நெடுந்தொடர் சமையல் குறிப்பு


#ஜோதிரிவ்யூ

எழுத்தாளர் : ஆர்னிகா நாசர்

படைப்பு : நெடுந்தொடர் சமையல் குறிப்பு

வெளியீடு : விகடகவி

லிங் :


இளங்கோவன் :

தன்னைக் காண வந்திருக்கும் நபர் மெஹா சீரியல் தயாரிக்க விரும்புவதாகவும், அதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ள, அதற்கு இவரோ ஆலோசனை எனும் பெயரில் அடித்து விடுகிறார்.

ஹீரோ, ஹீரோயின், கதையின் பெயர், ஓடும் நாட்கள், துணை நடிகர், பேச்சு, வில்லி, இரண்டாவது ஹீரோயின், எபிசோட் என்று பலவற்றையும் பற்றி அருமையான குறிப்புகளை கொடுத்திருக்காங்க.

அவரது பேச்சுக்களை கேட்டு 'ஆமாம், சரி, பண்ணிடலாம்' என்பவன் இறுதில் கேட்கும் கேள்வியும், அவன் எடுக்கும் முடிவும் ரசனை. 

ஒரு நெடுந்தொடர் எடுக்க இத்தனை வழிமுறைகள் இருக்கிறதா? என்று ஆச்சர்யமாக போய் விட்டது.

நானும் முன்பு சீரியல் பார்த்தவள் தான். ஆனால், ஏற்கனவே திருமணமான நபரிடம் பழகி அவரை வசீகரித்து முதல் மனையாள் மீது பழி போட்டு இருவரையும் பிரித்து, இன்னும் பல கொடுமைகளை நிகழ்த்தினார்கள். அது மட்டுமல்ல எடுக்கும் பெருவாரியான கதைகள்  மாமியார் அராஜகம்,  ஆண்களின் அடாவடி, சின்ன வீடுகளின் முரட்டுத்தனம், மனையாளின் அமைதியான முகமும், அவர்களால் படுகின்ற துயரத்தையும் பார்க்க முடியாமல் "போங்கடா நீங்களும் உங்க சீரியலும்" என்று விலகி கிட்டேன்.

ஐந்து வருடமாக இந்த கொடுமைகளை அனுபவிப்பது கிடையாது.

இச்சிறுகதையை வாசிக்கும் போது நான் நினைத்த பலவற்றையும் பற்றி சார் குறிப்பிட்டிருப்பது, ஒத்த கருத்தை வெளிப்படுத்தியது. அத்துடன் சாரும் தொடர்கதை பார்க்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்தியது.

நீளம் வேண்டும் என்பதற்காக செய்கின்ற கலாட்டா, 'ஸ்ப்பா... முடியலடா! எப்போது முடித்து விடுவார்களோ ' என்று சலிப்புடன் உணரச் செய்கிறது.

புதிய களமான சிறுகதை. எதார்த்தமான அழகாக இருந்தது.

மேலும் நிறைய எழுத என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சார்💐💐💐

Comments