வாங்காதே படிக்காதே & அட்டைப்படம்


#ஜோதிரிவ்யூ

எழுத்தாளர் : ஆர்னிகா நாசர்

படைப்பு : வாங்காதே படிக்காதே 

வெளியீடு : விகடகவி

லிங் : 


முஸ்லீம் எழுத்தாளர் ஒருவருக்கும், கீஜேபி கட்சியை சார்ந்தவர்கள் நடத்தி வரும் தின ரோஜா நாளிதழை வாங்கி படிக்க கூடாது என்று சரியான புரிந்துணர்வு இல்லாமல் எச்சரிக்கும் சிலருக்கும் இடையிலான உரையாடலை சிறுகதை வடிவில் அழகாக சொல்லி இருக்காங்க.

தின ரோஜா நாளிதழில் இஸ்லாமிய எழுத்துக்களின் பங்கும், வெளியிடும் முறையும், இந்து மத வாசிப்பு, எழுத்து முறை பற்றியும் ரொம்ப நன்றாக சொல்லப்பட்டு இருக்கு.

"மதம் சார்ந்த மனிதர்களுக்கு இடையே தகவல்தொடர்பு மேம்படவேண்டும்.
பரஸ்பரம் நம்பிக்கையும் மரியாதையும் துளிர்க்கவேண்டும். மதபற்று மதவெறியாக மிகைக்கக்கூடாது. மனசாட்சியே பிரபஞ்சத்தின் ஒரே கடவுள்!’‘ என்ற வரிகள் வாசிக்க நன்றாக இருக்கு.

மனிதனை மனிதனாக மட்டுமே மனிதாபத்துடன் நேசிக்க வேண்டுமே தவிர, மதத்தை காட்டி பிரிக்காமல் இருப்பது சிறப்பு என்பேன்!

சிறுகதைகளில் வருகின்ற பல இடங்கள் ரசிப்பு தன்மை உடையதாக இருக்கு.

மேலும் நிறைய எழுதவும், விருதுகள் பல வாங்கவும் மனமார்ந்த நல்வாழ்த்துகள் சார்💐💐💐


ஜோதிரிவ்யூ

எழுத்தாளர் : ஆர்னிகா நாசர்

படைப்பு : அட்டைப்படம்

வெளியீடு : விகடகவி

லிங் :


புத்தகம் விற்பனை ஆவதற்கு அதனுடைய அட்டைப்படம் எந்த அளவுக்கு பயன்படுகிறது. அட்டைப்படம் எப்படி இருக்க வேண்டும், எந்த மாதிரி போட்டால் பிரதிகள் அதிகமாக விற்பனையாகும் என்பதை கலகலப்பாக சொல்லியிருக்காங்க.

அத்துடன் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகள், தேர்தல் சீர்திருத்தம் மற்றும், அரசின் ஆட்சிமுறை என்று பலவற்றையும் பற்றிய கருத்துக்கள் அட்டகாசமாக சொல்லப்பட்டிருக்கு.

தலைவன் புத்தகம் வெளியிட மேற்கொண்ட சாகசம் வாசிக்க சிரிப்பாக இருந்தது. சில நாட்களாக எனக்கும் ஒரு சந்தேகம் இருந்து வந்தது. அது இன்றைய சிறுகதை வாசிப்பின் மூலம் ஓரளவு தீர்ந்து விட்டது என்பேன்.

ஆயிரம், லட்சம் பிரதிகள் விற்பனை செய்யப்படுகின்ற புத்தகங்கள் அனைத்தும் வாங்குபவர் வாசித்து விடுவார்களா என்பது தான்... அதற்கான பதிலும், தலைவன் புத்தகத்தில் வெளியான அட்டையும், முடிவும் கலாட்டாவாக இருந்தது.

சிறுகதை வாசிக்க ரசிப்புத் தன்மை மிகுந்ததாக காணப்பட்டது.

மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சார்💐💐💐




Comments