மனைவிக்கு மரியாதை

#ஜோதிரிவ்யூ

எழுத்தாளர் : ஆர் . சுமதி

படைப்பு : மனைவிக்கு மரியாதை!

வெளியீடு : குமுதம்

சீராளன் :

தங்கையின் வீட்டு கிரஹப்பிரவேசத்திற்காக போவது பற்றி தம்பியிடம் விசாரிக்கும் அண்ணன், டிக்கெட் போட்டு கிளம்புவது பற்றி பேசுகிறார்.

அவனோ சென்ற முறை ஊருக்கு சென்ற போது அக்கா நடந்து கொண்ட விதத்தை நினைத்து, மனையாள் மீது பயப்பட, காரணத்தை தெரிந்து கொண்ட அண்ணன் 'இங்கு வராட்டி அங்கு வர முடியாது' என்று சொல்லிக் கொடுக்கிறார்.

சீராளன் எடுக்கும் முடிவென்ன? கிரஹப்பிரவேச வீட்டிற்கு குடும்ப சகிதம் போகிறானா? இல்லை, அண்ணனின் ஐடியா பலன் கொடுக்கிறதா? அப்படி அவள் கோபப்படும் விதமாக அவனது அக்கா நடந்து கொண்டது என்ன? என்பதை அட்டகாசமான முடிவுடன் அழகாக கூறியிருக்காங்க.

பொதுவாக அண்ணன், தங்கை, அண்ணி உறவுகள் அனுசரனையுடன் நடந்து கொண்டால் அன்றி நீடித்து நிற்பது கடினம். அப்படியிருக்க, விஜி போன்றவரின் நடவடிக்கைக்கு அவனது மனையாளின் கோபமும் .... அவனது முடிவும் சரியான பதிலடியாக இருந்தது.

சில ஆண்கள் அவர்களின் குடும்பத்திற்காக மட்டுமே பார்ப்பார்கள்.  மனையாளின் மனதை கருத்தில் கொள்வதே கிடையாது.  'நீ வராட்டி பங்சன் நடக்காதா? பேசாம வீட்லயே இரு. நான் மட்டும் போயிட்டு வரேன்'னு முகத்தில் அறைந்தார் போல் சொல்லிடுவாங்க.

இன்னும் சிலர், 'அவள் ஏதோ தெரியாம பண்ணிட்டா' என்று விட்டுக் கொடுத்துப் போவாங்க.

அத்துடன், சீராளனின் அண்ணனின் பேச்சும், அப்படியே வீட்டில் நடப்பது போலவே இருந்தது. 'என்னதான் தங்கை செய்வது தவறென்று தெரிஞ்சாலும், மத்தவங்க கிட்ட விட்டு கொடுக்க கூடாதாம்' என்னே பாசம்!!

சீராளன் பாவம்! இயல்பான நடிப்பால் மனதில் பதிகிறார். இறுதியில் வந்த அவனது மனையாளின் பதில்கள் ஒவ்வொன்றும் சூப்பர்... பிரமாதமா இருந்தது.

மேமின் சிறுகதைகள் வாசிக்க, அப்படியே நிஜமாக நடந்ததை சிறுகதை வடிவில் வாசித்த அனுபவத்தையே கொடுக்கிறது. அருமையான எழுத்து நடையுடன் அழகான கதைக்களம்.

மேலும் நிறைய எழுதவும், விருதுகள் பல வாங்கவும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்💐💐💐

Comments