சிவானி செல்வம் சகோதரியின் விமர்சனம் :
தலைப்பு: கனவு கை சேரும் நாள் வருமோ!!!
எழுதியவர்: ஆனந்த ஜோதி
சகாப்தம் வண்ணங்கள் போட்டியில் பங்கேற்றிருக்கும் நாவல்களில் நான் முழுமையாக வாசித்து முடித்த முதல் நாவல் இது. இனி அவ்வப்போது நான் வாசித்த நாவல்களைப் பற்றி பதிவிட முயல்கிறேன்.
இக்கதையில் முதலில் எனக்குப் பிடித்தது கதைக்கரு. ஒரு வரியில் கதையை சொல்லச் சொன்னால் நான் இப்படி சொல்லுவேன். நாயகியின் அன்னைக்கு நாயகனை பிடிக்கவில்லை. ஏன் எனும் கேள்விக்கான விடையே இக்கதை.
இதில் நாயகியின் மீது மிகுந்த பாசம் கொண்டிருக்கும் நாயகன் (மாறன்), காதலனா? அன்னையா? என்று இருதலைக்கொள்ளி எறும்பாய் தவிக்கும் நாயகி(கனிஷ்கா), நாயகியைப் போன்றே உருவமைப்பு கொண்டு தனக்கான முக்கியத்துவத்தை பெறத்துடிக்கும் நாயகியின் இரட்டையள்(கன்னிகா- அப்படிச் சொன்னால் மாறனுக்கு கோபம் வரும். ஆகையால் அவந்திகா), நாயகியை கரம்பிடிக்க நினைத்து இறுதியில் அவளை அவளது காதலுடனே சேர்த்து வைக்க முன்வரும் ஒரு தியாகி (பார்த்தி😂), கதையில் வில்லன் இல்லையென்றால் நன்றாகயிராது அல்லவா? அதற்காக ஒரு பட்டிக்காட்டு மைனர் தோரணையில் வில்லன் ஒருவன்(முத்து) என்று ஒவ்வொரு கதாபாத்திரமும் நன்றாக வடிவமைக்கப்பட்டு இருந்தார்கள்.
நகைச்சுவை காட்சிகளும், காதல் காட்சிகளுமே போட்டிப்போட்டுக்கொண்டு கதையை இழுத்துச்சென்றது நன்றாக இருந்தது.
ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கி நாவலுக்கான முடிச்சை இறுதி அத்தியாயத்தில் அவிழ்ந்திருந்ததும் நன்றாக இருந்தது.
இந்நாவலில் மிகவும் வஞ்சிக்கப்பட்டவர்களாக எனக்குத் தோன்றியவர்கள் வேதவல்லியும், கன்னிகாவும் தான். எனக்கு இவர்கள் மீது கோபமே எழவில்லை.
பிறகு, இந்நாவலில் எனக்கு சிறு திருஷ்டியாக தோன்றியது அதன் நீளம் தான். அதேப்போல் வார்த்தை கோர்வைகளிலும் ஆசிரியர் இன்னும் கொஞ்சம் கவனமெடுக்கவேண்டும் என்று தோன்றியது.
காதல், குடும்பம், நகைச்சுவை, விரோதம், ஏக்கம், உரிமை, வலி என அனைத்தும் கலந்த ஒரு பொழுதுபோக்கு அம்சத்துடனான இந்நாவலை படைத்த ஆசிரியருக்கு, மேலும் இது போன்ற பல கதைகளை எழுதிடவும், போட்டியில் வெற்றிபெறவும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்😊
கதைத்திரி,
https://www.sahaptham.com/community/threads/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8B-tamil-novel.622/page-2
*****************
வினோலியா பெர்னாண்டாவின் விமர்சனம் :
#liyawriteup
#sahavannangal
#வண்ணம்நீலம்
BL 7
#கனவுகைசேரும்நாள்வருமோ
😍ரொம்ப ரொம்ப அழகான கிராமத்து காதல் கலந்த குடும்ப கதை😍
பிறந்து ஒரு சில நிமிடங்களிலே சிறுவனான அவன் கையில் குழந்தையை கொடுத்து இவ தான்ட உன் பொண்டாட்டினு சொல்லி அவன் ஆசையாய் கொஞ்சிகொண்டு இருக்கும் போதே அக்குழந்தையை அவனிடம் இருந்து தடாலடியாக பிரித்து கொண்டு போறாங்க😔😔( என்னட இவ யாரை பற்றி சொல்லுறானு யோசிக்கிறீங்களா🤔😂)
வேற யாருங்க எல்லாம் நம்ம மாறன் அம்மணி பற்றி தான்
பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒருத்தியை இவ தான் உன் பொண்டாடினு அவன் மாமா அவன் கையில் கொடுக்க அவளுக்கு கனிஷ்கா னு பெயர் வைக்கிறதும் கனி ங்குற பெயர் தன்னுடைய அம்மணிக்கு மட்டுமே சொந்தம் என்று மற்றவளின் பெயரை கன்னிகா வில் இருந்து அவந்திகானு மாற்றும் அளவுக்கு அம்மணி மேல் உரிமை உணர்வு உள்ளவன் நம்ம மாறன்.
😔ஆனால் அவன் சந்தோஷமா இருப்பது பிடிக்காதது போல சில மணி நேரங்களிலே தனது உடன் பிறந்தவளுக்கு அம்மணியை தத்து கொடுக்கும் தங்கை, எவ்வளவு கெஞ்சியும் தத்துகொடுக்கும் முடிவை மாற்றிக்கொள்ளாத மனைவியுடன் பேசுவதையே நிறத்திவிடும் அவர் கணவன்.
😍பெறாவிட்டாலும் அவள் மேல் பாசத்தை அள்ளி வழங்கும் முருகேசன் வேதவள்ளி😍. இப்படி சிறுவயதிலே மனதில் பதிந்த நேசம் வளர்ந்ததா சேர்ந்ததா சேர்ந்தால் எப்படி சேர்ந்தது என்பதே கதை❤
**************
மாறன் அவன் காதல் அழகு❤ அம்மணி அம்மணினு உருகுறதும் அவளுக்காக ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்வதில் காதல் மன்னன் 🤴
விவசாயம் மீன்வளர்ப்பு மற்றும் அவனது தேர்தல் உக்தி என்பவற்றின் மூலம் கிராமத்தை முன்னேற்ற துடிக்கும் இளைஞன் 👨
நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி😂😂😂
(Specially அந்த ராஜி character அய்யோ அம்மா சிரிச்சி முடில😂😂😂😂)
****************
அம்மணி கனினு சொல்லுறத விட அம்மணி தான் பிடிச்சிருக்கு விவரமே தெரியா வயதில் பிரிந்தாலும் அவனை உயிராக நேசிப்பவள்....
அம்மாவின் பாசத்துக்கும் உயரில் கலந்த மாறனின் மேல் உள்ள காதலுக்கும் இடையில் தத்தளிப்பவள்....
👌பெண்களின் தற்கால ஆடை நாகரிகத்தால் ஏற்படும் பிரச்சினைகள் அதற்கான தீர்வுகளும் தாய்மை அடைவதற்கான உணவு முறைகளும்னு நிறைய விடயங்களை அவள் மூலம் சொல்வது அழகு😍
****************
கன்னிகா sorry sorry அவந்திகா (ஏன்னா மாறனுக்கு கன்னிகானு சொன்னா பிடிக்காதே😁😁) அப்பப்பா அப்படி ஒரு வாயாடி ஆனால் மாறனிடம் மட்டுமே அடங்கி இருப்பவள். உண்மை தெரியாமல் தன் மச்சானை கல்யாணம் செய்து பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்க நினைப்பவள், அதே நேரம் உடன் பிறந்தவள் என்றும் பாராமல் அம்மணிய திட்டுறதும் வார்த்தை விடுறதிலும் அவசரகுடுக்கை. பார்த்தி அ வச்சி செய்றது 👌👌👌😂😂😂ஆனா பாவம் பார்த்தி😔
**************
பார்த்திபன் என்ட்ரி கொடுத்தது என்னமோ வில்லன் மாதிரி (அம்மணிக்கும் பார்த்திக்கும் வேதா கல்யாணம் பேசி அதுக்கு பார்த்தி சம்மதிச்சதால அவ வில்லன் தானே) ஆனால் மாறனின் காதல் தெரிந்த பின் விட்டுக் கொடுக்கிறானா அல்லது பிடிவாதம் பிடிக்கிறானா, பிரிந்த குடும்பத்தை எப்படி அவன் ஒன்று சேர்க்கிறான் என்பதை கதையின் போக்கில் தெரிந்து கொள்ளுங்கள்.
(பார்த்தி அ பத்தி பேசுனாலே ஒருத்தவங்க mind ல வாராங்கப்பா😂😂😂 ஆனா அவங்களையும் கதைக்குள்ள கொண்டு வந்து அவள கட்டிகிறேன் உன்ன வச்சிக்கிறேனு சொல்லி கதற விட்டுட்டீங்களே writer ஜி😂😂😂)
#மாறனின் காதல் என்ன நடந்தது🤔
#பார்த்தியின் மனம் கவர்ந்தவள் யார்🤔 யாரா கட்டிக்கிறேன் யாரா வச்சிக்கிறேனு சொல்லுறான்🤔
#அம்மணி யாரா கட்டிக்கிட்டா🤔
#அவந்திகா ஆசை என்ன ஆனது🤔
#பொன்னம்மா அவ்வளவு பிடிவாதமா தத்துக்கொடுக்க காரணம் என்ன🤔
#கடைசியில் flashback இல் ஒவ்வொருத்தரும் அவங்க அவங்க இடத்துல சரினு தோணவச்சிட்டீங்க.😍 (அது வரைக்கும் பொன்னம்மாவ பிடிக்கவே பிடிக்காது)
அப்படி என்ன flashback 🤔
இதுக்கெல்லாம் பதில் கதையில் இருக்கு கட்டாயம் படிச்சி தெரிந்துகொள்ளுங்கள்😍
அவ்வளவு சுவாரசியமான கதை காமெடி கலந்து விறுவிறுப்பாக ஆசிரியர் கதையை கொடுத்து இருக்காங்க❤❤❤
அருமையான கதை...
ஆசிரியருக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்
https://www.sahaptham.com/community/threads/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8B-tamil-novel.622/
************
தீக்ஷிதா லெட்சுமி சகோதரியின் விமர்சனம் :
கதையின் பெயர் : கனவு கை சேரும் நாள் வருமோ?
கதையின் ஆசிரியர் :ஆனந்த ஜோதி.
ஆனந்த ஜோதி
கதையின் கரு : சிறு வயதில் விதைத்த நேசம் விருச்சமாக வளர்ந்து. நேசம் விதைத்த மரம் அதை அடைந்ததா இல்லையா என்பதே கதை.
பிறந்த இரட்டையரில் ஒரு சிசுவைப் பிரித்த பிள்ளையை தன் அக்காவிற்காகத் தியாகம் செய்யும் தங்கை. அதன் விளைவு தங்கையை வெறுத்து ஒதுக்கும் கணவன்.
தங்கையின் கருவில் வளர்ந்த குழந்தையாக இருந்தாலும் அவளைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வளர்க்கும் பெற்றோர்கள்.
பிறந்ததிலிருந்தே அம்மணி அம்மணி என்று அவள் மேல் உயிரை வைத்து இருக்கும் மாறன். பல வருடக் காத்திருப்பு பலனாக அவனின் அம்மணியின் வருகையில் காதலில் திளைக்கிறான்.
மாறனின் குணமும் அவனின் அன்பையும் பார்த்து வியந்து போனேன் என்று தான் சொல்ல வேண்டும்.
தான் மட்டும் நல்லா இருந்தால் போதாது தன்னை சுற்றி இருக்கும் ஊர்க்காரர்களும் நல்லா இருக்க வேண்டும் என்று நினைத்து அதைச் செயல்படுத்த முயன்ற மாறனின் எண்ணம் அருமை.
அம்மணி மற்றும் மாறனின் காதலைச் சொல்ல வார்த்தைகள் பற்றாது. ஒரு இமை அளவு கூட அம்மணியின் மீது கோபம் கொள்ளாத மாறனின் காதல் பிரமாதம்.
தினம் தினம் மாறனின் காதலில் திக்குமுக்காடிப் போனவளைப் பார்த்த போது நிறைவாக இருந்தது போல் உணர்வு.
கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளைக் காட்சியாக கண்முன் காட்டி இருந்தார் கதை ஆசிரியர்.
மற்றும் பெண் கருவின் பற்றியும்... உணவு முறைகள்... உடுத்தும் உடைகள் என்று பல நல்ல விசயங்களையும் விரிவாக எடுத்துச் சொல்லி இருப்பது அருமை.
பல எதிர்ப்புகள்... போராட்டத்திற்குப் பிறகு அவனின் அம்மணியை மணந்தானா இல்லையா. என்று கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
அருமையான கதையோட்டம்.
இருங்க இருங்க.... இன்னும் முடில.
இந்த கதையில் நான் ரசித்த ஒருத்தரைப் பற்றிச் சொல்ல வேண்டாமா?
யார் அது தானே பார்க்கிறீங்க.
அவன் பெயர் தான் பார்த்திபன்.
நான் செல்லமா பார்த்தி சொல்லுவேன். அதைப் பார்த்து நிறையப் பேர் அவனை பார்த்தி கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க.
(போனா போகட்டும் கூப்பிடுங்கனு நானும் அமைதியா விட்டுவிட்டேன்)
சரி பார்த்திய பத்தி செல்கிறேன் கேளுங்கள்.
பார்த்தி ஆரம்பத்தில் வில்லனாக மனதில் நுழைந்து மெல்ல மெல்ல எனக்கு நாயகனாக மாறினான்.
உண்மையான காதலைப் பார்த்ததும்.. தன் விருப்பத்தை மாற்றிக் கொண்ட கள்வன் அவன்.
அப்படிப் பட்ட கள்வனையும் மயக்கம் ஒருத்தி இருந்தால். (அவளைப் பத்தி சொல்ல மாட்டேன். அப்புறம் என் காதில புகை புகை யா வரும்). சோ நம்ம பார்த்திய மட்டும் பார்க்கலாம்.
சண்டையே தெரியாது என்றாலும் தன்னை நம்பி வந்த பெண்ணை விட்டு ஓடாமல் துணிச்சலாக எதிர்த்து நின்று பிரமிக்க வைத்தவன் அவன்.
அவனின் மனம் கவர்ந்தவளே அவனின் தோழியைப் பற்றி தவறாகப் பேசியதைக் கேட்டு.. அவளைத் தள்ளி வைத்த நல்ல நண்பன் அவன்.
இவன் பின்னால் பித்துப் பிடித்துச் சுற்றுவதில் பெண்கள் மட்டும் இல்லை... ஆண்களையும் தன் பக்கம் சாய்த்துவிடும் மன்மதன் அவன்.
உண்மையான காதல் ஒன்றாக இணைய வேண்டுமென்று தன்னோடு வாழ்க்கையை அடமானம் வைத்த வள்ளல் அவன்.
பணக்காரனாக இருந்தாலும் யாரிடமும் ஏற்ற தாழ்வு பார்க்காத பண்புடையவன் அவன்.
மனம் கவர்ந்தவள் உதிர்த்த வார்த்தை தவறு என்று அவளை உணர வைக்க பார்த்தி எடுத்த அதிரடியாகக் களத்தில் இறங்கிய தில்லானவன் அவன்.
தான் விரும்பும் ஒருத்திக்காகத் தன்னை விரும்பும் ஒருத்தியின் மனதை உடைத்த கல்நெஞ்சக்காரன் அவன்.
கடைசியில் பிரிந்து இருந்த குடும்பத்தை ஒன்றாகச் சேர்த்து வைத்த பாசக்காரன் அவன்.
மொத்தத்தில் மற்றவர்களை தன் பக்கம் இழுக்கும் ஆற்றல் படைத்தவன் பார்த்திபன்.
(இதுக்கு மேல பார்த்திய பத்தி பேசினேன்.. ஜோதி அக்கா நம்மளை விரட்டி வந்து அடிப்பாங்க. சீக்கிரம் ஓடிப் போய் மொத்த கதையையும் படிச்சிட்டு ஓடியாங்க. அப்போ தான் பார்த்தியை பத்தி தெரிஞ்சிக்க முடியும்.. அக்கா வருவதுக்குள்ள நான் கிளம்புறேன்ப்பா.)...
அருமையா கதைக்களம்... அழகான நகர்வுகள் எதிர்பார்க்காத திருப்பங்கள்... மொத்தத்தில் அடி தூள்....
வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா.
நன்றி,
என்றும் ப்ரியமுடன்
திக்ஷிதா லட்சுமி.
Thread 'கனவு கைசேரும் நாள் வருமோ! - Tamil Novel' https://www.sahaptham.com/community/threads/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8B-tamil-novel.622/
*******************
மிருதுளா அஸ்வின் சகோதரியின் விமர்சனம் :
கதை : கனவு கை சேரும் நாள் வருமோ
எதையும் பிரித்தரிஞ்சு தெரிஞ்சுக்க தெரியாத வயசுல, விழும் நேச விதை, ஆலமரம் போல கப்பும் கிளையுமா வேர் விட்டு ஓங்கி நிற்கும் காதல் ஒரு ஹீரோவோடது. ஹீரோயினும் லேசு பட்டவங்க இல்ல.. ஜாடிகேற்ற மூடியாய், ஹீரோவும் ஹீரோயினும் லவ் பண்ண, அவங்களை பிரிக்க நினைக்கும் கேரக்டரும் பாவம் தான்..
இன்னொரு ஜோடி 😍😍😂😂 எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர் இந்த ஹீரோ தான்.. பார்த்தி ஸ்வீட்.
முருகேசன்.. இவரை பற்றி என்ன சொல்ல... நல்ல அப்பா.. நட்புக்கு ரொம்பவே மரியாதை கொடுத்த ஒரு ஜீவன்..
சில பல ட்விஸ்டுகளை கடைசியில் தான் ஓபன் பண்ணுவேன் ன்னு writer ஜி மண்டை காய விட்டுட்டாங்க.. என்னவா இருக்கும்.. யார் மேல தப்பு, ன்னு யோசிக்க வெச்சு விதம் 👌👌👌
அதே மாதிரி குழந்தை பிறப்பு, ஹெல்த் related நிறைய விஷயம் தெரிஞ்சுக்க முடிஞ்சுது.. high heels info 👌👌
மொத்தத்தில் அருமையான கதை அக்கா
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா 😍😍
https://www.sahaptham.com/community/threads/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8B-tamil-novel.622/
**************
அனுஷா டேவிட் சகோதரியின் விமர்சனம் :
#கதைவிமர்சனம்
கனவு கை சேரும் நாள் வருமோ ~ ஆனந்த ஜோதி
அறியாத வயசில நமக்கு ஒரு விஷயத்தை மனசுல பதிய வச்சிட்டா அது வாழ்நாள் முழுக்க உயிராக கூடவே வரும் அத போல தான் மாறன் மனதில் அம்மனி மனைவியாக பதிந்து போனது. இரட்டை குழந்தைகளில் ஒன்றை குழந்தை இல்லா தன் தமக்கைக்கு வாரி கொடுக்க, அதை கண்டு மாறன் துடிக்க, இறுதியில் இருவரும் இணைந்தார்களா என்பதே கதை.
பசுமையை அழகா சொல்லியிருக்காங்க. விவசாயம் பற்றி தோட்டம் பற்றி மீன் வளர்ப்பு பற்றி அதுவும் பழைய வீட்டில் உள்ள பசுமை மற்றும் தன் வீட்டில் அம்மணிகாக என்று ஒவ்வொன்றும் பார்த்து செய்தது, தேர்தல் சமயம் வாக்கு குடுக்காமல் ஜெயித்து அதை செய்து கொடுப்போம் என்று ஒவ்வொரு விஷயங்களிலும் மாறன் ஸ்கோர் பண்றான். கிராமத்து காட்சிகள் எல்லாம் கண்முன் நடந்தது போல இருந்தது.
தங்கை குழந்தை என்றாலும் அம்மணியை தன் சொந்த மகளாக அன்பை பொழிந்து வளர்க்கும் வேதா முருகேஷன். பார்த்திக்கு அம்மணியை நிச்சயம் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. அது நடக்குமா? மாறனின் நண்பர்கள் பார்த்தியை வைத்து செய்யும் கலாட்டா , திருமணம் அன்று கூட அச்சோ என்று அழுவது எல்லாம் சிரிப்பு.
கன்னிகா சரவெடி வாயாடி . பார்த்தியிடம் சதா வாயாடுவது கலகலப்பு கூடவே முரளியின் கலாய்ப்பும். அவள் உண்மை என்ன என்று உணராமல் அறியாமல் பேசிய வார்த்தைகளின் வீரியம் பின் உணரபடும் போது மன்னிப்பு யாசிக்கிறாள்.
முதலில் அம்மணியின் கனவை நிஜமாக்க வேண்டும் என்று மாறன் பிரிந்து இருப்பது எல்லாம் அழகான காதல். அவள் தன் பணியில் இருந்து அனைவரிடமும் பழகும் விதமும், ஆடை பற்றிய விழிப்புணர்வும், தாய்மை அடைவதற்கான சத்தான உணவுகள் மற்றும் உளவியல் பிரச்சினைகளை தீர்ப்பது எல்லாம் அருமை.
ட்விஸ்ட் தான் எதிர்பாக்கவே இல்லை. அதோடு பார்த்தி அதிரடியாக இறங்குவான் என்றும் எதிர்பாக்கவே இல்லை. பிளாஸ்பேக் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையை வெளிப்படுத்தும் போது உணர்வு பூர்வமாக இருந்தது. வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா.
*******

Comments
Post a Comment