பஞ்சு விரட்டு


#ஜோதிரிவ்யூ

எழுத்தாளர் : கணேஷ் பாலா

படைப்பு : பஞ்சு விரட்டு

வெளியீடு : புஸ்தகா


அமேசான் லிங் :


பஞ்சு மாமா :

கணவன், மனைவி, மகள், மற்றும் மனைவியின் தம்பியுடன் வசித்து வரும் ரகுவிற்கு பஞ்சு மாமாவிடம் இருந்து குறுஞ்செய்தி வருகிறது. "நாளைக்கு மார்னிங் வர்றேன். நாலு மாசம் உங்களோட தான் தங்கப் போறேன்" என்று ...

யாரந்த பஞ்சு மாமா? இத்தனை நாள் அவர் எங்கு இருந்தார்? எதுக்காக நான்கு மாதம் அங்கு தங்கப் போகிறார்? அவர் வந்த பிறகு நடப்பதென்ன? போன்ற பல கேள்விகள் ஆரம்ப அத்தியாயத்திலேயே நமக்குள் எழுகிறது.

ரகுவும் சுமதியும் எலியும் பூனையும் போன்று காட்சியளித்தாலும், மனையாளிடமிருந்து ஒவ்வொரு முறையும் சமாளிக்கும் விதம், பல கணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய தகவல்கள் போலும்...🤣🤣🤣

புருவின் பேச்சுகளும், வழிசலும் நகைச்சுவை விருந்து என்றால் சுமதியின் கோபமான பேச்சுக்களும், அதட்டலும் அதை விட ஏ ஒன் எனலாம்! பஞ்சு மாமாவை வீட்டை விட்டு துரத்த அவர்கள் போடுகின்ற நாடகங்கள், அதன் பிரதிபலிப்பு எல்லாமே ரொம்ப ரொம்ப நன்றாக இருந்தது. இறுதியில் வந்த வசனம் அனைவராலும் ஏற்றுக் கொள்ள கூடியது.

ஜனனியின் கட்டபொம்மன் நாடக வசனம்👌👌👌 அதற்கான எதிரொலி சிரிப்பு சிதறல்கள்...

பஞ்சு மாமாவின் நடிப்பும், உரையாடல்களும் மாஸ்!!

நாவல் சிறிய அளவில் இருந்தாலும் அழகான எழுத்து நடையில், அருமையான கதையோட்டத்துடன் சுவராஸ்யமாக நகர்கிறது. பஞ்சு விரட்டு நாவலை வாங்க விரும்புவர், புத்தகத்தை வாங்கி வாசித்து மகிழுங்கள்.

மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வெளியிட மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சார்💐💐💐

Comments