாணம் ஏன் மொதலிலேயே நடக்கலை. அங்கே தான் நாயகியின் அக்கா சரண்யாவின் அட்டகாசமான என்ட்ரீ. அவங்க தான் தங்கை கல்யாணத்தை நிறுத்தறதுல முக்கியமான பங்கு வகிக்கறாங்க. ஏன்? ஏன்? ஏன்? தெரிந்து கொள்ளப் படித்துப் பாருங்கள். 

இறுதியில் செமவிறுவிறுப்பான ஃப்ளாஷ் பேக் , பழைய வில்லனின் ரீ என்ட்ரீ, பரபரபரப்பான கோர்ட் ஸீன் எல்லாமே உங்களுக்காகக் காத்துக் கிட்டிருக்கு. நிறைமாத கர்ப்பிணியாக நாயகி தன் கணவனுக்காகக் கோர்ட்டில் வாதாடறாங்க. 

மதுரை மீனாட்சி கோயில் பத்திக் கொஞ்சம் தகவல்கள் கொடுத்திருக்காங்க. மதுரைக்காரியான நான் அதுக்கு நன்றி சொல்லறேன்.

படிக்கத் தவறாதீர்கள்

ks 119, காவலனே நீ காதலன் ஆனாய்(ல்)

ஆசிரியருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்.


*******

மஹி அபிநந்தன் சகோதரியின் விமர்சனம் :


#KS_Break_Story

KS 119 காவலனே நீ காதலன் ஆனாய்(ல்)❤️ - Completed

காவல்துறை அதிகாரியான சத்ய வாசன் தன் குடும்பத்தை பிரிந்து மதுரையில் வாழ்கிறான். அவன் மனதை மாற்ற வருகிறாள் அவன் மனதை கவர்ந்தவளான வழக்கறிஞர் சந்தியா மோகன். சத்யா, சந்தியா இருவரும் காதலித்து திருமணம் செய்ய நினைத்தப் போது நடந்த பிரச்சனையால் இருவருமே சொந்தங்களிடம் இருந்து ஒதுங்கி வாழ்கிறார்கள்.

இரு குடும்பங்களும் அவர்களுக்காக ஏங்கி, அவர்களோடு இணையும் நாளுக்காக காத்திருக்கிறார்கள். சத்யா, சந்தியா வாழ்வில் என்ன நடந்தது?? அவர்கள் குடும்பத்தில் இருந்து பிரிய என்ன காரணம்?? எல்லாரும் ஒன்றாக இணைந்தார்களா?? என்ன நடந்தது??

படம்🔭 : சஷ்டியப்த பூர்த்தி(அறுபதாம் கல்யாணம்)

Link👇
https://sangamamnovels.com/forums/ks-119-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8D.266/

**********

மஹி அபிநந்தன் சகோதரியின் மற்றுமொரு விமர்சனம்:


KS 119 காவலனே நீ காதலன் ஆனாய்(ல்)❤

காவலனவனின் அழகிய காதல் கதை❤️

தன் வீட்டை விட்டு வெளியேறி மதுரையில் வசிக்கும் காலவனான தன் காதலன் சத்ய வாசனை சமாதானம் செய்ய தன் ஜூனியர் ராகினியுடன் வருகிறாள் வக்கீல் சந்தியா மோகன். சத்யாவிடம் பேசி அவனை விட்டு பிரிந்த தன்னையே நொந்து கொள்கிறாள் சந்தியா. ராகினியை விரும்புகிறான் இன்ஸ்பெக்டர் விஷ்ணு. தன் கணவனான கீர்த்தியின் காதலைப் புரிந்துக்கொள்ளமல் அவனை புன் படுத்துகிறாள் சந்தியாவின் அக்கா சரண்யா.

சில வருடங்களுக்கு முன்பு ராம் மோகனின் வீட்டிற்கு வந்த சத்யனும் சந்தியாவும் காதலிக்க துவங்க, சரண்யாவுடன் நடக்கும் திருமண நிகழ்வை தவிர்த்து தன் தம்பி கீர்த்தி விரும்பிய சரண்யாவை அவனுக்கே திருமணம் செய்து வைக்கிறான் சத்யன். போதை கடத்தல் வழக்கை விசாரித்த சத்யனால் திரட்டிய ஆதாரங்களை திருடப் பட்டதால், அந்த வழக்கு முடிவுக்கு வராமல் சத்யன் மேல் பழி விழ அதை சரி செய்யும் முனைப்பில் இருக்கிறாள் அவன் மனைவி சந்தியா. 

சத்யன் சந்தியா இருவருக்கும் இடையில் என்ன நடந்தது?? இருவரும் எப்படி திருமணம் செய்துக் கொண்டார்கள்?? சத்யன் வீட்டை விட்டு வெளியேற யார் காரணம்?? சத்யன் நெருப்பிக்க வேண்டிய வழக்கை சந்தியா முடித்தாளா?? அந்த வழக்கில் யார் குற்றவாளி?? யாரெல்லாம் அவர்களால் பாதிக்கப் பட்டர்கள்?? கீர்த்தியின் காதலை சரண்யா புரிந்துக் கொண்டாளா?? விஷ்ணு, ராகினியின் காதல் என்ன ஆனது?? சத்யன், சந்தியா இருவரும் இணைந்தார்களா?? என்பது மீதிக் கதை.

காவல் துறையில் சிறந்து விளங்கும் சத்யனை சுற்ற வைக்கும் சந்தியா, சந்தியாவின் காதலுக்காக எதையும் செய்யும் சத்யன், விஷ்ணுவின் குறும்புகள், ராகினியின் நல்ல மனம், சரண்யாவின் திமிர் கோபத்தை அடக்கும் சந்தியா, சத்யன், கீர்த்தி, கீர்த்தியின் காதல், குடும்பங்களின் மகிழ்ச்சி, பரந்தாமன், ராஜேஷ், வெங்கடேஷ் போன்றவர்களின் சுயநலம் என எல்லாம் நிறைந்த அழகிய காதல் கதை. சூப்பர் ஸ்டோரி.

உங்கள் எழுத்து பயணம் தொடர வாழ்த்துகள்...❤️😊போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...❤️🥰All the very best❤️🔥

❤️❤️தலை அசைக்குது உன் கண்கள் 
தவி தவிக்குது என் நெஞ்சம் 
ஒருத்திப்போல ஒருத்தி வந்து உயிரைப்பந்தாட
ஞாபகம் உன் ஞாபகம் அது முடியாத முதலாகும்
பூ முகம் உன் பூ முகம் அது முடியாத முதல் பாகம்❤️❤️

Link👇

https://sangamamnovels.com/forums/ks-119-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8D.266/

*******

மஹி அபிநந்தன் சகோதரியின் கருத்துப் பரிமாற்றம் :


#KS_Story_illustration

KS 119 காவலனே நீ காதலன் ஆனாய்(ல்)❤️


✍️யோசி யோசி✍️
                  ஊரைக் காக்கும் காவலன் அவன், சந்தியாவின் காதலன் ஆகி போனான்... அவர்கள் இருவரின் காதல் போராட்டங்கள் நிறைந்த காதல் கதை.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

சந்தியா மோகன் :
                                 வக்கீலாக இருக்கும் வீரம் நிறைந்த பெண்ணவள். அவளின் காதலுக்கு வரும் எல்லா துன்பங்களையும் பொறுத்து காதலை அடைபவள். தன்னவனின் மேல் விழுந்த கரையினை துடைத்து ஏறிய போராடியவள்.

💌ஸ்லோகன்💌

பல சத்ய சோதனைகள், சதிகள் தாண்டி வாழும் இருவரின் காதலே
சத்யா சந்தியாவை சேர்த்து வைக்கும் காவலனாகிறது!!  

Link👇
https://sangamamnovels.com/forums/ks-119-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8D.266/

*********

கெளசல்யா முத்துவேல் சகோதரியின் விமர்சனம்:


தாமதமான பதிவிற்கு மன்னிக்கவும்!!... 

#Gowsireviews_ks

ks-119- காவலனே நீ காதலன் ஆனாய்(ல்)

காதலனோ காவலன்!!.. காதலி லாயர் மேடம்!!... காவலனின் தாக்குதலில் அதிரடி என்றால், லாயர் மேடத்தின் வாதத்தில் அனல் பறக்கிறது!!!.. இருவரின் கோவத்தில் தொடங்கும் கதை அதன் பிறகு இருவரின் ஆத்மார்த்தமான காதலை வெளிப்படுத்துகிறது!!!... காதலின் உறுதியில் பிரசவ வலியையும் தாங்கி தன் காதலின் சுய மரியாதைக்காக போராடும் காட்சியில் மெய் சிலிர்த்தது!!.. இத்துணை வலியையும் துச்சமாய் காதலுக்காக தாங்கினால் மற்றொருவரின் காதல் அத்துணை ஆழமானது என அவனின் காதலும் சளைத்ததில்லை!!... இருவரின் காதலும் அருமையானது!!!.. எந்த ஒரு இடத்திலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமலே இருந்தது மனதை கவர்ந்தது!!!... உணர்வுகளை வெளிக் காட்டிய விதம் அபாரம்!!... நட்பின் மேன்மையையும், குடும்பத்தின் அருமையையும் யதார்த்தமாய் உணர்த்திய விதம் அபாரம்!!.. பொறுமை இல்லாவிட்டால் படும் துன்பங்களை எடுத்துரைத்த விதம் அருமை!!!.. எளிமையான எடுத்து நடை!!... ஆனால் ஆங்காங்கே எழுத்து நடையும், பேச்சு நடையும் குழப்பி எழுதியது படிக்க சிறிது கஷ்டமாக இருந்தது!!... யதார்த்தமான காதல் கதை!!.. லாயர் மேடத்தின் உறுதியான விவாதம் கதைக்கு தனி அழகு!!!.. அழகான குடும்ப காதல் கதை!!!... வெற்றி பெற எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்💖!!..

*********

தமிழச்சி குட்டி சகோதரியின் விமர்சனம் :


🤔யோசி யோசி 🤔

Ks-119 காவலனே நீ காதலன் ஆனால் (ய் )

காதலர்கள் சத்யன் சந்தியா 

கண்டநாள் முதலாய் காதலில் உருகுகின்றனர் acp சத்யனும் வக்கீலுக்கு படிக்கும் சந்தியாவும். 
குடும்பத்தில் நடந்த பிரச்சனைகளால் இருவரும் 2 வருடங்கள் பிரிய நேரிடுகிறது. 

திருமணத்திற்கு பிறகு உற்றவனின் மொத்தமும் ஆகி போகிறாள் தீ கிரேட் லாயர் சந்தியா. அவர்கள் பிரிய காரணமாக இருந்த வழக்கில் தன் காதல் கணவன், காவலன் சத்யன் மீது சாட்டப்பட்ட பொய் குற்றத்தை முறியடித்து குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வாங்கி தருகிறாள். 

நேர்மையான காவல் அதிகாரி சத்யன் மீது சந்தியா கொண்ட உயிர் காதலை பற்றிய கதை ஆதலால் இக்கதைக்கு 
😍😍காவலனே நீ காதலன் ஆனால் (ய் )😍😍 என தலைப்பு வைத்துள்ளார்

**************

Ks 119 பிரியதர்ஷினி பழனியாண்டி சகோதரியின் விமர்சனம்:


காவலனே நீ காதலன் ஆனாய்(ல்)

குடும்பத்தில் நடக்கும் ஏதோ ஒரு பிரச்சனையில் குடும்பத்தை பிரிந்து வாழும் நம் நாயகன், அவனுக்காக எல்லாரையும் விட்டு ஒதுங்கி வாழும் நாயகி நடந்தது தான் என்ன எவ்வாறு இணைகிறார்கள் என்பதே கதை 

சத்யன் நம் நாயகன் காவல் அதிகாரி அதே சமயம் செம காதல் காரன் நம் மனதை கொள்ளை கொள்ளும் கள்வன் 🙈🙈🙈, அவ்வளவு காதல் அவள் மீது இப்படி எல்லாம் கூட நேசிக்க முடியுமா செம லவ், ஒரு பெண்ணையும் நிமிர்ந்து பார்க்காத இந்த காலத்து ராமன் 😍😍

சந்தியா நம் நாயகி, அத்தான் என்று சத்யனை சுற்றி வருபவள் அவனுக்காக துணிந்து எதிர்த்து நின்று அவன் மீது சுமத்த பட்ட குற்றச்சாட்டை தூசி போல் துடைத்து எறிகிறாள் சிறந்த வக்கீல் ஒரு கேஸிலும் தோற்றதே கிடையாது இவனுக்காக எல்லாரையும் விட்டு வந்து இவனுக்காக செய்து அருமை அருமை 

விஷ்ணு செய்யும் காமெடி அட்டகாசங்கள் 🤣🤣🤣செம ராகினியிடம் பல்பு வாங்குவது, mind வாய்ஸ்யில் பேசுவது 🤣🤣🤣

சத்யனை சுற்றி பல பிரச்சனைகள் எல்லாவற்றையும் எவ்வாறு எதிர் கொள்கிறான், தன் வீட்டை விட்டு வெளியேற காரணம் தான் என்ன எல்லாவற்றிக்கும் விடை கதையில் 

சந்தியா, சத்யன் காதல் அவ்வளவு அழகு, செம லவ் ஸ்டோரி படிக்க விரும்புவோர் படிங்க 😍😍😍

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐


Comments