உன்னில் என்னைத் தொலைத்தேனடி

 




"உன்னில் என்னைத் தொலைத்தேனடி"


காலை நேரத்தின் பரபரப்பும் சுறுசுறுப்பும் நிறைந்து காணப்பட்ட சாலை அது. நான்கு புறங்களிலும் பேரூந்துகளிலும் இரு சக்கரவாகனங்களிலும் மிதிவண்டிகளிலும் பயணம் செய்தவர்கள், இன்னும் டிராபிக் ஜாம் முடியலையே என்று புலம்ப ஆரம்பிக்க ,மெதுவாக சிக்னல்  விழுந்ததும் வாகனங்கள் வேக வேகமாக செல்ல துவங்கியது.


நகரத்தில் மிகவும் புகழ்வாய்ந்த கல்வி நிலையம் அது. அதில் ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் இருபாலாரும் படிக்கும் படி செயல்பட்டுவருகிறது .மாணவர்களின் படிப்புத்திறன் ,மதிப்பீடு, ஒழுக்கம் முதலியவற்றிற்கே முதலிடம் கொடுக்கப்படுகிறது. 


வேதியியல் ஆய்வுக்கூடம் ,இயற்பியல் அறை பயோலோஜிக்கல்  லேப் ,உடற்பயிற்ச்சி அறை தையல் பயிற்றுவிக்கும் அறை ,கணிணி அறை ஆசிரியர்கள  இருபாலாரும் தனித்தனியாக

ஓய்வெடுப்பதற்கென ஓய்வுஅறை, தலைமை ஆசிரியர் அறை ,அலுவலக அறைகள் நிரம்பப் பெற்ற முதல் தரமான பள்ளி அது.இனி கதைக்கு வருவோம்.


காலை வேளையிலே பள்ளிக்கு செல்வதற்காக மிக வேகமாக ஸ்கூட்டியை ஓட்டிக் கொண்டிருந்தாள் மாதுரி. அவளின் பின்புறம்  காவ்யாவும் ,ஜானுவும் அரட்டையடித்தபடியே அமர்ந்திருந்தனர்.  இவர்களும் அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகளே.

மாதுரி யாரிடமும் அதிகம் பேசமாட்டாள் அமைதியான விதம். யாரிடமும் அதிகம் பழகவும் மாட்டாள். கேட்டாலும் தலையாட்டலோ ஒரு சில பதில்களையோ தான் பெறமுடியும். ஜானு ,காவ்யா சரியான கலகலப்பு பேர்வழிகள் . மாதுரியிடம் பாசம் மிகுந்தவர்கள். இவர்கள் இப்படி வாயடித்தபடியே வர ,சாலையில் வந்து கொண்டிருந்த. அவர்களது பட்டர்பிளைகளை பார்த்த மாதுரி எப்படி ஸ்கூட்டியிலிருந்து இறக்கிவிடுவதென யோசித்தபடியே வந்தாள்.


பட்டர்பிளைகளின் வரவை அவர்கள் இருவரும் கவனிக்கவில்லை.சுவராஷ்யமான பேச்சில் கலந்திருந்தனர்.அவர்களிடம் கையாட்டிய மாதுரி அவர்களைதிட்டி இறக்கிவிட முடிவு செய்தாள்.


" ஏய் !!!காவ்யா காலையிலே சீக்கிரமா எழுந்திருக்கச் சொன்னால் கேட்குறீங்களாடி, எப்போ பாரு சண்டை போடுவதும் வம்பு பேசுவதும் சின்ன பொண்ணு போல நடந்துகிட்டு ,பள்ளி ஆசிரியை போலவா நடந்து கொள்கிறீர்கள் ,உங்களை என்னடி செய்வது இப்போது பள்ளிகூடத்திற்கு செல்ல நேரமாகிவிட்டது பார்"... திட்டுவது வேறு யாருமில்லைங்க நம்ம நாயகி மாதுரி தான்.


ஆமாங்க தினமும் இவர்களின் அக்கப்போர் தாங்க முடிவதில்லை .அந்த அளவுக்கு வம்பு பண்ணுறாங்க.


அதைக் கேட்ட காவ்யாவோ "ஏய்!! என்னடி திடீர்ணு ஸ்கூட்டிய நிறுத்திட்ட ஏற்கனவே நேரமாகிவிட்டது. உடற்பயிற்சி ஆசிரியர் வேறு கையில் கம்போட நிர்ப்பாரு, அவருக்கென்னவோ பெரிய போலீஸ் ஆபிசர்ணு நினைப்பு ,எப்போ பாரு முறைச்சுக்கிட்டு விறைப்பாக சுத்துறாரு இதெல்லாம் நல்லாயில்லை ஆமா சொல்லிட்டேன்."


அவளின் பேச்சைக் கேட்டு நகைத்த தோழிகள் நேரமாகிவிட்டதை உணர்ந்து அவளிடம் வாய் கொடுக்கவில்லை. 


"சரி சரி நேரமாகுது இறங்குங்க" என்றாள் மாதுரி. எதற்கு என்று அறியாமல் இறங்கிய   இருவரையும் அங்கேயே  விட்டு வேகமாக ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு போய்விட்டாள் .


அவர்கள் இருவரும் அவளை திட்டிவிட்டு விரைந்து பள்ளிவளாகத்தில் காலெடுத்து வைத்தனர்.அங்கு சென்றதும் விரைந்து மாணவிகள் நிற்கும் பகுதியில் சென்று புகுந்து கொண்டனர்.


சில நிமிடங்களில் அப்படி ஒரு அமைதி ,பள்ளி வளாகத்தில் திடீரென கேட்டப் பாடலில் அனைத்துச் செல்களும் நிலையற்றுத் துடிக்க ஏதோ ஒரு உணர்வு வந்து ஆட்கொள்கிறது.வேறு ஒன்றும் இல்லைங்க எல்லாம் நம்ம தமிழ்த்தாய் வாழ்த்து தான் அதற்கு மயங்காதவர்கள் யாராவது உண்டுமா என்ன ..நாமும் கொஞ்சம் மயங்கி வருவோமே....


"நீராருங் கடலுடுத்த நிலமடைந்தைக் 

கெழிலெழுகும் 


சீராரும் வதனமெனத் திகழ்பரதக்

கண்டமிதில்


தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல்

திருநாடும்


தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந்

திலகமுமே


அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற


எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந்

தமிழணங்கே


உன் சீரிழமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே


வாழ்த்துதுமே

வாழ்த்துதுமே"


அடுத்தபடியாக பள்ளி மாணவனுடைய

உறுதிமொழியும் முடிந்தவுடன் அனைத்து மாணவச் செல்வங்களும் வரிசையாக அவரவர் வகுப்பறைக்குச்  சென்றனர்.


ஆசிரியர்கள் தங்களது ஓய்வறைக்குச் சென்று விட்டு அவரவர்   வகுப்புகளை தேடிசென்றனர்.

அளவான சத்தத்தில் ஆசிரியர்களின் ஓசையும் அமைதியான முறையில் கவனிக்கும் மாணவர்களின் நேர்த்தியும் கல்விநிலையத்தின் சிறப்பு அம்சமாகும்.


உடற்பயிற்சி அறைக்கு சென்ற மாதுரி அன்றைய கால அட்டவணையை பார்த்தாள் ,எந்த வகுப்பிற்கெல்லாம் இன்று பாடம் ,விளையாட்டு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று


இரண்டாவது வகுப்பு பத்தாவது வகுப்பு மாணவியர்க்கான வகுப்பாக இருந்ததால் அதற்கேற்ப தன்னை தயார்படுத்திக் கொண்டு போனாள்.அன்றைய வகுப்பு அமைதியாக போனது.இரவு தோழிகளின் சலசலப்பு கேலி தலையணை அடி சத்தம் பாட்டு டான்ஸ் ஆரம்பமாகியது.


"ஏய் !!!ஜானு நேரமாகுதுடி வார்டன் வந்தாங்க பிறகு நம்மீது புகார் கொடுத்திடுவாங்க ,

அமைதியாக படுங்கடி "என்றாள் மாதுரி.


"அடியே மாருதி வேனு ,உனக்கு தூக்கம் வந்தால் நீ தூங்கு ,எங்களை ஏண்டி வம்பு பண்ணுற ,உன்னை மாதிரி எங்களையும் சாமியார் ஆக்கிவிடாதே எங்களையாவது கொஞ்சம் பிரீயா இருக்க விடுடி "என்றாள் காவ்யா.


"அடி பாவி நான் சாமியாராடி...நல்லதுக்கு காலமில்லாமல் போச்சுதா, உங்களுக்கு இன்றைக்கு முனி பிடிச்சி இருக்கு என்று நினைக்கிறேன் ,போங்க நல்லா அனுபவிச்சுட்டு தூங்குங்க. குட்நைட் "என்று படுத்துவிட்டாள்.


அவர்கள் இருவரின் அட்டகாசம் அடங்கவில்லை.

இரண்டு விரல்களையும்  காதில் வைத்து அடைத்து கமந்து படுத்துக் கொண்டாள் மாதுரி.


திடீரென்று வெளியில் கேட்ட ஓசையில் அவர்கள் இருவரும் அமைதியாகி போனார்கள்.


"என்ன சத்தம் இந்த நேரம்..

நேரமென்னாச்சு தெரியுமா....தினமும் உங்களோடு ஒரே அக்கப்போரா போச்சுது. நாளைக்கே தலைமையாசிரிடம் புகார் அழிக்கிறேனா இல்லையா பாருங்க இடியட்ஸ் " என திட்டிக்கொண்டே வார்டன் போய்விடுகிறார்.பிறகு இனி எங்கே கேட்கப்போகுது சத்தம். நாமும் உறங்கச் செல்வோம்.


மறுநாள் காலை செய்தியில் அடையாளம் தெரியாத நபரால் மர்மமான முறையில் தாக்கப்பட்டு முகம் சிதைந்த நிலையில் வாலிபர் படுகொலை. காவலர்கள் அந்த பகுதியை சுற்றி நாயுடன் தேடி அலைகின்றனர். அப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரனை கொலையாளியை கண்டுபிடிக்க மேலிடத்து உத்தரவு, கொலை செய்யபட்டவன் யார்..??.என்று சூடான செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.


இன்ஸ்பெக்டர் திவாகர் "யோவ்!!! ஏட்டு இங்க வாயா ,சுத்தி உள்ள அத்தனை இடத்தையும் நல்லா செக் பண்ணுங்க. யாரையும் இந்த இடத்தின் பக்கம் கூட வரவிடக்கூடாது.

நைட் டைம்ல இந்த பக்கம் வந்த கார் ஆட்கள், யார் யார் என்பதை நல்லா விசாரியுங்கள். சின்ன சந்தேகம் கூட வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் .இங்கே எங்கேயாவது கேமரா இணைப்பு பொருத்தப்பட்டிருக்கிறதா என்று செக் பண்ணுங்கள்.


இப்போது பாடிய ஆஸ்பிட்டல் கொண்டு போய் முதலில் போஸ்ட்மார்டம் பண்ண சொல்லி விவரத்தை தெரிந்து கொள்கிறேன் .நான் அங்கே போறேன். நீங்க ரெண்டு பேர் விசாரித்து விட்டு எனக்கு கால் பண்ணுங்க ஓகே...??,"என்றார் தன்னுடைய கணீரென்ற சத்தத்தில் .உடனேபதிலுக்கு "ஓகே சார்" என்றனர்இருவரும்.


அவரது குளிர்  கண்ணாடியை காதில் பொருத்திக் கொண்டவர்  ஜீப்பில் ஏறிகிளம்பும்படி டிரைவரிடம் கையசைத்தார். ஜீப் விரைந்தது  ஆஸ்பிட்டல் நோக்கி....


அங்கு மதியத்திற்கு பிறகு கிடைத்த ரிப்போட்டை பார்த்தவர். ஓடும் பேரூந்திலிருந்து தவறி விழுந்ததால் காயமேற்பட்டு மரணம் என்றிருந்த ரிப்போர்ட்டை கண்டு புருவத்தை சுருக்கினார் யோசனையாக.


.மருத்துவரிடம் சில தகவல்களை பெற்றுக்கொண்ட அவர்தனக்கேற்பட்ட சில சந்தேகங்களை நிவர்த்தி செய்து விட்டு  அங்கு நின்றிருந்த பத்திரிகையார்களின் கேள்விகளுக்கு சரியான பதிலை கூறிவிட்டு ஸ்டேஷனுக்கு கிளம்பினார்.


மறுநாள் பள்ளியில் ஆசிரியர்களுக்கான ஓய்வறையில் பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது பள்ளியில் உள்ள  சில குறைபாடுகளை சுட்டிக்காட்டியவர்கள் அதனை தலைமையாசிரியடமும் தெரிவிக்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.


அதை ஒரு புகாராக தெரிவிக்கலாமா..அல்லது மீட்டிங் முடிவு செய்து கொள்ளலாமா என்று விவாதித்துக் கொண்டனர்.


அதன்படி தலைமை ஆசிரியர் அறைக்கு சென்று பேசினார்கள். அவர் மீட்டிங் வைத்தால் எல்லா ஆசிரியர்களின் கருத்துக்களையும் பெற்றுக் கொள்ளலாம் அதனால் நாளையே வைத்துக்கொள்ளலாம்  என்றார்.அனைவரும் விடைபெற்றனர்.


அன்று மாலை பள்ளியை விட்டு வந்து கொண்டிருக்கும் போது பக்கத்து வீட்டு தாத்தா தனியாக பேசிக்கொண்டே இருப்பதை கண்ட மாதுரி . "என்ன தாத்தா யார்கூட தனியாக பேசிக்கொண்டிருக்கின்றீர்கள்" என்றாள்.


ஆனால் அவரோ ,"எனக்கு யாருமா இருக்காங்க ,தனியாக தான் புலம்பிக்கொண்டிருக்கிறேன். என்னை போல ஆளை எல்லாம் யார் பார்ப்பாங்க எல்லோருமே சின்ன பசங்களை தானே பார்ப்பீங்க பேசுவீங்க" என்றார் குமுறலோடு.


அவரின் குமுலை அறிந்த மாதுரி அவரை புன்னகை செய்யும் பொருட்டு" தாத்தாதாதா அதோதோ பாருங்க ரெண்டு பொண்ணு வர்றாங்க உங்களை பார்த்து சிரித்துக் கொண்டே"என்றாள்.


தாத்தாவிற்கோ செம குஷி நம்மை கூட இந்த வயசிலும் ரசிக்கிறார்களே என்று


"தாத்தா நீங்க அவர்களை பார்த்து சிரித்து ஏதாவது பாட்டுப் பாடுங்கள் ,எல்லாம் சரியாகிவிடும் என்றாள்" நமட்டுச்சிரிப்போடு "என்ன பாட்டு பாடம்மா" என்றவரிடம்


" ஓ பட்டர்பிளை பட்டர்பிளை 

ஏன் விரித்தாய் சிறகை

அருகில் நீ வருவாயோ 

உனக்காக திறந்தேன் 

மனதின் கதவை "


இதை பாடுங்க தாத்தா என்று சொல்லிவிட்டு அவர்கள் வரும் முன்பு பறந்து சென்று விட்டாள். (பின்னே நமக்கு உசுரு முக்கியமில்லையாங்க அதான்)


சில நிமிடங்களில் வந்த தோழிகளை கண்டு நகைத்த தாத்தா பாட்டை பாட ஆரம்பித்தார்.அவர்கள் இருவருக்கும் செம காண்டாகி போக அவரிடம் எகிற ஆரம்பித்தார்கள்.


ஆனால் அவரோ ரிலாக்ஸாக "ஏன் கண்ணு!!! மாமா கிட்ட கோவிச்சுக்கிற நீ என்ன கேட்டாலும் வாங்கி தாரேன் எங்கே வேணுமானாலும் கூட்டிகிட்டு  போறேன்" என்று இழித்து வைத்தார்.


அவர்கள் இருவருக்கும் பத்திகொண்டுவர "யோவ் தாத்தா !!! கட்டையில போற காலத்தில் உமக்கு சின்ன பொண்ணு கேக்குதா பெரிய காதல்மன்னனு நினைப்பு" என்றாள்.


"நினைப்புகென்னம்மா அதெல்லாம் நிறைய வரும் நீவா நாம போலாமா.".. என்றார் மீண்டும்.


"யோவ் !!!! உனக்கு ஒருதரம் சொன்னா புரியாதாயா...அப்படியே கொஞ்சம் திரும்பிப் பாரு உன்னோட பியூட்டி வர்றாங்க "என்று அவரது மனைவியை காட்டிக் கொடுத்தார்.


அவ்வளவு தான் மனுசன் இருக்கும் இடம் தெரியாதது போல அப்படி ஒருமாற்றம். ஹாஹாஹா தோழிகள் இருவரும்அவரை பார்த்து   கேலி பேசி பிச்சிஎடுத்துங்டாங்க


அவரோ இவர்களிடமிருந்து தப்பிக்கும் வழி தெரியாது முழித்து சமாதான கொடியை ஏற்றி அனுப்பிவைத்தார்.


"அந்த பயம் இருக்கட்டும்" என்று கெத்து காட்டியபடி அவர்கள் இருவரும் ஹாஸ்டல்அறைக்கு சென்றனர்.


அங்கு மாதுரியோ இவர்களின் கூத்துகளையெல்லாம் ஜன்னல் வழியாக பார்த்து சிரித்துவிட்டு அவர்களை கண்டதும் குளியல் அறைக்குள் நுழைந்துகொண்டாள்.


அதே நேரம் காவல் நிலையத்திற்குள் இருவர் நுழைந்தனர்.ஐயா எங்க பொண்ண காணுமய்யா ..நீங்கள் தான் கண்டுபிடிச்சு தரணும் என்று இன்ஸ்பெக்டர் திவாகரின் காலில் விழுந்தனர்.


"என்ன இது காலில் விழுந்துகிட்டு முதலில் என்ன விஷயமென்று சரியாக சொல்லுங்க "என்றார்.


ஐயா !!! என்னோட பொண்ணு காலையிலே வேலைக்கு போனாள் என்றும் மாலை ஐந்தரைக்கு வீட்டுக்கு வந்துருவா...இன்று இன்னும் காணுமய்யா ..

தெரிந்தவர்களிடமெல்லாம் விசாரிச்சுட்டேன் எங்கே போனாள் தெரியலையே என்று அழுதனர்.


உடனே அவர் விசாரனையை ஆரம்பித்தார்.புகார் எழுதி வாங்கிவிட்டு அவளது போண் நம்பர் எடுத்து அவரது போணில் போட்டும் அவளது நம்பரிலுமாக விசாரிக்க ஆரம்பித்தார்.


எந்த பதிலும் நல்லபடியாக கிடைக்கவில்லை.அவள்  பணி செய்யும் அலுவலகம் வாட்ச்மேன் பியூண் சாலையில்உள்ள வீடியோ புட்டேஜ் எல்லாம் சோதனையிட ஆரம்பித்தார்கள். ஒன்றும் பலன்இல்லாமல் போனது.


அவளும் அவளது தோழியும் பேரூந்தில் சென்றதாக கிடைத்த தகவலில் பேரூந்து ஓட்டுனர் டிக்கெட் கொடுப்பவரிடம் விசாரித்தனர்.அந்த பேரூந்தில் அதிகப்படி கூட்டம் இருந்ததால் யாரும் சரியாக கவனிக்கவில்லை. எந்த இடத்தில் இறங்கினார்கள் என்றும் தெரியவில்லை.ஏசிபிக்கு எல்லா தகவலையும் முன்பே சொன்ன திவாகர் மீண்டும் ஒருமுறை எல்லாம் சொல்லி அலைந்து திரிந்தார்.


மறுநாள் மதியத்திற்கு மேல்  பள்ளியில் மீட்டிங் என்று தலைமையாசிரியர் அறிவித்ததால் அன்று அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டது.


மதிய சாப்பாட்டிற்க்கு பிறகு மீட்டிங்கில் பேசுவதற்காக இருபாலாரிலும் மூத்த ஆசிரியையை நியமித்திருந்தார்கள்.அதுபோல பேச்சு ஆரம்பிக்கப்பட்டது. அனைத்துக் கருத்துக்களையும் கேட்ட தலைமை ஆசிரியர் மேலிடத்திற்கு தகவல் கொடுப்பதாகவும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுப்பதாகவும் கூறினார்.


கோரிக்கைகளின் விவரம் :


1."லைப்ரரி வசதியை மேம்படுத்தி ஆறிலிருந்து பன்னிரெண்டு வரை படிக்கும் மாணவர்களின் புத்தகங்கள் கைடுடன் ஆராய்ச்சி புத்தகங்கள், மேப், சுற்றுலா வசதி ,மாவட்டங்களின் முக்கிய நிகழ்வுகளை தெரிவிக்கும் புத்தகங்களை வாங்கி சேகரித்து படிக்க உதவலாம்.


2. ஏழை மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைத்தி  வழிவகை செய்திட வேண்டும்.


3. தற்சமயம் மாணவ மாணவிகள் தூர இடத்திலிருந்து வருபவர்களுக்கு பேரூந்து உதவி  அல்லது ஹாஸ்டல் வசதி செய்து கொடுக்கலாம்.


4.கழிப்பறை வசதி மேம்படுத்துதல் ,

சுத்தமான குடிநீரை கிடைக்கச் செய்தல்


5.உடற்பயிற்சி விளையாட்டு தரத்தை மேம்படுத்தி ஊக்குவித்தல் "


அனைவரும் வீட்டுக்கு செல்ல தாத்தா மறுபடியும் மாதுரியை பிடித்துக் கொண்டார்." ஏம்மா பொண்ணு நீ சொன்னணு தானே நேற்று உன் தோழிகளிடம் கேட்டேன் ஆனால் ரெண்டு பேரும் திட்டி என்னோட பொஞ்சாதி கிட்ட மாட்டி விட்டுட்டாங்கமா..அவளோட அநியாயம்தாங்கமுடியலை "என்றார்.


மாதுரியோ ஆறுதலாக ,"நிறைய பேருக்கு இருக்கும் போது அதன் மதிப்பு தெரிவதில்லை தாத்தா இழந்த பின் வருந்தி பிரயோஜனமுமில்லை. அதனால் எதையும் போட்டு குழப்பிக்காமல் சந்தோஷமாக இருங்கள்". என ஆறுதல் வார்த்தை கூறி திரும்பினால் அங்கே காளிகள் முறைத்துக் கொண்டிருந்தனர்.


"ஏண்டி மாருதி வேனு எல்லாம் உன்னோட கைங்கர்யம் தானா உன்னை சும்மா விடமாட்டோமடி "என்று  இருவரும் துரத்த ஆரம்பித்தனர்.


"அவளோ ஏய் !!!! ஜானுமா ப்ளீஸ்டா சும்மா ஜாலிக்குத்தான் சொன்னேன் என்னை விட்டுடுங்கடி "என்று ஸ்கூட்டியை ஸ்டாண்ட் போட்டு விலகி ஓடினாள்.


அவர்கள் துரத்த இவள் ஓட சிறிது நேரத்தில் எதிரில் வந்த நபரின் மீது மோதி விழபார்த்தாள்.


அழுத்தமான பிடியுடன் தன்னை அணைத்திருப்பது யார் என்று பார்த்தவளுக்கு மூச்சு முட்டியது உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்தது. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நிலை கொள்ளாமல் தவித்தாள்.

விலகிவிடலாம் என்று நினைத்தாலோ மூளை மறத்தது போலாகிவிட்டது.அப்படியே அசையாமல் நின்றுவிட்டாள் ..அவனும் தான்....


அப்போது அங்கு வந்த தோழிகளின் சத்தத்தில் தன்னிலை மீண்டவள் விலகிட நினைக்க விட்டானில்லை.  அவளது கரங்களை இறுகப் பற்றிக் கொண்டான்.... 'உன்னை  என்றும் விட்டு 

விலக மாட்டேன்' என்பது போல


ஆனால் தோழிகளின் கண்ணோ அவனை விட்டு அகலவில்லை.இவரை இதற்க்கு முன்பு இவரை எங்கோ பார்த்திருக்கோமே ...எங்கே என்ற யோசனையுடனே விசாரிக்க ஆரம்பித்தார்கள்.


"சார்!!! உங்களை முன்னாடியே பார்த்தது போல இருக்கே...உங்க நேம் என்ன ..என்ன வேலை பார்க்குறீங்க".... விடாது கேள்வி எழுப்பினர். 


அவனோ அவளை ஒருமுறை பார்த்துவிட்டு தோழிகளிடம் "ஆனந்த் பிரபல குத்துச் சண்டை வீரன் "என்றான்.


அவர்களின் மகிழ்ச்சியை அடக்கமுடியாமல் மீண்டும் மீண்டும் பேசினர்.ஆட்டோகிராப் தொலைபேசிஎண், வீட்டு முகவரி எல்லாம் வாங்கிக் கொண்டனர்.(ஆம் அவன் ஒன்றும் சாதாரண ஆள் இல்லையே எவ்வளவு ரசிக ரசிகைகள் உள்ளனர் அவனுக்கு விளையாட போனாலே ஒரே உற்சாக வரவேற்பாகத்தானே இருக்கும்).


மாதுரியோ கைபிடியை தளர்த்திட எவ்வளவோ முயன்றான் அவன் தான் விட்டானில்லையே.


திடீரென கேட்ட கார் ஓசை வெளித்தில் கைபிடியை வலுக்கட்டாயமாக பிரித்தவள், திரும்பி பாராமலே அங்கிருந்து விலகி ஓடிவிட்டாள்....


இரவு தோழிகளின் அலம்பலும் சலம்பலும் அவனைப்பற்றியே இருந்தது. கண்களில் நீர்கோர்க்க படுத்தவள் தூக்கமாத்திரையின் உதவியுடன் தூங்கிபோனாள்.


நான்கு நாட்கள் கழித்து பள்ளிக்கு சென்று அறையில் உடற்பயிற்ச்சி புத்தகத்தை பார்த்துக் கொண்டிருந்தவள். திடீரென கேட்ட சத்தத்தில் திரும்பி பார்த்தாள்.அங்கு வகுப்பில் ஆசிரியர் வராததால் மாணவர்கள் சத்தமாக பேசிக்கொண்டிருந்தார்கள்.


திடீரென உள்ளே நுழைந்த மாதுரியை கண்டதும் அப்படி ஒரு அமைதி..." இதென்ன வகுப்பறையா அல்லது  மார்க்கெட்டா ..இப்படியா கத்துவது ..பக்கத்து அறைகளில் பாடம் எடுக்க வேண்டாமா."..என்று கோபமாக திட்டி பின் அமைதியாக அமர்ந்தாள்.


"யார் லீடர் "என்று விசாரித்து அவனை திட்டினாள்பிறகு "எந்த சார் வராததால் இப்படி இருக்கின்றீர்கள்" என்றாள்." தமிழாசிரியை நாகரெத்தினம் "என்ற பதிலுக்கு ஏன் வரவில்லை தெரியுமா ...தெரியாது என்றவுடன் அன்றைய வகுப்பில் மாணவர்கள் புரிந்து கொள்ளும் படி பல நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுத்தாள். "படிப்பு விளையாட்டு இரண்டுமே மனித வாழ்விற்கு தேவையானது.. ஆனால் விளையாட்டை மட்டுமே தேவையாக வைத்துக் கொள்ளக் கூடாது.. படிப்பு என்பது நம் இரு கண்களுக்கு ஒப்பானது. அது நமக்கு கிடைக்கும் போது நல்லபடியாக பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையின் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும். விளையாட்டு எப்போது வேண்டுமானாலும் நம்மால் செய்ய முடிந்த காரியம். அது போன்று ஒவ்வொரு மாணவர்களும் தங்களுங்கென்று தனித்தன்மை பெற்று விளங்க வேண்டும். ஏதாவது ஒரு துறையில் உத்வேகத்துடன் முயன்றால் வெற்றி நிச்சயம். முயன்றிடுவீர்  வெற்றிகளை பெற்றிடுவீர் "என்றாள். அவளது அன்பான பேச்சு மாணவர்களுக்கு மிகவும் பிடித்தமாக போனதால் மீண்டும் எங்கள் வகுப்பிற்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.


அவளோ "ஆசிரியர் வராத வகுப்பு நேரம் அழையுங்கள் பிரீயாக இருந்தால் கண்டிப்பாக  வருவேன் "என்று வாக்களித்துச் சென்றாள். 


அன்று மாலை ஹோட்டலுக்கு போவதாக தோழிகள் அழைக்க உடன் சென்றவள் அங்கே புதிய இரு நபர்களை கண்டு கேள்வியாய் தோழிகளை நோக்கினாள்.


'ஹிஹிஹி இவங்க ரெண்டு பேரும்தான் அவங்களோட பக்கிகளாம் சீச்சி பட்டர்பிளைகளாம்'


"நீங்க ஜோடியாக இருந்து பேச என்னை ஏண்டி அழைத்துக் கொண்டு வந்தீர்கள் "என்றாள் மாதுரி.


"சும்மா உன்னை அறிமுகப்படுத்தி வைக்கத் தாண்டி கொஞ்சம் பொருத்துக்கொள் போய்விடலாம்" என்றாள்.


வேறு வழியில்லாமல் அமர்ந்த மாதுரியை ஒட்டி யாரோ இருப்பதை உணர்ந்து திரும்பி பார்த்தால் அங்கே ஆனந்த்....


எழும்ப போனால் எழும்ப முடியாத படி கைபிடித்து அமரவைத்திருந்தான்.சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் எல்லோரும் எழவும் விருட்டென்று விலகி சென்றாள்.


ஆனந்த் அவளிடம் பேச முயற்சி செய்தும் அவளோ பேசினாளில்லை.கிளம்பி போய்விட்டாள்.


அவனோ போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்....


இரவெல்லாம் தூக்கம் வராமல் தவித்த மாதுரி, இனியும் இங்கே இருக்க முடியாது என்று நினைத்தவளாக, அவளது சாதனம் உடைகளை பேக் செய்து தலைமை ஆசிரியரிடம் தகவல் கூறிவிட்டு, கடிதம் எழுதி அறையில் வைத்தவள் தோழிகளிடம் விடைபெறாமலே சென்றுவிட்டாள்....


மறுநாள் காலை "திவா காணாமல் போன பெண்களை கண்டுபிடிச்சிட்டீங்களா."..மாதுரி


"இல்லைடா அவங்க எங்கேயும் போகலயாம், கொஞ்சம் மனசுக்கு சரியில்லாததால் வெளியே போய்ட்டு வந்தோம் சொல்ராங்க .எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. ஏதோ பெரிசா நடக்குதோணு தோணுதுடா" என்றான்.


"என்ன திவா இப்படி பேசுறீங்க .முன்னாடி பஸ்ஸிலிருந்து ஒருவன் விழுந்தான் விபத்து சொன்னாங்க.இப்போது பெண்கள் கடத்தப்பட்டு விடப்பட்டார்களா ,அல்லது ஏதாவது விஷயம் நமக்குத் தெரியாமலே நடக்குதாணு தெரியலையே.இதை இப்படியே விடக்கூடாது எதாவது செய்ய வேண்டும் "என்றதும் அவன் நான் பார்த்துக் கொள்கிறேன் நீ கவனமாக இரு" என்றான்.


திவாகரின் உதவியால் மாதுரி ஹோட்டலில் ரிசப்சன் பணி  நோக்கி அங்கே தங்கினாள். ஹோட்டல் ராயல் சுவீட்டில் தங்கி சுற்றிப் பார்க்க வருபவர்களுக்கு அறை ஒதுக்கி கொடுப்பது , அறையில்லாத சமயங்களில் இன்முகமாக பதிலழித்து அனுப்பி வைப்பது ,அவர்களது அறைகளில் இல்லாத சாமான்களை பார்த்து அனுப்புவது போன்ற வேலைகளைச் செய்தாள்.


அங்கு திடீரென வந்த ஆனந்த் அவளையே நோக்கியபடி தங்கிட அறை கேட்டான். அவளோ பதில் கூறாமல் வேண்டிய விவரங்களை பதிவு செய்து அனுப்பி வைத்தாள்.


"மேடம் !!! நான் சொல்லாமலே என்னுடைய பெயர் முகவரி எல்லாம் சரியாக எழுதிட்டீங்களே, அந்த அளவிற்கு நியாபகம் வைத்திருப்பது என் பாக்கியம்" என்றான் சிரித்தபடி ,அவளோ காதுகேளாதது போன்று " ராமு சாரோட பெட்டியைக் கொண்டு போய் அறையில் வை" என்றபடி தன்னுடைய பணியை நோக்கினாள


"அவனோ விடாமல் மேடத்தோட பெயர் என்ன" என்றான். காதுகேளாதது போன்று நின்ற அவளோ தன்னுடைய பணியை நோக்கினாள். சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்த அவனோ அவளிடம் ஏதோ சொன்னபடியே கிளம்பிச் சென்றான். அப்படியே இருக்கையில் அமர்ந்த அவளோ 'நம்மை விடமாட்டான் போல தெரிகிறதே' என்றபடி யோசனையில் ஆழ்ந்தாள்.


இரவு கதவு தட்டும் ஓசைக் கேட்டு எழுந்து கதவைத் திறந்த மாதுரி, அங்கு ஆனந்தை எதிர்பார்க்கவில்லை. உள் நுழைந்து கதவை சாத்தியவன் அவளை நோக்கிச் சென்றான், உன்கிட்ட "எனக்கு பேசணும் மாதுரி வா, வந்து உட்கார்" என்றான். அவளோ மறுத்து தலையசைக்க" என்னுடைய பொறுமைக்கும் அளவிருக்கு மாதுரி, ஒரேடியாக சோதிக்காதே "என்றான் அழுத்தமாக,


அவளோ அமைதியாக நின்றிட அவனோ கோபத்தில் அவளைப் பற்றி உலுக்கினான் திட்டினான். அவளின் மௌனம் மனதைச் சுட "என்னை வேண்டாமென்றே முடிவு செய்துவிட்டாயா மாதுரி "என்றான் வருத்தம் தோய்ந்த குரலில்


அவளது மௌனத்தால் மீண்டும் மீண்டும் கோபம் அதிகமானதே தவிர குறையவேயில்லை அவனுக்கு, அவளை இழுத்து நொறுக்கியவன்" உன்னை பிரிந்து என்னால் இருக்க முடியலைடி . என்னை விட்டு விலகிச் செல்ல ஒருபொழுதும் விடமாட்டேன் ,விலகவும் மாட்டேன்"என்றபடி சென்றான்.


கட்டிலில் தொப்பென்று விழுந்த மாதுரி அப்படியே அழுதபடியே உறங்கினாள் .அவளால் நடந்த எதையும் மறந்திட முடியவில்லை..


நான்கு நாட்களாக ஆனந்தின் தேடலும் கேள்விகளும் மாதுரியை துரத்திக் கொண்டே இருக்க பாவம் பதில் சொல முடியாமல் பாவையவள் தவித்தாள். மாலை வேளையில் மொபைலில் பேசிய திவாகர் காலையில் போத்தீஸ்கு  வரச் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான். 


மறுநாள் காலையில் போத்தீஸ் ஜவுளி மாளிகைக்குள் நுழைந்த மாதுரியை பார்த்ததும்  குழந்தையுடன் அவளை நோக்கி விரைந்தான். . அவளைக் கண்டதும் ம்மா ம்மா என்று ஆசையோடு தாவிய குழந்தை அவளது கழுத்தை இறுக கட்டிக் கொண்டது .அவளும் மகளை ஆசைதீர கொஞ்சி முத்தமிட்டாள் .பிறகு இருவரும் சேர்ந்து குழந்தைக்கு ரெடிமேட் பிராக் நியூ மாடல் பார்க்கச் சென்றார்கள். திவா போண் பேசச் சென்றான் . குழந்தையோ அங்கே வைக்கப்பட்டி குரங்கு பொம்மைகளையே ரசித்தபடியே நின்றாள். சில நிமிடங்களில் குழந்தையை காணாமல் திகைத்த மாதுரி அவளை தேடிச் சென்றிட, அவளோ ஆனந்தின் கரங்களில் கொஞ்சியபடி இருந்தாள்.


திவாகரும் அதே நேரம் வர" திவாப்பா திவாப்பா" என்றாள் குழந்தை ரேவதி ,அதைக்கேட்ட. திவாகர் குழந்தையை சிரித்தபடியே வாங்க, இருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். 


ரேவதி மாதுரியை பார்த்து "ம்மாமா அங்கிள எனக்க  புடிச்சுக்கு.. உனக்க பிடிக்கதா" என்றாள் சிரித்தபடியே


அவள் பதில் கூறாமல் நிற்க, திவாகரோ சிரித்தபடி நோக்க, மாதுரியை கூர்விழியால் தாக்கிய ஆனந்த் குழந்தையை வாங்கி முகத்தை ஊன்றி கவனித்தான். பிறகு நகைத்தபடியே "உன்னுடைய நேம் என்னாம்மா" என்றான். அவளோ" ரேவதி " என்றாள். அவளது இரு கன்னத்திலும் முத்தமிட்டு நெஞ்சோடு அணைத்தவன், சில நிமிடங்கள் ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிதானப்படுத்திவிட்டு, "இப்போது என்ன விஷேஷம் குட்டிமாக்கு டிரஸ் எடுக்குறாங்க" என்றான் ரேவதியை நோக்கி,


"பாப்பாக்குகு பர்த்தூ தே  நீ வாரியா "என்று கேட்டாள் "திவாப்பா திவாப்பா அங்கில வா சொல்லு" என்றாள் சிரித்தபடியே


திவாகரோ சிரித்தபடியே மாதுரியை நோக்க , ஆனந்தோ மாதுரியை பார்த்தபடியே "கண்டிப்பாக செல்லம் நான் வராமலா ..உனக்கு என்னப் பிடிக்கும் சொல்லு ,நான் கண்டிப்பாக வாங்கி வரேன் " என்றான் ஆசையோடு,


"அம்மா புதித்தும், திவாப்பா புதித்தும் ம்ம்ம் என்று யோசித்தபடியே அங்கிள் ரொம்ப புதித்தும் "என்று அவனை அணைத்தபடியே முத்தமிட்டாள். 


திரும்பி நின்ற மாதவி கண்ணீரை அடக்கப் பெரும்பாடு பட்டாள் "நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரேன் திவா" என்றபடியே அங்கிருந்து அகன்றவள், கண்ணீரை அடக்கி முகத்தை நன்கு துடைத்து தன்னை நிதானப்படுத்தியபடி வெளியேறி தனியாக வந்து நின்றாள் .சிறிது நேரத்தில் பேசியபடியே வந்த ஆனந்த் ரேவதியை மாதுரியிடம் கொடுத்துவிட்டு அவளை ஆழ்ந்த பார்வை பார்த்து சிரித்தபடியே விலகிச் சென்றான்.


இரண்டு நாள் கழித்து வந்த ரேவதியின் இரண்டாவது வயது பிறந்த நாளிற்காக மாதவி அங்கு சென்றிட ,குழந்தையோ அவளை விட்டு நீங்கினாளில்லை. சிறிது நேரத்தில் வந்த ஆனந்தை கண்ட ரேவதி ஓடிச் சென்று காலைக் கட்டிக் கொண்டாள்.


கேக் கட் பண்ணும் போதும் அவனை விட்டு விலகாமலே கட் பண்ணினாள் . முதலில் அவனுக்கே ஊட்டினாள், மறுவாயை தாய்க்கு ஊட்டி பின் திவாப்பாவிற்க்கு கொடுத்து சிரித்தாள். இதையெல்லாம் திகைப்புடன் நோக்கிய மாதுரி கண் கலக்கத்துடன் அறைக்குள் சென்று அடைந்தாள்.


எல்லாம் முடிந்த பின் அங்கு வந்த ரேவதி" ம்மாமா வாவா சாப்பித ஆனந்துப்பா சாப்பிதல ,நீநீ வாவாம்மாமா" என்றழைத்தாள் இனிமையாக


மகளின் பேச்சைக்கேட்டு அதிர்ந்தவள் "ஆனந்துப்பாவாவா யார் அப்படி சொன்னானா" என்றாள் அதிர்ச்சியாக


"திவாப்பா ஆனந்துப்பா" என்றாள் சரியாகச் சொல்லத் தெரியாமல், மகளை கையில் ஏந்தியபடி வெளிவந்தவள் டேபிளில் போய் அமர்ந்தாள். குழந்தையின் மறுபுறம் ஆனந்த் அமர்ந்தான் அடுத்து திவாகர் அவனது அம்மா அப்பா அமர்ந்தனர்.


'இங்கே என்ன நடக்குது' என்ற குழப்பத்திலே ஆழ்ந்த மாதுரி சாப்பிடமுடியாமல் திணறியபடியே எழுந்து சென்றாள்.அவளது கரத்தைப்பற்றிய "ரேவதி ம்மாமா சாப்பிதல" என்றாள் .மாதுரியோ "பசிக்கலமா" என்றடி எழுந்து அறைக்குள் நுழைந்து கதவடைத்துக் கொண்டாள்...இரவெல்லாம் தூக்கம் வராமல் தவித்த மாதுரி அழுகையோடு அந்த இரவை கழித்தாள்.


மறுநாள் ரிசப்ஷனில் வந்த போண் அழைப்பை ஏற்று பேசியவள் ஆனந்தின் அறைக்கு வேகமாக சென்றாள் ,அங்கு ரேவதியும் அவனும் சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தனர்.


"ரேவதி ஏன் இங்க வந்த"..? "ஆனந்துப்பா கூத வந்தேன்"... மகளின் பதிலில் சீற்றமடைந்தவள் 


"அதான் ஏன் வந்த ,கொலைகார குடும்பத்தோட பழக்கம் வைக்காதே, ஈவு இரக்கமின்றி உன்னையும் கொன்னுடுவாங்க" என்றாள் சீற்றமாக , அவளது பேச்சில் கோபம் கொண்ட, ஆனந்த் வேகமாக வந்தான்  மாதுரியை நோக்கி, பளார் என்று அவளது கன்னத்தில் அறைந்தான்.அவளை பற்றியிழுத்து   சுவரில் சாய்த்து முகத்தை அழுந்தப் பற்றி  அவனை நோக்கச் செய்தான். கோபமாக முறைத்தபடி"என்னடி பேசுற, ஏற்கனவே நிறைய இழப்புகளை சந்திச்சுட்டாயே உன்னை கஷ்டப்படுத்தவேண்டாம்ணு பார்த்தால் ,நீநீ.. என் பொறுமையை ரொம்ப சோதிக்கிறடி. உன்னை பாராமல் எவ்வளவு கஷ்டப்பபட்டேன் தெரியுமா.. உன்னை எங்கெல்லாம் தேடி அலைந்தேன் தெரியுமா நீயானால் .... என்றவன் .. ரேவதி என் பொண்ணுணு எனக்குத் தெரியும் ..அவளை நான் கொல்வேனா... எப்படியடி உன்னால் இப்படி பேசமுடிந்தது... என் கூட வாழ்ந்ததை மறந்து விட்டாயா.. சொல் மறந்து விட்டாயா." என்றான் கோபமாக


அவளின் அதிர்ச்சியை பார்த்தவன்  "என்னுடைய மகளை நான் கொல்வேன் என்று சொல்லிவிட்டாயே ,இதற்கு மேலும் என்மகளை நான் பிரிந்திருக்கத் தயாராக இல்லை. அவள் என்னுடன் தான் இருப்பாள் ,நீநீநீ என்றான் அவளை  ஆழ்ந்து நோக்கியவன் ,நீயும் என்னுடனே வருகிறாய், என்னுடைய மனைவியாக என் மகளுக்கு அம்மாவாக "என்றான் உறுதியாக .மாதுரியை விட்டு விலகி மகளை நோக்கிச் சென்றவன் அவளை தூக்கி கொஞ்சிக் கொண்டிருந்தான்.


அவளின் எந்தவித மறுப்பையும் அவன் கேட்கவில்லை


மேலும் இரண்டு நாட்கள் கடந்தது, அன்று  பேரூந்திலிருந்து இறங்கிய ஜானு, காவ்யா  மாதுரியை பார்த்தவுடன் ஓடிச் சென்று அணைத்துக் கொண்டர்.


உடனே ஓடிப்போய் "ஏய் !!! மாருதி வேனுனுனு" என்று சத்தமாக கூப்பிட இவர்களின் அழைப்பை கேட்டவள் தன்னை காட்டிக்கொள்ளாது போய்கொண்டே இருந்தாள்.


இவள் போவதை கண்டதும் அவர்கள் இவளை துரத்தி வந்து பிடித்து திட்டினர். 

ஜானு கன்னத்தில் அறைந்தாள்," என்னடி !!! நினைச்சு கிட்டு இருக்க நீ என்ன செய்தாலும் கேட்க ஆளில்லைணு நினச்சியா.."என்று திட்டினாள்.


கவிதாவோ "ஏண்டி !!!. எங்க கிட்ட சொல்லாமல் வந்த உன்ன எங்கேயெல்லாம் தேடியலைந்தோம் தெரியுமா...வா..போகலாம். இனியும் உன்னை விட்டு நாங்க இருக்க மாட்டோம்" என்றாள்.


பதில் கூற மறுத்த மாதுரியை இன்னும் நல்லா திட்டினார்கள் தோழிகள் இருவரும், உள்ளுக்குள் சிரித்தவளோ வெளிக்காட்டாது.


"மேடம் நீங்க யாருணு தெரியலையே...என்னோட பெயர் திவ்யா நான் இங்கே ஹோட்டல் ரிசப்ஷனிஷ்டாக ஒர்க் பண்ணுறேன் .தயவு செய்து என்னை தொந்தரவு பண்ணாதீர்கள் ப்ளீஸ்" என்று கூறி சென்றாள்.


ஆனால் அவகளோ விடாது துரத்தி சென்று வழிமறித்தனர் ."ஏய் !!! இன்னாடி சிலுத்துக்குற ,நீ ஆரு அப்படிணு நேக்கு தெரியாதா இன்னா ...நீ எங்க மாருதி வேனே தான் நானு எங்கன வேணாலும் வந்து சத்தியம் செய்து கொடுக்காம் அக்க்காகாம்ம்

வந்துட்டா பெரிய இவளாட்டம் போஸ் கொடுத்துக்கிணு"...என்றாள் காவ்யா


"ஏன் மாதுரி இப்படி பண்ணுற ..நாங்கள் உன் மீது வைத்த பாசத்தில் ஏதாவது குற்றம் பிழை கண்டாயா. இல்லாவிட்டால் ஏன் இப்படி பண்ணுற சொல்லுடி "என்றாள் ஜானு


"..ஏண்டி உன்னை பார்க்க எவ்வளவு ஆசையாக ஓடிவந்தோம் இப்படி யாரோ மாதிரி பேசுகிறாய்.நிற்கிறாய் எங்கள் முகத்தை பார்த்துச் சொல்லு பார்ப்போம் நாங்க யாரோவா.", கோபத்துடன் காவ்யா கேட்டாள்.


தோழிகளின் பேச்சை கேட்டவளுக்கோ உயிரை பிழிந்தெடுக்கும் வேதனை, ஆனால் உண்மையை சொல்லவும் முடியவில்லை.மரண வேதனையாக உணர்ந்தாள்.தன்னால் தோழிகளுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாதென்று நினைத்த மாதவி


"பாருங்க நீங்க ரெண்டு பேரும் யார் என்று சரியாக தெரியவில்லை. இருந்தும் என்னிடம் இவ்வளவு தூரம் பேசுவதால் கேட்கிறேன் நீங்க ரெண்டு பேரும் யார்...எதற்கு இங்கு வந்திருக்கின்றீர்கள் சொல்லுங்கள்."என்றாள்.


இவளது பேச்சைக் கேட்ட அவர்களுக்கே குழப்பமாகிவிட்டது நிஜமாகவே மாதுரிதானா என்று.


தங்களை பற்றி கூறியவர்கள் தன்னை பற்றியும் கூறுவதை கேட்டவள் அவர்களை அழைத்துச் சென்று தன்னறையிலே தங்கவைத்தாள் .

"தனக்கு தெரியாமல் எங்கும் போககூடாதென்றும். தான் வெளியில் போனால் எப்போது வருவேன் என்று தெரியாது..யார் அழைத்தாலும் வெளியில் வரவேண்டாம்" என்றும் கூறி சென்றாள்.திவாவுடன் வருத்தமாக இவற்றை பகிர்ந்து கொண்டவள் அவர்களறியாது பாதுகாப்பு கொடுக்க கேட்டுக் கொண்டாள்.


இரவில் மீண்டும் வந்த போது அவர்களின் கலாட்டா ஆரம்பமாகியிருந்தது ,அதை ரசித்தாள் அவர்கள் கண்டுகொள்ளாதபடி. மறுநாள் காலையில் வெளியே வந்தவர்கள் ஆனந்தை கண்டதும் ஓடி சென்று அவனை சுற்றிக் கொண்டார்கள். சிரித்தபடியே பதிலை கூறிய ஆனந்தின் விழிகளோ மாதுரியை பார்வையால் வருடியது. அவளோ முந்தாணையை திருக்கிக் கொண்டு சுவரை நோக்கியபடி நின்றாள்.

மேலும் இரண்டு நாட்கள் சென்ற நிலையில் திடீரென மொபைலில் அழைத்தவள் " இந்த இடத்திற்கு விரைந்து வா!!! அவசரம் ..." என்று சொல்லிவிட்டு காலை கட்பண்ணிவிட்டாள் காவ்யா. இவளோ செய்வதறியாது பதறி துடித்து அதே நம்பர்க்கு திருப்பி அடித்தாள் அவர்கள் எடுத்தால் தானே...


விரைவாக அவர்கள் கூறிய இடத்திற்கு சென்றவள் அவர்களை காணாது திகைத்தாள்.அப்போது திடீரென்று  மைக் அறிவிப்பு கேட்க அவ்விடத்தை நோக்கி விரைந்தாள்.


அங்கே ஆனந்த் & சிவா குத்துச்சண்டைக்கு தயாராக நின்றனர்.இவளை கண்டதும் பார்த்த ஆனந்த் திரும்ப மறுத்தான்.அவளையே பார்வையால் உள்ளிழுத்துக் கொண்டிருந்தான்.


திடீரென சிவா ஓங்கி குத்தவும் ஆனந்த் கன்னத்தில் காயம் ஏற்பட்டது மறுபடியும் மறுபடியும் தாக்க அவனோ வாங்குவதற்காக பிறந்தவன் போன்று நின்று கொண்டிருந்தான்.


எல்லோரும் அவன் பெயரை சொல்லி முழக்கமிட்டனர். ஆனால் எந்தவித மாறுபாடும் இல்லை. கடைசி ரவுண்ட் வந்தது அவனது பார்வை அவளிடம் ஏதோ கேட்க அவளது பார்வையோ அவனிடம் யாசித்தது வேண்டுகோளாக....

கட்டை விரலை உயர்த்தி மற்றவிரல்களை மடக்கியவள் அவனை நோக்கி நீட்டினாள்.


'அவனோ எனக்கு இதுவே போதும்' என்று நினைத்தானோ எதிரில் நின்றவனை அடித்து துவம்சம் செய்துவிட்டான்.


எங்கும் ஒரே ஆவேச கூச்சல்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.அவளை தேடிய அவனது கண்களோ அவளைக் காணாமல் ஏங்கி தவித்தது.அவளின் நிலையோ வார்த்தையால் வர்ணனை செய்யமுடியாதது.


கோபம் அன்பு ஏக்கம் எல்லாம் கலந்த கலவையான அவள்வெளியில் நின்று தன்னை முயன்றுக் கட்டுக்குள் கொண்டுவந்தாள்.


அப்போது தோளின் மீது விழுந்த கரத்தில் தன்னிலை மீண்டவள் காவ்யாவை ஓங்கி அறைந்தாள்.திட்டிவிட்டு சென்றுவிட்டாள்.இரவு வெகுநேரம் கழித்து வந்தவள் அவர்களிடம் பேசவுமில்லை ,உண்ணவுமில்லை, மாத்திரையை போட்டுவிட்டு அப்படியே கட்டிலில் விழுந்தாள்.


மறுநாள் விடாது அடித்த மொபைலின் ஓசையில் எழுந்தவள் பேசிவிட்டு கிளம்பி ரிசப்சனுக்கு  சென்றுவிட்டாள். 


இரண்டு நாள் கழித்து, மனது சரியில்லாமல் உழன்று கொண்டிருந்த ஆனந்தோ அவளை நெருங்கிட வழியறியாது தவித்தான். எப்படியாவது பேசி புரிய வைத்திட நினைத்தான், அவளோ முகத்தையே நிமிர்ந்து பார்க்க மாட்டேன் என்கிறாளே..என்ன தான் செய்ய மகளை ஆசை தீர கொஞ்சவேண்டும் மனைவியை அரவணைக்க வேண்டும் என்று  துடித்த உள்ளத்தை அடக்கிட வழியறியாது தவித்தான். அன்று மகளை கண்டவுடனே தெரிந்து கொண்டவன் திவாகரை சந்தித்து மகளைப் பற்றிய விபரங்களை தெரிந்து கொண்டு ,தானும் எல்லா விபரங்களையும் தெளிய படுத்தினான். 


"மாதுரி சம்மதம் தான் முக்கியம் என்றவன் அவள் என்ன சொன்னாலும் எனக்கு சம்மதம். ஆனால் அவள் விருப்பம் இல்லாமல் எதையும் செய்ய நான் அனுமதிக்க மாட்டேன்" என்றான் உறுதியாக.

அதைக் கேட்டு தலையசைத்தபடி அங்கிருந்து அகன்றான் ஆனந்த்.


மனைவியை நெருங்கிட துடித்தான் .ஆனால் அவளோ அவனை கோபங்கொள்ளச் செய்ததோடு மட்டுமல்லாமல்  அடிக்கவும் செய்து விட்டாள். அவளை மிரட்டியாவது அழைத்துச் சென்றிட நினைத்தால் இரண்டு நாட்களாக அவளை காணவும் முடியவில்லை. அவளை எப்படியாவது தன்னுடனே அழைத்து வந்துவிடவேண்டும் .அதன் பிறகு பேசி சரி பண்ணலாம்  என்று எண்ணியவன் விரைந்து வந்து நோக்க, அவளோ அறையில் இல்லை. எங்கே சென்றாள் என்பதை கேட்டறிந்தவன் அவளை தேடி சென்றான் ....


தோழிகளும் அவர்கள் காதலர்களுடன் சுற்றியபடியே கடற்கரைக்கு வந்தனர்.ஆனந்தும் தேடி அதே இடத்திற்கு வந்தான்.திவா அம்மா அப்பா குழந்தையுடன் மாதுரியும் அங்கு நிற்பதை கண்டவன் அவர்களை நோக்கி விரைந்தான்.


கடற்கரையில் மூன்று சிறிய போட்டோக்களை வைத்து  அதற்கு திதி கொடுத்துக் கொண்டிருந்தாள். சந்தண நிற புடவையில் தலை முடியை கிளிப்பில் அடக்கி விரித்திட்டு சிறு நகைகளை மட்டும் அணிந்தவள் ,சிறு குழந்தையின் துணையுடன் புரோகிதர் கூறியதை செய்து விட்டு திரும்பியவள் அங்கு ஆனந்த், தோழிகளை எதிர்பார்க்கவில்லை.


வேக  எட்டுக்களை எடுத்து வைத்து வந்தவன் போட்டோவினை பார்த்து கும்பிட்டு காரியங்களை மருமகனாக செய்து முடித்தான்.புரோகிதர் போனபிறகு அவளை நோக்கி வந்தவன் "இந்த குழந்தை என் குழந்தை தானே மாதுரி , ஏன் என்னிடம் சொல்லாமல் மறைத்தாய்..என்னுடன் இருப்பதில் உனக்கு என்னடிடி அப்படி பிடிவாதம், அப்படி என்ன  தவறு நான் செய்துவிட்டேன்..உன் மீது உண்மையான அன்பை வைத்த என்னை பைத்தியக்காரனாய் அலையவிடுகிறாய்.எனக்கு நீயும் என் மகளும் வேண்டும்" என்று கத்தியவன் மகளை அவளிமிருந்து பறித்தான் முத்தமழை பொழிந்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்..


ஆனந்த் கூறியதைக் கேட்ட தோழிகள்" என்னாது ஆனந்த் உன்னோட கணவரா !!!!  உனக்கு திருமணம் நடந்ததே அதிர்ச்சியாக இருக்கு, இதில் ரேவதி உன்னோட குழந்தையா.அப்போது நீ ஏன் எல்லோரையும் பிரிந்து இருக்கிறாய், சீக்கிரம் சொல்லிவிடி இல்லை எனக்கு மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு" என்றாள் காவ்யா


"ஆமாம் சொல்லு மாதுரி "என்றாள் ஜானுவும் உடன் சேர்ந்து


அவளோ ஆனந்த்தையும் குழந்தையையும் மாறி மாறி பார்த்தாள். குழந்தை "ம்மா ஆனந்துப்பா ஏன் திட்டுது உன்ன , நான் அங்கில் சொல்லுதன்" என்றாள் முகத்தை உர்ரென்று வைத்தபடி,


அவனைக்காட்டி "அவர்தான் உன்னோட அப்பா" என்றாள் மகளிடம்" ப்பாபா வாவா பாப்பா அப்பாவா ,"ஆமாம்மா என்றதும் அவனது கழுத்தை கட்டி "ப்பா அப்பா" என்றது ,அவனும் அணைத்து முத்தமிட்டான்


மற்ற யாரும் வாய் திறக்கவில்லை மாதுரியின் பதிலை எதிர்நோக்கி காத்திருந்தனர். 


மூன்று வருடங்ளுக்கு முன்பு


அதிகாலை 5.30மணிக்கு திடீரென நிறுத்தாமல் அடித்த காலிங் பெல் ஓசையால் தூக்கத்திலிருந்து விழித்தவர் இந்த நேரத்தில் யார்வந்திருப்பார்கள் என்று எண்ணியபடி கதவை திறக்க பாபாபாபாபா என்று கேட்ட சத்தத்தில் திகைத்தவர்  முழுஉறக்காமும் விடுதலை பெற தனது அருமை மகளை அப்படியே அணைத்துக் கொண்டார்.


"என்னடாம்மா!!! இது இப்படி திடீர்ணு வந்து நின்னு ஷாக் கொடுக்குற, முதலிலே சொல்லியிருந்தால் அப்பாவே உன்னை அழைக்க ரெயில்வே ஸ்டேஷன் வந்திருப்பேனே என்றார் பாசமாக


"ஏன்பா சொல்லாமல் நான் வரக்கூடாதா..".


"என்னம்மா இப்படி கேட்டுட்ட இந்த அப்பா இருப்பதே உனக்காகத்தான் என்று தெரியாதாடா"..மகளின் மீதான பாசத்தில் அவர் கூறினார் .ஆனால் அவரோ அவளை சீண்டி பார்க்க எண்ணி "அப்போ அம்மா வேண்டாமாபாபா...அம்மா மீது பாசம் இல்லையா "என்று கோர்த்துவிட்டாள்...


மகளின் கேலியை உணர்ந்த தந்தையும் அவளுக்கு ஜால்ரா போட இதையனைத்தும் கேட்டபடி வந்தார் அருணா.பிரபல கிரிமினல் வக்கீல்  தீனதயாளனின் மனைவி.


இருவரின் கேலிகளை ரசித்தும் அவர்களை முறைத்தபடியே வந்தவர் மகளின் நலனை பெரிதாக கொண்டு அணைத்து உள்அழைத்துச் சென்றார்.


மாதுரி அவரின் செல்ல மகள் துடுக்குதனம் ,கோபம் கர்வம் திமிர் அனைத்திற்கும் சொந்தக்காரி.அண்ணன் ஆதி கேஷவன் பிரபல மருத்துவன். அப்பாவை போல தானும் இருக்க ஆசைக் கொண்ட மாதுரி ஹாஸ்டலில் தங்கி சட்டம் படித்துக் கொண்டிருக்கிறாள்.இன்னும் ஆறு மாத படிப்பு மிச்சமிருக்கிறது.


தங்கையின் திருமணத்திற்கு பிறகு தானும் மணந்து கொள்வதாக கூறியிருக்கிறான். தங்கை மீது கொள்ளை பாசம்.மாதம் ஒருமுறை அவளை போய் பார்த்துவருவார்கள். மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள் படிப்பு முடிந்த பிறகே சொல்லிக்கொள்ளலாம் என அமைதியாக இருந்துவிட்டனர்.சொல்லியிருக்கலாம்...ஒரு வேளை அப்படி சொல்லியிருந்தால் இருவர் உள்ளங்கள் உடைபடாமல் தப்பித்திருக்கும்...பார்க்கலாம்...


மகளிடம் பேசியபடியே வீட்டினுள் வந்தவர்கள் அவளது உடல்நிலை, படிப்பு சாப்பாடு தோழிகள் ஹாஸ்டல் வசதி எல்லாம் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தார்கள்.


அண்ணனை கண்டதும் விரைந்து அருகில் சென்று அவனது தோளில் தொங்கி செல்லம் கொஞ்சினாள்.நேரத்தை பார்க்காமல் பேசிக்கொண்டே இருந்தனர்.போய் பிரஸ்ஸாகி வந்து சாப்பிடு ஓய்வெடுக்கும் படி அனைவரும் கூற அப்படியே செய்தவள் சாப்பிட்டு, பாட்டு கேட்டுக்கொண்டே உறங்கிவிட்டாள்.


மகளுக்கு விருப்பமான பதார்த்தங்களை பார்த்து பார்த்து செய்து கொடுத்த தாயார் அவள் உண்ணும் அழகை ரசித்துக் கொண்டிருந்தார்.


புடவை நகை பூ பொட்டுடன் மகளை வரச்செய்து கோவிலுக்குச் சென்றனர்.அர்ச்னை செய்து குடும்ப போட்டோ எடுத்து ஹோட்டலில் சாப்பிட்டு ஷாப்பிங் போய் மகள் விரும்பியதெல்லாம் வாங்கிக் கொடுத்தவர் மனையாளையும் கவனிக்கத் தவறவில்லை.இரவு வீட்டில் வந்து தூங்கியவர்கள் அவளுடன் கன்னியாகுமாரிக்கு சென்றனர். 

சாமி கும்பிட்டு விவேகானந்தர் பாறை ,

திருவள்ளுவர் சிலை போன்றவற்றைபோட்டிங் மூலம் சென்று ரசித்தனர்.அடுத்து காந்திமண்டபத்திற்கு சென்று ரசித்து பார்க்கில் அமர்ந்து ஓய்வெடுத்து கடற்கரையில்  அமர்ந்தனர்.


அண்ணணும் தங்கையும் கையை பிணைத்தபடி நீரில் ஆட்டம் போட்டு ரசித்தனர்.தான் கொண்டு சென்ற கேமராவில் பண கோணங்களில் புகைப்படத்தை எடுத்து ரசித்தவள் அவர்களுக்கு பிடித்ததை வாங்கி கொடுத்து மகிழ்ந்தாள்.


அண்ணனோ சுடிதார் புடவை லஹங்கா எல்லாம் வாங்கி கொடுத்தார்.தந்தையும் அப்படியே செய்தார் பல வண்ண நிறங்களில் உள்ள காட்டன் புடவைகளும் சுடிதாருமே அவள் விரும்புவது.


மகள் இப்போது போனால் வர நாளாகுமே ,அதனால் நைட்டி பாவாடை பனியன்...எல்லாமே வாங்கிக் கொடுத்தனர்.


மாமா வீட்டிலிருந்தும் சித்தி வீட்டிலிருந்தும் மாமி வீடிலிருந்தும் அவளது வரவை தெரிந்து கொண்டு அவளுக்கு பிடித்தது போன்று அதிரசம் பலகாரம் பால்கோவா செய்தும் வாங்கியும் வந்திருந்தார்கள்.


விடுமுறைக்கு வந்து ஐந்தாம் நாள்  அவளது தோழி சங்கீதா தொலைபேசியில் அழைத்திருந்தாள்.

அக்காவிற்கு திருமணம் கட்டாயம் வரவேண்டும் என்று ,பேசியை தகப்பனாரிடம் கொடுத்தவள் விலகிக் கொண்டாள். மகளின் மனமறிந்த தகப்பனாரோ சம்மதம் தெரிவித்தார்.


பதினைந்து நாள் விடுமுறையில் வந்த மகள் அந்நாட்கள் முழுவதும் உடனிருப்பாள் என்று நினைத்தவர்களுக்கோ வருத்தம் தாளவில்லை.மகள் மனதையும் வருத்த மனமில்லை. அங்கு போய்விட்டு அப்படியே கல்லூரிக்கு சென்றுவிடுவதாக கூறி அவள் சென்றாள்.


தாயும் தகப்பனும் அவர்களுக்குள்ளே ஆறுதல் தேடிக் கொண்டனர்.கிளம்புவதற்கு ஒரு நாள் முன்பு அண்ணனுடன் வெளியில் சென்றவள் அங்கிருந்த பெரிய பேன்சி  கடையில்  தனக்கு வேண்டியவற்றை வாங்கிக் கொண்டவள் வெளியில் வரும் போது தெரியாமல் வேறொருவர் மீது மோதி கொண்டாள்.


"சாரிங்க தெரியாமல் இடிச்சுட்டேன்..."

"'அட இதுக்கு போய் எதுக்கு சாரி எல்லாம் கேட்டுகிட்டு வேண்டுமானால் மறுபடியும் ஒருசமயம் இடிச்சிக்கோங்க "என்று விஷமமாக கூறினான்.


அவளுக்கோ ஒரு மாதிரி ஆகிவிட்டது. என்ன இவன் இப்படி  , பேசாமல் போய்விடலாம் என்று எண்ணியவள் அவனது பேச்சை கிஞ்சித்தும் சட்டை செய்யாமல் கிளம்பிவிட்டாள்.....ஆனால் அவனோ.. விட்டுவிடுவானா....


மறுநாள் வீட்டில் எல்லோரிடமும் பேசி மகிழ்ந்தவள் கிளம்பிட எண்ணி அண்ணனின் காரில் 

பேக் பெட்டியை வைத்தவள் பெற்றோரை அணைத்து முத்தமிட்டு விடைபெற்றாள்.


மகளின் பிரிவை நினைத்து கண்கலங்கினர்.விடைபெற்ற மாதுரியை காரில் ஏற்றி அழைத்துச் சென்று ரெயில் நிலையத்தில் இறக்கி டிக்கெட் எடுத்து வந்து டிரெயினில் ஏற்றிவிட்டான்.


தோழி வீட்டுக்கு வந்து சேர்ந்தவளுக்கு உற்சாக வரவேற்பு.தோழி சங்கீதா அவளை கண்டதும் ஓடி வந்து அணைத்துக் கொண்டாள்.பிறகு வீட்டில் உள்ள அனைவருக்கும் அறிமுகப்படுத்தி சாப்பிட வைத்து உறங்கிட அனூப்பி வைத்தாள்.


மறுநாள் காலையில் தோழியைக் கண்ட சங்கீதா இன்று தங்களுடன் வெளியில் வந்து சாமான் வாங்குவதில் கலந்து கொள்ள அழைத்தாள். 


சரி என்றவளும் கிளம்பிட போத்தீஸ் மாளிகையின் முன் போய் நின்றார்கள்.பலவகையான கண்ணைக்கவரும் வண்ண வண்ண நிறங்களிலும் புது புது வரவுகளும் அடுக்கி வைக்கப்பட்டும் விரித்து பரப்பி வைக்கப்பட்டும் காணப்பட்டது .


சங்கீதா பட்டு சாரி இருக்கும் பகுதிக்கு தோழியை அழைத்துச் சென்றாள்.தனக்கு பிடித்த நிறங்களை எடுத்து நோக்கியவள் இலைப் பச்சை மயில் கழுத்து நீலம் சந்தன நிறம் பிங் கலர்களை தேர்வு செய்து தோழிக்கும் பிங் கலரில் பட்டு சாரி எடுத்துக் கொடுத்தாள்.மறுத்த அவளின் பேச்சை அவள் கேட்க வில்லை. 


"சரி மாதுரி நான் பில் போடுவதைப் பார்க்கப் போகிறேன் உனக்கு பிடித்தது இருந்தால் பார்த்து விட்டு கீழேவா "என்றாள்.


சரி என்று தலையசைத்த அவளும் சும்மா பார்த்துக் கொண்டே வந்தவள் கீழே சென்றிட எண்ணி படிக்கட்டு பகுதியை அடைந்தாள்.


வேறு வேறு எண்ணங்கள் சிந்தையில் ஓட கவனமின்றி நடந்ததில் கால் தட்டி எதிரில் வந்த ஆண்மகனின் மேல் போய்விழுந்தாள்.


சில நிமிடங்களில் சுயநினைவுக்கு வந்தவள் எழும்ப எத்தனிக்க அவனது பார்வையோ கடுமையாக முறைத்தது.


'தெரியாமல்தானே விழுந்தோம் அதற்கு ஏன் இப்படி முறைக்கிறான்' என்று எண்ணியவள் விலகி "சாரி" சொல்லி கிளம்பினாள்.ஆனால் அவன் விட்டானில்லையே.


"ஹலோ மிஸ் கண் என்ன முதுகு புறத்திலா வைத்திருக்கீங்க ..பார்த்து போக தெரியாதா ..ஸ்டுப்பிட்..கொஞ்சம் அழகாகவும் வசதியாகவும் இருந்துவிடகூடாதே உடனே வெட்கம் இல்லாமல் மேலே வந்து மோதிட வேண்டியது"

என்று திட்டிக் கொண்டே போய்விட்டான்.


அவனது பேச்சைக் கேட்டு முயன்று கோபத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தவள் விலகி நடக்கும் போது காலில் ஏதோ தட்டுபட எடுத்து திறந்து பார்த்தால். பர்ஸ் அதில் சற்றுமுன் திட்டியவனின் போட்டோ ஏடிஎம் கார்ட்டு இன்னும் நிறைய கார்ட் பேப்ர்ஸ் இருந்தது.


அவனிடம் கொடுக்க தேடினாள். அவனோ அங்கு யாரிடமோ  தீவிரமாக பேசியபடி நின்றான்.


யோசனையுடனே அவனை நோக்கிச் சென்றவள் அவன் பின்புறம் நின்றிட பேசி திரும்பியவன் என்ன என்று பார்வையாலே முறைத்துக் கேட்க நீட்டிய பர்சை வாங்கிக் கொண்டவன் அதற்கும் அவளையே திட்ட என்னவென்று கேட்டவனிடம் நடந்ததை கூறியவன் அவளைப்பற்றி தவறாக கூறினான்.


"சார் பாவம் அந்த பெண் அழுது கொண்டே போகிறது ...போகட்டும் விடுங்கள் " என்றான்" 


வாகீசன் .இதெல்லாம் நடிப்பாக்கும் இந்த மாதிரி நடந்து நம்மை இம்ப்ரஸ் பண்ண பார்க்குதுக எத்தனை பேரை பார்த்துவிட்டோம் இவ மட்டும் சுத்தமானவளா இருப்பாளா என்ன..எல்லாம் பணத்திற்காக போடுகிற வேஷம்தான்" என்று அவளை வார்த்தைகளால் வறுத்தெடுத்தான்.


சோர்வுடன் வந்தவள் தோழியுடன் சேர்ந்து எல்லாம் வாங்கி முடித்து அறையில் அடங்கியவளுக்கோ கோபம் வெறுப்பு அழுகை என பலவித உணர்வுகளால் தாக்கப்பட்டாள்.


திருமணத்திற்கு முந்தைய நாள் மற்ற தோழிகள் தோழர்களும் வந்து சேர்ந்தனர், சங்கீதாவின் அண்ணன் சந்தோஷின் தோழமைகள் ஒருபுறம் கல்யாண பெண் சத்யாவின் தோழிகள்  சொந்தகார உறவுகள் வேலைக்காரர்கள் என திருமணவீடே கூட்டத்திலும் கூச்சலிலும் மிதந்தது.


அப்போது மாடிக்கு புறப்பட்ட அனைத்து மாணவச் செல்வங்களும் நாம் இவ்வளவு பேர் இருக்கிறோம் அதனால் ஏதாவது போட்டி அல்லது விளையாட்டு வைப்போம் என்றனர். 


அதைக்கேட்டு அனைவரும் சம்மதித்து தலையசைத்து கையடித்து ஆரவாரம் செய்தனர்


அதன்படி கண்ணடி குடுவையினுள் சில பேப்பர்களில்  ஏதோ எழுதி சுருட்டி போட்டனர்.


அதைக் காமித்து எல்லோரும் பார்த்துக் கொள்ளுங்கள்.நான் கொடுக்கும் பாழ் கைமாற்றி மாற்றி கொடுக்கவேண்டும் யாரிடம் பாட்டு நிற்கும் போது இருக்கிறதோ அவர்கள் அவுட்.குலுக்கல் சீட்டில்  வருவது போல செய்ய வேண்டும் என்றனர். எல்லோரும்ஹோஹோஹோவென்று  ஆர்ப்பரித்தனர்.


முதல் ரவுண்டு ஆரம்பமாகியது அதில் சிவா மாட்டினான் பாட சொல்லி சீட்டு விழுந்தது. அவனும் அழகாக பாடினான். அடுத்து ராதா வுக்கு நடிக்க சொல்லி வந்தது. அவளின் நடிப்பைக் கண்ட அனைவரும் சிரித்து கேலி செய்தனர்.ஒருவனுக்கு டான்ஸ் வர அவன் ஆட எல்லோரும் சேர்ந்து ஆடினர்.சூப்பபர்ர்ராக இருந்தது இந்தமுறை சங்கீதா மாட்டினாள் பேசிபேசியே கொன்னுட்டா அனைவரின் சிரிப்பு அடங்க வெகு நேரம் ஆனது.


சங்கீயை தேடி மாதுரி வர அனைவரின் பார்வையும் சுவராஸ்யமாய் அவள் மீது மேய்ந்தது.பிங்க் நிற லஹங்க போட்டு தலைமுடியை கீழ் பகுதியில் விரித்து விட்டிருந்தாள். அவள் தடவியிருந்த ஹேர் ஆயில் முடி பறக்கும் போது நல்ல நறுமண வாசத்தை கொடுத்தது.பர்பியூம் வாசம் அவளை அப்படியே உறிஞ்சி இழுக்கும் படி செய்தது.


கீழே செல்ல எத்தனித்தவளை யாரும் விடவில்லை.

இரண்டு மூன்று ரவுண்டுகளில் அவளை தோற்கடித்தனர்.ஹோஹோ வென்ற சத்தத்தில் பயந்தவள் கீழே போய்விட எத்தனிக்க விடவில்லை அனைவரும்.


அவளுக்கு வந்த சீட்டில் பாட்டும் டான்ஸ்ஸும் சேர்ந்து வந்தது. எல்லோரும் ஆரவாரமாக கைத்தட்டினர்.மணப்பெண்ணையும் பிடித்துக் கொண்டு வந்து அமரவைத்துவிட்டனர்.


மாதுரி நடுவில் விடப்பட ஆடுபவர்கள் பின்புறமும் அவளது இரு பக்கமும் நின்றனர்.


என்ன பாட என்று திகைத்தவள் ஆடவும் வேண்டுமே இரண்டிற்கும் ஏற்றார் போல சிங்கிள் வாய்ஸ் தேர்ந்தெடுத்து பாடினாள். பாதியில் ஓடிவிடலாம் என்று நினைத்தாள்..


அதே நேரம் கீழே தோழனிடம் பேசிக்கொண்டிருந்த அவன் தோழனுடன் மாடிக்கு வந்தான் மணப்பெண்ணை காணவேண்டி....


இவளது பாடலை கேட்டதும் அவர்களும் கோரஸாக பாடி ஆட ஆரம்பித்தனர் .இவள் பாடி மெதுவாக ஆடினாள்.

  

"நெஞ்சினிலே நெஞ்சினிலே

ஊஞ்சலே நாணங்கள்

என் கண்ணிலே


கொஞ்சிரித் தஞ்சிக்

கொஞ்சிக்கோ முந்துரி

முத்தொளி சிந்திக்கோ

மஞ்சளி வர்ண சுந்தரி

வாவே தாங்கிணக்கத்

தகதிமியாடும் தங்க நிலாவே


(கொஞ்சிரி)


தங்கக் கொலுசல்லி கொலுங்

குயிலல்லி மாரன

மயிலல்லி


(தங்கக்)


நெஞ்சினிலே நெஞ்சினிலே

ஊஞ்சலே நாணங்கள்

உன் கண்ணிலே

சிவந்ததே உன் மஞ்சளே

கல்யாணக் கல்யாணக் கனவு

உன்னுள்ளே


(நெஞ்சினிலே)


ஓரப்பார்வை வீசுவான்

உயிரின் கயிறில் அவிழ்குமே

செவ்விதழ் வருடும்போது

தேகத்தங்கம் உருகுமே

உலகின் ஓசை அடங்கும் போது

உயிரின் ஓசை தொடங்குமே

வான் நிலா நாணுமே 

முகிலிழுத்து கண்மூடுமே


(நெஞ்சினிலே)


பாதிபாடல் பாடி முடிந்ததும் ஓடிவிட நினைத்தவளை போக விட்டார்களில்லை அவர்களும் ஆடி பாடியவர்களாயிற்றே


ஏய் குருவாரிக் கிளியே

குக்குரு குருகுரு கூவிக்

குருகி குன்னிமனத்தைக்

கூயல் ஆடி கூடுவகிக்கிக்

கூட்டு விழிக்கின்னே

மாறன் நின்னைக் கூவிக் குருகி

கூட்டு விழிக்கின்னே


(குருவாரிக்)


தங்கக் கொலுசல்லி கொலுங்

குயிலல்லி மாரன

மயிலல்லி


(தங்கக்)


குங்குமம் நீ சூடினாய்

கோலமுத்தத்தில் கலையத்தான்

கூறைபட்டு ஏன் உடுத்தினாய்

கூடல் பொழுதில்

கசங்கத்தான்


மங்கைக் கூந்தல்

மலர்கள் எதற்க்கு கட்டில் மேல்

நசுக்கத்தான் தீபங்கள் அணைப்பதே

புதிய பொருள் நீ தேடத்தான்


(நெஞ்சினிலே) 


ஆடி பாடி முடித்தவளை சுத்திவிட அக்னிபார்வையால் தன்னை சுட்டெறித்தவன் மீது பொத்தென்று விழுந்தாள்.இறுக அணைத்தவள் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு நிமிர்ந்து பார்த்தால் அவன் தான்.. விலகிட நினைத்தாள் அவன்தான் விட்டானில்லையே.தனியே அழைத்துச் சென்றவன் "உனக்கு என் மனதை விட  என் உடலின் மீது தான் ரொம்ப ஆசை இல்லையா, நான் எவ்வளவோ திட்டியும் மறுபடியும் என்னையே அணைக்கிறாயே இதற்க்கு பதிலடி கொடுக்காவிட்டால் நானும் ஆண்மகன் அல்லவே "என்றவன் அவளை இரும்புக் கரங்களால் நொறுக்கி இருக்கியவன் அவளது செவ்விதழில் இரத்தம் கசிந்த பிறகே  விட்டு விலகினான்.அதிர்ச்சியாக நோக்கியவளை கண்டு


"மறுபடியும் என்கிட்ட வச்சுகிட்ட உன்னை முழுசா...முடிச்சுடுவேன் ஜாக்கிரதை "என்றான் மேலும் கீழுமாக  பார்த்தபடி ,  .


  அங்கோ பலத்த இறைச்சலும் சத்தமும் காதைத்துளைக்க கைதட்டி ஆரவாரம் செய்தனர்.இன்னும் விளையாட்டை முடிக்காமல் விடிய விடிய கொண்டாடினார்கள். 


அவனது செயலில் அதிர்ந்தவளோ  பயத்தில் நடுங்கி கீழே போய் கதவடைத்துக் கொண்டாள். அவன் போகும் வரை வெளியில் வந்தாளில்லை.


அவளது அறையை நோக்கியவன்' மறுபடியும் என்னிடம் மாட்டாமலா இருப்பாய் அப்பொழுது பார்த்துக் கொள்கிறேன்' என நினைத்து சென்றான்.ஆனால் எதற்கு அவள் மீது கோபம் வெறுப்பு என்று அவன் உணரவில்லை.அவளை காயப்படுத்திவிடும் வேகத்திலே இருந்தான்...பாவம் இதனால் தானும் காயப்படுவதை உணராமல்..


மறுநாள் எல்லோரும் காலையிலே எழுந்து தயாராகி சாப்பிட்டு மண்டபத்திற்கு செல்ல தயாரானார்கள். தேவலோக மங்கைகளோ என்று தோன்றும் வண்ணம் உடையிலும் நகையிலும் பளபளவென்று ஜொலித்தார்கள்.


தோழிகள் அனைவரும் ஒரு புறமும் தோழர்கள் மறுபுறமும் வீற்றிருந்தார்கள்.திரூமாங்கல்யத்தை பூட்டும் போது அனைவரும் மலர் தூவி ஆசிர்வதித்தனர்.


திருமணம் முடிந்து அனைவரும் பேசி சிரித்து கிண்டலடித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.அப்போது சிறுகுழந்தையின் அழுகை குரலில் திரும்பியவள் தோழியிடம் கூற அவர்களோ காது கொடுத்தும் கேட்டாளில்லை.


மாதுரி எழுந்து என்னவென்று பார்க்கச் சென்றாள் அங்கு மூன்று வயது குழந்தை அழுது கொண்டிருந்தது. "என்னம்மா ஏன் அழுதுகொண்டிருக்க ..நீயாரு..இங்கே ஏன் தனியாக நிற்கிறாய் "என்று கேட்டாள்.


குழந்தைக்கோ சரியாக பதில் சொல்லத் தெரியவில்லை. அழுது கொண்டே அம்மா அம்மா என அழுதுகொண்டே இருந்தது. குழந்தையை வாரி எடுத்த மாதுரி சங்கீதாவிடம் கூறிட எண்ணி உள்ளே நுழைய சபையில் குற்றவாளி ஆக்கப்பட்டாள்.


ஆம் குழந்தையின் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் சங்கிலியை காணவில்லை. மாதுரி குழந்தையை தூக்கி வைத்திருந்ததால் பழியை அவள் மீது போட்டடனர்.


அவள் மறுத்தாலோ யாரும் கேட்கவும் இல்லை. அவளை வாய் திறக்க விடவும் இல்லை.


கலங்கிய அவளது தோற்றம் காண்போரை உருக்கும் ஆனால் யாருக்குமே உருகவில்லை. நகை திருடி குழந்தை திருட வந்தவள் என்று கூறினர்.தோழிகள் அனைவரும் மேலே மண்டபத்தில் இருந்ததால் இவர்கள் பேச்சு அவர்களின் காதில் விழவில்லை


அப்போது எங்கிருந்தோ விரைந்து வந்தவன் வார்த்தையால் குதறி எடுத்தான்.


"ஏன் இப்படி செய்தாய்...உனக்குப் பணம்  நகை தான் பெரிதாகப் போய்விட்டதா. பார்க்க அழகாக தானே இருக்கிறாய் எதற்கு இந்த 

மானம்கெட்ட  பிழைப்பு... இதற்கு.....வேலை பார்க்கலாமே ..மானம் மரியாதை என்னவென்று தெரியாதா  என்றான் " உருமலாக

கோபத்தில் வார்த்தையை விசமாக வீசினான் திட்டினான். "போலீஸில் ஒப்படைத்தால் தான் அடங்குவாள் திருடி "என்று அனாவசியமான வார்த்தைகளை விட்டான்


அவனின் வார்த்தையின் வீரியத்தை தாங்குவாளா.......


வெளியேறியவள் அழுதாள் தன்னுடைய நிலைமையை  நினைத்து

ஆனால் ஓய்ந்து விடவில்லை. கண்ணீரை துடைத்து மறுபடியும் வந்தாள் ஆங்காரமாக அவனை முறைத்தாள்...


தன்னை திட்டியவளிடம் சென்றாள்.அந்தக் குழந்தையை பறித்தாள்.அவளிடம் எகிறியவர்களை வார்த்தையால் அடக்கினாள்.


"குழந்தையிடம் ஏன் அழுதாய்..எதற்காக அங்கு போனாய் "என்று கேட்டாள்.


அப்போது அங்கு பதுங்கி நின்றவனை குழந்தை பார்த்து கை காட்டியது..விரைந்து சென்ற மாதுரி அவனை அடித்து உதைத்தாள். அவனது வாயில் ஓங்கி குத்தினாள்.அடி பட்டதில் இரத்தம் வர ஆரம்பித்தது "சொல்...சொல்லடா.. இல்லை உன்னை கொன்று புதைத்து விடுவேன்

"என்றாள் கர்ஜனையாக...


மாதுரியை திட்டியவன் மறுபடியும் வந்து திட்ட போக கை நீட்டி செறுத்த மாதுரி அடிவாங்கி கீழே கிடந்தவனை கை காட்டினாள்.அவளது ஆத்திரம் அடங்கவில்லை. ஆனால் அவனோ மறுபடியும் மாதுரியை திட்டி வெளியேற்றப்போக முதன்முறையாக அவனை உறுத்து விழித்தாள்...


"நீயார் என்னை திட்ட..என்னை அடிக்கும் உரிமையை உனக்கு யார்  கொடுத்தது...நான் என்ன உன் பெண்டாட்டியா... என்னை அதிகாரம் பண்ணும் உரிமையை என்ன யார் கொடுத்தது "என்றாள் ஆத்திரமாக


இவளது பதிலில் திகைத்தவன் அவளையே நோக்க

"நான் யார் தெரியுமாடா..இடியட் .. தி கிரேட் கிரிமினல் லாயர் தீனதயாள் ஒண்லி டாட்டர் மாதுரி தி பைனலியர் ஸ்டுடன்ட் ஆப் லா காலேஜ் கோயம்புத்தூர்.மை பிரதர் ஆதி கேஷவன் தி பேமஸ் கார்டியாலஜிக் டாக்டர்.   


என்னை பற்றி எதுவும் தெரியாமலே திட்டுகிறாய் முறைக்கிறாய் அடித்துவிட்டாய் என்னையே அதிகாரம் செய்கிறாய்....

உனக்கு யார் அந்த உரிமையை கொடுத்தது சொல்லு.."..அடுத்து மிதிபட்டவனை தூக்கினாள் "சொல்லுடா என்ன நடந்ததென்று" அவளின் கோபத்தில் மிரண்டவன் குழந்தையை தூக்கி செயினை எடுத்ததை கூறி ஆதை ஒப்படைத்து நல்ல உதை வாங்கிச் சென்றான்.


அவளை நோக்கி வந்தவனையோ...குழந்தையின் அம்மாவையோ திரும்பி பார்க்காமல் போனவள் அங்கு நின்ற காரில் ஏறி கல்யாண வீட்டில் தனக்காக கொடுத்த அறையில் அடைந்தாள் ஆத்திரம் அடங்காதவளாக ....


சாயங்காலம் நடந்த வரவேற்புக்கும் அவள் செல்லவில்லை.வெளியிலே வராமல் ரூமிலே அடைந்துக் கொண்டாள்.மறுநாள் கிளம்பிய தோழிகளுடன் தானும் கிளம்பிவிட்டாள்.சங்கீதா எவ்வளவோ சொல்லிபார்த்தும் கேட்கவில்லை.


"நாம் இருவரும் சேர்ந்து இரண்டு நாள்கழித்து போகலாம் மாதுரி அவசரப்படாதே "என்றாள்.

இவளோ எல்லாம் எடுத்து ரெடியாகிவிட்டாள்.


டிரெயினிலும் கண்ணை மூடியே அமர்ந்து இருந்தாள் ஏதோ பறிகொடுத்தவளாக. அப்போது "அம்மா பசிக்குது சாப்பிட்டு நாளாகுது காசு கொடும்மாணு" கேட்ட குரலில் விழித்தவள் அவளை பார்த்து ஐம்பது ரூபாயை எடுத்துக் கொடுத்தாள்.


தானும் ஏதும் நேற்றிலிருந்து உண்ணாதது நியாபகம் வர கீழிறங்கி சென்றாள் ஏதாவது வாங்கி வரகுடிநீர் நொறுக்குத்தீனி பிஸ்கெட் வாங்கியவள் டிரெயினை நெருங்கிய சமயம் பின்னிருந்து அவனது அழைப்புக் கேட்டது.


நிற்காமல் சென்றாள் திரும்பியும் பாராது" மாதுரி என்னை மன்னிச்சிடு மாதுரி ..நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் .உன்னை பற்றி சரியாக தெரிந்து கொள்ளாமல் தவறாக நினைத்து விட்டேன்.என் கிட்ட எப்போதும்அழகா இருக்கீங்கணு பொண்ணுங்க சொல்வதும்  சிரித்து வழிவதும் பார்ப்பதும் பிடிக்காது அதான் உன்னையும் அப்படியே நினைத்துவிட்டேன் தவறுதான் சாரி மாதுரி.."


அவளோ பதில் கூறாது விரைந்து சென்று தன்னிடத்தில் அமர்ந்து கொண்டு குளிர் கண்ணாடியை போட்டுவிட்டு காதில் பாட்டை இயர் போண் வழியாக கேட்டபடி கண்மூடி அமர்ந்து விட்டாள்.


அவனது பேச்சு காதை அடையவில்லை.கண்களோ திறக்கப்படவில்லை. போய்விட்டாள் மாதுரி அவளது கல்லூரி நோக்கி...


கல்லூரி சென்று அன்றுடன் மூன்று மாதங்கள் முடிந்துவிட்டன ஆனால் பட்ட காயம் ஆறாமல் உறுத்தியது....


அவனும் போணில் பேசி மன்னிப்புக் கேட்டான்.அவளிடம் பதிலில்லை.


வாட்சப் மெஸேஜ் தினமும் விடுகிறான்.அவளோ முதலில் பார்த்தாள் பிறகோ பார்ப்பதும் இல்லை. (பின்னே  ஒரே சாரி சாரிணா எத்தனை நேரம்தான் அவளும் பார்ப்பாள். அதான் விட்டுட்டா...ஒருவேளை சுடி கேட்டா சரி சொல்லியிருப்பாளோ என்னவோஹாஹா)


அன்று வெள்ளிக்கிழமை ஆகாய நீல நிற புடவையில் தலைமுடியை கீழே பிரித்து விட்டு ஸ்கூட்டியில் கிளம்பினாள்.


சாமி கும்பிட்டு வெளிவந்து அமர்ந்தபோது பக்கத்தில் அமர்ந்தவனை கண்டு அவள் அவசரமாக எழும்ப முயல அவனோ பிடித்து அமர்த்தினான். அவனை பாராமல் அமர்ந்தவள் கையை விலக்கிட எத்தனிக்க அவனோ உடும்பு பிடியாக பிடித்துக் கொண்டான்.


"கையை விடுங்க யாராவது பார்த்திட போறாங்க இது கோவிலாக்கும் உங்கள் வீடு அல்ல "என்றவாறு கையை விலக்க முயன்றாள்.


அவனோ கேட்டானில்லை.அவளுக்கு கோபம் வர ஆரம்பித்தது. வார்த்தையால் தாக்கினாள்.அவனோ அமைதியாக இருந்தான்.


"உங்களுக்கு சூடு சொரணை வெட்கம் மானம் ரோஷம் ஒண்ணுமே இல்லையா...நான் தான் பிடிக்கலைணு சொல்றனே விட வேண்டியது தானே "என்றாள்.


அதைக் கேட்டு அவளை பார்த்தவன்" திட்டி முடிச்சிட்டியா, இப்போது உன் கோபமெல்லாம் தீர்ந்துவிட்டதா..மது நான் பேசியது திட்டியது எல்லாமே தவறு தான்.. நீ எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறேன்....ஆனால் என்கிட்ட பேசு மது ...மனசு ரொம்ப வலிக்குதுடி "என்றான்.


"என்னை திட்டி காயப்படுத்திவிட்டு உங்களுக்கு வலிக்குதா...இதை நான் நம்பணுமா....நீங்கள் தான் மனசாட்சி என்பதே இல்லாத ஜென்மமாச்சே.. .உங்ககிட்ட பேசுவதே முதலில் தவறு விடுங்க என்னை" என்று திமிறினாள்.


அவன் எவ்வளவோ சமாதானம் செய்தும் அவள் அடங்கவில்லை. சுற்று முற்றும் பார்த்தவன் யாரும் வராதிருப்பதை கண்டு அவளது இதழுக்கு பூட்டிட்டான்.அவளது மிரண்டதையோ  தள்ளியதையே ,கண்டுகொள்ளாதவனாக  காரியத்திலே கண்ணாக இருந்தான்.அவள் மூச்சிற்கு தவிப்பதை உணர்ந்தே அவளை விடுதலை செய்தான்.


எல்லை மீறிய கோபத்தில் அவனை கையிலும் மார்பிலும் தோளிலும் அடித்தாள்.அவனோ அதை சுகமாக உள்வாங்கிக் கொண்டான்.


"நீ என்னை எத்தனை வாட்டி வேணா அடிச்சிக்க ஆனால் கோபத்தை மட்டும் விட்டு விடு சரியாடா..என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. சாப்பிட முடியவில்லை சதா உன் நியாபகம் வந்து வந்து என்னை தாக்குது  மது..

ஐ லவ்யூ மதுக்குட்டி "என்றான்.


அவளோ மிரண்ட பார்வை பார்த்து பதறி எழும்பி ஓடிவிட்டாள்.அவனது அழைப்பை கேட்டாளில்லை.


அவனோ சிரித்தான்" கொஞ்சம் கஷ்டப்படணும் போல இருக்கே ...சரி பார்க்கலாம் எவ்வளவு தூரம் தான் போகிறாள்ணு" என நினைத்தவன் தன்னுடைய காரை நோக்கிச் சென்றான்.


இரண்டு நாள் கழித்து சன்டே விடுமுறை வந்தது

  அறையிலே முடங்கினாள் ,எங்கே வெளியில் போனால் அவனிடம் மாட்டிவிடுவோமோ என்று அஞ்சி தோழிகள் அழைத்தும் கிளம்பினாள் இல்லை.


திடீரென கேட்ட மொபைலின் ஓசையில் கலைந்தவள் "யார் "என்று கேட்க அவனோ "மதுமா அத்தான் வெளியே நிற்கிறேன். நீ சீக்கிரம் ரெடியாகி வா" என்றான்....


அவள் போணை வைத்துவிட மறுபடியும் அழைத்தான்.அவளோ எடுக்கவில்லை. சில நிமிடத்தில் கேட்ட மெஸேஜை பார்த்தவள் அஞ்சிதான் போனாள். அதொண்ணுமில்லைங்க 'இப்போது நீ வெளியில் வராட்டா அடுத்த நிமிடம்  நான் உன்னுடைய அறைக்கு வந்துவிடுவேன். எது வசதியென்று நீயே முடிவு செய்து கொள் 'என்று இருந்தது.


அதைக்கண்டு மிரண்டவள் வரவேண்டாம் என்று பதிலை அனுப்பிவிட்டு மொபைலை ஆப் பண்ணி கதவையும் தாளிட்டு கட்டிலிலே படுத்துவிட்டாள்...


இவள் வருவாள் என்று காத்திருந்தவன் நிமிடங்களாகியும் வராதிருக்க மறுபடியும் கால் பண்ணினால் சுவிட் ஆப் என்று வந்தது.


இனி இப்படியே நின்றால் வேலைக்காகாது என்று நினைத்தவன் அவளை காண தானே புறப்பட்டுவிட்டான்.


திடீரென கேட்ட கதவு தட்டும் ஓசையில் அதிர்ந்தவள் அவன் வந்துவிட்டானோ என்று அஞ்சி போனாள். கதவை திறக்காது இருந்துவிட்டாள்.


மறுபடியும் கதவு தட்டும் ஓசையும் தோழியின் சத்தத்தையும் கேட்டவள் மெதுவாக திறந்தூ பார்த்தாள்.


தோழியோ இவளை திட்டிவிட்டு உள் சென்று மணிபர்ஸை எடுத்துவிட்டு சென்றாள்.இவளோ வாயிலை விட்டு விலகவில்லை.


அவள் சென்றதும் கதவடைத்தவள் மறுபடியும் படுக் போகவும் மீண்டூம் கதவு தட்டும் ஓசை கேட்க கதவிலே காதை வைத்தவள் மீண்டும் என்னடி என்றாள் சலிப்பாக.


"மொபைலை எடுக்க மறந்துவிட்டேன் அதனால் தான் "என்றாள் .ஆனால் தோழியோ இவளது மொபைலை எடுப்பதை கண்டதும் வாசலை விட்டு விலகி அவளை நோக்கிச் சென்று திட்டி தனது மொபைலை எடுத்து விட்டு அவளதை எடுத்திட உதவி செய்தாள்.


திரும்பி நின்று பேசியதாலும்  இவளது போணுக்கு மிஸ்ட் கால் இட்டு அவளது போணை எடுக்க போனதாலும் வாயிலில் வந்தவனை கவனிக்க தவறினாள்.போச்சுசு இன்றைக்கு ஹாஹாஹா


தோழி வெளியேறியதும் அவசரமாக கதவடைத்தவள் கட்டிலில் வந்து படுத்துக் கொண்டாள். 


திடீரென கேட்ட போண் சத்தத்தில் மிரண்டவள் அவனது அழைப்பை ஏற்காது கட் செய்ய அவனும் விடாது அடித்துக் கொண்டே இருந்தான்.


ஒரு சமயத்தில் போணில் யூடியூப் சானலில்  பாடலை போட்டவள் அதை கேட்டு ரசித்தபடியே மெதுவாக பாடிக் கொண்டிருந்தாள்.


திடீரென்று காலில் ஏதோ ஊர்ந்திட உதறினாள். மறுபடியும் ஊற கைகளால் தேய்த்துவிட்டாள் மறுபடியும் மறுபடியும் அதுபோலவே நடக்க இதென்னடா ஊறுது சும்மா சும்மா என்று நினைத்துக் கொண்டே கீழே பார்த்தவள் அதிர்ந்து போய் அவன் மேலே விழுந்தாள்.எவ்வளவு முயன்றும் எழும்ப முடியவில்லை. அவன்தான் பிடிச்சு வச்சிருக்கானே பிறகு எப்படி எழும்புவது. 

கோபத்தில் வாய்க்கு வந்தபடி அவனை திட்டிவிட்டு 

விலக முயன்றாள்.


"நான் எத்தனை முறை அழைத்தேன் நீ ஏன் கீழே வரவில்லை"


"நான் ஏன் சார் வரணும்... நீங்க யார் எனக்கு  ..நீங்க கூப்பிடதும் சலாம் போட நான் என்ன உங்க வீட்டு வேலைக்காரியா "என்றாள் ஆத்திரத்தோடு


அவனோ கூலாக "ஆம் வேலைக்காரி தான் எனக்கு மட்டும் "என்றான்.


"உங்கள் தகுதிக்கு பெரிய இடத்திலிருந்தெல்லாம் வேலைக்கு ஆள் கிடைப்பார்கள் இங்கு யாரும் உங்கள் வீட்டு வேலைக்கு ஏங்கியிருக்கவில்லை" என்றாள் கடுப்பாக....


அவளது பேச்சு வேதனையை கொடுத்தாலும் அமைதியாகவே தன்னை காட்டிக் கொண்டான்.

"மது நடந்ததை மறந்திட முயற்சி செய்.அதுதான் நம் இருவருக்குமே நல்லது"


"யாருக்கு நல்லது எனக்கா உங்களுக்கா..பெண் என்றும் பாராமல் எத்தனை பெரிய பழி போட்டீங்க.ஏன் முகத்தை பார்த்தால் திருடி, ஆண்களை மயக்குபவள் போலத் தெரிகிறதா"…??என்றாள் கோபமாக


அவனோ" ஆம் என்னை மட்டும் மயக்குபவளாக அதுவும் ஆயுளுக்கும் மயக்குவதாகத்தான் தெரிந்தாய்" என்றான் புன்னகையோடு


"நீங்கள் மறுபடியும் என்னை  சந்திப்பதை நான் விரும்பவில்லை.நான் உங்களை சந்திப்பது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்" என்றாள் வெறித்த பார்வையோடு.


அவளை கீழே சரித்து மேலே படர்ந்தவன் சிறிது நேரம் பேச அனுமதி கொடுத்தானில்லை. அவளது பெருமூச்சுகளையும் கண்ணிலிருந்து வடியும் நீரையும் கண்டு விலகியவன்" மன்னிச்சிடுடா இனிமேல் எந்த சூழ்நிலையிலும் உன்னை கஷ்டப்படுத்த மாட்டேன் ,நீயாகவே எனது அன்பை புரிந்து  கொண்டு என்னை தேடிவருவாய் அதுவரை உன்னை தொந்தரவு செய்யமாட்டேன் "என்று எழுந்து சென்றான்.


அதன்பிறகு ஒரு வாரமாக அவன் தொடர்பு கொள்ளவில்லை.


அவனின் மனமோ வேதனையால் துடித்தது. 'தெரியாமல் செய்த பிழைக்கு மன்னிப்பே கிடையாதாடி..என்னை மன்னிச்சிட்டேணு சொல்லுடி 'என்று அவளை பார்க்கவும்  பேசவும் துடித்த மனதை அடக்க முடியாமல் தவித்தான்....


அவள் மீது எவ்வளவு தான் கோபம் வந்தாலும் அவளை வெறுத்திட அவனாலும் முடியவில்லை.அனைவர் முன்பும் பாடி ஆடிய போது ரசனையுடன் தான் நோக்கினான் ,ஆனால் இவ்வளவு பேர் முன்பு ஆடுகிறாளே என்ற 

கோபமும் ,அவன் மேல் விழுந்து சலனத்தை ஏற்படுத்தியதாலும் அவனை கட்டுபடுத்திக் கொள்ள முடியவில்லை ,அதனால் தான் அவளை அணைத்து ஆவேசத்தை அடக்கிட முயன்றான், அது அது அடங்காது போகவே இதழில் இறங்கி அமைதி அடைந்தான்.


வெற்றிடையில் கரங்களை அழுத்தியதால் அவனது உணர்வினை கட்டுப்படுத்த முடியாமல் போகவே அவளை தள்ளிவிட்டு போனான் என்றாலும் கண்பார்வை அவள் பின்னே அலைவதை அடக்க முடியவில்லை. மறுநாள் மண்டபத்தில் பட்டு நகையுடன்  வந்தவளைப் பார்த்து அப்படியே அயர்ந்து போனான். அவளை ஆசையோடு பார்த்து கொஞ்ச நேரத்தில் இப்படி ஆகுமென்று அவனும் நினைக்கவில்லை. இப்போதோ மனம் கிடந்து தவியாய் தவிக்கிறது.அவளது கடைக்கண் பார்வைக்காக ஏங்கித் தவிக்கிறது.

'லவ்யூடா பேபி.. மிஸ்யூடா செல்லம்'.


ஒரு வருடத்திற்கு முன்பு 

அன்று அவளது மொபைலுக்கு புது நம்பரிலிருந்து கால் வந்தது. யார் என்று தெரியாமல் எடுத்து காதில் வைத்தாள். அதில் சொல்லப்பட்ட சேதி கேட்டு அறிந்தவள் அடுத்த கணம் கிளம்பிவிட்டாள்.அவளது  சக தோழி ஒருத்தி சூசைட் பண்ணிக் கொண்டாள் லவ் மேட்டர் வீட்டுக்கு தெரிந்ததால் வீட்டில் உடனடியாக வேறு மாப்பிள்ளை பார்த்து வைத்ததாலும் தற்கொலை செய்து கொண்டாள்.


அவளும் போய் பார்த்து விஷயம் முழுவதும் அறிந்து அழுதாள் அதனால் தான் காதல் நோய் தன்னை தாக்காதவாறு பார்த்து கொண்டாள் ஆனால் இப்போது சில நாட்களாகவே மனம் அவள் வசமில்லை.சதா ஏதோ பறிபோனது போல இருந்தாள் உணர்ந்தாள்.


வீட்டை நினைத்தவள் மனதை அடக்கி அமைதியாக இருக்க முடிவு செய்தாள். மனமாற்றத்திற்காக தோழிகள் அனைவருடன்  வெளியில்  சென்றவள் அங்கு குத்து சண்டை நடப்பதை கண்டு வெறுத்து வெளியேறினாள். வந்தபிறகு தான் அவளது கீ தோழியிடம் இருப்பதை தெரிந்து வாங்கிட வந்தாள்.


அப்போது அங்கே ஆனந்த் ஆனந்த் என்ற சத்தம் கேட்டது. யாரோ நமக்கென்ன பேசாமல் கீசெயினை வாங்கி போய்விடலாம் என்று வந்தவள் தோழியின் பேச்சை சட்டை செய்யாதுகீயை  வாங்கி சென்றாள் திரும்பியும் பாராது .


  ஏனோ தெரியவில்லை மனதில் ஒரு சஞ்சலம் தன்னை யாரோ கூர்ந்து பார்ப்பது போன்று தோன்றிடவே .....திடீரென திரும்பி பார்த்தவள் அவனை சிறிதும் அங்கு எதிர்பார்க்கவில்லை.


முன்பை விட சிறிது மெலிந்திருந்தானோ.அவனது பார்வை அவளிடமே இருந்தது. அவன் விழியை அகற்றிட வில்லை. திடீரென அவனது கவனம் விளையாட்டில் திரும்பினாலும்  இவளையும் நோக்கத் தவறவில்லை. கவனமில்லாத போது எதிரில் நின்றவன் ஓங்கி குத்திவிட்டான் அவனோ அவளை பார்த்துவிட்டு ஒற்றையடியில் எதிர் நின்றவனை வீழ்த்தி வெற்றி மாலையை சூடினான். அவனது முழு பெயர் உதய் ஆனந்த் அசாத்திய வளர்த்தி ஆளையடிக்கும் நிறம் ,கவர்ந்திழுகுக்கும் காந்த கண்கள் திமிர் செருக்கு கோபம் நிறம்பப் பெற்றவன். ரசிகை என்ற ஒன்றைத் தவிற எல்லையை தாண்டி இதுவரை யாரிடமும் பழகியதில்லை. அவனை கோபங்கொள்ள செய்ததும் இப்போதும் கொள்ளை கொண்டதும் அவள்( மாதுரி) ஒருத்தியே


எல்லோர் கவனமும் அவனிடமிருந்தால் அவனது கவனமோ அவளிடமே...அவள் கிளம்பி சென்றுவிட்டாள். 


அவனது வெற்றிச் செய்தியை கேட்டவள் மகிழ்ச்சியோடு அடுத்த அறைக்குச் சென்று அங்கிருந்த அவனது போட்டாவை பார்த்து கொண்டே இருந்தாள். 'சாரி உதய்' என்று கூறியபடியே வருடிக் கொண்டிருந்தாள். அவள் மனம் போகும் திசை நினைத்து அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது. ஏனோ அவனை பார்க்கவும் பேசிடவும் மனம் தவியாய் தவித்தது. 'வாங்க உதய் உங்களை பார்க்க பேசிட ஆசையாக இருக்கு' என்றாள் ஏக்கமாக. இங்கே இவளின் அழைப்பும் ஏக்கமும் அவனுக்கும் கேட்டதோ...

  

போட்டோவில் இருந்த உருவத்தையே தடவிக் கொண்டும் பேசிக் கொண்டும் இருந்தாள்.

திடீரென பின் பகுதியில் யாரோ நிற்பது போல தோன்ற திரும்பினால் அவன். அவன் மீது மோதிநின்றாள்.


அவனும் பார்வையால் அவளை வருடியபடியே நின்றான்.அப்போது காயம் கண்ணில் பட்டது அதை நோக்கி வலது கரத்தை உயர்த்தியவள் மெதுவாக தடவினாள்.புடவை முந்தாணையால் இரத்தத்தை துடைத்தாள். வலியில்" ஸ்ஸ்ஸ்ஆஆஆ" என்று முகம் சுருங்கவும் காயத்திலே இதழ் பதித்து விலகினாள். அவன் கன்னத்தை காட்டினான்,அவள் கொடுத்தாள்.அவனும் கேட்டுக் கொண்டே இருந்தான் இவளும் கொடுத்துக்கொண்டே இருந்தாள். குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் தடை விதித்தாள். அவன் ஏக்கமாக நோக்க ,அவன் மார்பிலே சரண் புகுந்தாள். அவனோ ஆனந்த அதிர்ச்சியில் திக்குமுக்காடி போனான். உச்சியில் இதழ் பதித்து அந்த நேரத்து சுகத்தை அனுபவித்தனர் இருவரும்....(பல நாள் ஊடல் முடிவுக்கு வந்தது.அப்படா இனி டென்சன் தீர்ந்ததுடா சாமி…)


வெளியில் சத்தம் கேட்டதால் அவளை  விட்டு விலகி பிறகு வருவதாக கூறிச்  சென்றான்.அவளும் தலையசைத்து விடை கொடுத்தாள்..

  

இரவில் அவனையே நினைத்துக்கொண்டு இருந்தவள் கால் வரவும்பேசினாள். பெற்றோரிடமும் அண்ணனிடமும் பேசியவள் மனம் குற்றவுணர்ச்சியால் தவித்தது.தவறு செய்கிறோமோ..இதுவரை பெற்றோரிடம் எந்த விஷயத்தையும் மறைத்ததில்லையே இதை எப்படி சொல்வது என்று அஞ்சினாள்.


இனி என்ன செய்வது உதய்யை எப்படி மறக்கமுடியும் அவன் தான் அவளின் உயிரோடு கலந்து விட்டானே.தூக்கமின்றி யோசனையிலே உழன்றவள் அவனை பார்த்து பேசுவதை தவிர்த்திட முயன்றாள். கோபமாக திட்டிவிட்டு நம் மீது வெறுப்பை வரச் செய்து விலகி விடவேண்டும் என்று முடிவு செய்தாள். இன்னும் மூன்று மாதம் கூட முழுவதுமாக இல்லை படிப்பு முடிய அதுவரை எப்படியாவது அவனை தவிர்த்திட எண்ணினாள்.

ஆனால் அவனா விடுவான்...


கோவிலுக்கு சென்று அவன் பேரில் அர்ச்சனை செய்து வந்தாள். அவன் அவளுக்காக காத்திருந்தான். பாராதது போல சென்றாள்அவனோ வழி மறித்து பேசினான். அவள் நிமிர்ந்து பார்க்காமல் பார்வையை திருப்பினாள்.


"எனக்கு பிரசாதம் இல்லையா மது" அவளோ "கோவிலில் போய் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்" என்றாள்.


"ஏன் நீ தரமாட்டாயா மது" என்றான்."எனக்கு போகவேண்டும் வழிவிடுங்கள்" என்றாள்.


"ஏன் மது எதற்கிந்த கோபம்.அப்படி உன்னை நான் என்ன செய்துவிட்டேன். பிரசாதம் கேட்டது குற்றமா...அதைக் கொடுத்து விட்டுப்போ" என்றான்.


அமைதியாகவே அவள் நிற்கவும் "என் பெயரில் செய்த அர்ச்சனை பிரசாதத்தை நான் உண்பதிலோ ,நெற்றியில் பூசிக்கொள்வதிலோ என்ன தவறுள்ளது மது."....அப்படியே பயத்தில் இறுகிய அவள் என்ன செய்வதென்றறியாது திகைத்தாள்..


"மது வா போகலாம்" என்று கைபிடித்து காருக்கு அழைத்து வந்தவன், முன்புற டோரை திறந்து அவளை அமரச் செய்து, மறுபுறம் அமர்ந்து காரை இயக்கினான்.


காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தியவன் அவளை நோக்க ,அவளோ வெளியில் பார்த்த பார்வையை அகற்றவில்லை. அவன் பேச பேச பதிலும் கூறவில்லை. அவளது மனதை அறிந்துகொண்டவன் தயங்காது அவளை இழுத்து அணைத்தான் அவளும் விலகவில்லை மறுக்கவுமில்லை. 


"நாம் திருமணம் செய்து கொள்வோமா மது",

அவளோ வீட்டை பற்றி எண்ணியவளாக மறுத்தாள்


"ஏன் "என்றான், ஒற்றை வாக்கியமாக. தன்வீட்டைப் பற்றிக் கூறியவள் படிப்பு முடிந்ததும் சொல்லலாம் என்றாள்.


அவனோ "நாம் இங்கு  ரிஜிஸ்ட்டர் மேரேஜ் செய்து கொள்வோம். வீட்டில் சம்மதித்த பின்பு சாஸ்திரப்படி  எல்லோர் முன்பும் செய்து கொள்வோம்" என்றான்.


"ஏன் !!! இந்த அவசரம்" என்றவளுக்கோ அவன் சரியான பதிலை கூறாமல் சிரித்து மழுப்பினான்.

"என்னை நானே காப்பாற்றிக் கொள்கிறேன் என்று வைத்துக் கொள் அல்லது என்னை முழுவதும் உன்னிடமே ஒப்படைத்துவிட்டேன் என்று நினைத்துக்கொள் "என்று கேலி பேசினான்.


அவளும் சம்மதமாக தலையசைத்து பல பரிசுகளை வாங்கி கொண்டு நெற்றியில் விபூதியை இட்டுச் சென்றாள். தினமும் போண் பேச்சு சிரிப்பு காதல் என்று நாட்கள் செல்ல இன்னும் இரண்டு மாதம் முடிந்தால் ஊர் போக வேண்டியதுதான் எனும்போது கலங்கினாள்.அவனும் அதுபோலவே தான் உணர்ந்தான்.


இரண்டு நாட்களில் திடீரென கால் செய்து அழைத்ததவன் அவளை ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டதோடு அவன் தங்கியிருக்கும் இல்லத்திற்கு அழைத்துச் சென்றவன் அவளுடனே பதினைந்து நாட்களை மகிழ்ச்சியுடன் கடத்தினான். பரிட்சை எல்லாம் ஆரம்பித்து முடிக்க இங்கே இவர்களின் பிரிவு ஆரம்பமாகியதோ....


அவனிடம் சொல்லிட எண்ணி வந்தவள் ஏதோ ஒரு பெண்ணை வீட்டில் அதிலும் அவனறையில் எதிர்பார்க்கவில்லை.யார் இவள் எதற்கு அவரது அறையில் இருக்கிறாள்..இவளுக்கும் அவருக்கும்என்ன சம்மந்தம்.. ஆயிரம் கேள்விகள் மண்டையை குழப்ப அவர்களின் சிரிப்பு சத்தத்தில் சிதறிய மனதை கட்டுக்குள் கொண்டுவர மிகவும் சிரமப்பட்டாள்....


அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு வந்தவள் அழுதாள் வேதனைபட்டாள் சந்தேகப்படக் கூடாதென்று நினைத்தாலும் முடியவில்லை .அப்படியே சோர்ந்து உறங்கிவிட்டாள்.இரண்டு நாட்களில் வரும் ஞாயிறன்று வெளியில் போய் தேவைப்படும் சாமான் எல்லாம் வாங்கி ரெடியாக வேண்டும் என்று முடிவு செய்தனர்.


அதன்படி  அன்று கிளம்பினர்.பெரிய மாலில் தங்களுக்கு தேவையானதை யெல்லாம் வாங்கியவர்கள் திடீரென்று ஆனந்த்டி என்றனர்.அனைவரும் அவனுடன் பேசுவது ஆட்டோகிராப் வாங்குவது மொபைலில் போட்டோ எடுப்பது என நிற்க அவளோ அடுத்த செக்க்ஷனில் தந்தைக்கும் தமையனுக்கும் வாங்க போய்விட்டாள் மனமோ உதய் உதய் என துடித்தாலும் ஏனோ கால்கள் அங்கு போக மறுத்தது.


திடீரென மாதுரி பார்த்து எடுத்த ஒரு டீ சர்ட் ரொம்ப அழகாக இருந்ததால் அண்ணனுக்கு எடுத்து பில் போட கொடுத்தாள்.அப்பாவுக்கும் எடுத்துவிட்டு நல்ல காட்டனில் பார்டர் போட்ட சாரி இரண்டு அம்மாவுக்கும் எடுத்து பில் போட அனுப்பினாள். ஏனோ தலை சுற்றுவது போலவும் களியாதது போலவும் இருக்க முயன்று கட்டுப்படுத்தியவள். பில் வாங்கி பணம் கட்டப் போனாள்.அங்கு அவளது அண்ணனுக்கு எடுத்த உடையை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள் பக்கத்தில் உதய். 


எப்படி போவது என்று யோசித்தபடியே அவள் நின்றாள். திடீரென தன்னை தோழிகள் அழைக்கவும் ரூபாய் கொடுத்து பில் வாங்கவும் அந்த பெண் தனக்கு அந்த உடை வேண்டுமென்றும் உதய் போட்டால் நன்றாக இருக்கும் என்றும் கூறினாள்.


கடையாளோ மாதுரியை காட்டிக் கொடுக்க மாதுரியை பார்த்த உதய் சிரித்தான்.லேசாக தலையாட்டியவள் துணியை வாங்க கையை நீட்டினாள்.ஆனால் டீசர்ட்டை தவிர எல்லாவற்றையும் கொடுத்தனர்.


"அம்மா அவர் ரொம்ப பெரிய ஆளு. நீ வேறு துணியை வாங்கிக் கொள். நான் எடுத்துத் தாரேன் 'என்றாள் கடைப்பெண்


அவளோ "பரவாயில்லை" சொல்லி மீதி துணிளை கவரில் வாங்கிக் கொண்டு கிளம்பிவிட்டாள் தோழிகளுடன் ....அவனும் அழைக்கவில்லை.அவளும் நின்று ரசிக்கவில்லை.

ஒற்றை புருவம் உயர்த்தினான் அவளை நோக்கி யோசனையாக...


மொபைலை ஆப் பண்ணி போட்டவள் அசந்து உறங்கினாள். பரிட்சைகள் முடிவுக்கு வர கோவிலுக்கு போனாள் அவன் வரவில்லை....

தோழிகள் எல்லோரும் ஊருக்கு போகுமுன் பார்டிக்காக ஹோட்டல் போக முடிவு செய்தனர்.  மாதுரி நீயும் வரவேண்டும் என்று அழைத்துச் சென்றனர்.


அவளும் மறுக்காமல் போக எல்லோரும் கடைசி நாளாக சேர்ந்திருந்ததை கொண்டாடி சாப்பிட்டு கொட்டமடித்து கிளம்ப எத்தனித்தனர்.


அவளும் திரும்பி பாராமல் போய்விட்டாள். அங்கு ஆனந்த் நண்பர்கள் தோழிகளுடன் பார்டியில் இருந்தான்.இவளை பார்த்தும் வரமுயலவில்லை யா (முடியவில்லை யா).யாருக்கு யார் மீது கோபம்...??


அறைக்கு வந்தவள் ஒரு கடிதம் எழுதி டைவேர்ஸ் பேப்பரில் கையெழுத்திட்டு அவனது பிஏவிடம் கொடுத்துவிட்டு வந்தாள் அத்துடன் அவன் கொடுத்த ஆடைகள் நகைகள் மொபைல் உள்பட.


திடீரென வந்தவர்" உங்கள் அப்பாவிற்கு ரொம்ப நெருங்கியவன். இங்கு வேலை விஷயமாக வந்தேன் நீங்கள் இன்று ஊருக்கு வருவதாக சொன்னீர்களாமே அதனால் உங்களையும் சேர்த்து அழைத்து வரச்சொன்னார் வாங்க நாம் சேர்ந்து போகலாம் "என்றழைத்தார். அவளோ மறுத்து தனியாக கிளம்பினாள்.அப்போது வந்த தகவலை கேட்டவள் அதிர்ந்து நோக்க" ஐயாம் ஏசிபி திவாகர்.உங்களை அழைத்துச் செல்லத்தான் வந்தேன் வாருங்கள் விரைவாக செல்லவேண்டும்" என்றான்.


அவளோ கதறி அழுதாள். அவன் அவளையும் அவளது உடமைகளையும் எடுத்து காரில் வைத்து விரைவாக வீட்டிற்குஅழைத்துச் சென்றான். சென்றவள் அங்கு கண்ட காட்சியில் அதிர்ந்து போய் அப்படியே மயங்கி சரிந்தாள். மறுபடியும் கண்திறக்கும் போது மருத்துவமனையில் இருந்தாள் "எனக்கு என்னாச்சு" என்றாள்.


"மேடம் உங்களுக்கு பெண்குழந்தை பிறந்திருக்கு உங்கள் கணவர்  வெளியில் இருக்கின்றார். இப்போது வந்துவிடுவார் " என்றாள்.மாதுரிக்கோ அதிர்ச்சியில் நாக்கு பேச எழும்ப மறுத்தது.


சிறிது நேரத்தில் வந்த திவாரை பார்த்தவள் அதிர்ச்சி அடைந்தாள். அவரை திட்டினாள்.சண்டையிட்டாள் குழந்தையை பார்க்க மறுத்தாள் தானும் இறந்து போவதற்காக ஜன்னலின் வழியாக குதிக்கப் போனாள்,எனக்கு "ஏற்கனவே திருமணமாகிவிட்டது...என் வாழ்க்கையை அநியாயமாக அழிச்சிட்டியே பாவி "என்று கதறி அழுதாள்.


அவளுக்கு ஊசியில் மருந்தேற்றி உறங்கச் செய்தனர்.இரண்டு நாள் கழித்து வீட்டிற்கு வந்தனர்.அவள் யாரிடமும் பேசவில்லை. குழந்தையினையும் பார்க்க விரும்பவில்லை. பெற்றோரையும் அண்ணனையும் நினைத்து அழுதாள்...


'உங்களுக்குத் தெரியாமல் கல்யாணம் பண்ணிக்கிட்டேணு என்கிட்ட சொல்லாமல் போய்டீங்களாபா...என்னை மன்னிச்சிருங்கப்பா...என்னை மட்டும் ஏன் விட்டுட்டு போனீங்க ..என்னையும் உங்க கூட கூட்டிகிட்டு போங்கப்பா...அண்ணா நீயும் போய்ட்டியாணா 'அவளின் அழுகை அடங்கவில்லை.' நான்  ஒரு பாவி எதற்குமே கொடுப்பினை இல்லாதவள் 'என்ற எண்ணம் வரவர தன்னை இரும்பாக மாற்றிக் கொண்டாள்.


திவாகர் இவளை இப்படியே விட்டுவிட விரும்பாமல் அவளறைக்கு வந்தான்.அவனை கண்டதும் பயந்து எழுந்தவள்" என்னை எதுவும் செய்திடாதீங்க என்று அழுதாள்..... "எங்கப்பா அம்மா அண்ணனுக்கு என்ன ஆச்சு சொல்லுங்க" என்று கேட்டாள்...


அவனும் கூறத் தொடங்கினான்.


இரண்டு பெண்களின் சடலம் அரசு மருத்துவ மனைக்கு போஸ்ட்மார்டம் செய்ய கொண்டு வரப்பட்டிருந்தது.  அங்கே அப்போது தோழனுடன் பேசியபடி வந்த அண்ணன் சில விஷயங்களை அவர்களாக பேசிக்கொண்டிருக்கும் போது திவாகருடனான பழக்கமும் ஏற்பட்டது. அதிலிருந்து நன்றாக பேசிக்கொள்வார்கள் .கேஸ் விஷயமாக கோர்ட் போனதில் அப்பாவிடமும் பழக்கம் ஏற்பட்டது . ஆறு மாதங்களாக நட்புடன் பயணித்தனர்.அப்போது தான் திடீரென பிரச்சினைகள் ஆரம்பித்தன.


வீட்டு வேலைக்கு வந்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்ததாக வந்த புகாரில் அவனை கைது செய்தான் திவாகர்.வசதி வாய்ந்த இடம் என்பதால்  பணம் கொடுத்து  போலீஸ் வாயை மூட பார்த்தனர். கோபத்தில் திவாகர் அவனை அடித்து நொருக்கிவிட்டான்.


ரௌடி ராஜாவின் அப்பா பெரிய புள்ளி அந்த ஏரியாவிலே அவருக்கு பயந்து யாரும் எதிர்த்து பேசமுடியாது.மணல் குவாரிகளும் ,கிரானைட் கடைளும் ,செங்கல் சூழைகளும் ,செங்கல்  மணல் ஜல்லி  ,வியாபாரம்என்று அந்த ஏரியாவிலே கொடிகட்டிப் பறந்தார். எல்லா தொழிலையும் தனித்து பார்க்கும் திறமைசாலி. கட்டபஞ்சாயத்து பண்ணுவது கந்து வட்டி கொடுப்பது  எல்லாமே அவரின் வேலை.


அவருக்கு இரண்டு மகன்கள்.மூத்த மகன் இவர்களை விட்டு முன்பே பிரிந்து சென்றுவிட்டான் பெயர் உதய் ஆனந்த் பிரல குத்துசண்டை வீரன்


அவரது இரண்டாவது மகன்  ராஜா...சரியான பெண்பித்தன் ,அடிதடி , வழக்குகளில் பலமுறை சிறை சென்று அவனது அப்பாவின் பணபலத்தால் வெளிவந்தவன்.  சில மாதங்களாக அவன் செய்த குற்றங்களையும் அடிதடியையும் பாலியல் பலாத்காரம் செய்வதை ரகசியமாக கவனித்து சாட்சிகளை தயார் செய்து வந்த திவாகர்  கிரிமினல் லாயர் தீனதயாளன் மூலம் கோர்ட்டில் பைல் செய்தார் அவனது ஒவ்வொரு நகர்வையும் போலீஸார்  கவனிக்க ஆரம்பித்தனர்.


இப்போது தொடுத்து இரண்டு கேஸ்  அவன் மீது வரவும் பிடித்து தட்டி விட்டான் திவாகர் .தகப்பனோ லாயரின் வீட்டிற்கு சென்றார்.கேஸை நடத்தக்கூடாது என்று மிரட்டினார்.பெரிய அதிகாரிகளின் மூலம் குடைச்சல் கொடுத்தான்.


அவனது மிரட்டலுக்கு அஞ்சாமல் தூக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தனர் அனைவரும் சேர்ந்து.இரண்டு நாள் கழித்து காரில் குடும்பத்தோடு  செல்லும்போது லோட் ஏற்றும் லாரியால் ஆளற்ற இடத்தில் வைத்து அடித்து நொறுக்கி எரித்துவிட்டான் ராஜாவின் ஆள்.


மறுநாளே வேறு வக்கீல் மூலம் கேஸை தவிடுபொடியாக்கி மகனை ஒரு வாரத்தில் வெளியே கொண்டுவந்தார்.


திவாகருக்கும் மேலதிகாரிக்கும் ஏற்பட்ட தகராறில் ஆறுமாதம் சஸ்பென்ட் செய்யப்பட்டான். புரமோஷசனையும் ரத்து செய்து இன்ஸ்பெக்டராக மாற்றிவிட்டனர் என்றான்.


மாதுரியை பற்றி கேட்டதற்கு 

அவள்" மூவரின் சடலத்தை கண்டவள்அப்படியே மயங்கி விழுந்தது பிறகு எழவேயில்லை. மருத்துவமனையில் சோதனை செய்தபோது கங்ராட்ஸ் சார் நீங்கள் அப்பாவாக போறீங்க என்று சொன்னார்.அவனுக்கோ ஒன்றுமே புரியாத நிலை, அவளை காத்து கணவன் என்று கூறி வீட்டிலே வைத்துப் பார்த்து வந்ததாக சொன்னான்.

உனது பாதுகாப்புக்காகவே மாதுரி "என்றான்.


அவனது கரங்களை பற்றி அழுதாள்.அவன் ஆறுதல் கூறினான். "குழந்தை பாவம் மாதுரி நீ அவளை ஒரு சமயமும் கவனிக்கவில்லை அவளை நன்றாக கவனித்துக்கொள். உனக்காக நான் அம்மா அப்பா உன்னுடைய குழந்தை இருக்கிறோம்". என்று ஆறுதல் வார்த்தை கூறினான்.


குழந்தையின் அபப்பாவை பற்றிக் கேட்டதற்கு வேண்டாம் என்று மறுத்துவிட்டாள்.அதன்பிறகே குழந்தையே கதி என்றிருந்தாள்.அவளது சுறுசுறுப்பை மீட்டு வர எண்ணிகேலி பேசுவான் கிண்டலடிப்பான் என்னவெல்லாமோ செய்தான் அவன்முன் சிரித்தவள் தனிமையில் துயர்வுற்றாள்...


"தன்குடும்பத்தை அளித்தவர்களை அழிக்க வேண்டும் அதற்கு உதவிட வேண்டும்" என்று கேட்டாள். "ராஜா இப்போது இங்கே இல்லை வரட்டும் தீர்த்துவிடலாம்" என்றான்.


சில மாதங்கள் தனக்குத் தெரிந்த பள்ளியில் வேலைக்கு போகுமாறு கூறினான்.இல்லையென்றால் அதையே நினைத்து கஷ்டப்படுவாய் குழந்தையை தான் பார்த்துக்கொள்வதாக வாக்களித்து அனுப்பி வைத்தான்.


ஆனால் அங்கே சென்ற பிறகும் தற்கொலை பெண் காணாமல் போனது போன்ற வழக்குகள் வந்ததால் ராஜா இங்கே தான் இருக்கிறானோ என்று சந்தேகம் வந்ததால் திவ்யாவாக மாறி தேடிய விஷயத்தையும் சொன்னான்.


"நீங்கள் இவ்வளவு நாட்கள் எங்கு சென்றீர்கள்" என்று கேட்டான் திவாகர் அதற்கு உதயோ...


"தான் காதலித்தது மணந்தது அவளுடனே கழித்த நாட்களை நினைவு கூர்ந்தவன் அத்தையும் மகளும் வந்ததாகவும் ஊரில் நடக்கும் அநியாயங்களை சொல்லி வருத்தப்பட்டதாகவும் சொன்னான்.அப்போது கேஸ் விஷயம் பகையை அறிந்தவன் அவர்களுக்கு தெரியாமலே  அவளை காத்திட நினைத்தான்.மாதுரியிடம் பேசினால் தானே வெளியே வருவாள் இல்லாவிட்டால் ஹாஸ்டலிலே இருப்பாள் என்று அவளை பார்ப்பதை தவிர்த்தான் விலகினான். ஆனால் போகும்போது சொல்லாமல்போனது  டிவேர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட்டது இவன் கொடுத்த சாதனங்களை கொடுத்ததோடு தனக்கும் அவளுக்கும் சம்மந்தமில்லை  தன்னை காணவரக்கூடாது வந்தால் இறந்து போவதாக எழுதியிருந்தாள்.மனது பாரமாகக் போய்விட்டது.


வெளியூருக்கு  வேலை விஷயமாக போய்விட்டு வந்தேன் .மாதுரி வீட்டு விஷயமறிந்து கோபத்தில் அப்பாவை திட்டினேன் அவனை எங்கே மறைத்து வைத்துருக்கின்றீர்கள் மரியாதையாக சொல்லாவிட்டால் என்று வந்தாலும் சும்மா விடமாட்டேன் என்று திட்டி வந்தேன்.மகனென்றும் பாராமல் விபத்தை ஏற்படுத்திவிட்டார்.


ஆறுமாதம் நடக்கமுடியவில்லை. அத்தை வீட்டில் தான் இருந்தேன் சரியானதும் மாதுரியை பற்றி விசாரித்தேன் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இப்போது அவள் பள்ளியில் வேலை செய்வதாகவும் ஹாஸ்டலில் தங்குவது தெரிந்ததாலும் வந்தேன்" என்றான். 


"எனக்கு என் மனைவியும் குழந்தையும் வேண்டும்.அவர்கள் இல்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லை " என்றான்."மாதுரியை விரும்பி மணந்த நாட்கள் மட்டுமே தன்னுடைய வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாட்கள்" என்றான்.


அவளோ ஒன்றும் கூறாமல் திவாகரையே பார்த்துக் கொண்டிருந்தாள். இவளது பார்வை புரியாதவனா அவன்.

அவளை அழைத்துச் சென்று பேசினான்.


பிறகு அவனிடன் "நாளை அனுப்பிவிடுவதாகவும் அவர்களின் சாதங்களை பேக் பண்ண வேண்டும் எல்லாம் தயாரானதும் அழைத்துப் போங்கள்" என்றான்.


மாதுரியோ "ஜானுவும் காவ்யாவும் தன்னுடன் வந்து சில நாட்கள்  தங்க வேண்டும்" என்றாள்.பட்டர்பிளைகளுடன் கேட்டு சரி சொன்னதும் எல்லாம் ஓகே ஆனது..


எல்லோரும் காரில் ஏறி கிளம்பினர்.குழந்தை ரேவதி திவாப்பாவுடன் சென்றாள்.மாதுரியும் உதயும் ஒரு காரில் செல்ல மீதி எல்லாரும் ஒரே காரில் சென்றார்கள்.


அம்மாவை காணாதவுடன் ரேவதி" திவாப்பா ம்மா ம்மா எந்த" என்று தாயை கேட்டாள். அவனும் புரிந்து கொண்டு மாதுரியிடம் கொடுத்துச் சென்றான்.


குழந்தை தகப்பனிடமும் தாயிடமும் செல்லம் கொஞ்சியது அவன் தோளை கட்டிக்கொண்டு" ப்பா ப்பா " என்று சாலையில் காணும் கார் ,கடை எல்லாம் கையாட்டி காட்டி ரசித்தது. அவனும் அணைத்து முத்தமிட்டு ரசித்தான்.


"ப்பா எந்த போத இவ்வதவு தாள் பாப்பா வித்து" என்று கேட்டது குழந்தை.


"வெளியூருக்கு வேலை விஷயமாக போயிருந்தேன் அதான் அம்மா பாப்பா பார்க்க வரமுடியவில்லைமா. இனிமேல் உங்களை விட்டு எங்கேயும் போகமாட்டேன்" என்று சொன்னான்


"இனி பாப்பா கூத்தி போ "என்றாள். அவனும் சரி என்று மகிழ்ச்சியோடு மகளை அணைத்தபடியே  காரை ஓட்டினான்.


அவளோ அமைதியாக இருவரையும் பார்த்தபடியே வந்தாள்."ம்ம்மாமா...." "என்னம்மா" .." அப்பாபா கூகூத போதமா" என்றது,


அவளோ "ஆமாம்" என்றாள். "ப்பா பிடித்துமா" கேட்டாள் குழந்தை. 


கணவனின் பார்வை தன்மீது விழுவதை உணர்ந்தவள் "பிடிக்கும் ரொம்ப பிடிக்கும் "என்றாள்.


கணவனோ சிரித்தடியே இருந்தான்." பாப்பா புடித்துமா அப்பா புதித்துமா" என்றாள் சிரித்து தோளில் தொங்கியபடி "இரண்டு பேரையும் புடிக்கும் ,இரண்டு பேரை மட்டும் தான் பிடிக்கும்" என்றாள்.


"அப்போ ஜானு, காவி  ,திவாப்பா புடித்தாதா"


" அடி ஆத்தி!!!  இதென்னடி  வம்பா போச்சு எல்லோரையும் தான் பிடிக்கும்  ,ஏய் போய் ஏதாவது  சொல்லிக் கொடுத்திடாத" என்றாள் 

சிரித்தபடி, கணவனும் இணைந்து சிரித்தான்


"சொல்லுதன் சொல்லுதன்" என்று சிரித்து கழுத்தைக் கட்டிக் கொண்டாள் தகப்பனையும் சேர்த்து, அவர்கள் இருவரின் ஏக்கமான பார்வைகளும் தவிப்புகளும் உயிரையே உருக்கியது.



ஹோட்டலில் சாப்பிட்டு திவாகரின் வீட்டுக்கு அனைவரும் சென்றனர்.


அவள் தன் அறைக்குள் நுழைந்தாள்.அவன் தூங்கிய குழந்தையை தோளில் சுமந்து வந்தான்.

குழந்தையை கட்டிலில் கிடத்திவிட்டு அவளையே பார்த்து நின்றான் அவளோ திரும்பினாளில்லை.

பெருமூச்சை வெளியேற்றியவன் "நாளை வருவதாக "கூறி சென்றான்.அவள் தலையாட்டினாள் சம்மதமாக,


இரவு எல்லோரிடமும் பேசிவிட்டு திவாகரின் அறைக்கு சென்று சிறிது நேரம் பேசினாள் 

அப்போது" இரண்டு பெண்களை கடத்தியதும் அடைத்து வைத்தும் ராஜாவின் ஆட்கள் தான் மாதுரி. பிடித்த ஆட்களை அடித்ததில் கிடைத்த விபரம் இது ராஜா எங்கோ வெளிநாட்டில் பதுங்கி இருக்கிறான் போல நீ ஆனந்த் வீட்டிற்கு போவதால் நிச்சயம் வருவான் பிடித்துவிடலாம்" என்றான் திவாகர். சரி என்றவளும் விடைபெற்றாள்.


மறுநாள் காலையில் வந்த உதய் வீட்டினரிடம் பேசிவிட்டு அவள் அறைக்கு வந்தான்.


அவர்கள் தயாராகி கொண்டிருந்தார்கள்.ரேவதி ப்பா ப்பா என்று அவனிடம் சாடினாள்.முத்தமிட்டு தன் உமிழ் நீரை அவனது கன்னத்தில் தேய்த்தாள்.


மாதுரி புடவையால் மகளின் வாயினையும் அவனது கன்னத்தையும் துடைத்துவிட்டு கிளம்பினாள். அப்போது அவள் "சிறிது நாட்கள் உங்களுடைய அம்மா அப்பா வீட்டில் இருப்போம்" என்றாள்.


அவன் மறுத்தான் அவளோ கேட்டாளில்லை. "யாரும் எதுவும் செய்யமுடியாது" என்றாள்.


"அச்சச்சோ !!!.ஏன்மா கண்ணு நாங்க என்ன தவறு செய்தோம்.எதுக்கு இப்படி எங்களையும் கோர்த்துவிடுற "என்றாள் காவ்யா.


"அடி காவு !!! மாதுரிக்கு கூட இருந்து கொஞ்சம் இருந்து உதவி செய்து கொடுத்துவிட்டு வரலாம்டி.பாவம் நம்மை தவிர அவளுக்கு வேறு யார் இருக்கிறார்கள்" என்றாள். 


சம்மதித்த அவளும் பட்டர்பிளைகளிடம் விடைபெற்றுக் கிளம்பினர்.


திவாவின் பெற்றோரிடம் சொல்லி ஆசீர்வாதம் வாங்கி கிளம்பினார்கள்  அனைவரும் . இவள் கிளம்பி சென்ற பிறகோ வீடே வெறிச்சோடி போனது போல ஆகிவிட்டாது. அங்கும் இங்கும் ஓடி சாடி துள்ளி குதிக்கும் குட்டி பெண்ணை காணாதது அவர்களது மனதை வெகுவாக வருத்தியது. என்னால முடியலைங்க என்று கலங்கியவர் கணவரின் கரத்தை ஆறுதலாக பற்றிக் கொண்டு  மனக்கஷ்டங்களை அவருடன் பகிர்ந்து கொண்டார்..


"என்னங்க நம்ம திவா மாதுரி போட்டோவை காட்டி இவதான் உங்க மருமகணு சொன்னான். பிறகு அவளை கொண்டு வந்து அவளையாவது காப்பதுவதான் என்னோட கடமைணு சொன்னான். யார் குழந்தைய வயிற்றில் சுமந்திருக்காணு கூட தெரியாமல் இருந்தபோதும் அவ மேல எவ்வளவு பாசமா இருந்தான். ரேவதி பிறந்த பிறகு எவ்வளவு சந்தோஷமாக இருந்தான். குட்டிப்பெண்ணை நெஞ்சில போட்டு தாலாட்டி உறங்க வைப்பானே இனி நம்ம மகனோட நிலமை என்னாகிறதுங்க. பெற்ற வயறு பதறுதுங்க "என்று கண்ணீர் வடித்தார்.


"எனக்கும் அதை நினைச்சா கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கு. ஆனால் அவன் தனியானா தானே அவனுக்கென்று ஒரு துணையை தேடுவான். கொஞ்சம் பொறுத்திரு .காலம் எப்பேர்பட்ட காயத்தினையும் ஆறச் செய்துவிடும் "என்று ஆறுதல் கூறினார். பாவம் திவாகர் அவள் மீதான அன்பு ,அவளது குடும்பத்தின் மீதான நட்பு என்று எதையுமே மறக்கமுடியாமல் தவிப்பது  இவர்களுக்கு எப்படி தெரியும். நேற்றிரவு உறக்கத்தை தொலைத்தவன் ரேவதியை வருடியபடியே கலங்கிய விழிகளில் வழியும் நீரையும் துடைக்க மறந்து , விடிய விடிய அமர்ந்திருந்தான். இனியாவது கடவுள் அவனுக்கு நல்லதே நடந்திட செய்யட்டும்.


ஆனந்தின் பெற்றோர் வீடு புது வீடென்றும்

சொல்ல முடியவில்லை.பழைய வீடு போலவும் இல்லை ,அழகாகவே இருந்தது.


ஆனத்ந் அம்மாவை அழைத்தான்.விரைந்து வந்த அவர் ஆரத்தி எடுத்து மகிழ்ச்சியோடு உள் அழைத்துச் சென்றார்.


வீட்டின் உட்பகுதி அழகாகவும்  ஓடி பிடித்து விளையாடுவதற்கு ஏற்றாற் போல விஸ்தாரமாகவும் இருந்தது.


அவனது தந்தை வந்தார். எல்லோரையும் பார்த்து திட்டினார். அவரது மனைவி அழுதார்.சிறிதுநேர சலம்பலுக்கு பிறகு அறைக்குள் நுழைந்து கொண்டார்.


மாடி அறையில் காவு ஜானுவுக்கு ஒரு அறையை கொடுத்தனர்.திவா எல்லாம் பார்த்து பேசிவிட்டு விடைபெற்றான்.குழந்தையை பிரிய மட்டும்  மனம் சம்மதிக்கவில்லை. அழுந்த முத்தமிட்டு அணைத்து கண்கலங்கினான்.


அதைக் கண்ட மாதுரி "நீங்களும் விரைவில் மணந்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்" என்றாள் கோரிக்கையாக...அவன் புன்னகையுடன் தலையசைத்து விடைபெற்றான்.


மாதுரியை அறைக்கு அழைத்து வந்த உதய் அவளை இறுக அணைத்தான். .இரண்டரை வருட துயர் முடிவுக்கு வந்தது போன்று அவளும் விலகவில்லை.


குழந்தையின் ஓசையில் விலகியவர்கள் அவளைவாரி எடுத்து முத்த மழை பொழிந்து மூவரும் அணைத்தபடியே வெகுநேரம் நின்றனர்.


எல்லோரும் அவர்கள் அறையிலே பொழுதை போக்கிட தாயார் அழைத்ததும் சாப்பிட போனொர்கள். காவ்யாவின் கிண்டல் கேலியும் ஜானு மாதுரி பதில்களும் உதய்யின் குறும்பு பேச்சும் ரசனையாக நேரத்தை கடத்தியது.


சாப்பிட்டு முடித்து மேலே சென்ற மூவரும் ஒரே அறைக்குள் அடைந்துகொள்ள அப்பாவும் பெண்ணும் அவளை தேடினர். அவளோ போகவில்லை. அவ தான் தோழிகளுடன் உறங்கி விட்டாளே..


மாலை வெளிவந்தவள் கீழே கூடி பேசிக் கொண்டிருக்க உதய்யின் அப்பா வந்தார் .


அவரிடம் ஜானுவும் காவ்யாவும்  பேசினர். "அப்பா எப்படியிருக்கீங்க. இந்த வயதிலும் எப்படி கட்டுக் கோப்புடன் உடம்பை வைத்திருக்கீங்க எல்லாம் அம்மாவின் கைங்கர்யமா" என்று காவ்யா ஆரம்பித்தாள்.


"ஏண்டி !!! காவி பார்த்தாலே தெரியலையாடி அம்மாவின் சமையல் என்னா அருமை, பேஸ் பேஸ் பிரமாதம் " என்றாள் ஜானு


உடனே காவி "ஏய்!!! ஜானு எப்படி சாப்பிட்டாலும் நல்ல வேலைபார்த்து கவனித்து இப்படி ஒரு சாம்ராஜ்ஜியத்தை கட்டியாள்வது சுலபமான காரியமா என்னப்பா"...


"அப்பா நாங்களும் உங்க கூட வாரோம் நம்ம கிரானைட் ஸ்டோர், செங்கல் சூளை ,மணல் குவாரி எல்லாம் காமிச்சுத் தருவிங்களா" என்றனர் இருவரும் 


அவரோ தலையசைத்தபடியே அமைதியாக இருந்தாள்.


ரேவதி" ஜானுமா.. என்று வந்தாள்

" ம்ம்மாமா எங்க "


"அம்மா இங்கே இல்லடா.".என்றாள் ஜானு "ம்மா எங்க போத"


"குட்டிமா அம்மா வரும் நீ ஜானுமா கிட்டவா ,"போபோ ம்மா வா ஆஆ சாப்பித "என்றாள்.


குழந்தையின் பசியறிந்த தாயும் மறைந்திருக்கும் இடத்திலிருந்து வந்தாள்.


உடனே பயங்கர குஷியாகி விட்டாள் கைதட்டியபடி ஓடிபோய் "ம்மா வந்தாச் ம்மா வந்தாச் "தாயிடம் சேர்ந்தது.


மகளின் பசியை தீர்த்திட எண்ணி சமயலறைக்குள் நுழைந்தாள்.மாமியாரும் உடன் வந்து தேவைபட்டதை எடுத்துக் கொடுத்து சிரித்தார்.


குழந்தையோ" நீ யாது.". என்றது அவரிடம்."பாட்டி"என்றார் அவர்மகிழ்ச்சியுடன்.


"அப்பம்மா சொல்லு "என்றாள் மாதுரி ,"அப்ப்ப்புபும்ம் ஆஆஆ "என்றதும் ஒரே சிரி எல்லோரும் 


"அதாரு "என்றாள் அவரது கணவனை நோக்கி விரல் காட்டி "தாத்தா" என்றார். "பாப்பா தாத்தாவா.."..


"ஆமாடா பாப்பா தாத்தா தான் " என்றார் பாட்டி

தாத்தாவிடம் போய் பார்த்துவிட்டு "ஐய தாத்தா நல்லால்ல "சொல்லி ஓடிவிட்டாள்...அனைவரின் சிரிப்பும் அடங்க வெகு நேரமானது.


"குட்டி பாப்பா !!! நான் ஐய தாத்தாவா ...

உன்னை என்ன பண்ணுறேன் பாரு "என்று அவளை பிடிக்க ஓடினார்.அவள் ஓட இவர் துரத்த நல்ல கலகலப்பாக இருந்தது அவ்விடம் அவர் அம்மா அழுதார்


"நான் கண்ணாளம் கட்டி வந்து இத்தனை வருசத்துல இந்த வீட்டில் சிரிப்பையே பார்த்ததில்லை ஆனால் இப்போ மனசுக்கு நிறைவாக இருக்கு "என்று அழுது கொண்டே கூறினார்


அதைக் கேட்ட அனைவருக்கும் பாரமாக போய்விட்டது. "இனி தினமும் சிரிச்சிகிட்டே இருப்பீங்க அத்தை ,அம்மா" என்று எல்லோரும் ஆறுதலளித்ததனர்.


தாத்தாவும் பேத்தியும் சிரித்தபடி இருந்தார்கள்.அவள் இவரின் "நீள மீசையை பிடித்திழுத்தாள் ஐயம் சொன்னாள் தாடியை பிடித்திழுத்தாள் ஐயம் சொல்லி அடித்தாள்".


"ரேவதி செல்லம் இங்கே வா ,அப்படி சொல்லக்கூடாது சரியா "என்றாள் மாதுரி


ஆனால் அவரோ "என்னோட பேத்திக்கு இல்லாத உரிமையா" என்று அவரே வைத்துக் கொண்டார். 

அவரோ பேத்தியின் பேச்சை ரசித்து சிரித்துக் கொண்டிருந்தாள்.


அப்போது உதய் வந்தான். குழந்தை அவனைக் கண்டதும் "அப்பாபா "என்று ஓடிபோய் கட்டிக் கொண்டது


"என்னடா செல்லக்குட்டி என்ன செய்ற" என்றான்


"அப்பா தாத்தா ஐயம் "என்றாள் ,அதைக்கேட்ட அவரோ சத்தமாக சிரித்தார்.


உடனே குழந்தை "சிரித்தாதே அடி ,அப்பாட்ட சொல்லுதேன்" என்று விரலை நீட்டி மிரட்டினாள்.


உடனே அவரோ" என் பசங்களே எதிர்த்து பேசமாட்டாங்க நீ என்னையே விரல் நீட்டி பேசுறியா" என்றார் மகிழ்ச்சியாக. ஆனந்த் தன் மகளை தூக்கிப் போட்டு பிடித்து விளையாட்டு காட்டினான்.


"என்னங்க அவ இப்போ தான் பால் குடிச்சா, வாமிட் எடுத்திடுவா" என்று சொன்னாள்.


"அப்படியா செல்லம் "என்று மகளை பார்த்துக் கேட்க, அவளோ ஆஆ என்று வாயை பிளந்து காட்டினாள். மகளை கொஞ்சியவன் மனைவி காதில் கிசுகிசுக்க ,அவளோ வெட்கத்தால் தலைகுனிய ,இதையெல்லாம் பார்த்தபடியே திவாகர் வந்தான்.



திவாகரைப் பார்த்த  ரேவதி ஓடி போய் காலை கட்டிக்கொண்டாள் ." திவாப்பா திவாப்பா என்று அழைத்து தாத்தா ஐயம்" சொல்லி சிரித்தாள். எல்லோரும் சிரித்தனர். திவாகரால் உணர்ச்சிகளை கட்டுபடுத்த முடியவில்லை. தனக்கு இறைவன் அளித்த பொக்கிசம் என்று நினைத்து மகிழ்ந்தானே இப்போதோ பொக்கிசத்தை இழந்து தவிக்கிறானே..நிதர்சனம் புரிந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவனால்.


" உங்கள் திவாப்பா போலீஸ்ணா நாங்கள் எல்லோரும்   பயந்துருவோமா" என்றார் தாத்தா


அவளோ "பாப்பாவும் திவாப்பா போல போலீஸ் தான்" என்றாள். எல்லோரும் அவளின் குறும்பை ரசித்து சிரித்தனர் .அவனை அமர வைத்து எல்லோரும் பேசி சாப்பிடச் செய்தார்கள்.

கிளம்பும் போது ரேவதியை விட்டுப் பிரிய மனமில்லாமல் அவன் பட்டபாடு பார்த்த மாதுரிக்கு பரிதாபமாக போனது. ஒன்றும் சொல்ல வழியில்லாமல் அப்படியே நின்றாள். 


"நீங்க பிரீயாக இருக்கும் போதெல்லாம் வந்து போங்க. ரேவதியை கூடவே வச்சிக்க ஆசையா இருந்தால், கொண்டு போய்டு வாங்க" என்றாள். அவனும் சம்மதமாக தலையசைத்தான். 


ஆனந்தை நோக்கிச் சென்றவன் ரேவதியை அணைத்து முத்தமிட்டு கொடுத்தான்." பிறந்ததில் இருந்தே எனது கரத்திலே தவழ்ந்து பழகிட்டா .அவளை உண்ண வைத்து, உறங்க வைத்து ,கொஞ்சி பேசி பழகிட்டேன் இனி அவள பார்க்காமல் என்னால எப்படி ..என்று நிறுத்தியவன் சில வினாடிகளில் தன்னை நிதானப் படுத்திக் கொண்டு பாப்பாவையும் மாதுரியையும் பத்திரமாக பார்த்துக் கோங்க. என்ன உதவி கேட்டாலும் எப்பவும் செய்து கொடுக்க நான் தயாராக இருக்கேன் "என்றவன் மாதுரியிடமும் மற்றவர்களிடமும் கூறிவிட்டு விடைபெற்றான்.


இரவு சாப்பிட்டு எல்லோரும் உறங்க போக மாதுரி போகாமலே பால்கனியில் நின்று வேடிக்கை பார்த்தாள்.


உறங்கிய மகளை தூக்கி வந்தவன் அவளைக் கண்டு சிரித்துவிட்டு படுக்க வைக்க சென்றான் அவனது அறையினுள்,திரும்ப வந்து பார்த்தால்  அங்கே அவள் இல்லை. தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தாள்.


பெருமூச்சு ஒன்றினை வெளியேற்றியவன் மகளின் அருகில் சென்று படுத்தான்.


இரவு நெடுநேரம்  தூக்கத்தை தொலைத்து பால்கனியில் அமர்ந்து ஆகாயத்தை வெறித்த வண்ணம் அமர்ந்திருந்தவன் எண்ணங்களோ முன்னோக்கி சென்றது. லாயர் தீனதயாளன் மற்றும் அவரது மகனின் நட்பால் ஏற்பட்ட பழக்கம் நட்பை தாண்டி குடும்பத்திலும் நுழைந்தது. திவாகரின் நேர்மை ஒழுக்கம் பணியின் மீதான சின்சியாரிட்டி எல்லாவற்றையும் கவனித்து வந்த மாதுரியின் அப்பா தன்னுடைய மகளின் போட்டோவை கொடுத்து பிடித்திருக்கிறதா என்று கேட்டார்.


அவளது புன்னகையால் அவனுக்கு அழைப்பு விடுப்பது போன்று இருக்க அவனும் சம்மதமாக தலையசைத்தான். மகள் படித்து முடித்து வரட்டும் வந்தவுடன் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றார். அவனும் தலையசைத்து போட்டோவை தானே கொண்டு சென்றான். தினமும் அவளது திருமுகத்தை ரசிக்காமல் அவன் இருந்ததில்லை.

கேஷ் விஷயமாக அனைவரும் இணைந்து ராஜாவை பிடித்து கைதி செய்து தண்டனை வாங்கி கொடுக்க முனைய ,அவனோ தந்தையுடன் வந்து சம்மந்தம் பேசினான். சாலையில் அவள் இவன் மீது எதிர்பாராமல் மோத அன்றே அவள் மீது கண் வைத்துவிட்டான். அவளை தேடினான் கிடைக்கவில்லை. கேஷ் விஷயமாக தீனதயாளை மிரட்ட சென்றவன் அங்கு மாதுரியின் போட்டாவை பார்த்து ஆசை கொண்டான். பொண்ணு கேட்டான் மறுக்கவே தகப்பனையும் அழைத்து சென்றான். ஆனால் அவரோ உன்னை மாதிரி பொறுக்கி பயலுக்கு மணம் முடித்து கொடுக்க மாட்டேன். அவளுக்கும் ஏசிபி திவாகருக்கும் திருமணம் என்று பேசி முடிச்சாச்சு என்றார். ஆனால் ராஜாவோ கேட்க மறுத்தான். 


நான் உயிரோடு இருப்பது வரை நீ நினைப்பது நடக்காது என்றார். மறுநாளே அவர்களை ஈவு இறக்கமின்றி அழித்துவிட்டான். சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் அவனை ஒன்றும் செய்ய இயலாமலே போய்விட்டது. மாதுரியை தன்னுடனே வைத்திருந்து இரண்டரை வருடங்களுக்கு மேலாக பார்த்துக் கொள்கிறான். திடீரென்று தன்னை விட்டு பிரிந்து சென்றுவிடுவாள் என்று  நினைத்து கூட பார்க்கவில்லை. ரேவதியை பிரிந்து அவனால் இருக்க முடியவில்லை.


நான் மணம்புரிந்து கொள்ள வேண்டுமா மாதுரி என்று சிரித்தவன் அது உனக்கான இடம் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் உன் இடம் வேறு யாருக்கும் கிடையாது. என் மகள் ரேவதி மட்டுமே என்ற முடிவோடு தன்னுடைய கடுமையை இன்னும் அதிகப் படுத்தி முரட்டு போலீஸாக நடக்க முயன்றான்.


                          ...................


இப்படியே சில நாட்கள் செல்ல குழந்தை தாத்தா பாட்டியிடம் நன்றாக ஒட்டிக் கொண்டாள்.


திவாகர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து பார்த்து சென்றான்.திவாவை பார்த்தவுடன் "திவாப்பாணு" ஓடி வந்து கழுத்தை கட்டிக்  கொள்வாள் ,ஏதாவது பேசிக்கொண்டே இருப்பாள்.


ஜானு காவி மாமனாருடன் எல்லா இடங்களுக்கும் சென்று சுற்றி பார்த்தனர் ,சிரித்து மகிழ்ந்தனர் மாமனாரின் மனமாற்றம் ஆரம்பமாகியது..


ஆனால் மாதுரியோ தன் குடும்பபோட்டோவை எடுத்துப் பார்த்து அழுது கமறினாள். "என்னை விட்டுப் போயிட்டீங்களேபா...என்னையும் உங்க கூடவே அழைத்துச் சென்றிருக்கலாமே ,நான் மட்டும் என்ன பாவம் செய்தேன் அப்பாபா அம்மாமா அண்ணாணா .".


எதேற்சயாக வந்த ஆனந்தின் செவியில் இவளது அழுகையும் புலம்பலும் விழ செய்வதறியாமல் தவித்தான்...


மகனின் தவிப்பையும் ஏக்கத்தையும், மருமகளின் கவலை வேதனைகளை தெரிந்தவர் இவர்களை இணைக்க என்ன செய்யலாம் என காவி ஜானு அவர் மனைவியுடன் சேர்ந்து கூட்டாக ஆலோசனை நடத்தினார்.


அதன்முதல்படியாக அவளை இவர்கள் அறையில் தங்கவிட மறுத்தனர்." நீ போய் பாப்பாவுடனும் அண்ணாவுடனும் தூங்கு"..ஏன்றாள் காவி 

இவளோ மறுத்து தலையாட்ட 


"நீ அங்கு போகாவிட்டால் நாங்க ஊருக்கு கிளம்புறோம்.உங்களை பிரிச்சு வச்ச பாவம் எங்களை சேரவேண்டாம் "என்றனர்.


அவர்களின் மிரட்டலில் பணிந்தவள் தலையாட்டியபடி அவனது அறைக்குள் நுழைந்தாள் அங்குயாரும் இல்லை.கட்டிலில் அமர்ந்து யோசித்தபடியே தூங்கி போனாள்.


காலையில் கண் திறந்து பார்த்தால் மகள்  முத்தமிடுவது சிரிப்பதென்றிருந்தாள்.


" என் ரேவதி குட்டிக்கு என்னாச்சு 

அம்மாவுக்கு ரொம்ப முத்தம் தந்தாச்சு


இரண்டு கண்ணை உருட்டி மிரட்டி

துள்ளுகின்ற அழகே


குண்டுமல்லி பூவை போல

கொட்டுகின்ற அழகே


உந்தன் பாசம் எந்தன் ஆயுள்  

வரை கிடைக்கணும்மா"


என்று மகளை அள்ளியணைத்து பாடிக்கொண்டிருந்தாள்.மகளும் சிரித்தபடியே கட்டி கொண்டாள்.உதய் இதெல்லாம் பார்த்து சிரித்தபடி நின்றான்.


ஜானு காவியும்  நிறைவாக  சிரித்தனர்.

மகளுடன் பாத்ரூம் சென்று குளித்து உடைமாற்றி வரவும் ,அவன் வரவும் சரியாக இருந்தது.


"மதூ !!! இன்று  நாம் வெளியில் போய் வரலாமா."..


"நாம் மட்டுமா அவர்கள் எல்லாம் பாவமில்லை"...


"சரி அப்போ எல்லோரும் போய் வருவோம்" என்றான் மகிழ்ச்சியுடன் அவனது சிரிப்பை ரசித்தவள் சரி என்று கீழே சென்றாள்.அவனோ கைபிடித்து நிப்பாட்டி" இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பணும் பாப்பாவுக்கு திங்ஸ் எல்லாம் எடுத்துவை "என்று அழைத்துச் சென்றான்.


எல்லாம் எடுத்து போகும்நேரம் இரு கைகளையும் கன்னத்தில் பதித்து ஆழ்ந்து நோக்கி சிரித்து இதழ் பதித்தான்.அப்படியே இறுக அணைத்தவன் சில நிமிடங்களுக்கு பிறகு விலகி அழைத்துச் சென்றான். மாதுரியின் நிலையோ  அச்சோ! !!! இனி கவலைக்கிடம் தான். அழைத்துச் சென்றவன் கதவை திறந்து முன் சீட்டில் அமர்த்தினான். நடுபகுதில் காவி ஜானு அத்தை மாமா 

இருந்தார்கள்.


அதற்கு பின் பகுதி எதிர் எதிராக பட்டர்பிளைஸ் இருந்தாங்க.மாதுரி தோழிகளை பார்த்து கண்ணடிக்க எல்லோரும் நமட்டுச் சிரிப்புடன் வீற்றிருந்தனர்.


ஆனந்த் அவளைப் பார்த்து சிரித்தபடி காரை எடுத்தான். அப்போது வந்த டிரைவர் தானே எடுத்து வருவதாக கூறி ஏறினான்.மாதுரியை ஒட்டியபடி ஆனந்த் அமர கார் கிளம்பியது.கார்குலுக்கலில் அவர்களின் உடல்கள்  இடிபடும்போது ஏதோ தீப்பொறி பற்றிக் கொண்டது போல ஒரே வெப்பம்.மின்னல் அதிர்வா..மின்சார தாக்குதலா... சொல்லமுடியாத படியான உணர்வுக்குள் சிக்கிக் கொண்டாள்.இவர்களை பாராமல் மற்றவர்கள் பேசி சிரித்தபடி வந்தனர்,அவளோ தவித்தாள். அவனோ தன்னுடன் தோளோடு சேர்த்து அணைத்துப் பேசியபடியும் மகளை கொஞ்சியபடியும் வந்தான்.


மகள் "ப்பா ப்பா எந்த போதம் "என்றாள்.


அவனோ "பீச் குரங்கு புலி சிங்கம் யானை கரடி பேர்ட்ஸ் எல்லாம் பார்க்கப்போறோம் "என்றான்.

மகளோ கைதட்டி சிரித்தாள்


ப்பா ப்பா என்று அவனிடம் சென்று மீசையை பிடித்தும்  ரசித்தும் விளையாடி கொண்டிருந்தாள்.


வெகுநேரம் விளையாடிய குழந்தை 

அப்படியே அவன் மடியிலே தூங்கிவிட்டாள்.மழலையின் பேச்சிலும் கொஞ்சலிலும் முத்தத்திலும் வெளிவரமுடியால் தவித்தவன் அதற்குள்ளே  தானும் மூழ்கி மனைவியையும் மூழ்கிட செய்தான்.



கேரளா திருவனந்நபுரம் சென்று அங்குள்ள மியூசியத்தின் முன்பு காரை நிறுத்தினர்.

எல்லோரும் உடலை வளைத்து சொடுக்கிட்டு தண்ணீர் அருந்தி தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு காரை பூட்டி சாவி எடுத்துக் கொண்டனர்.


தூங்கிய மகளை வாங்கி தோளில் கிடத்தியவன் எல்லோருக்கும் டிக்கெட் எடுத்து உள் அழைத்துச் சென்றான்.மகனிடம் வந்த தந்தையார் ரேவதியை தான் பார்த்துக் கொள்வதாக கூறி வாங்கிச் சென்றார்.இரு ஜோடி பட்டர்பிளைகளும் தனியாக ஜோடியாக  சிறகடித்து பறந்தனர்.


அவரவர் துணையின் கைபிடித்து எல்லாவற்றையும் கண்டு ரசித்தனர். குரங்குகள் மரங்களில் தாவும் அழகும் கிளிகளின் சத்தமும் குருவிகளின் கிரீச் கிரீச் ஓசையும் பலவகையான பறவைகள் பஞ்சவர்ண கிளி களும் குரங்குகளும் பார்க்க பார்க்க ரசனையாக இருந்தது. நீர்யானைகளின்  வாயசைக்கும் ஓசையும் யானையின் சத்தமும் சிங்கத்தின் கர்ஜனையும் கரடியின் பார்வைகளும் வாய் வார்த்தைகளால் சொல்ல முடியாத வர்ணனை.முதலைகள் உறக்க கலக்கமா அல்லது அடைத்துவிட்டார்களே என்ற சோகம் கலந்த மயக்கமா.


வெள்ளை புலி புதிய வரவாக அடைக்கப்பட்டிருந்தது. அறையில் அடக்கப்பட்டிருந்த புலியை பார்வையாளருக்காக பெரிய இரும்பு கூட்டினுள் திறந்துவிட்டான் அங்குள்ள பணியாள். அதுவோ உறுமலுடன் பாய்ந்து ஓடியது அவனை துரத்தியபடி, மாதுரி ஆனந்த் பட்டர்பிளைஸ் வேறு பலரும் 

அக்காட்சியை நோக்கினர். திடீரென்று உறுமியபடி இவர்கள் முன் சாடி கூண்டுக்குள்ளே சுற்றியது. அனைவரும் அச்சத்தில் அலறி கத்தினர்.

மாதுரி அச்சமிகுதியில் உதய் உதய் என்று அலறி அவனை   இறுக அணைத்துக் கொண்டாள்.


அவனுக்கோ பல வருட பாரம் குறைந்தது போன்ற உணர்வு. அவளை விட்டு விலகாது ஆரத்தழுவி அழுந்த முத்தமிட்டான்.மறுபடியும் மறுபடியும் புலியின் சீற்றத்தை பார்த்தவர்கள் ஒரு வழியாக அவ்விடத்தை விட்டு அகன்றனர்.


சிறுத்தை கூண்டுக்குள் சுற்றுவதும், மரத்தின் மீது அமர்வதுமாக வேடிக்கை (காட்டியது) பார்த்தது . 


பாம்புகளுக்கென்று தனிப்பண்ணை சற்று தொலைவில் தனியாக இருந்தது.அதை பார்க்க போகும் வழியில் பல பறவைகளை கூண்டுக்குள் அடைத்து வைத்திருந்தனர்.


தீக்கோழி,  அதன் முட்டைகள், தாரா, மயில் அது தோகை விரித்தாடிய அழகு அப்பப்பா பார்த்துகொண்டே இருக்கலாம் போல இருக்கிறது அவ்வளவு அழகு.


அடுத்து பாம்புகளுக்கான சிறு குடில் போன்ற அமைப்புடன் தனியாக அமைக்கப்பட்டிருந்தது .  அதில் பாம்புகளை கண்ணாடி பெட்டிக்குள் அடைத்து  வைத்திருந்தார்கள். அச்சத்துடனே நோக்கினாள் அவன் கைபிடியை விடாமலே... அவனும் அவளை தோளணைத்து கைபிடியிலே சகலமும் சுற்றிக் காட்டினான். எல்லோரும் வித விதமாக புகைப்பபடங்களை எடுத்தும் ஹோட்டலில் சாப்பிட்டும் பொழுதை போக்கினர்.



மியூசியம் ,வரலாற்று மியூசியம்,மீன் பண்ணையோ என்று ஆச்சர்யபடுத்தும் விதமாக கொஞ்சம் பெரிய மீன்களை கண்ணாடி தொட்டிகளில் வைத்திருந்தார்கள் ,சிறு மீன்கள் கண்ணாடி பாட்டில்களில் காணப்பட்டது. மீன்கள் தண்ணீரில் நீந்துகின்ற அழகை பார்க்க பார்க்க நாமும் அதுபோல மாறிவிடமாட்டோமா என்ற ஆசை வராமல் இருப்பதில்லை.அத்தனை அழகு ...



நேரத்தை நெட்டிக் கழித்தவர்கள் ஐஸ்கிரீம் பானிபூரி கடலைகளை கொறித்துக் கொண்டு விரும்பிய சாதனங்களை வாங்கி நிரப்பிக் கொண்டிருந்தனர்.


மகளை வாங்கியவன் அவளுக்கு தேவையானதையும் வாங்கிவிட்டு ஹோட்டலுக்கு அழைத்துச்  சென்று சாப்பிட்டு ஓய்வெடுத்தனர்.

பெண்களுக்கு ஒரு அறை மூன்று ஆண்களுக்கும் ஒரு அறை ஆனந்த் தம்பதியருக்கு வேறொரு அறை என மூன்று  அறைகளை தனித்தனியாக பதிவு செய்தனர்.


நேற்றிலிருந்தே மனையாளிடம் பேசிட எண்ணம் கொண்டவன் மகளை கொண்டு சென்றான். இவள் போனதும் கதவை பூட்டியதால் மனதில் தோன்றிய அச்சத்தை முயன்றும் அடக்கமுடியவில்லை.


குளியலறையில் சென்று மேல் கழுவி மகளையும் கழுவி விட்டு நைட் டிரஸ் அணிந்து வெளிவந்தவள் கணவனின் கண்களில் தோன்றும் பளபளப்பை கவனிக்க  தவறவில்லை. முந்தைய இரவுகளின் நினைவுகள் அச்சத்தை தோற்றுவித்தது. 


அவனும் குளியல் முடித்து வந்து பார்த்தால் இருவரும் உறங்கிவிட்டடனர். அவனுக்கோ அதிர்ச்சி 'அதற்குள் எப்படி தூங்கினாள் ...ஒரு வேளை நடிக்கிறாளோ...எப்படி கண்டுபிடிப்பது'

"ஐயோ மது முடியலடி" என்று கூறியடியே அவளை நோக்கி  யோசனையுடன் வந்தான்....


சில நிமிட யோசனையை கைவிட்டவன் பெண்ணவளின்  பாதத்தை விரல்களால் கூசச்செய்தான் அவளிடமோ அசாத்ய அமைதி.கொஞ்சம் அழுத்தமாக விரல்களால் தேய்த்தான்


அவளோ காலையிலிருந்து அலைந்து திரிந்ததினால் ஏற்பட்ட சோர்வில் அடித்து போட்டது போல உறங்கினாள்.சிறிதும்  இமைகளை பிரிக்க முடியவில்லை.அவனோ ஏமாற்றத்தில் தலையில் கை வைத்து நின்றான். 'ச்ச இப்படி கவுந்து போச்சே பிளான் ..எவ்வளவு கஷ்டப்பட்டு ஐடியா போட்டேன்.. இப்படி ஊத்திக்கிச்சேசே..

ஏண்டி !!! மது உனக்கு கொஞ்சம் கூட பீலிங்ஸே இல்லையாடி, இப்படி போட்டு படுத்துறாளே  'என்று முனங்கியடியே சோகத்தில் கட்டிலில் விழுந்தவன் எப்போது உறங்கினானோ தெரியாது.


மறு நாள் காலையில் எழுப்பினால் அவனோ நல்ல தூக்கம். மகளை தூக்கி வெளிவந்தவள் அவர்களிடம் மற்றவர்களிடம் "நீங்கள் எல்லோரும்  போங்கள், அவங்க தூங்கி விழித்தவுடன் நாங்கள்  வருகிறோம் "என்று கோவளம் பீச்சுக்கு அனுப்பி வைத்தாள்.


மாமனாரோ ஏதோ எண்ணியவாறு குழந்தையை வாங்கிக் கொண்டார். அவர்கள் சென்றதும் மீண்டும் அறைக்குள் வந்தவள் அவனை எழுப்பினாள்.


கணவனை எழுப்ப எழுப்ப எழும்பினான் இல்லை.உடனே அவளோ முன்பு செய்வது போல கன்னத்தில் கடித்தாள் அதில் முழித்தவன் அவளை இழுத்தணைத்தபடி மறுபடியும் தூங்க ஆரம்பித்தான்.


அவளோ  திட்ட ஆரம்பிக்கவும் மறுபடியும்  உறக்கம் கலைந்தவன் அவளது பேச்சினைக் கேட்டு மகிழ்ந்தான் 'ஓஹோஹோ போய்ட்டாங்களா எல்லோரும் போய்ட்டாங்களா.. அப்போ நம்ம ரூட் கிளியர் ஆயிடுச்சு..இன்றைக்கு உன்னை ஒரு வழி பண்ணுறேன் பாருடி செல்லம் ' என்று நினைத்தபடி வேக வேகமாக ஐடியா போட்டு விரைவில் குளியலறையிலிருந்து வந்து சாப்பிட்டவன் அவளையும் சாப்பிடவைத்து  பீச்சுக்கு போகாமலே ஆக்கிவிட்டான். 


அவர்கள் தேடி பார்த்து காணாமல் போகவே கால் பண்ணினால் அவர்களோ அசந்த மயக்கம் வருடம் தாண்டிய அணைப்பும் சுகமும் சொர்க்கத்திற்கே போய்விட்டு வந்த நிலையை மகிழ்வை  கொடுத்ததினாலும் ஒருவரை ஒருவர் விலக நினைக்காததினாலும்  இருவரும் ஒருவரையொருவர் அணைத்தபடி  தூங்கினார்கள் நிம்மதியாக....இனி பிரிவு என்பதே அவர்களுக்கு இடையில் இல்லை என்பது போல...


புரிந்து கொண்ட மற்றவர்கள் தொந்தரவு செய்யாமல் விலகிவிட்டனர்.அன்று அவர்கள் யாரையும் காணவில்லை.


மறுநாள்  அனைவரும் ஊருக்கு கிளம்பினர். மகனின் முகத்தில் தோன்றிய மலர்ச்சியையும் மகிழ்ச்சியையும்  கண்டவர் ,மருமகளையும் உற்று நோக்கினார் அவளது சிரிப்பும் வெட்கம் கலந்த பார்வைதனையும் ரசித்தவர் மகனிடம் "கூட நான்கு நாள் தங்கி வா , பாப்பாவை நாங்கள் கொண்டு போகிறோம் "என்றார்.ஆனால் அவனோ  குழந்தையை  தங்களுடனே விட்டுச்  செல்ல சொன்னான்.


மறுத்த தகப்பனிடம் வேறு காரணத்தை சொல்லி சமாளித்தான். ஒருவார உல்லாசம் ஊர்சுற்று முடிந்து ஊருக்கு போனால் காரியம் எல்லாமே கை மீறி நடந்திருந்தது. 


ராஜாவை போலீஸ் அரெஸ்ட் பண்ணியிருந்தார்கள்.நடந்த சம்பவங்களுக்கு தந்தையும் ஒருவகையில் துணை போனதால் அவரையும் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.


திவாகர் வீட்டிற்க்கு வந்து இரண்டு கடிதங்களை கொடுத்தார்.அதை பிரித்துப்பார்த்த ஆனந்த் செய்வதறியாது  அப்படியே நின்றான்.

அந்த சமயம் வந்த மாதுரி" என்னங்க திவாகர் என்ன விஷயமாக வந்தாங்க, மாமா எங்கே " என்றாள்.


அவனோ பதில் கூறாமல் கடிதத்தை கொடுத்தான்.யோசனையுடன் பிரித்துப் படித்தாள்.

அதில் வரும் விபரமானது


அன்புள்ள மகன் மருமகளுக்கு ,


உனக்கு அப்பா என்னும் தகுதியை இழந்து வெகுநாட்கள் ஆகிவிட்டது. ஒருநல்ல அப்பனாக நான் நடந்து கொள்ளவில்லை தான் அதற்காக முதலில் என்னை மன்னித்துவிடு. பணம் சேர்ப்பது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோள்  என்று இருந்து விட்டேன். அளவுக்கு அதிகமான பணம் சேர்த்ததில் உன்னை பிரிந்தேன்.என் பணத்தை வெறுத்து ஒதுங்கி நல்லவனாக வளர்ந்தாய். ஆனால் அந்த பணத்தை அதிகமாக விரும்பியதால்  உன்தம்பியை இழந்தேன். அதிக பணம் அதிகாரம் இருந்ததால்  சீர்கெட்டு குற்றவாளி ஆகிவிட்டான் .

உன் அம்மாவின் பாசத்தையும் இழந்தேன்.அவளது அன்பு அனுசரனை பாசமும்  கிடைக்கவில்லை.


நான் செய்த பாவச்செயலின் வீரியத்தை இப்பொழுது உணர்கிறேன். தாத்தா ஐயம் போபோ ணு என்னோட பேத்தி சொன்ன போது உடைந்து போய்விட்டேன். பேத்தியின் கொள்ளைக் கொண்ட சிரிப்பு தாத்தா அழைப்பு என்னை பித்துக் கொள்ளச் செய்கிறது.அப்பா அப்பா என்றழைத்து என் மனதில் பாசத்தை விதைத்த ஜானு காவ்யா நான் பெறாமல் பெற்ற பெண்கள். அவர்களது பாசமும் என்னை தாக்கியது.


மருமகள் நம் வீட்டிற்கு வந்ததில் இருந்து என் முகத்தை பார்த்து பேசியதில்லை. அவளை காணும் உன் கண்களில் தவிப்பு  ஏக்கம் , உன் அம்மா மனதில் மகிழ்ச்சி எல்லாமே நானும் பார்த்தது தான் .அவள் கதறியழுதபோது கலங்கிய உன்னையும் பார்த்தேன்.உன்னுடைய வாழ்க்கை அழிந்து போவதில் எனக்கு விருப்பமில்லை. அதனால் தான் இந்த முடிவுக்கு வந்தேன்.


உன் தம்பி நீங்கள் இங்கே இருப்பதை தெரிந்து கொண்டு இங்கு வந்தான் நான் போலீஸில் சரணாக சொன்னேன் .அவனோ மறுத்து என்னைத் திட்டினான்,ஜானு காவ்யாவிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றான்.நான் தடுத்தும் கேட்கவில்லை என்னையும் தள்ளிவிட்டான் அதனால் கோபத்தில் அடித்து உதைத்து திவாகரிடம் ஒப்படைத்துவிட்டேன் ...நீயும் என்னை மன்னித்துவிடு என்று எழுதியிருந்தார்.


  அவனை காப்பாற்ற முயன்றதிற்காகவும், அநியாயமாக வக்கீல் குடும்பம் இறந்ததற்காகவும் அரசு கொடுக்கும் தண்டனையை  ஏற்றுக்கொள்கிறேன்.என்னை காப்பாற்றி வெளியில் அழைத்துவர முயலாதீர்கள்.


உன்னை லோட்லாரியால் இடித்து தள்ளியது நான் இல்லை உன் தம்பிதான் அப்படி செய்துவிட்டான். நான் செய்ய சொன்னதாக என் மீது பழியை போட்டுவிட்டான்...

வக்கீல் குடும்பத்தை அளித்ததும் அவனே தான்...


அவன் வக்கீல் மகளை பிடிச்சிருக்கு  கட்டிவைங்க என்று  சொன்னான் .நான் முடியாது நம் தொழிலுக்கும் அவருக்கும் பொருந்தாது அதனால் வேறு பெண்ணை மணந்து கொள்ளும்படி கூறினேன்.அவன் கேட்காமல் பிடிவாதம் பிடித்தான். அதனால் வேறுவழியில்லாமல் நான் போய் கேட்டேன் அதற்கு ஒரு ரௌடி பையனுக்கு அடிதடி குடும்பத்துக்கு என்மகளை கொடுக்கமாட்டேன் Acp திவாகருக்கு தன் பெண்ணை கட்டிக் கொடுக்க பேசியிருப்பதாகவும் நான் உயிரோடு இருப்பது வரை உன் ஆசை நிறைவேறாது வெளியே போ என்று விரட்டிவிட்டார் அதனால் நான் கோபத்தில் வந்துவிட்டேன். இவனோ குடும்பத்தையே அழிச்சுட்டானே.....


என்னால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னுடைய பணத்தை  வக்கீல் மூலம் கொடுக்க சொல்லி திவாகரிடம் பேசி ஏற்பாடு செய்துவிட்டேன்.....

அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள்"....


அவள் என்ன சொல்ல என்று தெரியாமல் பெற்றோரின் புகைப்படத்தை அணைத்து அழுதாள்.அவன் ஆறுதல் கூறினான்....




இரண்டு நாட்கள் கழித்து

"மது என் மீது கோபம் தீர்ந்துவிட்டதாடா .

உன்னை பார்க்கமுடியாமல் பேசமுடியாமல் நீ எப்படி இருக்கிறாயோ என்று தெரிந்து கொள்ள கூட முடியாமல் ரொம்ப சிரமப்பட்டேன்டா…

ஏன் மது உனக்கு என் மீது கோபம்..

என்னை சந்தேகப்பட்டாயா..

என் மீது நம்பிக்கையில்லையா..

அப்படி ஏமாற்றுபவன் சட்டப்படி உன்னை என் மனைவியாக்கிருப்பேனாடா..

எதுவாக இருந்தாலும் வாய் திறந்து கேட்டிருக்கலாமேடா…

உன்னையும் வருத்தி என்னையும் கஷ்டப்படுத்திட்டியே…

பாப்பா வயிற்றில் இருந்தது பிறந்தது ஒன்றுமே தெரியாத முட்டாளாக இருந்து விட்டேனே.இனி உன்னை என் ஆயுளின் கடைசி நொடி வரை காப்பேனடா…

என்னை நம்புகிறாய்தானே மதும்மா"...


"ஆமாம்" என்றாள் மாதுரி

"உங்கள் மீது சந்தேகம் கோபம் எல்லாம் இல்லைங்க .ஏனோ தெரியவில்லை பெரிய தவறு செய்துவிட்டது போல குற்றவுணர்ச்சியால் ரொம்பவும் நிம்மதியற்றுத் தவித்துக் கொண்டிருந்தேன்.அதனால் தான் விலகிப் போனேன். எப்படி வீட்டில் எடுத்துக் கூறுவதென்று அறியாமல் தவித்துக் கொண்டிருந்தேன் .ஆனால் சொல்லுவதற்கு அவசியமற்றார் போன்று எல்லோரும் என்னை அனாதையாக விட்டு போய்விட்டார்கள்" என்று அழுதாள்.



அவளருகே வந்து கண்ணில் வடியும் நீரை 

துடைத்து விட்டவன் , "நான் இருக்கும் வரை நீ அனாதையில்லைடா. நம் மகளை பார்த்தாயா.. எப்படி இருக்கிறாள் என்று அப்படியே நம் இருவரையும் கலந்த படைப்பாக பிறந்திருக்கிறாள்.எனக்கு நீங்கள் இருவரும் உங்களுக்கு நானுமாக சந்தோஷமாக பழையதை மறந்து ஒரு இன்பமான வாழ்க்கையை வாழ்ந்திடுவோம்…

நீ என்ன மாது சொல்லுற"….



"கண்டிப்பாங்க …திவாகர் நமக்கு நிறைய உதவி செய்திருக்காங்க பதிலுக்கு அந்த அளவுக்கு செய்ய முடியாது என்றாலும் அவரும் சீக்கிரம் கல்யாண வாழ்க்கையில் ஈடுபடணும்க எங்க குடும்ப உயிரிழப்பில் பாவம் ரொம்ப இறுகிவிட்டார்" என்றாள் உண்மையை மறைக்காது." எனக்கு அவரை திருமணம் பேசியிருந்தாங்க என்று கடிதத்தை படித்து தான் நானே தெரிந்து கொண்டேன் ஆனால் இப்படி ஒரு முடிவு எடுத்ததை பற்றி யாருமே என்னிடமும் தெரிவிக்கவில்லையே" என்றாள் வேதனையோடு,


"மது இனி அதைப்பற்றி பேசி ஆகப்போவது ஒன்றுமே இல்லைடா.. அதனால் அவற்றை மறக்க முயற்ச்சி செய் .நாமே அவர்க்கு நல்ல பெண்ணாக பார்த்து முடிக்கலாம் .அத்தோடு இது நமக்கான நேரம் . அதை பேசி வீணடிப்பதை விட்டு ….வேலையை பார்ப்போமே"என்றான் கண்களில் குறும்போடு



"ஓ பேஸா செய்யலாமே என்ன செய்யட்டும் சொல்லுங்க சமயலறையில் செய்து எடுத்து வருகிறேன்"..என்றாள் மாதுரி



"என்னது சமையலறையிலாலா.... அடடாடா!!! வருடங்கள் சில தாண்டி வந்ததால் எல்லாமே மறந்து சாப்பாட்டு ராமி ஆகிவிட்டாளேடா..

உதய் உன்பாடு திண்டாட்டம் தான்.".என்று 

கிண்டல் செய்தான்


"ரொம்பத்தான் பேசுறீங்க" என்று அழகுகாட்டினாள்  அவன் மனைவி .


அவளின் சுழித்த உதடுகளைப் பார்த்தவன் கண்கள் மின்ன,  அதை நோக்கிக் குனிந்தான்... இனி என்றும் எந்தன் வசம் மட்டுமே என்பது போல …


சில மாதங்களுக்கு பிறகு ஜானு &காவ்யாவுக்கு அவர்களின் பட்டர்பிளைக்களுடன் ஒரே சமயத்தில் திருமணம் முடிந்தது. அதை தன்னுடைய வயிற்றில் இருக்கும் நான்கு மாத கருவுடன் ரசித்தாள்.ஆனந்த் தனது இரண்டறை வயது  மகளையும் சுமந்து மனைவியையும் தாங்கினான் ..இனி என்றும் இவர்களின் வாழ்வில் சுகம் மட்டுமே தொடரட்டும்......



பணம் பணம் என்று அலைபவர்கள் தன்னுடைய குடும்பத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் ஆனந்த் போன்று அருமையாக வளர்பவர்களும் இருக்கிறார்கள். ராஜா போன்று பொறுக்கிகளும் இருக்கிறார்கள்.


தவறு செய்தவன் கட்டாயமாக  தண்டிக்கப்பட வேண்டும் .அதுவும் தவறு செய்தவனுக்கு வழங்கப்படும்  தண்டனைகள் கடுமையாக இருந்தால் தான் தவறுகள் மீண்டும் மீண்டும்  நடக்காமல் குறைக்கப்படும். அதனால் அரசு கடுமையான சட்டத்தை கொண்டு வந்து  தன் கடமையை சிறப்பாக செய்திட வேண்டும்.


பாலியல் பலாத்காரம் , பெண்களுக்கெதிரான வன்கொடுமை சட்டத்தை வன்மையாக  கண்டிப்போம் தரணியை  தரமானதாகவும் சுத்தமானதாகவும் மாற்றுவோம்......

    


             ஜெய்ஹிந்த்



Comments