திறன்பேசி பூதம்


#ஜோதிரிவ்யூ

எழுத்தாளர் : ஆர்னிகா நாசர்

படைப்பு : திறன்பேசி பூதம்

வெளியீடு :  விகடகவி

லிங் :


இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் நுண்ணியல் விஞ்ஞானி...

தினமும் திறன்பேசியை அதிக நேரம்  பயன்படுத்துபவர், தரைவழி தொலைப்பேசியில் பேசுவதை கேலி செய்ய, அவரே திறன்பேசியால் வரக்கூடிய பாதகத்தை அப்படியே புட்டு புட்டு வைக்கிறார். நம்பாமல் கலாய்ப்பவர் அதை நேரில் கண்டால் எப்படி இருக்கும் என்பதை ரொம்ப அருமையாக சொல்லியிருக்காங்க...

திறன்பேசியை பயன்படுத்தினால் இத்தனை பாதகம் வரும் என்று அறிந்ததும் கொஞ்சம் அதிர்ச்சியாகி விட்டது. நிஜமாகவே அப்படித்தானா என்று ... 

இன்றைய காலகட்டத்தில் பெருவாரியான நபர்கள் திறன்பேசியுடன் தான் அதிகமான நேரத்தை செலவிடுகிறார்கள். அது இல்லாவிட்டால் அவர்களால் முடியாது என்பது நிதர்சனமான உண்மை. அப்படி பயன்படுத்துவதால் ஏற்படும் தீமையும், அதில் இருந்து காத்துக்கொள்ள கூறியிருந்த வழிமுறையும் வெகுசிறப்பு. 

சிறுகதை கருத்தானதாக, இன்றைய  தலைமுறையினருக்கு பயனுள்ளதாக உள்ளது. 

மேலும் நிறைய எழுத என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சார்💐💐💐

Comments