கருப்பு நகைகள்


#ஜோதிரிவ்யூ

எழுத்தாளர் : R. சுமதி

படைப்பு : கருப்பு நகைகள்

வெளியீடு : குமுதம் சினேகிதி

ரணத்தை எதிர்நோக்கியிருக்கும் தாயின் வயிற்றில் பிறந்த மூன்று மகள்களும், ஒற்றை மருமகளுமான மகனின் மனைவியும், அவரது முப்பது பவுன் நகைக்காக அடித்து கொள்கிறார்கள். யாருடைய ஆசை நிறைவேறுகிறது? மகனாக வருபவன் யாருடைய வேண்டுகோளை பூர்த்தி செய்கிறான்.

 நகை மட்டுமே போதும் என்றால் அத்தனை நாட்களும் அவர்கள் நடந்து கொண்ட முறை வெறும் வெத்து வேசமா? இன்று அடித்து பிடித்து வாங்க எண்ணுபவர் நாளை அண்ணன் உறவையே வேண்டாம் என்று ஒதுங்கி சென்று விடுவார்களா? என்று பல கேள்விகள் சிறுகதையை வாசிக்கும் அனைவர் மனதிலும் எழுகிறது.

சிறுகதையை வாசிக்கையில் வீட்டில் நடப்பதை, அப்படியே கதையாக வாசித்த அனுபவத்தை கொடுத்தது.

அதில் வரும் ஆடவனின் மனநிலையும், வாய் திறக்க முடியாத சூழ்நிலையும் அவர்களை உண்மையாக நேசிக்கும் தமையன் மற்றும் கணவனின் மனவோட்டத்தை அப்படியே வெளிப்படுத்தியது.

முடிவு மாஸ்.

காலங்கள் மாறினாலும், வசதி வாய்ப்புகளில் செழித்தாலும், தாயின் உடலில் அணிந்திருக்கும் நகைக்கு ஆசைப்படும் மகள்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. அதேபோல மாமியாருடையது தனக்கு மட்டுமே வேண்டும் என்று எண்ணும் மருமகளும் இருக்கிறார்கள்...

 சமமாக பங்கு போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அப்படிப்பட்டவர்களுக்கு தோன்றுவதில்லை என்பது வேதனைக்குரிய விசயம்.

'எங்க அம்மாவுடையதை தானே கேட்கிறேன். அவள் அப்பன் வீட்டுல உள்ளதயா கேட்கிறேன்' என்ற ஒரே வார்த்தையில் வீட்டுக்கு வாழ வந்திருப்பவளை அடித்து தள்ளிவிடுகிறார்கள்.

சிறுகதை ரொம்ப நன்றாக இருந்தது மேம். எழுத்து நடை அபாரம். கதையோட்டம் வெகுசிறப்பு. 

மேலும் நிறைய எழுத மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் மேம்💐💐💐

Comments