நொடிக்கு நொடி


#ஜோதிரிவ்யூ
எழுத்தாளர் : ஆர்னிகா நாசர்
படைப்பு : நொடிக்கு நொடி
வெளியீடு : புஸ்தகா

கிண்டில் :

பூங்கொடி :

மகப்பேரு மருத்துவரான இவர் பெற்றோரின் ஆசியுடன் புதிய மருத்துவமனை திறப்பதாக செல்ல, அன்று அடாத செயல்கள் பல கண்முன் நிகழ்கிறது. மனதை சமாதானப்படுத்தி விட்டு, பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் பெண்ணுக்கு சிகிச்சையளிக்க செல்கிறார். அங்கு குழந்தையும் அழகாக பிறக்கிறது. அதற்குப் பிறகே நொடிக்கு நொடி கதையில் சஸ்பென்ஸ், திகில், சம்பவங்கள் நீடிக்கிறது.

பிறந்த குழந்தையை மருத்துவமனை திறப்பு விழா நடந்த அன்றே, தலை இல்லாமல் இரத்தம் சிந்தி கிடக்கும் விதமாக கொன்றது யார்? எதற்காக தொடர்ந்து மிரட்டலையும் அமானுஸ்யத்தையும் கையில் எடுக்கிறார்கள்? நிஜமாகவே குழந்தையை கொன்றது ஆவியா அல்லது பாவியா என்பதை யூகிக்க முடியாத திருப்பங்களுடன், விறுவிறுப்பு கலந்து அட்டகாசமாக கொடுத்திருக்காங்க.

ஒரு சில இடங்களில் டென்சன் தாங்கல. யாருடா இதெல்லாம் பண்றது? பேயா, பிசாசா, மனிதனா? என்று ...

தேஜியின் விசாரணை ரொம்ப நன்றாக இருந்தது. ஒவ்வொன்றையும் சந்தேக கண்ணுடன் அலசி ஆராய்ந்து கண்டறிய முயலுவதும், அதற்கு இடையூறுகளாக பூனை தூக்கில் தொங்குவது, முக்கால் பாகம் அறுபட்ட தலையுடனான அணில் குஞ்சு, கோழிக் கால்கள்... 

ஸிஜா சூப்பர். சூரி மாஸ்👌👌👌 பாவனா நீ பாவமா இல்லயா தெரியலயே...

நாவல் வாசிக்க ரொம்ப ரொம்ப நன்றாகவும், அடுத்து என்ன என்ற ஆர்வத்தையும், விறுவிறுப்பையும், பயத்தையும் கொடுக்கிறது.

 ஆரம்பம் முதல் இறுதி வைரை தொய்வின்றி ஒரே மூச்சில் வாசித்து விடுவதற்கு ஏற்றவிதமாக எழுதப்பட்டிருக்கிறது. இன்னும் பெரியதாக நீண்டு செல்லும் என்று பார்த்தால் சட்டென்று முடிந்து விட்டது.

மேலும் நிறைய எழுதவும், விருதுகள் பல வாங்கவும் மனமார்ந்த நல்வாழ்த்துகள் சார்💐💐💐

Comments