ஒரு சொல் பல பொருள் தருக :
மனிதன் அன்றாட வாழ்வில் 21 தீய குணங்களை கண்டிப்பாக விட்டு விட வேண்டும் என்று கூறுகின்றனர். அவை ..
பயனுள்ள தகவல்கள் :
ஒரு சொல் பல பொருள் தருக :
***************************************
குரல் - கட்டைக் குரல், கீச்சுக்குரல், பெருங்குரலெடுத்து, கூக்குரலிட்டான்.
பேசுதல் என்கிற பொருளைக் குறிக்கத் தமிழில் பல சொற்கள் உண்டு. அறைதல், இயம்புதல், இசைத்தல், உரைத்தல், கூறுதல், சாற்றுதல், நவிலுதல், நுதலுதல், பகர்தல், பறைதல், பன்னுதல், புகலுதல், புலம்புதல், மாறுதல், மொழிதல், என்பன.
.....
எடுத்துக்காட்டாக சுலபம் என்ற சொல்லுக்கு தமிழில் எளிமை, சிறிய, தணிவு, தொய்வு, எளிது, சிரமமில்லாமல் மற்றும் மலிவு என பல சொற்கள் உண்டு.
....
மீதி வேறு சொல்
- மீதம்
- மிச்சம்
- எஞ்சியவை
- மிகுதி
- பகுதி
- பாக்கி
- எச்சம்
- சொச்சம்
...........
எண்ணம் - நோக்கம் - நினைத்து - கருதி
சான்று - உதாரணம் - சாட்சி
யோசனை - சிந்தனை
நினைக்கும் - தோன்றும்- உதிக்கும்
அச்சம் - பயம் - கிலி - பீதி - மருட்சி - மருள் - திகில் - வெருட்சி
வேண்டுகோள் - கோரிக்கை - விண்ணப்பம்
உறுப்பு - மேனி - தேகம் - உடல் - யாக்கை
உணவு - சாப்பாடு - உண்டி - அன்னம்
பக்குவம் - பதம்
தடுப்பு - தடை - நிறுத்துவது
ஒப்புதல் - சம்மதித்தல் - அங்கீகாரம் அளித்தல் - ஒத்துக் கொள்தல்
பொருட்படுத்தாமல் - கண்டு கொள்ளாமல்
.......
பகர்வன - உரைத்தான்
அவதானித்தான் - கவனித்தான்
அன்யோன்யம் - நெருக்கம்
உணர்ச்சியை வெளிக்காட்டாமல் , சலனமின்றி - என்று அர்த்தம்
...........
(ஒன்றை ஒன்று தொடர்புடையது)
வீணானது - பயனற்றது - தோல்வியுற்றது - நம்பிக்கையற்றது - வெற்றி வாய்ப்பை எட்டாதது.
வீடு - மனை - இல்லம் - உறையுள்
முடிந்து - நிறைவுற்று
சாதுர்யம் - புத்திசாலித்தனம் - திறமை
நிலை குலைந்து போனான் - உணர்ச்சிவசப்பட்டான்
இடறினான் - தடுமாறினான்.
சகலம் - எல்லாம் - பூரா - அனைத்தும்
திட்டமிட்டான்- எண்ணம் கொண்டான்- உறுதி
பூண்டான்.
உபயோகமான - பயன்படும் விதமான
துரிதப்படுத்தினான் - அதிகப்படுத்தினான்
பிரவேசித்தான் - புகுந்தான் - நுழைந்தான்
மேற்கொள்ளலாம் - செய்யலாம்
நழுவியது - தவிர்த்தது
உன்னித்தாள் - முழுகவனமாய் பார்த்தாள்.
வீம்பாக - அலட்சியமாக - தெனாவட்டாக
தன்னிரக்கம் -சுயபச்சாதாபம்
அகலப்படுத்திய பாதை - விரிவாக்கிய பாதை
குறுகலாக்கினாள் - சிறியதாக்கினாள்.
ஈஸியிருந்தன - தடவி இருந்தன. பூசி இருந்தன.
இட்டனர் - கிடத்தினர்.
குதூகலித்தான் - மகிழ்ச்சியடைந்தான்.
.......
வீறிட்டாள் என்றால் அதிர்ந்து, பயத்துடன் கத்தினாள் என்று அர்த்தம்
தீர்மானமாக என்றால் முடிவாக.....
தீர்க்கமாக என்றால் தெளிவாக என்று பொருள்
..........
துணுக்குற்றான் என்றால் சிறிய அளவில் பதறினான்.
துடுக்குற்றான் என்றால் பெருத்த பதட்டம் கொண்டான் என்று பொருள்
.....
***********
புள்ளிகள் போடவே கூடாது.
பேச்சின் நடுவில் ஒரு இடைவெளி விடுவோம் இல்லையா.. அங்கே மட்டும் தான் 2 or 3 புள்ளி வைக்கலாம்.
அது போன்ற வாக்கியத்தை, நீங்க ஒரு முறை வாய்விட்டு வாசிங்க. நீங்க அதை சொல்லும்போது இடைவெளி விட்டீங்கன்னா, அங்கே மட்டும் தான் புள்ளி போடணும்.
இதை தவிர, ஒரே வார்த்தை 2 முறை பக்கத்தில் வந்தால், அப்போ 2 புள்ளி வைக்கலாம்.
சே..சே !
இல்ல..இல்ல ,
பார்த்து..பார்த்து !
இது போல போடணும்.
' என்று ' வார்த்தை பக்கத்தில் இடைவெளி வந்தால் மட்டும் புள்ளி போடலாம். அது டயலாகின் முடிவில் வந்தால் புள்ளி போடக் கூடாது. பொதுவா ' என்று ' வார்த்தை பக்கத்தில் இடைவெளி வராது - டயலாக் பேசும் போது. அதனால் புள்ளி போடக் கூடாது.
ஒருவேளை , ஒரு character டயலாக் பாதி பேசிட்டு இருக்கும் போது, யாராவது இடை மறிச்சா, அப்போ டயலாக் பாதியில் நிற்கும் இல்லையா, அப்போ மட்டும் டாயலாகின் முடிவில் புள்ளி வரும்.
அந்த வாக்கியத்தை தொடர்ந்து, யாரோ இடை மறிக்கறாங்க என்ற விவரம் வந்துடும்
அதே போல,
2 ? , 2 ! இதெல்லாம் தேவையில்லை.
படு பயங்கர அதிர்ச்சி, எக்கச்சக்க ஆச்சர்யம் - இங்கே மட்டும் 2 ! போடலாம். அவ்வளோதான்
இந்த புள்ளி, !, ? எல்லாவற்றுக்கும் , நெருக்கமாக போட்டாலும் பரவாயில்லை, ஒரு space விட்டு போட்டாலும் பரவாயில்லை. அதில் எந்த வித்தியாசமும் இல்லை
..............
பிரீஃப்கேஸ் or ப்ரீஃப்கேஸ்
ஃப, ஃபா, ஃபி, ஃபீ, ஃபு , ஃபூ, ஃபோ, ஃபை, ஃபே, ஃபெ,
ஃபுல்,. ஃபைல்
காஃபி
ஃபேர் & லவ்லி
ட்ராஃபிக்
டேன்டிரஃப் - dandruff
ஃபார்மசி
ஃபர்ஸ்ட்
ஃபிளாஷ்
ஃபிளாஸ்க்
ஃபைவ்
ஃபிஃப்டி
ஃபிஃப்டி ஃபிஃப்டி
பெர்ஃப்யூம்
நடுவில் fa போன்றவை வந்தாலும் ஃ போடணும்
ஃப்ரெஷ்
ஃப்ளைட் , ஃப்ளாட் - அடுக்கு மாடி
.................
அறுதியிட்டு
உறுதியாக
தீர்க்கமாக
நிச்சயமாக
*******
நிச்சலனமாக, நிமித்தம், வொய்ஃப், ஆப்பரேஷன், பேண்ட், அனாதை ஆசிரமம்/ அனாதை இல்லம்
சோசியல் சர்வீஸ், கோமா நிலை, கெஸ்ட் ஹவுஸ், விரைப்பாக, உணர்ச்சிவசப்படாதே
நிலம் - பிளாட் plot dhaan
பொமரேனியன் >>
பிரயத்தனப்பட
******
Aamaam..neenga அசுவையுடன் endru pottirundheenga
Adhu சரியான வார்த்தை இல்லை
Adhanaal அசூயையுடன் endru change pannen
அசூயை endraal இஷ்டமில்லமல் or அருவருப்புடன் or பிடித்தமின்மை endru அர்த்தம்
.......
ஒன்றுக்கு மேற்பட்ட எவற்றை குறிப்பிடும் போதும் , தன என்றுதான் சொல்லணும்.
மூக்கு விடைத்தது. கண் கலங்கியது. வாய் கோணியது. கண்கள் கலங்கின. காதுகள் கூர்மையாகின. உதடுகள் நெளிந்தன.
............
நிலைகுலைந்தாள்.
மயிர்க்கால்கள் குத்திட்டன.
பிராபர்ட்டி or ப்ராப்பர்ட்டி
துடுக்குற்றான்.
விவரித்தேன்.
மொத்த வலுவும் குன்றிப் போனது.
கடும் நிசப்தம் நிலவியது.
ஏதோ ஒரு நூதன உணர்வு இருவரையும் ஆட்கொண்டிருந்தது.
சலனமின்றி அமர்ந்திருந்தாள்.
பொலிவிழந்து காணப்பட்டாள்.
வார்த்தைகளால் திணறடித்தாள்.
மயிரிழையில் அடிபடாமல் தப்பித்து, பிடரியில் பின்னங்கால் இடிக்க, ஓடி வந்தேன்.
அதற்காக, அப்புறம், அதே போல, அதே நேரம், பின்னர், பிறகு....
ஆட்சேபணை, கதி கலங்க, எங்ஙனம், தெறித்து, அமிழ்த்தினான்.
ஆஸ்பிட்டல், ஆப்பரேஷன், என் கொயரி / காரியதரசி / துரிதகதியில்
விறைப்பாக dhaan sari
.......
செஞ்சிருக்கே , வச்சிருக்கேன், செஞ்சிருக்கான் / காள், வச்சிருக்கான் / காள்/ கார்
Ippadi varum
க்கோ endru mudiyum போது mattum
செஞ்சுக்கோ , வச்சுக்கோ endru சு varum.
Matra இடங்களில் 'சி ' varum
..........
பிடிச்சிருக்கு
பிடிச்சிட்டு
நினைச்சிருக்கே
நினைச்சுட்டு
நினைச்சு
......
பார்த்துட்டு
பார்த்துக்கிட்டு (செஞ்சுட்டு, வந்துட்டு)
Rendume ஒரே அர்த்தம் தான். ரெண்டுமே பேச்சு வழக்கு தான்.
அதே போல தான் மற்றவர்களும்.
இலக்கணமாக எழுதனும்னா,
பார்த்துக் கொண்டு, செய்து கொண்டு, வந்து கொண்டு. Ippadi varum.
பேச்சு வழக்கில் வருவது பிழையில்லை.
.........
போலிருக்கே
எல்லா டயலாகிலும் இதே போலத்தான் போடணும்
வரே, வர்றே, போறே, பேசுறே, சொல்றே, வந்தே, போனே , பார்த்தே, ippadi
.......
அவரின் இதயம் துடிக்க ஆரம்பித்தது. அவளுடைய கண்கள் படபடத்தது. அவருக்கு பசி எடுத்தது. அவளின் நம்பிக்கை சிதைந்தது. உதாரணமாக இறந்த காலத்தில் அவளின், அவரையும், நிகழ்காலத்தில் அவருடைய, அவளுடைய என்பதையும் பயன்படுத்தலாம்.
இறந்த காலத்திற்கு அவளின்,
நிகழ் காலத்திற்கு அவளுடைய
.........
தலையை தலை என்று தான் சொல்வார்கள். சிரசு என்று சுத்த தமிழில் சொல்வார்கள். தலையை தடவுவது வேறு. கேசம், கூந்தல், போன்றவை பெண்களுக்கும், சிகை, மயிர், முடி என்பது ஆண்களுக்கும் பொருந்தும். சிகையோ, முடியோ பெண்ணுக்கு வராது. அதே போல தலை வேறு தலையில் இருந்து முளைத்து நீண்டு இருப்பது வேறு. முதலில் இரண்டையும் பிரித்து, எதை மையப்படுத்தி வினை நிகழ்கிறது என்று முதலில் தீர்மானிக்க வேண்டும்.
........
என் மீதான பெரியவரின்


Comments
Post a Comment