கொடுக்கும் கை வாங்கும் கை



#ஜோதிரிவ்யூ

எழுத்தாளர் : Arnika Nasser

படைப்பு : கொடுக்கும் கை வாங்கும் கை (சிறுகதை)

வெளியீடு : விகடகவி

 லிங் : https://www.vikatakavi.in/magazines/292/10567/kodukkumkaivaangkumkai.php

ரமலான் மாதத்தில் ஜக்காத் கொடுக்க நினைக்கும் ஒருவர் 4.5 லட்சம் ஜக்காத்தை முதலில் பிரித்துக் கொடுக்க எண்ணுவதும், பின்னர் ஒருவனுக்கு மூன்று லட்சம் கொடுத்து விட்டு மீத பணம் 1.5 இலட்சத்தை 150 பேருக்கு பிரிக்கவும் எண்ணுகிறார்.

அதாவது "சொந்தமாய் தொழில் தொடங்க தேவையான முதலைத்தேடி அலையும் நபரே தகுதியான ஒருவர்” அப்படிப்பட்ட ஒருவரை தேடிக் கண்டுபிடித்து கொடுப்பவர், நீயும் இரண்டு மூன்று வருடங்களில் வளர்ச்சி பெற்று வந்து, ஜக்காத் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறார்.

அவர் கூறியது போல் அவனுக்கு பணத்தை கொடுத்தாரா? பெற்றுக் கொண்டவன் சொன்ன வாக்குப்படி நடந்து கொள்கிறானா? கொடுக்கும் கை வாங்கும் கையாக மாறுகிறதா என்பதை ரொம்ப ரொம்ப அருமையாக சொல்லியிருக்காங்க.

சிறுகதையில் அழகான கருத்து தெரிவிக்கப்பட்டு, வாசிக்கவும் நன்றாக இருக்கிறது. மேலும் நிறைய எழுதவும், விருதுகள் பல பெறவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்💐💐💐

Comments