வைகை சிறுகதைப் போட்டி



எழுத்தாளர் : (சித்ரா தேவி) விஸ்வ தேவி

படைப்பு : ஆசைக்கு தடையேது

வெளியீடு: வைகை தளம்

லிங் : 


காதலித்து திருமணம் செய்து கொண்ட நாயகியின் சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறாமல் மனதிற்குள் ஆதங்கமாக பதிந்து இருக்க, வருடங்கள் தான் சென்றிருக்கிறது போலும்... அப்படி அவள் பட்ட ஆசைகள் என்னென்ன? கணவன் அவளது எண்ணத்தை நிறைவேற்றுகிறானா என்பதை அருமையாக சொல்லியிருக்காங்க.

மனதில் தோற்றுவது சரியாக இருக்கும் பட்சத்தில் செய்வதில் தவறில்லை. அம்மா என்ன நினைப்பார்? தங்கை, மகள், உறவுகள், என்ன நினைப்பார்கள் என்று வாழத் தொடங்கினால் ஒரு கட்டத்தில் உறவுகள் கசந்து முறியும் நிலைக்குப் போய் விடும் என்பதை, எதார்த்தமான எழுத்து நடையில் புரிந்து கொள்ளும் விதமாக சொல்லியிருக்கும் விதம் 👌👌👌👌

நாயகி பாத்திரம் நம்மில் பலரின் வெளிப்பாடு. அவளது பேச்சாடலும், கணவனின் முகவாட்டமும்👌👌👌 அண்ணியின் பதில்களும், ஆதரவும், எதிர்ப்பும் இன்றைய குடும்ப பெண்களுக்கு முக்கியமாக தேவைப்படுகிறது.

சிறுகதை  வாசிக்க ரொம்ப நன்றாக இருந்தது.  லிங் மேலே கொடுக்கப்பட்டுள்ளது வாசித்து மகிழுங்கள்.

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சிஸ்டர் 💐💐💐

***********

எழுத்தாளர் : பெத்தனை அருஞ்சுனை குமார்

படைப்பு : இதயத்திலே தீப்பிடித்து

வெளியீடு : வைகை தளம்

லிங் :

தன்னை விட்டுப் பிரிந்து சென்ற மனைவியை அதிகமாக நேசிக்கும் கணவன், அவளது பிரிவிற்கான காரணம் அறியாமல் ஏங்குவதும், கணவனைப் பிரிந்தும் அவன் நினைவாக வாடும் நாயகியுமாக சிறுகதை நகர்கிறது.

அட இத்தனைக் காதலை மனதில் கொட்டி வைத்திருப்பவர்கள் எதுக்குப்பா இப்படி பிரிஞ்சு போயிருக்காங்க என்று நினைத்துக் கொண்டே  படித்தால்... இதுக்காடா இத்தனை அழுகையும், பிரிவும், ஏக்கமும் என்று எண்ணத் தோன்றியது.

காளையனின் பாசமும், நாயக நாயகி அறிமுகமும் நன்றாக இருந்தது. சிறுகதையிலும் வில்லனாக ஒருவன் வந்து வில்லங்கம் செய்கிறான்.

வாய் விட்டு பகிறாமல் இருக்கும் உறவு பிரிவில் தான் முடிகிறது. 
எந்தவொரு பிரச்சனைகளையும் நேருக்கு நேராக பேசி தீர்வு காணா விட்டால் கண்ணீரும், சோகமும் தான் பரிசாக கிடைக்கும் என்பதை சிறுகதையின் வாயிலாக அழகாக சொல்லியிருக்காங்க.

சிறுகதை வாசிக்க நன்றாக இருக்கிறது. நீங்களும் வாசித்துப் பாருங்கள் தோழமைகளே...

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சிஸ்டர் 💐💐💐💐


***********

எழுத்தாளர் : மோகனா

படைப்பு : ஊடலும் இனிக்குதடி

வெளியீடு : வைகை தளம்

லிங் : 


திருமணமான இரவு மனையாளை பிடிக்கவில்லை என்று நேரடியாக கூறுபவன், அவளோடு எப்படி தன் வாழ்க்கையை ஆரம்பிக்கிறான்? அவளது அழகு, படிப்பை நினைத்து குறைபடுபவனின் வாழ்க்கை எங்ஙனம் நகர்கிறது என்பதை, ஊடலுடன் கலந்து அழகாக சொல்லியிருக்காங்க.

மனைவி அழகில்லாதவள், படிக்காதவள் என்று நினைப்பவனுக்கு அவளது பதில்கள்  மற்றும் டாக்டர் விசயம், போலீஸ் என்று களம் விறுவிறுப்பாகவும், வித்தியாசமாகவும் பயணிக்கிறது.

மருத்துவ பணி என்பது இறைவனுக்கு ஒப்பானது. அங்கு சென்று திருட்டுத்தனம் புரிவதும், சுயநலமாக நடந்து உயிர்களை பலியிடுவதும் ஏற்புடையது அல்ல. அப்படிப்பட்டவருக்கான தண்டனை கடுமையாக வழங்குவதில் தவறில்லை.

சிறுகதை வாசிக்க ரொம்ப நன்றாக இருக்கிறது. நீங்களும் வாசித்து மகிழுங்கள் தோழமைகளே...

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐


Comments