புதிய பறவை & முட்டை ஓதி வைக்கவா



#ஜோதிரிவ்யூ

எழுத்தாளர் : ஆர்னிகா நாசர்

படைப்பு : புதிய பறவை

வெளியீடு : விகடகவி

லிங் :


ஷபி உல் உமாம்:

பீகாரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து பணிபுரிந்து கொண்டிருக்கும் ஷபி உல் உமாம் பள்ளி வாசலில், தமிழ் நாட்டைச் சார்ந்த சில முஸ்லீம் நபர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு இடையே நடக்கும் உரையாடலை சிறுகதையாக வடிவமைத்திருக்கிறார்கள்.

நம் நாட்டை நம் நாட்டில் உள்ளவர்கள் தான் ஆள வேண்டும். வெளியூர்காரர்களுக்கு இடமில்லை. அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதால் நம் ஊரில் உள்ளவர்கள் பலர் வேலையில்லா திண்டாட்டத்தில் அவதியுறுகின்றனர் என்பதை சிறுகதையின் வாயிலாக அழகாக கூறி இருக்கின்றார்கள்.

அது போல, சிறுகதையின் முடிவும் ஏற்றுக் கொள்ளும் விதமாகத்தான் இருக்கிறது. சோம்பி போய் கிடக்காமல் படித்து முடித்ததும், படிக்காமல் இருந்தாலும் வேலைக்கு தொடர்ந்து முயற்சித்து வந்தால் எல்லா இடங்களிலும் வேலைகள் கிடைக்கும். வேலை வாய்ப்பு அதிகரிக்கும் விதமாக அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்ஙனம் இருந்தால் வேலையில்லா திண்டாட்டம் குறையும்... வெளியூர்காரர்களின் ஊடுறுவலும் தலையீடும் கட்டுக்குள் வரும்.

சிறுகதை நன்றாக இருந்தது சார். பல இடங்களில் சமூக கருத்துக்கள் காட்சிக்கு ஏற்ப பொருத்தமாக இருந்தது. கதையின் நாயகனாக வந்தவரின் பயப்படாத பேச்சுக்கள் அனைத்தும் சிறப்பு.

மேலும், நிறைய எழுதவும், விருதுகள் பல வாங்கவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்💐💐💐

***********


எழுத்தாளர் : ஆர்னிகா நாசர்

படைப்பு : மூட்டை ஒதி வைக்கவா

வெளியீடு : விகடகவி

லிங் : 


இச்சிறுகதை வாசிக்க அட்டகாசமாக இருந்தது. எழுத்தாளர்கள் படுகின்ற துயரமும், அவல நிலையும், பதிப்பகத்தாரின் அலட்சியமும் கண்முன்னே தோன்றியது.

மலர் சூர்யா கதாபாத்திரம் வெகு சிறப்பு.

புத்தகத்தை பதிவிட கொடுத்து விட்டு அதற்கான ராயல்டியை கேட்டதும் அதற்கான பதிப்பகத்தாரின் பதிலும், அவனது அதிர்ச்சியும், கோபமும், பதிலடியும் மாஸாக இருந்தது.

முட்டை ஓதி வைக்க வா என்றால் என்னவாக இருக்கும்? இது முன்பு உள்ள பழக்கவழக்கம் ஆயிற்றே என்று நினைத்தால்,🤣🤣🤣 அதிரடி பதிப்பகத்தாருக்கு! ஆனால் நடைமுறையில் சாத்தியமாகுமா என்றால் இறுதியில் வந்த வரிகள் தான் வெகு பொருத்தமாக அமைந்தது.

இரண்டு சிறுகதையும் கருத்தும் களமும் நன்றாக இருந்தது.

மேன்மை நிலையடைய வாழ்த்துகள் சார்💐💐💐

Comments